இந்த மாதிரியான ஆண்களை மட்டும் நம்பிவிடாதீர்கள்!!

dont

நல்ல குணமுள்ள ஆண்மகனை தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கனவில் இருக்கும் பெண்கள், தங்கள் கனவு நனவாக வேண்டுமெனில் பொறுமையாக தங்கள் மணவாளனை தேட வேண்டும்.

அவசரப்பட்டு, காதலில் விழுந்து உருக உருக காதலித்துவிட்டு, பின்னர் 6 மாதம் கழித்து அதனை சொதப்பிவிடாதீர்கள்.

அப்படி ஒரு மகனை பார்த்து அவர்கள் மீது நீங்கள் காதல் கொண்டாலும், நாளடைவில் அவர்களிடம் கீழே கூறப்பட்ட நடவடிக்கைகளை பார்த்தால் அவர்களை விட்டு விலகிவிடுங்கள், எக்காரணம் கொண்டும் நம்பாதீர்கள்.

எப்போது பார்த்தாலும் டேட்டிங் செல்ல வேண்டும் என அடம்பிடிப்பார்கள். இவ்வாறு தொடர்ந்து டேட்டிங் சென்றுகொண்டிருந்தால், அவ்வித ஆண்களுக்குள் தானகவே ஒருவித பயம் ஏற்படும்.

இப்போதைக்கு திருமணம் வேண்டாம். இன்னும் பொறுப்பு வரவேண்டும் அதுவரை திருமணத்தை தள்ளிப்போடலாம் என கூறிவிடுவார்கள். ஆனால் கடைசி வரை உங்களை திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள். அப்படி அவர்களை நீங்கள் மாற்ற முயற்சித்தால், ஏதோ அவர்கள் மீது வெறித்தனமாக காதல் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைப்பார்கள்.

உங்கள் காதலுக்கு பழைய காதலி மீது அதிக நாட்டம் இருந்தால். அவர் மிகவும் உண்மையானவர் என்ற போர்வையை அவர் மீது போர்த்திவிடாதீர்கள். உங்களுடன் இருக்கும்போது எப்போதும் அவளின் நினைவுகளை பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பது, அவளுடன் இருந்த நினைவுகளை உங்களுடன் அதிகமாக பகிர்ந்துகொண்டால், அவருக்கு பழைய காதலி மீது நாட்டம் போகவில்லை என்று அர்த்தம்.

எனவே, அவளிடம் உள்ள குணநலன்களை உங்களிடமும் எதிர்பார்ப்பார். இந்த எதிர்பார்ப்பு பூர்த்தியாகாத நேரத்தில் உங்களுக்கும் அவருக்கும் சண்டை வரும்.

தொழிலில் அதிக கவனம் செலுத்தும் ஆண்கள், குடும்பத்தை பார்க்க மாட்டார்கள் என்று அர்த்தம் இல்லை. ஆனால் உங்களுக்கான நேரத்ரை ஒதுக்கமாட்டார்கள். அதனை உங்களால் அனுசரித்து செல்லமுடியும் என்றால் அவர்களை திருமணம் செய்துகொள்ளுங்கள்.

சிறந்தவற்றையே தேர்ந்தடுக்கும் ஆண்களுடன் பழக நன்றாக இருக்கும், ஆனால் கடைசி வரை அவர் உங்களை தேர்ந்தெடுக்க மாட்டார்.

காரணம், நீங்களே சிறந்தவராக இருந்தும் கூட, உங்களை விட வேறு ஒருவர் சிறந்தவராக இருக்க கூடும் என்று தேடிக் கொண்டே இருப்பார். உங்களை விட சிறந்த ஒருவர் இவ்வுலகத்தில் எங்காவது இருப்பார் என்பது அவர்களின் எண்ணமாக இருக்கும்.

இன்னும் சரியான பெண்ணை காணவில்லை என்று கூறும் ஆண்கள். இது வரையில் அவர் பார்த்த நூற்றுக்கணக்கான பெண்கள் அவருக்கு சரியானவர்களாக இல்லையென்றால் நீங்கள் மட்டும் எப்படி இருப்பீர்கள் என்பதே அதற்கு காரணம்.

ஆதலால், இந்த விடயத்தில் நீங்கள் கவனமாக அவரை கையாள வேண்டும். அவர் உங்களை தேர்வு செய்வதை விட, நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு சரியான ஆண்களை தேர்வு செய்ய வேண்டும்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் பரவும் வைரஸ் : அதிர்ச்சித் தகவல்!!

virus

கூகுள் ப்ளே ஸ்டோரில் 400க்கும் அதிகமான ஆப்கள் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆண்ட்ராய்டு மொபைல்களில் ஆப்களை பதிவிறக்கம் செய்ய கூகுள் பிளே ஸ்டோரை தான் அனைவரும் அதிகம் பயன்படுத்தி வருகிறோம்.

இந்த நிலையில் அதில் 400க்கும் அதிகமான ஆப்கள் ‘ட்ரஸ்கோட்’ (“DressCode”) எனும் மால்வேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இத்தகைய ஆப்களை பதிவிறக்கம் செய்து போன்களில் இன்ஸ்டால் செய்யும் போது இந்த வைரஸ் த்ரெட் ஆக்டர்ஸ்களை (threat actors) உட்புக அனுமதிக்கிறது.

இதனால் நமது கருவியில் இருந்து தகவல்கள் திருப்பட வாய்ப்பிருப்பதாக Trend Micro என்னும் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிறுவனத்தின் தகவல் படி, இந்த ஆண்டில் கடந்த மாதம் வரை 16.6 மில்லியன் மால்வேர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க பெண்ணுடன் வீடியோ சட் செய்த சவுதி இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு வாய்ப்பு!!

arrested

அமெரிக்க இளம் பெண்ணுடன் வீடியோ சட் செய்த குற்றத்திற்காக கைதான சவுதி இளைஞர் ஒரு வார கால காவலுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியாவை சேர்ந்த 19 வயது அபு சின் என்பவர் அமெரிக்க இளம் பெண்ணுடன் வீடியோ சட் செய்திருந்தார். இவர்களின் உரையாடல் அடங்கிய வீடியோ தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது.

இச்சம்பவத்தை அடுத்து சவுதி பொலிசார் நெறிமுறையற்ற நடத்தை காரணமாக குறிப்பிட்ட இளைஞரை கைது செய்தனர். இவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. சவுதியில் இருந்து இயங்கும் சமூகவலைத்தள பிரபலங்கள் பலரும் இளைஞர் அபு சின்னுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டனர்.

இந்நிலையில் ஒரு வார கால பொலிஸ் காவலுக்கு பின்னர் அபு சின் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய ரியாத் பொலிஸ் தலைமை அதிகாரியின் செய்தி தொடர்பாளர், இளைஞர் அபு சின் சவுதி அரேபியாவின் சைபர் குற்றவியல் சட்டப் பிரிவு 6- ஐ மீறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இளைஞர் அபு சின் மீதான வழக்கு விசாரணையில் உள்ளது. குறித்த வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 30 லட்சம் சவுதி ரியால் பிழையாக செலுத்த வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

தற்போது விடுதலையாகியிருக்கும் அபு சின் வெளியிட்ட வீடியோ ஒன்றில், தாம் தற்போது நிம்மதியை உணர்வதாகவும், மேலும் இதுபோன்ற உரையாடல்களில் ஈடுபடமாட்டேன் எனவும் உறுதி அளித்துள்ளார்.

சவுதி இளைஞர் அபு சின் மற்றும் அமெரிக்க இளம் பெண் கிறிஸ்டீனா ஆகியோர் மேற்கொண்ட உரையாடலை யூடியூப் வெளியிட்டது. இதனையடுத்து குறிப்பிட்ட வலைத்தளத்தில் இருவருக்குமான வரவேற்பு மிக அதிகமாக அதிகரித்தது. ஆயிரக்கணக்கானோர் குறிப்பிட்ட வீடியோவை கண்டு மகிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி தோட்டாவில் இருந்து உயிரை காப்பாற்றிய மொபைல் போன்!!

nokia-save-life

ஆப்கானிஸ்தானில் சீறி வந்த துப்பாக்கி தோட்டா ஒன்று மொபைல் போன் மீது பட்டதால் குறித்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தோட்டாவில் நின்று உயிரை காப்பாற்றிய அந்த மொபைல், நோக்கியா நிறுவனத்தின் 301 வகையை சார்ந்தது என தெரிய வந்துள்ளது.

நடந்த குறித்த சம்பவம் தொடர்பாக நோக்கியா நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ஒருவர் தமது டுவிட்டர் பக்கத்தில் இந்த செய்தியை பதிவிட்டுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் தாம் பணியாற்றிய நோக்கியா மொபைல் ஒன்று கடந்த வாரம் ஒரு உயிரை காப்பாற்றியுள்ளது என அவர் அந்த குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தற்போது மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் பணி புரியும் அந்த நிர்வாகி அந்த பழைய வகை மொபைல் போன் தயாரிப்பில் இணைந்து பனியாற்றியுள்ளார்.

குறித்த சம்பவத்தில் தோட்ட எங்கிருந்து எப்படி வந்தது போன்ற தகவல்கள் எதுவும் விரிவாக சொல்லப்படவில்லை.

இதனால் சிலர் குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். நோக்கியா நிறுவனம் மீது, தகவலை வெளியிட்ட நிர்வாகியின் மானசீக தொடர்பை மட்டுமே இது காட்டுவதாக உள்ளது. மட்டுமின்றி யுத்தம் நடைபெற்று வரும் நாடுகளில் நோக்கியா நிறுவனத்தின் மொபைல் வியாபாரத்தை பெருக்க மேற்கொள்ளப்படும் யுத்தியாகவும் இருக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நொக்கியா 301 மொபைல்கள் கடந்த 2013 ஆண்டு முதல் சந்தையில் இருந்து வருகிறது.

பிரபல நடிகையின் செயலை பாராட்டிய ரசிகர்கள்!!

anusree

விமான நிலைய உணவகத்தின் விலைப் பட்டியலை பிரபல நடிகை அனுஸ்ரீ பேஸ்புக்கில் வெளியிட்ட தகவலை தொடர்ந்து மனித உரிமை ஆணையம் விமான நிலைய இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையத்திற்கு தனது தோழியுடன் சென்ற பிரபல மலையாள நடிகை அனுஸ்ரீ அங்கு காபி மற்றும் சிக்கன் பப்ஸ் சாப்பிட்டுள்ளார்.

இதற்கான பில்லை அவர் கொடுக்கும் போது ரூ.680க்கு பில் வந்திருந்தது. 2 சிக்கன் பப்சின் விலை ரூ.500, காபி ரூ.100, பால் இல்லாத காபி ரூ.80 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வளவு அதிகமாக பில் வரும் என்று எதிர்பார்க்காத அனுஸ்ரீ அதிர்ச்சியடைந்ததார்.

இது குறித்து ஊழியர்களிடம் அவர் விளக்கம் கேட்ட போதும் யாரும் சரியாக பதில் அளிக்கவில்லை.

இதனால் அந்த விலை பட்டியலை பேஸ்புக்கில் வெளியிட்டு தனது ஆதங்கத்தை நடிகை அனுஸ்ரீ வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும், இதைப் பார்த்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த செபின் என்பவர் இது பற்றி மனித உரிமை ஆணையத்தில் புகாரும் செய்தார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து மனித உரிமை ஆணையம் விமான நிலைய இயக்குநர், உணவக மேலாளர் மற்றும் நுகர்வோர் துறை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பெண் தொழிலதிபர் பலாத்காரம் செய்து படுகொலை : நிர்வாண உடல் மீட்பு!!

rape

கோவாவில் பிரபல நறுமணப் பொருள் தயாரிப்பாளர் மோனிகா குர்தே பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது நிர்வாண உடல் மீட்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி நறுமணப் பொருள் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்களில் ஒருவர் மோனிகா குர்தே. 39 வயதான இவர் கோவாவின் சாங்கோல்டா கிராமத்தில் 3 படுக்கையறைகள் கொண்ட வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

கடந்த யூலை மாதம் தான் புரோவோரிம் கிராமத்தில் இருந்து இங்கு இடம்மாற்றி வந்து உள்ளார். இந்த கிராமம் பிரபல சுற்றுலா தலமான காலன்குயிட் கடற்கரை அருகே உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் இவரது வீட்டில் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது, அவர்கள் மோனிகாவின் கை கால்களைக் கட்டிப்போட்டு விட்டு வீட்டில் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மோனிகாவின் உடல் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டுள்ளது. உடலில் இருக்கும் காயங்களை பரிசோதனை செய்த பொலிசார், அவை பாலியல் துன்புறுத்தலின் போது ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் மோனிகா பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

தற்போது பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை என்ற கோணத்தில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த பொலிசார், தங்களுக்கு முந்தைய நாள் இரவு தகவல் கிடைத்தது எனவும், அவரது உடலை நிர்வாண நிலையில் மீட்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி வீடு கொள்ளையடிக்கபட்டு உள்ளது. அவரது கை மற்றும் கால்கள் படுக்கையுடன் கட்டப்பட்டு இருந்தது. தனியாக இருந்த அவர் வீட்டில் என்னென்ன பொருட்கள் கொள்ளை போனது என்பது தெரியவில்லை என்றனர்.

கட்டிட காவலாளியிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் மோனிகாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பபட்டு உள்ளது எனவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் தான் எந்த தகவலும் கூற முடியும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தனிக்குடித்தனத்துக்கு வற்புறுத்தும் மனைவியை விவாகரத்து செய்யலாம்! உயர்நீதிமன்றம் அதிரடி!!

fight

தனிக்குடித்தனத்துக்கு வற்புறுத்தும் மனைவியை கணவன் விவாகரத்து செய்ய முடியும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

1992 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட கர்நாடக தம்பதியினரின் விவாகரத்து மேல்முறையீட்டு மனுவினை விசாரித்த நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, எல்.நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வு இதுபோன்ற கருத்தினை கூறியுள்ளது.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, நம் நாட்டில் இந்து மதத்தை பின்பற்றும் ஒரு ஆண் அவரது தாய் தந்தையை விட்டு பிரிந்து வாழ்வது என்பது கலாச்சாரத்துக்கு எதிரானது.

அதுவும் பெற்றோர் சம்பாதிக்க முடியாத நிலையில் இருக்கும்போது மகன் அவர்களை பிரிந்து செல்லவே கூடாது. தன்னை பெற்று, அரும்பாடு பட்டு கல்வி அளித்து வளர்க்கப்பட்ட மகனுக்கு முதுமையில் பெற்றோரை பாதுகாக்கும் பொறுப்பும், கடமையும் உள்ளது.

திருமணத்துக்கு பின்னர் மனைவி கணவரின் குடும்பத்தினருடன் வாழவேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. திருமணத்துக்கு பிறகு மனைவி கணவரின் குடும்பத்தை சேர்ந்தவர் ஆகிறார்.

அக்குடும்ப உறுப்பினர்களின் சுக துக்கங்கள், முன்னேற்றத்தில் அவருக்கும் பங்குண்டு. எனவே உரிய வலுவான காரணம் இல்லாமல் கணவர் பெற்றோரைப் பிரிந்து தன்னுடன் தனிக்குடித்தனத்துக்கு வரவேண்டும் என மனைவி எதிர்பார்க்கக் கூடாது.

அப்படி அவர் வலியுறுத்தினால் அதுவே அவரிடமிருந்து அவரது கணவர் விவகாரத்து பெற உரிய காரணமாக அமையும். இந்த வழக்கில் மனுதாரரை அவரது மனைவி தற்கொலை செய்வதாக அச்சுறுத்தியிருக்கிறார்.

ஒருமுறை தற்கொலைக்கு முயலும்போது கடைசி நொடியில் காப்பாற்றப்பட்டிருக்கிறார். இத்தகைய சூழலில் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற தினமும் ஒரு கணவன் அச்சத்தில் வாழ்வது அவருக்கு மிகுந்த மன நெருக்கடியை ஏற்படுத்தும்.

இந்த வழக்கில் கீழ்கோர்ட் வழங்கிய விவாகரத்து உத்தரவை உறுதி செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

சனிக்கிரகத்தின் டையோன் நிலவில் தண்ணீர் : விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்!!

dione

சனிக்கிரகத்தின் நிலவான டையோனின் (Dione) நிலத்தடியில் பல கிலோமீட்டர்கள் ஆழத்தில் கடல் நீரோட்டம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இதன் மூலம் அங்கு நுண்ணுயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

சனிக்கிரகத்தை சுற்றும் டைட்டன் (Titan), என்சலட்டஸ் (Enceladus) ஆகிய இரு நிலவுகளும் பனிக்கட்டிக்கு அடியில் கடலை மறைத்து வைத்திருப்பதாக ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது.

இந்நிலையில், மற்றொரு நிலவான டையோனிலும் கடல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பெல்ஜியத்தின் ரோயல் ஆய்வக விஞ்ஞானிகள் இதனைக் கண்டறிந்துள்ளனர்.

டையோன் நிலவின் நிலத்தடிக்குக் கீழே 100 கி.மீ ஆழத்தில் அந்தக் கடல் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்தக் கடலைச் சுற்றி மிகப் பெரிய பாறை படிமங்கள் அமைந்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

இதன் மூலம் நீண்ட ஆயுள் கொண்ட நுண்ணுயிர்கள் அங்கு வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

இன்று முதல் ஓய்வுபெறுவதற்கு இணையத்தளம் மூலம் பதிவு செய்யலாம்!!

internet-privacy

ஓய்வுபெறுவதற்காக ஒன்லைன் முறையில் பதிவு செய்துகொள்ளும் வழிமுறை இன்று (08.10) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய ஓய்வூதிய தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இந்த வழிமுறை ஆரம்பிக்கப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் குறிப்பிட்டார்.

‘மகிழ்வுடன் இளைப்பாறுங்கள்’ என்பதே இம்முறை ஓய்வூதிய தினத்தின் தொனிப்பொருளாகும்.

தேசிய ஓய்வூதிய தினம் 2005 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டு இலங்கையில் கொண்டாடப்படுகின்றது.

இந்த தினத்தின் பிரதான வைபவம் களனி, வெதமுல்ல ஓய்வு விடுதியில் இன்று நடைபெறவுள்ளது.

25 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 1000 இற்கும் அதிகமான ஓய்வுபெற்றவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

நாட்டில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான ஓய்வுபெற்றவர்கள் இருப்பதாக ஓய்வூதிய திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் சுட்டிக்காட்டினார்.

www.pens/gov. k என்ற இணையத்தளம் ஊடாக இன்றுமுதல் ஒன்லைன் முறையில் ஓய்வுக்காக பதிவுசெய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஓய்வு பெற்றவர்களுக்காக வழங்கப்படும் ரயில் பயண அனுமதிச்சீட்டும் இன்று முதல் ஒன்லைன் முறையில் விநியோகிக்கப்படும் என ஓய்வூதியத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மேலும் கூறினார்.

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக் குடும்பத்தினரால் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வாழ்த்து!(படங்கள்)

 
கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு  புலமைபரிசில் பரீட்சை முடிவுகள் கடந்த புதன்கிழமை (04.10.2016)  வெளியாகியிருந்த  நிலையில்  வவுனியா இறம்பைக்குளம்  மகளீர் கல்லூரியிலிருந்து பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர்களில் கிடைக்கபெற்ற பெறுபேறுகளின் அடிப்படையில் 104  மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ள  மற்றும்  பரீட்சையில் சித்தியடைந்த  மாணவர்களுக்கும் மேலும்  அவர்களை பரீட்சைக்கு நெறிபடுத்திய அல்லது  தயார்படுத்திய ஆசிரியர்களுக்கும்  சகல விதங்களிலும் ஒத்துழைப்பு  நல்கிய பெற்றோருக்கும்  பாடசாலை குடும்பத்தின் சார்பில்  நன்றிகளையும் வாழ்த்துக்களையும்  தெரிவித்துக்கொள்கின்றது.

இவர்களுக்கு வவுனியா நெற் நிர்வாகமும் தனது  வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

dsc_7710 dsc_7738

dsc_7705 dsc_7709 dsc_7713 dsc_7715 dsc_7716 dsc_7717 dsc_7718 dsc_7721 dsc_7722 dsc_7725 dsc_7726 dsc_7727 dsc_7728 dsc_7730 dsc_7732 dsc_7734 dsc_7735 dsc_7736 dsc_7740 dsc_7743 dsc_7745 dsc_7746 dsc_7748 dsc_7750 dsc_7752

 

 

 

 

கிசு கிசுக்கள் வராவிட்டால் தான் வருத்தப்படுவேன் : லட்சுமிமேனன்!!

Lakshmi Menon Cute Photo Stills

 

ஒரு படம்போல இல்லாமல் ஜாலியான ஒரு பயணமாக இருந்தது றெக்க. விஜய் சேதுபதி என்னைக் கடத்துவார். எங்கள் பயணத்தின்போது அவர் மீது எனக்கு காதல் வரும்.

அது எப்படி என்றால்… இதற்கு மேல் கதையைச் சொன்னால் அவ்வளவுதான்’’ என்று சிரிக்கிறார் லட்சுமி மேனன்.

ஒவ்வொரு படத்திலும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு வருபவர், ‘றெக்க’விலும் அதேபோல களமிறங்கியுள்ளார்.

மலையாளத் திரையுலகில்தான் நடிக்கத் தொடங்கினீர்கள்.
ஆனால், தற்போது அதில் அதிக கவனம் செலுத்துவதில்லையே. தமிழிலேயே நல்ல கதையம்சமுள்ள வாய்ப்புகள் நிறைய வருகின்றன.

தமிழ் சினிமாவோடு கலந்துவிட்டேன். அதனால் அதை விடுத்து மற்ற திரையுலக வாய்ப்புகளை ஒப்புக்கொள்வதில்லை. தவிர, மலையாளத் திரையுலகம் வித்தியாசமானது.

அங்கு பல படங்களில் நடித்த நடிகைகள் தமிழில் நடிக்க கொஞ்சம் கஷ்டப்படுவார்கள். வித்தியாசமான கதையம்சமுள்ள படங்கள் வந்தால் மலையாளத்திலும் நடிப்பேன்.

2படங்களில் பாடினீர்கள். அத்துடன் நிறுத்திவிட்டீர்களே..
நான் பாடுவேன் என்று கனவில்கூட நினைத்தது இல்லை. இமான் சார்தான் நான் பாடியதை எங்கோ கேட்டு, பாட வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பு கிடைத்ததே பெரிய பாக்கியம்.

அந்த பாடல் மக்களிடையே வரவேற்பு பெற்றிருப்பதில் ரொம்ப சந்தோஷம். என் குரல் எல்லாவிதமான பாடல்களுக்கும் பொருந்திப்போகிற குரல் இல்லை.

எனது குரல் இந்தப் பாடலுக்கு சரியாக இருக்கும் என்று இசையமைப்பாளர்கள் அழைத்தால் கட்டாயம் பாடுவேன்.

பேஸ்புக்கில் இருக்கும் நீங்கள், ட்விட்டர் தளத்துக்கு வர தயங்குவது ஏன்?
6- ஆம் வகுப்பு படிப்பதில் இருந்தே பேஸ்புக்கில் இருக்கிறேன். அதை மட்டுமே பயன்படுத்துகிறேன். என் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தை நான் பார்ப்பதுகூட கிடையாது.

அதை எனக்காக யாரோ நடத்தி வருகின்றனர். ட்விட்டரில் நேரம் செலவழிப்பதை நான் விரும்பவில்லை.

ஒரு படத்தை எடுத்து, அது பற்றிய கருத்தைப் பதிவேற்றுவதை நான் விரும்புவது இல்லை. அந்த நேரத்தை வேறு உருப்படியான விஷயத்துக்கு பயன்படுத்தலாம்.

பரதநாட்டியம் கற்றீர்களே, எந்த அளவில் இருக்கிறது?
பரதநாட்டிய பயிற்சியை சில நாட்களாக நிறுத்தி இருக்கிறேன். அதற்கு என் சோம்பேறித் தனம்தான் காரணம்.

திரையுலகில் நுழைந்த பிறகு, நடனத்துக்காக நேரம் ஒதுக்க முடிய வில்லை. நடன நிகழ்ச்சி ஏதாவது இருந்தால் 2 வாரத்துக்கு முன்பு நடனப் பயிற்சி செய்வேன், அவ்வளவுதான்.

சென்னை கலாஷேத்ராவில் இணைந்து பரதநாட்டியம் கற்றுக்கொள்ளும் எண்ணம் இருக்கிறது. ஏனென்றால், அங்கு தான் என் அம்மா நடனம் கற்றுக்கொண்டார்.

உங்களைப் பற்றி வதந்திகள், கிசுகிசுக்கள் வரும்போது என்ன செய்வீர்கள்?
அதுபோன்ற செய்திகள் வராமல் இருந் தால்தான் வருத்தப்படுவேன். கிசுகிசு செய்திகள் இருந்தால் மட்டுமே நாம் தொடர்ச்சியாக திரையுலகில் இருக்கிறோம் என்ற எண்ணம் வருகிறது.

‘இவர்களைப் பற்றி எழுதினால் மக்கள் படிப்பார்கள்’ என்றுதானே எழுதுகிறார்கள். அதனால் கிசுகிசு செய்திகளை ரொம்ப ரசிப்பேன்.

பெண்கள் தனியாக வெளியே செல்வதால்தான் பிரச்சினை என்கிறார்கள். இதில் உங்கள் கருத்து என்ன?
நான் அதிகாலை 3 மணிக்கு எழுந்து தனியாகத்தான் செல்கிறேன். வெளிநாடுகளில் என்றால் தைரியமாக போவேன்.

இங்கு ஆண் நண்பர்களோடு செல்வேன். எனக்கு தோழிகள் மிகவும் குறைவு. அமெரிக்காவில் பெண்கள் சிறு உடைகள் அணிந்துகொள்வது அவர்களது கலாசாரம்.

நாம் அங்கு அது போன்ற உடைகளை அணிந்தால் பிரச்சினை இல்லை. அதை இங்கு அணிய முடியாது. நம் கலாசாரம் முற்றிலும் மாறுபட்டது.

அமெரிக்காவில் என்ன உடை அணிந்தாலும், தனியாக வெளியே போனாலும் பெண்கள் பிரச்சினையின்றி இருக்கிறார்கள். நம் ஊரில் பிரச்சினைகள் அதிகம்.

நீங்கள் தனியாக வெளியே செல்லும்போது, வீட்டில் என்ன சொல்வார்கள்?
ரொம்ப பயப்படுவார்கள். அவர்களது பேச்சைக் கேட்காமல் சென்றுவிடுவேன். வீடு திரும்பிய பிறகு, ‘பத்திரமாக வந்துவிட்டேன் பார்’ என்பேன்.

‘கவனமாக இரு. இது இந்தியா’ என்பார்கள். அதை மாற்ற வேண்டும்.

இளைய சமுதாயம் தனியாக வெளியே போகவில்லை என்றால் வேறு யார் போவார்கள்? அனைவரும் பயந்து வீட்டுக்குள் உட்கார்ந்தால் மாற்றம் எப்படி வரும்? பெண்கள் பயந்துகொண்டு, வீட்டிலேயே அடங்கிக் கிடக்கக் கூடாது.

தைரியத்தோடு வெளியே வரவேண்டும். அப்படி இருந்தால்தான், வேலைக்குச் சென்று சொந்தக் காலில் நிற்கும்போது, நம்மை நாம் முன்னெடுத்துச் செல்ல முடியும்.

மாயமான மலேசிய விமானத்தின் பாகம் 2 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு!!

flight

கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 8-ந் திகதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. ‘எம்.எச்.370’ ரக விமானத்தில் 239 பேர் பயணம் செய்தனர்.

ஆனால் அது என்ன ஆனது என தெரியவில்லை. அதில் பயணம் செய்த 239 பேரின் கதி என்ன என்றும் அறிய முடியவில்லை. எனவே விபத்தில் அவர்கள் அனைவரும் இறந்ததாக மலேசிய அரசு அறிவித்தது.

இந்திய பெருங்கடல் மீது பறந்தபோது அந்த விமானம் திடீரென மாயமானது. அந்த விமானத்தை அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் இந்திய பெருங்கடலின் 1 லட்சத்து 20 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் விமானம் மாயமான 2 ஆண்டுகளுக்கு பிறகு அதன் உதிரி பாகம் கடந்த மே மாதம் மொரீசியசில் கிடைத்துள்ளது. அது மாயமான மலேசிய விமானத்தின் இறக்கை பகுதி என ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட சோதனையில் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத் தகவலை மலேசிய போக்குவரத்து மந்திரி லியோ தியோங்லாய் அதிகார பூர்வமாக இன்று அறிவித்துள்ளார். இதற்கு முன்பு கடந்த ஆண்டு (2015) பிரான்சின் ரீயூனியன் தீவிலும், தான்சானியாவின் பெமா தீவிலும் தலா ஒரு உதிரிபாகம் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வானில் தோன்றிய மர்மப்பொருள் : அச்சத்தில் சீன மக்கள்!!

1

சீனாவில் உள்ள குவாங்கோ நகரில் வானில் தோன்றிய (பறக்கும் தட்டு ) மர்மப்பொருளால் மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.

திடீரென வானில் அந்த மர்மப்பொருள் தோன்றியதால் வாகனத்தில் சென்றவர்கள் வியப்படைந்ததுடன், குறித்த இடத்தில் நின்று மர்மப்பொருளை புகைப்படம் மற்றும் கானொளிகளையும் எடுத்தனர்.

மேலும் குறித்த மர்மப்பொருள் சுழலும் வேளையில் பல கரும் பொருட்கள் தோன்றுவதாக பொது மக்கள் கூறியுள்ளனர்.

இதன்காரணமாக அப்பகுதி முழுவதும் பல மணி நேரத்திற்கு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2

ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு பிரசவம் : வீடியோ இணைப்பு!!

lady

ஆர்ஜென்டினா நாட்டில் நிறை மாத கர்ப்பிணி பெண்ணுக்கு ஓடும் பேருந்தில் குழந்தை பிறந்துள்ளது.

அர்ஜென்டினாவின் சாண்டிகோ நகரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

அப்போது திடீரென அவருக்கு பிரசவவலி ஏற்பட்டது, இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பேருந்தை உடனடியாக நிறுத்தியதுடன், உதவிக்கு அருகிலிருந்த பொலிசாரையும் அழைத்துள்ளார்.

பின்னர் இவர்கள் உதவியுடன் அந்த இளம் பெண்ணுக்கு பேருந்துலேயே அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதை வீடியோவாக பதிவு செய்துள்ள அந்த ஓட்டுனர் அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

மகிழ்ச்சியுடன் தன் குழந்தையை கையில் ஏந்திக் கொண்டு அந்த பெண் கூறுகையில், என் பிரசவம் நல்லபடியாக நடந்தது, எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி அவர் கூறியுள்ளார். தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கண்ணாமூச்சி விளையாடில் சுவரின் நடுவில் சிக்கிய சிறுவன்!!

boy

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புலுகுண்டா கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் பரூக். இவன் பள்ளி விடுமுறையையொட்டி சிந்தாகுண்டா வாலைபள்ளியில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்று இருந்தான்.

அங்குள்ள சிறுவர்களுடன் பரூக் கண்ணாமூச்சி விளையாடினான். அங்குள்ள இரண்டு வீட்டின் சுவரின் நடுவில் ஒளிந்து கொள்ள சென்றான்.

சிறிய இடைவெளியே உள்ள சுவரில் பரூக் நுழைந்தபோது அவனது உடல் சுவர் இடுக்கில் சிக்கி கொண்டது. இதனால் அவனால் வெளியே வர முடியவில்லை. அவன் கூச்சல் போட்டும் யாருக்கும் கேட்கவில்லை.

பரூக்கை காணாததால் உறவினர்கள் தேடினார்கள். 3 மணி நேரத்துக்கு பிறகுதான் அவன் சுவரின் நடுவில் சிக்கி இருப்பது தெரிந்தது.

கிராம மக்கள் சிறுவனை மீட்க முயன்றனர். ஆனால் அவன் சுவரின் இடுக்கில் நன்றாக சிக்கி கொண்டதால் மீட்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுவர் இடைவெளி மிகவும் சிறியதாக இருந்ததால் ஒரு வீட்டின் சுவரை டில்லர் கருவி மூலம் உடைத்து சிறுவனை மீட்டனர். தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி மீட்டனர். அவர்களை கிராம மக்கள் பாராட்டினர்.

அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பியா ஜனாதிபதிக்கு!!

nobel

2016ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பியா ஜனாதிபதி ஜுவன் மெனுவேல் சாண்டோஸ்க்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5ம் திகதி முதல் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு பட்டியல் வெளியாகி வருகிறது. இதன்படி, முதலில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானி யோஷினோரி ஒசுமிக்கு வழங்கப்படுவதாகவும், இயற்பியலுக்கான நோபல் பரிசு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் தவ்லெஸ், டங்கன் ஹால்டன், மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ் ஆகிய மூவருக்கும் கூட்டாக வழங்கப்படுவதாகவும், வேதியியலுக்கான நோபல் பரிசு, பிரான்ஸைச் சேர்ந்த ஜீன்-பியர் சவாஜ், பிரிட்டனின்ஜே. ஃபிரேஸர் ஸ்டட்டார்ட், நெதர்லாந்து நாட்டின் பெர்னார்டு ஃபெரிங்கா ஆகியோருக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் நடப்பு ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பியா ஜனாதிபதி ஜுவன் மெனுவேல் சாண்டோஸ்க்கு வழங்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது.

நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் நோபல் குழு தலைவர் கோலி குஸ்மன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தென் அமெரிக்க நாடான கொலம்பியா 50 ஆண்டுகளுக்கும் மேலாக இடதுசாரி கிளர்ச்சியாளர்களால் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் அமைதி உடன்படிக்கை ஏற்படுத்துவதில் மேனுவல்சாண்டோஸ் முக்கிய பங்காற்றினார்.

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு 228 தனிநபர்களின் பெயர்கள் மற்றும் 148 அமைப்புகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.