ஐ.எஸ். அமைப்பினர் மதம் மாற மறுத்த 4 கிறிஸ்துவ குழந்தைகளின் தலைகளை கொய்ததாக பாக்தாதில் பணியாற்றும் பிரித்தானிய பாதிரியார் தெரிவித்துள்ளார்.
பாக்தாதில் பணியாற்றும் கெனான் ஆண்ட்ரூ வைட் என்ற பாதிரியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், பாக்தாத் அருகே இயங்கும் ஆர்தோடாக்ஸ் கிறிஸ்துவ கூட்டமைப்பு வளாகத்தை ஐ.எஸ். அமைப்பினர் தங்களது கைவசம் கொண்டு வந்துவிட்டனர். மேலும், அவர்கள் சிலரிடம் மதம் மாற கூறுகின்றனர், அதனை மறுப்பவர்களின் குழந்தைகளின் தலையை கொய்கின்றனர்.
எனக்கு தெரிந்த 15 வயதுக்கு உட்பட்ட 4 குழந்தைகளை இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்ற அவர்கள் வலியுறுத்தினர். அதனை மறுத்ததால் அவர்களது தலை கொய்யப்பட்டது.
மேலும், இங்கிருக்கும் பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் எங்களது நண்பர்கள் என்றும் இஸ்லாமியர்களுக்கு இதே நிலை தான் உள்ளது எனவும் கூறியுள்ளார்.
பாண்டவர் பூமி, இயற்கை, மாஞ்சாவேலு, தடையற தாக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அருண் விஜய். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் என்னை அறிந்தால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் அருண் விஜய்யின் கெட்டப் ரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் சிக்ஸ் பேக் உடலமைப்பாக மாற்றியுள்ளது. இதற்காக 6 மாத காலமாக ஒரு நாளைக்கு சுமார் 6 முதல் 7 மணி நேரம் வரை ஜிம்மில் உடற்பயிற்சி செய்திருக்கிறார்.
இந்த படம் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்கமுடியாத படமாகவும், திருப்புமுனை ஏற்படுத்தக்கூடிய படமாகவும் இருக்கும் என்றும் இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்றும் அருண் விஜய் நம்புகிறார்.
ரஜினி-அனுஷ்கா-சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் உருவாகியுள்ள லிங்கா படம் வரும் டிசம்பர் 12ம் திகதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பாலாஜி ஸ்டுடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் லிங்கா படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், தெலுங்கு மொழியில் நடிகர்கள் சிரஞ்சீவி, சோனாலி பிந்த்ரே உள்பட பலர் நடித்த இந்திரா படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை பெற்றுள்ளேன். இந்த படத்தின் கதையும், ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா படத்தின் கதையும் ஒன்றுபோல் உள்ளது.
இந்திரா படத்தின் கதையை அப்படியே எடுத்து லிங்கா படத்தை எடுத்துள்ளனர். எனவே, லிங்கா படம் வெளியானால் எங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே, லிங்கா படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும். இந்திரா மற்றும் லிங்கா படங்களை பார்த்து கதை குறித்து முடிவு செய்ய வக்கீல் கமிஷன் அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லிங்கா படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பதில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், லிங்கா படத்தின் இயக்குனர் பணியை மட்டுமே செய்துள்ளேன். தெலுங்கில் வெளியான இந்திரா படத்தின் கதைக்கும் லிங்கா படத்தின் கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்தியாவில் உள்ள அணைகள் குறித்து திரைப்படம் எடுக்க எல்லாருக்கும் உரிமை உள்ளது. யார் வேண்டுமென்றாலும் கதை மற்றும் திரைக்கதையை எழுதலாம்.
இந்த வழக்கை தொடர்வதன் மூலம், லிங்கா படத்தில் பணியாற்றும் அனைவரையும் மிரட்டும் விதமான நடவடிக்கையில் மனுதாரர் இறங்கியுள்ளார். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சுப்பையா, லிங்கா படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க மறுத்து, வழக்கு விசாரணை வருகிற 12ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
நடிகர் சங்கம் பிரச்சனை தற்போது உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளது. நாசர், விஷால் தலைமையில் இளம் நடிகர்கள் பட்டாளம் ஒரு பக்கம், சரத்குமார், ராதா ரவி என இவர்கள் ஒரு பக்கமாக பிரிந்து உள்ளனர்.
இந்நிலையில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், கோவை உட்பட 16 இடங்களில் நாடக நடிகர் சங்கங்கள் உள்ளன. இவை தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் இணைக்கப்பட்ட அமைப்புகள் என்பதால், நடிகர் சங்கத் தேர்தலில் நாடக நடிகர்களும் வாக்களிப்பார்கள்.
நாடக நடிகர்கள் பெரும்பாலும் ராதா ரவிக்கே தங்கள் ஆதரவுகளை தருவார்கள்.தற்போது தமிழ் நாடு நாடக நடிகர் சங்க துணைத் தலைவர் கலைமணி பேசும்போது, “நாடக நடிகர்களுக்காக போராடி வருகிற சரத்குமார், ராதாரவி போன்றவர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்தே ஒதுக்க விஷால் போன்ற இளைய நடிகர்கள் முயற்சி செய்கிறார்கள். நாடக நடிகர்களை மன்சூர் அலிகான் இழிவாகப் பேசுகிறார்.
நாடக நடிகர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உட்கார வைத்தவர் ராதா ரவி. அவர் இல்லை என்றால், நமக்கு சங்கம் எங்கிருக்கிறது என்றே தெரிந்திருக்காது. சரத்குமார், ராதாரவி ஆகியோரது கரங்களை நாம் வலுப்படுத்த வேண்டும். சங்கத்துக்கு எதிராகப் பேசும் விஷால், மன்சூர் அலிகானை கண்டிக்கிறோம். என்று கூறியுள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்ட ஏரி இருப்பதை நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் படம்பிடித்து அனுப்பியுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு முதல் நாசாவின் க்யூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள “கேல் கிரேட்டர்”(Gale Crater) பகுதியில் தரையிறங்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இங்கு சுமார் 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தின் பூமத்திய ரேகைக்கு அருகே விண்கல் ஒன்று மோதியதில் 96 மைல் பரப்பளவு கொண்ட பிரம்மாண்டமான பள்ளம் உருவானதை இந்த விண்கலம் படம் பிடித்து அனுப்பியுள்ளது.
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், 3 மைல் உயரம் கொண்ட மவுண்ட் ஷார்ப் (Mount Sharp) என்ற மலையிலிருந்து வரும் நீரானது கேல் பள்ளத்தாக்கின் மையப்பகுதிக்கு வந்து சேர்கிறது.
அந்த மலை அடுக்கடுக்கான படிவப்பாறைகளால் அடுக்கப்பட்ட அமைப்பைக் கொண்டிருப்பது, கேல் பள்ளத்தாக்கை நாசாவின் இலக்காக நிர்ணயித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது க்யூரியாசிட்டி விண்கலம் அந்த மலை மீது ஏறத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பூமியில் உயிர்கள் வாழ்வது போல் அங்கும் உயிர்கள் வாழமுடியும் என்பதற்கு ஆதாரமாக இதை பார்க்கமுடியும் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
இந்தியர் ஒருவர் கொதிக்கும் எண்ணெயில் கையினால் மீன் பொரித்து அசதி வருகின்றார். இவரது இச் செயலைக் காண்பதற்கு இவரது கடையில் எப்போதும் மக்கள் அதிகமாக கூடுகின்றனர்..
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று செவ்வாய்கிழமை அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், பல்கலைக்கழகத்தில் அரசியல் தலையீட்டினை நிறுத்த வேண்டும். உயர்கல்விக்கு 6 வீதம் ஒதுக்க வேண்டும். சம்பள உயர்வு அதிகரிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள வேலைநிறுத்தத்துடன், ஒரு மணித்தியாலய ஆர்ப்பாட்டத்தினையும் மேற்கொண்டனர்.
காலை 11.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரைக்கும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் அடையாள வேலைநிறுத்த போராட்டமானது நாடளாவிய ரீதியில் நடைபெற்று வந்த நிலையில், கொழும்பில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்பாகவும் மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அனைவரும் ஆதரவு வழங்கினார்கள்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எம்.பி ஒருவர் தனது ஐபோனில் விளையாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மிக முக்கியமான ஓய்வூதியம் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது விவாதத்தின் பெரும் பகுதி நேரத்தில் நிகில் மில்ஸ் என்ற எம்.பி., தனது ஐபோனில் கண்டி க்ரஷ் (Candy crush) என்னும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
இந்த காட்சி அந்நாட்டின் பிரபல நாளிதழ் ஒன்றில் புகைப்பட ஆதாரத்துடன் வெளியிடப்பட்டதால், அங்கு மிகப் பெரிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
இந்நிலையில் பின்தங்கிய அம்பர் பள்ளத்தாக்கிலிருந்து நாடாளுமன்ற எம்.பியாக நிகில் மில்ஸ் தெரிவு செய்யப்பட்டதால், நாடாளுமன்றத்தின் மேன்மை அறியாமல் இவர் நடந்துகொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் அவர் மீது குற்றம்சாட்டியுள்ளன.
இதுகுறித்து நிகில் மில்ஸ் கூறியதாவது, நான் கூட்டத்தில் கண்டி க்ரஷ் விளையாடியது உண்மை, ஆனால் விவாதத்தில் நான் பங்கேற்காமல் இல்லை, பல கேள்விகளை நான் எழுப்பி, விவாதத்தில் ஆக்கத்துடன் பங்கேற்றேன்.
சில நேரம் மட்டுமே விளையாடினேன், இனி இது போன்ற தவறு ஏற்படமால் பார்த்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
1. தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். குறைந்தது இரண்டு நிமிடங்கள் மிருதுவான பல் துலக்கியைக் கொண்டு ஈறுகளில் முன்னும் பின்னுமாக இல்லாமல் 45 பாகை சாய்த்துப் பிடித்து மெதுவாகச் சுழற்றி துலக்க வேண்டும்.
2. தவறாமல் உணவுக்குப் பின் வாயை அலசி படுக்கைக்குச் செல்லும் முன் பல் துலக்கும் பழக்கத்தைக் கொண்டு வரவேண்டும்.
3. தினமும் நாக்கைத் துலக்குவதுடன், ஈறுகளை குறைந்தது ஒரு நிமிடமாவது விரல்களால் மிருதுவாக அழுத்தி (மஸாஜ்) செய்ய வேண்டும்.
4. மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது பல்துலக்கியை கண்டிப்பாக மாற்ற வேண்டும்.
5. குளிர்பானங்களுக்கு பதிலாக அதிக அளவு தண்ணீர் அருந்துவதுடன் சத்தான கல்சியம், கனிமம், ஆரோக்கியமான விட்டமின்கள் கொண்ட பால் பொருட்கள், கரட், அப்பிள் போன்ற உணவுகளை உட்கொள்ளவேண்டும்.
6. பச்சிளங்குழந்தைகளுக்கு பால் கொடுத்த பின் மென்மையான ஈரத்துணியைக் கொண்டு குழந்தை வாயின் ஈறுகளைத் துடைத்து பற்களைப் பாதுகாத்திட வேண்டும்.
7. ஒவ்வொரு 6 மாத இடைவெளியில் பல் மருத்துவ நிபுணரிடம் பற்களை பரிசோதித்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை..
1. ஈறுகள் பழுதாகும் விதமாக தீவிரமாக பல் துலக்குதல், கடுமையான பல்துலக்கியைப் பயன்படுத்துதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
2.அமிலம் கலந்த உணவுகள், பெப்சி, கோலா போன்ற மென்பானங்களைத் தவிர்ப்பதுடன், இனிப்பு மிகுந்த உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.
3.குழந்தைகளுக்கு பால் போத்தலில் பழச்சாறு கொடுப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
4.பச்சிளங்குழந்தைகளுக்கு உறங்கும்பொழுது பால், பழச்சாறு ஆகியவற்றை போத்தலில் வைத்து புகட்டும் பழக்கம் வேண்டாம். உணவு ஊட்டிய பின் தண்ணீர் கொடுத்து தூங்க வைக்கவேண்டும்.
5.எக்காரணத்தைக் கொண்டும் பற்களைக் கொண்டு பொலித்தீன் உறைகள், போத்தல் மூடிகளைத் திறக்க வேண்டாம்.
6. பல் வலி ஏற்படும்பொழுது விக்ஸ், கோடாலித் தைலம், போன்ற வலி நிவாரணக் களிம்புகளை முகத்தில் தேய்த்தல் கூடாது.
வவுனியா, தாலிக்குளம் பகுதியில் காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட கத்தி வெட்டு சம்பத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா, தாலிக்குளம் பகுதியில் நேற்று திங்கள் கிழமை இரவு காதல் விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
காதல் பிரச்சனை தொடர்பில் தனது வீட்டுக்கு அயல் வீட்டுக்காரர் தெரிவித்ததையடுத்து, அயல்வீட்டுக்கு சென்ற இளைஞன் தகராற்றில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து வாக்குவாதம் கத்திவெட்டாக மாறியதில் குறித்த இளைஞன் மரணமடைந்துள்ளதுடன் அயல் வீட்டுப் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளார்.
இச் சம்பவத்தில் தியாகராசா பாஸ்கரன் (18) என்ற இளைஞன் பலியாகியதுடன், தேவராஜா கோவிந்தம்மா (65) காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை அணியின் சுழல்பந்து வீச்சாளர் சச்சித்திர சேனாநாயக்கவின் பந்துவீச்சு பாணி ஐசிசி விதிமுறைக்கு ஏற்றது என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
இலங்கை அணியின் சச்சித்திர சேனாநாயக்க மற்றும் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் ஆகியோரின் பந்துவீச்சு முறை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிமுறைகளுக்கு புறம்பானதென குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் இருவரும் பரிகார வேலை மற்றும் மீள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அந்த சோதனையின் முடிவை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று வெளியிட்டுள்ள நிலையில், சச்சித்திர சேனாநாயக்க மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீச முடியும் என அனுமதி அளித்துள்ளது.
டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம 4ம் பிரிவு தோட்ட குடியிருப்பு பகுதியில் உள்ள மரக்கறி தோட்டமொன்றிலிருந்து சிசு ஒன்றை டயகம பொலிஸாரும்,பொது மக்களும் நேற்று மீட்டுள்ளனர்.
குறித்த சிசு நேற்று மாலை 6 மணியளவில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. சிசு டயகம பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக பொலிஸாரால் அனுமதிக்கப்பட்ட போதும், சிசுவின் நிலைமையும்,தாயின் நிலைமையும் மிக கவலைக்கிடமாக இருந்ததால் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
எனினும் சிசுவின் தாய் தலைமறைவாகியிருந்ததை தொடர்ந்து பொலிஸாரும் பொதுமக்களும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது தனது வீட்டில் உறங்கி கொண்டிருந்த நிலையில் சம்மந்தப்பட்ட தாயை பொலிஸார் பாதுகாப்புடன் மீட்டு வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.
இதன் போது தாயாரை விசாரித்த போது இன்னும் திருமணம் முடிக்காதவர் எனவும் 19வயது எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இப்பிரதேசத்தில் கடந்த காலங்களில் சிசுக்களை கழுத்தை முறித்து கொன்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிக்கின்றனர்.
அத்தோடு பொது மக்கள் மத்தியில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற இடமளிக்ககூடாது என்பதற்காக டயகம பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஏற்பாட்டில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு திட்டங்களை முன்னெடுக்கப்போவதாக டயகம பொலிஸ் அதிகாரி ஹேரத் தெரிவித்துள்ளார்.
தாவடி பகுதியில் மூவர் மீது சாரமாறியாக வாள்வெட்டு இடம்பெற்றதில் ஒருவருக்கு முதுகு வழியாக வயிற்றுப் பகுதிக்குள் வாள் வந்த கொடுர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த வாள்வெட்டில் தாவடி பகுதியைச் சேர்ந்த ஞானகுமார் (38) பிரதீபன் (30) கஜாகரன் (21 ) ஆகியோரே காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். தாவடி உப்புமடம் பகுதியில் இன்று திங்கட்கிழமை இரவு 7.30 முதல் 8 மணிக்குள் இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த மூவரும் முச்சக்கரவண்டியில் குறித்த பகுதியில் வந்து கொண்டிருந்த போது, இலக்கத்தகடுகள் அற்ற மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் ஆட்டோவிற்கு சேதம் ஏற்படுத்தியதுடன், மூவர் மீதும் வாள்வெட்டினை மேற்கொண்டுள்ளனர்.
இந்த வாள்வெட்டில் படுகாயமடைந்த நபர்களை ஆட்டோவில் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். வாள்வெட்டுக்கு இலக்காகிய நபர்கள் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரம்புக்கனையில் வைத்து பெற்ற மகளை இரண்டு தடவைகள் துஷ்பிரயோத்திற்கு உள்ளாக்கினார் என்ற சந்தேகத்தில், ஒருவரை வவுனியாவில் கைது செய்துள்ளதாக குற்றத் தடுப்பு விசாரணை பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாவக்குளத்தில் கடையொன்றை உடைத்து திருடிய சம்பவம் தொடர்பில் வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் யு.கே.திசாநாயக்க மற்றும் வவுனியா சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் வசந்த விக்கிரம ஆகியோரின் வழிநடத்தலில் விசாரணைகளை மேற்கொண்ட போது ரம்புக்கனையை சேர்ந்த 36 வயதுடைய நபரொருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
அவரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் மேற்படி சந்தேக நபர், தான் பெற்ற மகளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நிலையில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிலையங்கள் அமைந்துள்ள இடங்களுக்கு கடுமையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பமானது.
சாதாரண தரப் பரீட்சை நிலையங்களை அண்டிய பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
பரீட்சை விடைத்தாள்கள் களஞ்சியப்படுத்தி வைக்கப்படும் நிலையங்களுக்கும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் விசேட ரோந்துப் பணிகளில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள 4279 பரீட்சை நிலையங்களில் ஐந்து லட்சத்து எழுபதாயிரத்து இருநூற்று இருபது பேர் பரீட்சையில் தோற்ற உள்ளனர்.
இதில் 370, 000 பரீட்சார்த்திகள் பாடசாலை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 18ம் திகதி வியாழக்கிழமை வரையில் பரீட்சை நடைபெறவுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் பரீட்சை நிலையங்களுக்கு அருகாமையில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது என புஸ்பகுமார சிங்கள பத்திரிகையொன்றுக்கு நேர் காணல் வழங்கியுள்ளார்.
பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மதிமுகவும் இடம்பெற்றிருந்தது.
இந்த கட்சிக்கு 7 தொகுதிகள் வழங்கப்பட்டும், அனைத்திலும் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தாலும், அக்கட்சியின் செயல்பாடுகளில் ஆரம்பத்தில் இருந்து மதிமுகவை அதிருப்தியடைய செய்ததாக தெரிகிறது.
மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவை அழைத்தது, மீத்தேன் எரிவாயு திட்டம், காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணை கட்டும் பிரச்னை உள்பட பல்வேறு பிரச்னைகளில் மத்திய அரசை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக விமர்சனம் செய்தார்.
இலங்கை பிரச்னையில் வாஜ்பாய், அத்வானியை போல பிரதமர் நரேந்திர மோடியின் அணுகுமுறை இல்லை என்று கூறிய வைகோ, தமிழக மீனவர்கள் தூக்கு தண்டனையில் இருந்து விடுதலை செய்யப்பட்டதில் ராஜபக்சேவுடன் இணைந்து நரேந்திர மோடி நாடகமாடியுள்ளார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
வைகோவின் இந்த செயல் பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது, மோடி பற்றி கருத்து தெரிவித்த வைகோவுக்கு, பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இவ்வாறு தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் மோதல் வலுத்துவந்த நிலையில், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம், உயர்நிலைக்குழு கூட்டம் ஆகியவை சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்கள், தேசிய ஜனநாயக கூட்டணியை வழிநடத்திச் சென்றபோது, கூட்டணி கட்சிகளிடம் இருந்த அணுகுமுறை, தற்போது நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ. கூட்டணியில் இல்லை.
எனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகுகிறது என்று அறிவித்துள்ளார்.