2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறுவனின் மம்மி!!

எகிப்தில் 2500 ஆண்டுகள் பழமையான 14 வயது சிறுவனின் மம்மி முதன் முறையாக திறக்கப்பட்டுள்ளது. பண்டைய கால எகிப்திய மதகுரு ஒருவரின் மகனான மினிர்டிஸ்(14) என்ற சிறுவனுடைய மம்மியை, அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் உள்ள அருங்காட்சியம் ஒன்றில் விஞ்ஞானிகள் திறந்துள்ளனர்.

மம்மி இருந்த சவப்பெட்டி தங்க வர்ணத்தால் பூசப்பட்டிருந்தது. மேலும் மம்மியின் கால் நன்கு பேணப்பட்ட நிலையில் இருந்ததை கண்ட விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வரும் 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம், லொஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் இந்த மம்மியை வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

1 2 3 4 5

தமிழ்நாட்டில் ரஜினிகாந்த் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம் என்ற கட்சி உதயம்!!

super star

தமிழ்நாட்டில் ரஜினிகாந்த் ரசிகர்கள் இணைந்து சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளனர்.

திருப்பூரில் ரஜினிகாந்த் ரசிகர்கள் இணைந்து தமிழ்நாடு ரஜினிகாந்த் பொது தொழிலாளர் சங்கம் என்ற சங்கத்தை கடந்த 1990ம் ஆண்டு உருவாக்கினார்கள், இதன் தலைவராக இருப்பவர் எஸ்.எஸ்.முருகேஷ்.

இச்சங்கத்தின் சார்பில் மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நேற்று மாலை திருப்பூர் ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் தலைவர் எஸ்.எஸ்.முருகேஷ் தலைமையில் நடந்தது.

திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கோவை, திண்டுக்கல், ஈரோடு உள்பட 14 மாவட்டத்தைச் சேர்ந்த மாநில செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சங்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றுவது என முடிவு செய்யப்பட்டதுடன், சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்த கட்சியில் ரஜினிகாந்தின் பெயரையோ, படத்தையோ பயன்படுத்துவது இல்லை என்றும், ரஜினிகாந்தின் பெயருக்கு எந்த வகையிலும் களங்கம் ஏற்படுத்தாமல் செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அந்த கட்சியின் மாநில பொதுச்செயலாளராக எஸ்.எஸ்.முருகேஷ் நியமிக்கப்பட்டார். கட்சியின் கொடியை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.முருகேஷ் வெளியிட்டார். நீலம், வெள்ளை, சிவப்பு நிற கொடியின் மத்தியில் நட்சத்திரம் இடம் பெற்றுள்ளது. இதில் காந்திஜி, நேதாஜி, பெரியார், காமராஜர் படம் அச்சிடப்பட்டு உள்ளது.

மத்திய கிழக்கில் துன்புறுத்தல்களுக்கு இலக்கான 81 பேர் நாடு திரும்பினர்!!

airport

மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்புக்காக சென்ற 81 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர். குறித்த 81 பேரும் அவர்கள் தொழில் புரியும் இடங்களில் துன்புறுத்தல்களுக்கு இலக்காகியதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்திற்கு அறிவித்ததையடுத்தே வேலைவாய்ப்பு திணைக்களம் அவர்களை இலங்கைக்கு வரவழைத்துள்ளது.

இதன்போது கட்டார் நாட்டிலிருந்து 31 ஆண்களும் சவுதி அரேபியாவிலிருந்து 21 பெண்களும் குவைத் நாட்டிலிருந்து 29 பேரும் இன்று 3 விமானங்களில் இலங்கைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு வேலைவாயப்பு திணைக்களம் இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை 4-2 என கைப்பற்றிய இலங்கை அணி!!

SL

இங்கிலாந்துக்கு எதிரான ஆறாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 90 ஓட்டங்களால் வெற்றியீ்ட்டியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.

இதில் முன்னதாக இடம்பெற்ற ஐந்து போட்டிகளில் இலங்கை மூன்றிலும் இங்கிலாந்து இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் 3-2 என இலங்கை முன்னிலையில் இருக்க, இரு அணிகளுக்கும் இடையிலான ஆறாவது ஒருநாள் போட்டி இன்று பல்லேகல மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியின் ஆரம்பதுடுப்பாட்ட வீரரரான மஹெல ஜெயவர்த்தன 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

எனினும் நிதானமாக ஆடிய டில்ஷான் 68 ஒட்டங்களுடன் வெளியேற, குமார் சங்கக்கார அதிரடியாக 112 ஓட்டங்களைக் குவித்தார்.

ஐம்பது ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கெட்டுக்களைப் பறிகொடுத்த இலங்கை 292 ஓட்டங்களைக் குவித்தது.

இதனையடுத்து 293 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து, 41.3 ஓவர்களிலேயே 202 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

அந்த அணி சார்பில் ஜோ ரூட் அதிகபட்சமாக 55 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் இலங்கை அணிசார்பில் சுரங்க லக்மால் 4 விக்கெட்டுக்களையும் சஜித்திர சேனாநாயக்க 3 விக்கெட்டுக்களையும் டில்ஷான் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.

இதன்படி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 4-2 என இலங்கை வசமாகியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இறுதி ஒருநாள் போட்டி எதிர்வரும் 16ம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஐந்தாவது முறையாகவும் உலக கிண்ணத் தொடரில் விளையாடவுள்ள மஹேல ஜெயவர்தன, அப்ரிடி!!

mahela_afridi

உலக கிண்ண போட்டித் தொடர் ஒன்றில் ஐந்தாவது முறையாகவும் மஹேல ஜயவர்த்தன, சயிட் அப்ரிடி போன்ற அனுபவமிக்க வீரர்கள் விளையாடுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

2015ம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் பெப்ரவரி 14ம் திகதி தொடக்கம் மார்ச் 29ம் திகதி வரை, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெறவுள்ளது.

இந்த உலக கிண்ணத்தில் விளையாடும் மிகுந்த அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஜயவர்த்தன, அப்ரிடி. இருவரும் ஐந்தாவது முறையாகவும் விளையாடுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) தெரிவித்து உள்ளது.

இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் ஜயவர்த்தனவும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் அப்ரிடியும் இந்த உலக கோப்பைக்கான 30 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றுள்ளனர். இருவரும் 15 பேர் கொண்ட அணியிலும் இடம்பெறுவார்கள்.

இதன்மூலம் அவர்கள் ஐந்தாவது உலக கிண்ணத்தில் விளையாடும் பெருமையை பெறுவார்கள்.

1999ம் ஆண்டு உலக கிண்ணத்திலிருந்து அவர்கள் தொடர்ந்து(2003, 2007, 2011) விளையாடி வருகிறார்கள். இதில் ஒருமுறை கூட இருவரும் தங்கள் அணிக்காக கிண்ணத்தை பெற்றுக் கொடுக்கவில்லை. இந்த முறை இருவரும் உலக கிண்ணத்தை பெற்றுக் கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்த ஜாவிட் மியான்டட், டெண்டுல்கர் ஆகியோர் தான் அதிகபட்சமாக 6 உலக கிண்ணத்தில் விளையாடி உள்ளனர். மியான்டட் 1975, 1979, 1983, 1987, 1992, 1996 ஆகிய உலக கிண்ணத்திலும், டெண்டுல்கர் 1992, 1996, 1999, 2003, 2007, 2011, ஆகிய உலக கிண்ணத்திலும் விளையாடி உள்ளார்.

இதில் 1992ல் பாகிஸ்தானும், 2011ல் இந்தியாவும் உலக கிண்ணத்தை வென்று இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியை தோற்கடித்த அவுஸ்திரேலியா!!

Aus

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

அடிலெய்டில் இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஐந்து நாட்களாக நடந்து வந்தது.

இந்நிலையில் இன்றைய ஐந்தாம் நாள் போட்டியில், வெறும் 11 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அவுஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவியது.

மதிய தேநீர் இடைவேளை வரை 205 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த இந்திய அணி, முரளி விஜய் 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததை தொடர்ந்து, வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது.

முடிவில் 315 ஓட்டங்கள் மட்டும் எடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை முடித்தது. அணித்தலைவர் விராட் கோலி (141) சதமடித்தது வீணானது.

அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் லயான் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது அந்த அணியின் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்தார். முதல் இன்னிங்ஸிலும் இவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

வவுனியா யங் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் வருடாந்த மின்னொளி உதைபந்தாட்ட ஆரம்ப நிகழ்வு!!

வவுனியா யங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் உறுபினர்களான அமரர்கள் சாந்தன், யூட்கஜன் ஞாபகார்த்தமாக 13ம் வருடமாக மின்னொளியில் நடத்தப்படும் உதைபந்தாட்ட ஆரம்ப நிகழ்வு வவுனியா வைரவபுளியங்குளம் யங் ஸ்டார் விளையாட்டு கழக மண்டபத்தில் தலைவர் ராஜன் தலைமையில் உணர்வு பூர்வமாக இடம் பெற்றது.

அமரர்கள் சாந்தன், யூட்கஜன் ஞாபகார்த்தமாக 13ம் வருடமாக நடத்தப்படும் உதைபந்தாட்டபோட்டிகள் இந்த முறை யங் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் 20ம் ஆண்டு நிறைவாக வருவது குறிப்பிட தக்கது.

வருடாவருடம் அமரர்கள் சாந்தன், யூட்கஜன் இருவரினதும் படங்களுக்கு முன்னால் மெழுகுதிரி ஏற்றி உணர்வு பூர்வமாக ஆரம்பிக்கும் இந்த நிகழ்வில் இம் முறை மெழுகுதிரிகளை யங் ஸ்டார் விளையாட்டு கழக ஸ்தாபகர்களும் ஆரம்பகால உறுபினர்களுமான அமலன் , சந்திரகுமார் (கண்ணன்) ஸ்ரீசங்கர் (பாபு ), ஜீவராஜ்(ஜீவன்), விஜயகுமார் (விஜயன்), ஜீவகுமார் (ஜீவன்), சுந்தரடாசன்(சுந்தர் ) ஆகியோர்களுடன்
விளையாட்டு கழக தலைவர் ராஜன் , செயலாளர் ஆனன், பொருளாளர் தீபன் , உறுபினர்களான நாகராஜன், மயூரன் இவர்களுடன் கோபால், சனா, கீதன், துசி, முகுந்தன், சொரூபன், கமலன் இவர்களுடன் விளையாட்டு கழக வீரர்களும் உறுபினர்களும் ஏற்றி வைத்து போட்டியை ஆரம்பித்து வைத்தனர்

முதல் போட்டியாக யங் ஸ்டார் விளையாட்டு கழகத்துக்கும் அல் இக்பால் விளையாட்டு கழகத்துக்கும் போட்டி நடைபெற்றது. இப் போட்டியில் யங் ஸ்டார் விளையாட்டு கழகம் 4-2 என்ற கோல் அடிப்படையில் வென்று வெற்றியுடன் போட்டியை தொடங்கியது .

IMG_2484 IMG_2487 IMG_2489 IMG_2496 IMG_2497 IMG_2502 IMG_2506

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல நகரங்களை படம்பிடிக்கும் கூகிள்!!

google_street_view

இலங்கையின் வீதி தோற்ற விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை கூகிள் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கமெராக்கள் பொருத்தப்பட்ட கார்கள் மூலம் இலங்கையின் வீதிகள் படம் பிடிக்கப்படும்.

இதன்மூலம், இலங்கையிலுள்ள எந்தவொரு இடத்தையும் கூகிள் இணையத்தளத்தில் தத்ரூபமாக பார்வையிடக்கூடிய வசதி கிடைக்கிறது. கூகிள் ஸ்ட்ரீட் வியூ என்ற சேவையில் 63 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றில் இலங்கையும் இணைந்துள்ளது.

இலங்கையில் யாழ்ப்பாணம், மாத்தறை, அருகம்பை முதலான பிரதேசங்களில் ஆரம்பிக்கப்படும் தரவு சேகரிப்பு திட்டம் விரைவில் முழு இலங்கையையும் உள்ளடக்கும் வகையில் விஸ்தரிக்கப்படவுள்ளதென கூகிள் நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான ஆன் லின் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்து வெளியிட்டார்.
இந்த வசதி மூலம் இலங்கையின் இயற்கை அழகை முழு உலகமும் பார்க்கக்கூடியதாக இருக்கும் என சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் டீ.எஸ்.ஜயவீர தெரிவித்தார்.

உள்ளுர் சுற்றுலா பயணிகளும் இணையத்தின் ஊடாக பல இடங்களை பார்க்கக்கூடியதாக இருக்கும் என அவர் கூறினார்.

அவுஸ்திரேலிய-இந்திய வீரர்களிடையே கடும் வாக்குவாதம்!!(வீடியோ)

kholi

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டத்தில் இந்திய, அவுஸ்திரேலிய வீரர்களுக்கு இடையே இருமுறை மைதானத்தில் கடும் வாக்குவாதங்கள் நடைபெற்றது.

தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் ஆட்டத்தின் 34வது ஓவரை வீச வருண் ஆரோன் அழைக்கப்பட்டார். அப்போது டேவிட் வார்னர் அந்த ஓவரின் 3வது பந்தை அடிக்க முயன்று ஆட்டமிழந்தார்.

இதனை வருண் ஆரோன் `கமோன் க மோன்’ என்று ஆக்ரோஷமாகக் கத்தி கொண்டாடினார். வார்னரும் குனிந்த தலையோடு பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார். ஆனால் நடுவருக்கு தவறான பந்து என்ற சந்தேகம் எழ வார்னரை நிற்கச் சொன்னார்.

பிறகு அது தவறான பந்து எனத் தெரிந்தது. வார்னர் உடனே க்ரீஸிற்கு திரும்பினார். அவர் சும்மா இல்லாமல் ‘கமோன் கமோன்’ என்று வருண் ஆரோனை நோக்கி கத்திய படியே வந்தார்.

மேலும் ஒரு பந்தை எதிர்கொண்ட பிறகும் `கமோன் கமோன்’ என்று மீண்டும் ஆரோனை வெறுப்பேற்றினார். இது தவானுக்கு பிடிக்காமல் போக அவருக்கும் வார்னருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

இதனையடுத்து சில வீரர்களும் அணித்தலைவர் விராட் கோலியும் சமாதானம் செய்ய நேரிட்டது. அதன் பிறகு சமாதானமாக ஆட்டம் சென்றது.

பிறகு, தேநீர் இடைவேளைக்குப் பிறகு வட்சன், மைக்கல் கிளார்க் விக்கெட்டுகள் விழுந்த பிறகு மீண்டும் ஒரு மோதல் ஏற்பட்டது. இந்த முறை ரோஹித் சர்மா நாயகன் ஆனார்.

ரோஹித் சர்மா வீசிய ஒரு பந்தை மேலேறி வந்து ஸ்டீவன் ஸ்மித் அடிக்க முயன்றார். ஆனால் பந்து அவருக்கு சிக்கவில்லை. பந்து அவரைக் கடந்து சென்று விடும் என்ற அச்சத்தில் இயல்பாக காலை நீட்டி அந்தப் பந்தை துடுப்பால் தடுத்தார் ஸ்மித். அது விக்கெட் என்பதற்கு வழியே இல்லை.

ஆனால், ரோஹித் நடுவரிடம் முறையீடு செய்தார். இது முழுவதும் நடுவருக்கும் பந்துவீச்சாளருக்கும் இடையிலானது. ஆனால் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய ஸ்டீவன் ஸ்மித் அங்கிருந்து ரோஹித் சர்மாவை நோக்கி ஏதோ கூற, ரோஹித் சர்மா பதிலுக்கு ‘வாட், வாட்’ என்று இருமுறை கோபமாக பேசினார்.

இதனையடுத்து மீண்டும் கோலி, நடுவர்கள், ரோஹித் சர்மா, புஜாரா, வார்னர் ஆகியோரிடையே சில பல வார்த்தைகள் பறிமாறிக்கொள்ளப்பட்டன.

இதன் மூலம் இந்தியா, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இந்த தொடர் வழக்கமான ஆக்ரோஷ சொற்பிரயோக அணுகுமுறைக்குத் திரும்பியுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

 

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் பெற்றோர் தின, ஒளி விழா!!

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் பெற்றோர் தின விழாவும் ஒளி விழாவும் இன்று (12.12) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் ஆரம்பமானது.

1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அமரர் செயலதிபர் உமாமகேஸ்வரன் ஞாபகார்த்த திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க முன்பள்ளியின் பொறுப்பாசிரியர் திருமதி கே.மீரா தலைமையில் நடைபெற்றது.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சமூக ஆர்வலர் திரு.த.நாகராஜா (லண்டன்) அவர்களின் அனுசரணையில் நடைபெற்ற பெற்றோர் தின மற்றும் ஒழி விழாவின் பிரதம விருந்தினர்களாக வவுனியா நகரசபையின் முன்னாள் நகரபிதாவும், வட மாகாண சபை உறுப்பினருமான திரு ஜி.ரி.லிங்கநாதன் (விசு) மற்றும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், வவுனியா மாவட்ட தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் இணைப்பாளருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) சிறப்பு விருந்தினராக தாண்டிக்குளம் கிராம சேவையாளர் திரு எஸ்.கோணேஸ்வரலிங்கம் அவர்களும்,

கௌரவ விருந்தினர்களாக வெங்கலச் செட்டிக்குள பிரதேச சபை உறுப்பினர் திரு க.ஜெகதீஸ்வரன்(சிவம்), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் திரு முத்தையா கண்ணதாசன், திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் திரு பா.பாலேந்திரன், திருநாவற்குள மாதர் கிராம அபிவிருத்திச் சங்க தலைவி திருமதி.சோ.நகுலேஸ்வரம்பிள்ளை, ஆசிரியர் ரகுபதி, கிராம அபிவிருத்தி சங்கத்தின் முன்னாள் செயலாளர் சர்மா, தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உறுப்பினர்கள், கிராம மக்கள், மாணவர்கள் என பெருந்திரளானோர் கலந்து இன்றைய மழலைகளின் நிகழ்வுகளை சிறப்பித்தனர்.

இவ் நிகழ்வில் மழலைகளின் கலை நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. எமது தேசத்தின் பாரம்பரிய கலை நிகழ்வுகளான காவடி, கரகாட்டம் மற்றும் பாடல்கள், சிறப்பு பேச்சுக்கள் என கண் கவரும் நிகழ்வுகளுடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

a href=”http://www.vavuniyanet.com/wp-content/uploads/2014/12/IMG_4856.jpg”>IMG_4856IMG_4858IMG_4879IMG_4910IMG_4932IMG_4936IMG_4898IMG_4902

பிரித்தானியாவை உலுக்கிய கோரப் புயலால் 17,000 பேர் பரிதவிப்பு!!

பிரித்தானியாவில் திடீரென வீசிய சூறாவளி புயலால், 17 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பிரித்தானியாவில் நேற்று காலை திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டதால், 130 கி.மீ. வேகத்தில் சூறாவளி புயல் வீசியுள்ளது. மேலும் இடியுடன் கூடிய மழையும் பொழிந்ததால் இஸ்சல்ஸ் (Esels) மற்றும் வடக்கே ஷெட்லாந்து (Shetland) தீவுப் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த புயலினால் ஏராளமான மின்கம்பங்களும், மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. சாலைகளில் கார்களும், வாகனங்களும் காற்றின் வேகத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளன.

வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தற்போது இப்பகுதியில் மின்சாரத்தை சரிபடுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக அந்நாட்டின் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

13 14

டோனியை முந்திய விராட் கோலி!!

Dhoni

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய கோலி இந்திய அணித்தலைவர் டோனியை முந்தியுள்ளார்.

சர்வதேச டெஸ்ட் அரங்கில் டோனி இதுவரை 88 போட்டிகளில் விளையாடி 6 சதம் அடித்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் அசத்திய கோலி 30 டெஸ்டில் 7வது சதத்தை அடித்து டோனியை ஓரங்கட்டியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா சென்றுள்ள தற்போதைய இந்திய அணியில் கோலி தான் அதிக சதம் அடித்தவராக இருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் புஜாரா (6) இருக்கிறார்.

இந்துக் கடவுள் சிவபெருமானின் பெயரில் நடந்த சூதாட்டம் : இந்துக்கள் கடும் எதிர்ப்பு!!

sivan

ஜேர்மனியில் உள்ள சூதாட்ட விடுதியில் சிவபெருமான் பெயரால் சூதாட்டம் நடத்தப்பட்டதால் அப்பகுதி இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியின் எஸ்பல்காம்ப் என்ற நகரில் உள்ள சூதாட்ட விடுதியில் உள்ள சூதாட்ட இயந்திரங்களில் சிவபெருமான் படம் பொறிக்கப்பட்டு இருந்துள்ளது. இதை அறிந்து அப்பகுதியில் உள்ள இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து இந்துக்களின் இந்த எதிர்ப்புக்கு கிறிஸ்தவர்களும், யூதர்களும், புத்த மதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா நவேதாவில் உள்ள ஐக்கிய கிறிஸ்தவ தேவாலயதின் மறைதிரு. ரிச்சட் எல்.ஸ்மித் இந்துக்களின் எதிர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் இதுகுறித்து கூறுகையில், சூதாட்ட இயந்திரங்களில் சிவபெருமான் படம் பொறிக்கப்பட்டது தங்கள் மத உணர்வை பாதிப்பதாக உள்ளதென இந்துக்கள் தெரிவித்துள்ள எதிர்ப்புக்கு நான் ஆதரவளிக்கிறேன்.

இவ்வாறு இந்து கடவுளின் பெயரையோ, படத்தையோ சூதாட்டத்தில் பயன்படுத்துவது பொருத்தமற்ற செயல். எனவே, இந்த சூதாட்ட விடுதியினர் இந்த போக்கை கைவிட்டு வேறு வகையில் தங்கள் தொழிலை வளர்க்க முயற்சி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தின் முன்னால் உயிருக்கு போராடும் மாடு!!

நேற்று காலை வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தின் முன்னால் உள்ள கழிவு நீர் செல்லும் கால்வாயில் தவறி விழுந்த மாடு ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.

அந்த மாட்டை கால்வாயில் இருந்து மீட்டு உயிர் காக்கும் சம்மந்த பட்ட அலுவலகங்களுக்கு நேரடியாகவும் தொலைபேசி ஊடாகவும் முறைப்பாடு செய்யப்பட போது செய்யப்பட்டும் எந்த விதமான உயிர் காக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ள படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

 

21

23

24

நான் ஏழையாக பிறந்ததால் ஏழைப்பெண்ணை மருமகளாக்கினேன் : வடிவேலு!!

vadivelu

ஏழை வீட்டு பெண்ணை மருமகளாக எடுத்ததில் பெருமைப்படுகிறேன் என்று நடிகர் வடிவேல் கூறியுள்ளார். நடிகர் வடிவேலுவின் மகன் சுப்பிரமணியனுக்கும், திருப்புவனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி புவனேஸ்வரிக்கும், மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் திருமணம் நடந்தது.

இந்த திருமணம் ரகசிய திருமணமா என்ற கேள்விக்கு பதிலளித்த வடிவேலு, சுப்பிரமணியன் எனக்கு மூத்த மகன். தலைமகன் என்பதால் தை மாதம் திருமணம் நடத்தக்கூடாது என்று சொன்னார்கள். மாசி மாதம் அவனுடைய பிறந்த மாதம் என்பதால், மாசியிலும் திருமணம் நடத்தமுடியாது. அதனால்தான் இந்த மாதத்தில் திருமணத்தை நடத்தினோம். இதில் ரகசியம் எதுவும் இல்லை.

குறுகிய காலத்தில் என் மகன் திருமணத்தை நடத்தியதால், சினிமா உலகைச் சேர்ந்தவர்கள் யாரையும் அழைக்கமுடியவில்லை.

மருமகள் புவனேஸ்வரி, என் மனைவி விசாலாட்சி வழியில் உறவுப்பெண். ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய அப்பா ஒரு பந்தல் தொழிலாளி.

நான் ஏழையாக பிறந்ததால், ஏழை வீட்டில் சம்பந்தம் செய்திருக்கிறேன், அன்னை மீனாட்சி அம்மன் அருளில், நான் பிறந்த மண்ணில்தான், என் மகள், மகன் இருவருக்கும் சம்பந்தம் செய்திருக்கிறேன்.

என் மருமகள் புவனேஸ்வரி திருமண வயதை அடையவில்லை என்று யாரோ செய்த புகாரின்பேரில், பொலிசார் மண்டபத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

புவனேஸ்வரிக்கு 19 வயது நிறைவடைந்து, 7 மாதங்கள் ஆகிறது, இதை ஆதாரத்துடன் நிரூபித்ததும் பொலிசார் வருத்தம் தெரிவித்தார்கள் என்று கூறியுள்ளார்.

அதிக பனிமூட்டம் காரணமாக விமானத்தை செலுத்த சிரமமாகவுள்ளது : விமானியின் இறுதிப் பதில்!!

அதிக பனிமூட்டமே இந்த விமான விபத்துக்கு காரணம் என கடுவலை நீதவான் தம்மிக்க ஹேமபால குறிப்பிட்டுள்ளார்.

விபத்து இடம்பெற முன்னரே பனி மூட்டம் நிலவுவதாகவும், சீராக விமானத்தைச் செலுத்த முடியாதிருப்பதாகவும் இரத்மலானை விமானப் படைத் தளத்தின் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு விமானிகள் தகவல் வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னரே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விமானம் விபத்துக்கு உள்ளாக முன்னர் குறித்த பிரதேசத்திலுள்ள மரமொன்றின் மீது மோதுண்டதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் விமானியான குருநாகல் – கொக்கரல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சமந்த அபேவர்தன உயிரிழந்திருப்பதாகவும், ஸ்ரீலங்கா விமானப் படையைச் சேர்ந்த தரங்க மற்றும் பீ.ஜீ. சாந்த ஆகியோரும் உயிரிழந்திருப்பதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

f1 f3