காதலியை ஆட்டோவில் அழைத்துச் சென்று இரு நண்பர்களுக்கு பங்கு போட்ட காதலன்!!

Abuse

அநு­ரா­த­புரம் விலச்­சிய பிர­தே­சத்தில் 16 வய­தான காத­லியை முச்­சக்­க­ர­வண்­டியில் அழைத்துச் சென்று, தனது நண்­பர்கள் இரு­வ­ருடன் சேர்ந்து அவரை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்தி அதன் பின் அவரை வீதியில் விட்டு சென்­றமை தொடர்பில் குறித்த சந்­தேக நபர்கள் மூவரும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக விலச்­சிய பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

அநு­ரா­த­புரம் விஹா­ர­பா­லு­கம பிர­தே­சத்தை சேர்ந்த பிர­தான சந்­தேக நப­ரான குறித்த இளைஞன் தனது நண்­பர்கள் இரு­வ­ருடன் முச்­சக்­க­ர­வண்­டி­யொன்றில் கடந்த 9 ஆம் திகதி இரவு 10 மணி­ய­ளவில் தனது காத­லி­யான புரு­த­கஸ்­ஹந்­திய பிர­தே­சத்தை சேர்ந்த 16 வய­தான சிறு­மியை சந்­திக்க சென்­றுள்ளார்.

அதன்­போது, தனது பெற்றோர் நித்­தி­ரையில் இருந்த வேளையில் இச்­சி­றுமி யாருக்கும் தெரி­யாமல் வீட்­டுக்கு முன்­பா­க­வுள்ள வீதிக்கு வந்து தனது காத­லனை சந்­தித்­துள்ளார்.

அங்கு நின்று நாம் பேசிக்­கொண்­டி­ருப்­ப­தனை எவ­ரா­வது அவ­தா­னித்து விடு­வார்கள் என சிறு­மி­யிடம் கூறிய அந்த இளைஞன் அவரை நய­வஞ்­ச­க­மாக முச்­சக்­க­ர­வண்­டியில் ஏற்றிக் கொண்டு விலச்­சிய வாவி பக்­க­மாக சென்­றுள்ளார்.

விலச்­சிய பிர­தே­சத்­தி­லுள்ள பாழ­டைந்த இடத்­துக்கு சிறு­மியை அழைத்துச் சென்ற அவரின் காதலன், அவரை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் பின்னர் முச்­சக்­க­ர­வண்­டியில் அவ­ருடன் வந்த மற்­றைய இரு இளை­ஞர்­களும் சிறு­மியை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளனர் என்று பொலிஸார் மேற்­கொண்­டுள்ள விசா­ர­ணை­களில் தெரியவந்­துள்­ளது.

அதன்­பின்னர் அச்­சி­று­மியை, அதி­காலை வேளையில் ஒயா­ம­டுவ பிர­தே­சத்தில் விட்­டு­விட்டு சந்­தேக நபர்கள் மூவரும் தப்பிச் சென்­றுள்­ளனர்.

அதன்­பின்னர் வீடு திரும்­பிய சிறுமி தனது பெற்­றோ­ரிடம் இது தொடர்பில் தெரி­வித்­த­தனை­ய­டுத்து விலச்­சிய பொலிஸ் நிலை­யத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைய விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் அநுராதபுரம், விஹாரபாலுகம பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் மூவரையும் கைது செய்திருந்தனர்.

ரியோ ஒலிம்பிக் 100 மீற்றர் ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் இருவருக்கு தங்கப்பதக்கம் : அதிசய நிகழ்வு!!

Olympic

தனி நபர் பிரிவில் இருவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்த அரிய போட்டி ஒன்று ரியோ ஒலிம்பிக் விழாவில் இன்று பதிவானது.

மகளிருக்கான 100 மீற்றர் ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் அமெரிக்க மற்றும் கனேடிய வீராங்கனைகள் இந்த சிறப்பு வெற்றியை ஈட்டினர்.

மகளிருக்கான 100 மீற்றர் ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியை அமெரிக்காவின் சிமோன் மனுவேல் மற்றும் கனடாவின் பெனி ஒலிக்சியெக் 52.70 செக்கன்ட்களில் கடந்தனர்.

இது இந்தப் போட்டிப் பிரிவுக்கான ஒலிம்பிக் சாதனை என்பதுடன் இருவருக்குமே தங்கப்பதக்கம் கிடைக்கவும் வழிவகுத்தது.

பெனி ஒலிக்சியெக்கிற்கு 16 வயதாகின்றது என்பதுடன் அவர் ரியோ ஒலிம்பிக் விழாவில் பெற்ற நான்காவது பதக்கமாக இந்த வெற்றி அமைந்துள்ளது.

20 வயதுடைய சிமோன் மனுவேலுக்கு இது முதல் ஒலிம்பிக் பதக்கமாகும்.

அத்துடன், நீச்சல் போட்டிகளில தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் கறுப்பின அமெரிக்க பெண் என்ற சிறப்பையும் சிமோன் மனுவேல் பெற்றார்.

இதற்கு முன்னர் 1984 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் விழாவில் மகளிருக்கான 100 மீற்றர் ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியை அமெரிக்க வீராங்கனைகள் இருவர் ஒரே நேரப்பெறுதியில் கடந்து தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர்.

இனிமேல் நயன்தாராவுக்கு அனுமதி இல்லை!!

Nayanthara

நயன்தாராவை சுற்றி எப்போதும் ஒரு விதமான சர்ச்சைகள் இருந்துக்கொண்டே தான் இருக்கும். சமீபத்தில் கூட இவரை ஐதராபாத்தில் உள்ள எந்த ஸ்டார் ஹோட்டலிலும் அனுமதிக்க கூடாது என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், இவர் தமிழ் படங்களின் ப்ரோமோஷன் வேலைகளை எப்போதும் தவிர்த்துவிடுவார், ஆனால், அதே மாதிரி தெலுங்கு சினிமாவில் இருக்க முடியுமா, தற்போது இவருக்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

தெலுங்கு படத்தில் நடித்தால் கண்டிப்பாக ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என கூறியுள்ளனர், இதனால், இனி தெலுங்கு படமே நடிக்க கூடாது என நயன்தாரா ஒரு முடிவுக்கு வந்துவிட்டாராம்.

காதலியை மகிழ்ச்சிப்படுத்த திருடிய காதலன் சிறையில்!!

jail

தமது காதலியை மகிழ்ச்சிப் படுத்துவதற்காக திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இரண்டு இளைஞர்கள் காலியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காலி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வீடுகள் மற்றும் கடைகளில் உள்நுழைந்து 18 இலட்சத்திற்கும் அதிகமான நகைகள் பணம் மற்றும் மின் உபரணங்களை குறித்த இளைஞர்கள் திருடியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 18 மற்றும் 21 வயதானவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்றைய தினம் பத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் இவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை 21 வயதான பிரதான சந்தேகநபரின் காதலியை மகிழ்ச்சிப் படுத்துவதற்காகவே இவ்வாறு திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வினோத முறையில் திருட முயன்ற இலங்கைப் பிரஜை இந்தியாவில் கைது!!

Gold

இலங்கை பிரஜை ஒருவர் தங்கம் மற்றும் தங்க பிஸ்கட்டுக்களை கடத்த முயற்சித்த குற்றத்திற்காக பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 100 கிராம் எடையுள்ள தங்க கட்டிகளை தன் வாயில் வைத்து மறைத்திருந்தார் எனவும் தங்க பிஸ்கட்டுக்களை அவரது பாதனியில் வைத்து கடத்த முயற்சித்தார் என சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து பெங்களூரிற்கு பயணித்த 38 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபரை சோதனையிடுவதற்காக அதிகாரிகள் அவரிடம் உரையாடியுள்ளனர். ஆனால் அவர் தன் வாயை திறக்கவே இல்லை.

எனவே சந்தேகத்தின் பேரில் குறித்த நபரை சோதனையிட்ட போது இவ்வாறு தங்க கட்டிகள் மற்றும் தங்க பிஸ்கட்டுக்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் பாதணியில் இருந்து மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுக்கள் 3 இலட்சத்து 17 ஆயிரம் பெறுமதி வாய்ந்தது என சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை ஆகஸ்ட் 8ம் திகதி தங்கம் கடத்துவதில் ஈடுப்பட்ட 7 இலங்கை பிரஜைகள் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பெற்றோருக்கு கடிதம் எழுதிய மாணவி வீட்டிலிருந்து ஓட்டம்!!

Girl

பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காத மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்கொட்டுவ பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 16 வயது மாணவியே கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டைவிட்டுச் சென்றுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் பிற்பகல் 11.30 அளவில் குறித்த மாணவி வீட்டை விட்டுச் சென்றுள்ளதாகவும், அவரால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் மீட்டுள்ளதாக மாணவியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை குறித்த மாணவி கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்கொட்டுவ பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்னர்.

பிணை கிடைத்தது : மகிழ்ச்சியில் ஆடி கார் ஐஸ்வர்யா!!

Odi car Iswarya

சென்னையில் மது போதையில் காரை ஓட்டி தொழிலாளர் இறந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆடி கார் ஐஸ்வர்யாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

கடந்த மாதம் தனது நண்பர்களுடன் இரவு திரைப்படம் பார்த்து விட்டு, தனது ஆடி காரில் நண்பரை அழைப்பதற்காக மாமல்லபுரம் அருகே சென்றபோது, சாலையை கடக்க முயன்ற தொழிலாளி மீது கார் ஓட்டிவந்த ஐஸ்வர்யா மோதினார்.

இதில் அந்த தொழிலாளி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணை முடிந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பிணை வழங்கக் கோரி ஐஸ்வர்யா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள் பிணை வழங்க மறுத்துவிட்டனர். தற்போது மீண்டும் பிணை வழங்ககோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, விசாரணையின் போது ஐஸ்வர்யா தரப்பு வழக்கறிஞர் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறைவாக தான் மது அருந்தியுள்ளார். விபத்து நடந்தும் அம்புலன்ஸ்சிற்கு போன் செய்துள்ளார் என வாதத்தை முன் வைத்தார்.

இதை கேட்ட நீதிபதி சொக்கலிங்கம் ஐஸ்வர்யாவுக்கு பிணை வழங்க உத்திரவிட்டார். மேலும் 2 வாரங்கள் கிண்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் முன்னிலையில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தம்பியின் மனைவி மீது கொண்ட ஆசையினை அடைய 60 அடி கோபுரத்தில் ஏறி மிரட்டிய நபர்!!

Love Affairs

காரைக்குடியில் தன் ஒருதலை காதலை சேர்த்து வைக்ககோரி கையடக்கத் தொலைபேசி கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தமையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் இரு மகன்களின் ஒருவரான ஜெயச்சந்திரன் மும்தாஜ் என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால், ஜெயச்சந்திரனின் குடிப்பழக்கத்தால் மும்தாஜ் அவரைப் பிரிந்து சென்று விட்டதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையே ஜெயச்சந்திரனின் அண்ணன் முருகனுக்கு தம்பியின் மனைவி மும்தாஜ் மீது ஒருதலைக் காதல் ஏற்பட்டது. எனவே, தம்பி மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி, 60 அடி உயர கோபுரத்தில் முருகன் ஏறி தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டியுள்ளார்.

உடனடியாக முருகனின் குடும்பத்தார் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க,சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

கீழேயிறங்க சம்மதித்த முருகன், செங்கல்கற்களை தலையில் அடித்துக் கொண்டு புலம்பியுள்ளார். தரையை நெருங்கும் சமயத்தில் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்த முருகனுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக முருகனை பொலிஸார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். கையடக்கத்தொலைபேசி கோபுரத்தில் ஏறிய முருகன் மது போதையில் இருந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்தில் தொடர் குண்டுவெடிப்பு : நால்வர் பலி, பலர் படுகாயம்!!

1

தாய்லாந்தின் தெற்கு பகுதியில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் நால்வர் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹுவா ஹின் என்ற விடுதி 24 மணி நேரத்திற்குள் இராண்டாவது முறையாக மீண்டும் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது. சுற்றுலாப் பயணிகள் அதிகமாக செல்லும் புக்கட் தீவிலும், சூரத் தானி மற்றும் ட்ராங் போன்ற நகரங்களிலும் குறித்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த தொடர் தாக்குதல்களில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தாய்லாந்து இராணுவ ஆட்சியின் தலைவரான பிரயூத் சன்-ஒ-சா , இது நாட்டில் கலவரம் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி என தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2 3 4 6 7

புதிய புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்!!

Aiswarya

பொலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், 1994ல் உலக அழகி பட்டம் வென்றதோடு, சினிமாவிலும் ஜெயித்ததால் இந்தியா மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் பிரபலமானார். அதனால் பல நிறுவனங்கள் அவரை தங்கள் விளம்பரங்களில் நடிக்கவைக்க வரிசைகட்டி நின்றார்கள்.

1999 முதல் இவர் Longines என்ற கடிகார நிறுவனத்தின் விளம்பர தூதுவராக இருந்து வருகிறார் ஐஸ்வர்யா. தற்போது மலேசியாவில் ஒரு கடிகாரக் கடையில் வைக்கப்பட்டிருந்த ஒரு விளம்பர போஸ்ட்டரை பார்த்துவிட்டு அதிகாரிகள் அது மிகவும் கவர்ச்சியாக உள்ளது என கூறி உடனே நீக்க சொல்லியுள்ளனர்.

மேலும் அதற்காக ஒரு பெரிய தொகையை அபராதமாகவும் விதித்துள்ளனர்.

மோடி உருவப்படத்துடன் ஆடை அணிந்த நடிகையால் சர்ச்சை!!

Modi

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். இவர் பல படங்களில் ஒரு பாடலுக்கு அரைகுறை ஆடையில் கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார். தமிழில் முத்திரை, கம்பீரம் படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் திடீரென்று அரசியலில் குதித்தார். ராஷ்டிரிய ஆம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி வடமேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டார்.

இதில் அவருக்கு தோல்வி ஏற்பட்டது. டெபாசிட்டையும் இழந்தார். இந்த நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்துடன் கவர்ச்சி உடை அணிந்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்தில் அங்குள்ள இந்தியர்கள் சுதந்திர தின விழாவை கொண்டாடினார்கள். இந்த விழாவில் பங்கேற்க ராக்கி சாவந்தை அழைத்து இருந்தனர். அவரும் கவர்ச்சி உடை அணிந்து விழாவுக்கு வந்து இருந்தார்.

அந்த ஆடையில் நரேந்திர மோடியின் உருவப்படங்கள் இருந்தன. முன்புறம் பின்புறம் என்று ஆடை முழுவதும் மோடி படங்களாக காணப்பட்டன. இதை பார்த்ததும் கூட்டத்தினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

அத்துடன் மோடி ஆடையை உடுத்திக்கொண்டு இருக்கும் தனது படத்தை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டு இருக்கிறார். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ராக்கி சாவந்த் செயலை பலர் கண்டித்து உள்ளனர். பிரதமரை அவமதித்த அவர் மீது வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளனர்.

மோடி உருவப்படத்துடன் ஆடை அணிந்தது ஏன் என்பது குறித்து ராக்கி சாவந்த் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது..

“பிரதமர் நரேந்திர மோடியை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் அவரது உருவப்படத்துடன் ஆடை அணிந்து ஒபாமா நகரில் நடந்த இந்திய சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டேன். மோடியை இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள்.

அவரும் இந்தியர்கள் மீது அக்கறை கொண்டு இருக்கிறார். எனவே மோடி உருவப்படத்துடன் நான் ஆடை அணிந்து சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டது தவறு அல்ல”. இவ்வாறு ராக்கி சாவந்த் கூறினார்.

13 சீனப் பெண்களை நாட்டிலிருந்து வௌியேறுமாறு உத்தரவு!!

Chinese

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்து தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் 13 சீன பெண்களை நாட்டிலிருந்து வெளியேறுமாறு கொழும்பு மேலதிக நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

சுற்றுலா பொலிஸாரினால் குறுத்த பெண்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். குறித்த சீன பிரஜைகள் சுற்றுலா வீசா மூலம் வருகை தந்து, மொழிபெயர்ப்பு தொழிலில் ஈடுபட்டிருந்ததாகவும் அது சட்டவிரோதமானது என்றும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, அவர்கள் நாட்டில் இருந்து வௌியேற தயாராக இருப்பதாக இதன்போது நீதிமன்றில் தெரிவித்தார்.

அவர்கள் நாடு திரும்புவதற்கான பயணச் சீட்டுக்கள் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.

விடயங்களை ஆராய்ந்த நீதவான், அவர்களை நாட்டை விட்டு வௌியேறுமாறும், அதனை உறுதிப்படுத்தும் தகவல்களை எதிர்வரும் 16ம் திகதி நீதிமன்றில் சமர்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

திருச்சி அருகே கோர விபத்து : 8 பேர் பலி : வீதியில் சிதறிக் கிடக்கும் சடலங்கள்!!(அதிர்ச்சிப் படங்கள்)

1

திருச்சி- மணப்பாறை அருகே உள்ள கைகாட்டி எனும் இடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகலில் நடந்த வீதி விபத்தில் 8 பேர் பலியாகினர். அதில் பலர் படுகாயமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் திருமலைகேணி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களது நண்பா்கள், உறவினர்கள் என 25 பேர் வேனில் திருச்சி மாவட்டம் மணப்பாறை கோவில்பட்டி அருகேயுள்ள உப்பிலியம்மன் கோயிலுக்கு கிடாவெட்டு திருவிழாவிற்கு வேனில் வந்துக்கொண்டிருந்தனர்.

இவர்கள் இன்று நண்பகலில் வளநாடு கைக்காட்டி அருகே வந்துக் கொண்டிருந்தபோது, மதுரையிலிருந்து சென்னை நோக்கி சென்றுக்கொண்டிருந்த ஆம்னி பேருந்து அவர்களது வேனின் பின்புறம் வேகமாக மோதியதில், அந்த வேன் நிலைகுலைந்து 3 முறை தலைகுப்புற சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். அவர்களில் சிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 3 பேர் பலியாகினர்.
எஞ்சியவர்கள் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

மேலும், இச்சம்பவத்தில், காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

2 3 4

உலகிலேயே முதல் முறையாக பீட்சா வழங்கும் ஏ.டி.எம்!!

Pizza-Hut-ATM--10765
அமெரிக்க சேவியர் பல்கலைகழகம் உலகிலேயே முதல் முறையாக 3 நிமிடத்தில் பீட்சா வழங்கும் ஏ.டி.எம் யை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏ.டி.எம் என்பது இதுவரை பணம் எடுப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அமெரிக்க சேவியர் பல்கலைகழகம் பீட்சா விற்பனைக்காக ஏ.டி.எம் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும், இந்த இயந்திரத்தில் தொடு திரையினால் ஆன திரையில் நமக்கு தேவையான பீட்சாவினை தெரிவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவு செய்யப்படும் பீட்சா Owen க்குள் சென்று 3 நிமிடத்தில் ரெடியாகி துண்டு துண்டாக நறுக்கப்பட்ட நிலையில் நமது கையில் வந்து சேர்ந்து விடும்.

24 மணி நேரமும் இயங்கும் இந்த பீட்சா ஏ.டி,எம் இயந்திரம் நாளை முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. இந்த பீட்சவின் விலை 10 அமெரிக்க டொலர்கள் மட்டுமே.டெபிட், கிரெடிட் மற்றும் ஸ்டூடண்ட் கார்டுகளைப் பயன்படுத்தி இந்த பீட்சாவை வாங்கமுடியும்.

எனக்கு கல்யாணம், கார்த்தியிடம் திகதி கூட கூறிவிட்டேன் – பொண்ணு யாரு விஷால்!!

1 (7)விஷால், வரலட்சுமி இருவரும் காதலிக்கிறார்கள் என்று செய்திகள் மட்டும் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் இதுகுறித்து விஷால், வரலட்சுமி இதுவரை பேசியதே இல்லை.இந்நிலையில் ஒரு பேட்டியில் விஷால், வரலட்சுமி என்னுடைய பள்ளித்தோழி.

எங்கள் திருமணம் நடிகர் சங்க கட்டடத்தில் தான் நடக்கும். கார்த்தியிடம் டேட்டுக்கு இப்போதே சொல்லி விட்டேன் என்று விஷால் கூறியிருப்பதாக ஒரு முன்னணி தளத்தில் கூறியுள்ளனர்.

சிம்பு படத்துக்கு தடை கோரும் அவரின் தந்தை டி. ராஜேந்தர்

silambarasan-t-rajendar-759சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படம் வரும் செப்டம்பர் 9ம் தேதி வெளியாக இருப்பதாக கௌதம் மேனன் கூறியிருந்தார்.ஆனால் இப்படத்தை வெளியிட தடை கோரி வழக்கு தொடரப் போகிறாராம் இயக்குனர் டி. ராஜேந்தர்.

சிம்பு ஒத்துழைக்கவில்லை என்று கூறிவந்த நிலையில், தற்போது சிம்புவின் வேலைகள் அனைத்தும் முடிந்து படமும் ரிலீசுக்கு தயாராகிவிட்டது.சிம்புவுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் முழுவதையும் கொடுத்தால் தான் படத்தை ரிலீஸ் செய்ய விடுவேன் என்கிறாராம் டி.ஆர்.