சென்னையில் 10 மாத குழந்தைக்கு தந்தை ஒருவர் வலுக்கட்டாயமாக பியர் கொடுத்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், வீட்டில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தையிடம் தந்தை பியர் பாட்டிலை திறந்து கொடுக்கிறார்.
வலுக்கட்டாயமாக குழந்தையின் தலையை பிடித்து பியரை வாயில் ஊற்றுகிறார்.
இதனை குழந்தையின் தாயே வீடியோவாக பதிவு செய்ததாக தெரிகிறது.
தற்போது வைரலாக பரவி வரும் இந்த வீடியோவிற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
விக்ரம் எந்த ஒரு ரசிகர்களின் சண்டையிலும் சிக்காதவர். ஏனெனில் இவரை அனைத்து தரப்பு நடிகர்களின் ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் இருமுகன். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்தது, இந்த ட்ரைலை 3 நாட்களில் 30 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது.
விக்ரமின் 10 எண்றதுக்குள்ள தோல்வியடைந்தும் இன்னும் மாஸ் குறையாமல் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அஞ்சாதே, யுத்தம் செய், நந்தலாலா என்ற தரமான படைப்புக்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் மிஷ்கின். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.இதில் இவர் பேசுகையில் ‘ஒரு நல்ல கலைஞன் ஆகவேண்டும் என்று நினைப்பவன் 3 அல்லது 4 வயதிலேயே புத்தகம் படிக்கத்தொடங்கி விடுவான்.
நான் 3 வயதில் படிக்க தொடங்கினேன், என் மகளுக்கு 16 வயது ஆகின்றது, அவள் புத்தகம் படிக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் நான் அவளை கொன்றே விடுவேன்’ என கூறினார், இவை அனைவரையும் சில நேரம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
S.S.ராஜமௌலி இயக்கத்தில் இயக்கத்தில் வெளிவந்து வசூல் சாதனை படைத்த பாகுபலியின் இரண்டாம் பாகத்திற்காக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றார்கள் .
இந்நிலையில், படத்தில் அதிகாரபூர்வ ரிலீஸ் திகதியை அறிவித்துள்ளனர். ஹிந்தியில் படத்தை வெளியிடும் கரண் ஜோஹர், 2017 ஏப்ரல் 28ம் தேதி பாகுபலி 2 வெளியாகும் என சற்று முன் அறிவித்துள்ளார்.
அசுத்தமான கடல் நீரால், தான் கர்ப்பமானதாக ஒலிம்பிக் தடகள வீராங்கனை கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் வருகிற 5 ஆம் திகதி ஒலிம்பிக் போட்டி தொடங்கவிருக்கிறது, இந்த போட்டியில் பங்கேற்கவிருக்கும் வீரர்களுக்கு சிறப்பு வசதிகளை பிரேசில் அரசு செய்து கொடுத்துள்ளது.
ஆனால் சுகாதரமற்ற கழிவறைகள், குடிநீர், விளக்கு வசதியற்ற மாடிப்படிகள் இருப்பதால் எங்களுக்கு சிரமமாக இருக்கிறது என பல்வேறு நாட்டு வீரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்னர் வீரர்களுக்கு நடத்தப்படும் மருத்துவ பரிசோதனையில், நீச்சல் வீராங்கனை அல்வில்டா ஜென்சன்(27) கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த பரிசோதனை முடிவை கேட்டு அதிர்ச்சியடைந்த அவில்டா, நான் கடந்த 3 மாதங்களாக பாலியல் உறவு வைத்துக்கொள்ளவில்லை, அப்படியிருக்கையில் நான் கர்ப்பமாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.போட்டி நடைபெறும் இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களை அறிந்துகொள்வதற்காக கடந்த 12 ஆம் திகதி கடல் வழியாக பயணித்து பிரேசில் வந்தேன்.
அப்போது கடலில் ஆயிரக்கணக்கான ஆணுறைகள் மற்றும் ஊசிகள் மிதப்பதை பார்த்தவுடன் அறுவருப்பாக இருந்தது, மிகவும் அசுத்தமாக இருந்த கடல் நீரில் பயணித்ததன் விளைவாக எனக்கு நோய்கள் வரும் என எதிர்பார்த்தேன்.ஆனால் இந்த மாசுபட்ட கடல் நீரால் நான் கர்ப்பமடைந்துள்ளேன் என கூறியுள்ளார்.
ரியோ பகுதியில் உள்ள கடலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்துக்கிடக்கின்றன, இதனை அப்பகுதி வாழ் மக்கள் சேகரித்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி இந்த நீரில் பாக்டீரியா மற்றும் வைரஸ்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.இந்த நீரினை அருந்தும்போது கடுமையான வயிற்றுவலி, சுவாசநோய் பிரச்சனைக்கு ஆளாக நேரிடுகிறது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ள அறிவுரையில், இந்த கடல் வழியாக பயணிக்கையில், அனைத்து விளையாட்டு வீரர்களும் தங்களது உடல்களில் உராய்வு அல்லது வெட்டுக்காயங்கள் ஏற்பட்டிருந்தால், அதனை நீர்ப்புகா பூச்சுகளை வைத்து நன்றாக அடைத்துவிடுங்கள். முடிந்தவரை இந்த தண்ணீரை அருந்துவதினை தவிர்த்து விடுங்கள் என கூறியுள்ளனர்.
பாடசாலை மாணவனுக்கு தொலைபேசி மூலம் ஆபாச படங்களை காட்டிய நபர் ஒருவரை கம்பளை பொலிஸார் 04.08.2016 அன்று மாலை 4.30 மணியளவில் கைது செய்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
கம்பளை பேரூந்து நிலைய பிரதேசத்தில் உள்ள வியாபார கடை ஒன்றின் மேல் மாடியில் வைத்து 35 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் 15 வயதுடைய பாடசாலை மாணவனுக்கு தனது தொலைபேசி ஊடாக ஆபாச படங்களை காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தினை அவதானித்த சிலர் பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று தொலைபேசியை கைப்பற்றியதுடன் குறித்த நபரையும் கைது செய்துள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவருவதாவது, பாடசாலை மாணவன் குறித்த நபருக்கு மருமகன் முறையென தெரியவந்துள்ளது.சம்பந்தப்பட்ட நபரை கம்பளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நிர்மாணிக்கப்படவிருக்கும் அனுமன் பாலம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நிர்மாணிக்கப்படவிருக்கும் பாலத்தினை உதய கம்மன்பில தனது வாயினால் குண்டுவைத்து தகர்த்தியுள்ளார். இதனால் இவர் ஒரு தீவிரவாத தலைவர் என இராஜாங்க அமைச்சர் கூறினார்.
மேலும், இது போன்ற முட்டாள்களின் அறிவற்ற பதில்களுக்கு மக்கள் செவிசாய்க்கக் கூடாது. அனுமன் பாலம் நிர்மாணிப்பது பற்றி பேச்சுவார்த்தை மட்டுமே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது, ஆனால் அதற்கு முன்னரே பாலம் தகர்க்கப்பட்டது என சுட்டிக்காட்டினார்.
மேலும், ஸ்ரீ.சு.கட்சியின் தலைமை அலுவலகம் ஒரு விபச்சார விடுதி என்று கூறுவதற்கு கம்மன்பிலவுக்கு எந்த விதமான தகுதியும் இல்லை.மக்களுடைய வாக்குகளை தனித்து பெற்றுக்கொள்ள முடியாத இவர்கள் இது போன்ற கீழ்த்தரமான கருத்துக்களைத் தான் முன்வைக்க முடியும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
யாழ்.காரைநகர் வலந்தலை சந்தி பகுதியில் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியு விபத்துக்குள்ளாகி உள்ளது.
சம்பவத்தில் சங்கானை பகுதியைச் சேர்ந்த எஸ்.ரவிகரன்( வயது21) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை பேருந்தின் சாரதி சம்பவ இடத்தை விட்டு தப்பியோடியுள்ளார் என அறியமுடிகின்றது.
அம்பாறை காரைதீவுப் பிரதேசத்தில் பெண்ணொருவரை தீ வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
காரைதீவு வெட்டடுவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணான மொறிஸ் மெரினா (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.அப்பெண்ணின் கணவரே தீ வைத்துக் கொலை செய்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இவர்கள் திருமணம் முடித்து மூன்றுமாதம் எனவும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இதற்குக் காரணம் என்றும் தெரிய வருகின்றது.சந்தேகத்தின் பேரில் அப்பெண்ணின் கணவரான குகதாசன் (வயது 32) என்பவரைக் கைது செய்துள்ளதாகவும், நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்த இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 106 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.
நாணய சுழற்சியில் வென்று முதல் இன்னிங்சில் நேற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 281 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
அதன்படி இலங்கை அணி 175 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறுகிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று ரங்கன ஹேரத் தொடர்ச்சியாக மூன்று விக்கட்டுக்களை கைப்பற்றி ஹெட்ரிக் சாதனை புரிந்தார்.
மொத்தமாக 35 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார் ரங்கன ஹேரத்.
அவுஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக வோர்ணர் 42 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி மத்திய போசன இடைவேளை வரை 35 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்துள்ளது.
அதிகாலையில் எழும்படி நம் வீடுகளில் பெரியவர்கள் கத்திக்கொண்டே இருப்பார்கள். ஆனால் பலருக்கு அதுதான் உலக மகா கஷ்டமான காரியம். சரி, அதிகாலையில் எழுவதில் அப்படி என்ன நன்மைகள் இருக்கின்றன என்று தெரியுமா?
அதிகாலையில் மூளை நரம்பு இயக்கங்கள் சீராகச் செயல்படும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும். இதனால், தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும்.
காலையில் தூய்மையான காற்றைச் சுவாசிப்பதால், நுரையீரல் வலுவடையும். ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சினைகள் நெருங்காது. அதிகாலையில் மூச்சுப் பயிற்சி, யோகா செய்வது, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நலம் பயக்கும்.
அதிகாலையில் எழுவதால் மன அழுத்தம் குறையும். அன்றைய நாளில் என்னென்ன வேலைகள் இருக்கின்றன, அவற்றில் எவற்றை, எப்போது, எங்கே, எப்படி முடிப்பது என எளிதாகத் திட்டமிட முடியும்.
உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க முடியும். காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யும்போது, அதிக ஈடுபாட்டுடன் சிறப்பாகச் செய்ய முடியும். அதிகாலை எழுவதால், காலை வேளையில் கபகபவென்று பசி எடுக்கும். காலை ஆகாரத்தை தவறவிடாமல் இருப்பதால், உடல் பருமன், சர்க்கரைநோய் அபாயம் குறையும்.
இரவு 9 மணிக்கெல்லாம் உறக்கம் தானாக வர ஆரம்பிக்கும். இரவு சரியான நேரத்துக்குத் தூங்குவதால், மன அழுத்தம், ரத்த அழுத்தம் வராது. வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும்.
அதிகாலை எழுவதால் சரியான நேரத்தில் இயற்கைக் கடனைக்கழிக்க முடியும். அது, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற உதவும். நச்சுக்கள் சீராக வெளியேறுவதால் சிறுநீர், கல்லீரல், பெருங்குடல் போன்ற உறுப்புகள் சீராக இயங்கும்.
உடல்நலனுக்கு மட்டுமல்ல, மனநலனுக்கும் அதிகாலையில் எழுவது சிறந்தது. எனவே, அதிகாலையில் எழும் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக வழக்கமாக்கிக் கொள்வோம்.
அரசு சட்டத்தின் படி ஆண், பெண் இருவருக்கும் திருமண வயது இருபதுகளின் ஆரம்பத்தில் தான் வரையறுக்கப்பட்டுள்ளது எனிலும், நமது வீடுகளில் தான் காலம், நேரம், ஜாதகம் என பலவன கூடி வர வேண்டும் என தள்ளிப் போட்டுவிடுவார்கள்.
ஆனால், மன ரீதியாகவும் சரி, உடல் ரீதியாகவும், ஆண், பெண் இருவரும் இருபதுகளின் ஆரம்பத்தில் திருமணம் செய்துக் கொள்வது தான் சரியானது. இருபதுகளின் ஆரம்பத்தில் திருமணம் செய்துக் கொள்வதால் கணவன் மனைவியின் தாம்பத்திய உறவில் இருந்து, குழந்தை வளர்ப்பு, பொருளாதாரம் என பல வகைகளில் இல்லறம் சார்ந்த நன்மைகளை பெற முடியும்.
குழந்தைகள் பெற்றுக்கொள்ள சிறிது நேரம் எடுத்துக் கொள்ளலாம். அதுவரை ஒருவரை, ஒருவர் மிகுதியான காதலால் மூழ்கடித்து வாழ்க்கையை மிக சந்தோசமாக அனுபவிக்க நேரம் இருக்கும்.
இருவரும் நல்ல உடல்நலத்துடன் இருப்பீர்கள். இதனால், உங்களது இல்லற வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில், தற்போதைய காலநிலையில் நாற்பதை தொடும் முன்னரே நோய்கள் நம்மை தொட்டுவிடுகிறது.
இருபதுகளின் ஆரம்பத்திலேயே திருமணம் செய்துக் கொள்வதால், வாழ்க்கையை பற்றிய திட்டமிடுதலுக்கு மிகுதியான நேரம் கிடைக்கும்.
குழந்தை வளர்ப்பதில் எந்த சிரமும் இருக்காது. இருபதின் கடைசி அல்லது முப்பதுகளில் குழந்தை எனது பெண்களுக்கு சற்று சிரமமான காரியம்.
ஆகவே, இருபதுகளின் ஆரம்பத்தில் திருமணம் செய்துக் கொள்வது தான் சிறந்தது.
வாழ்க்கையின் கடைசி நாட்களை நீங்கள் மகிழ்ச்சியுடன் சேர்ந்து ஆரோக்கியமாகவும் கழிக்க இது பயனளிக்கும்.
ஏனெனில், இதன் மூலம் நீங்கள் ஐம்பதுகளில் தெம்பாக வேலைக்கு சென்று கொண்டிருக்கும் போதே உங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்து பேரன், பேத்தியுடன் கொஞ்சி விளையாட முடியும்.
பாரிய அலை காரணமாக தனது தந்தையிடமிருந்து பிரிந்த மகள் 12 வருடங்களின் பின்னர் மீளத் திரும்பியுள்ளார்.
நாட்டில் பல ஆயிரம் உயிர்களைக் காவுகொண்டு, இலங்கையர்கள் அனைவரின் கண்களிலும் கண்ணீரைக் கசிய வைத்தே, 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி நிறைவுற்றது.
தனது தந்தையுடன் ஹம்பாந்தோட்டைக்கு சென்ற ஷரீஃபாவை, இந்த பாரிய அலை பிரித்த சந்தர்ப்பத்தில், அவளுக்கு மூன்று வயதாகும்.
அன்றிலிருந்து ஷரீஃபாவின் பெற்றோர் தமது மகளைத் தேடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட போதிலும், அவை பயனளிக்கவில்லை.
சுனாமியின் போது நிர்க்கதிக்குள்ளான சிறுமியொருவரின் நிழற்படங்கள் இணையத்தளத்தில் பரிமாற்றப்பட்டமை இந்த பெற்றோரின் விதியை மாற்றியமைத்தது.
காணாமற்போன ஷரீஃபாவின் உருவத்தை ஒத்த குறித்த நிழற்படங்கள் தொடர்பில் உறவினர் ஒருவர் வழங்கிய தகவல்கள், ஷரீஃபாவின் தந்தைக்கு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
அம்பாறை – கல்முனை பிரதேசத்தில் வசிக்கும், குறித்த நிழற்படத்தில் இருந்த சிறுமியை தேடிச்சென்ற ஷரீஃபாவின் பெற்றோர், உருவம் மற்றும் உடலில் காணப்படும் அடையாளங்களின் ஊடாக, இது தமது மகள் என்பதை இனங்கண்டனர்.
எனினும், தமது மகளைப் பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றத்தை நாடிய ஷரீஃபாவின் பெற்றோருக்கு இறுதியில் அந்த அதிர்ஷ்ட நாள் நேற்று கிட்டியது. அவர்களின் செல்ல மகளின் உரிமை சட்டத்தின் முன் உறுதி செய்யப்பட்டது.
புதிய உருவத்துடன் தனது பழைய வாழ்க்கையைத் தேடும் ஷரீஃபா, தனது உறவினர்கள் பலரை நேற்று அடையாளங்கண்டு கொண்டார்.
இதேவேளை, இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமற்போன 10 மாதங்களேயான ரில்வானை, கோட்டை பொலிஸார் மீண்டும் இன்று தாயிடம் ஒப்படைத்தனர்.
கோட்டை ரயில் நிலையத்தில் தாயொருவர் தனது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 2 ஆம் திகதி தனது பிள்ளையுடன் அந்தத் தாய் காலி முகத்திடலுக்கு சென்றிருந்ததுடன், தாய் மலசலக்கூடத்திற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் பிள்ளை கடத்தப்பட்டிருந்தது.
தாய் வழங்கிய தகவலின் அடிப்படையில் செயற்பட்ட பொலிஸார், பிள்ளையைக் கடத்திய நபரை சிலாபத்தில் நேற்று கைது செய்தனர்.
கிருலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டதுடன், அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி – பளை பகுதியில் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்தின் சந்தேக நபரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த மாதம் 30 ஆம் திகதி தம்மை நபர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகத் தெரிவித்து கிளிநொச்சி – பளை பொலிஸ் நிலையத்தில் சிறுமியொருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
கிளிநொச்சி பகுதியி்ல் உள்ள விடுதி ஒன்றில் வைத்து சந்தேக நபர் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சிறுமி தனது முறைப்பாட்டில் தெரிவி்த்துள்ளார்.
நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி, தனிப்பட்ட காரணங்களுக்காக தமது உறவினர் வீடு ஒன்றில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், 22 வயதான நெல்லியடி பகுதியைச் சேர்ந்த ஒருவரே சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பளை பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவிற்கமைய சிறுமி மருத்துவப் பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் குறித்த விடுதியின் முகாமையாளர் மற்றும் உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
அத்துடன், விடுதியின் உரிமையாளரையும் விரைவில் கைது செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.