இலங்கை சார்­பாக ஒலிம்பிக்கில் 7 வீரர்கள், 2 வீராங்­க­னைகள்!!

SL

ரியோ விளை­யாட்டு விழாவில் இலங்கை சார்பாக 7 வீரர்­களும் 2 வீராங்­க­னை­களும் பங்குபற்றுகின்­றனர்.

ஒலிம்பிக் வர­லாற்றில் தனது மூன்­றா­வது ஒலிம்பிக் போட்­டி­களில் பங்­கு­பற்றும் மரதன் ஓட்ட வீரர் அநு­ராத இந்த்­ரஜித் குறே, இன்று நடை­பெறும் ரியோ ஒலிம்பிக் ஆரம்ப விழா அணி­வ­குப்பில் தேசிய கோடியை ஏந்தி இலங்கை அணிக்கு தலைமை தாங்­க­வுள்ளார்.

இவரை விட சுமேத ரண­சிங்க (ஆண்­க­ளுக்­கான ஈட்டி எறிதல்), நிலூக்கா கீதானி ராஜ­சே­கர (பெண்களுக்­கான மரதன்), நிலூக்க கரு­ணா­ரட்ன (பட்­மின்டன்), சுதேஷ் பீரிஸ் (ஆண்­க­ளுக்­கான பளு­தூக்கல்), மங்­கள சம­ரக்கோன் (ஆண்­க­ளுக்­கான குறி­பார்த்து சுடுதல்), மெத்யூ அபே­சிங்க (ஆண்க­ளுக்­கான நீச்சல்), கிமிக்கோ ரஹீம் (பெண்­க­ளுக்­கான நீச்சல்), சமார தர்­ம­வர்­தன (ஜூடோ) ஆகி­யோரும் இலங்கை சார்­பாக போட்­டி­யி­டு­கின்­றனர். இவர்கள் தத்­த­மது அதி சிறந்த ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­துவர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இலங்கை சார்­பாக முத­லா­வது போட்­டியில் பங்­கு­பற்ற இருப்­பவர் கிமிக்கோ ரஹீம் ஆவார். இவர் எதிர்­வரும் 7ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள பெண்­க­ளுக்­கான 100 மீற்றர் மல்­லாக்கு நீச்சல் போட்டிக்கான முதலாம் சுற்றில் பங்­கு­பற்­ற­வுள்ளார்.

இலங்கை குழுவின் தலைமை அதி­கா­ரி­யாக தேசிய ஒலிம்பிக் குழுவின் பொரு­ளாளர் காமினி ஜயசிங்க செயற்­ப­டு­கின்றார். உதவி தலைமை அதிகாரியாக தேசிய ஒலிம்பிக் குழுவின் சிரேஷ்ட உதவித் தலைவர் தேவா ஹென்றி நியமிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும் நிலையை எதிர்நோக்கிய ஆந்தை!!

Anthi

பிரிட்டனிலுள்ள ஆந்தையொன்று பொலிஸாரால் ஏறத்தாழ கைது செய்யப்படும் நிலையை அண்மையில் எதிர்நோக்கியது.

லண்டனுக்கு அருகிலுள்ள வீதியொன்றில இந்த ஆந்தை வீதியை மறித்துக்கொண்டு நின்றதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. அதையடுத்து பொலிஸாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பொலிஸார் வந்த பின்னரும் ஆந்தை அங்கிருந்து அகலவில்லை. எனினும் பின்னர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது இரக்க குணத்தை வெளிப்படுத்தும் வகையில் மேற்கொண்ட செயற்பாடுகள் மூலம் ஆந்தை வீதியிலிருந்து வெளியேறியது.

ஏனைய வாகனங்களுக்கு மேலாக பயணிக்கும் பஸ் சீனாவில் பரீட்சார்த்தமாக இயக்கப்பட்டது!!

1

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வீதிக்கு மேலாக பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட நவீன பஸ் சீனாவில் நேற்றுமுன்தினம் பரீட்சார்த்தமாக இயக்கப்பட்டது.

தரையிலிருந்து 2 மீற்றர் உயரத்தில் இந்த பஸ்ஸின் உடற்பகுதி காணப்படுகிறது. வீதிகளில் இரு மருங்களிலும் பதிக்கப்பட்ட விசேட தண்டவாளங்களின் மூலம் இந்த பஸ் பயணிக்கும். எனவே, இந்த பஸ்ஸின் அடியில் கார்கள் போன்ற 2 மீற்றருக்கு குறைந்த உயரம் கொண்ட ஏனைய வாகனங்கள் பயணம் செய்ய முடியும்.

இந்த பஸ்களில் மக்கள் பயணிப்பதால் வீதிகளின் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Transit Elevated Bus (TEB) என இந்த பஸ் அழைக்கப்படுகிறது. எதிர்கால விஞ்ஞானத் திட்டமொன்றைப் போல் இந்த நவீன பஸ் திட்டம் கருதப்படலாம். கடந்த மே மாதம் இது தொடர்பான வீடியோவொன்றை சீன அதிகாரிகள் வெளியிட்டிருந்தனர்.

ஆனால், வெறும் கற்பனை யான திட்டமல்ல, யதார்த்த பூர்வமானது என்பதை சீன அதிகாரிகள் நேற்று முன்தினம் செயற்படுத் திக்காட் டினர்.

ஹேபேய் மாகாணத் தின் குய ஹுங்டோ நகரில் இந்த பஸ் பரீட்சார்த்த சேவையில் ஈடுபடுத்தப் பட்டது. 300 மீற்றர் நீளமான பாதை யொன்றில் இந்த பஸ் பயணித்தது.

72 அடி (21 மீற்றர் நீளமும் 25 அடி நீளமும் கொண்ட இந்த பஸ்ஸில் சுமார் 300 பேர் பயணம் செய்ய முடியும். அதிகபட்சமாக மணித்தியா லத்துக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் இந்த பஸ் பயணம் செய்ய முடியும். இந்த பஸ்ஸின் மொத்த உயரம் சுமார் 4 மீற்றர்களாகும்.

“இந்த பஸ்ஸின் மிகப் பெரிய நன்மை என்னவெனில், இதன் மூலம் வீதியில் அதிக இடத்தை மீதப்படுத்த முடியும்” என இத்திட்டத்தின் பிரதான பொறியியலாளரான சோங் யூஸோ தெரிவித்துள்ளார்.

ஒரு சுரங்கப் பாதை போன்று இந்த பஸ் செயற்படுகிறது. ஆனால், சுரங்கப்பாதையொன்றை நிர்மாணிக்கும் செலவில் ஐந்தில் ஒரு பங்கு செலவே இதன் நிர்மாணத்துக்கு செலவாகும் என மற்றொரு பொறியியலாளரான பாய் ஸிமிங் தெரிவித்துள்ளார்.

இத்தகைய பஸ் எண்ணக்கரு புதியதல்ல. ஆனால், கடந்த மாதம் நடைபெற்ற சீன பெய்ஜிங் சர்வதேச உயர்தொழில்நுட்ப கண்காட்சியில் இந்த பஸ்ஸின் சிறிய மாதிரியொன்று காட்சிப்படுத்தப்பட்டபோது இது குறித்து அவ்வளவாக கருத்திற்கொள்ளப்படவில்லை.

2 3 4

பூமியைப் போன்று புதிய 20 கிரகங்கள் கண்டுபிடிப்பு!!

Nasa

அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளியில் உள்ள புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டறிய கெப்லர் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளனர். அதில் சக்தி வாய்ந்த டெலஸ்கோப் மற்றும் காமிரா பொருத்தப்பட்டுள்ளது.

அவை புதிய கிரகங்களை கண்டுபிடித்து போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. அதுபோன்று இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதுகுறித்த ஆய்வுகளை நாசா விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளவைகளில் உயிரினங்கள் வாழ தகுதியுள்ளதாக 216 கிரகங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

அவற்றில் 20 கிரகங்கள் பூமியை போன்று உயிரினங்கள் வாழ மிகவும் தகுதியுள்ளவை என கண்டறியப்பட்டுள்ளது. இங்கு பூமியில் இருப்பது போன்ற மனுக்கள் மற்றும் பாதைகள் உள்ளன.

இந்த கிரகங்கள் நட்சத்திரங்களை ஒட்டியுள்ளது. அதன் மூலம் அங்கு சூரிய ஒளி, தண்ணீர் போன்றவை இருக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இத் தகவலை நாசா விஞ்ஞானி ரவிகுமார் கொபாரபு தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி விடுக்கும் வேண்டுகோள்!!

Maithiri

யாழ் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அச்சமின்றி சுதந்திரமாக கல்வி நடவடிக்கைகளை தொடருமாறு மாணவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ் பலகலைக்கழகம் தொடர்பாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் உடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வௌியிட்டுள்ளது.

அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சில குழுக்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் மோதல்களை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டிய ஜனாதிபதி, பல்கலைக்கழகத்தினுள் மாணவர்களின் பாதுகாப்புக்காக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் பங்களிப்புடன் விசேட குழுவொன்று அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

எனவே, யாழ் பல்கலைகழகத்தின் கல்வி தடையின்றி முன்னெடுப்பது அவசியமென்று கூறிய ஜனாதிபதி சிறிசேன வதந்திகளை நம்புவதைத் தவிர்த்து கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மானவர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகத் தெரிவித்தார்.

எந்த வயதில் திருமணம் செய்யலாம்?

Wedding

திருமணம் என்ற வார்த்தையைக் கேட்டாலே போதும் அனைவரது மனதிலும் ஒரு பயம் ஏற்படும். வேண்டாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார்கள்.

ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை திருமணம் என்றால் தங்களது சுதந்திரத்தைப் பறிகொடுப்பதாக அர்த்தம்.

அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு திருமணத்தை தள்ளிப் போடுவதால் உண்டாகும் பிரச்சனையைப் பற்றி தெரியவில்லை.

மேலும் திருமணத்தை தள்ளிப் போட்டால் தான், குடும்பத்தின் பாரத்தை உடனே சுமப்பது போல இருக்கும் என்று அனுபவசாலிகள் கூறி, மேலும் அவ்வாறு 25 வயதில் ஆகாமல், அதற்கு மேல் நடந்தால் என்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறுகின்றனர்.

திருமணமானது 28-30 வயதில் ஏற்பட்டால், உடனே குழந்தை பிறக்க வேண்டும் என்ற நிலைக்கு ஆளாக நேரிடும். ஏனெனில் 30 வயதிற்கு மேல் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைப்பது தவறு. அவ்வாறு நினைத்தால் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

மேலும் வாழ்க்கையை மனைவி/கணவருடன் சந்தோஷமாக எங்கேயும் சுற்றி அனுபவிக்க முடியாது. குறிப்பாக குடும்பத்தை சரியாக நடத்த எந்த ஒரு திட்டத்தையும் ஒழுங்காக போட முடியாது.

அதுவே 25 வயதில் நடந்தால், மனைவி/கணவரோடு சந்தோஷமாக ஊர் சுற்றி, நன்கு அனுபவித்து, ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு, குடும்பத்தை எப்படியெல்லாம் நல்ல நிலைக்கு கொண்டு வரலாம் என்று எதையும் யோசித்து செய்ய முடியும்.

திருமணமானது 25 வயதில் நடந்தால் இருவரும் நன்கு புரிந்து கொண்டு, ஒரு மனபக்குவத்திற்கு வர முடியும். மேலும் நண்பர்களுடன் எங்கேனும் இருவரும் ஒன்றாக சென்று விட்டு எந்த நேரத்திலும் வீட்டிற்கு வரலாம். அப்போது யாரும் எந்த தடையும் போட முடியாது. ஏனெனில் அப்போது நீங்கள் புதுமணத் தம்பதியர்களாகவே தெரிவீர்கள்.

ஆகவே எவரும் தடைவிதிக்க முடியாது. மேலும் உங்கள் சந்தோஷத்திற்கு எந்த இடையூறும் இருக்காது.

மேலும் இந்த வயதில் திருமணமானது நடந்தால், ஒரு 30 வயது ஆகும் போது உங்களுக்கு ஒரு பொறுப்புணர்வு வரும். குடும்பத்தை எப்படி நடத்தினால், எதிர்காலத்தில் நாமும் நம் குழந்தைகளும் சந்தோஷமாக இருக்கலாம் என்று நன்று புரியும்.

இருவரும் தவறு செய்தால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் உங்களுக்கு சொல்லி, உங்களது தவறை திருத்துவார்கள். சொல்லப்போனால் ஒரு நல்லஅனுபவம் கிடைக்கும்.

அது பிற்காலத்தில் உங்களது குழந்தைக்கு சொல்லிப் புரிய வைக்க உதவியாகவும் இருக்கும்.

30 வயதில் திருமணம் செய்தால், உங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு திருமணம் செய்வதற்குள் நீங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிடுவீர்கள்.

முக்கியமாக சொல்லப் போனால், அவர்கள் காலேஜ் வரும் போது உங்களுக்கு 50 வயதாகியிருக்கும்.

அந்த வயதில் வேலைக்கு செல்வது என்பது சற்று கடினமான விஷயம். உடல் நிலையும் அதற்கு ஒத்து போகாது. மேலும் அந்த வாழ்க்கை சற்று கடினமாக இருக்கும்.

ஆகவே திருமணம் செய்ய சரியான வயது 25 தான் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர்.

இரு கால்களும் செயலிழந்த நிலையிலும் பல்கலைக்கழக பட்டதாரியான இளைஞர்!!

1

இரு கால்களும் செயலிழந்த நிலையில், பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர் ஒருவர் அங்கு தனது பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு முகாமைத்துவ, வர்த்தகத்துறை பட்டதாரியாகியுள்ளார்.

மாத்தறை தெலிஜ்ஜவில என்ற இடத்தைச் சேர்ந்த கசும் சாமர என்ற இந்த இளைஞர் தனது பட்டப்படிப்பை ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக் கழகத்திலேயே தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது.

கால்கள் செயலிழந்த நிலையில், அவரது தாய் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் நடைபெறும் அனைத்து நாட்களிலும் அங்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொண்டு பல்கலைக்கழக வேந்தர் கலாநிதி வெல்லன்வில விமலரத்ன தேதரரிடமிருந்து தனது பட்டத்தை பெற்றுக் கொண்டார்.

2 3

ஓடுபாதையை தாண்டிச் சென்று வீதியில் பிரவேசித்த விமானம்!!(காணொளி)

 
இத்தாலிய விமான நிலையத்தில் தரையிறங்கிய டி.எச்.எல். சரக்கு விமானமொன்று ஓடுபாதையை தாண்டிச் சென்று சனச்தடி வீதியில் பிரவேசித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பிரான்ஸின் பாரிஸ் நகரிலிருந்து பயணத்தை மேற்கொண்ட ஏ.எஸ்.எல். எயார்லைன்ஸ் போயிங் 737 – 400 விமானம் ஒரியோ அல் செரியோ விமான நிலையத்தின் ஒடுபாதையை தாண்டி எல்லை வேலியை உடைத்துக் கொண்டு வீதியில் பிரவேசித்துள்ளது. அந்த விமானம் டி.எச்.எல். நிறுவனத்தால் தனியார் விரைவு தபால் சேவைக்காக (கூரியர் சேவை) பயன்படுத்தப்பட்டு வந்த விமானமாகும்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு அவசரசேவைப் பிரிவினர் வரவழைக்கப்பட்டனர்.இந்த சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 2 3 4

வவுனியா தமிழ்ச்சங்கம் நடாத்தும் நூல் வெளியீட்டு விழா நாளை!!

BOOK

ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு (திரு மாஸ்டர்) அவர்கள் எழுதிய, இலங்கை அரசியல் யாப்பு (டொனமூர் யாப்பு முதல் உத்தேச சிறிசேன யாப்புவரை 1931 – 2016)

இடம்: வவுனியா சிந்தாமணிப்பிள்ளையார் ஆலய கலாமண்டபம்
காலம்: 06.08.2016 சனிக்கிழமை காலை 9.30 மணி

தலைமை
தமிழருவி.த.சிவகுமாரன்
(வவுனியா தமிழ்ச்சங்க ஸ்தாபகர், செயலாளர்)

பிரதம விருந்தினர்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள்
(முதலமைச்சர், வடமாகாணம்)

சிறப்பு விருந்தினர்கள்
த.சித்தார்த்தன்
(யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்)
சுரேஸ்பிரேமச்சந்திரன்
(தலைவர், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி)
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
(தலைவர், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்)

கௌரவ விருந்தினர்கள்
சிவசக்திஆனந்தன்
(வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்)
ம.தியாகராசா
(வடமாகாணசபை உறுப்பினர்)
இ.இந்திரராசா
(வடமாகாணசபை உறுப்பினர்)
திருமதி.அனந்தி சசிதரன்
(வடமாகாணசபை உறுப்பினர்)
வி.எஸ்.சிவகரன்
(தலைவர், பொது அமைப்புகளின் ஒன்றியம், மன்னார் மாவட்டம்)

நிகழ்ச்சிநிரல்
மங்கல விளக்கேற்றல்
தமிழ்த்தாய் வாழ்த்து:
திருமதி.பராசக்தி ஜெகநாதன்
வரவேற்புரை:
திரு.சிவ.கஜேந்திரகுமார் (வவுனியா தமிழ்ச்சங்கம்)
தொடக்கவுரை:
தமிழ்மணி.மேழிக்குமரன் (வவுனியா தமிழ்ச்சங்கம்)
தலைமையுரை
அறிமுக உரை
ச.யோகரட்ணம் (ராதையன்)
(மூத்த பத்திரிகையாளர்)
நூல் வெளியீடு:
பிரதம விருந்தினர் அவர்கள்

முதற்பிரதி பெறுவோர்:
கலாநிதி.இரவீந்திரநாதன்
(பிரித்தானியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலாளர்)
திரு.செ.சுதாகரன் (பொருளியல் ஆசிரியர்)
சிறப்பு பிரதிகள் வழங்கல்
நூலாய்வு
திரு.நிலாந்தன்
(பத்தி எழுத்தாளர், அரசியல் ஆய்வாளர்)
சிறப்புரை:
திரு.சி.அ.ஜோதிலிங்கம்
(சட்டத்தரணி, அரசியல் ஆய்வாளர்)
சிறப்பு விருந்தினர் உரைகள்
கௌவர விருந்தினர் உரைகள்

நன்றியுரை:
கவிச்சிகரம்.கி.உதயகுமார் (பொருளாளர், வவுனியா தமிழ்ச்சங்கம்)

அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

11

தரம் 05 மாணவர்களின் பிரத்தியேக வகுப்புக்களுக்குத் தடை!!

Grade 5

எதிர்வரும் 17ம் திகதி முதல் 21ம் திகதி வரையான காலத்தில் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ம் திகதி புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற இருப்பதால் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி மாதிரி வினாத்தாள்களை அச்சிடல், அவற்றை விநியோகித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாதிரி வினாத்தாள்களை வழங்குவதாக பதாகைகள் ஒட்டுவது, துண்டுப் பிசுரங்களை விநியோகித்தல் மற்றும் குறித்த காலப்பகுதியில் அச்சு அல்லது இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக பிரச்சாரங்கள் மேற்கொள்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

வெற்றியை நோக்கி இலங்கை அணி : தொடர்ந்து தடுமாறும் அவுஸ்திரேலிய அணி!!

Sri Lankan cricketer Rangana Herath (C) celebrates with teammates after he dismissed unseen Australian batsman Adam Voges during the second day of the second Test cricket match between Sri Lanka and Australia at The Galle International Cricket Stadium in Galle on August 5, 2016. / AFP / ISHARA S.KODIKARA        (Photo credit should read ISHARA S.KODIKARA/AFP/Getty Images)

இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் மிச்சல் ஸ்டார்க்கின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 237 ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து ஆஸி அணிக்கு வெற்றியிலக்காக 413 ஒட்டங்களை நிர்ணயித்துள்ளது.

இந்த நிலையில் இன்றைய ஆட்டநேர முடிவின்போது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலிய அணி 25 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்து தடுமாறி வருகின்றது.

இதேவேளை இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி சார்பாக டில்ருவான் பெரேரா 64 ஒட்டங்களையும் அணித்தலைவர் மெத்தியுஸ் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். மிச்சல் ஸ்டார்க் 50 ஒட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இன்னும் 3 நாட்கள் மீதமுள்ள நிலையில் நாளை இலங்கை அணி இலகுவாக வெற்றியைத் தனதாக்கி தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பிள்ளைகளுக்கான செலவுகளை செலுத்த முடியாத குடும்பஸ்தர் தற்கொலை!!

suicide

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது பிள்ளைகளுக்கான பிள்ளைச் செலவுகளைக் கட்டமுடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவரின் சடலம் சந்திவெளி பொது மயானத்திற்கருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்திவெளி பிரதான வீதியைச் சேர்ந்த சின்னையா குணரத்தினம் (55 வயது) என இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். பொதுமக்களினால் வழங்கப்பட்ட தகவலையடுத்து இச்சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், பல வருடங்களாக குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்துவந்துள்ளார். இதனையடுத்து இவரின் மனைவி இவருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்த போதிலும் தனது பிள்ளைகளுக்கு செலவுக்கான பணத்தினை செலுத்த முடியாத நிலையில் மறியலில் இருந்து விட்டு வந்தபோது மீண்டும் இவருக்கான வழக்கு தொடரப்பட்டதையடுத்து இவர் நஞ்சருந்தி தற்கொலை செய்த கொண்டதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இச்சடலத்திற்கருகில் போத்தல் ஒன்றும் கிளாஸ் ஒன்றும் காணப்பட்டுள்ளது. சடலம் காணப்பட்ட இடத்தைப் பார்வையிட்ட ஏறாவூர் திடீர் மரணவிசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸிர் விசாரணைகளை ஆரம்பித்ததுடன் சடலத்தில் எவ்வித காயங்களும் காணப்படவில்லை என்றும் கூறினார்.

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்திற்குவருகைதந்து தடயங்களை பரிசோதனை செய்தனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி கிராமிய வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இவரின் மரணம் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு சடலம் குடம்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளை ஏறாவூர்ப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

அஸ்ஸாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொலை!!

Asam

இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக ”தி ஹிந்து” செய்தி வெளியிட்டுள்ளது.

அஸ்ஸாமின் கோக்ரஜஹார் மாவட்டத்தில் தினியாலியிலுள்ள சந்தைப் பகுதியில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து, சந்தைப் பகுதிக்கு அண்மையில் இருந்த இராணுவ ரோந்துப் படையினர் குறித்த பகுதியை சுற்றிவளைத்து எதிர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக ”தி ஹிந்து” செய்தியில் குறிப்பிப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை.

இருப்பினும், போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (சோங்பிஜித்) பிரிவைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு மரண தண்டனை விதித்து நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு!!

Court

நுவரெலியா மேல் நீதிமன்றம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

2000 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற நீண்ட நாள் வழக்கு விசாரணையை அடுத்து இந்த உத்தரவு பிறக்கப்பிட்டுள்ளது.

நுவரெலியா வென்ச்சர் தோட்டத்தை சேர்ந்த பெரியசாமி சண்முகநாதன் எனும் நபரை தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் குறித்த 7 நபர்களுக்கு எதிராக மூன்று குற்றபத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

முதலாவது குற்றசாட்டிற்காக இந்த 7 பேருக்கும் தலா 3,000 ரூபா அபராதமும், 6 மாத சிறைத்தண்டனையை விதித்த மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க, மூன்றாவது குற்றச்சாட்டிற்காக இவர்களுக்கு மரண தண்டனையை விதித்துள்ளார்

தன் உயிரைக் கொடுத்து குழந்தையை பெற்றெடுத்த இளம்தாய் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

Acci

பிரசவத்திற்கு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த தாய் பஸ் ஒன்றுக்கு மோதி உயிரிழந்த நிலையில் குழந்தை பாதுகாப்பாக பெற்றெடுக்கப்பட்ட சோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஒரு பிள்ளையின் தாய் என்று கூறப்படும் குறித்த கார்ப்பிணித் தாய் இரண்டாவது குழந்தையின் பிரசவத்திற்காக தனது கணவருடன், முச்சக்கர வண்டியில் காலி, மஹமோதரை வைத்தியசாலைக்கு செல்லும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு 8.45 மணியளவில் காலி சுமுது மாவத்தையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்றவுடன் பஸ் நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளதுடன், கர்ப்பிணித் தாயை முச்சக்கரவண்டியின் சாரதி உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இதன்போது சீஸர் முறைப்படி குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய வைத்தியர்களால் தாயின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

ஊருகஸ்மன்ஹந்திய, வடக்கு மாகல பிரதேசத்தைல் வசிக்கும் 25 வயதுடைய தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், குறித்த தம்பதியினர் வெலிகம பிரதேசத்தில் கறுவா தொழில் செய்து குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

பிரான்ஸ் நகர வீதிகளில் வைன் வெள்ளம்!!

Wine

தென் பிரான்ஸ் நகர் ஒன்றில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வைன் குழாயை உடைத்ததால், வீதியில் வைன் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

வைன் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த, அவசர சேவைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தரையின் கீழ் தளத்தில் உள்ள கார் நிறுத்துமிடங்களுக்குள் வைன் வெள்ளம் புகுந்துவிடாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய வைன்உற்பத்தி பிராந்தியங்களில் ஒன்றான லாங்குடாக் – ருசிலோன் என்ற துறைமுக நகரில் உள்ள செடே பகுதியில் இந்தப் போராட்டம் நடந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், வைன் உற்பத்தியாளர்களுக்கான பிராந்திய நடவடிக்கைக் குழு (க்ரேவ்) என்ற தீவிரவாதக்குழுவைச் சேர்ந்தவர் என தங்களைக் கூறிக் கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்பெயினில் இருந்து மிக மலிவான விலையில் வைன் இறக்குமதி செய்யப்படுவதைக் கண்டித்தே இந்தப் போராட்டங்கள் நடந்திருப்பதாக தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர்.