அத்துருகிரியவில் அன்ரனோவ் விமானம் விபத்துக்குள்ளானத்தில் நால்வர் பலி : மூன்று வீடுகள் சேதம்!!

கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரிய ஹோகந்தரவில் விமானமொன்று இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து தொடர்பான தகவலை சிவில் விமான சேவைகள் கட்டுப்பாட்டுத் திணைக்களம் உறுதி செய்துள்ளது.

அன்ரனோவ் 32 ரக விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விமான விபத்து காரணமாக இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.

6.20 மணியளவில் ஹோகந்தர கத்தரீன் பார்க் பகுதியில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விமானத்தில் நால்வர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அன்டனோவ் 32 ரக விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது. அன்டனோவ் 32 ரக விமானமொன்றே அத்துருகிரிய ஹோகந்தர பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை 5.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஹோகந்தர கத்தரின் பார்க் பகுதியில் விமான விபத்து காரணமாக பாரிய சுவாலைகளுடன் தீப்பற்றிக் கொண்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீயணைப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்கவிலிருந்து ரத்மலானை நோக்கிப் பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.

 

12 3

ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி!!

Eng

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகல விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.

நேற்று ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி வழங்கி சந்தர்ப்பத்தை அடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 239 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் இலங்கை சார்பில் குமார் சங்கக்கார 91 ஓட்டங்களையும் மத்திவ்ஸ் 40 ஓட்டங்களையும் தில்ஷான் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாட இருந்த நிலையில் மழை காரணமாக போட்டி இன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 49.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 240 ஓட்டங்கள் பெற்று வெற்றியடைந்தது.

இங்கிலாந்து சார்பில் டெய்லர் 68 ஓட்டங்களையும் ரூட் ஆட்டமிழக்காமல் 104 ஓட்டங்களையும் பெற்றனர்.

இவ்விரு அணிகளுக்கும் இடையில் இன்னும் இரு போட்டிகள் மீதமுள்ள நிலையில் இலங்கை மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

முதற்கட்ட இராணுவப் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறிய தமிழ் இளைஞர்கள்!!

இராணுவத்தின் 23 ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் முதலாவது பயிற்சிகளை நிறைவு செய்த 405 தமிழ் சிங்கள, முஸ்லிம் ஆகிய மூவின இராணுவ வீரர்களின் பயிற்சி நிறைவு நாள் நிகழ்வுகள் நேற்று பகல் புணாணையிலுள்ள படைப்பிரிவின் தலைமையகத்தில் நடைபெற்றன.

இந்தப் பயிற்சி நிறைவு நிகழ்வில், பிரதம அதிதியாக 23 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் டி.டி.யு.கே.ஹேட்டியாராய்ச்சி கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதைகளையும் மரியாதை வேட்டுக்களையும் ஏற்றுக் கொண்டார்.

பயிற்சிகளை நிறைவு செய்தவர்களில் 31 தமிழ் இளைஞர்களும் 7 முஸ்லிம் இளைஞர்களும் அடங்குகின்றனர். நாடு பூராகவும் இருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர்கள் நேற்று மூன்றரை மாத பயிற்சிகள் நிறைவடைந்த நிலையில் பயிற்சியின் போது தமது திறமைகளைக் காண்பித்த இராணுவ வீரர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

புதிய இராணுவ வீரார்களின் அணிவகுப்புகளை அடுத்து, பாண்ட் வாத்திய அணியினரின் இசை நிகழ்வும், இராணுவத்தினரின் விசேட உடற் பயிற்சி அணிவகுப்பும் நடைபெற்றது.

கொட்டும் மழையில் நடைபெற்ற இராணுவத்தினரின் பயிற்சி நிறைவு நாள் அணிவகுப்புகளின் போது அவர்களின் பெற்றோர்கள், உறவினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

1 2 3 4 5 6

இந்தியாவில் மருத்துவ கல்வியை தொடர மறுத்த நந்தினிக்கு சீன பல்கலைக்கழகத்தில் அனுமதி!!

nandhini

இந்தியாவில் மருத்துவ கல்வியை தொடர தடை விதிக்கப்பட்ட ஈழ அகதி நந்தினிக்கு சீனா பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்துள்ளது.

1990ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகத்துக்கு அகதியாக குடும்பத்துடன் சென்ற இவர் அரச்சலூர் நவரசம் மெட்ரிக் பாடசாலையில் சென்ற வருடம் உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்தி மருத்துவ கல்விக்கு தெரிவானார்.

இருப்பினும் இந்திய மருத்துவ சபையின் சட்டத்திட்டபடி அகதியாக வருபவர்கள் மருத்துவ கல்வி கறக்க முடியாது. என்பதனால் பொறியியல் கல்வியை கறக்க முடியுமென கூறப்பட்டது. ஆனால் அதற்கு நந்தினி மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இந்த நிலையில் இலங்கையை சேர்ந்த தனியார் அறக்கட்டளை நந்தினியின் நிலைமையை இணைய தளம் மூலம் அறிந்து கொண்டு. அவர்களை குடும்பத்துடன் இலங்கைக்கு திருப்பி அழைத்தனர்.

அதனை தொடர்ந்து சீனா நாட்டில் சென்னியாங் நகரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் குறித்த நிறுவனத்தின் உதவியுடன் மருத்துவ கல்வியை கற்று வருகின்றார்.

வவுனியா மாவட்ட சிறுவர் கழக தலைவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி!!

vv

வவுனியா மாவட்ட சிறுவர் கழக உறுப்பினர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப் பயிற்சி நெறியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் கழக்ஙகளின் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதேச செயலகத்தின் சிறுவர் உரிமை அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு முழு நாள் பயிற்சி நெறியில் கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.

இதனையடுத்து சிறுவர் கழக தலைவர்களிடம் கழகங்களின் சமூகம் சார் செயற்பாடுகளுக்கான திட்டங்கள் தொடர்பிலும் முன்மொழிவுகள் கேட்கப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது.

வவுனியா சிதம்பரபுரம் முகாமில் மரம் விழுந்து பெண் படுகாயம்!!

maram

வவுனியா, சிதம்பரபுரம் முகாம் மீது அருகில் இருந்த மரம் அடியோடு பாறி விழுந்ததால் முகாம் ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளதுடன் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் மீண்டும் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக வவுனியா, சிதம்பரபுரம் முகாம் ஒன்றின் அருகில் இருந்த மரம் ஒன்று நேற்று புதன்கிழமை முகாமின் மேல் பாறி விழுந்துள்ளது.

இதனால் முகாமின் கூரைப் பகுதி உட்பட அதன் சுவர்களும் முழுமையாக பாதிப்படைந்துள்ளன. சம்பவத்தின் போது குறித்த முகாமுக்குள் இருந்த பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். விக்கினேஸ்வரன் புஸ்பராணி (47) என்ற பெண்ணே காயமடைந்தவராவார். இவர் தற்போது சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

கோலியின் ஹெல்மெட்டை பதம் பார்த்த பந்து : பதறிய அவுஸ்திரேலிய வீரர்கள்!!

ind1

இந்திய அணித்தலைவர் விராட் கோலியின் ஹெல்மெட்டை, மிட்சல் ஜோன்சன் வீசிய பவுன்சர் தாக்கியதால் அவுஸ்திரேலிய வீரர்கள் பதறினர்.

இந்தியா – அவுஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

முதல் இன்னிங்ஸை அவுஸ்திரேலிய அணி முடிக்க, இந்தியா தற்போது தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.

இந்தியா 53 ஓட்டங்கள் குவித்த நிலையில் முரளிவிஜய் மிட்சல் ஜோன்சன் பந்தில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து விராட் கோலி களமிறங்கினார்.

விராட் கோலி சந்தித்த முதல் பந்தை மிட்சல் ஜோன்சன் பவுன்சராக வீசினார். அதை தவிர்க்க முயன்றும், ஹெல்மெட்டில் அடி வாங்கினார் கோலி.

அதிர்ச்சியில் உறைந்த கோலி சிறிது நேரத்தில் நிதானித்தார். ஆனால் அடுத்த நொடியே சுற்றியிருந்த அவுஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் கோலி அருகே பதறியடித்து வந்து அவரிடம் நலம் விசாரித்தனர்.

இதனால் மிட்சல் ஜோன்சன் சற்று பதற்றமடைய, அணித்தலைவர் மைக்கல் கிளார்க் தட்டிக் கொடுத்து பதற்றமடைய வேண்டாம் என ஆறுதல் தெரிவித்தார்.

சில வாரங்களுக்கு முன் அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸ், பவுன்சர் பந்து தாக்கியதால் மரணமடைந்தார். இந்த சோக சம்பவத்தில் இருந்து அவுஸ்திரேலிய வீரர்கள் மெதுவாக மீண்டு வரும் வேளையில் இந்த நிகழ்வு அவர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

எதிரணி வீரர்களை தூண்டி விட்டு களத்தில் மோசமான சந்திக்க வைக்கும் முயற்சிக்கு பெயர் போன அவுஸ்திரேலிய அணியின் மனப்பான்மை, பிலிப் ஹியூக்ஸ் மரணத்திற்கு பிறகு மாறி இருப்பது இந்த சம்பவத்தில் இருந்தே நன்றாக தெரிகிறது.

மைனர் பெண்ணை மணந்த வடிவேலுவின் மகன் : திருமண வீட்டில் நடைபெற்ற பரபரப்பு சம்பவம்!!

vadivelu

கொமடி நடிகர் வடிவேலு மகன் திருமணத்தில் கொஞ்சம் கலாட்டா நடந்துள்ளது. வடிவேலுக்கு கன்னிகா பரமேஸ்வரி, கார்த்திகா, கலைவாணி ஆகிய மகள்களும், வி.சுப்பிரமணி என்ற மகனும் உள்ளனர்.

சுப்பிரமணிக்கும், திருப்புவனத்தை சேர்ந்த கல்லூரி மாணவி வி.புவனேஸ்வரிக்கும் திருமணம் நிச்சயமானது.

இவர்கள் திருமணம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று நடந்தது இந்த திருமணத்துக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் யாரும் அழைக்கப்படவில்லை.

வடிவேலுவின் சொந்த ஊரான ஐராவதநல்லூர் ஊரைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தனர்.

இந்த நிலையில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் தல்லாகுளம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் பொலிசார் திருமண மண்டபத்திற்குள் திடீரென புகுந்தனர்.
அவர்கள் மணமகள் புவனேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர்.

புவனேஸ்வரி மைனர் பெண் என்றும், பணத்துக்காக அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி இந்த திருமணத்தை நடத்துவதாக வந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது எனவும் கூறப்பட்டது.

விசாரணைக்கு ஒத்துழைத்த நடிகர் வடிவேலு சிவகங்கை மாவட்ட கல்வி அதிகாரியை தொடர்பு கொண்டு திருப்புவனம் பள்ளியில் புவனேஸ்வரியின் சான்றிதழை ஆய்வு செய்யும்படி கேட்டார்.

அப்போது புவனேஸ்வரிக்கு 18 வயது பூர்த்தியாகி 7 மாதங்கள் ஆகிவிட்டன என்பது உறுதி செய்யப்பட்டது. யாரோ உள்நோக்கத்துடன் புகார் செய்திருப்பதாக பொலிசாரிடம் நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.இதையடுத்து பொலிசார் மண்டபத்தை விட்டு வெளியேறினர்.

தமிழர்களை ஏமாளியாக பார்க்கும் குஷ்பு : பிரபல இயக்குனர்!!

Kushuboo

நடிகை குஷ்பு, தமிழர்களை ஏமாளியாக பார்க்கிறார் என்று இயக்குனர் தங்கர் பச்சான் கூறியுள்ளார். திமுகவில் இருந்து பிரிந்து காங்கிரஸில் இணைந்துள்ள குஷ்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள தங்கர் பச்சான், தமிழ்நாட்டிற்கு பிழைக்க வந்த அவர், இந்த மக்கள் மூலமாக அதிக பணம் சம்பாதித்துள்ளார்.

அந்த பணத்தை வைத்து அவர் மக்களுக்கு என்ன செய்தார் அல்லது திமுகவில் இருந்து கொண்டு மக்களுக்கு என்ன சேவை செய்தார். தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள அவர், இனி மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்.

அதுமட்டுமல்லாமல் அவர் தமிழர்களை ஏமாளியாகவும், சுரணையற்றவர்களாகவும் தான் பார்க்கிறார், இதுதான் அவர் தமிழர்களுக்கு கொடுக்கும் மரியாதை எனக் கூறியுள்ளார்.

மறுமணம் செய்த தாயை கோடாரியால் வெட்டி கொன்ற மகன்!!

murder

பாகிஸ்தானில் 2வது திருமணம் செய்த தாயை கோடாரியால் வெட்டி கொன்ற மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள ஸ்வாத் மாவட்டத்தில் குலாம் பாத்திமா என்ற பெண் வசித்து வந்துள்ளார். தன் கணவரை இழந்து, விதவையாக வாழ்ந்த வந்த இப்பெண் கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தாரின் பலத்த எதிர்ப்புக்கிடையே ஃபசல் ரசாக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதன்பின் அதே மாவட்டத்தில் உள்ள மல்கானா மோர் பகுதியில் கணவர் மற்றும் அவர் மூலம் பெற்றெடுத்த 9 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவரது முதலாவது கணவனின் மகன் ஒருவர், சில நாட்களுக்கு முன்பு தாய் பாசத்தில் பாத்திமாவை காண வந்தாக கூறி, அவரது வீட்டில் தங்கியுள்ளான்.

இதற்கிடையே கடந்த 8ம் திகதி உணவில் மருந்து கலந்து பாத்திமா, அவரது கணவர் மற்றும் குழந்தைகள் உட்பட 6 பேரை ஒரு கும்பலின் உதவியுடன் கோடாரியால் வெட்டி கொன்றுள்ளான்.

இச்சம்பவத்தில் பாத்திமா மற்றும் அவரது கணவர் மற்றும் 4 குழந்தைகள் பரிதாபமாய் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 5 குழந்தைகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது தலைமறைவாகியுள்ள குற்றவாளியையும், அவனது கூட்டாளிகளையும் பிடிக்க ஸ்வாத் மாவட்ட பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சவுதியில் பணிப்பெண் தலை துண்டித்து படுகொலை!!

Saudi

சவுதியில் பணிப்பெண் ஒருவருக்கு வாளால் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. எதியோப்பியாவை சேர்ந்த கடிஜா பின்ட் மொஹமட் இஸா என்ற பெண்ணை தம்பதியினர் ஒருவர் தங்களது குழந்தையை பார்த்துக் கொள்ள பணிப்பெண்ணாய் அமர்த்தியிருந்தனர்.

இந்நிலையில் இவர் தான் பார்த்துக் கொள்ளும் அல்ஜாஸி பின்ட் மொஹமட் பின் பஹ்ட் அல்–ஹர்பி (3) என்ற குழந்தை தூங்கி கொண்டிருக்கும் வேளையில், அதை 30 முறை கத்தியால் குத்தியுள்ளார்.

இந்தப் படுகொலை செய்ததையடுத்து தப்பி சென்ற கடிஜா, பொலிசாரின் தீவிர தேடுதலில் பிடிப்பட்டுள்ளார். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய கடிஜாவுக்கு, வாளால் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இறுதியில் சவுதி அரேபியாவின் வடகிழக்கு நகரான, ஹபார் அல்– பாதினில் இவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இவருடன் சேர்த்து இந்த வருடம் சவூதியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

விராத் கோலியின் களவியூகத்தை கிண்டல் செய்த ஷேன் வோன்!!

kholi

அடிலெய்ட் டெஸ்டின் முதல் நாளில் இந்திய அணித்தலைவர் விராத் கோலி அமைத்த களவியூகம் பற்றி ஷேன் வோன் நகைச்சுவையான கருத்தை தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய வீரர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் ஏற்றவாறு அணித்தலைவர் கோலி நன்றாகவே களவியூகம் அமைத்தார். பந்துவீச்சாளர்களுக்கு எந்த இடத்தில் பந்தை பிட்ச் செய்வது என்பதைக் கண்டுபிடிக்கவே நேரம் ஆகிவிட்டது.

அதே சமயம் இசாந்த் சர்மா மட்டுமே சரியான இடத்தில் பிட்ச் செய்து பந்தை வீசிக் கொண்டிருந்தார். முதல் நாளில் தேநீர் இடைவேளைக்குப் பிறகான ஆட்டத்தில் விராத் கோலி அமைத்த களவியூகம் பற்றி ஷேன் வோன் கூறுகையில்,

அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் முதல் நாள் ஆட்டம் எப்பவும் இப்படித்தான் ஆகும்.
30 டிகிரியில் வெயில். தார்ச்சாலை போல ஆடுகளம். இது தவிர விசித்திரமாக முதல் ஸ்லிப்பும் இல்லாமல் 2 ஆம் ஸ்லிப்பும் இல்லாமல் ஒன்றரை ஸ்லிப் அதை விட்டால் 3வது ஸ்லிப் என்பதையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.

கனடாவை தாக்கிய சக்திவாய்ந்த புயல் : தவிக்கும் மக்கள்!!

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தெற்கு கரையோரப்பகுதியை தாக்கிய சக்திவாய்ந்த புயலால் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் செவ்வாய் கிழமையன்று காலை, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தெற்கு கரையோரப்பகுதியை சக்திவாய்ந்த மித வெப்பமண்டல புயல் தாக்கி்யுள்ளது.

இதனால் ஏற்பட்ட பலத்த காற்றினால் படகுச் சேவைகள் ரத்துச்செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். பலத்த மழையினால் வீதிகள் மற்றும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது.

பிற்பகல் அளவில் புயலின் வேகம் சற்று தளரந்திருந்த போதும் பல இடங்களில் செவ்வாய்கிழமை மீண்டும் திரும்பி புதன்கிழமை காலை வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்கூவர் ஐலன்ட் கிழக்கு கரை, கோட்டெனி நகர் பகுதிகளில் ஒரு அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு நகரின் பல வீதிகள் மூடப்பட்டது.

மேலும், ஆறுகளும் சிற்றோடைகளும் தொடர்ந்தும் உயரும் என எதிர்பார்க்கப்படுவதால் வன்கூவர் பணிக்குழவினர் வெள்ளப்பெருக்கை தடுக்க மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

c c1 c2 c3

கைதிகளை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்த அமெரிக்க உளவுத்துறையின் ரகசியங்கள் அம்பலம்!!

அமெரிக்க உளவுத்துறை சிஐஏ தீவிரவாத சந்தேக நபர்களை விசாரணையில் என்ற பெயரில் சித்ரவதை செய்திருப்பதாக யு.எஸ். செனட் புலனாய்வு குழு குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் விவகாரம் தொடர்பாக அல்கொய்தா இயக்கத்தினர் என்று சந்தேகிக்கப்பட்ட நபர்களை கைது செய்து கியூபாவின் குவாண்டனாமோ ரகசிய சிறையில் சிஐஏ அடைத்தது.

அவர்களிடமிருந்து அல்கொய்தாவில் எதிர்கால திட்டங்களை அறிந்து கொள்வதாக கூறிய சிஐஏ மோசமான சித்திரவதைகளை கையாண்டது அவ்வப்போது சர்ச்சையாக வெளிவந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் சிஐஏவின் இந்த சித்திரவதைகள் குறித்து விசாரணை நடத்திய அமெரிக்காவின் செனட் புலனாய்வுக் குழு தற்போது சுமார் 500 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதனை இக்குழுவின் தலைவர் டையான் பெயின்ஸ்டைன் நேற்று இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, விசாரணை கைதிகளை மாதக் கணக்கில் தூங்கவிடாமல் நிர்வாணப்படுத்தி அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

குறுகிய சங்கிலி ஒன்றின் மீது நிற்க வைத்து பல மணிநேரம் குனிந்தே நிற்கும் படி செய்தும் உள்ளனர்.
பல கைதிகளை சங்கிலிகளால் கட்டிப் போட்டு மலத் துவாரம் வழியே நீர் மற்றும் உணவை செலுத்தி மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்துள்ளனர்.

இதில் ஒரு விசாரணைக் கைதி மரணமடைந்தும் போயுள்ளார்.
உண்மையை வரவழைக்க நாய்களை காது அருகே குரைக்க விடுவது, பாடல்களை மிக அதிக சப்தமாக பாடவிடுவது.
இப்படி கைதிகளை சங்கிலிகளால் கட்டிப் போட்டு நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்தும் அவர்களிடம் இருந்து எந்த ஒரு உருப்படியான தகவலையும் பெறவும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

ஆனால் சிஐஏவின் இயக்குநர் ஜான் ப்ரென்னன், தாங்கள் கடைபிடித்த விசாரணை முறை சரியானதே, விசாரணை கைதிகளிடம் இருந்து தேவையான தகவல்களைப் பெற்றோம் என கூறியுள்ளார்.

மேலும், சிஐஏவின் இந்த சித்திரவதை நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார்.

1 2 3 4 5 6

அரச கரும மொழியை அமுலாக்குமாறு வவுனியா நகரசபையிடம் மனு கையளிப்பு!!

va

வவுனியா நகரசபைக்குட்பட்ட வர்த்தக நிலையங்களிலும் வீதி விளம்பர பலகைகளிலும் அரச கரும மொழியைப் பயன்படுத்துமாறு கோரி மனித உரிமைகள் தினமான இன்று கிராம முகாமைத்துவத்திற்கான நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நகரசபையிடம் மனுகையளிக்கப்பட்டது.

இது தொடர்பில் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கையில்- இன்று மனித உரிமை தினமாகும். இன்றைய தினத்தில் எமது மொழி உரிமையைப் பெறும் நோக்குடன் முதல் கட்டமாக வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரச, தனியார், பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளையும் பயன்படுத்தவும், வர்த்தக விளம்பர பலகைகளிலும் இரு மொழிகளை அமுல்படுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

வவுனியா மாவட்டம் மூவின மக்களைக் கொண்ட இரு மொழி பேசும் பகுதியாகும். ஒரு மொழியைப் பயன்படுத்துவதால் எமது மொழி உரிமை மீறப்படுகிறது. எனவே இரு மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு கோரியுள்ளோம். இதனை வவுனியா நகரசபை தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடைமுறைப்படுத்தி உதவுமாறு கேட்டுள்ளோம் என்றனர்.

வவுனியா நகரசபை வாயிலில் இருந்து ஊர்வலமாக சென்ற ஏற்பாட்டாளர்கள் நகரசபை நிர்வாக உத்தியோகத்தர் என்.எஸ்.கிருஸ்ணனிடம் மனுவைக் கையளித்தனர். இதில் மொழிச் சங்க உறுப்பினர்கள், மொழி ஆர்வலர்கள், கிராம முகாமைத்துவத்திற்கான சம்மேளனத்தின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் வட மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களால் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவி!!

கடந்த கால கொடூர யுத்தம் வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை முடக்குவதில் முக்கிய பங்கெடுத்தமை கடந்த கால வரலாறாகும்.

யுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களாலும் செல் தாக்குதல்களாலும் காலை இழந்த மகனுடனும் நெஞ்சிலே செல் துண்டுகளைச் சுமந்து துன்பமுறும் மகளுடனும் வாழ்ந்து வரும் கட்டையர்குளம், சாஸ்த்ரி கூழாங்குளத்தைச் சேர்ந்த திரு.இ.காந்திநாதன் குடும்பத்தின் சுய தொழில் விருத்திக்காக வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ இ.இந்திரராசா அவர்கள் ஒரு தொகைப் பணத்தை வழங்கியுள்ளார்.

இந் நிதியின் மூலம் 40000 ரூபா பெறுமதியான நல்லின கறவைப் பசு மாடு கொள்வனவு செய்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வறுமைக் கோட்டின்கீழ் இருக்கும் இக்குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக இந்நிதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

SAM_2936 SAM_2939SAM_2928