பகலை விட இரவு சூடாக மாறிவருவதன் மர்மம் என்ன என்பதை நோர்வே விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதமான, குளிர்ச்சியான இரவுகள், கடந்த 50 ஆண்டுகளில் பகலை விட சூடாக மாறிவருகிறது. அதுவும் மிக வேகமாக. இந்த மாற்றத்திற்கான காரணம் தொடர்பாக நோர்வே விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
பூமியை சூழ்ந்திருக்கும் வளிமண்டலம் பல அடுக்குகளை கொண்டது. அதில் பூமியின் மேல்தளத்தை சூழ்ந்திருக்கும் வளிமண்டலமானது பகலில் சில கிலோ மீட்டர் உயரத்திற்கு உள்ளது. ஆனால் இரவு நேரத்தில் இது சில நூறு மீட்டர்களாக சுருங்கிவிடுகிறது.
எனவே இரவு நேரத்தில் வெளியாகும் காபனீரொட்சைட் காரணமாக காற்று வேகமாக வெப்பமடைகின்றது. இது தான் இரவின் வெப்பநிலை வேகமாக உயர்ந்து வருவதற்கான காரணம் என்பதை நோர்வே விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
காபனீரொட்சைட் வெளிப்பாட்டை குறைக்காமல் பூமியின் வெப்பநிலை உயர்வை கட்டுப்படுத்தவோ குறைக்கவோ முடியாது என ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கியின் தலைநகரான அங்காரா நகரில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 34 பேர் உயிரிழந்ததையடுத்து சமூகவலைத் தளங்களான பேஸ்புக், டுவிட்டருக்கு துருக்கி அரசு தடை விதித்துள்ளது.
துருக்கி நாட்டின் தலைநகரான அங்காராவில் குர்தீஸ் தீவிரவாதிகள் கடந்த பெப்ரவரி மாதம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் 28 பேர் உயிர் இழந்தனர்.
இந்தநிலையில், அங்காராவில் நேற்றும் குர்தீஸ் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். பஸ் நிலையம், மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் இருக்கும் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 34 பேர் உயிர் இழந்தனர். 125 பேர் படுகாயம் அடைந்தனர்.
சமீபத்தில் குர்தீஸ் தீவிரவாதிகள் முகாம்கள் மீது துருக்கி போர் விமானங்கள் சரமாரி குண்டுகள் வீசின. இதில் 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் வகையிலேயே இந்த தாக்குதல் நடந்ததாக தெரிகிறது.
இந்த தாக்குதல் தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்கள் மூலமாக திரித்து வெளியிடப்படுவதை தடுக்கும் வகையில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூல வலைத்தளங்களுக்கு அங்காரா நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அமையவுள்ள விவசாய உற்பத்திப்பொருட்கள் விற்பனைக்கான விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கான காணி வழங்கல் தொடர்பான விசேட கூட்டமொன்று இன்று காலை (14.03.2016) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் றோகண புஸ்பகுமார தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வவுனியா A9 வீதிக்கு அருகிலுள்ள மாவட்ட விவசாயப் பண்ணையின் ஒருபகுதி காணி மேற்படி தேவைக்காக ஒதுக்குவதாக முடிவெடுக்கப்பட்டது.
கடந்த வருட இறுதியில் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின்போது வவுனியா மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் விவசாய உற்பத்தி பொருட்களுக்கான சந்தைவாய்ப்பு பிரச்சனை தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியிருந்தநிலையில் வவுனியாவில் விசேட பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த மாதம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மேற்படி தேவைக்கான காணி தொடர்பில் முடிவெதுவும் எடுக்கப்படாத நிலையில் இன்றைய விசேட கூட்டம் அரசாங்க அதிபரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் வர்த்தக வாணிப அமைச்சர் றிசாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் சி.சிவமோகன், காதர் மஸ்தான், மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், இ.இந்திரராசா, ம.தியாகராசா, ஏ.ஜயதிலக, தர்மபால செனவிரத்தின மற்றும் பிரதேச செயலாளர், பிரதிப்பணிப்பாளர்-விவசாய விரிவாக்கம், பிரதிப் பணிப்பாளர் விதை உற்பத்தி, திட்டமிடல் பணிப்பாளர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் சுகாதார ஊழியர்கள், சாரதிகள், மற்றும் சிற்றூழியர்களின் பிள்ளைகள் 35 பேருக்கு ஸ்கொட்லாந்து வாழ் கமலசீலன் அவர்களின் அனுசரணையில் தமிழ் விருட்சத்தால் கற்றல் உபகரணங்கள் நேற்று (13.03.2016) நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய அதிபர் சு.கிருஷ்ணராஜன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ), செயலாளர் மாணிக்கம் ஜெகன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் அகில இலங்கை பொது ஊழிய சங்க தலைவரும் ஏற்பாட்டாளருமான தே.நாகராசா, முன்னாள் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் க.தர்மலிங்கம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் சுகாதாரஊழியர்கள், சாரதிகள், மற்றும் சிற்றூழியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மாற்று சாதியில் காதல் திருமணம் செய்தவரை நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலை கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதான சங்கர். பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
இவருக்கும் பழனியைச் சேர்ந்த கௌசல்யா என்பவருக்கும் காதல் ஏற்பட்டு, கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் உடுமலை சந்தையில் பொருட்கள் வாங்க வந்த சங்கரை, இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அங்கிருந்து தப்பிய கணவன் மனைவியை அந்த கும்பல் துரத்தி துரத்தி வெட்டியதில் படுகாயமடைந்து மயங்கி விழுந்துள்ளனர்.
இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது. படுகாயமடைந்த தம்பதியினரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஆனால் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை கொண்டுவரும் வழியில் சங்கர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
பெண்ணின் உறவினர்களே இந்த கொலையை செய்திருக்க கூடும் என தெரிவித்துள்ள பொலிசார், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
நாம் சாப்பிட்டு முடித்த பிறகு செய்யக்கூடாத சில செயல்களை செய்வதால், உணவு செரிமான பிரச்சனைகள் மற்றும் சில உடல்நல பிரச்சனைகளுக்கு ஆளாகிறோம். எனவே, வயிறு நிரம்ப சாப்பிட்டுவீர்கள் என்றால் நீங்கள் தவிர்க்க வேண்டியவைகள்,
உறங்குவது
வயிறு நிறைய உணவு உட்கொண்ட பின் உறங்குவது என்பது கேடு விளைவிக்கும். எப்படியெனில் உணவை உட்கொண்ட உடனேயே தூங்கி எழுவதனால், உண்ட உணவு செமிபாடு அடையாமல் அப்படியே வயிற்றில் இருக்கும். இப்படி உணவு செரிக்காமல்இருந்தால், அதனால் வயிறு உப்புசத்தை உணரக்கூடும்.
குளியல்
நீங்கள் குளிக்க நினைத்தால், உணவு உண்பதற்கு முன்பே குளித்து விடுங்கள். உணவை உண்ட பின் குளிப்பதால், செரிமான செயல்பாடு தாமதப்படுத்தப்படும். மேலும் வயிற்றைச் சுற்றிக் கொண்டிருக்கும் இரத்தம் செரிமானத்திற்கு உதவாமல், உடலின் இதர பகுதிகளுக்கு பாய ஆரம்பிக்கும்.
பழங்கள் சாப்பிடுவது
பழங்கள் சாப்பிடுவது எப்போதும் உணவு உண்பதற்கு முன் தான் பழங்களை சாப்பிட வேண்டும். அதுவும் 1 மணிநேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும். இப்படி செய்தால் தான் பழங்கள் எளிதில் செரிமானமாகும்.
உணவு உட்கொண்ட உடனேயே பழங்களை உட்கொண்டால், பழங்கள் எளிதில் செரிமானமாகாமல் அப்படியே தங்கிவிடும். எனவே உணவு உண்ட பின் பழங்களை உட்கொள்ள நினைத்தால், உணவு உண்டு 2 மணிநேரம் கழித்து சாப்பிடுங்கள்.
தேனீர் குடிப்பது
சிலர் வயிறு நிறைய உணவு உட்கொண்ட பின், உண்ட உணவு சீக்கிரம் செரிமானமாவதற்கு டீ குடிப்பார்கள். ஆனால் அப்படி டீ குடித்தால், டீயானது செரிமானத்திற்கு இடையூறை ஏற்படுத்தும். மேலும் உணவு உட்கொண்ட பின் டீ குடிப்பதனால், உடல் இரும்புச்சத்தை உறிஞ்சுவதில் இடையூறு ஏற்படும். எனவே இப்பழக்கத்தையும் கைவிடுங்கள்.
மனித முடியை விட 2,000 மடங்கு மிக மெல்லிய லென்ஸை அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
அவுஸ்திரேலியன் நேஷனல் யுனிவர்சிட்டி என்ற பல்கலைகழகத்தை சேர்ந்த Yuerui ‘Larry’ Lu என்ற விஞ்ஞானி தலைமையிலான குழுவே இதனை உருவாக்கியுள்ளனர்.
இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட 50 நானோமீற்றர் என்ற அடர்த்திக்கும் மிகவும் குறைவாக தற்போது 6.3 நானோமீற்றர் என்ற அளவிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், மருத்துவம், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் போன்ற துறைகளில் இதன் பயன்பாடு மிக சிறந்ததாக இருக்கும் எனவும், வளைந்த திரையை கொண்ட கணனிகளில் கூட இதனை பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மடிக்கப்படக்கூடிய திரையை கொண்ட கணனிகள் மற்றும் Prototype TV -களில் ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில், மிக மலியான விலையில் சாதனங்களை உருவாக்க முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவில் கே.எப்.சி சிக்கன் சாப்பிட்ட ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார். இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்தாவில், நேற்று சிக்கன் சாப்பிடும் போட்டி ஒன்றை சிக்கன் உணவகமான கே.எப்.சி என்று அழைக்கப்படும் கெண்டகி பிரைட் சிக்கன் நடத்தியது.
இந்த போட்டியில் பங்கேற்று கே.எப்.சி சிக்கனை அதிகமாக சாப்பிட்ட 3 நபர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த நபர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது, இதையடுத்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 45 வயதான அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கே.எப்.சி சிக்கன் சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் அந்த நிறுவனத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கல்கத்தா நோக்கி செல்லவிருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்று அதிகாலை கல்கத்தா நோக்கி செல்லவிருந்த எம்.ஜீ.331 இலக்க விமானத்திலேயே இவ்வாறு இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் இதில் 150 இற்கும் அதிகமான தமபத்தீவ யாத்திரிகர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக லசித் மலிங்கவும், இந்தப் போட்டியை பார்வையிடுவதற்காக தினேஸ் சந்திமாலின் மனைவியும் குறித்த விமானத்தில் பயணிக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நுகர்வோர் வாரத்தினை முன்னிட்டு இன்று தொடக்கம் பாணின் விலையை நான்கு ரூபாவால் குறைப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய 54 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு இறாத்தல் பாண், இன்று முதல் ஒரு வாரத்திற்கு 50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பையடுத்து பாணின் விலையை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் குறிப்பிட்டுள்ளது.
யாழ். மல்லாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் கத்தியைக் காட்டி மிரட்டி பெறுமதியான நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக தெல்லிப்பளைப் பொலிசார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 12.30 மணியளவிலேயே இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முகங்களை கறுப்புத் துணியால் மூடிய படி கத்திகள், பொல்லுகள் சகிதம் வீட்டுக்குள் நுழைந்த ஐந்து பேர் கொண்ட குழுவொன்று, வீட்டிலிருந்தவர்களை மிரட்டி, அங்கிருந்த 2.18 மில்லியன் ரூபாய் பெறுமதியான 50 பவுண் நகை மற்றும் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில் கணவன், மனைவி மற்றும் 3 பிள்ளைகள் வசித்து வருவதாகவும் கணவன் சம்பவ தினத்தில் கொழும்புக்குச் சென்றிருந்த நிலையிலேயே இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இது தொடர்பில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெல்லிப்பளைப் பொலிசார் தெரிவித்தனர்.
சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர் மன உளைச்சலே இந்த முடிவுக்குக் காரணம் என அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிறகு வெள்ளித்திரையிலும் நடிக்கத் தொடங்கியவர் சாய்பிரசாந்த்.
நேரம், வடகறி என முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடிக்கத் துவங்கிய நிலையில் அவரது தற்கொலை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தனது மனைவி சுஜிதாவின் மீது வைத்திருந்த அதீத காதலும், மனைவியின் பிரிவுமே அவரது தற்கொலைக்குக் காரணமாக இருந்துள்ளது. தற்கொலை செய்துகொண்ட சாய் பிரசாந்த் இரண்டு பக்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில்,
எனது அன்புக்குரிய சுஜிதா சாய் பிரஷாந்துக்கு
“உன் மீது அதீத காதல் வைத்திருந்தேன். பொஸஸிவ் காரணமாக உன்னை நான்கு முறை அடித்தேன். ஆனால் கவலைப் படாதே எனது மரணம் உனக்கு எந்த வகையிலும் இடையூறு அளிக்காது. எனது மரணத்திற்கு கண்டிப்பாக நீ காரணமாக இருக்க முடியாது. ஒரு சத்தியம் மட்டும் செய்கிறேன். உனது 33 சவரன் நகை கண்டிப்பாக திரும்பி வரும்.
எனது காதல் எப்போது உண்மையானது. நான் செல்வதால் தயவு செய்து அழாதே ரக்ஷிதாவும் தான் (மகள்). என் பெற்றோர்கள் கண்டிப்பாக உன்னையும் உனது குடும்பத்தாரையும் கேள்வி கேட்க மாட்டார்கள். உன் சித்தப்பா என் அப்பாவிடம் உபயோகித்த வார்த்தைகளுக்காக மன்னிப்புக் கேட்கும்படி சொல்லவும். நான் மட்டுமே எனது மரணத்திற்குக் காரணம்.
என் பெற்றோர் உனக்கு ஐந்து லட்சம் பணமும், உனது நகையும் கொடுப்பார்கள். எனது மரணத்திற்குப் பிறகாவது தயவு செய்து உனது கோபத்தை விட்டுவிடு. நான் ரக்ஷிதாவுக்கு எப்போதும் ஒரு நல்ல அப்பா . மிஸ் யூ ரக்ஷிதா, சுஜிதா, அம்மா, அப்பா, சுஜி சித்தப்பா, நிரஞ்சனா குடும்பம், ராகுல் மற்றும் ரோகித், சுஜிதா குடும்பம், மற்றும் சரவண குமார்.
ரக்ஷிதாவின் புரிதலுக்கு,
ஒரு கண்டீஷன் யாரும் சண்டையிடவோ அழவோ கூடாது. நான் மட்டுமே எனக்கு பிரச்னை. எல்லோருடனும் இணைப்பில் இருக்கவும். புரிந்துகொள்.
ராடன் மீடியா முக்கியமாக சன் நெட்வொர்க், என் அம்மா (ராதிகா சரத்குமார்) ஆகியோருக்கு நன்றி. மிஸ் யூ லாட் அம்மா, ரக்ஷிதாவுக்கு எனது ஆசீர்வாதங்கள் எப்போதும் உண்டு. லவ் யூ தாமரை டீம், மற்றும் சுகுமார் அண்ணா. நன்றி நிரஞ்சனா குடும்பத்தார்.
“லவ் யூ மேட்லி சுஜிதா சாய் பிரசாந்த் ..உம்மா”
டேக் கேர் எவ்ரிபடி உங்களை எல்லாம் சிரிப்புடன் விட்டுச் செல்கிறேன்.
இலங்கை மின்சார சபையின் அனைத்து உப மின் நிலையங்களிலும் இராணுவத்தினரை பாதுகாப்புக்கு நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக, மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு மாத காலப்பகுதிக்குள் நேற்று மூன்றாவது முறையாகவும் இலங்கை முழுவதும் திடீர் மின்தடை ஏற்பட்டது. இதனையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கலை இலக்கிய துறைசார் செயற்றிடங்களை முன்னெத்துவரும், தமிழ் மாமன்றம், புதிய முயற்சியாக ஆற்றலுக்கும் ஆளுமைக்குமான களம் எனும் தொனிப்பொருளில் முன்னெடுத்த ‘விளை நிலம்’ எனும் நிகழ்வின் முதலாவது களம் நேற்று (13.03.2016) வவுனியா பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் மாலை 3.00 மணிக்கு இடம்பெற்றது.
ஒரு நிமிட மௌன வணக்கத்துடன், ஆரம்பமான நிகழ்வில், தலைமையுரையினை தமிழ் மாமன்றத்தின் தலைவர், திரு.சி.கிருபானந்தகுமாரன் அவர்கள் நிகழ்த்தினார்.
ஆற்றலகளை வளர்தெடுப்பதோடு, சமூக நலன் தொடர்பான விடங்கள் தொடர்பாகவும் சிந்தனையினை ஏற்படுத்தும் நோக்குடனும் ஆரம்பிக்கப்பட இந் நிகழ்வின் முதலாவது நிகழ்வாக ‘போருக்கு பின்னரான தமிழரின் செல்நெறியில் பெரிதும் ஆதிக்கம் செலுத்தும் விடயப்பரப்பு எது’ என்ற ரீதியில் சுழலும் சொற் போர் இடம்பெற்றது.
சுழலும் சொற்போரிற்கு, தமிழ் மாமன்றத்தின் தலைவரும், கால்நடை வைத்தியருமான திரு.சி.கிருபானந்தகுமாரன் அவர்கள் நடுநிலை வகித்து சிறப்பித்தார்.
சுழலும் சொற்போரில், ‘பொருளாதார மீள் எழுச்சி’ என க.அனுஷா அவர்களும், ‘அதிகரித்துவரும் குற்றங்களும் சீர்கேடும்’ என சி.விதுர்சன் அவர்களும், ‘புலம்பெயர்ந்தவர்களின் சிந்தனை மாற்றம்’ என கு.சிரஞ்சீதன் அவர்களும், ‘தமிழ் அரசியல் தலைமைகளின் போக்கு’ என சி.துஷாரன் அவர்களும், ‘சுயநிர்ணயம் மீதான நம்பிக்கையீனம்’ என கி.கிஷாந் அவர்களும் தங்களுடைய வாதங்களை சிறப்பாக முன் வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக நடுவர் அவர்கள், ஒவ்வொரு தலைப்பு தொடர்பாகவும், ஆராய்ந்து, போருக்கு பின்னரான தமிழரின் செல்நெறியில் பெரிதும் ஆதிக்கம் செலுத்தும் விடயப்பரப்பு தமிழ் அரசியல் தலைமைகளின் போக்கு என தனது தீர்ப்பினை வழங்கினார்.
தொடர்ந்து, முதலாவது களத்தினுடைய இரண்டாவது அறுவடையாக, கவியரங்கம் நிகழ்ந்தது. ‘கால ஓட்டத்தில் கரையாத சுவடுகள்’ என்ற பொருள் கொண்டு அமைந்த கவியரங்கினை, தமிழ் மாமன்றத்தின் மேற்சபை உறுப்பினர், வைத்திய கலாநிதி திரு.செ.மதுரகன் அவர்கள் தலைமையேற்று வழி நடத்தினார்.
கவியரங்கில், ‘ஏழ்மையின் கல்வி’ என ஜெ.கோபிநாத் அவர்களும், ‘வீரர்தம் விழுப்புண்’ என த. மோகனரங்கன் அவர்களும், ‘இணையத்தில் எழுத்துக்கள்’ என ச.கஜன் அவர்களும், ‘கவிஞனின் வார்த்தைகள்’ என வே.முல்லைதீபன் அவர்களும் கவிபுனைந்து சபையை கவி மழையில் குளிர்வித்தனர்.
தொடர்ந்து, தமிழ் மாமன்ற இணைச்செயலாளர் செல்வி. ஜெசிதா ஆனந்தமூர்த்தி அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.
தமிழ் மாமன்ற உறுப்பினர்கள், வவுனியாவை சேர்ந்த கலைஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கலை இலக்கிய துறைசார் ஆர்வலர்கள் என பலதரப்பட்ட பலரும் அவையை நிறைந்திருத்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பிக்கப்பட்டு, சரியான முறையில் நிகழ்வுகள் நடத்தப்பட்டமை சிறப்பம்சமாகும்.
தொடச்சியாக விளை நிலம், பாடசாலை மாணவர்களையும், கலைஞர்களையும் உள்ளடக்கி, அடுத்த அடுத்த களங்களை காத்திரமான நிகழ்வுகளோடு அரங்கேற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பல பகுதிகளில் இடைக்கிடையே மின் விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்தி செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளதால் போதியளவு மின்சாரத்தை விநியோகிக்க முடியாதுள்ளமையே இதற்கு காரணம் மின்சார சபையின் தலைவர் அனுர விஜேபால கூறியுள்ளார்.
இந்நிலையில், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை நுகர்வோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர் மன உளைச்சலே இந்த முடிக்கு காரணம் என அவர் கடிதமும் எழுதி வைத்துள்ளார்.
தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிறகு வெள்ளித்திரையிலும் நடிக்க தொடங்கியவர் சாய்பிரசாந்த். இவர், முன்தினம் பார்த்தேனே, வடகறி, நேரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர், தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.
இவரது பெற்றோர்கள் பெங்களூரில் உள்ளனர். சாய்பிரசாந்த், சென்னை வளசரவாக்கத்தில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை அவர் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவரது நண்பர்கள் மற்றும் பொலிசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சாய்பிரசாந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாய்பிரசாந்த் வீட்டில் இருந்து பொலிசார் ஒரு கடிதத்தை கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தை அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில், தன்னுடைய வாழ்வில் தொடர்ந்து வரும் தீராத மனவுலைச்சலே தனது தற்கொலைக்கு காரணமென எழுதி வைத்துள்ளார். அவரது தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தாகிய சாய் பிரசாந்த், நிரஞ்சனா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.