இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையின்(CCTMS) 2014ம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் இறுதி போட்டிகள்!!(படங்கள்)

இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையின்(CCTMS) 2014ம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் இறுதிப் போட்டிகள் நேற்று (07.02) வவுனியா நகரசபை மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு பாடசாலையின் மதிப்பிற்குரிய அதிபர் திருமதி சரோஜினி தர்மகுலசிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் , திரு.MP.நடராஜ் , இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் முன்னாள் அதிபர் திரு.வையாபுரிநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இன் நிகழ்வில் இலங்கையின் தேசிய கீதம் பாடசாலை மாணவிகளால் தமிழில் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும் .

விதுரர், துரோணர், பீஷ்மர் ஆகிய மூன்று இல்லங்களுக்கிடையிலான இறுதிப்போட்டியில் விதுரர் இல்லம் 1ம் இடத்தையும், துரோணர் இல்லம் 2ம் இடத்தையும், பீஷ்மர் இல்லம் 3ம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

1ம் 2ம் 3ம் இடம் பெற்ற அணிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் வெற்றிக் கேடயத்தை வழங்கி வைத்தார்.

இவ் வருடத்துடன் தனது அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் பாடசாலையின் அதிபர் திருமதி.சரோஜினி தர்மகுலசிங்கம் அவர்களுக்கு பாடசாலை சார்பாக நினைவு சின்னங்கள் வழங்கப்பட்டது. நினைவுச்சின்னத்தை பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் வழங்கினார்.

-மகிந்தன்-

c1c2c3c4c5c6c7c8c9c10c11

 

 

ஆந்திர தொழில் அதிபருடன் காஜல் அகர்வால் காதல்!!

Kajalகாஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வாலுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. அக்காவுக்கு முன் தங்கை திருமணத்தை நடத்துவதா என்று தெலுங்கு திரையுலகில் விமர்சனங்கள் கிளம்பின. அதை காஜல் கண்டு கொள்ளவில்லை.

தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் இரு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் காஜல் அகர்வாலின் ரகசிய காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காதலன் ஆந்திராவில் பெரிய தொழில் அதிபராக இருக்கிறாராம்.

ஐதராபாத்தில் நிறைய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியுள்ள பிரபல கட்டுமான தொழில் அதிபரின் மகன் என்கின்றனர். காதலை தெழில் அதிபர் ஏற்கவில்லையாம். காஜல் அகர்வால் தொடர்பை துண்டிக்கும்படி மகனிடம் அவர் வற்புறுத்துவதாக கூறப்படுகிறது. ஆனால் காதலில் இருவரும் பிடிவாதமாக இருப்பதாக தெலுங்கு திரையுலகினர் கிசுகிசுக்கின்றனர்.

உள்ளூரில் சுற்றினால் வெளியே தெரிந்து விடும் என்று கருதிதான் லண்டன் சென்றுள்ளார்கள். அங்கு நட்சத்திர ஓட்டலில் தங்கி ஜாலியாக சுற்றி இருக்கிறார்கள். இதனை தெலுங்கு நடிகர் ஒருவர் பார்த்து தெலுங்கு பட உலகினரிடம் பற்ற வைத்து விட்டாராம்.

காதலர் வீட்டில் இவர்கள் காதலை பிரிக்க தீவிர முயற்சி நடக்கிறது. இன்னொரு புறம் காதல் ஜோடி திருமணத்துக்கு தயாராவதாக கூறப்படுகிறது. விரைவில் இவர்கள் திருமணம் நடக்கும் என்கின்றனர். புதுபடங்களில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்புக் கொள்ளவில்லை. நிறைய பட வாய்ப்புகளை தவிர்த்து வருகிறாராம்.

 

இலங்கை வரும் நைஜீரிய கிரிக்கெட் அணி!!

Nigeriaநைஜீரிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC) சார்பில் உலக கிண்ண டிவிசன் 5 லீக் தொடர் மலேசியாவில் வரும் மார்ச் 4 முதல் 14 வரை நடக்கவுள்ளது.

இதற்கு தயாராகும் வகையில் ஐ.சி.சி யின் உறுப்பு நாடு நைஜீரிய அணி, முதன் முறையாக இலங்கை சென்று பெப்ரவரி 21 முதல் மார்ச் 3 வரை போட்டிகளில் பங்கேற்கிறது.

இதுகுறித்து நைஜீரிய கிரிக்கெட் கூட்டமைப்பின் ஆன்யேமா கூறுகையில் உலகின் டொப்–8 தரவரிசையில் உள்ள இலங்கை அணியுடன் விளையாடுவது மிகப்பெரிய சாதனை.

தவிர உலகின் முன்னணி வீரர்களுடன் விளையாட வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி தான் என்று தெரிவித்துள்ளார்.

 

சிவகுமார், விஷால், சந்தானம், நாசருக்கு மிரட்டல் கடிதங்கள் எழுதியவர்கள் மீது நடவடிக்கை : நடிகர் சங்கம் அறிக்கை!!

Miratalநடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது..

நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரான சிவகுமார் மற்றும் நாசர், விஷால், சந்தானம் ஆகியோருக்கு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளதாக பத்திரிகை செய்தி மூலம் அறிந்து மிகவும் அதிர்ச்சியுற்றோம்.

கடந்த 31.1.2014 அன்று நடந்த சங்க செயற்குழுவில், சங்கத்திற்கு உறுப்பினர்களை தாக்கி வந்த மிரட்டல் கடிதங்கள் பற்றி விவாதித்து கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடிகர் சங்க உறுப்பினர்களின் நலனிலும் நல்வாழ்விலும் அக்கறை கொண்டுள்ள சங்க நிர்வாகம் இம்மாதிரி கோழைத்தனத்துடன் நம் சங்க உறுப்பினர்களுக்கு மிரட்டல் கடிதம் எழுதுபவர்களை கண்டிக்கிறோம். அந்த கடிதத்தை சங்க உறுப்பினர்கள் எழுதுவது போல் எழுதி உள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

எந்த உறுப்பினருக்கும் பாதிப்பையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தும் செயல்களை சங்க நிர்வாகம் பொறுத்துக் கொள்ளாது. கடிதம் எழுதியவர்கள் தைரியம் இருந்தால் தங்கள் பெயர்களை போட்டு கடிதம் எழுதி இருக்க வேண்டும். மிரட்டடல் கடிதம் எழுதியவர்கள் முகத்திரையை கிழிப்போம். அதற்காக காவல்துறை உதவியை நாட உள்ளோம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

 

கனடா குடியேற்ற விதிமுறைகளில் புதிய மாற்றங்கள்!!

Canadaகனடிய அரசாங்கம் குடியேற்ற விதிமுறைகளில் பாரிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் உட்பட ஆசிய நாடுகளை சேர்ந்த பலரும் கனடாவில் வந்து குடியேறுகின்றனர்.

இந்நிலையில் கனடிய அரசாங்கம் குடியேற்ற விதிமுறைகளில் பாரிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகளின் படி, பயங்கரவாதம், உளவு மற்றும் பாரிய குற்றங்களில் ஈடுபட்ட நபர்களின் இரட்டை குடியுரிமையை திரும்ப பெற முடியும்.

மேலும் விண்ணப்பம் சமர்பித்த நபர்களின் பொது அறிவு, ஆங்கில மற்றும் பிரெஞ்சு மொழிகளுக்கான புலமைகள் முதலில் சரிபார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குடியரவுத்துறை அமைச்சர் கிறிஸ் அலெக்ஸாண்டர் கூறுகையில், கடவுச்சீட்டு இருந்தால் மட்டுமே கனடிய குடியுரிமையை பெற்று விட முடியாது.

அரசாங்கத்தின் நடிவடிக்கைகள் அனைத்தும் இரட்டை குடியுரிமை பெற்ற நபர்களை குறிவைத்தே உள்ளது. பயங்கரவாதம், உளவு மற்றும் பாரிய குற்றங்களில் ஈடுபட்ட நபர்களாக இருப்பின், குடியுரிமை பறிக்கப்படும்.

குடியுரிமையை பெறுவதற்கு ஆறு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும், இதில் குறைந்தது நான்கு ஆண்டுகளாவது கனடாவில் வசிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் மோசடிகளில் ஈடுபட்டால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும், கனடிய குடியுரிமைகளின் மதிப்பை வலுப்படுத்தவே இவ்வாறான நடவடிக்கைகள் எனவும் தெரிவித்துள்ளார்.

 

நடக்கும் போது நடக்கும்- திருமணம் பற்றி சிந்திக்கவில்லை : நயன்தாரா!!

Nayanthara

நயன்தாரா காதல் சர்ச்சைகளில் இருந்து விடுபட்டு சினிமாவில் மீண்டும் தீவிரமாக நடிக்க துவங்கியுள்ளார். அவர் நடித்த ஆரம்பம், ராஜா ராணி படங்கள் ஹிட்டாகியுள்ளன. தொடர்ந்து இது கதிர்வேலன் காதல் படம் வருகிறது. நயன்தாரா அளித்த பேட்டி வருமாறு..

இது கதிர்வேலன் காதல் படத்தில் எனக்கு நல்ல கரக்டர். பவித்ரா என்ற நடுத்தர குடும்பத்து பெண்ணாக வருகிறேன். ரொம்ப ரசித்து நடித்துள்ளேன்.

அனாமிகா படத்திலும் நடிக்கிறேன். இது இந்தியில் வந்த கஹானி படத்தின் ரீமேக் ஆக இருந்தாலும் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களையே நான் தேர்வு செய்து நடிக்கிறேன் என்று சொல்ல முடியாது. எனக்கு காமெடி படங்களில் நடிக்க பிடிக்கும். அதே நேரம் காமெடி படங்களில் மட்டுமே நடித்தாலும் விரும்ப மாட்டார்கள். கதைக்கும் என் கரக்டருக்கும் முக்கியத்துவம் இருந்தால் நடிக்க ஒப்புக் கொள்வேன்.

இந்தியில் நடிப்பது பற்றி கேட்கிறார்கள். எனக்கு இந்தி படத்தில் நடிக்க விருப்பம் இல்லை. தென் இந்திய மொழி படங்களில் நடிப்பதே போதும்.

நான் நடித்த ராஜா ராணி, பில்லா, யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்கள் எனக்கு பிடிக்கும். எனது வாழ்க்கையில் பல பிரச்சினைகள் நடந்துள்ளது. அதில் இருந்து நிறைய பாடம் கற்றுக் கொண்டேன். சினிமா நிறைய பணம் புகழை சம்பாதித்து கொடுக்கிறது. அது போல் பாடங்களையும் கற்று கொடுக்கிறது.

நான் திருமணம் பற்றி இப்போது சிந்திக்கவில்லை. பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். திருமணத்தை நான் தவிர்க்கவில்லை. அது நடக்கும் போது நன்றாகவே நடக்கும் என்று நயன்தாரா கூறினார்.

 

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் 2014ம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி!!(படங்கள்)

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் 2014ம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று முன்தினம் (06.02) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இப் போட்டிகளில் கம்பன் இல்லம் முதலிடத்தையும், வள்ளுவர் இல்லம் இரண்டாமிடத்தையும், பாரதி இல்லம் மூன்றாமிடத்தையும் நான்காம், ஐந்தாம் இடங்களை முறையே இளங்கோ, புகழேந்தி இல்லங்கள் பெற்றுக்கொண்டன.

இவ் விளையாட்டுப் போட்டி நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழையமாணவர்கள் உட்பட பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.

-படங்கள் வேணுஜன்-

m

m1 m2 m3 m4 m5 m6 m7 m8

 

 

விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணை கிராமத்திலிருந்து ஒதுக்கி வைத்த கொடூரம்!!(படங்கள்)

இந்தோனேஷியாவில் தோல் நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கிராமத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். இந்தோனேஷியாவின் கிழக்கு ஜகார்த்தா பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் செரோடின்(46).

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் Neurofibromatosis என்ற நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் இவர் உடல் முழுதும் சிறு சிறு கட்டிகளுடனும், முகத்தில் சதை வளர்ந்தும் காணப்படுகிறார்.

நான்கு பிள்ளைகளின் தாயான செரோடின், மிகவும் ஏழ்மையான சூழலில் வசித்து வருகின்றார். இதற்கிடையே இந்நோயை பலரையும் தொற்றி விடலாம் என அஞ்சிய கிராம மக்கள், ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

மேலும் கிராமம் என்பதால் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கு சிரமமாக உள்ளது என செரோடின் தெரிவித்துள்ளார்.

S1 S2 S3

 

ஜேம்ஸ் வசந்தனுக்கு பல பெண்களுடன் தொடர்பு : மனைவி பரபரப்பு புகார்!!

James Vasanthanதொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும், இசை அமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தனின் மனைவி சுகந்தி நேற்று பிற்பகல் 1 மணிக்கு அடையாறு மகளிர் காவல் நிலையத்திற்கு வந்தார்.

அவர் பொலிசிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், நான் சென்னை கொட்டிவாக்கத்தில் வசிக்கிறேன். எனக்கும், திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனுக்கும் கடந்த 1991ம் ஆண்டு திருச்சியிலுள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தது. 23 வருடங்கள் ஆகிவிட்டது.

எங்களுக்கு ஷில்பா என்ற மகளும், சச்சின் என்ற மகனும் உள்ளனர். ஆனால், எனது கணவன் ஜேம்ஸ் வசந்தனுக்கு அநேக பெண்களுடன் தவறான தொடர்பு இருந்ததால் எங்களுக்குள் அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

வி.ஜி.பி. பிரசாத் தாஸின் முன்னாள் மனைவியான ஹேமலதாவுடன் தவறான தொடர்பு வைத்திருந்தார். ஆனால் தற்போது அவரையே தனது மனைவி என்று வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்துவிட்டார். உண்மையான மனைவி நான் உயிரோடு இருக்கும்போது என்னிடம் விவாகரத்தும் வாங்காத நிலையில் வேறொரு பெண்ணை மனைவி என்று எனது கணவன் ஜேம்ஸ் வசந்தன் சொல்லிவருவது எனக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அவரது புகாரின்பேரில் பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பிரான்சை தாக்கிய புயலால் வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்!!

Franceபிரான்சில் மிக கடுமையான புயல் காற்று வீசியதால், பல்லாயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.

பிரான்சின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் கடுமையான புயல் காற்று வீசி வருகிறது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், 55,000 வீடுகள் இருளில் மூழ்கின. குறிப்பாக Morlaix என்ற நகரம் வெள்ளத்தால் சூழ்ந்தது. இக்கடும் புயலின் தாக்கத்தால் மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிலும் பாரிஸ், Basse Normandie, Haute Normandie, Ile France போன்ற முக்கிய பகுதிகளுக்கு கடுமையாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பாரிஸில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் புயல் தாக்கம் பதிவானபோதும், விமான போக்குவரத்து எவ்வித தடையும் இன்றி செயல்பட்டது.

இதுகுறித்து வானிலை ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில், வரலாறு காணாத புயல் என கூறமுடியாது என்றாலும் இதன் தாக்கம் அதிகளவில் சேதத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

 

குருவாயூர் கோவிலில் ரஜினியின் எடைக்கு வெண்ணை சாத்தி வழிபாடு செய்த மகள் சௌந்தர்யா!!

Sowndryaரஜினியின் 2வது மகள் சௌந்தர்யா. இவர் ரஜினியை வைத்து கோச்சடையான் என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படம் முடிவடைந்து வருகிற ஏப்ரல் மாதம் 11ம் திகதி ரிலீஸ் செய்யப்படுகிறது.

கோச்சடையான் படம் வெளியாவதை தொடர்ந்து சௌந்தர்யா நேற்று கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற குருவாயூர் கோவிலுக்கு சென்றார்.

அங்கு சிறப்பு பிரார்த்தனை மற்றும் வழிபாடுகளில் கலந்து கொண்ட அவர் கோவிலின் பிரதான நேர்ச்சையான துலாபாரம் நேர்ச்சையும் அளித்தார்.

இதில் ரஜினியின் எடைக்கு வெண்ணை சாத்துவதாக வேண்டிக் கொண்டார். அதன்படி சுமார் 75 கிலோ எடைக்கு வெண்ணை வழங்கி பிரார்த்தனை செய்தார்.

கோவிலின் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று பிரார்த்தனை செய்த பின்பு சிறிது நேரம் கோவிலில் அமர்ந்த அவர் பின்னர் அங்கிருந்து தங்கியிருந்த விடுதிக்கு கிளம்பிச் சென்றார்.

கோச்சடையான் படம் முதல் முறையாக மோஷன் கப்சர் என்ற தொழில் நுட்பத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. தற்போது நடத்தப்பட்டு வரும் படப்பிடிப்பு முறைக்கு இது மாற்று முறையாகும். இதனை இயக்குனர்கள் இந்திய சினிமாவின் முதல் முயற்சியாக கருதுகிறார்கள்.

இந்த படத்தில் ரஜினி 2 வேடம் ஏற்று நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே, ஷோபனா நடித்துள்ளனர். மேலும் சரத்குமார், நாசர், ஆதி, ருக்மணி உள்ளிட்டோரும் நடித்து இருக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மராத்தி, போஜ்பூரி, வங்காளம், பஞ்சாபி போன்ற மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 6 ஆயிரம் தியேட்டர்களில் வெளிவருகிறது.

சர்வதேச அளவில் ஆங்கிலத்திலும் இந்த படம் வெளியிடப்படுகிறது. இதுபற்றி சௌந்தர்யா கூறும் போது, கோச்சடையான் படம் இந்திய சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்றார்.

 

வவுனியா தோணிக்கல் முத்துமாரியம்மன் ஆலய கொடியேற்றம்!!(படங்கள்)

வவுனியா தோணிக்கல் முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன் நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் சுவாமி வீதியுலாவும் இடம்பெற்றது.

1112 13 14 15 16 17

 

பால் மா விலைக் குறைப்பு ஒருபோதும் இடம்பெறாது : அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ!!

Milk Powderபால் மா விலையை தாழ்ந்த மட்டத்திலேயே வைத்திருப்போமென மஹிந்த ராஜபக்ஷ அரசு ஒருபோதும் கூறவில்லை. அதனால் பால் மாவின் விலை ஒரு போதும் குறைக்கப்படமாட்டதென கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சிகளின் பிரதம கொறடாவுமான ஜோன் அமரதுங்க, பால்மா விலை அதிகரிப்புத் தொடர்பில் விடுத்த விசேட கூற்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

 

 

சிவனொளிபாதமலை காண்டாமணியை கோத்தபாய திறந்து வைத்தார் : ஜனாதிபதி ஹெலியிலிருந்து மலர் தூவினார்!!(படங்கள்)

சிவனொளிபாதமலையில் புதிதாக பொருத்தப்பட்டிருக்கும் காண்டாமணி மற்றும் விளக்கு ஆகியன நேற்று வெள்ளிக்கிழமை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.

முதன் முறையாக ஹெலிகப்டர் மூலம் கடந்த மாதம் புதிய காண்டாமணியும் விளக்கும் சிவனொளிபாதமலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தன.

இவற்றை பொருத்தும் பணிகள் கடந்த வாரம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இவற்றை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று காலை விசேட பூஜைகளோடு ஆரம்பமாகியது.

இதன் போது பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர். கடுங்குளிர் காலநிலை நிலவிய போதிலும் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ள பலரும் மலை உச்சிக்கு வருகை தந்திருந்தனர்.

பூஜைகளின் பின்னர் பாதுகாப்பு செயலாளர் காண்டாமணி மற்றும் விளக்குகளை திறந்து வைத்தார். இதன்போது ஹெலிகப்டர் மூலம் பூக்கள் வானில் இருந்து தூவப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

12 3 4 5

 

குமார் சங்கக்காரவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வாழ்த்து!!

Sanga

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை சார்பில் அதிக சதங்களை குவித்த குமார் சங்கக்காரவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சங்கக்காரவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி சார்பாக அதிக சதங்களைப் பெற்றிருந்த மகேள ஜெயவர்த்தனவை பின்தள்ளி குமார் சங்கக்கார முதலிடத்தைப் பிடித்ததுடன் 24 ஆண்டுக்களுக்குப் பின்னர் டெஸ்ட் போட்டி ஒன்றில் முச்சதம் மற்றும் சதம் பெற்று(319 & 105) சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

 

33 ஓட்டங்களால் உலக சாதனையை தவறவிட்ட சங்கக்கார!!

Sanga

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 424 ஓட்டங்களை குவித்தாலும், உலக சாதனையை தவறவிட்டுள்ளார் இலங்கை வீரர் குமார் சங்கக்கார.

வங்கதேசத்தில் இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்த அணியுடனான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மூன்று சதமடித்த குமார் சங்கக்கார, மொத்தம் 319 ஓட்டங்களை குவித்தார்.

2வது இன்னிங்ஸில் 105 ஓட்டங்களை எடுத்திருந்தார். மொத்தம் இந்த ஒரே டெஸ்ட் போட்டியில் 424 ஓட்டங்களை எடுத்தார்.
இதற்கு முன்னர் கிரஹாம் கூச்தான் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர் என்ற பெருமைக்குரியவர்.

இங்கிலாந்து அணியின் கிரஹாம் கூச் 1990ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 333 ஓட்டங்களையும், 2வது இன்னிங்ஸில் 123 ஓட்டங்களையும் (மொத்தம் 456) குவித்தார், அவர்தான் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்.

இவருக்கு அடுத்தபடியாக ஒரே டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் மூன்று சதமும், மற்றொரு இன்னிங்ஸில் மற்றொரு சதமும் அடித்த 2வது வீரர் என்ற பெருமைக்குரியவானார் சங்கக்கார.

இருப்பினும் இன்னும் 33 ஓட்டங்கள் எடுத்திருந்தாலும், கூச்சின் சாதனையை மிஞ்சியிருக்கலாம்.