வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் அங்கம் வகிக்கும் வவுனியா பிரதேச சம்மேளன கழகங்களின் ஒத்துழைப்புடன் மாபெரும் கலாசார மற்றும் புதுவருட விளையாட்டு விழா இளைஞர் கழக மாவட்ட சம்மேளன முன்னாள் தலைவர் திரு ரி.அமுதராஜ் தலைமையில் நேற்றையதினம் (07.05.2016) சிதம்பரபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
இவ் நிகழ்வின் இறுதி நிகழ்வான பரிசளிப்பு நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சுந்தரலிங்கம் காண்டீபன் அதிதியாக கலந்து நிகழ்வினை சிறப்பித்தார்.
நிகழ்வில் கருத்து தெரிவித்த தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன், எமது பிரதேச இளைஞர்களின் ஆக்கமும் ஊக்கமும் தான் இன்றைய கலாசார நிகழ்வின் வெற்றியின் திறவுகோல். இளைஞர்களின் மூலமே சிறந்த சமூதாய கட்டமைப்பை நாங்கள் எமது கிராமங்களில் தோற்றுவித்து வளமான எதிர்காலத்தினை நாம் உருவாக்க என்றும் முயற்சி உள்ளவர்களாக திகழ வேண்டும். அத்துடன் தமிழ் தேசிய இளைஞர் கழகம் தனது உயரிய சிந்தனையுடன் தொடர்ந்தும் இளைஞர்களின் முன்னேற்ற பாதைக்கு உறுதுணையாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
வாடிக்கையாளர்களின் வியர்வைக்கு ரிவார்ட் புள்ளிகள் மூலம் பணம் கொடுக்கும் வகையில் புதிய மொபைல் அப்ளிகேசன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்வெட் காயின் (Sweat coin) என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஃபிட்னெஸ் அப்ளிகேசன், மக்களிடயே உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சோதனை முயற்சியாக பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்வெட் கொயின் அப்ளிகேசன், நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு ஆயிரம் காலடிக்கும் ஒரு பவுண்ட் பணத்தை உங்கள் கணக்கில் சேர்த்துவிடுமாம்.
அதனை நீங்கள் வாங்கும் உடற்பயிற்சி தொடர்பான சாதனங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கப் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது அப்பிள் ஐஸ்டோரில் மட்டுமே கிடைக்கும் இந்த இலவச அப்ளிகேசன், உலகம் முழுவதுமுள்ள அன்ட்ரொய்ட் பயனாளர்களுக்கு விரைவில் கிடைக்கும் என்று நம்பலாம்.
வெளிநாடுகளின் குழுக்கள், உள்ளூர்வாசிகளின் கடன் அட்டைகள் மற்றும் செலவு அட்டைகளின் பணத்தை திருடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பணக்கொடுக்கல் வாங்கல்களில் அட்டைகளை பயன்படுத்துவோர் எச்சரிக்கையாக இருக்குமாறு தன்னியக்க இயந்திரங்களை பயன்படுத்துவோர் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
கண்டியில் உள்ள அரச வங்கி ஒன்றில் இடம்பெற்ற முயற்சியை அடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியில் ஏடிஎம் அட்டைகளுக்கு சமனான மென்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் அட்டையில் பணத்திருட்டு தொடர்பில் ஏற்கனவே இரண்டு சீனப்பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பின் நான்கு வங்கிகளில் மேற்கொள்ளப்பட்ட திருட்டு முயற்சி தொடர்பிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு, இராவண எல்ல பகுதியில் நீராடிக் கொண்டிருந்த 11 வயதான இரு மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மொனராகலை – பின்னகொல பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
பாட்டியின் பாராமரிப்பில் இருந்த இவர்கள் மேலதிக வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு இராவண எல்ல பகுதிக்குச் சென்றுள்ளனர்.
அங்கு நீராடிக் கொண்டிருந்த அவர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போது, மேலதிக வகுப்புக்கு செல்ல பஸ்ஸில் ஏறிய போது தூக்கி விட்டதால் எல்ல பகுதிக்கு வந்ததாக கூறியுள்ளனர்.
மேலும் இவர்கள் வசம் இருந்து 1200 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரது பாட்டியை அழைத்து சிறுவர்கள் இருவரையும் அவரிடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
யாழ். – சுன்னாகம் பகுதியில் ரயிலில் மோதி 18 வயது இளம் யுவதி ஒருவர் நேற்று இரவு 8.00 மணியளவில் உயிரிழந்துள்ளார். சபாபதி வீதிப் பகுதியைச் சேர்ந்த லோரன்ஸ் றெஜின்ரினா என்ற யுவதியே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ரயிலில் மோதி படுகாயமடைந்த அவரை அங்கிருந்த ஊழியர்கள் அம்புலன்ஸ் மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இது குறித்த விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மனித உடலுக்கு தீங்கினை ஏற்படுத்தும் இறக்குமதி செய்யப்பட்ட மீன்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக, பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு – சிலாபம் ஆகிய பகுதிகளில் இவை அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக, அந்த சங்கத்தின் செயலாளர் செனரல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மீன்களின் உடலில் அதிகளவு ஈயம் இருப்பதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும், இவை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாக, பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவற்றைக் கொள்வனவு செய்யும் போது அதிக அவதானத்துடன் இருக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இளைஞன் ஒருவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலை நிறுத்தும்படி கூறிய தாயின் எச்சரிக்கையை தாங்க முடியாத மகள், தனது தாயை கத்தியால் வெட்டிய சம்பவம் ஒன்று பதுளை புறநகர் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
வெட்டுக்காயங்களுக்குள்ளான தாய் பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் தாயின் நிலை கவலைகிடமாக இல்லை என்றும் சத்திரசிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேற்படி சம்பவம் தொடர்பாக பதுளை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட புகாரையடுத்து குறிப்பிட்ட யுவதியை கைதுசெய்ய முயன்ற போதிலும் குறித்த யுவதி பிரதேசத்தினை விட்டு தலைமறைவாகியுள்ளார்.
குறித்த யுவதியை கைதுசெய்ய பதுளை பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மகளின் கள்ளக்காதல் குடும்பத்துக்கு ஏற்றதல்ல இதனை உடனடியாக நிறுத்திக்கொள்ளும்படி தாய் மகளை கடுமையாக எச்சரித்ததன் விளைவாகவே ஆத்திரம் கொண்ட மகள் சமையலறையில் இருந்த கத்தியொன்றை எடுத்து தனது தாயை வெட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா, செட்டிகுளம் கல்லாறு பகுதியில் வேகக்கட்டுபாட்டையிழந்த பஸ் ஒன்று பாலத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 கடற்படையினர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மன்னார், முள்ளிக்குளம் பரண முகாமில் இருந்து விடுமுறையில் சென்ற கடற்படையினரை மதவாச்சி பேருந்து நிலையம் நோக்கி ஏற்றிச்சென்ற இரண்டு பஸ்களில் ஒன்றே அங்கிருந்த தொலைபேசி கம்பத்துடன் மோதுண்டு பள்ளத்தினுள் வீழ்ந்துள்ளது.
குறித்த பேருந்தில் 52 கடற்படையினர் இருந்த போதும், 23 கடற்படையினர் காயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதில் இருவர் படுகாயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பெண்களை விட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் தொப்பை வருகிறது. தொப்பை வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.அதில் பீரும் ஒன்று. ஆண்கள்தான் பீரை அதிகம் குடிப்பார்கள். ஆண்களே உங்கள் தொப்பையைக் குறைக்க பல வழிகள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் ஆண்களின் சில பழக்க வழக்கங்கள் தொப்பை வருவதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. இப்போது ஆண்களுக்கு தொப்பை வருவதற்கான காரணங்களை பார்க்கலாம்.
பீர் குடித்தால் உடல் பருமன் வருகிறது. அதிகமான ஆண்களுக்கு பீர் விருப்பமான பானமாகும். மற்றும் என்னதான் ஆரோக்கியமானதாக இருந்தாலும், இதனை அடிக்கடி குடித்தால் தொப்பை தான் வரும். ஏனென்றால் இதில் கலோரிகள் அதிகம் இருக்கிறது.. நீங்கள் தொப்பையை குறைக்க வேண்டுமா? முதலில் ஆல்கஹால் அதிகம் குடிக்கும் பழக்கத்தை நிறுத்துங்கள்.
ஆண்கள் நாற்காலியில் உட்கார்ந்தவாறே அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள். இதனால் சாப்பிடும் சாப்பாடு சரியாக ஜீரணம் ஆவதில்லை. இது கொழுப்புக்களாக மாறி உடலில் தங்கி உடல்பருமனை உருவாக்குகின்றன.ஆண்களுக்கு தன்னுடைய உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளக் கூட நேரம் கிடைப்பதில்லை. அந்த அளவிற்கு பணிச்சுமை நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு ரெஸ்ட் எடுக்கவே டைம் இல்லாதபோது, உடற்பயிற்சி செய்ய எங்கு நேரம் இருக்கும்?
பணிச்சுமை அதிகமாக இருப்பதால் பல ஆண்கள் மனஅழுத்தத்தினால் துன்புறுகின்றனர். மன அழுத்தம் அதிகமானால் உடலில் ஹார்மோன்களில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகிறது. பழக்க வழக்கங்களில் மாற்றம் உண்டாகின்றது. இதுவே உடல்பருமனுக்கு அதாவது தொப்பைக்கு வழி வகுக்கிறது.
அடிக்கடி பெண்கள் மட்டும்தான் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுகிறார்கள் என்று நினைக்க வேண்டாம். ஆண்கள் கூட இரகசியமாக நொறுக்குத் தீனியை சாப்பிடுகிறார்கள். இதனால் தான் ஆண்களுக்கு தொப்பை வருகிறது.ஆண்கள்தான் டி.வி. பார்க்கும் பொழுது எதையாவது வாயில் போட்டு மென்று கொண்டே இருப்பார்கள். அதுவும் குறிப்பாக விடுமுறை நாட்களில் வீட்டில் இருந்தால் போதும் டி.வி. பார்த்துக் கொண்டே வடை, போண்டா, சிப்ஸ் என்று சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.
பொதுவாக ஆண்கள்தான் நண்பர்களுடன் பார்ட்டிகளில் அதிகம் கலந்து கொள்வார்கள். மேலும் பார்ட்டி என்றாலே அன்றைக்கு அதிகமாக குடிப்பதோடு மட்டுமில்லாமல், அசைவ உணவுகளை வயிறு முட்ட சாப்பிடுகிறார்கள். இப்படி வாரம் ஒரு முறை பார்ட்டியில் கலந்து கொள்கிறார்கள்.
தங்கச் சட்டை மனிதர் என்று அழைக்கப்படும் மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற தொழில் அதிபரும் அரசியல்வாதியுமான பங்கஜ் பராக் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.சுமார் 98,35,099 ரூபா செலவில் உலகின் மிக விலையுயர்ந்த தங்கச் சட்டை அணிந்தவர் என்று அவருக்கு கின்னஸ் உலக சாதனை புத்தகம் சார்பில் சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது.
இந்தியாவின் தேசிய வாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 47 வயதான பங்கஜ், நாசிக் மாவட்டம் இயோலா நகர துணை மேயராக பதவி வகித்து வருகிறார். 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தனது 45 ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு இந்த தங்கச்சட்டையினை அவர் தைத்தார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இது மிகவும் சாதாரணமான விடயம். இவ்வாறு பெரிய அளவில் உலக மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்ததை என்னால் நம்ப முடியவில்லை. மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் மிகவும் சாதாரண மனிதனே நான். ஆனால் தற்போது கின்னஸ் சாதனை வரை என்னை கொண்டு சென்றமையை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
சுமார் 4.10 கிலோகிராமுடைய இந்த தங்க சேர்ட் தற்போது சுமார் 13 மில்லியன் ரூபா பெறுமதியாகும். அத்துடன் இவ்ஆடையுடன் இணைந்ததாக தங்க கடிகாரம், சில தங்க சங்கிலிகள், மோதிரங்கள், தொலைபேசிக்கான கவர், மூக்குக் கண்ணாடி என அனைத்தினையும் உள்ளடக்கி சுமார் 10 கிலோகிராமாக கணக்கிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாசிக் மாவட்டத்திலுள்ள பவ்னா தொழிற்சாலையில் இவ் ஆடை அலங்கரிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டுள்ளதுடன் மும்பையிலுள்ள ஷாந்தி அலங்கார நிலையம் அனுசரணை வழங்கியுள்ளது.
தெறி, 24 என ஒரே நேரத்தில் அடுத்தடுத்த படங்கள் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் உள்ளார். தற்போது அஆ என்ற தெலுங்கு படத்தின் ரிலிசுக்காக காத்திருக்கிறார்.இவர் அடுத்ததாக விசாரணை இயக்குனர் வெற்றிமாறனின் கனவுப்படமான வடசென்னை படத்தின் நடிக்கவுள்ளார்.
சமந்தா சென்னை பொண்ணு தான் என்றாலும் தென் சென்னையை சேர்ந்தவர். ஆனால் இப்படத்தில் வடசென்னை பெண்ணாக நடித்துள்ளார். இங்குள்ள மக்களின் முற்றிலும் வேறாக இருக்கும். இந்த கதாபாத்திரத்துக்காக அங்குள்ள பெண்களுடன் பழகி 10 நாட்கள் பயிற்சி எடுக்கவுள்ளாராம்.
நடிகைகளுக்கு ரசிகர்கள் கடிதம் அனுப்புவது, போன் செய்வது, செல்பி எடுப்பது என ஆசைப்படுவர். அப்படி ஒரு ரசிகரால் அவதிப்பட்டாராம் நடிகை டாப்ஸி.இதுகுறித்து அவர் கூறுகையில், எனது சகோதரியுடன் சேர்ந்து திருமணங்களை நடத்தி கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு இருக்கிறேன். இதனால் எனக்கு பலர் போன் செய்வர்.அதில் ஒருவர் கொல்கத்தாவில் இருந்து போன் செய்திருந்தார். அவர் தன்னுடைய திருமணத்திற்கு சிறப்பு விருந்தினராக என்னை வர வேண்டும் என்று கூறினார், அப்போதே அதை நான் மறுத்துவிட்டேன்.
பின் அவருடைய தொலைபேசி அழைப்பு எதுவும் வரவில்லை.விசாரித்தபோது அந்த நபருக்கு திருமணமே நிச்சயமாகவில்லை என்று தெரிந்தது. அதன்பிறகு வேறு நம்பரில் இருந்து குரலை மாற்றி பேசி, நான் ஒரு தயாரிப்பாளர், உங்களை வைத்து படம் எடுக்க விரும்புகிறேன். டைரக்டரை அனுப்பி கதை சொல்ல வைக்கிறேன் என்றார். அந்த ரசிகரின் போன் தொல்லையால் நிம்மதியில்லாமல் சில நாட்கள் கஷ்டப்பட்டேன் என்றார்.
ஐரோப்பிய சாம்பியன்ஷிப் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)- மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து) அணிகள் இடையிலான அரையிறுதியின் 2வது சுற்று போட்டி மாட்ரிட் நகரில் உள்ள சான்டியாகோ பெர்னபியு அரங்கத்தில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறியது.இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தி 14வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இந்த வெற்றி குறித்து ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ கூறுகையில், இது மிகவும் கடினமான போட்டியாக இருந்தது. ஆனால் ரியல் மாட்ரிட் அந்த அணியை விட சிறப்பாக ஆடியதாக நினைக்கிறேன். நாங்கள் கோலுக்கு ஏற்ற வாய்ப்புகளை அதிகம் உருவாக்கினோம்.எங்களுக்கு கோலுக்கு பிறகு சிட்டி அணி நெருக்கடி கொடுக்கும் என்பது எங்களுக்கு தெரியும். இருப்பினும் அந்த நிலையை சமாளித்து விட்டோம்.
எங்கள் அணி சிறப்பாக இருந்தது. எதை செய்ய வேண்டும் என நினைத்தோமே அதை செய்துவிட்டோம். இப்போது இறுதிப் போட்டியில் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.மேலும், காயம் பற்றி அவர் கூறுகையில், நான் 100 சதவீத உடற்தகுதியுடனே இருந்தேன். அணிக்காக முடிந்ததை செய்தேன். தற்போது நாங்கள் இறுதிப் போட்டியில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
2016 ம் ஆண்டிற்கான வவுனியா வை.எம்.சி.ஏ (YMCA) அமைப்பின் புதிய தலைவராக A.S.பாரதி ஆனந்தம் (JP) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நிர்வாக உறுப்பினர்களாக , உப தலைவராக S.M.J.E.சொலமன், கௌரவ செயலாளராக அருட்சகோதரி புவனா, பொருளாளராக N. சுரேஸ், இயக்குனர் சபை உறுப்பினர்களாக J.B. கிறிஸ்தோபார் (JP)இ, பாஸ்டர். ஜெபதாஸ், திருமதி கிறிஸ்ரி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
புதிய தலைவர் கருத்துத் தெரிவிக்கையில் கடந்தகால வை.எம்.சி.ஏ செயற்பாடுகளை விட இனிவரும் காலங்களில் வை.எம்.சி.ஏ செயற்பாடுகள் அதிகமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
வவுனியா மன்னார் வீதி பட்டாணிச்சூர் பகுதியில் நேற்று(07.05.2016) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் துவிச்சக்கர வண்டியுடன் மோதியதால் இவ் விபத்து ஏற்பட்டது. இவ் விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டி இரண்டையும் செலுத்திவந்த இருவரும் படுகாயமடைந்தனர்.
இவ் விபத்தில் துவிச்சக்கர வண்டி மோட்டார் சைக்கிள் இரண்டும் சேதத்திற்கு உள்ளானது.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.