பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்க்கும் விடயங்கள்!!

Girl

ஆண்கள் எப்போதுமே ரொமாண்டிக்காக இருக்க விரும்புவது இயல்பு. குறைந்தபட்சம் தங்களது 25 வயது வரைக்குமாவது ரொமாண்டிக் லுக்கில் இருக்க விரும்புவார்கள். இதற்கு காரணம் பெண்கள் தான். பெண்களுக்கு ரொமாண்டிக்காக இருந்தால் தான் பிடிக்கும் என்று யாரோ, எப்போதோ, கொளுத்திப் போட்ட திரியினால், இன்று வரை இந்த எண்ணம் ஆண்களின் மனதில் கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் இதைப் பற்றி பெண்களிடம் கேட்டால், “நாங்க எப்போது அப்படிச் சொன்னோம்..??” என்று குண்டை தூக்கி போடுகிறார்கள். ஆம், ரொமாண்டிக் என்பதையும் தாண்டி பெண்கள் ஆண்களிடம் சில சுவாரஸ்யமான விஷயங்களை எதிர்பார்கிறார்கள்.

பெண்கள் தான் இதை சுவாரசியம் என்கிறார்கள், உங்கள் பார்வையில் இது எப்படி இருக்கிறது என்று நீங்களே கூறுங்கள்..

காது கொடுத்து கேட்க வேண்டும்
தாங்கள் பேசுவதை காது கொடுத்து கேட்க வேண்டும். பேச, பேச, குறுக்கே பேசுவது, முழுதாய் புரிந்துக் கொள்ளாமல் காச்சுமூச்சென கத்தக் கூடாது என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சுதந்திரமாக இருக்க வேண்டும்
அவனும் சுதந்திரமாக இருக்க வேண்டும், எங்களையும் சுதந்திரமாக இருக்க அனுமதிக்க வேண்டும். வேலை, சுய விருப்பங்கள் போன்றவற்றில் தலையீடுகள் இருக்க கூடாது என எதிர்பார்க்கிறார்கள்.

நடைமுறைக்கு ஏற்று நடப்பவர்
கண்டதை பேசி நேரத்தை வீணடிக்காமல், மூட நம்பிக்கைகள் இன்றி, நடைமுறைக்கு ஏற்றார் போல வாழும் நபர்களை எதிர்பார்க்கிறார்கள் தற்போதைய பெண்கள்.

தன்னிச்சையாக செயல்பட கூடியவர்கள்
எந்த செயலாக இருந்தாலும், மற்றவர் உதவியை எதிர்பாராமல் தனிச்சையாக செயல்பட கூடிய ஆண்களை மிகவும் பிடிக்குமென பெண்கள் கூறுகிறார்கள்.

நேர்மறை எண்ணம்

எதற்கெடுத்தாலும், எதிர்மறையாக பேசவது, ஏதாவது செய்யும் போது “இது சரியாக வருமா???” என கேள்விகள் கேட்பது என இல்லாமல், நேர்மறை எண்ணங்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் பெண்கள்.

உறுதுணையாக இருப்பவர்கள்

என்ன சூழ்நிலையாக இருந்தாலும் தங்களோடு, தங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்களே எங்களுக்கு வாழ்க்கை துணையாக இருக்க வேண்டும் என விருப்பப்படுகிறார்கள் பெண்கள். இந்த குணாதிசயம் மிகவும் முக்கியமானது என்றும் கூறுகிறார்கள்.

அன்பானவன்

ஏதேனும் தவறு செய்தால் கூட அதை குத்திக் காண்பிக்காது, அன்பாக எடுத்துரைக்கும் ஆண்கள் தான் சிறந்தவர்களாம். இவர்கள் தான் இதய பூர்வமாக பழகுவார்கள் என நம்புகிறார்கள் பெண்கள்.

நல்ல பண்புடையவராக, மற்றவர்களுக்கு நல்லது செய்யாவிடினும், கேடு நினைக்காமல் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் தான் உண்டு, தன் வெளியுண்டு என்றிருந்தால் கூட போதும் என்கிறார்கள் பெண்கள்.

நேர்மையானவர்

இது தான் மிகவும் முக்கியமானது என்கிறார்கள் பெண்கள். சரியோ, தவறோ, எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.சிறந்த ஆணுக்கான இலக்கணமே நேர்மைதானம். (சரி இதே கேள்விய பசங்க திருப்பி கேட்டா என்ன பண்ணுவீங்க

முதிர்ச்சியான ஆண்

மனதளவில் முதிர்ச்சியாக இருக்க வேண்டும். என்ன செய்தாலும், ஒருமுறைக்கு நான்கு முறை யோசித்தால் கூட பரவாயில்லை. ஆனால், எடுக்கும் முடிவு சரியானதாக இருக்க வேண்டும். செயலில் இறங்கிய பிறகு யோசிப்பது தவறு. வெளி வேலைகளில் மட்டுமின்றி வீட்டிலும் கூட இதை கடைப்பிடிக்க வேண்டும் என எதிர்பார்கிறார்கள் பெண்கள்.

பெண்கள் உறங்கும் நிலையை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என அறிந்து கொள்ளுங்கள்!!

Girls Sleeping position

பெரும்பாலும், தம்பதிகள் உறங்கும் நிலையை வைத்து அவர்கள் இல்லற வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என கூற முடியும் என கேள்விப்பட்டிருப்போம்.

இதே போல பெண்கள் உறங்கும் நிலையை வைத்தே அவரது குணாதிசயங்கள், அவர் எப்படிப்பட்ட நபர், கோபக்கார நபரா, அமைதியானவரா என கண்டறிய முடியுமாம்.

நேராக படுப்பது, குப்புறப் படுப்பது, பக்கவாட்டில் படுப்பது, பொம்மை அல்லது உடன் இருப்பவர்களை கட்டியணைத்துக் கொண்டு படுப்பது என இந்த 4 முறையில் தான் பெரும்பாலும் அனைவரும் உறங்குவார்கள். இந்நிலைகளை வைத்து தனிப்பட்ட நபரின் குணாதிசயங்கள், பண்புகள் எப்படி இருக்கும் என இனிக் காண்போம்.

குப்புறப்படுப்பது

குப்புறப் படுத்துக் கொண்டு தலையணைக்கு கீழ் கைகளை அணைத்து கொள்வது போல வைத்துக் கொண்டு உறங்கும் பெண்கள் இயற்கையாகவே மென்மையானவர்களாக இருப்பார்களாம்.

இவர்கள் எதுவாக இருப்பினும் அதை வரவேற்கும் குணம் கொண்டிருப்பார்கள். மகிழ்ச்சி, இகழ்ச்சி, இன்பம், துன்பம் என உணர்வு ரீதியாக இவர்கள் அதிக தாக்கம் கொள்வார்கள்.

கட்டியனைத்துக் கொண்டு உறங்குவது

தலையணை, பொம்மை அல்லது பக்கத்தில் இருப்பவர்களை கட்டியணைத்துக் கொண்டு உறங்கும் பழக்கம் கொண்டுள்ள பெண்கள் நம்பகமானவர்களாக திகழ்வார்கள்.

எந்த விஷயமாக இருந்தாலும் இவர்கள் வெளிப்படையாக வெகுளியாக பேசிவிடுவார்கள். உள்ளொன்று வைத்துக் கொண்டு புறமொன்று பேசுவது போன்று இருக்க மாட்டார்கள். இவர்கள் நல்ல தோழியாக திகழ்வார்கள்.

நேராகப் படுப்பது

நேராக படுத்து உறங்கும் பெண்கள் இயற்கையாகவே அமைதியானவர்களாகவும், கூச்ச சுபாவம் கொண்டுள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

தங்களை தாங்களே உயர்வாக எண்ணிக்கொள்வது, தன்னம்பிக்கை இவர்களது விஷேசமான குணம் என கூறலாம். இவர்களிடம் பாஸ், மேனேஜர் போன்ற தலைமை வகிக்கும் குணம் அதிகமாக இருக்கும்.

பக்கவாட்டில் படுப்பது

அமைதியான குணாதிசயம், இரகசியத்தை வெளியே கசிய விடமாடார்கள். இவர்களை சற்று அதிகமாகவே நீங்கள் நம்பலாம்.

எவ்வளவு கடினமாக இருப்பினும், கோவப்படாமல், அவசரப்படாமல் அதற்கான தீர்வுகளை காண்பவர்களாக திகழ்வார்கள். உத்வேகமாகவும், மகிழ்ச்சியான நபர்களாகவும் இருப்பார்கள்.

சுவாதி படுகொலை செய்யப்படும் போது கர்ப்பமாக இருந்தார் : பரபரப்பு தகவல்களை வெளியிட்ட தமிழச்சி!!

Swathi

சுவாதி கொலை வழக்கு தொடர்பாக அவ்வப்போது பதிவுகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் தமிழச்சி, தற்போது, ஒரு புதிய பதிவினை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது, சுவாதி படுகொலை செய்யப்படும்போது கர்ப்பமாக இருந்தார் என்பது தான். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

சுவாதி படுகொலை செய்யப்படும் போது அவர் கர்ப்பமாக இருந்தார்” என்ற வாய் வழி தகவல்களை நம்பி பதிவு செய்யவில்லை. ஆனால் அவருடைய ‘போஸ்ட்மார்ட் ரிப்போர்ட்’ மூலமாக அவை உண்மை என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவை நீதிமன்ற விசாரணையில் காவல்துறையினரால் சமர்ப்பிக்கப்படும் போது உண்மைக்கு புறம்பான தகவல்களாகவே இருக்கும் என்கிறார் அந்த நபர்.

சுவாதி படுகொலை செய்வதற்கு காரணமான நபர்கள், அவர்களுக்கு பின்னணியில் இருந்த சில பா.ஜ.கட்சி உறுப்பினர்களும் இந்து பரிவாள அமைப்பினரில் சிலருக்கும் இந்த உண்மை தெரிந்திருக்கிறது.

சுவாதி பிலாலை திருமணம் செய்தது, கர்ப்பமானது, இஸ்லாமிய மதமாற்றத்திற்கு முயன்றது உள்ளீட்ட இந்த காரணங்களினாலே படுகொலை செய்யப்பட்டார். அக்கொலைக்கு பிலாலையே பொறுப்பாக்கி இந்து / இஸ்லாமிய கலவரத்தை தூண்டி அரசியல் செய்வதும் தான் அவர்களுடைய முக்கிய குறிக்கோள்.

அதனால்தான் சுவாதி கொல்லப்பட்ட மறுநாளே பிலால் கதையை பா.ஜ.கவினரும் இந்து பரிவாள அமைப்புகளும் ஆரம்பித்தன.

பா.ஜ.கவைச் சேர்ந்த கல்யாண்ராமன் சுவாதி கர்ப்பாக இருந்ததை மறைமுகமாக எழுதி சில மணிநேரங்களில் அப்பதிவை நீக்கி விட்டார். அதேப்போல் ஓய்.ஜி.மகேந்திரனுக்கு ஆதரவாக பேசிய பதிவையும் காணவில்லை.

#தமிழச்சி

மனைவியின் சடலத்தை சுமந்த கணவனுக்கு பஹ்ரைன் பிரதமர் உதவி!!

Help

ஒடிசாவில், இறந்த மனைவியின் சடலத்தை, எடுத்துச் செல்ல வாகன வசதியில்லாமல், தன் தோளில் சுமந்து சென்ற கணவருக்கு உதவிட பஹ்ரைன் பிரதமர் முன்வந்துள்ளார்.

ஒடிசா மாநிலத்திலுள்ள காலஹந்தி மாவட்டத்தைச் சேர்ந்த, பழங்குடியினத்தவரான தனா மாஜி(49) தன் மனைவி அமாந்த் தேயை(42), காசநோய் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவரது மனைவி இறந்தார். ஏழ்மையில் வாடும் தனா, மனைவியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல இலவச ஆம்புலன்ஸ் வசதி செய்து தரும்படி கோரியும், மருத்துவமனை ஊழியர்கள், அவருக்கு உதவ மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் வேறு வழியின்றி, மனைவியின் உடலை, தன் தோளில் சுமந்தபடி, 60 கி.மீ., தொலைவில் உள்ள தன் வீடு நோக்கி நடந்து வந்தார், அவருடன் 12 வயதான மகளும், உடன் நடந்து சென்றார்.

மருத்துவமனையிலிருந்து, 12 கி.மீ., கடந்த நிலையில், வழியில் பத்திரிகையாளர் ஒருவரின் உதவியால், இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியரின் உத்தரவால் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

பின் தனா மாஜி, மனைவியின் உடலை ஆம்புலன்சில் வீட்டிற்கு எடுத்துச் சென்றார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இச்செய்தியை கேள்விப்பட்ட பஹ்ரைன் பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலிபா மனம் வருந்தி உள்ளார். பின் தனா மாஜிக்கு நிதி உதவி செய்ய விரும்பியதாக கூறப்படுகிறது.

அதற்காக அவரின் முகவரி மற்றும் வங்கி கணக்கு விபரங்களை கொடுக்கும்படி கேட்டு பஹ்ரைன் தூதரகத்திற்கு, அந்நாட்டு பிரதமர் அலுவலகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட விவரங்கள் கிடைத்ததும், விரைவில் தனா மாஜிக்கு பஹ்ரைன் பிரதமர் சார்பில் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இணையத்தளத்தை உள்ளுர்வாசிகளே ஊடுருவினர் : விசாரணையாளர்கள்!!

Hacked

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணைத்தளம் கடந்த வாரத்தில் இரண்டு முறை ஊடுருவல் நடத்தப்பட்டமைக்கு உள்ளுர் ஊடுருவலாளர்களே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளம் கடந்த வியாழக்கிழமையும், வெளிக்கிழமையும் அடுத்தடுத்து ஊடுருவல்களுக்கு உள்ளாகின.

முதலாவது ஊடுருவலின்போது ஸ்ரீலங்கா யூத் என்ற பெயரில் சில வாசகங்கள் அதில் பிரசுரிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக கல்வி தொடர்பான கோரிக்கைககள் அதில் இடம்பெற்றிருந்தன.

இரண்டாவது ஊடுருவலின்போது பங்களாதேஷ் பிரஜை ஒருவரால் அது மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது

எனினும் அதுவும் உள்ளூர் ஊடுருவல் காரர்களாலேயே மேற்கொள்ளப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த இணையத்தளம் வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்கள் குறித்து சேரனின் சர்ச்சைக்குரிய பேச்சிற்கு சீமான் கண்டனம்!!

Seeman

ஈழத்தமிழர்களுக்காக போராடியதை நினைக்கும்போது அருவருப்பாக உள்ளது என்ற இயக்குனர் சேரனின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற கன்னா பின்னா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் சேரன் கலந்து கொண்டார்.

இதன் போது புதிய தமிழ் சினிமாக்களை ஆன்லைனில் ஏற்றி சினிமாவுக்கு எதிரியாக இருப்பது ஈழத்தமிழர்கள்தான். அவர்களுக்காகவா நாம் போராட்டம் நடத்தினோம் என்று நினைத்தால் அருவருப்பாக உள்ளது, என சேரன் கூறினார்.

இது குறித்து சீமான் அளித்துள்ள பேட்டியில், கன்னா பின்னா திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சேரன் ஈழத்தமிழர்கள் குறித்து கூறிய கருத்தை கேட்டவுடன் மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

அவர் அப்படிப் பேசியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சேரன் இதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை தொடர்பில் 50 பேரிடம் விசாரணை!!

Dead

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை தொடர்பில் 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டியில் வைத்து கடந்த வாரம் கடத்தப்பட்டு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகர் மொஹம் சகீம் சுலைமானின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இன்று வரையில் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் இவ்வாறு 50 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, வெள்ளவத்தை, கோட்டே, கறுவாத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளின் சீ.சீ.ரீ.வி கமரா காட்சிகளும் சோதனையிடப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த 21ஆம் திகதி பம்பலப்பிட்டி கொத்தலாவல அவனியூவில் வைத்து இனந்தெரியாத கும்பலொன்று வர்த்தகரை கடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரபாகரனால் சிக்கலில் மாட்டியுள்ள விஜயகாந்த்!!

Vijayakanth

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தை மார்பிங் செய்து அதில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் புகைப்படத்தை ஒட்டியமைக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 25ஆம் திகதி தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் போஸ்டர், பதாகைகள் என ஒட்டியிருந்தனர்.

இந்நிலையில், ஆரணி தே.மு.தி.க அணியினர் வைத்த பதாதை ஒன்று தற்போது உலகம் முழுவது பாரிய சர்சையை தோற்றுவித்துள்ளது.

விஜயகாந்த் பிறந்த நாளுக்காக வைக்கப்பட்ட பதாதை ஒன்றில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சீருடையில் தலைவர் பிரபாகரன் இருக்கும் புகைப்படம் ஒன்றில் பிரபாகரன் அவர்களின் முகத்தை நீக்கிவிட்டு மார்பிங் செய்யப்பட்டுள்ளது.

குறித்த புகைப்படம் ஊடகங்களில் வெளியான நிலையில், தற்போது உலக தமிழர்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இயக்குநர் சேரன், ஈழத் தமிழர்களை விமர்சித்தது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், தற்போது விஜயகாந்தும் வம்பில் மாட்டியுள்ளார்.

இரண்டே நாட்களில் செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்கலாம் : தயாராகின்றது விண்வெளி ரயில்!!

Train

தற்போது விஞ்ஞானிகளின் மனதில் மட்டுமல்ல பல மக்களின் பார்வையும் செவ்வாய் கிரகத்தின்மேல் காணப்படுகின்றது.

இதற்கு காரணம், சம கால விண்வெளி ஆய்வுகள் அனைத்தும் செவ்வாய் கிரகத்தை மையப்படுத்தி அதிகளவில் இடம்பெறுவதுடன், மக்களை செவ்வாய் கிரகத்திற்கு ஒரு வழி பயணமாக அழைத்துச் செல்லும் திட்டம் ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளமை ஆகும்.

எனினும் இவை தொடர்பான முடிவுகள் இன்னும் எட்டப்படாத நிலையில் தற்போது மற்றுமொரு பரபரப்பு தொற்றியுள்ளது.

அதாவது தற்போதைய நிலையில் செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்வதற்கு தோராயமாக 260 நாட்கள் வரை செல்லும்.

ஆனால், இரண்டே நாட்களில் பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்கக்கூடிய விண்வெளி ரயில் ஒன்றின் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை மென்ரீரியலில் வசிக்கும் Charles Bombardier எனும் கண்டுபிடிப்பாளர் உருவாக்கியுள்ளார்.

இந்த ரயில் ஆனது ஒளியின் வேகத்திலும் 1 சதவீத வேகத்தில் பயணிக்கக்கூடியது என அவர் தெரிவித்துள்ளார். அதாவது செக்கனுக்கு 3,000 கிலோ மீற்றர்கள் தூரம் பயணம் செய்யும்.

குறித்த மாதிரி ரயில் ஆனது 6 உருளை வடிவ கொள்கலன்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுடன், நிஜத்தில் இதன் மொத்த நீளம் 50 மீற்றர்கள் வரை இருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த ரயிலின் உதவியுடன் சந்திரனுக்கு 2.13 நிமிடத்திலும், நெப்டியூனுக்கு 18 நாட்களிலும் பூமியிலிருந்து பயணிக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒருநாள் போட்டியிலிருந்து விடைபெற்ற டில்ஷான் : எழுந்து நின்று மரியாதை செலுத்திய ரசிகர்கள்!!

Sri Lankan cricketer Tillakaratne Dilshan, center, is greeted with an arch of bats as he enters the field for the last match of his ODI cricket career during the third one day international cricket match against Australia in Dambulla, Sri Lanka, Sunday, Aug. 28, 2016. (AP Photo/Eranga Jayawardena)

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 42 ஓட்டங்கள் எடுத்த இலங்கை வீரர் திலகரத்ன டில்ஷான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்றார்.

இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான டில்ஷான் தம்புள்ளையில் நடக்கும் 3வது ஒருநாள் போட்டியோடு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெறப் போவதாக தெரிவித்திருந்தார்.

இதன்படி நேற்று களமிறங்கிய டில்ஷான் தனது கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 42 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.

அவர் ஆட்டமிழந்ததும் அவுஸ்திரேலிய வீரர்கள் கைக்கொடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

துணைத்தலைவர் சந்திமால் நீண்ட தூரம் டில்ஷானுடன் நடந்து வந்து அவரை வழியனுப்பினார். ரசிகர்களும் எழுந்து நின்று அவருக்கு பிரியாவிடையளித்தனர்.

இலங்கை அணிக்காக 329 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள டில்ஷான், 22 சதங்கள், 47 அரைசதங்களுடன் 11,868 ஓட்டங்கள் குவித்துள்ளார். பந்து வீச்சில் 106 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.

D2 D3 D4

பாடசாலைக் கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த 5ம் வகுப்பு மாணவி!!

Baby Born

கர்நாடகாவில், 5ம் வகுப்பு படித்து வரும் 14 வயதான பழங்குடி மாணவி ஒருவர் பள்ளி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் அப்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதேஸ்வரன் மலை மெதுகநானே பகுதி மலைவாழ் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவர் ரூபா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). பள்ளி படிப்பை 2 வருடம் இடைநிறுத்தி இருந்த இவர், 14 வயதில் 5ம் வகுப்பில் சேர்ந்து படித்து வந்துள்ளார்.

இவர் கடந்த 25ம் திகதி வழக்கம் போல பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளி ஊழியர்கள் அவரை சுத்தம் செய்வதற்காக கழிவறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. ஆனால் ரூபாவுக்கு பிரசவம் ஆகும் வரை அவரது உடலில் எந்தவிதமான மாற்றமும் தென்படவில்லை. இதனால் அவர் கர்ப்பமாக இருந்ததும் யாருக்கும் தெரியவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கூறியதாவது, ரூபாவின் இந்த நிலைக்கு அவரது மாமா Shivu என தெரிவித்துள்ளனர்.

பிச்சைக்காரர் உருவில் சீரடி சாய்பாபா!!

Baba

குமாரபாளையத்தில் உள்ள சாய் பாபா கோவிலுக்கு பிச்சைக்காரர் ஒருவர் சீரடி சாய்பாபா உருவில் வந்ததை தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எம்.ஜி.ஆர் நகரில் சாய் பாபா கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அழுக்குப் படிந்த உடைகளை அணிந்த முதியவர் ஒருவர் வந்துள்ளார்.

அவர் புகைப்படத்தில் உள்ள சாய் பாபாவைப் போல் அமர்ந்து மக்களுக்கு ஆசி வழங்க தொடங்கியுள்ளார்.

உடனே அங்கிருந்தவர்கள் சாய் பாபாவே நேரில் வந்து ஆசி வழங்குவதாகச் சொல்ல, விஷயம் பரபரப்பாகி குமாரபாளையத்தில் உள்ள பக்தர்கள் கோவிலுக்கு படையெடுத்துள்ளனர்.

இதனால் கூட்டம் கூடியது. முதியவருக்கு மாலை போட்டு பூக்களால் அபிஷேகம் செய்துள்ளனர். அந்த முதியவரும் எல்லோருக்கும் ஆசி வழங்கினார்.

அவர் பாபாவின் உருவத்தில் வந்து இருப்பதால் இவரே பாபாவின் மறு உருவம் என கருதி ஆண்கள், பெண்கள் அனைவரும் சாஸ்டங்கமாக காலில் விழுந்து வணங்கி உள்ளனர்.

மக்களின் நம்பிக்கை இப்படியிருக்க, நீண்ட நேரத்திற்குப் பிறகு அந்த முதியவரே நான் சாய் பாபா அல்ல நானும் உங்களைப்போல் பாபா பக்தர்தான் எனக் கூறி விட்டு சென்றுள்ளார்.

550 கி.மீற்றர் தூரம் நீச்சலிடும் 11 வயது சிறுமி : காரணம் என்ன?

sratta Shukla

கங்கை நதியை சுத்தம் செய்யும் திட்டத்தை பரப்பும் பொருட்டு பிரபல நீச்சல் வீராங்கனை ஷ்ரத்தா ஷுக்லா 550 கி.மீற்றர் தூரத்தை 70 மணி நேரத்தில் கடக்க முடிவு செய்துள்ளார்.

உத்தரபிரதேசத்தின் பிரபல நீச்சல் வீராங்கனை ஷ்ரத்தா ஷுக்லா கங்கை நதி தூய்மை திட்டத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த சாதனை நீச்சல் நிகழ்வினை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இதில் இவர் கான்பூர் முதல் வாரனாசி வரையிலான 550 கிலோ மீற்றர் தூரத்தை 70 மணி நேரத்தில் கடக்க திட்டமிட்டுள்ளார்.

தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டும் ஆகஸ்ட் 29 ஆம் திகதி ஷ்ரத்தா இந்த முயற்சியில் இறங்கவிருக்கிறார்.

தினசரி 7 மணி நேரம் நீச்சலிட்டு மொத்தம் 10 நாட்களில் வாரனாசி வந்தடைய திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முதல் நாளில் சுமார் 100 கி.மீற்றர் தூரம் கடக்க திட்டமிட்டுள்ள அவருக்கு குடும்பத்தினரும் உள்ளூர் நிர்வாகமும் உற்சாமும் ஆதரவும் அளித்து வருகிறது.

இதற்கு முன்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு கான்பூர் முதல் அலகாபாத் வரையிலான 282 கி.மீற்றர் தூரத்தை கடந்தது தான் இவரது சாதனையாக இருந்தது.

தற்போது அந்த சாதனையை முறியடிக்கும் நோக்கில் இந்த தூய்மை கங்கை திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த இலங்கை அகதி பலி!!

Fall down

இந்தியாவின் காலாப்பட்டில் கட்டுமான பணியின் போது மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த இலங்கை அகதி ஒருவர் உயிரிழந்துள்ளாதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புதுவை காலாப்பட்டு அடுத்த கீழ்புத்துப்பட்டில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் 51 வயதான சங்கர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காலாப்பட்டில் கட்டிடம் கட்டும் பணியில் சங்கர் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள மாடிப்படியில் சென்றபோது எதிர்பாராத விதமாக சங்கர் கால் தவறி கீழே விழுந்துள்ளார்.

இதில் படுகாயம் அவர் அலறி துடித்தார். இதனையடுத்து காயமடைந்த சங்கரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சங்கர் பரிதாபமாக உயிரிழந்ததாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அவரது உடலை கண்டு குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் காலாப்பட்டு பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் சேவை இன்று முதல் பத்தரமுல்லையில் ஆரம்பம்!!

sri-lanka-passport

பத்தரமுல்லையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டமையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் சேவை இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

பத்தமுல்லை இசுருபாயவிலுள்ள புதிய கட்டடத்திலிருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளவுள்ளதாக, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லக்ஷான் டி சொய்சா தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கடவுச் சீட்டு பெற்றுக் கொள்ளும் ஒருநாள் சேவை இன்றைய தினம் முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கண்டி மாத்தறை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள பிராந்திய அலுவலகங்களின் சேவைகளும் வழமைபோன்று இடம்பெறவுள்ளன.

க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பம்!!

Hand completing a multiple choice exam.

 

கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விடைத்தாள்களை திருத்தும் பணிகள் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம். என். ஜே. புஸ்பகுமார தெரிவித்தார்.

இந்த காலப்பகுதியில் 6 பாடசாலைகள் முற்றாக மூடப்பட்டிருக்கும் எனவும் மேலும் அவற்றுடன் மேலும் சில பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு றோயல் கல்லூரி, கொழும்பு நாலந்தா கல்லூரி, கண்டி விகாராமாஹா தேவி பாலிகா வித்தியாலயம், கண்டி சுவர்ணமாலி பாலிகா வித்தியாலயம், கண்டி சீதா தேவி பாலிகா வித்தியாலயம் மற்றும் யாழ். இந்துக்கல்லூரி என்பன க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகளுக்காக மூடப்படவுள்ளன.

மேற்கூறப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் 13 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.