வவுனியாவை சவுதியில் இறந்த மனைவியின் உடலை மீட்டுத்தருமாறு கணவன் கண்ணீர் மல்க கோரிக்கை!!

வவுனியா ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் சவுதிநாட்டில் உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலை மீட்டுத்தருமாறு கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் தெரிவிக்கையில்….

எனதுமனைவி கடந்த இரு வருடங்களுக்கு முன்பாக வேலை விசாவில் சவுதி அரேபியாவிற்கு சென்றார். அனுராதபுரம் பகுதியில் உள்ள முகவர் ஒருவரின் ஊடாகவே அவர் பயணம் செய்துள்ளார்.

பயணம்செய்த நாளில் இருந்து இதுவரை காலமும் சாதாரண தொலைபேசியில் தான் எம்மோடு கதைத்து வந்தார். அவரது முகத்தை கூட நாம் பார்க்கவில்லை.

கடந்த சில நாட்களாக தனக்கு அங்கு சித்திரவதை இடம்பெறுவதாகவும் தன்னை உடனடியாக நாட்டுக்கு திருப்பி எடுக்கமாறும் கூறினார். இது தொடர்பாக பல தடவை அவரை அனுப்பிய முகவரிடம் கூறியும் உரிய பதிலை அவர் தரவில்லை.

இந்நிலையில் எனது மனைவி சிலநாட்களாக என்னுடன் தொடர்பினை ஏற்ப்படுத்தவில்லை.

நாம் முகவரை அணுகியபோது அவர்சுகவீனமடைந்து இருப்பதாக எமக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்கள்.

அவர் இறந்து 15 நாட்களின் பின்னரே எமக்கு தகவல் வழங்கப்பட்டது.
தற்போது மரணமடைந்து 40 நாட்கள் கடக்கின்ற நிலையில் எனது மனைவியின் உடலை கொண்டு வருவதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

எனவே அவரது சடலத்தையாவது விரைவாக பெற்றுத்தருவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார். குறித்த சம்பவத்தில் நிலூபா வயது 38 என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தரம் 10 மாணவன் சாதாரண தரப் பரீட்சையில் 8ஏ பி எடுத்து சாதனை!!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவன் ஒருவர் வெளிவாரியாக சாதாரண தரப் பரீட்சையில் தாேற்றி 8ஏ பி சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார். கார்த்திகேயன் ஷயனுஜன் என்ற மாணவனே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2023 ல் பத்தாம் தரத்தில் கல்வி பயின்று வந்திருந்த நிலையில் 2023-2024ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சதாரண பரீட்சையில் வெளிவாரியாக பரீட்சையை எழுதியிருந்தார்.

இந்நிலையில் கா.பொ.த சாதாரன தர பரீட்சை முடிவுகள் வெளியாகியிருந்தன. இதில் குறித்த மாணவன் 8ஏ சித்திகளையும் 1பி சித்தியையும் பெற்று ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 28 மாணவர்கள் 9 பாடங்களிலும் விசேட சித்தி பெற்று சாதனை!!

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய வரலாற்றில் முதல் தடவையாக 28 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தி பெற்று உள்ளதாக பாடசாலையின் அதிபர் ஆ. லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் கடந்த காலங்களிலும் அதிகளவான பெறுபேறுகளைப் பெற்று மாவட்டத்தில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள சாதாரண சாதாரண தர பரீட்சை பெறுபேற்றிலும் 28 மாணவர்கள் விசேட சித்திகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும், 19 மாணவர்கள் எட்டுப் பாடங்களில் விசேட சித்தியையும் ஒரு பாடத்தில் திறமை சித்தியையும் பெற்றுள்ளனர்.

சித்தி அடைந்துள்ளதுடன் அதிகளவான மாணவர்கள் இம்முறை அனைத்து பாடங்களிலும் சித்தி அடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கோழி இறைச்சி விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!!

கோழி இறைச்சியின் விலை நூறு ரூபா தொடக்கம் நூற்றைம்பது ரூபா வரை குறையலாம் என அகில இலங்கை சிறு கைத்தொழில் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோழி இறைச்சிக்கான தேவை வெகுவாக குறைந்து வருவதன் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களில் விலைகளில் மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது ஒரு கிலோ கோழி இறைச்சியின் சில்லறை விலை 1,000 முதல் 1,100 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார்.

அடுத்த பதினைந்து நாட்களில் இந்த விலை 900 முதல் 850 ரூபாய் வரை குறையலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை முட்டையின் விலையும் எதிர்வரும் பண்டிகை நாட்களில் 20 ரூபா வரையிலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பதுளையில் சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய உறவினர்!!

பதுளையில் சிறுமி ஒருவரை கடுமையான தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லுணுகலை – ஹொப்டன் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 5 வயதும் 6 மாதமும் கொண்ட சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி தனது வீட்டுக்கு அயல் வீடான சந்தேக நபரின் வீட்டுக்கு விளையாடுவதற்காக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும் கடந்த 23 திகதி குறித்த சிறுமியை சந்தேக நபர் தனது வீட்டில் அறை ஒன்றுக்கு கூட்டிச் சென்று தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 23ஆம் திகதி தொடக்கம் 4 நாட்களாக தொடர்ந்தும் இவ்வாறான குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளதாக சிறுமி தாயாரிடம் கூறியதையடுத்து குறித்த சிறுமியின் தாயாரினால் நேற்றைய தினம் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் பசறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்!!

இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று (28) சனிக்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 26,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதோடு , 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 212,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், 22 கரட் ஒரு கிராம் தங்கம் 24,500 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 196,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

 

2 மகள்களைக் கொன்று தந்தையும் தற்கொலை முயற்சி!!

மனைவி திருமணத்திற்கு மீறிய தவறான உறவு வைத்திருந்ததாக கூறப்படும் நிலையில், தனது இரண்டு மகள்களின் கழுத்தையும் அறுத்து கொலைச் செய்து விட்டு, தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அண்ணாநகர் அருகே உள்ள யாகப்பா நகரை சேர்ந்தவர் சேதுபதி. இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ரக்ஷனா (7), ரக்ஷிதா (5) என்ற இரண்டு குழந்தைகளும் இருந்தனர்.

இந்நிலையில், குடும்ப தகராறு காரணமாக நேற்று காலை சேதுபதி கூரிய ஆயுதத்தால் இரண்டு குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்றார்.

தகவல் அறிந்த அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தற்கொலைக்கு முயன்ற சேதுபதியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தற்போது சேதுபதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி ராஜேஸ்வரியிடம் அண்ணாநகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடன் பிரச்சனையா? அல்லது கணவன்-மனைவி இடையே நடந்த பிரச்சனை காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

வீட்டின் முற்றத்தில் கணவரை கொன்று புதைத்த மனைவி.. 30 ஆண்டுகளுக்கு பிறகு அம்பலமானது எப்படி?

30 ஆண்டுகளுக்கு முன்பாக தனது மகன்களுடன் சேர்ந்து தனது கணவரை மனைவி கொன்று புதைத்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், ஹத்ரஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் பஞ்சாபி சிங் (39). இவர், தனது தாய் மற்றும் 2 சகோதரர்கள் இணைந்து 30 வருடங்களுக்கு முன்பு தந்தையை கொலை செய்ததாக பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

இவருக்கு, பிரதீப்குமார், முகேஷ்குமார் என்ற 2 சகோரர்கள் உள்ளனர். இந்நிலையில், இவர்களுடன் கடந்த ஜூலை 1 -ம் திகதி அன்று பஞ்சாபி சிங்கிற்கு பண தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, இருவரும் பஞ்சாபி சிங்கை மிரட்டியுள்ளனர். அதாவது, 1994 -ம் ஆண்டில் தந்தையை கொலை செய்தது போலவே உன்னையும் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

இதனை கேட்டதும் பஞ்சாபி சிங்கிற்கு தான் சிறு வயதாக இருக்கும்போது தனது தாய் ஊர்மிளாதேவி, சகோரர்கள் பிரதீப்குமார், முகேஷ்குமார் ஆகியோர் தந்தையை கொலை செய்தது நினைவுக்கு வந்துள்ளது.

அதாவது, 1994 -ம் ஆண்டில் தாய் ஊர்மிளாதேவிக்கு செல்வந்தரான ராஜ்வீர்சிங் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அவரது கணவர் ஊர்மிளா தேவியை கண்டித்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற நாளில் பஞ்சாபிசிங்கையும், அவரது இளையசகோதரரையும் ஊர்மிளாதேவி பக்கத்து வீட்டிற்கு சென்று தூங்குமாறு அனுப்பி உள்ளார்.

ஆனால், நள்ளிரவில் தூக்கம் வராமல் பஞ்சாபி சிங் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, தாயும், 2 சகோதரர்கள் இணைந்து தனது தந்தையை கொலை செய்து வீட்டு முற்றத்தில் புதைத்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து, இதுபற்றி வெளியில் சொல்ல கூடாது என்று பஞ்சாபி சிங்கிடம் தாய் கூறியுள்ளார்.

இந்நிலையில், தற்போது சகோதரர்களுக்கிடையே பணத்தகராறு ஏற்பட்ட நிலையில், 30 வருடங்களுக்கு முன்பு இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதையடுத்து பொலிஸார் ஹத்ராஸில் உள்ள வீட்டிற்கு சென்று புதைக்கப்பட்ட இடத்தை தோண்டிய போது மனித எலும்பு கூட்டை கண்டெடுத்துள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

வருமான வரி செலுத்தாதவர்களுக்கு எச்சரிக்கை!!

மதிப்பீட்டு ஆண்டு தொடர்பான அனைத்து வருமான வரியும் எதிர்வரும் திங்கட்கிழமை (30.09.2024) அல்லது அதற்கு முன்னர் செலுத்தப்பட வேண்டுமென உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் செபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த திகதிக்கு முன்னர் வரிகளை செலுத்த தவறுகையில் அவ்வாறான வரிகளுக்கு உள்நாட்டு இறைவரித் சட்ட நியதிகளுக்கு அமைவாக உள்ள சட்ட நடவடிக்கைகள் உள்ளடங்களாக கடுமையான வரி சேகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் வெளியாகியுள்ள அறிக்கையில்,

‘“எந்தவொரு வரிக்கும் ஒருவர் செலுத்த வேண்டிய வரியை செலுத்தாததால் நிலுவைத் தொகை இருந்தால், அதை வரும் திங்கட்கிழமை அல்லது அதற்கு முன் செலுத்த வேண்டும்.

திங்கட்கிழமைக்குப் பிறகும், நிலுவைத் தொகை செலுத்தப்படாமல் இருந்தால், அதை அறவிட உள்நாட்டு வருவாய் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

1944 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ அல்லது அருகிலுள்ள உள்நாட்டு வருவாய் பிராந்திய அலுவலகத்தின் ஊடாகவோ இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்து : உறங்கிக் கொண்டிருந்த நபர் பலி!!

புத்தளம், மாரவில பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நபரே உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் மாரவில, தும்மோதர, சுஹதாவத்த வீதி பகுதியை சேர்ந்த 44 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் என பொலிார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை, கொஸ்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் பாம்பு தீண்டி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் பாம்பு தீண்டியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (27.09.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சாவகச்சேரி – நுணாவில் வைரவர் கோயில் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய வினோத் என்ற குடும்பஸ்தரே பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் மானிப்பாய் பகுதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் காதலி விட்டுச் சென்ற மன விரக்தியில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

யாழ்ப்பாணத்தில் காதலித்த பெண் விட்டுச் சென்றதால் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இச்சம்பவத்தில் கச்சேரி, நல்லூர் வீதியை சேர்ந்த 24 வயதான திருநாவுக்கரசு வெலிற்றன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இளைஞனும் யுவதியும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவ்வாறான நிலையில் குறித்த பெண் வெளிநாடு செல்வதற்காக இளைஞனுடனான தொடர்பை துண்டித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் மன விரக்தியடைந்த இளைஞன் இன்றையதினம் (27-09-2024) காலை தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துகொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இலங்கையில் இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் ஏற்படவுள்ள மாற்றம்!!

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக இன்றில் இருந்து அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இலங்கையில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

தென் மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

வவுனியா விபத்தில் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்!!

வவுனியாவில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பாெலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் பூவரசங்குளம் குருக்கல்புதுக்குளம் பகுதியில் இன்றையதினம் (27.09.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குருக்கல்புதுக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மாேதி விபத்துக்குள்ளானது.

இதன்பாேது விபத்துக்குள்ளான மாேட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்ததுடன், பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் 30 வயதுடைய குருக்கல்புதுக்குளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் சர்மிளன் என்ற இளைஞரே உயிரிழந்தவர் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா – மன்னார் வீதியில் விபத்து : இளைஞன் பலி!!

வவுனியா, பூவரசங்குளம் குருக்கள்புதுக்குளம்பகுதியில் இன்று (27.09.2024) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக பூவரசன்குளம் பாெலிசார் தெரிவித்தனர்.

வவுனியா குருக்கள்புதுக்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மாேதி விபத்துக்குள்ளானது.

இதன்பாேது விபத்துக்குள்ளான மாேட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்ததுடன், பயணித்த இளைஞனும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். இச் சம்பவத்தில் 30 வயதுடைய குருக்கள்புதுக்குளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் சர்மிலன் என்ற இளைஞரே மரணமடைந்தவராவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எரிபொருளையும் பணத்தையும் சேமித்து வைத்த ரணில் : நன்றி தெரிவித்த அனுர அரசாங்கம்!!

இந்த வருடத்தின் எதிர்வரும் காலப்பகுதிக்கு தேவையான ஏற்பாடுகள் அரசாங்கத்திடம் உள்ளதாக , நாட்டின் ஜனாதிபதி அனுர தலமையிலான புதிய அரசாங்கத்தின் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய நிதியமைச்சர் நியமிக்கப்பட்டதன் பின்னர் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வரவிருக்கும் காலத்திற்கு தேவையான எரிபொருள் மற்றும் எரிவாயு

இந்நிலையில் வரவிருக்கும் காலத்திற்கு தேவையான எரிபொருள் மற்றும் எரிவாயு கொள்வனவுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணம் அரசாங்கத்திடம் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

அரசாங்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படவில்லை என தெரிவித்த சத்துரங்க அபேசிங்க , அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சத்துரங்க அபேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.