வெவ்வேறு ஆண்கள் மூலம் ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளை பெற்ற தாய்!!

Baby

வியட்நாமில் வெவ்வேறு ஆண்கள் மூலம் ஒரு பெண்ணிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரு வருடங்களுக்கு முன் வியட்நாமில் உள்ள ஹனோய் நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

பிறப்பில் அவர்கள் இரட்டையர்களாக இருந்தாலும் இருவரின் உடல் மற்றும் தோற்ற அமைப்புகள் மிகுந்த வேறபாடுகளுடன் காணப்பட்டதால் சந்தேகமடைந்த தந்தை பிரசவத்தின் போது குழந்தைகள் மாற்றப்பட்டு விட்டதாக நினைத்தார்.

அதனால், டி.என்.ஏ பரிசோதனைக்கு செய்த வேளை அதன் முடிவில் அந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டும் அவருக்கு பிறந்தது என்றும் மற்றொரு குழந்தை வேறு ஒரு ஆணுக்கு பிறந்தது என்பது உறுதி செய்யப்பட்டது.

அந்த இரட்டை குழந்தைகளின் தாயார் தனது கணவருடனும், மற்றொரு நபருடனும் உடலுறவு கொண்டிருந்தமையால் இந்த இருவரின் உயிரணுக்களும் அந்த பெண்ணின் 2 வேறு கருமுட்டைகளுடன் கலந்து கரு உருவாகி வளர்ந்துள்ளது.

பிரசவத்தின் போது இந்த குழந்தைகள் ஒரு சில மணி நேர இடைவெளியில் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்பு உலகில் மிக அதிசயமாக நடைபெறக் கூடியது என்று மருத்துவ நிபுணர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் வெயில் : இதுதான் காரணம்!!

Nasa

தற்போது கோடைகாலம் தொடங்கி விட்டது. இதனால் வெயில் கொளுத்தி வருகிறது. இது குறித்து அமெரிக்காவின் நாசாவின் விண்வெளி ஆய்வு கல்வி நிறுவனமான கட்டார்டு இன்ஸ்டியூட்டின் இயக்குனர் கவின் ஸ்மிட் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், கடந்த 100 ஆண்டுகளை ஒப்பிடும் போது உலகில் பெப்ரவரி மாதத்தில்தான் கடும் வெயில் கொளுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் வழக்கத்தைவிட 1.14 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதலாக இருந்தது.

ஆனால் பெப்ரவரி மாதத்திலும் அது 1.35 டிகிரி செல்சியசாக அதிக அளவு அதிகரித்து இருந்தது என தெரிவித்துள்ளார். இது கடந்த 100 ஆண்டுகளில் ஒப்பிடும் போது மிக அதிக அளவு என கணக்கிடப்பட்டுள்ளது.

அது மனிதர்களால் வெளியான அசுத்த வாயுக்களால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு புவியில் வெப்பம் அதிகரித்ததாகவும் கருதப்படுகிறது.

மின்வெட்டு 4 வலயங்களாக பிரிக்கப்பட்டு அமுல்படுத்தப்படும் : அட்டவணை இணைப்பு!!

Power cut

நான்கு வலய பிரிவுகளின் படி இலங்கையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய, அங்கு சென்றிருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி,

பிரிவு A காலை 07.00 – 12.30 மற்றும் மாலை 06.00 – 08.00

B – காலை 07.00 – 12.30 மற்றும் மாலை 06.00 – 08.00

C – பகல் 12.30 – 06.00 மற்றும் இரவு 08.00 – 10.00

D – பகல் 12.30 – 06.00 மற்றும் இரவு 08.00 – 10.00

ஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் : அவசியம் படிங்கள்!!

danger-for-headphone

ஹெட்போன்களில் இருந்து நேரடியாக காதுகளுக்குள் செலுத்தப்படும் 90 டெசிபல் ஒலியானது, காது கேட்பதில் சிக்கல் தொடங்கி காது கேளாமை பிரச்சனை வரை ஏற்படுத்தும்.

ஒருவர் 5 நிமிடங்களுக்கு விடாது 100 டெசிபல் ஒலியை கேட்கிறார் என்றார் அவருக்கு காது கேட்காமல் போக வாய்ப்பு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஹெட்போன்தனை நீங்கள் மட்டுமே பயன்படுத்தமாட்டீர்கள் அல்லது பிறர் ஹெட்போன்களை சகஜமாக பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர் நீங்கள் என்றால் உங்களுக்கு எளிதில் காது சார்ந்த தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

மிகவும் அடைப்பான ஹெட்செட்கள் உங்களுக்கு மிகவும் அருமையான இசை அனுபவத்தை தரும் அதே நேரம் உங்கள் காதுகளுக்குள் காற்றை அனுப்ப மறுக்கிறது. அது காதிரைச்சல், காது தொற்று மற்றும் காது கேளாமை போன்ற பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.

பெரும்பாலான நேரம் ஹெட்போன் பயன்படுத்திக்கொண்டே இருக்கும் நபர்களுக்கு காதுகள் மிக விரைவில் உணர்ச்சி இல்லாத நிலையை அடையும் என்றும், அதிலிருந்து மீண்டு வர நேரம் பிடிக்கும் என்றும் கூறுகிறது சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று.

உட்புற காது மூளையோடு நேரடியாக இணைப்பில் உள்ளதால் ஹெட்போன்களில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைகள் மூளையை மிகவும் பாதிப்படைய வைக்கும். இதனால் மூளை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஹெட்போன்களால் ஏற்படும் விபத்துகள். இந்த விளைவு பற்றிய விளக்கமே தேவையில்லை பெரும்பாலான சாலை விபத்துகள் ஏற்பட பிரதான காரணமாய் இருப்பது ஹெட்போன்கள் தான்.

மிகச்சிறிய ஹெட்போன்களை, அதாவது நேரடியாக காதுகளின் ஓட்டைக்குள் செல்லும் அளவில் உள்ள ஹெட்போன்களை தவிரிக்க வேண்டும். காதுகளுக்கு வெளியே இருக்கும்படியான பெரிய ஹெட்போன்களை பயன்படுத்துவது நல்லது.

முடிந்தவரை உங்கள் ஹெட்செட்களின் ஸ்பொஞ் கவர்/ ரப்பர் கவர்களை மாதத்திற்கு ஒருமுறை மாற்றுவது மிகவும் நல்லது. உங்கள் ஹெட்போன்களில் ஸ்பொஞ் கவர் அல்லது ரப்பர் கவர் இல்லையெனில் ஹெட்செட்தனை அடிக்கடி சுத்தம் செய்யும் பழக்கத்தை கையாளுங்கள்.

நடக்கும் போது, பிற வாகன பயணத்தின் போதும் ஹெட்செட்களை தவிர்த்திடுங்கள், இல்லையெனில் குறைந்த அளவிலான ஒலியை கையாளுங்கள்.

வடக்கு கிழக்கில் மோசடியான வியாபாரங்கள் இடம்பெறுகின்றன : வவுனியாவில் அமைச்சர் ப.சத்தியலிங்கம்!!

P1190804

வடக்கு கிழக்கில் மோசடியான வியாபாரங்கள் இடம்பெறுகின்றது என்று வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

கிடைக்கின்ற அத்தியாவசியப் பொருட்களாயினும் மக்களுக்கு நியாயமான முறையிலே கிடைக்கப்பெற வேண்டும். எமது வடக்கு கிழக்கிலே நுகர்வேர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புனர்வு அற்ற நிலையிலே அல்லது உறைநிலையிலே மக்கள் காணப்படுவதோடு இங்கே பல மோசடியான வியாபாரங்கள் நடைபெறுவதை காணக்கூடியதாக உள்ளது.

அந்த வகையிலே நுகர்வோர் அதிகார சபை இம்மாகாகாண மக்களுக்கு நுகர்வோர்களுக்குரிய உரிமைகளை நினைவுபடுத்தி அந்த உரிமைகளை தமது வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை நுகர்வோர் பதுகாப்பு சபைக்குள்ளது.

இன்று (15.03.2015) வவுனியா காமினி மகாவித்தியாலய மைதானத்தில் நுகர்வோர் உரிமைகள் தினத்தினை முன்னிட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வர்த்தக வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான , ரிப்கான் பதியுதீன், தர்மபால செனவிரத்தின, ஜெயதிலக்க, வவுனியா மாவட்ட செயலாளர் றோகன புஷ்பகுமார, பிரதேச செயலாளர் கா.உதயாஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

10 1929632_2016499881909478_5347347002932893547_n10377288_2016500868576046_6057128808603370247_n    P1190874P1190787 P1190790 P1190792 P1190794 P1190804 P1190807 P1190815 1211P1190818 P1190819 P1190821 P1190823 P1190829 P1190831 P1190842 P1190844 P1190858 P1190861 P1190864 P1190866 P1190867 P1190871

வவுனியாவில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம்!!(படங்கள்)

 
வவுனியாவில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் இன்று (15.03.2016) வர்த்தக வாணிபத்துறை அமைச்சின் ஆலோசனைக்கு அமைய தேசிய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் வவுனியா காமினி மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது, பல்வேறு வர்த்தக நிலையங்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை காட்சிப்படுத்தியதுடன் விற்பனையிலும் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிகழ்வில் வர்த்தக வாணிபத்துறை கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகன புஸ்பகுமார, பிரதேச செயலாளர் கா.உதயராசா, வட மாகாணசபை உறுப்பினர்களான ஏ.ஜெயதிலக, ரிப்கான் பதியுதீன், தர்மபால செனவிரத்தின உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

10 1929632_2016499881909478_5347347002932893547_n10377288_2016500868576046_6057128808603370247_n    P1190874P1190787 P1190790 P1190792 P1190794 P1190804 P1190807 P1190815 1211P1190818 P1190819 P1190821 P1190823 P1190829 P1190831 P1190842 P1190844 P1190858 P1190861 P1190864 P1190866 P1190867 P1190871

தொடரும் நடிகர், நடிகைகளின் தற்கொலையும் அம்பலமாகும் தகவல்களும்!!

Murder

சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த்தின் எதிர்பாராத மரணம் சக துறைசார்ந்தவர்களை உலுக்கியிருக்கிறது. குடும்பப் பிரச்சினை காரணமாக அவர் இந்த விரும்பத்தகாத முடிவை எடுத்திருப்பதாக அவரது கடிதம் மூலம் தெரியவந்தாலும் தொடர்ச்சியாக திரைக் கலைஞர்கள் தற்கொலை எனும் முடிவைத் தேர்ந்தெடுப்பது நாம் ஆராய வேண்டிய விஷயம். கலகலப்பான மனிதர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் இப்படிப்பட்ட துயரமான முடிவுகளைத் தேடுதல் அதிர்ச்சிகரமானது தான்.

இது இன்று நேற்றல்ல சில ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்திருக்கும் சோகம்தான். சித்தி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த சாருகேஷ், பணப்பிரச்சினை காரணமாக, 2004ல் இரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார். 2006ல் சின்னத்திரை நடிகை வைஷ்ணவி, காதல் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

பல தொடர்களில் குணச்சித்திர வேடங்களிலும், அள்ளித்தந்த வானம், பாய்ஸ் போன்ற படங்களில் பெரிய திரையிலும் நடித்த முரளி மோகன் வாய்ப்புகள் குறைவானதால் 2014 ல் தற்கொலை செய்துகொண்டார். கடந்த வருடம் அரசி உள்ளிட்ட சில தொடர்களை இயக்கிய பாலாஜி யாதவ் தொலைகாட்சித் தொடர்களை இயக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் மன இறுக்கம் அதிகமாகித் தற்கொலை செய்துகொண்டார்.

சின்னத்திரை தொடர்களிலும் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்த ஷோபனா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு நடிக்கமுடியாமல் போனதால் மன அழுத்தத்திற்கு உள்ளாகித் தன் வாழ்வை முடித்துக் கொண்டார்.

இவையெல்லாம் உதாரணங்களே. இன்னும் பல இளம் நடிகைகளும் இந்தப் பட்டியலில் அடக்கம். அதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் மக்களின் அன்றாட பொழுதுபோக்கு ஊடகமான சின்னத்திரையில் நிகழும் இத்தகைய மரணங்கள் பலரையும் கவலைக்குள்ளாக்கும்.

பணிக்குச் செல்கிற மற்றும் குடும்பத்தைக் கவனித்துக் கொள்கிற பெண்களில் பெரும்பாலானோர்க்கு இரவுகளில் பொழுதுபோக்கும் கருவியாக இருப்பவை சின்னத்திரை நிகழ்ச்சிகளும் சிலபல மெகாத்தொடர்களுமே. அவற்றில் ஏற்படும் சூழல்கள் கவனிக்கப்படுகின்றன. மெகாத்தொடர்களில் வரும் நல்ல அல்லது தீய நிகழ்வுகள் அனைத்துமே மக்களுள் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும் எனும்போது ஒரு கதாபாத்திரத்தின் மரணம் சற்று உலுக்கவே செய்யும்.

தொடரும் கலைஞர்களின் அதிர்ச்சி முடிவுகள்

தமிழ் திரை உலகில் நடிகைகள் தற்கொலை செய்துகொள்வது 1974 லேயே விஜயஶ்ரீ மரணத்தின் மூலம் தொடங்கிவிட்டது. இவரது மரணம் தற்கொலையா என்பதிலும் இன்னும் மர்மமே நீடிக்கிறது.

80களின் தமிழ் சினிமாவில் அழிக்கமுடியாத இடம்பிடித்த ஷோபாவின் மரணமும் ஒரு வெளிப்படாத ரகசியம். புகழின் உச்சியில் இருந்தபோதே தூக்குக் கயிற்றில் தன் இறப்பைத் தானே தேர்ந்தெடு்த்ததற்கான காரணம் இன்றுவரை யாருமே அறிந்திராதது.

தனது வசீகரப் பார்வையால் வாலிபர்கள் முதல் வயோதிகர் வரை சகட்டுமேனிக்குத் தன்பால் ஈர்த்த சில்க் சுமிதாவும் 80 களில் கொடிகட்டிப் பறந்தார். கவர்ச்சி நடனத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும். இவரது தற்கொலைக்குப் பிண்ணனியில் கடன் தொல்லை, மதுப்பழக்கம் எனப் பல காரணங்கள் கூறப்பட்டாலும் அவரது கடிதம் வேறு யாரேனும் காரணமாக இருக்கலாம் என சர்ச்சையைக் கிளப்பியது. உண்மை என்னவென்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

அவள் ஒரு தொடர்கதை படாபட் ஜெயலெக்ஷ்மி தூக்கமாத்திரை உட்கொண்டு மரணத்தைத் தழுவினார். 90களில் பிரபலமாக இருந்த இந்தி நடிகை திவ்யபாரதி தனது பத்தொன்பதாவது வயதிலேயே கட்டிடத்தில் இருந்து குதித்து உயிர்விட்டார். அதற்கான காரணம் கடைசிவரை கண்டறியப்படவே இல்லை. காதலர் தினம் குணால் குடும்பப் பிரச்சினையால் தன் வீட்டிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது பின்னர் கொலை என சந்தேகிக்கப்பட்டு நடிகை லவீட் பாட்டியா கைது செய்யப்பட்டது தனிக்கதை. இவரோடு படங்களில் சேர்ந்து நடித்த மோனலும் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சி. மலையாள நடிகை மயூரி தன் வாழ்க்கையில் நம்பிக்கையை இழந்துவிட்டதாக உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நடிகை பிரதியுஷா தன் காதலரோடு காரில் அமர்ந்து புன்னகை மன்னன் பட பாணியில் குளிர்பானத்தில் விஷத்தைக் கலந்து அருந்தியதில் பிரதியுஷா மட்டும் மரணமடைந்தார். பின்னர் அவரது காதலர் கைது செய்யப்பட்டு அவரது மரணத்தில் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டதாகப் பல்வேறு சந்தேகங்கள் கிளப்பப்பட்டன. இந்தச் சம்பவங்களைத் தழுவி ஒரு நடிகையின் வாக்குமூலம் என்றொரு திரைப்படம் ராஜ்கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கு மட்டும்தான் திரையுலகினரில் இப்படியான தற்கொலை மரணங்கள் அரங்கேறுகின்றனவா எனக் கேட்டால் இல்லைதான்.

ஹொலிவுட் திரைப்பட உலகைத் தன் கடைக்கண் பார்வையால் சொக்கவைத்து பலரது கனவுக்கன்னியாய்த் திகழ்ந்த மர்லின் மன்றோ மரணத்தின் சர்ச்சை கூட இன்னும் தீரவில்லை. அமெரிக்க ஆட்சியாளர்களால் தற்கொலை எனக் கூறப்பட்ட அச்சம்பவம் ஒரு திட்டமிட்ட கொலை எனவும் பரவலாக நம்பப்படுகிறது. “ஒரு பெண்ணின் அழகான உடல் மூடி மறைப்பதற்கல்ல; மற்றவர்கள் பார்த்து ரசிக்கவே” என வெளிப்படையாய்ச் சொன்ன இவரின் மரண ரகசியம் ஐம்பது ஆண்டுகள் கடந்தும் இன்னும் அவிழ்ந்தபாடில்லை.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்தும் ஸ்டேண்ட் அப் காமெடியானகவும் பிரபலமான ஹொலிவுட்டின் பிரபல நடிகர் ரொபின் வில்லியம்ஸ் சுயநினைவில்லாத நிலையில் தற்கொலை செய்துகொண்டார். அவ்வை ஷண்முகியின் மூலமாக கருதப்படும் ‘மிஸஸ் டவுட்ஃபயர்’, ´குட் வில் ஹண்டிங்´ , ´ஜுமாஞ்சி´ போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். ஆஸ்கார் வென்றவர் போன்ற பெருமைகள் கொண்ட அவரது முடிவு சோகமானது. பலரை மகிழ்வித்த அந்தக் கலைஞன் கடைசியில் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டது கொடுமையின் உச்சம்.

பிரபல இத்தாலிய நாடகக் கலைஞர் ரபேல் ஷூமேக்கர் ஒரு நாடகத்தின் தற்கொலைக் காட்சியில் நடித்தபோதே கயிறு இறுகி மரணமடைந்தார். அவர் வேண்டுமென்றே சில காட்சிகளை மாற்றியதாகவும் அவர் திட்டமிட்டே தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதில் உள்ள மர்மங்கள் வெளிஉலகிற்கு என்றுமே தெரியப்படாதவை.

மலரினும் மெல்லியது கலைஞர்கள் இதயம்!

பிரபலமானவர்களின் வாழ்க்கையைப் போலவே மரணமும் உற்றுநோக்கப்படுகிறது. நடிகர்களின் அந்தரங்கங்கள் எளிதாய்ப் பரவிவிடுகின்றன. எனவே, அவர்கள் தங்கள் கவலைகளையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் மறைக்கவே முயல்கிறார்கள். தற்கொலைகள் மன இறுக்கத்தினால் முடிவெடுக்கப்பட்டதாய் இருக்கின்றன. வாழ்தல் கடினமெனும் சூழலுக்குத் தள்ளப்படும்போது பெரும் வாய்ப்பாக அங்கே மரணம் கைதட்டி வரவேற்கிறது. தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும்போது சின்ன சறுக்கல் ஏற்பட்டாலும் துவண்டுபோய் தவறான முடிவைத் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள்.

இவர்கள் பிரபலம் எனும் பிம்பத்தில் இருப்பதால், தங்கள் சோகத்தை, சுமையை பிறரிடம் சொல்லாமல் அழுத்தி வைப்பதாகவே படுகிறது.

உளவியல் நிபுணரின் பார்வை

உளவியல் நிபுணர் சுரேகாவிடம் இதைப் பற்றிக் கருத்து கேட்டபோது அவர் சொன்ன ஒரு விஷயம் மிகவும் முக்கியமாகப் பட்டது.

‘சினிமா கலைஞர்கள்கூட அவர்கள் நடித்த படத்தைப் பார்ப்பதுண்டு. சீரியல் நடிகர்கள் பிஸியாக இருப்பதாலோ என்னவோ, அவர்கள் நடித்த காட்சிகளை அவர்களே தொலைக்காட்சியில் பார்ப்பதில்லை. அப்படிப் பார்ப்பதால் என்ன ஆகும் என்றால், ஒரு அழுகை காட்சியில் அவர்கள் நடித்திருந்தாலும், அதைப் பார்க்கும்போது கூட நடித்தவர்கள் நடந்து கொண்டது, இந்தக் காட்சிக்கு எத்தனை கஷ்டப்பட்டோம் என்றெல்லாம் யோசித்து மன அழுத்தம் குறைந்துவிடும் அவர்களுக்கு. நடித்த காட்சியை தொலைக்காட்சியில் பார்ப்பதே – அவர்களைப் பொறுத்தவரை – ஒரு ஜாலியான நிகழ்வாக இருக்கும்’ என்றார் அவர்.

´கோலங்கள்´ மெகாத்தொடர் வெளிவந்தபோது அதன் நாயகி கதாபாத்திரம் ´அபி´ யாகவே தம்மை உருவகித்து பல இடையூறுகளைக் கடந்து சாதித்த சில பெண்களும் இருக்கிறார்கள். இன்றைக்கும் ராதிகாவை சின்னத்திரை நாடகங்களில் பார்த்து எதுவந்தாலும் எதிர்கொள்ள வேண்டும் என்று தைரியமாக தம்மை முன்னிறுத்திக் கொள்கிற எத்தனையோ பெண்கள் உண்டு. எனில், சாய் பிரசாந்த் போன்றோரின் மரணம் எத்தகைய எதிர்விளைவுகளை வேண்டுமானாலும் ஏற்படுத்தலாம் தானே ?

என்ன செய்ய வேண்டும் சின்னத்திரை கலைஞர்கள் / திரைப்படக் கலைஞர்கள் சங்கம்?

ஒரு ஆடல் பாடல் நிகழ்ச்சி என்றால் ஸ்பான்ஸர் பிடித்து கோடிக்கணக்கில் செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள். ஒரு ரியாலிட்டி ஷோ என்றாலும் அப்படித்தான். CCL க்ரிக்கெட் போன்ற மன அழுத்தத்தைப் போக்கும் பொழுதுபோக்குகளும் சின்னத்திரைக் கலைஞர்களுக்கு இருப்பதாய்த் தெரியவில்லை. அப்படியே எல்லாரும் ஒன்று கூடும் நிகழ்வென்றால், அதுவும் ஒளிபரப்பப்பட்டு, அதிலும் மன அழுத்தம் கூடும் வண்ணமே வடிவமைக்கப்படுகிறது எனலாம்.

அவ்வப்போது சுற்றுலாக்கள், விளையாட்டுகள் தாண்டியும் இவர்கள் செய்யவேண்டிய முக்கியமான ஒரு விஷயம் உண்டு. நடிகர், நடிகைகள் தனிப்பட்ட முறையில்தான் தங்களுக்கான உளவியல் ஆலோசனை பெறுகின்றனர். பெரும்பாலானோர் உளவியல் நிபுணரை நாடுவதே இல்லை. சங்கங்கள் மூலமாக குறிப்பிட்ட இடைவெளியில் லைட் பாய் முதல் அனைவருக்குமே உளவியல் ஆலோசனை வழங்கவேண்டியது மிக மிக முக்கியம். இது நிச்சயம் அவர்களது மன அழுத்தத்தைத் தணிக்கும்.

எங்களுக்கு, இவர்கள் போன்ற கலைஞர்கள் எப்போதும் தேவை. காரணம் நடிப்புக்காக மட்டுமல்லாமல், கலைஞர்களை தோழனாய், தோழியாய், ஆதர்சமாய்ப் பார்ப்பவர்கள்தான் நாங்கள்.

சிறுமி சேயா வழக்கு : குற்றவாளிக்கு மரண தண்டனை!!

1029638173Untitled-1

கொடதெனியாவ பகுதியில் சிறுமி சேயா சவ்தமி பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட சமன் ஜெயலத் என்பவருக்கு மரண தண்டனை விதித்து நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வருடம் சிறுமி சேயா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் முன்னதாக 17 வயது மாணவன் ஒருவர், கொண்டையா என கூறப்பட்ட துனேஷ் பிரியஷாந்த உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டு பின்னர் மரபணு பரிசோதனை அறிக்கையின் படி, குற்றம் நிரூபிக்கப்படாமையால் விடுவிக்கப்பட்டனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பில் கைதான சமன் ஜெயலத் (துனேஷ் பிரியஷாந்தவின் சகோதரர்) என்பவர் குற்றத்தை தானே இழைத்ததாக வாக்குமூலம் அளித்ததோடு அவரது மரபணுக்கள் குற்றத்துடன் ஒத்துப்போனது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து அவருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரயிலின் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் பலி!!

1

பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் தலவாக்கலை புகையிரத நிலையத்தின் அருகாமையில் இடம்பெற்றுள்ளது. இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

பதுளையிலிருந்து கண்டி நோக்கி மேற்படி புகையிரதம் சென்று கொண்டிருந்த வேளை தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இளைஞர் இவ்வாறு புகையிரதத்தில் பாய்ந்துள்ளார். இதனால் உடல் நசுங்கி குறித்த இளைஞர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் தலவாக்கலை புகையிரத நிலைய உத்தியோகத்தரிடம் அவரது சடலம் கையளிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அறிந்த தலவாக்கலை பொலிஸார் இளைஞரின் சடலத்தினை பொறுப்பேற்றுள்ளனர்.

எனினும் இவ்வாறு உயிரிழந்தவர் 30 வயது மதிக்கதக்க எட்டியாந்தோட்ட, மீப்பிட்டிகந்தவத்த பகுதியை சேர்ந்த என்.எம். குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் லிந்துலை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாகிஸ்தானுடனான பயிற்சிப்போட்டியில் இலங்கை அணி தோல்வி!!

SL

உலகக்கிண்ண டி20 போட்டிகளில் இலங்கை கிரிக்கட் அணிக்கெதிரான பயிற்சிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் ஹபீஸ் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்றுக் கொண்டார். இலங்கை அணி சார்பில் திஸர பெரேரா 2 விக்கட்டுக்கள் வீழ்த்தினார்

158 ஓட்டங்கள் எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.

இந்திய அணியுடன் வெற்றிபெற்றால் நிர்வாணமாக நிப்பேன் : அப்ரிடிக்கு சவால்!!

India-Vs-Pakistan-T20-Match-2016-

ஜம்பவான்களின் போட்டி என கூறப்படும் கிரிக்கெட் போட்டிகளில் சில சமயங்களில் அசம்பாவிதங்களும் இடம்பெறுவதுண்டு.

கிரிக்கெட் இரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐசிசி இருபது 20 உலகக் கிண்ணத் தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இன்று முதல் சுப்பர் 10 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதனிடையே ரசிகர்கள் தமது அணிகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் நடிகை ஒருவர் அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதாவது கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் பார்க்கும் கிரிக்கெட் போரான பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைப்பெறவுள்ள உலகக் கிண்ண இருபதுக்கு 20 போட்டியில் பாகிஸ்தான் வென்றால் பாகிஸ்தான் வீரர்கள் முன் தான் நிர்வாணமாக நிற்பதாக பாகிஸ்தான் நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றை பதிவேற்றி அவர் இதனை தெரிவித்துள்ளார். அதில் ஆசிய கிண்ணத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தமைக்கு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

மேலும் , இப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அணித் தலைவர் அப்ரிடி தன்னிடம் எது கேட்டாலும் அதை தான் செய்ய தயாராக உள்ளேன் எனவும் இந்த காணொளியில் அவர் கூறியுள்ளார்.

டென்னிஸ் வீராங்கனையை மணந்த ரொபின் உத்தப்பா!!

Robin Uthappa

இந்திய கிரிக்கெட் வீரராக இருந்து வருபவர் ரொபின் உத்தப்பா. இவர் கடந்த 2007ம் ஆண்டு 20 ஓவர் கிரிக்கெட் உலக கிண்ணத்தை வென்ற இந்திய அணியில் முக்கிய இடம் வகித்தவர் ஆவார். இந்திய அணியில் முதல் தர வரிசை துடுப்பாட்ட வீரராகவும், பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராகவும் இவர் விளையாடி இருக்கிறார்.

தற்போது அவர் ரஞ்சி கிரிக்கெட்டிலும், ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறார். இவரது சொந்த ஊர் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகாவில் உள்ள சுண்டிகொப்பா என்ற கிராமம் ஆகும்.

இந்த நிலையில், கிரிக்கெட் வீரர் ரொபின் உத்தப்பாவுக்கும், டென்னிஸ் வீராங்கனை சீத்தலுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் கர்நாடக மாநிலம் குடகில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை இரு குடும்பத்தாரும் செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை குடகில் உள்ள தனியார் ஹோட்டலில் ராபின் உத்தப்பாவுக்கும், சீத்தலுக்கும் திருமணம் நடந்தது. திருமணம் குடகு மாவட்ட வழக்கப்படி கங்கா பூஜையுடன் நடந்தது. திருமணத்திற்கு பிறகு வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. இந்த திருமண விழாவில் ஏராளமான கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் வீரர்கள், வீராங்கனைகள், ராபின் உத்தப்பாவின் நண்பர்கள், அவரது குடும்பத்தார், சீத்தலின் குடும்பத்தார், அவரது தோழிகள், அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நீதிமன்றில் வழக்கறிஞர் தூங்கியதால் 30 ஆண்டு சிறை தண்டனை ரத்து!!

Court

அமெரிக்காவில் உள்ள விர்ஜினீயா மாகாணத்தை சேர்ந்தவர் நிகோலஸ்வ ரஜின். ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இவர் மீது நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2006ம் ஆண்டு இவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக இவர் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இதற்கிடையே தண்டனையை எதிர்த்து விர்ஜினீ யாவில் உள்ள ரிக்மாண்ட் மேல் நீதிமன்றில் நிகோலஸ் மேன்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி ரோஜர் கிரகோரி முன்னிலையில் நடந்தது.

அப்போது ஏற்கனவே நீதிமன்றில் நடந்த விசாரணையின் போது நிகோலசின் வக்கீல் நிகிதா வி மாகி தினமும் சுமார் 30 நிமிட நேரம் தூங்கி வழிந்தார். அதனால் நீதிமன்றம் எதிர்தரப்பு நடத்திய வாதத்தை அவர் சரியாக கவனிக்கவில்லை என நிரூபிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து நிகோலசுக்கு நீதிமன்றம் வழங்கிய 30 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. ஆனால் இவர் ஏற்கனவே 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

மின்தடை குறித்து ஆராய ஜனாதிபதியால் குழு நியமனம்!!

Maithiri

நாட்டில் ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் அது தொடர்பில் மேற்கொள்ளக் கூடிய விரைவான நடவடிக்கைகள் குறித்து ஆராய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இந்தக் குழுவில் அடங்குவதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக ரஞ்சித் சியாம்பலாபிடிய, சம்பிக்க ரணவக்க, சுசில் பிரேமஜயந்த, சாகல ரத்னாயக்க ஆகிய அமைச்சர்களும், இரான் விக்ரமசிங்க, அஜித் பீ பெரேரா ஆகிய பிரதியமைச்சர்களும் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.

இந்தக் குழுவின் முதல் அறிக்கையை ஒரு வாரத்துக்குள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் மின்வெட்டு இடம்பெறும் : மின்சார சபை!!

Power cut

நுரைச்சோலை மின்நிலையத்திலிருந்து தேவையான அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படாததனால் இன்றும், நாளையும் மின்வெட்டுக்கள் இடம்பெறும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நேற்றும் நாட்டின் பல பிரதேசங்களில் நான்கு மணித்தியாலங்கள் மின்வெட்டு இடம்பெற்றுள்ளது. குறிப்பாக கம்பஹா மாவட்டத்தில் பிற்பகல் 2.00 மணியளவில் தடைப்பட்ட மின்விநியோகம் மாலை 6.00 மணிக்கே வழமைக்கு வந்தது.

இதனால், வைத்தியசாலைகள், தொழிற்சாலைகள் உட்பட பல்வேறு நிறுவனங்களின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ரயில் போக்குவரத்துக்கான சமிக்ஞை விளக்குகள் சில பகுதிகளில் செயற்படாத காரணத்தினால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக ரயில் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்பாள் ஆலய மகோற்சவம் கொடியேற்றதுடன் ஆரம்பம்!!(படங்கள்)

வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவப்பெருவிழாவின்   கொடியேற்ற நிகழ்வு   சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் நேற்று 14.03.2016 திங்கட்கிழமை  நண்பகல் இடம்பெற்றது.

667_1675413786030087_520008624438661324_n 67872_1675413532696779_6596322336677806045_n 165989_1675413176030148_1299552895775204988_n 1625791_1675413676030098_2266534977420176246_n 10174778_1675413632696769_8879456437387482118_n 10370348_1675414292696703_4982378288580443092_n 10384456_1675412899363509_5817456567971389333_n 10400055_1675413952696737_3659189788605431978_n 12814144_1675414186030047_3193399536050408862_n 12814639_1675413366030129_7067930695196998766_n 12814698_1675415179363281_7213804720336958087_n 12821352_1675414822696650_3359802263009594795_n 12821373_1675414932696639_7313977555751043922_n 12821416_1675415069363292_1321536009855320031_n