அபார வெற்றியுடன் தாய் மண்ணில் இருந்து விடைபெற்ற ஜெயவர்தன, சங்கக்கார : இலங்கை அணி தொடரை 5-2 எனக் கைப்பற்றியது!!

SL

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 7 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி 5-2 என்ற கணக்கில் தன்வசப்படுத்தியுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று நடைபெற்ற 7வதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 87 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி அசத்திய திலகரட்ன தில்ஷான் 101 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் வந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஸ் சந்திமால் 55 ஓட்டங்களையும் திசர பெரேரா 54 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து சார்பில் ஜோர்தான் மற்றும் அலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு 303 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே தடுமாறியதை காண முடிந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் ரூட் மாத்திரமே சிறப்பாக ஆடி 80 ஓட்டங்களைப் பெற்றார். ஏனையவர்கள் பெரிதாக சோபிக்கவில்லை.

இறுதியில் இங்கிலாந்து அணி 45.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 215 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 87 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்த்தன ஆகியோர் எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் நேற்றைய தினம் தமது சொந்த மண்ணில் இறுதிப் போட்டியில் ஆடி இருந்தனர்.

எனினும் அவர்களால் எதிர்பார்த்த அளவு ஓட்டங்களை குவிக்க முடியவில்லை. சங்கக்கார 33 ஓட்டங்களையும் மஹேல 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தின் போது இறுதியில் பந்துவீச அழைக்கப்பட்ட மஹேல ஜயவர்த்தன 1.5 ஓவர்கள் பந்து வீசி ஒரு விக்கெட்டினை வீழ்த்தியமை இரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

போட்டியின் ஆட்ட நாயகன் மற்றும் தொடராட்ட நாயகன் விருதை திலகரட்ன தில்ஷான் பெற்றுக் கொண்டார்.

SL!

பாகிஸ்தானில் பாடசாலையக் கைப்பற்றிய தீவிரவாதிகள் : 84 குழந்தைகள் உட்பட 104 பேர் பலி, 500க்கும் மேற்பட்டோர் சிறைப்பிடிப்பு!!

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷவாரிலுள்ள பாடசாலை ஒன்றைக் கைப்பற்றிய தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டதில் 84 குழந்தைகள் உட்பட 104 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 500க்கும் மேற்பட்டோர் பள்ளி வளாகத்தில் தீவிரவாதிகளால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷவாரிலுள்ள பாடசாலையொன்றைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களையும் ஆசிரியர்களையும் இன்று தலிபான் துப்பாக்கிதாரிகள் பணயக்கைதிகளாக பிடித்துவைத்தனர்.

இவர்களை மீட்க பாகிஸ்தான் இராணுவத்தினர் தயாரானபோது பணயகைதிகள் மீது துப்பாக்கி தாரிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இராணுவத்தினரால் நடத்தப்படுகின்ற இராணுவ பாடசாலையில் ஆயுதம் தாங்கிய 06 பேர் உள்நுழைந்து மேற்கொண்ட தாக்குதலிலேயே இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐந்து அல்லது ஆறு ஆயுததாரிகள் ராணுவ உடையில் பள்ளிச் சுவரின் மீது ஏறி துப்பாக்கியால் சுட்டதாக நேரில் கண்டவர்கள் கூறினர். பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் இந்த கட்டிடத்தைச் சுற்றி வளைத்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டு சப்தங்களும், வெடிச்சத்தங்களும் தொடர்ந்தும் கேட்டவண்ணம் இருக்கின்றன.

இன்னும் உள்ளே சிக்கியிருக்கும் குழந்தைகளை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றதாக பாகிஸ்தான் தரப்பு தெரிவிக்கின்றது. சேதவிவரங்கள் முழுமைப்படுத்தப்படவில்லை என்று பாகிஸ்தான் தரப்பு அறிவித்துள்ளது.

1 2 3 4 5

தாயும் மகளும் கிணற்றில் விழுந்து தற்கொலை!!

kinaru

தாய் ஒருவர் தனது மகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

காலி மாவட்டத்தில் பிட்டிகல – வத்தஹேன பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 36 வயது தாயும் 10 வயது மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தனது 16 வயது மூத்த மகளுடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து மூத்த மகள் விஷம் அருந்தியுள்ளார்.

இதனை அறிந்த தாய் தனது இரண்டாவது மகளுடன் சேர்ந்து கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விஷம் அருந்திய மூத்த மகள் தற்போது அல்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் தொடரும் குரங்குகளின் சேட்டைகள்!!(படங்கள், வீடியோ )

வவுனியாவில் நீண்ட காலமாக குரங்குகளின் அட்டகாசம் தொடர்ந்து வருகின்றமை யாவரும் அறிந்த விடயம். குரங்குகளின் சேட்டைகள் அதிகாலை முதல் மாலை வரை தொடர்ந்தவண்ணம் உள்ளது. கோவில்கள் பாடசாலைகள் வீடுகள் கடைகள் வங்கிகள் நிறுவனங்கள் என வேறுபாடின்றி சகல இடங்களிலும் தமது கைவரிசையை காட்டிவருகின்றன.

கடைகள் வீடுகளினுள் புகுந்து அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தியும் களவாடியும் சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றன . கூட்டமாக கிளம்பும் குரங்குகள் மரங்கள் அவற்றில் காணப்படும் காய்கள் பழங்கள் முதலியவற்றை நாசப்படுத்தியும் செல்கின்றன.

வீடுகள் மற்றும் வீதிகளில் நிறுத்தி வைதிருக்கும் வாகனங்களும் அவற்றின் பார்வையில் இருந்து தப்பிவிடுவதில்லை . அவற்றிலும் தங்களது கைவரிசையை காட்டி வருகின்றன. வவுனியாவின் பல பிரதேசங்களிலும் நகரம், கோவில்குளம், இறம்பைக்குளம், சின்னபுதுகுளம் சூசைபிள்ளையார் குளம், பண்டாரிக்குளம் வைரவபுளியங்குளம், குடியிருப்பு, கூமாங்குளம் என வவுனியாவின் பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று தங்களது சேட்டைகளை செய்துவருகின்றன.

தோட்டங்களில் கூட்டமாக சென்று காய்கறிகள், பழங்கள், வாழைமரங்கள் என்பவற்றையும் சேதபடுத்தி விவசாயிகளின் வயிற்றிலுமடித்து வருகின்றன. இதனால் விவசாய நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளன. பொதுவாக வீடுகளில் உள்ள தண்ணீர் தாங்கிகளின் மூடிகளை கழற்றி செல்வதனால் பெருமளவிலான குடியிருப்பாளர்கள் இவற்றின் செயலால் விசனமடைந்துள்ளனர்.

அத்துடன் வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ள கைத்தொலைபேசிகள், அவற்றுக்கான சார்ச்சர்கள் மற்றும் கணனிகள், கணணி உதிரிபாகங்கள், மவுஸ், கிபோர்ட், பிரிண்டர்கள் என்பவற்றையும் களவாடியும் சேதபடுத்தியும் வருகின்றன. மேற்படி பிரச்சனைகளுக்கு யாரிடம் முறைப்பாடு செய்வது என தெரியாமால் பொதுமக்கள் கவலையுடன் தெரிவித்து வருகின்றனர் .

-பண்டிதர்-

11 12 13 14

வவுனியாவில் மீண்டும் திருடர்களின் அட்டகாசம்: முகமூடி வாள்கள் சகிதம் கைவரிசை : பொதுமக்களே அவதானம்!!

thef

வவுனியாவில் கடந்த சிலதினங்களாக திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர். வவுனியா கோவில்குளம் , தெற்கிலுப்பை குளம் ஆகிய இடங்களில் திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர்.

முகமூடி அணிந்து வாள்கள், பொல்லுகள் சகிதம் கதவை உடைத்து உள்நுழையும் ஆறுக்கு மேற்பட்ட கொள்ளையர்கள் வீட்டிலிருதவர்களை கட்டி வைத்துவிட்டு பணம் நகைகள் என்பவற்றை சூறையாடி சென்ற மூன்று சம்பவங்கள் இதுவரை கடந்த வாரத்தில் இடம்பெற்றுள்ளன.

பயங்கர கூரிய ஆயுதங்களுடனே இக்கொள்ளையர் குழு தமது கைவரிசையை காட்டியுள்ளனர். மேற்படி சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர். மேற்படி கொள்ளையர் குழு தொடர்பாக பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தாய் மண்ணில் இறுதிக் களம்காணும் சாதனை நாயகர்கள் : உணர்வுபூர்வமாக அமையப்போகும் இன்றைய போட்டி!!

kumar-sangakkara-mahela-jayawardene--dilshan

இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள ஏழாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியானது இலங்கையின் முன்னாள் தலைவர்களும் சாதனை நடசத்திரங்களுமான மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார மற்றும் திலகரட்ன டில்சான் ஆகியோர் தமது சொந்த மண்ணில் பங்கேற்கும் இறுதி சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியாகும்.

இரு அணிகளுக்குமிடையிலான ஏழு போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 4-2 என கைப்பற்றியுள்ள நிலையில் இன்றை தினம் களமிறங்குகின்றது.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட்டில் புதிய அத்தியாத்தை ஏற்படுத்திய சர்வதேச அரங்கையே திரும்பிப் பார்க்க வைத்த நட்சத்திர வீரர்களான மஹேல, சங்காவுக்கும் வெற்றியுடன் பிரியாவிடையளிக்கப்படுமா என்ற எதிர்பாப்பும் ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் இவ்விருவருக்கும் போட்டியின் முடிவில் உணர்வுபூர்வ பிரியாவிடையை ஆயிரக்கணக்கான இரசிகர்கள் வழங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.

இன்று பிற்பகல் 2.30மணிக்கு ஆரம்பமாகும் இப் போட்டியில் பங்கேற்கும் இறுதிப் பதினொருவர் கொண்ட இலங்கைக் குழாம் இறுதிநேரத்தில் தெரிவு செய்யப்படவுள்ளதோடு இங்கிலாந்து தரப்பில் ஆறாவதுபோட்டியில் பங்கேற்ற அதேகுழாமே பங்குபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம் பிரேமதாச விளையாட்டரங்கில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் மஹேல கலந்துகொண்டிருந்தார். அவரிடத்தில் செய்தியாளர்கள் வினவிய தொடடுத்த வினாக்களும் பதில்களும் வருமாறு..

கேள்வி:- உங்களது இந்தப் பிரியாவிடைப் போட்டி உங்களை உணர்ச்சிவசப்படச் செய்யுமா?

பதில்:- அப்படி ஒரு நிலை ஏற்படும் என நான் கருதவில்லை. என்னைப் பொறுத்தமட்டில் நான் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டிதான் என்னை அதிகளவில் உணர்ச்சிவசப்படச் செய்தது. ஒருவேளை போட்டியின் பின்னர் நான் உணர்ச்சிவசப்படக்கூடும். ஏனெனில் இரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு என்னை அந்த நிலைக்குத் தள்ளிவிடக்கூடும் என பதிலளித்தார்.

ஆரம்பப் போட்டியும் பிரயாவிடைப் போட்டியும் ஒரே மைதானத்தில் இடம்பெறுவதை நினைவுபடுத்தியபோது, சர்வதேச ஒருநாள் கிரிக்கட் வாழ்க்கையை ஆரம்பித்த அதே மைதானத்தில் பிரியாவிடை பெறுவது என்பது அதிர்ஷ்டம்.

நான் மிகுந்த அர்ப்பணிப்புடனும் மனநிறைவுடனும் சந்தோஷத்துடனும் விளையாடி வந்தேன். நான் இந்தளவு முன்னேற்றத்தை அடைவேன் என நான் எண்ணியதில்லை. அர்ப்பணிப்புத்தன்மையையும் விடாமுயற்சியையும் நினைவில் நிறுத்தியவாறு எனது திறமையை வெளிப்படுத்திவந்தேன்

கேள்வி:- இன்றைய போட்டியிலும் உலகக் கிண்ணப் போட்டிகளிலும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக விளையாடுவீர்களா?

பதில்:- இங்கிலாந்துக்கு எதிரான ஓரிரு போட்டிகளில் என்னை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக விளையாடுமாறு கிரிக்கட் அணி முகாமைத்துவம் கேட்டுக்கொண்டது. உலகக் கிண்ணப் போட்டிவரை இது தொடருமா என்று நான் கருதவில்லை.

அதற்கு முன்னர் நியுஸிலாந்துக்கு எதிரான தொடர் குறித்து நாம் சிந்திக்கவேண்டும். மேலும் எமது குழாமில் இன்னுமொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் இருக்கின்றார். எனவே இன்றைய போட்டிக்கு முன்னர் தெரிவாளர்களும் அணி முகாமைத்துவத்தினரும் உரிய வீரர்களைத் தெரிவு செய்வர் என மஹேல குறிப்பிட்டார்.

குமார் சங்கக்கார தனது சொந்த மைதானத்தில் சதம் குவித்துவிட்டு விடைபெற்றதுபோல் நீங்களும் சதம் குவித்து விடைபெற முயற்சிப்பீர்களா என வினவப்பட்டபோது, ‘அப்படி ஒன்றும் இல்லை. என்னாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கி அணியை வெற்றிபெறச் செய்வதே எனது நோக்கம் என்றார்.

வவுனியாவில் வட மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசாவின் நிதி ஒதுக்கீட்டில் ஆலயங்கள் புனரமைப்பு!!

வட மாகான சபை உறுப்பினர் இ.இந்திரராஜா அவர்கள் 2014ம் ஆண்டு பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து 650000 ரூபாவினை ஆலயங்களின் புனரமைப்பு மற்றும் பொருட்கள் கொள்வனவிற்காக ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந் நிதியில் இருந்து ஒரு தொகுதி ஆலயங்களிற்கான காசோலைகள் 29.11.2014 அன்று வவுனியா பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கௌரவ மாகாண சபை உறுப்பினர் திரு. இ.இந்திரராசா அவர்களால் ஆலய நிர்வாகிகளிடம் கையளிக்கப்பட்டன.
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு காசோலைகள் வழங்கப்படாத ஆலயங்களிற்கு விரைவாக வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

SAM_3238 SAM_3249 SAM_3253 SAM_3261

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அடிதடி : விவசாய அமைச்சருக்கு மூக்குடைப்பு!!

யாழ். மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இன்று இடம்பெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஏற்பட்ட மோதலால் வட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் காயமடைந்துள்ளார்.

யாழ் கச்சேரியில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் ஈபிடிபி மற்றும் ததேகூ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஐங்கரநேசனுக்கு மூக்கிலும் மாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரனுக்கு நெற்றியிலும் காயம் ஏற்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

குழப்பம் காரணமாக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தற்சமயம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

யாழ், மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் அதன் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த மற்றும் இணைத் தலைவர் முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று காலை யாழ். கச்சேரியில் ஆரம்பமானது. இதில் யாழ். அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வட மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சிவி.விக்னேஸ்வரன் உரையாற்றுகையில் மத்திய அரசாங்கத்தை விமர்சித்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றுகையில் வட மாகாண சபையை விமர்சித்தும் பேசியுள்ளனர்.

இதன்போது குறுக்கிட்ட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் மாகாண சபையை பற்றி பேசுவதை நிறுத்துமாறும் யாழ், மாவட்ட அபிவிருத்தி பற்றி மாத்திரம் பேசுமாறும் கூறியுள்ளனர்.

பின்னர் அபிவிருத்தி பற்றி மாத்திரம் பேசுவது என தீர்மானிக்கப்பட்டு கூட்டம் தொடர்ந்த நிலையில் வட மாகாண எதிர்கட்சித் தலைவர் தவராசா வட மாகாண சபை வரவு செலவுத் திட்டம் தொடர்பில் உரையாற்றியுள்ளார். இதன்போது சிவாஜிலிங்கம், சிவிகே.சிவஞானம், சிறிதரன் உள்ளிட்ட பலர் குறுக்கிட்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் இவர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது மோதல் வரை சென்றுள்ளது. இந்த மோதலில் வட மாகாண விவசாய அமைச்சர் பொன்.ஐங்கரநேசனுக்கு மூக்குடைப்பட்டு இரத்தம் சொட்டியதோடு உறுப்பினர் சர்வேஸ்வரனுக்கு நெற்றியில் சிறிய காயம் ஏற்பட்டது.

இந்த மோதல் நிலையை அடுத்து கூட்டத்தில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநடப்பு செய்த நிலையில் கச்சேரியில் இருந்த ஈபிடிபி மற்றும் அரச அதிகாரிகள் கூட்டத்தை ஒத்திவைத்துள்ளனர்.

1 2 3

லிங்காவை ஏமாற்றிய சென்னை மக்கள்!!

Linga

சூப்பர் ஸ்டார் படம் வருகிறது என்றால் திரையரங்குகளில் திருவிழா தான். அந்த வகையில் நீண்ட இடவேளைக்கு பிறகு வெளிவந்த லிங்கா அனைவரையும் கவரவில்லை என்பது தான் வருத்தம்.

அதிலும் குறிப்பாக ரஜினியின் கோட்டை என்று கூறப்படும் சென்னையில் வசூல் கொஞ்சம் குறைவு தான். இவருக்கு அடுத்த படியாக இருக்கும் அஜித், விஜய் போன்ற நடிகர்களின் படங்களே 3 நாட்களின் சென்னையில் குறைந்தது 3 கோடி ரூபாய் வசூல் செய்யும்.ஆனால், லிங்கா வெளிவந்த 3 நாட்களின் அதிக திரையரங்குகளில் ரிலிஸ் ஆகியும் 2.59 கோடி தான் வசூல் செய்துள்ளது.

2014 ஆம் ஆண்டிற்கான உலக அழகியான தென்னாபிரிக்காவின் மருத்துவ மாணவி!!

2014 ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டத்தை 22 வயதான, தென்னாபிரிக்க அழகி ரோலன் ஸ்ட்ராஸ் தட்டிச் சென்றார். 64 வது உலக அழகிப் போட்டி லண்டனில் நேற்று நடைபெற்றது. இதில் 121 நாடுகள் பங்கேற்றன.

நேற்று நடந்த இறுதி அலங்கார அணிவகுப்பில் உலக அழகிக்கான மகுடம் அவருக்கு சூட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியை உலகம் முழுவதும் 100 கோடி பேர் தொலைக்காட்சியில் கண்டு களித்திருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

பட்டம் அறிவிக்கப்பட்டதும் ஆச்சர்யம் அடைந்த ஸ்ட்ராஸ் கைகளைத் தட்டி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு ”மிஸ் வேல்ட்” என்ற எழுத்துக்கள் கொண்ட ரிபனை, கடந்த வருடம் உலக அழகி பட்டம் வென்ற பிலிப்பைன்ஸ் நாட்டு உலக அழகி மேகன் யங் அணிவித்தார்.

பட்டம் பெற்ற ஸ்ட்ராஸ் “தென் ஆபிரிக்காவே இது உனக்காக” என்று கூறினார். இந்தப் புகழ், தனக்கு மிகப்பெரிய பொறுப்பு என அவர் தெரிவித்தார்.

1 2 3

சிறுவனின் பொய் சாட்சியத்தால் இளமையை தொலைத்த 3 நபர்கள் : ஓர் பரிதாபச் சம்பவம்!!

jail

அமெரிக்காவில் சிறுவன் கூறிய பொய் சாட்சியத்தால் 40 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்கள் தற்போது நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் 1975ம் ஆண்டில் ஒரு நாள், ஹரால்ட் பிராங்க்ஸ் என்பவரை 2 பேர் அமிலத்தை வீசி தாக்கினர். அவர்களில் ஒருவர் துப்பாக்கியாலும் சுட்டார். இந்தத் தாக்குதல் முடிந்த பிறகு அந்த 2 பேரையும் மூன்றாமவர் காரில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பவைத்தார்.

அதற்குப் பிறகு ஹரால்ட் பிராங்க்ஸ் இறந்துவிட்டார். பொலிசார் இந்தக் கொலை வழக்கை விசாரிக்கத் தொடங்கினர்.

ஹரால்டை தாக்கியதாகவும் கொன்றதாகவும் தொடரப்பட்ட இந்த வழக்கில், அரசுத்தரப்பின் முக்கிய சாட்சியாக 12 வயதுச் சிறுவன் எட்டி வெர்னான் சேர்த்துக்கொள்ளப்பட்டான்.

சம்பவத்தை நேரில் பார்த்த அவனுடைய சாட்சியத்தின் பேரில் ரோனி பிரிட்ஜ்மேன் (17) அவனுடைய அண்ணன் வைலி பிரிட்ஜ்மேன் (20), ரிக்கி ஜாக்சன் (19) ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

3 பேருக்கும் முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீட்டுக்குப் பிறகு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. 27 வருட சிறைவாசத்துக்குப் பிறகு 2003ல் ரோனி பிரிட்ஜ்மேன் பிணையில் விடுதலையானார்.

இந்தச் சம்பவத்தை 2011ல் சீன் என்ற அமெரிக்கப் பத்திரிகையின் நிருபர் கைல் ஸ்வென்சன் மீண்டும் புலனாய்வு செய்தார்.

இந்நிலையில், கடந்த மாதம் எட்டி வெர்னான் தன்னுடைய சாட்சியத்தைத் திருத்த விரும்புவதாக அறிவித்தார்.

சம்பவம் நடந்தபோது தான் சிறுவனாக இருந்ததாகவும், அந்தத் தாக்குதலைப் பார்க்கவே இல்லை என்றும், அப்போது பஸ்ஸில் போய்க்கொண்டிருந்ததாகவும் பொலிசாரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று நினைத்ததால் சாட்சி சொல்ல முன்வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த மூவரின் பெயரை பொலிசாரிடம் கூறியது தான்தான் என்றும், பதிலுக்கு வழக்கு விவரங்களைப் பொலிசார் தன்னிடம் கூறி, நீதிமன்றத்தில் எதை, எப்படிச் சொல்ல வேண்டும் என்று சொல்லிக்கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

இப்போதுதான் நான் சரியான செயலைச் செய்திருக்கிறேன், பொலிஸ் அதிகாரிகளை மீண்டும் அணுகி எல்லா உண்மைகளையும் கூறினேன் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து 40 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டனர்.

எங்களுடைய இளமை, வாழ்க்கை, மகிழ்ச்சி எல்லாமே கொள்ளைபோய்விட்டது என்று சோகம் ததும்ப இவர்கள் கதறி அழுதுள்ளனர்.

சவுதி அரேபியாவில் ஆண் வேடத்தில் கால்பந்து போட்டியை ரசித்த பெண் கைது!!

saudi women

சவுதி அரேபியாவில் கால்பந்து போட்டியை ரசிக்க ஆண் வேடமணிந்து சென்ற பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சவுதியில் பெண்களூக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கடைபிடிக்கபட்டு வருகின்றன. இந்நிலையில், ஜித்தா நகரில் அல்- ஜவ்காரா மைதானத்தில் ரியாத் நகரை சேர்ந்த அல்-சகாப் அணிக்கும் ஜித்தா நகரை சேர்ந்த அல்-எதிகேட் அணிக்கும் போட்டி நடந்தது.

இந்த போட்டியில் ரியாத் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதை பார்க்க பெண் ஒருவர், ஆண் போன்று மாறு வேடமிட்டு மைதானத்துக்குள் நுழைந்தார்.
அதற்கான டிக்கெட்டை ஒன்லைனில் எடுத்திருந்தார்.

மைதானத்துக்குள் ஒரு இருக்கை பகுதியில் அமர்ந்து போட்டியை ரசித்து பார்த்து கொண்டிருந்தார். அப்போது அருகே இருந்த ஒரு ஆண் நபர் அவரை அடையாளம் கண்டு பிடித்து பொலிசிற்கு தகவல் கொடுத்தார்.

அதை தொடர்ந்து அங்கு வந்த பொலிசார் தடையை மீறி கால்பந்து மைதானத்துக்குள் நுழைந்து போட்டியை பார்த்த அந்த பெண்ணை கைது செய்தனர்.

தற்போது அந்த பெண் கால்பந்து போட்டியை ரசித்து பார்த்த வீடியோ யூடியூப் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

கூகுள் மேப்பில் புதிய வசதி அறிமுகம்!!

Google

கூகுள் நிறுவனத்தின் பல்வேறு சேவைகளுள் கூகுள் மேப் சேவையும் பிரபல்யம் வாய்ந்ததாகும். சாதாரண பயணிகளுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் வழிகாட்டியாக திகழும் இச்சேவையில் தற்போது Highway Lange Guidance எனும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள நெடுஞ்சாலைகளை இலகுவாக இனங்காண முடியும்.

இச்சேவையானது முதன் முதலாக Germany, France, Italy, Spain, the UK மற்றும் Ireland ஆகிய நாடுகள் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனினும் விரைவில் ஏனைய நாடுகளுக்கும் இச்சேவை பரவலாக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

நாளைய ஒருநாள் போட்டியுடன் சொந்த மண்ணில் விடைபெறத் தயாராகும் சங்கக்கார!!

Sangakara

எதிர்வரும் உலகக்கிண்ணத் தொடருடன் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறப்போவதாக இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரா அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியுடனான 6வது ஒருநாள் போட்டியில் பெற்றி பெற்ற இலங்கை அணி தொடரையும் கைப்பற்றியது. இந்த போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சங்கக்காரா சதத்தினைப் பெற்றுக்கொண்டதுடன், சிறப்பாட்டக்காரராகவும் தெரிவானார்.

இந்நிலையில் எதிர்வரும் உலகக்கிண்ணத் தொடருடன் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான 7வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்தப் போட்டி சங்கக்காரா தனது செந்த மண்ணில் விளையாடும் கடைசி போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் அடுத்த சூப்பர் ஸ்டாரா : மீண்டும் சர்ச்சை கிளப்பிய பத்திரிக்கை!!

Ajith

சூப்பர் ஸ்டார் பட்டதிற்கு தமிழ் சினிமாவில் என்றும் போட்டி தான். இதில் முதலிடத்தில் இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய்.இதில் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்று ரஜினியின் அறிவிக்கப்பட்டத வாரிசு, அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித் தான், ரஜினியின் அனைத்து நல்ல குண நலன்களும் அவரிடம் உள்ளது.

மேலும் அவரை போலவே நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இவரின் ஆரம்பம், வீரம் படமும் 100 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. என்று அந்த கட்டுரை முடிகிறது. ஆனால், இந்த பதிப்பு அஜித்தின் எதிர் தரப்பை மிகவும் சீண்டிப் பார்த்துள்ளது.

தங்கள் குடும்பத்தை கவனிக்காத ரசிகர்கள் எனக்கு தேவை இல்லை : நடிகர் விஜய்!!

Kathi

நடிகர் விஜய் நடித்து வெளியான கத்தி படத்தின் வெற்றிவிழா, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா பாளை பெல் பள்ளி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்தவர்களை அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்சி ஆனந்த் வரவேற்றார்.

விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி வழங்கி பேசினார். விழா மேடைக்கு வந்ததும் விஜய் ரசிகர்களை நோக்கி கையசைத்தார். மேடை முன்பாக போடப்பட்டிருந்த நீண்ட நடைமேடையில் வந்து ரசிகர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். அவரை காண நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இருந்து ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர்.

விழாவில் விஜய்க்கு ரசிகர்கள் சார்பில் வீரவாள் பரிசளிக்கப்பட்டது. விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது..

ஒரு மனிதன் வாழ நிறைய தேவைகள் உள்ளன. முக்கியமான 3 தேவைகள் நெல்லை மண்ணில் உள்ளது. ‘திரு’ என்றால் மரியாதை, ‘நெல்’ என்றால் உணவு, ‘வேலி’ என்றால் பாதுகாப்பு. இதுதவிர 4வதாக ஒன்று உள்ளது. அதுதான் அல்வா.

நெல்லுக்கு வேலி கொடுத்த சாமிக்கு கோவில் கட்டி கும்பிடுவது திருநெல்வேலியில்தான். விவசாயத்துக்கு பெயர் பெற்ற நெல்லையில் கத்தி பட வெற்றி விழா கொண்டாடப்படுவது பெருமையாக உள்ளது.

வெற்றிக்கும், தோல்விக்கும் வித்தியாசம் உள்ளது. கடமையை செய்தால் வெற்றி. கடமைக்கு செய்தால் தோல்வி. இயக்குனர் முருகதாஸ் தனது கடமையை சரியாக செய்ததால் கத்தி படம் வெற்றி பெற்றுள்ளது. நானும் நடிகனாக எனது கடமையை சிறப்பாக செய்துள்ளேன்.

சினிமா என்பது கால்பந்து விளையாட்டை போன்றது. பத்து பேரின் பங்களிப்பு இருந்தால்தான் ஒரு கோல் போட முடியும். ஒருவர் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது. ஒரு கோல் போட 11 பேர் தடுப்பார்கள். பல மடங்கு எதிர்ப்பு இருக்கும். அதுதான் வாழ்க்கை. தட்டிபறிப்பவர்கள் வாழ்ந்ததில்லை. விட்டு கொடுப்பவர்கள் வீழ்ந்ததில்லை.

இன்றைய உலக சூழலில் தட்டியும் பறிக்க வேண்டாம், விட்டும் கொடுக்க வேண்டாம். வெட்ட வரும் எதிரியை அவர்கள் பாதையிலே சென்று தடுக்க வேண்டும். நல்லவன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என அனுபவத்தை கொடுக்கிறான். கெட்டவன் அவமானத்தை கொடுக்கிறான்.

என்னுடைய ரசிகர்கள் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும். குடும்பத்தை கவனிக்காமல் என் படத்தை மட்டும் ரசிக்கும் ரசிகர்கள் எனக்கு தேவையில்லை. எல்லோருக்கும் குடும்பம் முக்கியம். மனைவி கடவுள் தந்த வரம். தாய் கடவுளுக்கு நிகரான வரம். நண்பன் கடவுளுக்கு கூட கிடைக்காத வரம். எனவே அந்த உறவுகளை யாரும் இழந்துவிடக்கூடாது. எல்லாவற்றுக்கும் மேலானவர்கள் நீங்கள்.

காசு கொடுத்து படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனும் எனக்கு முதலாளிதான். 100 கோடி மக்கள் நிறைந்த இந்தியாவில் யாரோ ஒருவனாக வாழ இருந்த என்னை இன்று வெற்றி நாயகனாக்கி உயர்த்திய ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் பேசினார்.