மும்பையில் பாலியல் தொந்தரவு செய்த இயக்குனரின் கன்னத்தில் பெண் ஒருவர் அறை விட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாடல் வெளியீட்டு விழாக்களில் தான் பெரும்பாலான சர்ச்சைகள் தோன்றி வருகின்றன. பாலிவுட் நடிகை ராக்கி சவந்த் தனது தோழியான மனிஷா குமாரியுடன் மும்பையில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவிற்கு சென்றுள்ளார்.அங்கு சசீந்தர சர்மா என்ற இயக்குனர் மனிஷா குமாரியிடம் தவறாக நடக்க முயன்றதால் மேடையிலேயே இயக்குனரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதை சற்றும் எதிர்பாராத இயக்குனர் சர்மா, மனிஷாவை தாக்கியுள்ளார், மேலும் சர்மாவின் ஆதரவாளர்கள் மனிஷாவை தாக்க தொடங்கினர்.இதனைத் தொடர்ந்து மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்த மனிஷா, இயக்குனர் சர்மா தன்னிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றார். அதனால் அவரை நான் தாக்கினேன்.அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மும்பை பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.
வழக்கை பதிவு செய்த பொலிசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.பாடல் வெளியீட்டு விழாவில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்கப்பட்ட 1125 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிதெரிவித்தார்.
தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பிக்கப்பட்ட 4290 விண்ணப்பங்களில் 1125 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் முழுமை பெறாமல் காணப்படுவதனால் அவை நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஏற்றுக்கொள்ளப்பட்ட 3165 வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவத்தாட்சி அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய சிட்னி நகரத்தில் மார்டின் வீதியில் உள்ள லிண்டன்ட் கபே என்னும் கட்டிடத்துக்கு மேல் உள்ள விடுதியில் 20 பொது மக்கள் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் சிட்னியில் ஆயுதம் தாங்கியவர்களால் 20 பொதுமக்கள் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாடியில் ஒரு கருப்பு நிறத்திலான கொடியொன்று வெளியில் பறக்க விடப்பட்டுள்ளது. அந்தக் கொடியில் இஸ்லாமிய எழுத்துக்கள் காணப்படுகின்ற’து.
இதன் காரணமாக விமானங்கள் அனைத்தும் வேறு இடங்களுக்கு திசை மாற்றப்பட்டு வருகின்றது.
தற்போதைய தகவல்களின் பிரகாரம் 50 பொது மக்கள் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சிட்னி போலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், சிட்னி கபே கட்டடத்தில் சிறை பிடிக்கப்பட்டிருந்தவர்களி்ல் 3 பேர் அங்கிருந்து தப்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர்கள் தப்பி வந்தனரா அல்லது விடுதலை செய்யப்பட்டனரா என்பது வெளிவரவில்லை. இருப்பினும் அவர்கள் தப்பி வந்திருக்கலாம் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, இந்த செயலில் ஈடுபடும் நபர்களது நோக்கம் இன்னும் தெளிவில்லை என்றும், ஆனால் இது அரசியல் நோக்கமாக இருக்கலாம் என்றும் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய தனி அரசு போராட்டத்திற்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்துவரும் திட்டங்களுக்கு அவுஸ்திரேலியா பூரண ஆதரவளித்து வருகிறது.
பொது மக்கள் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கட்டிடத்தில் அமெரிக்க தொடர்பு அலுவலகமும் முன்னாள் பிரதமர் ஜோன் ஹொவார்டின் அலுவலகமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் நாம் உண்ணும் உணவுகளை பொறுத்தே நோய்கள் நம்மை அண்டாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். முறையான உணவுப் பழக்கங்களின் மூலமும், உடற்பயிற்சியின் மூலமும் சிறப்பாக வாழ்க்கை நடத்தலாம். இந்த உணவுகளை அடிக்கடி சமைத்து சாப்பிடுவதன் மூலம் நோய்களை அடித்து விரட்டலாம்.
பசலைக் கீரை
பசலைக் கீரையில் அதிகளவு அன்டி ஒக்சிடன்டுகள், இரும்பு மற்றும் விட்டமின் சத்துக்கள் அடங்கியுள்ளன. கண்களுக்கு மிகச் சிறந்த உணவான பசலைக் கீரை, இரத்த அழுத்தத்தை சீராக வைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
கிரீன் டீ
தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வருவது உடலுக்கு நன்மை பயக்கும்.
இதில் அதிகளவு அன்டி ஒக்சிடன்டுகள், விட்டமின் சி மற்றும் இ சத்துக்கள் அடங்கியுள்ளன.
உடல் எடையை குறைப்பதற்கு உதவும் கிரீன் டீ, இதயம் மற்றும் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதுடன், உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.
மீன்கள்
மீனில் நிறைந்துள்ள புரதங்கள் மற்றும் ஒமேகா- 3 அமிலங்கள் நோய்களில் இருந்து பாதுகாத்து ஆரோக்கியமான இதயத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றன. சால்மன், நெத்தலி மற்றும் மத்தி மீன்கள் ஏராளமான நன்மைகளை அளிப்பதுடன், நினைவிழப்பு மற்றும் கீல் வாதத்திலிருந்து பாதுகாக்கிறது.
பெர்ரி
பெர்ரி பழங்களில் நிறைந்துள்ள அன்டி ஒக்சிடன்டுகள் நோய்களை விரட்டியடித்து உடலை பாதுகாக்கிறது. ப்ளூ பெர்ரி பழங்கள் உடலில் கொழுப்பை கரைப்பதுடன், இதய நோய்கள் வராமலும் தடுக்கிறது. மேலும் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் நீரிழிவு மற்றும் புற்றுநோய்களில் இருந்து விடுதலை அளிக்கிறது.
தேங்காய்
சமையலறையை அலங்கரிக்கும் பொருளான தேங்காயில் எண்ணற்ற பலன்கள் அடங்கியுள்ளன. தேங்காய்ப் பாலில் உள்ள மாங்கனீஸ் சத்துக்கள் நீரிழிவு நோயிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் இதில் உள்ள பொஸ்பரஸ் எலும்புகளை உறுதியாக்குகிறது.
டார்க் சொக்லேட்
இதில் உள்ள அன்டி ஒக்சிடன்டுகள் முதுமையை தடுப்பதுடன், இதயம் மற்றும் மூளைக்கு சிறந்தது. மேலும் இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கிறது. இவற்றை சாப்பிடுவதால் மூளை சுறுசுறுப்பாக செயல்படுவதுடன், மறதிநோய் வராமல் தடுக்கிறது.
தயிர்
தயிர் நமது உடலுக்கு சிறந்த அருமருந்து என்றே சொல்லலாம், இதில் முக்கியமான விட்டமின்கள் மற்றும் புரதச் சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் உள்ள கல்சியம், புரோட்டீன் சத்துக்கள் எலும்புகளை வலுவாக்குகிறது. மேலும் இரத்த அழுத்தத்தை சீராக வைப்பதுடன், ஆரோக்கியமான இதயத்திற்கு வழிவகுக்கிறது.
ஐக்கிய அரபு இராச்சியம் – டுபாயில் 11 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்ததாக இலங்கையர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அல்குசேயின் என்ற கடையில் ஒக்டோபர் 7ம் திகதி இந்திய சிறுமியை வல்லுறவு செய்யும் நோக்கில் தொட்டு சேஸ்டை புரிந்ததாக சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். அதன்பின் சிறுமியின் பெற்றோர் அல்குசேயின் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில் 31 வயதான இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை ஜனவரி 6ம் திகதி இடம்பெறவுள்ளது. குறித்த இலங்கையர் சிறுமியை தொடும் காட்சிகள் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பியன்ஸ் கிண்ண ஹொக்கி போட்டியின் அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தில் சட்டையை கழற்றி தவறான செயல்களில் ஈடுபட்டனர்.
சம்பியன்ஸ் கிண்ண ஹொக்கி தொடரின் அரையிறுதிப் போட்டி ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் காலிறுதியில் பெல்ஜியத்தை வென்ற இந்திய அணி, அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான், இந்தியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.
போட்டியை வென்ற மகிழ்ச்சியில் பாகிஸ்தான் வீரர்கள் அரங்கத்தில் அமர்ந்திருந்த ரசிகர்களை பார்த்து நடுவிரலைக் காட்டி, தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் ஷெனாஸ் ஷேக் முயற்சி செய்தும் பாகிஸ்தான் அணி வீரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதைத் தொடர்ந்து அவர்கள் குழந்தைகள் போன்று நடந்து கொண்டனர் என்றும், நடந்த சம்பவத்திற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் எனவும் ஷேக் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மத நிந்தனை செய்ததாக கூறி சிரியாவில் 4 பேர் தலையைத் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் துண்டித்துக் கொன்றுள்ளனர்.
மேற்கு சிரியாவில் நடந்த இதனை சிரியாவில் மனித உரிமைகளைக் கண்காணித்து வரும் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. ஹாம்ஸ் என்ற நகருக்கே அருகே இந்த தண்டனையை பொதுமக்கள் மத்தியில் 4 ஆண்களுக்கு நிறைவேற்றியுள்ளனர்.
சிரியா மற்றும் ஈராக்கில் தங்களது பிடியில் உள்ள பகுதிகளில் இதுவரை நூற்றுக்கணக்கானோரை இதுபோல மத நிந்தனை செய்தது, மதக் கட்டுப்பாட்டை மீறியது, கள்ளக்காதல், ஓரினச் சேர்க்கை என்று பல்வேறு புகார்களின் பேரில் தலை துண்டித்தும், கற்களை வீசியும் கொன்றுள்ளனர்.
மேலும் சமீபத்தில் சிரியாவின் மன்பிஜ் நகரில், முறை தவறி உறவில் ஈடுபட்டதாக கூறி ஒரு ஆணையும், பெண்ணையும் கல்லால் அடித்துக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எபோலா நோய் தாக்குதலுக்குப் பலியானோர் எண்ணிக்கை 6,583 ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் செய்தியறிக்கையில், கடந்த டிசம்பர் 10ம் திகதியளவில், லைபீரியா, கினீ, சியரா லியோன் ஆகிய நாடுகளில் எபோலா நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,188 ஆக உள்ளது.
சியரா லியோனில் 8,069 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், 1,899 பேர் உயிரிழந்தனர். லைபீரியாவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,765 ஆக இருந்த நிலையில், 3,222 பேர் உயிரிழந்தனர்.
ஓராண்டுக்கு முன்னர் இந்நோய் அறிகுறி தென்பட்ட கினீ நாட்டில் இதுவரை 2,354 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,462 பேர் உயிரிழந்தனர்.
மாலி நாட்டில் 6 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அமெரிக்காவில் ஒருவரும், நைஜீரியாவில் 8 பேரும் உயிரிழந்தனர்.
ஸ்பெயின், செனகல் நாடுகளில் தலா ஒரு நபர் எபோலா நோயால் பாதிக்கப்பட்டனர்.
எபோலா சிகிச்சையில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட பல சுகாதாரப் பணியாளர்களும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 639 பேரிடம் நோய் பாதிப்பு உள்ளது தெரிய வந்த நிலையில், 349 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவுக்கு தபால்களை அனுப்பும் ’மூன் மெயில்’ என்ற சேவையை அமெரிக்க நிறுவனமான ஆஸ்ட்ரோபோடிக் அறிமுகப்படுத்தியுள்ளது.
பட்டமளிப்பு, திருமணம் மற்றும் பிறந்த நாள் என்று அன்புக்குரியவர்களுடனான நமது நினைவுகளை என்றும் பல நூற்றாண்டுகள் நிலவில் அழியாது காக்க முடியும் என்பதற்காக இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.
உலகின் எந்த மூலையிலுள்ள மக்களும் ஆஸ்ட்ரோபோடிக்கின் நிலவில் தரையிறங்க இருக்கும் விண்கலம் மூலம் தங்கள் நினைவு சின்னங்களை அனுப்பலாம் என அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜான் தோர்ன்டன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அந்நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்ட தகவலின் படி, தற்போது சிறிய அளவிலான நினைவு சின்னங்களை முதல் நிலவுப் பயணத்திற்காக சேகரிக்கத் தொடங்கியுள்ளோம்.
’மூன் கேப்சூல்’ எனப்படும் நிலவில் நமது பொருளை பாதுகாக்க பெட்டகம் ஒன்று தரப்படும் என தகவல் வெளியிட்டுள்ளது.
நாம் அனுப்ப நினைக்கும் பொருளின் எடைக்கேற்ப 460 டொலர் முதல் 26000 டொலர் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்கலம் தரையிறங்கிய உடன் நம் நினைவுச்சின்னத்தின் புகைப்படமும், காணொளியும் நமக்கு அனுப்பி வைக்கப்படும்.
சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த இலங்கை வீரர்களில் முதல் இடத்தில் இருக்கும் சனத் ஜெயசூர்யவை சங்கக்கார நெருங்கி வருகிறார். சனத் ஜெயசூர்யா 445 ஒருநாள் போட்டியில் விளையாடி 13,430 ஓட்டங்கள் எடுத்துள்ளார். சர்வதேச அளவில் அவர் 3வது இடத்தில் உள்ளார்.
சங்கக்கார 389 போட்டியில் 13,339 ஓட்டங்கள் எடுத்து 4வது இடத்தில் உள்ளார். சனத் ஜெயசூர்யவை நெருங்க அவருக்கு இன்னும் 91 ஓட்டங்கள் மட்டுமே தேவை.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 6வது ஒருநாள் போட்டியில் சங்கக்கார தனது 20வது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் அவர் சயீத் அன்வரை சமன் செய்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (12.12.2014) தம்புள்ளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வவுனியா பூந்தோட்டம்- பெரியார்குளத்தைச் சேர்ந்த சந்திரன் பாஸ்கரன் (ரெக்சி) என்ற 42 வயது நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தனது வாகனத்தில் மரக்கறிகளை ஏற்றி வரும்போது தம்புள்ளை பகுதியில் வைத்து இராணுவ வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. நெஞ்சு மற்றும் தலைப் பகுதியில் பலத்த காயங்களுக்குள்ளான இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
காணாமற் போனோரைக் கண்டறியும் ஆணைக்குழு இன்று 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை வவுனியா மாவட்டத்தில் சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளதாக ஆணைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.ஹெலி தெரிவித்துள்ளார்.
செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் இன்றும் நாளையும் காணாமல் போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு சாட்சியங்களை பதிவு செய்யும். 16,17 ஆம் திகதிகளில் வவுனியா பிரதேச செயலகத்தில் சாட்சியங்கள் பதிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூபின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு கட்டமாக, வவுனியா விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (12.12.2014) இடம்பெற்றது.
வவுனியா, பண்டாரிக்குளம் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அல்மதார் விளையாட்டுக்கழகம், ஸம் வித் யூத் விளையாட்டுக்கழகம், வானவில் விளையாட்டுக்கழகம், அரபியன் போயிஸ் கழகம் ஆகிய விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு உதவித்திட்டங்களும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.
வவுனியா நகரசபையின் பாதீடு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக நகரசபையின் செயலாளர் க.சத்தியசீலன் தெரிவித்தார். இது தெர்டாபில் அவர் தெரிவிக்கையில்,
வவுனியா நகரசபையின் 2015 ஆம் ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் 16 ஆம் திகதியில் இருந்து 20 ஆம் திகதிவரை மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். எமது அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் இப் பாதீட்டை மக்கள் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்க முடியும் என்பதுடன் தமது ஆட்சேபனைகளையும் தெரிவிக்க முடியும் எனவும் தெரிவித்தார் –
வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தினால் புதிய வேலர் சின்னக்குளத்தில் உள்ள மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் நேற்று சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
வட மாகாணசபையினால் அதன் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து, யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து மீளக்குடியேறியுள்ள இம் மக்களுக்கு தலா 25000 ரூபா பெறுமதியான கோழிக்குஞ்சுகள் மற்றும் அதற்கான தீவனம் போன்றவையே வழங்கப்பட்டிருந்தது.
மிகவும் வறுமைப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இவ்வுதவித்திட்டத்திற்கு அமைய புதிய வேலர் சின்னக்குளத்தில் 11 பேர் பயன்பெற்றுள்ளனர்.
பிரேசிலை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேடிக்கைக்காகவும், ஜாலிக்காகவும் 41 பேரை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலை சேர்ந்த 26 வயதான வாலிபர் சைல்சன் ஜோஸ் டாஸ் கிரேகாஸ்.
இவர் ஜாலிக்காக 41 பேரை கொலை செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார், இதில் 37 பேர் பெண்கள் ஆவர்.
கருப்பர் இனப் பெண்கள், வெள்ளையர் இனப் பெண்கள் என பாரபட்சம் பார்க்காமல் கொலை செய்துள்ளார், கொலை செய்வதற்கு முன்பு தான் குறிவைத்துள்ள பெண்களின் பின்னால் சிலநாட்கள் சென்று கண்காணித்து பின்னரே கொலை செய்வதாக பொலிஸ் கமிஷனர் ஹென்ரிக் மெடினா கூறியுள்ளார்.
மேலும் இவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள சைக்கோ இளைஞர் என்றும், பலரை கொலை செய்துள்ள போதிலும் 41 பேரை கொன்றதற்கான ஆதாரங்கள் மட்டுமே கிடைத்துள்ளது எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வாலிபர், கொலை செய்தால் தான் தனக்கு இரவு தூக்கமே வரும் என்றும், இல்லாவிட்டால் வீட்டுக்குள் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டே இருப்பேன் எனவும் கூறி மக்களை பதறவைத்துள்ளார்.
தற்போது கைது செய்து சிறையில் அடைபட்டிருக்கும் சைல்சனுக்கு, 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.