
ஒரு மாதத்துக்கு பின் அரசியல் கட்சியில் சேர்வது குறித்து முடிவு எடுக்கப் போவதாக நமீதா அறிவித்துள்ளார். ஏற்கனவே தான் அளித்த பேட்டி திரித்து வெளியிடப்பட்டதாக கூறிய அவர் அரசியலில் ஈடுபடுவது எப்போது என்பத குறித்தும் ஆம் ஆத்மி கட்சி பற்றிய கருத்தையும் விளக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது..
எனக்கு அரசியலில் ஆர்வம் உள்ளது. எந்த கட்சியில் இணையப் போகிறேன் என்பது பற்றி இப்போது சொல்ல முடியாது. இந்த மாதம் வரை பொறுத்து இருங்கள். அதன் பிறகு என் முடிவை சொல்கிறேன். திருச்சியில் நிருபர்கள் என்னை சந்தித்த போதும் இதையே தெரிவித்தேன்.
ஆம் ஆத்மி என்றால் சாதாரண மனிதர்கள் என்று அர்த்தம். சாதாரண மக்களும் அரசியலுக்கு வரலாம் என்பதை ஆம் ஆத்மி கட்சியினர் நிரூபித்து உள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நான் அந்த கட்சியில் சேரப் போகிறேன் என்றோ தமிழகத்தில் அந்த கட்சிக்கு தலைமை தாங்கப் போகிறேன் என்றோ பத்திரிகையாளர்களிடம் சொல்லவில்லை.
நரேந்திரமோடி குஜராத் மாநிலத்தை சிறப்பாக ஆக்கியுள்ளார் அவர் திறமையாக ஆட்சி செய்வார். சரத்குமார் கட்சி பற்றி நான் சொல்லாதது பத்திரிகைகளில் வந்துள்ளது. எனக்கு தமிழக அரசியலில் புலமை கிடையாது. நான் திரையுலகில் இருக்கிறேன்.
சரத்குமார் நடிகர் சங்க தலைவராக இருக்கிறார். அவர் நடிகர் சங்கத்தை ஒற்றுமையுடன் குடும்பம்போல கொண்டு செல்கிறார். நான் அவர் குடும்ப நண்பராக இருக்கிறேன். சரத்குமார் கட்சி நடத்துவது கூட தெரியாமலா இருக்கிறேன் என்று நமீதா கூறியுள்ளார்.




நடிகை ஸ்ருதிஹாசனுக்கு திடீர் சத்திர சிகிச்சை நடந்தது. தெலுங்கு பட ஷூட்டிங்கிற்காக, மும்பையிலிருந்து சமீபத்தில் ஐதராபாத் வந்தார் ஸ்ருதிஹாசன்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்கும் வரையில் இன்றைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கம் பதவியில் இருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அண்மையில் ஆளும் கட்சிக்கு தாவி தென் மாகாண சபையின் உறுப்பினர் கிறிஷ்சாந்த புஷ்பகுமார தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்..
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தம்மை ஏமாற்றி விட்டதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
தனது கணவனை கொலை செய்த வலஸ்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 12 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த தொழில்நுட்ப பொறியாளர் ஒருவர், ஷார்ஜாவில் உள்ள மீன் சந்தையில் வேலை செய்வது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
போய்ஸ் சினிமா பாணியில் 20 ஆயிரம் பந்தயம் கட்டி, பாகிஸ்தானில் நிர்வாண ஓட்டப் பந்தயம் நடத்திய வாலிபர்களை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.
பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா சிங்கப்பூரில் விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்து காரணமாக அமைச்சரின் காலில் உபாதை ஏற்பட்டுள்ளது.அவர்க்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவரின் வீட்டில் இருந்த பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் காலியில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் நாள் தோறும் ஐந்து பெண் குழந்தைகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக சிறிஜயவர்தனபுர பல்கலைக்கழகப் பேராசிரியர் யாசாஞ்சலி தேவிகா ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் கடற்பகுதி ஒன்றில் பாறைகளுக்கு அருகே நடந்து சென்ற பெண் ஒருவரை ராட்சத அலை கடலுக்குள் அடித்து சென்ற சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் சில்லறை நாணயங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டிலிருக்கும் தமது நாணயங்களை மீண்டும் நாட்டுக் கொண்டுவர இலங்கை முயற்சிகளை எடுத்து வருகிறது.