பிரபல இயக்குனரும் நடிகருமான வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார்!!

Vitnam Veedu Suntharam

நடிகரும் இயக்குனருமான வியட்நாம் வீடு சுந்தரம் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. நாடக நடிகரும், கதை எழுத்தாளருமான சுந்தரம், கடந்த 1970ம் ஆண்டு வியட்நாம் வீடு என்ற படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். இதன்மூலமாக, வியட்நாம் வீடு சுந்தரம் என அழைக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து சிவாஜி கணேசன் நடிப்பில் பெரும் வெற்றிபெற்ற கெளரவம் என்ற படத்தை இயக்கினார். எம்.ஜி.ஆர், சிவாஜி, மற்றும் முத்துராமன், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வியட்நாம் வீடு சுந்தரம், இன்று காலை சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு திரைப்பட கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூர உற்சவம்!(படங்கள்)

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன்ஆலயத்தில் நேற்று(05.08.2016) ஆடிபூர நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.

மேற்படி உற்சவத்தில் காலை முதல் அபிசேகங்கள் இடம்பெற்று  அம்பாளுக்கு ருது சாந்தி வைபவமும் இடம்பெற்று இறுதியில்  அம்பாள் வீதியுலா  வந்த நிகழ்வும் இடம்பெற்றது.

மேற்படி உற்சவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

13872927_562015993996704_8280481170969908917_n 13887064_562015333996770_1718554105322078650_n 13892323_562015727330064_5295575378166872320_n 13903367_562016517329985_2632268539991543429_n 13906790_562015677330069_6553255023706682691_n 13920654_562016343996669_6094646633093317729_n 13924859_562015873996716_1699724290043602045_n 13924882_562015783996725_5652595832143698947_n 13934653_562016153996688_7895712791565238143_n 13935156_562015833996720_6077606715566445972_n

வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆடிப்பூர உற்சவம்!(படங்கள்)

வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயத்தில் நேற்று(05.08.2016) ஆடிபூர நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.

மேற்படி உற்சவத்தில் காலை முதல் அபிசேகங்கள் இடம்பெற்று  அம்பாளுக்கு ருது சாந்தி வைபவமும் இடம்பெற்று இறுதியில்  அம்பாள் வீதியுலா  வந்த நிகழ்வும் இடம்பெற்றது.

மேற்படி உற்சவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

12472516_1738132893108212_3013760328326481214_n 12472516_1738132933108208_7999416961763680752_n 13882223_1738132829774885_7553975715232429171_n 13882544_1738132966441538_7622593791261330012_n 13912677_1738132839774884_8165130021053275370_n 13924971_1738133089774859_2676482623160590021_n 13925084_1738133159774852_3702918052512397260_n 13925396_1738133176441517_1101933384556843883_n

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய ஆடிபூர உற்சவம்!(படங்கள்)

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூசணிஅம்பாள் ஆலயத்தில் நேற்று(05.08.2016) ஆடிபூர நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.

மேற்படி உற்சவத்தில் காலை முதல் அபிசேகங்கள் இடம்பெற்று  அம்பாளுக்கு ருது சாந்தி வைபவமும் இடம்பெற்று இறுதியில்  அம்பாள் வீதியுலா  வந்த நிகழ்வும் இடம்பெற்றது.

மேற்படி உற்சவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

13876487_636099566544961_4060097213027994137_n 13887062_635511959937055_4266603017931141019_n 13900155_636099489878302_7687620200897587035_n 13903431_636098296545088_6040058856507475767_n 13912382_636098173211767_2156951816166629751_n (1) 13912382_636098173211767_2156951816166629751_n 13912849_635511986603719_3031629774900882178_n 13925346_636098379878413_7481311554714725113_n 13932722_636098233211761_5455717966247233542_n 13934936_636099516544966_3577871518340916608_n 13938484_636099639878287_7900907311395609748_n

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய ஆடிப்பூர உற்சவம்!!(படங்கள்)

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் நேற்று(05.08.2016) ஆடிபூர நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.

மேற்படி உற்சவத்தில் காலை முதல் அபிசேகங்கள் இடம்பெற்று  அம்பாளுக்கு ருது சாந்தி வைபவமும் இடம்பெற்று இறுதியில்  அம்பாள் வீதியுலா  வந்த நிகழ்வும் இடம்பெற்றது.

மேற்படி உற்சவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

13726648_1040891972612846_35647115796397581_n 13876222_1040891795946197_8341843263519295976_n 13876393_1040892362612807_3484348568111192060_n 13876427_1040892139279496_1603995822385286929_n 13876692_1040891952612848_8902608920603928567_n 13886373_1040892082612835_5294025819078015188_n 13886462_1040892005946176_8631558797557461693_n 13887016_1040891645946212_8213608429248946217_n 13892165_1040892109279499_6865344237758224819_n 13895199_1040892195946157_8742534472713786780_n 13900221_1040891745946202_4849593240522909172_n 13900228_1040891775946199_2097480751589227607_n 13903428_1040892039279506_2181181579402404700_n 13906621_1040892229279487_8002859270999089555_n 13912794_1040891879279522_9039989291010290334_n 13925296_1040891822612861_689025122033877082_n 13939535_1040892292612814_5438786602081214975_n 13962693_1040891612612882_4982867392091695023_n

அவுஸ்திரேலிய அணியை கதிகலங்கவைத்து தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணி!!

Australia's Steve O' Keefe, right, leaves the field as Sri Lankan team members celebrate their teams' victory by 106 runs in their first test cricket match in Pallekele, Sri Lanka, Saturday, July 30, 2016. (AP Photo/Eranga Jayawardena)

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 229 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுகின்றது.

இதன்படி இரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, காலி மைதானத்தில் இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வென்று முதல் இன்னிங்சில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 281 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

அதன்படி முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 106 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

பின்னர் இரண்டாம் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 237 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. அதன்படி அவுஸ்திரேலியாவிற்கு 413 வெற்றி இலக்கு வழங்கப்பட்டது.

எனினும் ஆரம்பம் முதலே தடுமாறிய அவுஸ்திரேலிய அணியால் அனைத்து விக்கட்டுக்களையும் பறிகொடுத்து 183 ஓட்டங்களே பெற முடிந்தது.

அதன்படி 229 ஓட்டங்களால் போட்டியை வெற்றிகொண்ட இலங்கை 2-0 என தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான நேற்று ரங்கன ஹேரத் தொடர்ச்சியாக மூன்று விக்கட்டுக்களை கைப்பற்றி ஹெட்ரிக் சாதனை புரிந்தமை கூறத்தக்கது.

இன்றய போட்டியில் டில்ருவான் பெரேரா 6 விக்கட்டுக்களைக் கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

ஒவ்வொரு ராசிக்காரரும் தங்கள் உறவில் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா?

Rasi

இன்றைய காலத்தில் ஓர் உறவைத் தக்க வைத்துக் கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. இதற்கு துணையின் எதிர்பார்ப்புக்களை தெரிந்து கொள்ளாமல் இருப்பதோடு, பூர்த்தி செய்யாமல் இருப்பது முக்கிய காரணமாக உள்ளது.

இதனால் உறவுகளுக்குள் நிறைய பிரச்சனைகள் எழுந்து, அதனால் அந்த உறவே முறிந்துவிடும் நிலையில் செல்கிறது. நம் மக்களிடையே ஜாதகத்தின் மேல் அலாதியான நம்பிக்கை உள்ளது.

மேலும் ஒருவரின் ஜாதகம் மற்றும் ராசியைக் கொண்டு, அவரது குணங்கள், எதிர்காலம், வரப்போகும் துணை போன்ற பல விஷயங்கள் கணிக்கப்படுகிறது.

அதேப்போல் ஒருவரின் ராசியைக் கொண்டு, அவர் தங்களது உறவில் என்ன எதிர்பார்க்கிறார் என்பதையும் அறிய முடியுமாம். இங்கு ஒவ்வொரு ராசிக்காரரும் தங்கள் உறவில் எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் ஒருவருடனான உறவில் எப்போதும் விளையாடமாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களுக்கு வரும் துணை நேர்மையாகவும், பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொள்ளும் படி இருக்க வேண்டுமென விரும்புவார்கள். மேஷ ராசிக்காரர்கள் பொறுமையற்றவர்கள் மற்றும் முன்கோபம் கொண்டவர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் பிடிவாத குணமுள்ளவர்கள் மற்றும் மிகவும் சென்சிடிவ்வானவர்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் துணை சாந்தகுணமுள்ளவர்களாகவும், உணர்வுகளை மதிக்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டுமென விரும்புவார்கள். இவர்களுக்கு கோபம் வந்தால், அது நீண்ட நேரம் நிலைத்திருந்தாலும், இறுதியில் மன்னித்துவிடுவார்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்தையும் மிகவும் ஆற்றலுடனும், துணிச்சலுடனும், மிகுந்த உற்சாகத்துடனும் மேற்கொள்வார்கள். அதேப் போல் தங்களுக்கு துணையும் இருக்க வேண்டுமென நினைப்பார்கள். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் தங்கள் துணையுடன் நீண்ட நேரத்தை செலவழிக்க விரும்புவார்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் மிகவும் விசுவாசமானவர்கள். எனவே தனக்கு வரும் துணையும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர்கள். தனக்கு வரும் துணையும் அதே தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டுமென விரும்புவார்கள். இந்த ராசிக்காரர்கள் தன் துணை எப்போதும் தன்னுடன் இருக்க விரும்புவார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்க்ள தங்களுக்கு வரும் துணையும் கருணையுள்ளம் கொண்டவர்களாக இருக்க விரும்புவார்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் அமைதியான ராஜதந்திரிகளாக கருதப்படுகின்றனர். இவர்கள் எப்போதும் அமைதியையும், ஒற்றுமையையும் விரும்புவதால், அது அவர்களை சிறந்தவர்களாக காட்டும். இதனால் இவர்கள் தனக்கு வரும் துணையும் சண்டைப் போடாமல், அமைதியானவராக இருக்க விரும்புவார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தனக்கு வரும் துணையின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பார்கள். எனவே விருச்சிக ராசிக்காரர்களிடம் எப்போதும் நேர்மையாக இருங்கள் மற்றும் அவர்களை ஏமாற்ற நினைக்காதீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். ஆனால் அதே சமயம் ஒருவரை நேசித்தால், உண்மையாக இருப்பார்கள். எனவே இவர்களது அன்பைப் பெற நினைத்தால், நல்ல விசுவாசமான ஓர் நண்பராக இருங்கள். இதனால் அவர்கள் எளிதில் மடக்கிவிடலாம்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் பொறுப்புள்ளவர்கள் மற்றும் கடின உழைப்பாளிகள். இந்த ராசிக்காரர்கள் தனக்கு வரும் துணையும் தன்னைப் போலவே பொறுப்புள்ளவர்களாக இருக்க விரும்புவர். இதற்கு இப்படிப்பட்டவர்கள் உறவில் மட்டுமின்றி எதிவும் மிகவும் கவனமாக இருப்பார்கள் என்ற எண்ணம் அவர்களிடம் உள்ளது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் துணிவானவர்கள், அதே சமயம் கலகத்தனம் புரிபவர்கள். இந்த ராசிக்காரர்கள் தாங்கள் நினைப்பது அனைத்துமே சரியானது என்ற எண்ணம் கொண்டிருப்பார்கள். மேலும் இவர்கள் தங்களுக்கு வரும் துணையும், தங்களது கருத்தை ஒப்புக் கொள்ள வேண்டும். என்று விரும்புவார்கள். அது அனைத்து விஷயங்களிலும் இல்லாவிட்டாலும், சில விஷயங்களிலாவது ஒப்புக் கொள்ள வேண்டும் என விரும்புவார்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் மிகவும் சென்சிடிவ்வானர்கள். இவர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க விரும்புவார்கள். இந்த ராசிக்காரர்கள் அன்புடனும், அக்கறையுடனும், சௌகரியத்தை உணரும்படியான துணை வேண்டுமென விரும்புவார்கள். மேலும் இவர்கள் தனக்கு வரும் துணையிடமிருந்து இனிமையாக பேச்சுக்களை கேட்டாலே போதுமென நினைப்பார்கள்.

IMO பாவிப்பவரா நீங்கள் : அப்படியாயின் இது உங்களுக்கான எச்சரிக்கைப் பதிவு!!

IMO-Messenger

இன்றைய அதிநவீன வாழ்க்கையில் இணையத்தின் பயன்பாடு மிகவும் அத்தியாவசிமான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இன்று கட்டிப்போடும் ஒன்றாக சமூக வலைத்தளங்கள் மாறியுள்ளன.

இன்றைய மனிதனின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகவும் இது மாற்றம் பெற்றுள்ளது. போட்டித்தன்மை வாய்ந்த உலகில் மென்பொருளின் (Apps) வருகை அதிதீவிரம் பெற்றுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மிகவும் பிரபல்யம் அடைந்திருந்த ஸ்கைப் (Skype) தொழில்நுட்பத்திற்கு போட்டியான இன்று பல மென்பொருள் சந்தையில் விடப்பட்டுள்ளன.

அவற்றில் தற்போது பலரின் கவனத்தை ஈர்ந்துள்ள முக்கிய மென்பொருளாக IMO மாற்றம் பெற்றுள்ளது. முகப்புத்தகம் (Face Book), ஸ்கைப் (Skype), டுவிட்டர் (Twitter), வாட்ஸ்அப் (Whatsapp), வைபர், (Viber) போன்று IMO மென்பொருளும் மிகவும் வேகமாகவும், பிரபலமாகவும் வளர்ச்சியடைந்து வருகின்றது.

அத்துடன் IMO மென்பொருள் தற்போது இரண்டு வகையில் அறிமுகம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. IMO Beta (New version) 10 மில்லியன் பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளது. IMO (Old version) 100 மில்லியன் பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளது. இவ்வாறு இரண்டு வகையான IMO மென்பொருள்கள் உள்ளன.

IMO பயன்படுத்துவதன் நன்மைகள்

ஆரம்ப காலங்களில் ஸ்கைப் (Skype) மென்பொருளை பயன்படுத்தியவர்களுக்கு IMO பயன்படுத்துவது இலகுவாக உள்ளது. அத்துடன் இணையதளங்களை பயன்படுத்தும் போது செலவிடப்படும் டேட்டா (Data) குறைவாகவே காணப்படும் அதாவது ஸ்கைப்பிற்கு செலவிடப்படும் டேட்டாவை விடவும் IMOவுக்கு குறைந்த அளவிலான டேட்டாவே செலவாகிறது. நாம் பயன்படுத்தும் ஸ்மாட்போன்களின் தரைவிறக்கம் செய்து போது சிறியளவிலான கொள்ளளவையே IMO மென்பொருள் எடுத்துக் கொள்கிறது.

அத்துடன் கையடக்க தொலைப்பேசியில் உரையாற்றும் போது வெளியாகும் தெளிவான ஒலியினை வட்ஸ்அப் (Whats app) மற்றும் வைபர், (Viber) போன்ற வலைத்தளங்களில் பெற்றுகொள்ள முடியாது. எனினும் வட்ஸ்அப் (Whats app), வைபர், (Viber) வலைத்தளங்களில் உரையாடும் போது தாமதமாகவே ஒளிகளை பெற்றுகொள்ள முடிகின்றது.

ஆனால் அவ்விரண்டையும் விடவும் தெளிவான ஒலியினை பெற்றுகொள்ள IMO உதவுகின்றது. அத்துடன் தெளிவான காணொளி அழைப்புகளை (Video call) மேற்கொள்வதற்கு IMO உதவுகின்றது. குறைந்த செலவில் தெளிவாக காணொளி அழைப்புகளை பெற்றுகொள்வதற்கு IMO என்பது மிகவும் சிறந்த ஒரு தொடர்பாடல் மென்பொருளாகும்.

குறைந்த ஒளியில் துல்லியமான காணொளியை மற்றவருக்கும் வழங்கும் வகையில் இதன் கமரா கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒன்லைனில் அரட்டை அடிப்பவர்களுக்கு (Online chatting) நேரத்தை மகிழ்ச்சியாக போக்குவதற்கு வித்தியாசமான, ஏனைய தொடர்பாடல் வலைத்தளங்களை விடவும் அழகான ஸ்டிகர்ஸ்கள் (Stickers) வழங்கப்பட்டுள்ளன. கண்களை கவரும் நிறங்களில் ஸ்டிகர்களிலே உரையாடல்களை மேற்கொள்ளும் அளவிற்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

IMO பயன்படுத்துவதன் போது அதிகளவு நன்மைகள் இருந்தாலும், அதற்கு இணையாக பல தீமைகளும் உள்ளமை மறுக்க முடியாத ஒன்றாகும்.

IMO வின் தீமைகள்

எவ்வளவு தான் நன்மையான ஒரு பக்கத்தை ஒரு சமூக வலைத்தளம் கொண்டிருந்தாலும் அது பல தீமையான விடயங்களை கொண்டிருக்கும் என்பது மறுக்க முடியாத ஒரு உண்மையாகும்.

பொதுவாக தேவையற்ற ஒருவரின் தொலைபேசி இலக்கத்தை எமது ஸ்மாட்போனில் பதிவு செய்து வைத்திருந்தால், நாம் IMO மென்பொருளை தரவிறக்கம் செய்து செயற்படுத்தும் வேளையில், நாம் IMO பயன்படுத்துகின்றோம் என்பதை மற்றவர்களுக்கு தன்னிச்சையாக காட்டிக் கொடுக்கும். இதன் மூலம் தேவையற்றவர்கள் எம்மை தொடர்பு கொள்ள நாமே வாய்பை ஏற்படுத்திக் கொடுக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.

IMOவில் காணொளி பயன்பாடு மிகவும் இலகுபடுத்தப்பட்டுள்ளமையால், சாதாரண தொடுகையின் மூலம் மற்றவருக்கு காணொளி அழைப்பு செல்லும் அவல நிலை ஏற்படலாம்.

இது பெண்களுக்கு பெரும் ஆபத்தான ஒன்றாகும். ஒரு ஆணோ பெண்ணோ தனக்கு நம்பிக்கையானவருக்கு ஒரு அந்தரங்கமான காணொளியை பகிரும் போது, அது தவறுதலாக அனைத்து நண்பர்களுக்கும் செல்லும் ஆபத்தான நிலையும் காணப்படுகிறது.

IMOவை முதன்முறையாக பயன்படுத்துவோர் இது தொடர்பில் அவதானமாக செயற்படுவது நல்லது. இன்றைய காலகட்டத்தில் காதல் எனும் பெயரில் லீலைகள் புரியும் இருபாலாருக்கும் IMO வரபிரசாதமாக அமைந்தாலும், அதுவே அவர்களின் வாழ்வின் முடிவுக்கான ஆரம்ப புள்ளியாகவும் அமைந்து விடுகிறது.

IMO Beta பதிப்பினை பயன்படுத்துவோர் பகிரப்படும் காணொளிகள், புகைப்படங்களை தரவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய வசதிகள் காணப்படுகின்றன. அவ்வாறு பதிவு செய்யப்படும் அந்தரங்கமான பல விடயங்கள் மெமரிக் காட் மூலம் இன்னொருவரை சென்றடையக் கூடிய ஆபத்தும் காணப்படுகிறது.

முகவரியற்றவர்களை முகப்புத்தகம் ஊடாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் பல இளைஞர்கள், யுவதிகள் IMO எனும் மென்பொருள் ஊடாக அந்தரங்களை பகிர்ந்து அவமானங்களை சுமந்து, தற்கொலை எனும் முடிவை எடுக்கும் படுபயங்கரமான நிலையும் இதன் ஊடாக ஏற்படுகிறது.

பொதுவாக நாம் IMO மற்றும் Whats app மென்பொருள்களில் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் நேரடியாக நாம் அனுப்பு நபரின் தொலைப்பேசிக்கு அல்லது கணனிக்கு செல்வதில்லை. அவை அனைத்து சேவையகத்திற்கு (Server) சென்றதன் பின்னரே தொலைப்பேசி அல்லது கணனிக்கு செல்கின்றது. இன்று வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் காதலர் அல்லது வெளிநாட்டில் தொழில் செய்யும் தங்கள் கணவருக்கு பெண்கள் தங்களின் நிர்வாணப்படங்களை பகிர்கின்றார்கள். இது நேரடியாக அந்த நபருக்கு செல்லாதமையின் விளைவாக பல தற்கொலைகள் இடம்பெற ஆரம்பித்துள்ளது.

அத்துடன் இன்று IMOவில் ஒரு புதிய விடயம் ஒன்று உள்ளன. ஒரு நபருடைய கணக்கினை திறந்து பார்க்கும் போது கீழே ஒரு காணொளி குறியீடு காணப்படுகின்றது. அந்த காணொளியில் நமது விரல் தவறுதலாக பட்டாலும் குறுகிய காணொளி ஒன்று மற்றவருக்கு சென்றுவிடுகின்றது. அதனை அழிக்க முடியாது என்பது முக்கிய விடயமாகும்.

அத்துடன் நாம் ஒரு நபருடன் உரையாடல் மேற்கொண்டால் அதனையும் ஒரே நேரத்தில் அழித்து விட முடியாது. அதேபோல் நமது IMO கணக்கினை நாம் அழித்து விட்டாலும் நாம் அனுப்பிய தரவுகள் எதுவும் கணக்கில் இருந்து அழியாது.

நாம் மீண்டு ஒரு கணக்கினை புதிதாக அதே இலக்கத்தில் திறந்தால் பழைய பதிவுகள் எதுவும் அழியாமல் அவ்வாறே இருக்கும். கணக்கினை அதாவது Uninstall செய்தாலும் அந்த கணக்கு அழியாது என்பது இன்று பலருக்கு தெரியாது.

பழைய பதிவுகளை எவ்வாறு அழிப்பது?

IMO settings என்றதை அழுத்தினால் அதில் Delete chat history யை பயன்படுத்தி அவசியமற்றவைகளை அழித்துகொள்ள முடியும். அதேபோல் IMO கணக்கினை அழிப்பதற்கு IMO account setting சென்று Delete your IMO account என்பதன் ஊடாக உங்கள் கணக்கினை அழித்து கொள்ள முடியும்.

அதேபோல் IMO பயன்படுத்திய அனைவருக்கும் நிச்சியமாக முகம் தெரியாத அழைப்புகள் (Wrong call) வருவது சகஜமான ஒரு விடயம் என்று தான் கூற முடியும். இந்த அழைப்புகள் 80 வீதம் பெண்களுக்கே வருகின்றதென்பது குறிப்பிடத்தக்கது.

எனவே தயவு செய்து அவ்வாறான அழைப்புகளுக்கு பதில் கொடுக்க வேண்டாம். தெரியாத இலக்கம் என்றால் மேல் உள்ள படத்தில் Blocked contacts என்ற ஒரு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது, அதற்குள் தெரியாத இலக்கத்தை பதிவு செய்து விடுங்கள். தயவு செய்து இணையதளங்களில் உங்கள் அந்தரங்கங்கள் பகிர்வதனை நிறுத்தினால் பாதிப்புகளில் இருந்து ஆரம்பத்திலே காப்பாற்றி கொள்ள முடியும். நன்மைக்காக மாத்திரம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் பிரச்சினைகளை தவிர்த்துகொள்ளலாம். அழகு என்றால் ஆபத்துதான் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களும் பொருத்தும் என்பது உறுதியாகியுள்ளது.

அமெரிக்க தனியார் தொலைக்காட்சியில் நேரடி ஔிபரப்பு நிகழ்ச்சியில் நடந்த விபத்து!!(காணொளி)

show

அமெரிக்க தொலைக்காட்சிகளில் திறமைகளை வெளிக்காட்டும் பல நேரடி ஔிபரப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அவ்வாறானதொரு நிகழ்ச்சியே America’s Got Talent.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை ஔிபரப்பான இந்நிகழ்ச்சியில் தங்களது திறமையை நிரூபிக்க, ஸ்டண்ட் நடிகர் ரியான்ஸ்டாக்குடன் அம்பர்லின் இணைந்து பல சாகசங்களை செய்து காட்டினர்.

இதில் ஒரு பகுதியாக ரியான்ஸ்டாக் ஒரு நீண்ட கம்பியை எடுத்து தனது வாயினுள்ளே திணித்தார், அதன் முடிவுப் பகுதியை தன் வாயில் வைத்து, அதைப் பார்த்து நேராக தீப்பொறி அம்பு விடும்படி அம்பர்லினிடம் தெரிவித்தார்.

அம்பர்லின் அதை குறிபார்த்து விடும் போது, தவறுதலாக அவரது கழுத்துப் பகுதியை அம்பு தாக்கியது. இதனால் நடுவர் உட்பட அரங்கமே சற்று அமைதியானது.

இந்த சம்பவத்தையடுத்து, ரியான்ஸ்டாக் தான் நலமாக உள்ளதாகவும், தனக்கு ஒன்றும் நேர்ந்துவிடவில்லை எவைும் கூறியுள்ளார்.

இது இயந்திரக் கோளாரால் ஏற்பட்ட விபத்து எனவும், ரியான்ஸ்டாக் அதிர்ஷ்டசாலி எனவும் நடுவர்களில் ஒருவரான ஸ்டாக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மிகவும் கோலாகலமாக ஆரம்பமானது ரியோ ஒலிம்பிக் போட்டிகள்!!(கண்கவர் படத்தொகுப்பு)

OLYMP

2016ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று காலை வாணவேடிக்கைகளுடன் மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியது.

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இவர்கள் 28 வகையான விளையாட்டில் 306 பந்தயங்களில் பதக்கத்தை வெல்ல போட்டியிட ஆயத்தமாகி வருகிறார்கள்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 31வது ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று காலை 4.30 மணியளவில் தொடங்கியது.

தென்அமெரிக்காவில் அரங்கேறும் முதல் ஒலிம்பிக்கான இதில் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு உணர்வுபூர்வமான கலை நிகழ்ச்சிகள், அதிரடி நடனங்கள், சாகசங்கள் மற்றும் வண்ணமயமான வாணவேடிக்கை உள்ளிட்டவை நடைப்பெற்று வருகிறது.

ஐ,நா. சபை தலைவர் பான் கீ மூன் உட்பட உலக தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், ரசிகர்கள் என்று மொத்தம் 78 ஆயிரம் பேர் இன்று ஆரம்பமாகும் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவை கண்டுகளித்து வருகிறார்கள்.

1 36DBCF9000000578-3726239-Warm_up_A_rehearsal_was_held_on_Sunday_night_at_the_Maracana_sta-a-18_1470434927803 36E9F66600000578-3726239-RIO_DE_JANEIRO_BRAZIL_AUGUST_05_Coca_Cola_Olympic_Torch_Bearer_a-a-20_1470437377963 36EA4F2C00000578-3726239-image-a-31_1470437980821 36EB3D7D00000578-3726239-image-a-91_1470439640814 36EB3E6D00000578-3726239-image-a-84_1470439626595 36EB3E0100000578-3726239-image-a-89_1470439635846 36EB3E5000000578-3726239-image-a-86_1470439630476 36EB3F3D00000578-3726239-image-a-83_1470439617681 36EB4A3D00000578-3726239-image-a-102_1470440232414 36EB4A4700000578-3726239-image-a-105_1470440235246 36EB4E9200000578-3726239-image-a-145_1470442481383 36EB6DFF00000578-3726239-image-a-183_1470444336577 36EB6E2100000578-3726239-image-a-133_1470441937041 36EB9D0300000578-3726239-image-a-217_1470445477840 36EB33D700000578-3726239-image-a-50_1470439254153 36EB40C900000578-3726239-image-a-71_1470439562736 36EB40CA00000578-3726239-image-a-77_1470439585302 36EB40DB00000578-3726239-image-a-70_1470439559867 36EB42BB00000578-3726239-image-a-109_1470440255261 36EB48C400000578-3726239-image-a-99_1470440188476 36EB48E800000578-3726239-image-a-110_1470440321459 36EB77B500000578-3726239-image-a-170_1470443240880 36EB408B00000578-3726239-image-a-76_1470439579663 36EB433A00000578-3726239-image-a-92_1470439660988 36EB956A00000578-3726239-image-a-191_1470444696599 36EB335300000578-3726239-image-a-59_1470439368486 36EB339700000578-3726239-image-a-57_1470439294655 36EB425000000578-3726239-image-a-68_1470439558509 36EB434000000578-3726239-image-a-93_1470439775354 36EB838100000578-3726239-image-a-173_1470443257581 36EBA5F400000578-3726239-image-a-251_1470447098066 36EBA55500000578-3726239-image-a-216_1470445394588 36EBA76300000578-3726239-image-a-220_1470445541525 36EBB1C400000578-3726239-image-a-231_1470446285751 36EBB80A00000578-3726239-image-a-278_1470449452130 36EBBCCA00000578-3726239-image-a-280_1470449502306 36EC5A9500000578-3726239-image-a-316_1470453136334 36EC5B1E00000578-3726239-image-a-313_1470453125934 36EC147D00000578-3726239-image-a-267_1470448859222 36EC286A00000578-3726239-image-a-286_1470449963479 7696882-3x2-940x627 7696896-3x2-940x627 7696944-3x2-940x627 7696946-3x2-940x627 7696950-3x2-940x627 7696962-3x2-940x627 7696970-3x2-940x627 7697170-3x2-940x627 7697222-3x2-940x627 7697232-3x2-940x627 160805194307-06-rio-olympics-gallery-0805-super-169 160805202741-09-rio-olympics-gallery-0805-super-169 160805203317-10-rio-olympics-gallery-0805-super-169 160805203320-11-rio-olympics-gallery-0805-super-169 160805212514-18-rio-olympics-gallery-0805-super-169 160805212747-20-rio-olympics-gallery-0805-super-169 160805212748-19-rio-olympics-gallery-0805-super-169 160805214644-09-rio-olympics-opening-ceremony-0805-super-169 160805221640-23-rio-olympics-gallery-0805-super-169 160805223444-13-rio-olympics-opening-ceremony-0805-super-169 160805224453-26-rio-olympics-gallery-0805-super-169 160805224846-27-rio-olympics-gallery-0805-super-169 160805224936-28-rio-olympics-gallery-0805-super-169 160805225415-29-rio-olympics-gallery-0805-super-169 160805225901-30-rio-olympics-gallery-0805-super-169

பியருக்கு வேண்டாம், அத்தியாவசிய பொருட்களுக்கே வேண்டும்!!

Beer

பியர் இறக்குமதிக்கான வரிச் சலுகையை வழங்காது, அத்தியாவசிய பொருட்களின் வரியை நீக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளனர்.

அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக முன்னணி பியர் உற்பத்தி நிறுவனமொன்றின் பியர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் லாவோஸ் மற்றும் கம்போடியாவிலிருந்து பியர் இறக்குமதி செய்ய 75 வீத வரிச் சலுகையை அரசாங்கம் வழங்க உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் பியருக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடுமெனக் கருதி அரசாங்கம் இவ்வாறு வரிச் சலுகை வழங்குவதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

எனினும், பியர் இறக்குமதிக்கு வரிச் சலுகை வழங்காது, அத்தியாவசியப் பொருள் இறக்குமதிக்கு வரிச் சலுகை வழங்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்சா கோரியுள்ளார்.

பியர் நாட்டின் அத்தியாவசிய உணவுப்பொருள் கிடையாது எனவும், இதனால் தொற்றா நோய்கள் அதிகரிப்பதாகவும் வைத்தியர் நவீன் டி சொய்சா மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் மரணம்!!

DEAD

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் மரணமடைந்த சோக சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மனைவி சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பயனளிக்காத நிலையில் கடந்த 3 ஆம் திகதி மரணமடைந்தார்.
இச் சம்பவத்தால் கடுமையான சோகத்தில் இருந்த கணவர், மனைவியின் உடலைப் பார்த்தவுடன் மயங்கி வீழ்ந்து அதே இடத்தில் மரணமடைந்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்தவர்கள் திருநெல்வேலியை சேர்ந்த பொன்னம்பலம் பரமேஸ்வரி தம்பதிகளாவார்.

இருவரின் மரணங்களும் பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்களையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உணவுக்காக 6 வயது மகளை 55 வயது நபருக்கு மணமுடித்து வைத்த தந்தை!!

Child

ஆப்கானிஸ்தானில் உணவுகளுக்காக தனது 6 வயது மகளை 55 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ள தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ghor மாகாணத்தை சேர்ந்த நபர் ஒருவரால் தனது குடும்பத்தினருக்கு சரியான முறையில் உணவு அளித்து பராமரிக்க முடியவில்லை. இதனால் தனது 6 வயது மகள் Gharibgol – ஐ, அப்பகுதியில் வசித்து வந்த Seyed Abdolkarim (55) என்பவருக்கு வணிக ரீதியான முறையில் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளார்.

தனது மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய், ஆடு போன்றவற்றை அந்த நபரிடம் இருந்து வாங்கியுள்ளார்.

சட்டவிரோதமாக நடைபெற்ற இந்த திருமணம் குறித்து அருகில் வசிப்பவர்கள் பொலிசிற்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் தந்தையையும், அந்நபரையும் கைது செய்துள்ளனர்.

ஆனால், அந்நபரோ இவள் என்னுடைய மனைவி, தற்போது இவளுடன் நான் எவ்வித உறவும் கொள்ளவில்லை அவளுக்கு 18 வயது பூர்த்தியானவுடன் நான் உறவு கொள்வேன், அதுவரை நான் இவளை பார்த்துக்கொள்வேன் என கூறியுள்ளார்.

இதனை ஏற்க மறுத்த பொலிசார், அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். தற்போது அச்சிறுமி தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் தான் 6 வயது சிறுமியை 60 வயது முதியவர் திருமணம் செய்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

75 இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்!!

Srilankan

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் 75 பேர் எதிர்வரும் 9ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு திரும்பவுள்ள 75 பேரில் 43 ஆண்களும் 32 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் மீள் குடியமர்த்தப்படவுள்ளனர்.

குறித்த அனைவரும் இலங்கையை வந்தடைவதற்கான இலவச விமான பயணச்சீட்டு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வழங்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடு திரும்பும் அகதிகளுக்கு மீள் சமூக ஒருங்கிணைப்பிற்கான நன்கொடையாக ஒவ்வொருவருக்கும் 75 அமெரிக்க டொலர்களும், போக்குவரத்து நன்கொடையாக ஒவ்வொருவருக்கும் 19 அமெரிக்க டொலர்களும் வழங்கப்படவுள்ளன.

அத்துடன், உணவு அல்லாத பண நன்கொடையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 75 அமெரிக்க டொலர்களும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

வயதெல்லையால் வாழ்வாதாரத்தை இழக்கவுள்ள கிழக்கு மாகாண பட்டதாரிகள்!!

????????????????????????????????????

கிழக்கு மாகாண சபையால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் நியமன வயதெல்லையை அதிகரிக்குமாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான கோரிக்கைக் கடிதமொன்றை, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டியன் பெர்ணன்டோவிடம் அவர் கையளித்துள்ளார்.
அக்கோரிக்கைக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாண சபையால், பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் பொருட்டு, விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதன் மூலம், பட்டதாரிகள் தொழில்பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அதற்காக தங்களுக்கும் கிழக்கு மாகாண சபையினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிகமான பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இன்றி இருக்கின்றனர். இவர்களுள் சிலர், 35 வயதுக்கும் மேற்பட்டவர்கள்.

இந்த ஆசிரியர் நியமனத்துக்கான விண்ணப்பத்தில் வயதெல்லை 35ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், அவர்களால் இந்த நியமனத்துக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வேறு சில மாகாணங்களில் பட்டதாரி நியமனங்களுக்கான வயதெல்லை 35 விட அதிகமாக இருப்பதால், அது போன்ற ஒரு வாய்ப்பு கிழக்கு மாகாணப் பட்டதாரிகளுக்கும் வழங்கப்படுதல் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

இதனால், அவர்களது வாழ்வாதாரம் அதிகரிக்கும் என்று நான் கருதுகின்றேன். எனவே, இந்த விடயங்களைக் கவனத்திற்கொள்ளுமாறு அவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

உணவகத்தில் பணியாற்றும் ஒபாமாவின் மகள்!!

Obama Doughter

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மகள் உணவகம் ஒன்றில் பணிபுரியும் புகைப்படம் அந்நாட்டு ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒபாமாவுக்கு மாலியா, சாஷா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் சாஷா (15). இவர், Martha’s Vineyard – இல் உள்ள உணவகம் ஒன்றில் உணவு பரிமாறும் பணியில் சேர்ந்துள்ளார்.

அதாவது, கோடை காலத்தினை முன்னிட்டு இவர் இந்த பணியினை தெரிவு செய்துள்ளார். மீன் வகை உணவுகளை விற்பனை செய்யும் அந்த உணவகத்தில், வாடிக்கையாளர்கள் சாப்பிட விரும்பும் உணவுகளை தெரிந்துகொண்டு அதனை எடுத்துக்கொண்டு வந்து பரிமாறுவது மற்றும் உணவுகளை பார்ஷல் செய்து கொடுக்கும் பிரிவு ஆகிய இரண்டு பணிகளை இவர் செய்து வருகிறார்.

அந்த உணவகத்தின் சீருடையான நீல நிற ஆடை மற்றும் தலையில் தொப்பி அணிந்து கொண்டு இவர் உணவகத்தில் பணியாற்றும் புகைப்படம் மற்றும் பணியினை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், இதுகுறித்து வெள்ளை மாளிகை எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.