லண்டனில் 145 மில்லியன் பவுண்ட் மோசடி செய்த தமிழ் தம்பதியினருக்கு 19 வருட சிறைத் தண்டனை!!

couple

லண்டனில் வசித்து வந்த தமிழ் தம்பதியினர் 145 மில்லியன் பவுண்ட்களை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூத்ததம்பி ஸ்ரீஸ்கந்தராஜா (59), திலகேஸ்வரி (48) ஆகிய தம்பதியினர் லண்டனில் உள்ள ஐசில்வர்த்தில் (Isleworth) வசித்து வந்துள்ளனர்.

இவர்கள் லண்டன் சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அந்நிய செலாவணியின் மூலம் ஸ்ரேலிங் பவுண்ட்டுக்கு இணையாக யூரோ நோட்டுகளை மாற்றிக் கொடுக்கும் பணப்பரிமாற்ற சேவையை செய்து வந்துள்ளனர்.

ஆனால் இவர்கள் இந்த போர்வையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு பணப்பரிமாற்றத்தினைச் செய்து கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அவர்களது இந்த சட்டவிரோத பண பரிவர்த்தனை 145 மில்லியனாக எட்டியவுடன் இவ்விடயம் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவர்களது அலுவலத்தை பொலிசார் சோதனையிட்டுள்ளனர்.

சோதனையில் 1,00,000 பவுண்ட்டுகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து 2,50,000 பவுண்ட்டுகளையும், நகைகளும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து இத்தம்பதியினரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பாக இவர்களின் மீது தொடரப்பட்ட வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த சவுத் ஆரக் கிரவுன் நீதிமன்றம், மூத்ததம்பிக்கு 12 வருட சிறைதண்டனையும் அவரது மனைவி திலகேஸ்வரிக்கு 7 வருட சிறைதண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் இவர்களுடன் உடந்தையாக இருந்த மெர்லின் என்ற பிரிட்டிஷ் பெண்ணுக்கு 3 ½ வருடம், அவரது சகோதரிக்கு 2 வருட சிறைதண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வவுனியா பொது நூலகம் அழிவை நோக்கி? : மக்கள் கடும் விசனம்!!

மக்களின் வரிப் பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவின் உறைவிடமாய் வன்னியின் மத்தியில் எமது சமூகத்தின் ஒளி விளக்காய் அமைந்து காணப்படும் வவுனியா பொது நூலகம் கேட்பாரற்று இருப்பதையிட்டு மக்கள் கடும் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

வவுனியா பொது நூலகம் மும் மொழிகளில் எழுதப்பட்ட நூலகத்தின் பெயர்ப்பலகை முற்றாக அழிந்து போயுள்ளதுடன், நூலகத்தின் அழகின் முக்கிய வர்ணங்கள் அழிந்தும் காணப்படுகின்றமை, வாசகர்களையும் கல்விமான்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சரஸ்வதி சிலையின் குடையின் வர்ணப் பூச்சும் அழிவடைந்துள்ளது,

வன்னியின் வரலாறுகள் இவ்வாறு தான் பேணப்படுகின்றதா என கேள்வி எழுகின்றது, இது எமது மேலதிகாரிகளின் மந்த போக்குத் தன்மையையும், நிர்வாக திறனற்ற நிர்வாக அதிகாரிகளின் கண் காணாத போக்கினால் எமது அறிவின் உறைவிடம் அழிந்து வருகின்றது.

பொதுப் பூங்காவின் பல இடங்களில் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் இருப்பதனால் பூங்காவின் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடும் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், அத்துடன் உரிய அதிகாரிகள் உடன் நடவடிக்கையெடுக்குமாறு மக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.

IMG_5149IMG_5137 IMG_5139 IMG_5140 IMG_5144 IMG_5145 IMG_5151IMG_5147

இந்தியாவிற்கு ஒன்றரை கிலோ தங்கத்தை கொண்டு சென்ற மூதாட்டி கைது!!

 

Gold

சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை தங்கத்தை இந்தியாவிற்கு எடுத்துச் சென்ற இலங்கை மூதாட்டி ஒருவர் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

71 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மூதாட்டியிடம் இருந்து ஒன்றரை கிலோ கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாரியில் மறைத்து வைத்து இந்த தங்கம் கொண்டு செல்லப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் 14 மாவட்டங்களைச் சேர்ந்து சுமார் 5 இலட்சம் பேர் பாதிப்பு!!

நாட்டின் பல பகுதிகளிலும் நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 14 மாவட்டங்களில் ஒரு இலட்சத்து 24 ஆயிரத்து 369 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 52 ஆயிரத்து 960 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

14 மாவட்டங்களிலும் 12,855 குடும்பங்களைச் சேர்ந்த 46,746 பேர் 205 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்குக் காரணமாக கிழக்கு மாகாணமே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 354 குடும்பங்களைச் சார்ந்த 4 இலட்சத்து 4 ஆயிரத்து 609 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு 96 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 9 ஆயிரத்து 354 குடும்பங்களைச் சேர்ந்த 33 ஆயிரத்து 276 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டமே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பில் 88,925 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 22 ஆயிரத்து 416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 78 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 7ஆயிரத்து 794 குடும்பங்களைச் சேர்ந்த 27 ஆயிரத்து 608 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 18 ஆயிரத்து 997 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 348 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஒரு தற்காலிக முகாம் அமைக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

வடமத்திய மாகாணத்தின் பொலன்னறுவை மற்றும் அநுராதபுர மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பொலன்னறுவை மாவட்டத்தில் 3969 குடும்பங்களைச் சேர்ந்த 15361 பேரும் அநுராதபுரம் மாவட்டத்தில் 6224 குடும் பங்களைச் சேர்ந்த 20884 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடமாகாணத்தில் 1980 குடும்பங்களைச் சேர்ந்த 6608 பேரும், மத்திய மாகாணத்தில் 227 குடும்பங்களைச் சேர்ந்த 826 பேரும், வட மேல் மாகாணத்தில் 1615 குடும்பங்களைச் சேர்ந்த 4672 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளப்பெருக்குக் காரணமாக நாடு முழுவதிலும் 1914 வீடுகள் முழு அளவில் சேதமடைந்திருப்பதுடன், 6,561 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் 1879 வீடுகள் முற்றாகவும், 5578 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்களுக்கு பிரதேச செயலகங்களின் ஊடாக சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகிறது.

வெள்ளப்பெருக்குக் காரணமாக பல பகுதிகளுக்கான வீதிப் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளுக்கான இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.

V2V2 vellam

உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியாகும் தினம் அறிவிப்பு!!

AL

நடந்து முடிந்த க.பொ.த உ.த பரீட்சை பெறுபேறு எதிர்வரும் 27 அல்லது 28ம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவுற்று தற்போது பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார்.

இதேவேளை க.பொ.த சா.த பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 28ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஜனவரி 5ம் திகதிவரை மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா வெள்ள பாதிப்பு மக்களுக்கான அவசர நிதியாக வடமாகாண சபையால் 3 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!!

VN

வவுனியா செட்டிகுளம் பிரேதச செயலக பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்த வடக்கு மாகாண சுகாதார சமூகசேவைகள் புனர்வாழ்வு மற்றும் சிறுவர் நன்னடத்தை அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அத்துடன் இவர்களுக்கான உடனடி மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு அதிகாரிகளை பணித்ததோடு பெண்கள் சிறுவர்களுக்கான அவசர சுகாதார பொதிகளையும் வழங்கி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார். இதற்காக அவசர நிதியாக ரூபா 3 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் வடிகால் அமைப்பு சீரின்மையால் மக்கள் அவலம்!!

vvv

வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் சீரான வடிகாலமைப்பு இன்மையால் அப்பகுதி மக்கள் பெரும் அவலத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

கோடை காலத்தில் இவ் வடிகாலமைப்பை சீர் செய்து தருமாறு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையிடம் கோரிக்கை விடுத்தபோதிலும் அவர்கள் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் தற்போது பெய்து வரும் கடும் மழையின் காரணமாக இப்பகுதியில் நீர் தேங்கியுள்ளதுடன் வீடுகளுக்குள்ளும் மழை நீர் சென்றுள்ளமையினால் மக்கள் வீடுகளுக்குள் வாழ முடியாது பெரும் துன்பத்திற்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இதேவேளை வருடா வருடம் பிரதேசசபைக்கு சோளவரி செலுத்தியபோதிலும் பிரதேச சபை கவனம் செலுத்தாமையினாலேயே இவ்வாறான நிலை ஏற்பட்டதாக இப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ரயில் என்ஜினிலிருந்து பெட்டி கழன்று சென்றதால் விபத்து!!

train

பொல்காஹவெலயில் இருந்து மொரட்டுவ நோக்கி பயணித்த ரயிலில் என்ஜினுடன் பெட்டியொன்று தனியாக கழன்று சென்ற சம்பவம் இன்று காலை 7.45 அளவில் இடம்பெற்றுள்ளது.

களனி பாலத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தெரியவரவில்லை.

இதனால் தற்போது ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் பயணிகள், அலுவலகம் செல்வோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

அதிக தடவைகள் ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்து சாதனை படைக்கும் டோனி!!

Dhoni

இந்திய அணித்தலைவர் டோனி டெஸ்ட் போட்டிகளில் 8 முறை ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அடிலெய்ட் மற்றும் பிரிஸ்பேனில் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது.

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் அணித்தலைவராக விளையாடிய டோனி, 2வது இன்னிங்ஸில் ஜோஷ் ஹேசில்வுட் வீசிய பந்தை எதிர்கொண்டு ஆட முயன்று ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன் மூலம் 8 முறை ‘டக் அவுட்’ என்ற சாதனையை நிகழ்த்தி 3வது இடத்தில் இருக்கிறார் டோனி. இவருடன் இங்கிலாந்தின் அதெர்டன், தென் ஆபிரிக்காவின் குரோஞ்சியும் இந்த 8 முறை ‘டக் அவுட்’ சாதனையை பகிர்ந்து கொள்கின்றனர்.

முதல் இரண்டு இடங்களில் நியூசிலாந்து அணித்தலைவராக இருந்த ஸ்டீவன் பிளெமிங் (13 முறை), தென் ஆபிரிக்கா அணித்தலைவர் ஸ்மித் (10 முறை) ஆகியோர் இருக்கின்றனர்.

இங்கிலாந்தின் அலன் போடர், சப்பெல், ஜெயசூரிய, ஜெயவர்த்தன, பட்டோடி, பொண்டிங் உள்ளிட்டோர் 7 முறையும், கபில்தேவ், அர்ஜூன ரணதுங்க, சமி உள்ளிட்டோர் 6 முறையும் அணித்தலைவராக இருந்து டக்-அவுட் ஆகி சாதனை படைத்திருக்கின்றனர்.

வவுனியாவில் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

வவுனியாவில் தொடர் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக இயல்பு வாழ்கை பாதிப்படைந்துள்ளதுடன் போக்குவரத்துப் பாதைகளும் தடைப்பட்டுள்ளது.

பூவரசன்குளம் – செட்டிகுளம் வீதி, நெளுக்குளம் – செட்டிகுளம் வீதி என்பன வாகனப் போக்குவரத்து செய்யமுடியாதாவாறு வீதியை ஊடறுத்து மழை நீர் பாய்கின்றது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன.

பாவற்குளத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் இரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன இதனால் இதன் காரணமாக கந்தசாமி நகர், மீடியாபாம், கன்னாட்டி உள்ளிட்ட மக்கள் தமது வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். நெளுக்குளம் – செட்டிகுளம், பூவரசன் குளம் – செட்டிகுளம் போக்குவரத்து பாதையும் முழுமையாக தடைப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கடும் மழையால் 373 குடும்பங்களைச் சேர்ந்த 1444 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்டத்தில் சில பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

10 11 12 14 15 16

வவுனியா பாவற்குளம் நீர் மட்டம் அதிகரிப்பு காரணமாக இரு வான் கதவுகள் திறப்பு!!

வவுனியாவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பாவற்குளம் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பாவற்குளம் குளத்தின் இரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக வவுனியா, பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரித்த நிலையில் இரு வான் கதவுகள் இன்று நீர்பாசன திணைக்களத்தினரால் திறக்கப்பட்டது.

வவுனியாவில் தொடர்ந்தும் மழை பெய்து வருகிறது. இம் மழை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டம் 20.1 அடியாக உயர்ந்தது. குளத்தின் நீர்மட்டம் 19.4 ஐ தண்டியதால் இன்றைய தினம் குளத்தின் இரு வான்கதவுகள் ஒரு அடி திறந்து விடப்பட்டது.

இதன் காரணமாக கந்தசாமி நகர், மீடியாபாம், கன்னாட்டி உள்ளிட்ட மக்கள் தமது வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். நெளுக்குளம் – செட்டிகுளம், பூவரசன் குளம் – செட்டிகுளம் போக்குவரத்து பாதையும் முழுமையாக தடைப்பட்டுள்ளது.

v v1 v2 v3

வவுனியா பஸ் நிலையப் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!!

A6

வவுனியா பஸ் நிலையப் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சியில் இருந்து கொழும்பு, கொலன்னாவ நோக்கி செல்வதற்காக வவுனியா பஸ் நிலையத்தில் நின்ற இருவர் மீது சந்தேகம் அடைந்த பொலிஸார் அவர்களது பயணப் பொதியை சோதனையிட்டனர்.

இதன்போது 2 கிலோ 125 கிராம் கேரள கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிககப்பட்டது. இதனையடுத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளை மாளிகையை தரைமட்டமாக்குவோம் : மிரட்டும் வடக்கொரிய ஜனாதிபதி!!

Korea

எங்கள் நாட்டின் மீது தொடர்ந்து குற்றசாட்டுகளை சுமத்தினால் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்தப்படும் என்று வடக்கொரியா எச்சரித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகளின் சொனி(Sony) கணணிகளிலிருந்து தகவல் திருடப்பட்டுள்ளன. இதற்கு வடகொரியாதான் காரணமாக இருக்கும் என அமெரிக்கா கருதுகிறது.

ஏனெனில், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்-ஐ பிரதிபலிக்கும் கதாபாத்திரம் கொண்ட ‘த இன்டர்வியு’ (The Interview) என்கின்ற திரைப்படத்தை சொனி நிறுவனம் வெளியிட இருந்த நிலையில், சொனி நிறுவனத்தின் கணினிகளில் இருந்து தகவல்கள் திருடப்பட்டதால் அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

இதனால் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இந்த செயலில் வடகொரியா ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் இந்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் பட்டியலில் வடகொரியாவின் பெயரும் சேர்க்கப் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா தேசிய பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் தங்கள் நாட்டின் மீது அமெரிக்க அதிபர் குற்றம்சாட்டி வருவதாகவும், இதே நிலை நீடித்தால் வெள்ளை மாளிகை, பெண்டகன் உள்ளிட்ட இடங்கள் தாக்குதலுக்குள்ளாகும் என எச்சரித்துள்ளது.

மேலும் ஜனாதிபதி கிம் ஜாங் தரப்பில் இந்த மிரட்டலான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வவுனியாவில் நடைபெற்ற பேராசிரியர் க.கைலாசபதியின் 32ம் ஆண்டு நினைவுக் கருத்தரங்கு!!

பேராசிரியர் க.கைலாசபதியின் 32ம் ஆண்டு நினைவுக் கருத்தரங்கு நேற்று (21.12) வவுனியா அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் மாலை 3 மணியளவில் நடைபெற்றது.

வவுனியா மாவட்ட தேசிய கலை இலக்கியப் பேரவை ஏற்பாடு செய்த இன் நிகழ்வு வவுனியா கல்வியல் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.ந.பார்த்தீபன் தலைமையில் இடம்பெற்றது.

பேராசிரியர் க.கைலாசபதி தொடர்பான கருத்துரையை வவுனியா இந்துக் கல்லூரி ஆசிரியை திருமதி கங்கைவேணி அமிர்தலிங்கம் அவர்களும், தொடருரையை எழுத்தாளர் தமிழ்மணி கே.கே.அருந்தவராஜா (மேழிக்குமரன்) அவர்கள் நிகழ்த்தியதுடன் நன்றியுரையை திரு.சு.டொன் போஸ்கோ (செயலாளர் – வவுனியா மாவட்ட தேசிய கலை இலக்கியப் பேரவை) நிகழ்த்தினார்.

“நீர்வளம் காப்போம்” என்ற தொனிப்பொருளில் வில்லுப்பாட்டு நிகழ்வும் நடைபெற்றதுடன். இன் நிகழ்வுகளில் நூற்றுக் கணக்கானோர் கலந்து சிறப்பித்தனர்.

01 02 03 04 06 07

யாழில் பெண்ணொருவர் மீது வாள் வெட்டு!!

valvedu

யாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் பணிபுரியும் சிற்றூழியர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த நிஷாந்தினி (24) என்பவரே வாள் வெட்டுக்கு இலக்காகி உள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சிற்றூழியராக கடமையாற்றி வரும் இவர், இன்று காலை கடமைக்காக வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.

இவ்வாறு சென்றவரை யாழ். நகர்ப்பகுதியில் வைத்து வாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். படுகாயமடைந்தவர் உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து உறவினர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

படுகாயமடைந்த பெண் திருமணம் செய்து கடந்த 5 வருடங்களாக கணவனைப் பிரிந்து வாழ்கின்றார். குடும்பத்தகராற்றின் காரணமாகவே வாள்வெட்டு ஏற்பட்டதாக தெரிவித்தனர். மேலும் அப்பெண்ணின் கணவனே வாளால் வெட்டிக்காயப்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இரணைமடு வான்கதவுகள் இன்று காலை திறப்பு : வெள்ளக்காடாக கிளிநொச்சி நகரம்!!

பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருவதன் காரணமாக இரணைமடு பெருங்குளத்தின் வான் கதவுகள் இன்று காலை திறந்து விடப்பட்டுள்ளது.

இரணைமடு பெருங்குளத்தின் நீர் மட்டம் 31 அடியை கடக்கும் நிலையை எட்டியுள்ளதால், குளத்தின் அணைகளின் நிலை மற்றும் விளைச்சல் வயல்களின் நன்மையை கருத்திற்கொண்டு வடமாகாண விவசாய நீர்ப்பாசன அமைச்சின் மேற்பார்வையின் கீழ் கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு இன்று காலை வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

நேற்று இரவு முதல் கிளிநொச்சியில் கடும் மழை பெய்துவருகின்றது. இதன் காரணமாக கிளிநொச்சி நகரம் மற்றும் கிராமங்கள் பல வெள்ளப்பெருக்கு அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.

குளங்கள் நீர் நிரம்பி வான் பாய ஆரம்பித்துள்ளதால் வான் பாயும் பகுதிகளை அண்டிய கிராமங்களை சேர்ந்த மக்கள் இடம்பெயரவேண்டிய சூழ்நிலை எதிர்கொள்ளப்படுகின்றது.

1 2 3 4 5 6 7 8 9