டிவில்லியர்ஸ் சாதனை சமன் : சங்கக்காராவை குறி வைக்கும் பாகிஸ்தான் இளம் வீரர்!!

asam

பாகிஸ்தான்- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ஓட்டங்கள் குவித்தது.

பாகிஸ்தான் இளம் வீரர் பாபர் ஆசம் சிறப்பாக விளையாடி ஹாட்ரிக் சதம் அடித்தார். அவர் 106 பந்துகளை சந்தித்து 117 ஓட்டங்கள் (8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார்.

அவர் ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியில் 120 ஓட்டங்களும், 2வது ஒருநாள் போட்டியில் 123 ஓட்டங்களும் எடுத்திருந்தார்.

இதன் மூலம் ஒருநாள் போட்டியில் தொடர்ந்து 3 சதங்களை எடுத்த 8வது வீரர் என்ற பெருமை பெற்றார்.

இந்தப் பட்டியலில் தொடர்ச்சியாக 4 சதங்கள் (வங்கதேசம், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, ஸ்கொட்லன்) விளாசிய சங்கக்காரா முதலிடத்தில் இருக்கிறார்.

ஜகீர் அப்பாஸ், சாயிட் அன்வர், கிப்ஸ், டிவில்லியர்ஸ், டி கொக் , ரோஸ் டெய்லர் ஆகியோர் தலா 3 சதங்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இதேபோல் தொடக்க வீரரும், அணித்தலைவருமான அசார்அலியும் சதம் அடித்தார். அவர் 109 பந்தில் 101 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 44 ஓவரில் 172 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் 136 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக ராம்தின் 37 ஓட்டங்களும், பிராத் வெயிட் 32 ஓட்டங்ளும் எடுத்தனர்.

இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் தொடரை வென்று மேற்கிந்திய தீவுகள் அணியை ஒயிட் வாஷ் செய்தது. ஏற்கனவே டி20 தொடரையும், பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக மூடப்பட்ட Walt Disney World!!

walt-disney-world

அமெரிக்காவில் 140mph வேகத்திற்கு புயல் வீசுவதால் Walt Disney World தீம் பார்க் முதல் முறையாக மூடப்பட்டுள்ளது.

புளோரிடா மாகாணத்தை Matthew புயல் தாக்கவிருப்பதால், பாதுகாப்பு கருதி அங்கு அமைந்துள்ள Walt Disney World முதல் முறையாக மூடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில், “theme parks, water parks, Disney Springs, Disney’s miniature golf course மற்றும் ESPN Wild World Sports Complex ஆகிய அனைத்தும் இன்று மாலை 5 மணியுடன் மூடப்படுகிறது.

அக்டோபர் 7 ஆம் திகதி வரை இந்த தீம் பார்க்க மூடப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.

Haiti நாட்டில் இந்த புயலின் தாக்கத்தால் 100 பேர் வரை இறந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலில் தாக்கத்தால் மரக்கிளைகள் மக்கள் மீது விழுந்ததில் பாதி பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த Matthew புயலால் 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், உணவுப்பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் முன்கூட்டியே சேகரித்துவைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க தேசிய சூறாவளி மையம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், 6 ஆம் திகதி இரவு புளோரிடா மாநிலத்தை நெருங்கும் இந்த புயல், அன்றை இரவுப்பொழுது கழிகையில் மாநிலம் முழுவதையும் சுருட்டிவிடும். இந்த புயல் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

செல்லமாக கடித்த குழந்தையை கொன்ற தாய்மாமன்!!

baby

திருவள்ளூர் மாவட்டத்தில் செல்லக்கடி கடித்ததற்காக 3 வயது குழந்தையை தாய்மாமனே கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அழிஞ்சிவாக்கத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் சில வருடங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஹேமலா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியருக்கு ஹேமந்த் என்ற 3 வயது ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில், ஹேமலாவின் சகோதரரான தமிழ்செல்வன் என்பவர் முதுகலை பட்டம் படித்து வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி திரிந்துள்ளார்.

இந்நிலையில், தமிழ்செல்வன் தினமும் தனது அக்கா மகன் ஹேமந்த் உடன் விளையாடுவது வழக்கம்.

அது போல விளையாடிக் கொண்டிருக்கையில், செல்லமாக ஹேமந்த் தமிழ்செல்வனை அடிக்கவும், கடிக்கவும் செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தமிழ்செல்வன் ஹேமந்தை கொலை செய்ய திட்டமிட்டார்.

இதனையடுத்து, நேற்றிரவு ஹேமந்த் தூங்கி கொண்டு இருந்தபோது அவரை யாருக்கும் தெரியாமல் நைசாக வீட்டிலிருந்து தூக்கி கொண்டு கழிவுநீர் தொட்டி அருகே சென்றுள்ளார்.

அங்கு கை, கால்களை கட்டியதோடு ஹேமந்த்தின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு கழிவு நீர் தொட்டியில் போட்டுள்ளார்.

காலையில் குழந்தையை காணாமல் அனைவரும் தேடியபோது, தமிழ்செல்வனும் ஒன்றும் தெரியாதது போல் அவர்களுடன் சேர்ந்து தேடியுள்ளார்.

உடனடியாக பெற்றோர்கள் பெரியபாளையம் பொலிசுக்கு தகவல் தெரிவிக்கவே, விரைந்து வந்த அதிகாரிகள் குழந்தையை தேடியுள்ளனர்.

தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் குழந்தையை கண்டுபிடித்துள்ளனர், தொடர்ந்து அனைவரிடமும் விசாரணை நடத்தியதில் தமிழ்செல்வன் பதிலில் பொலிசுக்கு திருப்தியில்லாமல் இருந்தது.

இவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டார், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகளின் காதலனை வெட்டிக்கொலை செய்த தந்தை : பரபரப்பு வாக்குமூலம்!!

1459149523-8816

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த லட்சுமண பெருமாள் என்பவர், தனது மகளை காதலித்து வந்த நபரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.

லட்சுமண பெருமாளின் மகள் கஸ்தூரி என்பவர் திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.

கஸ்தூரியும், சிவகுருநாதன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர், இந்த காதல் விவகாரம் கஸ்தூரியின் வீட்டுக்கு தெரியவந்ததையடுத்து, அவரை பணிக்கு செல்ல வேண்டாம் என அவரது வீட்டில் கூறியுள்ளனர்.

மேலும், தனி அறையில் அடைத்துவைத்துள்ளனர். இதனை அறிந்த சிவகுருநாதன் கஸ்தூரியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார்.

ஆனால், ஜாதியை காரணம் காட்டி இந்த திருமணத்திற்கு கஸ்தூரியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார், மேலும் தனது மகளை மறந்துவிட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இதனால், இவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சாதுர்யமாகப் பேசிய லட்சுமணபெருமாள், அருகேயுள்ள கோயிலுக்கு சிவகுருநாதனை அழைத்துச் சென்றார். அங்கு சென்றதும் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிவகுருநாதனை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் அரிவாளுடன் லட்சுமண பெருமாள், தேவர்குளம் காவல்நிலையம் சென்று சரண் அடைந்தார்.

அவர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், மாற்று திறனாளியான என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. மனைவி பீடி சுற்றி வந்தார். மகன் சிவநேசன், ஆய்வக தொழில்நுட்ப படிப்பு படித்து நாகர்கோவிலில் வேலை பார்த்து வருகிறார். கஸ்தூரியை கஷ்டப்பட்டு படிக்க வைத்து வேலை வாங்கி கொடுத்தேன்.

அவர் வேறு சமுதாயத்தைச் சேர்ந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதனையறிந்த நான் அவரை கண்டித்தேன். பலமுறை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை இதனால் இவ்வாறு செய்தேன் என தெரிவித்துள்ளார்.

தற்போது, இதுகுறித்து பொலிசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதா நுரையீரலில் இருப்பது தொற்று கிருமி இல்லை : தமிழச்சியின் அடுத்த பகீர் பதிவு!!

tamilachi

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நுரையீரலில் இருப்பது தொற்று கிருமி இல்லை என தமிழச்சி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த 15 நாட்களுக்கு மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக லண்டன் மருத்துவர் ரிச்சர்டு தலைமையிலான மருத்துவர்கள் குழு மற்றும் உடல் நிபுணத்துவம் மருத்துவர்களான டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு என சிறப்பு மருத்துவர்கள் பலர் சிகிச்சை அளித்து வருகின்றன.

அதைத் தொடர்ந்து நேற்று அப்பல்லோ நிர்வாகம் அளித்த மருத்துவ அறிக்கையில் ஜெயலலிதாவின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், சிகிச்சை தொடர்பாக அவர் நீண்ட நாட்களுக்கு மருத்துவமனையில் தங்க நேரிடும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரான்ஸ்சைச் சேர்ந்த தமிழச்சி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதல்வர் ஜெயலலிதா மர்மமான முறையில் இறந்து விட்டார் என பேஸ் புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். அது தமிழகத்தில் காட்டுத் தீ போல் பரவி பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

அதன் பின்னர் மருத்துவர்கள் ஜெயலலிதா நல்ல நிலையில் இருக்கிறார் எனவும் தொடர்ந்து சிகிச்சை அளித்தால் சில தினங்களில் வீடு திரும்பிவிடுவார் என கூறினர். முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து தற்போது தமிழச்சி என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்று நோய் இல்லை எனவும் Species என்ற செலுத்தப்பட்ட கிருமி என்றும் பதிவேற்றம் செய்துள்ளார்.

புத்தளத்தில் காட்டு யானை தாக்கி கர்ப்பிணிப் பெண் படுகாயம்!!

attack

புத்தளம் மஹமெத்தேவ கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். நேற்றிரவு 10 அளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

காயங்களுக்குள்ளான இந்தப் பெண் விகாரைக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போதே தாக்குதலுக்கிலக்காகியுள்ளார்.

சம்பவதத்தில் காயமடைந்த பெண் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தப்போவ வனப்பகுதியிலிருந்து உணவுக்காக வரும் யானைகள் அடிக்கடி கிராமங்களுக்குள் உட்பிரவேசிப்பதாக கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

சுவீடனில் 10 கி.மீ. தூரம் இடம் மாற்றப்படும் நகரம்!!

 
சுவீடனில் ஒரு முழு நகரத்தையே வேறிடத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை கள் ஆரம்பமாகியுள்ளன.

சுவீடனின் வட பிராந்தியத்திலுள்ள மால்ம்பர்கேட் எனும் நகரை 10 கிலோமீற்றர் தூரம் நகர்த்துவதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

உள்ளூர் இரும்பு சுரங்கத் தொழிற்றுறையினருக்கு மேலும் அதிக இடங்களை ஒதுக்குவதே இதன் நோக்கமாகும்.

இத் திட்டத்தின்படி, மால்ம்பர்கேட் நகரின் வீடுகள் முதலான கட்டடங்களும் பாரிய வாகனங்கள் மூலம் ஏற்றிச் செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

c1 c2 c3

தந்­தையின் சகோ­த­ரரால் 10 ஆண்­டு­க­ளாக வல்லுறவுக்குள்ளான பெண்!!

lady

பெங்­க­ளூ­ருவில், சகோ­த­ரரின் மகளை 10 ஆண்­டு­க­ளாக பாலியல் வல்­லு­றவு செய்து கர்ப்­பத்தை கலைத்த ஹோட்டல் உரி­மை­யா­ளரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

பெங்­க­ளூரு அசோக் நகர் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பகு­தியில் வசித்து வரு­பவர் சீலா (வயது21, பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது). இவர் அந்த பகு­தியில் உள்ள தனியார் கல்­லூ­ரியில் படித்து வரு­கிறார்.

இவ­ரு­டைய பெற்றோர் கடந்த 2006ஆம் ஆண்டு உயி­ரி­ழந்­துள்­ளனர். இதனால், மாலா தனது தந்தையின் சகோ­த­ர­ரான ராஜூ என்­ப­வரின் கண்­கா­ணிப்பில் வளர்ந்து வந்தார். ராஜூ ஹோட்டல் நடத்தி வரு­கிறார்.

இந்த நிலையில் கடந்த 10 ஆண்­டு­க­ளாக அதா­வது, சீலா சிறு­மி­யாக இருந்­ததில் இருந்தே அவரை ராஜூ பாலியல் வல்­லு­றவு செய்து வந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. மேலும், சம்­பவம் குறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடு­வ­தா­கவும் அவர், சீலாவை மிரட்­டி­யுள்ளார்.

உயிர் பயத்தில் சீலா தனக்கு நேரும் கொடூ­ரத்தை யாரி­டமும் கூறாமல் இருந்­துள்ளார். இதனை ராஜூ தனக்கு சாதா­க­மாக பயன்­ப­டுத்திக் கொண்டு தொடர்ந்து உறவில் ஈடு­பட்டு வந்­துள்ளார்.

இதற்­கி­டையே சீலா கர்ப்­ப­ம­டைந்­துள்ளார். இதனை அறிந்த ராஜூ, சீலாவின் கர்ப்­பத்தை கலைத்துள்ளார்.

பின்னர் கடந்த சில நாட்­க­ளுக்கு முன்பு கல்­லூ­ரியில் இருந்து வீடு திரும்­பிய சீலாவை மீண்டும் வல்லுறவுக்­குட்­படுத்­தி­யுள்ளார். இந்­நி­லை­யி­லேயே தனது வாழ்க்கை இப்­படி ஆகி­விட்­டதே என்று மனம் உடைந்த சீலா, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தோழி­யிடம் கூறி கதறி அழு­துள்ளார். இது ­கு­றித்து, அவ­ரு­டைய தோழி, சீலா படித்து வரும் கல்­லூரி முதல்­வ­ரிடம் தெரி­வித்­துள்ளார்.

அதனை தொடர்ந்து சீலாவின் சார்பில் கல்­லூரி நிர்­வாகம் அசோக் நகர் பொலிஸ் நிலை­யத்தில் ராஜூ மீது முறைப்­பாடு செய்­தது. அதனை தொடர்ந்து பொலிஸார் வழக்­குப்­ப­திவு செய்து ராஜூவை கைது செய்­தனர்.

பாதிக்­கப்­பட்ட சீலா அரச பெண்கள் காப்­ப­கத்தில் சேர்க்­கப்­பட்­டுள்ளார். ஹோட்டல் உரி­மை­யாளர் ஒருவர் தனது சகோ­த­ரரின் மகளை 10 ஆண்டுகளாக வல்­லு­றவு செய்து கர்ப்பத்தை கலைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைமுடியினால் மக்கள் மத்தியில் பிரபலமான 2 மாதக் குழந்தை!!

b1

லண்டனில் கடந்த 9 வாரங்களுக்கு முன் பிறந்த ஜுனியர் காக்ஸ் நூன் தனது தலைமுடியினால் அந்நாட்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்.

இவரின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதனால் உலக முழுவதும் பிரபலமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீட்டிலேயே குறித்த குழந்தையின் தாய் குழந்தைக்கு சிகை அலங்காரம் செய்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும், வாரந்தோறும் பல்பொருள் அங்காடியிற்கு குழந்தையை தூக்கிச் செல்லும் போது,40 நிமிடத்தில் முடியும் வேலை 2 மணி நேரம் இக்குழந்தையினை பிறர் கொஞ்சுவதால் செலவாகின்றது என்று அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.

b2 b3 b4 b5

புதிய உலக சாதனை படைத்துள்ள இலங்கை இளைஞன்!!

ginuss

ஒரு நிமிடத்தில் 12mm உடைய 12 உருக்குக் கம்பிகளை வாயினால் வளைத்து ஹங்குராங்கெத்த பிரதேசத்தை சேர்ந்த ஜனக காஞ்சன முதன்னாயக என்ற இளைஞர் சாதனை படைத்துள்ளார்.

உலகில் சக்திமிக்க பற்களின் சொந்தக்காரன் என்ற கின்னஸ் சாதனை பெருவதே கொழும்பு துறைமுகத்தில் பணிப்புரியும் இந்த இளைஞரின் எதிர்பார்ப்பாகும்.

கொழும்பு முகத்துவாரம் துறைமுக பகுதியில் உள்ள மகாவலி பயிற்சி நிறுவனத்தில், விளையாட்டு மருத்துவ அதிகாரிகள், அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உள்ளிட்டவர்கள் முன்னிலையில் இன்று இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்னர் ரஷ்யாவின் அலெக்சாண்டர் மொரம்ஸ்கி என்பவர் 12 கம்பிகளை வாயினால் வளைத்து உலக சாதனையை நிகழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்!!(படங்கள்)

 
வவுனியா – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் எழுதுமட்டுவாள் வீதிக்கு அருகில் இன்று காலை நடந்த விபத்தில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு தனியார் பேரூந்தும் கிளிநொச்சியில் இருந்து யாழ்நோக்கி வந்த பார ஊர்தியும் மோதியமையாலயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது.

1 2 3 4 5 6 7

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர்தின விழா!!

 
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆசிரியர்தின விழா இன்று (06.10.2016) காலை பாடசாலையின் அதிபர் த.அமிர்தலிங்கம் தலைமையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

பாடசாலை பழைய மாணவர் சங்கம் , அபிவிருத்திக் குழு ஆகியன இணைந்து இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு சகல ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான உடைகள் பழைய மாணவர் சங்கத்தினால் வழங்கப்பட்டு ஆசிரியர்களுக்கான விஷேட போட்டி நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டு அவர்களிற்கான பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

14463034_1301262299917989_8591488789156758199_n 14469548_1301262676584618_3004689603662755320_n 14484755_1301262149918004_6729732160974440467_n 14492399_1301262743251278_5067178265256692466_n 14492519_1301261839918035_8066169784807864648_n 14494713_1301262829917936_3600141489587799581_n 14494879_1301262526584633_7070741395655374554_n 14495446_1301261676584718_5111526252665954164_n 14502830_1301262386584647_8089078758572110382_n 14502905_1301261429918076_4593046648427854640_n 14519858_1301262209917998_925304474799552304_n 14520446_1301261933251359_2091682183703961816_n 14520514_1301261973251355_3591161650742716631_n 14570508_1301262023251350_4171650369498188341_n 14572434_1301262443251308_2206184396495214878_n 14581546_1301262619917957_3616995378383642644_n 14591751_1301261513251401_2204493508247581165_n 14600974_1301261799918039_2422876003960019092_n 14606540_1301262899917929_9201222573783511459_nnews-1news-2news-3news-4news-7news-8news-9news-10news-11news-13news-14news-17news-18news-19news-20news-21news-24news-25

வவுனியாவில் வீட்டுக்குள் புகுந்த முதலை!!(படங்கள்)

 
வவுனியா சிதம்பரபுரம் பகுதியிலுள்ள குளத்திலிருந்த முதலை ஒன்று வீட்டிற்குள் நுழைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

சிதம்பரபுரம் வன்னிக் கோட்டம் பகுதியிலுள்ள குளத்தை அண்டிய பகுதியிலுள்ள வீட்டிற்குள் குளத்திலிருந்த முதலை ஒன்று நேற்று (05.10.2016) காலை 7.30 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்தபோது அதனை அவதானித்த வீட்டின் உரிமையாளர் முதலையினை விரட்டியதுடன் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.

பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்றதுடன் வவுனியா வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் முதலையினைப் பிடித்து கட்டி பொதுமக்கள் அற்ற காட்டுப்பகுதியில் விடுவித்துள்ளனர்.

1 image-0-02-03-2c2956338295216776cd956338ca7d0e6f832686ada90b40393452f00cf98d49-v image-0-02-03-209d99d90cfe2a30b79479651c5e1b9bca3770e615cb9ea7bb990fb07bb91a95-v media-share-0-02-03-d0f494253bb88b740e89b58844762dbf534cec8aea0aa6f3db749099e2af545f-7616a7a7-773a-4fe5-802c-77a869d61538

வவுனியாவில் புலமை பரிசில் பரீட்சையில் தமிழ் மொழிமூலம் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவன் அபிசிகன் பாடசாலை சமூகத்தால் கௌரவிப்பு!(படங்கள்,வீடியோ!)

கடந்த (2016)ஆகஸ்ட்  மாதம் இடம்பெற்ற புலமைபரிசில்பரீட்சையில் தோற்றி   வவுனியா மாவட்டத்தில் 195  புள்ளிகளை பெற்று  தேசியரீதியில் தமிழ் மொழியில் முதலிடத்தையும் பெற்றுக்கொண்ட  கோகுலதாசன் அபிசிககனை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (06.10.2016)  பாடசாலையில் இடம்பெற்றது .

மேற்படி நிகழ்வில் பாண்ட்  வாத்தியம் சகிதம்  இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் இருந்து பாடசாலை சமூகத்தினரின் ஏற்பாட்டில்  தேசிய சாதனையாளரான கோகுலதாசன் அபிசிகன்  ஆலய பங்குதந்தை,பாடசாலை அதிபர் ஆசிரியர்கள்  மற்றும்  மாணவர்கள்  பெற்றோர் சகிதம் அழைத்து வரப்பட்டார் .

தொடர்ந்து பாடசாலை முன்றலில் ஒன்றுகூடிய  மாணவர்கள் ஆசிரியர்கள் மத்தியில் மேற்படி தேசிய சாதனையாளரான  அபிசிகனுக்கு மலர்மாலை அணிவித்தும் பொன்னாடை போர்த்தியும்  கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது .

தொடர்ந்து பாடசாலையில் இம்முறை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை(107) சித்தியடைய வைத்த மற்றும் அவர்களைப் பரீட்சைக்கு தயார்படுத்திய வகுப்பாசிரியர்கள் கௌரவிப்பு இடம்பெற்றதுடன் அபிசிகனது பெற்றோரும்  கெளரவிக்கபட்டனர் .

மேற்படி நிகழ்வில் பாடசாலை சமூகத்துடன்  வவுனியா தெற்கு வலய கல்வி பணிப்பாளர் சு.இராதாகிருஷ்ணன், ஆலயபங்குதந்தை சத்தியராஜ் கல்லூரி அதிபர் .அருட்சகோதரி ஜெயநாயகி செபமாலை ஆகியோரும் கலந்து கொண்டனர்.

IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF

மீண்டும் பழைய காதலருடன் ஐஸ்வர்யாராய்!!

maxresdefault

ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்துள்ளார். இவர் நடிப்பில் கரன் ஜோகர் இயக்கத்தில் ஏ தில் ஹை முஷ்கில் படம் இந்த தீபாவளிக்கு வருகிறது.

இந்நிலையில் இவரின் பழைய காதலர் சல்மான் கான் நடத்தும் நிகழ்ச்சி பிக் பாஸ், இதில் ஐஸ்வர்யாராயும் கலந்துக்கொள்ள இருக்கிறார் என ஒரு செய்தி உலா வருகின்றது.

இதுமட்டுமின்றி ஏ தில் ஹை முஷ்கில் போல் நல்ல கதை என்றால் சல்மான் கானுடன் நடிக்க ரெடி என்று இவர் முடிவெடுத்துள்ளதாக ஒரு கிசுகிசு உலா வருகின்றது.

இப்படியும் ஒரு கொடூரம்- 3 வயது குழந்தையை தீயிட்டு கொளுத்திய 16 வயது சிறுவன்!!

fire-texture-blazing-hot-flames-burning-bright-orange-wallpaper
இந்தியாவின் ஐதராபாத்தில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது குழந்தையை 16 வயது சிறுவன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஐதராபாத்தை சேர்ந்த முகமது அலி ஷபிர்(வயது 3) மற்றும் சில குழந்தைகள் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அதே சாலையை சேர்ந்த 16 வயது சிறுவன் பைக்கில் வந்துள்ளான்.சாலையின் நடுவே விளையாடிய ஷபிரை விலகிச் செல்லும்படி கூறியுள்ளான்.ஷபிருக்கு எதுவும் புரியாமல் நின்று கொண்டிருக்கவே, கடும் கோபமடைந்த 16 வயது சிறுவன் ஷபிர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளான்.

ஷபிர் அலறித் துடிக்கவே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவன் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் குறித்த சிறுவனை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.