யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் மீட்க்கப்பட்ட சிசுவை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இளவாலை வடலியடப்பு பகுதி கோயிலுக்கு அருகில் பெட்டி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிறந்து 10 நாட்களேயான சிசு இன்று காலை மீட்க்கப்பட்டது.
இந்த சிசு தெல்லிப்பளை மருத்துவமனைக்குச் கொண்டுச் செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டது.
இந்ந நிலையில் மூன்று அரை கிலோ கிராம் நிறையுடைய குறித்த குழந்தை தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை சிசுவின் தாயை கைது செய்ய இளவாலை பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சிலாபத்தில் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 25 வயதுடைய யுவதியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் மூலம் ஜப்பானில் தொழில் புரிகின்ற இளைஞர் ஒருவருடன் மூன்று மாதங்கள் காதல் தொடர்பு வைத்துள்ளதாக அறியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த இளைஞரின் தாயாருக்கு விருப்பம் இல்லை என்பது, காதலி யுவதிக்கு தெரியவந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நடிகை சுவாதி சுப்ரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தில் இடம்பெற்ற கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். சுவாதிக்கு 29 வயது ஆகிறது. இதைத் தொடர்ந்து அவருக்கு திருமணத்தை நடத்த பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்தனர். தொழில் அதிபர்கள், டாக்டர்கள், என்ஜினீயர்கள் என்று பல வரன்களை பார்த்து தற்போது பொருத்தமான மாப்பிள்ளையை தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வருடம் இறுதியில் சுவாதி திருமணத்தை நடத்த திட்டமிட்டு உள்ளதாக தெலுங்கு பட உலகில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை சுஷ்மாராஜ் பெங்களூருவை சேர்ந்தவர். இவர் இந்தியா பாகிஸ்தான் படத்தில் விஜய்ஆண்டனி ஜோடியாக நடித்தார். திரிஷாவுடன் நாயகி படத்திலும் நடித்து உள்ளார். தற்போது ஜிந்தா என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
சுஷ்மாராஜ் தனது நீண்ட கால ஆண் நண்பர் ஒருவர் மீது காதல் வயப்பட்டார். அவரை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளார். இவர்கள் நிச்சயதார்த்தம் சமீபத்தில் ரகசியமாக நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இலங்கையில் 2009ம் ஆண்டு நடந்த போரின் போது தமிழர்கள் பலர் இராணுவத்திடம் தஞ்சம் அடைந்தனர். தஞ்சம் அடைந்தவர்களில் 104 பேர் மர்மமான முறையில் இறந்தனர். இதுகுறித்து சர்வதேச அளவில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை நேற்று காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு அமைப்பின் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இலங்கை தூதரகத்துக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டு அருகே இருந்த மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இம் மாதம் 29ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் இம்முறை மூன்று கட்டங்களாக இடம்பெறவுள்ளது.
இதன்படி முதற்கட்டப் பணிகள் ஆகஸ்ட் 29ம் திகதி முதல் செப்டம்பர் 11ம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளன.
ரஜினியின் நடிப்பில் கடந்த மாதம் 22ம் திகதி உலகமெங்கும் வெளியாகிய கபாலி திரைப்படம் திரையிடப்பட்ட அன்றே 113 கோடி ரூபாய் (இந்திய ரூபாய்) வசூல் செய்தது.
இந்த சாதனையை இந்தியாவில் வேறெந்த படமும் செய்யவில்லை எனக் கூறும் இரசிகர்கள் கபாலி பட இமாலய வசூல் சாதனையை கொண்டாடும் வகையிலும் இந்த சாதனையால் ரஜினிக்கு ஏற்பட்டுள்ள கண் திருஷ்டியை போக்கும் வகையில் திருச்சி மாவட்ட ரஜினி இரசிகர் மன்ற தலைவர் கர்ணா தலைமையில் ராயல் ராஜ், ஆபூர்வா மணி, நீ வாளகர் சங்கர், பாஸ்கர் ஆகியோர் திருச்சி தென்னூர் உக்கிர காளியம்மன் கோவிலில் இன்று ஆட்டு கிடாக்களை பலியிட்டு சிறப்பு பூஜை செய்தனர். இதில் திரளான ரஜினி இரசிகர்கள் பங்கேற்றனர்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுயில் ரயிலில் மோதுண்டு 250 பேர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் அதிகமானோர் தற்கொலை செய்துக் கொண்டவர்கள் என ரயில்வே பாதுகாப்பு அத்தியட்சகர் அநுர பிரேமரத்தன தெரிவித்தார்.
மேலும் சமிஞ்சை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள ரயில் கடவைப் பகுதிகளிலும் அதிகமான விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் ரயில் விபத்துக்களை தடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே பாதுகாப்பு அத்தியட்சகர் அநுர பிரேமரத்தன குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் – இளவாளை – வடலியடப்பு பகுதியில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
பிறந்து 10 நாட்களேயான குறித்த ஆண் குழந்தை பெட்டி ஒன்றில் இடப்பட்டு, வடலியடப்பு பகுதி கோயிலுக்கு அருகில் கிடத்தப்பட்டிருந்த நிலையில், பொது மக்கள் அதனை மீட்டு, இளவாழை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் அந்த சிசு தௌ்ளிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டு, தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை இளவாளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அம்பாள் உற்சவத்தின் பத்தாம் நாளான நேற்று முன்தினம் (05.08.2016) அதிகாலைமுதல்சிவஸ்ரீ.சதா.சங்கரதாஸ்சிவாச்சாரியார் தலைமையில் அபிசேகங்கள் மூலஸ்தான பூசை, யாகபூசை,கொடிதம்ப பூசையை சுண்ணம் இடித்தல் சடங்கினை தொடர்ந்து காலை எட்டுமணியளவில் வசந்தமண்டப பூசை இடம்பெற்றது.
தொடர்ந்து ஒன்பது மணியளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் அமிர்தவர்சினி தீர்த்த கரையில் எழுந்தருளி தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
தொடர்ந்து தீர்த்த உற்சவம் நிறைவடைந்த பின்னர் மதியம் ஒருமணியளவில் ஆடிபூர உற்சவமும் ருதுசாந்தி பெருவிழாவும் வெகு சிறப்பாக இடம்பெற்றன .
பாகிஸ்தானில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக கூறி சுமார் 700க்கும் அதிகமான தெரு நாய்களை அரசு அதிகாரிகள் விஷம் கொடுத்து கொன்றுள்ளது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகராட்சி நிர்வாகம் தான் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
கராச்சி முழுவதும் ஆயிரக்கணக்கான தெரு நாய்கள் வலம் வருவதால், அவற்றால் பொதுமக்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படுவதாக புகார்கள் சென்றுள்ளன.
பொதுமக்களின் புகார்களை பெற்ற நகராட்சி அதிகாரிகள் தெரு நாய்கள் முழுவதையும் கொன்றுவிட உத்தரவிட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்கள் மட்டும் கராச்சி நகரில் சுற்றி திரிந்த ஆயிரக்கணக்கான தெரு நாய்களை விஷம் கொடுத்து அரசு ஊழியர்கள் கொன்றுள்ளனர்.
கோழி இறைச்சியில் விஷ மாத்திரைகளை மறைத்து அவற்றை நாய்களுக்கு கொடுத்து கொன்றுள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்ட நாய்களின் சடலங்கள் தற்போது கராச்சி வீதிகளில் குவிக்கப்பட்டுள்ளன.
இந்த சடலங்களை தற்போது துப்புறவு ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.
கராச்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களின் கண்டனத்திற்கு நகராட்சி அதிகாரியான Sattar Javed என்பவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘வீதிகளில் செல்லும் பொதுமக்களை தெரு நாய்கள் கடித்துக் குதறுகின்றது. இதனால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.
எனவே, பொதுமக்களின் நலனிற்காக தெரு நாய்களை கொல்வதை தவிற வேறு வழியில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் தற்போது தொடர் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறார் சசிகலா புஷ்பா எம்.பி.
முன்னதாக வட்ஸ் அப்பில் வெளியான இவரின் மதுபோதை ஓடியோ முதல் திமுக பாராளுமன்ற உறுப்பினர் திருச்ச சிவாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வரை ஏகப்பட்ட சர்ச்சைகளால் பிரபலமானார்.
இதைதொடர்ந்து, சமீபத்தில் டெல்லியில் திருச்சி சிவா கன்னத்தில் அறைந்தது, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது, ஜெயலலிதா தன்னை அறைந்து பதவியை ராஜினாமா செய்ய சொல்லி மிரட்டினார் என பாராளுமன்றத்தில் கூறியது என தமிழக அரசியலை தேசிய அளவு கவனத்திற்கு கொண்டு சென்றார்.
தற்போது, சசிகலா புஷ்பா, அதிமுக நிர்வாகி பிலால் என்பருடன் நெருக்கமாக இருப்பது உட்பட பல சர்ச்சைக்குள்ளான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
மேலும் பல பரபரப்பு தகவல்களும் வெளியாகியுள்ளது, அதில், அதிமுக தலைமைக் கழக நிர்வாகி பிலாலுக்கும், சசிகலா புஷ்பாவுக்கும் திருமணம் நடைபெற்றது.
திருச்சி சிவா, சசிகலா புஷ்பா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை, பிலால், சசிகலாவின் நண்பர் மூலம் பெற்று வெளியிட்டார் எனவும், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவின் ஆலோசனைப்படிதான் பாராளுமன்றத்தில் ஜெயலலிதா தம்மை அடித்ததாக சசிகலா புஷ்பா புகார் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பல்வேறு மதுபான விடுதிகளில் மது விநியோகம் செய்யவும், நடனமாடவும் சிறுமிகளை உட்படுத்துவது தெரியவந்துள்ளது.
போதை தலைக்கேறிய ஆசாமிகள் சிறுமிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் கொடூரமும் அரங்கேறி வருகிறது.
“கண்கவர் நடனம், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்”, மதுப்பிரியர்களை தன்வசம் ஈர்ப்பதற்காக சென்னையில் உள்ள மதுபான விடுதிகள் அறிமுகப்படுத்தியுள்ள யுக்தி இது.
மதுபான விடுதிகளில் நடனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், பொலிசாரின் ஒத்துழைப்புடன் இதுபோன்ற தவறுகள் நடந்து வருகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னையில் எந்தெந்த இடங்களில் உள்ள மதுபான விடுதிகளில் இதுபோன்ற தவறுகள் நடைபெறுகின்றன என்பதையும் அவர்கள் பட்டியலிட தவறவில்லை.
வட இந்தியாவில் உள்ள பழக்கத்தை சென்னையில் பின்பற்றி வருவதாகவும், 16 வயதுக்கு கீழே உள்ள சிறுமிகளை தான் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது, இந்த பழக்கவழக்கத்தால் அச்சிறுமிகள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் கலாசாரமும் பாதிக்கப்படுகிறது என குற்றம்சாட்டியுள்ளனர்.
மதுபான விடுதியில் பணியாற்றிய பெண்ணை, அங்கு சென்ற வாடிக்கையாளர் ஹமீத் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் மயக்கமடைந்த அப்பெண் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இக்குற்றத்திற்காக அந்த வாடிக்கையாளரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆனால் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது, அவையெல்லாம் மூடி மறைக்கப்படுகின்றன என குழந்தைகள் நல ஆர்வலர் சேவியர் கூறியுள்ளார்.
கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடி செய்பவர்களின் பெயர்களை, தடை செய்யப்பட்டோர் பட்டியலில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் தடை செய்யப்பட்ட உபகரணங்களை பரீ்ட்சை நிலையத்திற்கு கொண்டு செல்லும் மாணவர்களுக்கு 5 வருட பரீட்சை தடைகளும் விதிக்கப்படவுள்ளதாக பரீ்ட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டாம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சையில் இதுவரை 40 முறைப்பாடுகள் இடம்பெற்றுள்ளமை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பரீ்ட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
இந்த முறைப்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா வந்த சவுதி அரேபியா நாட்டு இளவரசியின் கைக்கடிகாரத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர். இதுதொடர்பாக, அந்நாட்டு ஊடகங்களின் வெளியான செய்திகளின்படி,
பாரிஸ் நகரின் மத்திய பகுதியில் தன்னை வழிமறித்த ஆயுதமேந்திய மர்ம நபர்கள் சுமார் 11 லட்சம் டொலர் (இலங்கை மதிப்புக்கு சுமார் 160 கோடி ரூபாய்) மதிப்புள்ள கைக்கடிகாரத்தை பறித்துச் சென்றதாக சவுதி நாட்டு இளவரசி பொலிசில் புகார் அளித்துள்ளதாகவும், இதுதொடர்பாக, பொலிசார் விசாரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இயக்குனர் விஜய்யுடன் சமரசமாக விவகாரத்து செய்துதரக் கோரி அமலாபால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இயக்குநர் விஜய் – நடிகை அமலாபால் இருவரும் கடந்த 2014ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார்கள். 2 ஆண்டுகள் ஆன நிலையில், சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
அமலா பால் திருமணத்துக்குப் பின்னர் தொடர்ந்து சினிமாவில் நடித்துவருவதால் இதுவிஷயமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
அமலாபாலை விவகாரத்து செய்வது குறித்து இயக்குனர் விஜயும், அவரது தந்தை ஏ.எல்.அழகப்பனும் உறுதியாகக் கூறியிருந்தார்கள். இந்நிலையில், அமலாபால் இன்று சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் இயக்குனர் விஜய்யுடன் சமரச விவாகரத்து செய்துதரக் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நீதிபதி தீபிகா முன்னிலையில் விவாகரத்து செய்யப்போவதற்கான விருப்ப மனுவை நேரில் அளித்தார்
இவர்களது மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதன் பின்னர், இவர்களது விவகாரத்து குறித்த விடயங்கள் நீதிமன்றம் வாயிலாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், இயக்குனர் விஜய்-அமலாபால் விவகாரத்து செய்யப்போகும் செய்தி நீதிமன்றம் வரை சென்றிருப்பது கொலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா ஒமந்தையில் சிவில் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று (06.08.2016) காலை 10.30 மணியளவில் ஒமந்தை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் வன்னி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன், புளியங்குளம் உதவிபொலிஸ் அத்தியட்சகர் வெல்கம, ஒமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் குமார ஆரியதாச, ஒமந்தை பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஒமந்தை சிவில் பாதுகாப்புக்குழு அங்கத்தவர்கள், கிராம சேவையாளர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன் போது பிரதி பொலிஸ்மாஅதிபர், புளியங்குளம் உதவி பொலிஸ் அத்தியட்சகர், ஒமந்தை பொலிஸ் பொறுப்பதிகாரிஅவர்களுக்கு மக்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
இந் நிகழ்வில் உரையாற்றிய வன்னி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்,
சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதையும் அவ்வாறு வேலைக்கு அமர்த்துவர்களுக்கு கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.