வீரர்களிடம் வெறி இல்லையா : கவாஸ்கருக்கு பதிலடி கொடுத்த டோனி!!

Dhoniஇந்திய அணியை விமர்சித்த முன்னாள் அணித்தலைவர் சுனில் கவாஸ்கருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் அணித்தலைவர் டோனி.

தென் ஆபிரிக்காவில் சமீபத்தில் டெஸ்ட் தொடரை இந்திய அணி பறிகொடுத்து. இந்நிலையில் இந்திய அணியின் ஆட்டத்திறனை விமர்சித்து கவாஸ்கர் கருத்து தெரிவித்திருந்தார்.

அதாவது இந்திய அணியினரிடம் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி இல்லை என்றார். இதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் டோனி.

கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சியில் டோனி பங்கேற்ற போது, கவாஸ்கரின் விமர்சனம் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு பேசாமல் கையில் ஒரு ஏ.கே. 47 துப்பாக்கியும் அதில் கிரேனெட் லாஞ்சரையும் பொருத்தி எடுத்துச் செல்ல வேண்டியதுதான் என்று சிரித்தபடி கூறியுள்ளார்.

இதற்கிடையே விரைவில் நியூசிலாந்து செல்லவுள்ள இந்திய அணி, ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

 

இலங்கையின் பந்துவீச்சில் சுருண்ட பாகிஸ்தான் அணி!!

SLபாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.

துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஒட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

பாகிஸ்தான் அணிசார்பாக அதிகபட்சமாக குராம் மன்சூர் 73 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். நுவன் பிரதீப் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் மூன்று விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன், சுரங்க லக்மால் மற்றும் சமிந்த ஏரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைக் வீழ்த்தினர்.

இதனையடுத்து தனது முதலாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை நேற்றை முதல்நாள் ஆட்ட நேர முடிவின் போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 57 ஓட்டங்களை பெற்றிருந்தது.

 

ராஜா ராணியால் ஏ.ஆர்.முருகதாசுக்கு பிரச்சனை : நீதிமன்றத்தில் வழக்கு!!

Raja Raniராஜா ராணி படத்தில் ஏர் வாய்ஸ் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தியதற்காக அப்படத்தை தயாரித்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு ஏர் வாய்ஸ் இன்ஃபோகாம் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் ஈரோட்டில் துவங்கப்பட்டு மும்பையில் டிரேட் மார்க்கை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் அண்மையில் வெளியான ராஜா ராணி படத்தில் ஜெய் மற்றும் சத்யன் ஏர்வாய்ஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பது போன்று காண்பித்திருந்தனர். மேலும் அந்நிறுவன சேவையில் குறைபாடு உள்ளது போன்ற காட்சிகள் இருந்ததாகக் கூறி ஏர் வாய்ஸ் அதிருப்தி அடைந்துள்ளது.

இதையடுத்து ராஜா ராணி படத்தை தயாரித்த பாக்ஸ் ஃபோர் ஸ்டூடியோ, நெக்ஸ்ட் பிக் பிலிம் தயாரிப்பாளரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் மீது ஈரோடு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் இனி திரையரங்கு, டிவிடி மற்றும் தொலைக்காட்சியில் ராஜா ராணி படத்தை ஒளிபரப்புகையில் ஏர் வாய்ஸ் நிறுவனத்தின் பெயர் கொண்ட காட்சிகளை காண்பிக்க தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி சதீஸ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் வரும் 27ம் திகதி முருகதாஸ் மற்றும் தயாரிப்பு பொறுப்பாளர்கள் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.

 

புகை பிடிப்பதில் இந்தியப் பெண்கள் உலகளவில் இரண்டாவது இடம்!!

Smoking

உலகளவில் சிகரெட் குடிக்கும் பெண்கள் அதிகமாக உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

அமெரிக்கா மெடிக்கல் அசோசியேசன் (1980 – 2012) நடத்திய ஆய்வில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 12.1 மில்லியன் பெண்கள் தற்போது சிகரெட் புகைப்பதாக கூறப்பட்டுள்ளது. இது அமெரிக்காவை விட அதிகமாகும். இந்தியாவில ஒரு நாளைக்கு ஒருவர் புகைக்கும் சிகரெட்டுகளின் சராசரி எண்ணிக்கை 8.2 ஆகும்.

கடந்த 1980ம் ஆண்டில் இந்தியாவில் புகை பிடித்த ஆண்களின் எண்ணிக்கை 33.8 சதவீதமாக இருந்தது, தற்போது 2012ம் ஆண்டின் படி 23 சதவீதமாக குறைந்துள்ளது என்று ஆய்வில் கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு 1980 ம் ஆண்டில் 721 மில்லியனாக இருந்த சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை 2012 ம் ஆண்டு கணக்குப்படி 967 மில்லியனாக அதிகரித்துள்ளது என்றும் 10 ஆண்களில் 3 பேர் சிகரெட் புகைப்பதாகவும், 20 பெண்களில் ஒருவர் சிகரெட் புகைப்பதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியாவில் புகை பிடிப்பவர்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.1 சதவீதமாகவும், உடல் நலம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 5.1 சதவீதமாகவும் உள்ளது.

 

பார்க்காமல் காதல் பார்த்தவுடன் பலாத்காரம் : அதிர்ச்சி சம்பவம்!!

Abuseமதுரையில் காதலனை காண வந்த பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த ராணி என்பவர் செவிலியர் படிப்பு படித்து வந்தார். அப்போது கைப்பேசியின் மூலம் மதுரையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

இது பின்னர் காதலாக மாறி விட்டது. தினசரி நேரம் காலம் பார்க்காமல் இருவரும் பேசியுள்ளனர். எத்தனை நாள்தான் கைபேசியிலேயே பேசுவது, நேரில் பார்க்க வேண்டும் என்று பிரகாஷ் கேட்கவே சரி என்று சம்மதித்த ராணி மதுரைக்கு சென்றுள்ளார்.

ரயில் நிலையம் வந்து ராணியை கூட்டிக் கொண்டு அவனியாபுரம் அருகே உள்ள மாநகராட்சி கொலனிப் பகுதிக்கு அழைத்துச் சென்றார் பிரகாஷ். அங்கு ஒரு வயல் பகுதியில் அமர்ந்து பேசியுள்ளனர். அப்போது கைப்பேசி மூலம் யாருடனோ பேசியுள்ளார் பிரகாஷ்.

அடுத்த சில நிமிடங்களில் 3 பேர் அங்கு வந்தனர். அவர்கள் பிரகாஷின் நண்பர்கள், நண்பர் கூட்டத்தைப் பார்த்த ராணி சந்தேகமடைந்தார். நாம் போய் விடலாம் என்று நினைத்து அவர் கிளம்பியுள்ளார்.

ஆனால் பிரகாஷ் உள்பட நான்கு பேரும் சேர்ந்து ராணியை பலாத்காரம் செய்தனர். மேலும் இன்னும் 3 பேரும் அங்கு வந்து அவர்களும் இந்த அக்கிரமச் செயலில் இணைந்தனர்.

7 பேரும் சேர்ந்து ராணியை பலாத்காரம் செய்து விட்டு அங்கேயே அவரை விட்டு விட்டுப் போய் விட்டனர். மயங்கிய நிலைக்குப் போய் விட்ட ராணி பின்னர் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டார்.

அதன் பின்னர் அவரை மக்கள் அவனியாபுரம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு ராணி புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை பொலிசார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

காதலன் போல நடித்து ராணியை சீரழித்த பிரகாஷ் உள்ளிட்ட கும்பலைப் பிடிக்க பொலிசார் தற்போது வலை வீசி தேடி வருகின்றனர்.

 

புதைகுழிகள் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் : அமைச்சர் வாசுதேவ நாண­யக்­கார!!

Vasudevaமன்னார், மாத்­தளை மனிதப் புதை­கு­ழிகள் தொடர்­பாக நீதி­யான விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு குற்­ற­வா­ளிகள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்­டு­மென்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒரு­மைப்­பாடு தொடர்­பான அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார். அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார மேலும் தெரி­விக்­கையில்..

இலங்­கைக்கு புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்று தேவை என்­பது எனது கொள்­கை­யாகும். இவ்­வா­றா­ன­தொரு புதிய அர­சி­ய­ல­மைப்பில் ஒற்­றை­யாட்சி வலி­யு­றுத்­தப்­ப­டு­வதை நான் எதிர்க்­க­வில்லை. ஆனால், ஒற்­றை­யாட்­சிக்குள் மாகாண சபைகள், அதி­காரப் பர­வ­லாக்கல் உள்­ள­டக்­கப்­பட வேண்டும். மாகாண சபைகள் இல்­லாத ஒற்­றை­யாட்­சியை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

அத்­தோடு ஒற்­றை­யாட்­சிக்குள் நாடு பிரியும் என்ற விவாதம் அர்த்­த­மில்­லா­த­தாகும். இந்­தி­யாவில் இந்த முறை­மைதான் உள்­ளது. அங்கு அதி­கா­ரங்கள் பர­வ­லாக்­கப்­பட்டு மாநில ஆட்சி நடை­பெ­று­கி­றது. அங்கு நாடு பிரிந்­ததா, இல்­லையே. மக்கள் அதி­கா­ரங்­க­ளோடு வாழ்­கின்­றனர்.

பெரும்­பான்மை இன சிங்­கள மக்­களின் ஆத­ர­வுடன் மட்­டுமே புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வா­கினால் அது வெற்­றி­பெறப் போவ­தில்லை. தமிழ், முஸ்லிம் மக்­களின் ஆத­ரவும் இதற்கு கிடைக்க வேண்டும். இல்­லா­விட்டால் அது நடை­முறை சாத்­தி­ய­மா­காது.

மன்னார் மட்­டு­மல்­ல­மாது, மாத்­தளை மனிதப் புதை­கு­ழிகள் தொடர்­பா­கவும் விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­டு­கின்­றன. இது நீதி­யா­னதும், சுயா­தீ­ன­மா­ன­து­மாக நடை­பெற வேண்டும். குற்­ற­வா­ளிகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு சட்­டத்தின் முன் நிறுத்தி தண்­டனை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார தெரிவித்தார்.

 

வவுனியா நகர சபை மற்றும் பிரதேச சபை ஊழியர்களின் பிரச்சனை சம்பந்தமாக வட மாகாண சுகாதார அமைச்சர் முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்து பேச்சு!!

Northவவுனியா நகர சபை மற்றும் பிரதேச சபைகளில் நீண்டகாலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய சுகாதார தொழிலாளிகள், சாரதிகள் மற்றும் வேலைப் பகுதி தொழிலாளர்கள் முக்கிய முன்று கோரிக்கைகளை முன்வைத்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டமொன்றினை நேற்று முன்தினம் ஆரம்பித்திருந்தனர்.

இந்த நிலையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், இ.இந்திரராஜா, மா.தியாகராசா ஆகியோரும் ஊழியர்களை சந்தித்து உரையாடியதுடன் அவர்களின் கோரிக்கைளை முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு அனுப்பியிருந்தனர்.

இந்த நிலையில் வடமாகாண முதலமைச்சர் அவர்களை மாகாண சுகாதார அமைச்சர் அவர்கள் நேற்று முன்தினம் சந்தித்து இதுதொடர்பாக நீண்ட நேரம் உரையாடியதுடன், இதுதொடர்பில் முக்கிய முடிவுகள் எட்டப்பட்டதாக தெரிவித்தார்.

இதுதொடர்பில் நேற்று காலை வவுனியா நகர சபை கேட்போர் கூடத்தில் ஊழியர் சங்க பிரதிநிதிகளுடனான கூட்டமொன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வடமாகாண சுகாதார அமைச்சர் அவர்கள் முதலமைச்சர் அவர்களுடனான சந்திப்பு தொடர்பில் (தொலைபேசி மூலம்) உரையாற்றினார். வடமாகாண சுகாதார அமைச்சர் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில்..

நடைபெற்ற முதலமைச்சருடனான கூட்டத்தில் இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உறுதியளித்ததாகவும் இம்மாதம் 31 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குமாறு ஊழியர்களை கேட்டுக்கொண்டதாகவும் ஏற்கனவே வவுனியா நகரசபையினால் ஏற்கனவே கோரப்பட்ட விண்ணப்பம் இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கூறப்பட்டது.

அத்துடன் ஏற்கனவே அமைய அடிப்படையில் வேலை செய்பவர்களின் விடயங்களை பரிசீலித்து அவர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுப்பதற்காக முதலமைச்சர் அவர்கள் என்னை பணித்துள்ளார்.

இதனடிப்படையில் ஊழியர்களுக்கு சாதகமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் ஊழியர்களுக்கான ஒப்பந்தம் ஜனவரி மாதம் முதல் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன்,

இதுதொடர்பில் எழுத்துமூல உறுதிமொழி வழங்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக தெரிவித்த ஊழியர்கள், நீண்டகாலமாக அதிகாரிகளின் அசமந்தப்போக்கினால் தாங்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டதாகவும் எனவே இந்த மாகாண சபை இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

இக்கூட்டத்தில் வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், இ.இந்திரராஜா, ம.தியாகராஜா, நகரசபையின் செயலாளர், வர்த்தகர் சங்க பிரதிநிதிகள், வரியிறுப்பாளர் சங்க பிரதிநிதிகள், சுகாதார அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் மற்றும் ஊழியர் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இவ்விடயம் தெடர்பாக சுகாதார அமைச்சர் அவர்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களுடன் தொடர்பு கொண்டு நிலைமை தொடர்பில் விளக்கமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

காணாமற்போனோர் பற்றி தீர்க்கமான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கவேண்டும் : ராப்பிடம் அனந்தி தெரிவிப்பு!!

Ananthiஜ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தினால் எதிர்வரும் மார்ச் மாதம் சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படவுள்ள நிலையில், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் போர்க்குற்றங்களுக்கான சிறப்பு தூதுவர் ஸ்ரீபன் ஜே ராப் நேற்று யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யாழ்.குடாநாட்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தூதுவர் தலைமையிலான குழுவினர் யாழ்.சிவில் சமூகம், வடமாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் ஆகியோரைச் சந்தித்து உரையாடியுள்ளார்.

இச்சந்திப்புக்களில் சிறப்புச் சந்திப்பாக யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் ஆயர்களை யாழ்.ஆயர் இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளர். இந்தச் சந்திப்பு சுமார் 2 மணிநேரம் இடம்பெற்றிருந்தது.

இதன் பின்னர் இறுதியாக வடமாகாண முதலமைச்சரை மாலை 7.45 மணியளவில் சந்தித்துப் பேசியுள்ளர். குறித்த சந்திப்பு 1 மணிநேரம் இடம்பெற்றுள்ளது.

ஸ்டீபன் ஜே. ராப்பிற்கும் அனந்தி சசிதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று மணிக்கு யாழ் கிறின்கிறாஸ் விருந்தினர் விடுதியில் நேற்று நடைபெற்றது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அனந்தி சசிதரன்,

இறுதி யுத்தத்தின் போது, இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட போராளிகள் மற்றும் இளைஞர் யுவதிகள் பற்றி இதுவரையிலும் எதுவித தகவல்களும் இல்லையெனவும். தொடர்ந்தும் காணாமற் போதல், கடத்தல் என்பன இடம்பெற்று வந்தது எனவும் அவரிடம் தெரிவித்தேன்.

காணாமற்போனோர் பற்றிய சரியான தீர்க்கமான நடவடிக்கைகளை அமெரிக்க எடுக்கவேண்டுமென தெரிவித்திருந்தேன்.

அத்துடன் போர்க்குற்ற விசாரணைக்கு அப்பால் இன்றைய நிலையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களிடம் சுட்டிக்காட்டியிருந்தேன்.

மேலும் வலி.வடக்கில் கடந்த 23 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்களில் 7500 க்கும் அதிகமான குடும்பங்கள் இதுவரையிலும் மீள்குடியேற்றப்படாமல் அவர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டிருப்பதினை ராப்பிற்கு எடுத்துக் கூறினேன். என்றார்.

 

பூமிக்கு அருகே சுற்றிவரும் மிக அபாயகரமான விண்பாறை!!

Worldவிண்வெளியை பற்றி ஆராய நாசா ஏவிய நியோவைஸ் என்ற செயற்கைகோள் பூமியை சுற்றிவந்து விண்வெளியை பற்றிய அறிய புகைப்படங்களை அனுப்பி வருகிறது. இது, கடந்த மாதம் 29ம் திகதி அன்று பூமியில் இருந்து 43 மில்லியன் மைலுக்கு அப்பால் சுற்றிவரும் விண்பாறை பற்றிய புகைப்படத்தை அனுப்பிவைத்துள்ளது.

2013 ஒய்.பி. 139 என்றழைக்கப்படும் இந்த விண்பாறையானது நிலையான நட்சத்திரங்களின் பின்னணியில் நகர்ந்துசெல்வதை இந்த விண்கலம் படம்பிடித்துள்ளது.

அரிசோனா பல்கலைக்கழகம் பயன்படுத்தும் விண்வெளியை படபிடிக்கும் டெலெஸ்கோப்பும் இந்த விண்பாறை சுற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளது.

650 மீட்டர் விட்டத்துடன் நிலக்கரி போன்று கருப்பாக இருக்கும் இந்த விண்பாறையின் அளவு, வெளிச்சம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆராய முடியும். சூரியனை சுற்றிவரும் இந்த விண்பாறை மிக அபாயகரமானது என்று விண்பாறை மற்றும் வால் நட்சத்திரங்களை பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்கள்.

 

 

உலகின் நீண்ட கால்களை கொண்ட பெண்ணாக அனஸ்டாசியா!!

Long Leg

உலகின் நீண்ட கால்களை கொண்ட பெண்களுக்கான போட்டி ரஷ்யாவில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 52 பெண்கள் கலந்துகொண்டனர்.

இதில் 42 அங்குலம் நீளமுள்ள கால்களை கொண்ட பயிற்சி வழக்கறிஞரான சைபீரியாவை சேர்ந்த அனஸ்டாசியா ஸ்ட்ராஷேவ்ஸ்கயா நீண்ட கால்களை கொண்ட பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

18 வயதே நிரம்பிய அவர் இப்போட்டியில் பங்கு கொண்டு 1600 பவுண்டுகளை பரிசாக பெற்றார். தனக்கு பரிசாக கிடைத்த தொகையில் ஒரு பகுதியை சமூக சேவையில் ஈடுபடும் அறக்கட்டளைக்கு வழங்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறு வயதிலிருந்தே தான் வழக்கறிஞராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்ததாக குறிப்பிட்ட அவர் எதிர்காலத்தில் சிவில் சட்டம் படிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா மேலும் ஒரு பதிலடி நடவடிக்கை!!

Devyaniஅமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணிபுரிந்து வந்த தேவயானி கோப்ரகடே, விசா மோசடி புகாரில் கைது செய்யப்பட்டார்.

அவரை கைது செய்து நடத்திய விதத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய அரசு, இதற்காக அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர் மீதான வழக்கை மீளப் பெற வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறது.

ஆனால் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்ட அமெரிக்க அரசு அவர் மீது நடவடிக்கை எடுப்பதிலும் உறுதியாக உள்ளது.

வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்வதற்கான காலக்கெடுவை வருகிற 13ம் திகதியில் இருந்து மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்று தேவயானியின் வக்கீல் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கக்கூடாது என்று அமெரிக்க அரசு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் இந்திய அரசும் பல்வேறு பதிலடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் அனுபவித்து வந்த பல்வேறு சலுகைகள் பறிக்கப்பட்டு உள்ளன. தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக அமெரிக்க தூதரகங்கள் மேற்கொண்டுவரும் வர்த்தக செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் உள்ள அமெரிக்க சமூகத்தினர் ஆதரவு சங்கத்தின் சார்பில் உணவு-மதுபான விடுதி, வீடியோ கிளப், நீச்சல் குளம், விளையாட்டு அரங்குகள், அழகு நிலையங்கள் போன்ற பல்வேறு வர்த்தக பணிகளில் அமெரிக்க தூதரகங்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தூதரக ஊழியர்கள் அல்லாத இந்தியாவில் உள்ள மற்ற அமெரிக்கர்களுக்காக நடத்தப்பட்டு வரும் இந்த வர்த்தக பணிகள் தொடர்பான வருமானவரி கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, வியன்னா மாநாட்டு சட்ட விதிகளுக்கு முரணானது என்று கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறும் அமெரிக்க தூதரக வாகனங்கள் மீது மற்ற வாகனங்களைப் போல் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

 

நான்கு வயதுச் சிறுமியை வல்லுறவு செய்த கடற்படை வீரருக்கு விளக்கமறியல்!!

Jailநான்கு வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்ட கடற்படை வீரரை நேற்று புதன்கிழமை குச்சவெளி நீதவான் தயான்மிகாகே முன்னிலையில் பொலிஸார் ஆஜர் படுத்தினர்.

சந்தேகநபரை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்.

திருகோணமலை திரியாய் பகுதியில் கடந்த 29.12.2013 ஞாயிற்றுக்கிழமை 4 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்ட கடற்படை வீரரே நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தேகநபரை எதிர்வரும் 22ம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள், சகோதரர்கள் சாட்சியளித்தனர். இவர்கள் சார்பில் சட்டத்தரணி ஜே.என்.லாகிர் ஆஜராகினார். கடற்படையினர் சார்பில் சட்டத்தரணி சுபாசினி சித்திரவேல் ஆஜராகினார்.

 

இளம் ஹீரோக்களை ஈர்க்கும் நஸ்ரியா!!

Nasriya

இளவட்ட நாயகர்களுடன் ஜோடி போடுவதில் நம்பர் வன் நடிகையாக வலம் வருகிறாராம் நஸ்ரியா.

நய்யாண்டி தொப்புள் சர்ச்சை நாயகியான நஸ்ரியாவின் மார்க்கெட் சற்றே ஆடினாலும் மீண்டும் மார்க்கெட்டில் சூடுபிடித்துவிட்டார்.
இதற்கு காரணம், அவருடன் நடித்த அத்தனை ஹீரோக்களும் மீண்டும் மீண்டும் அவருடன் டூயட் பாட ஆசைப்படுவதுதான்.

அந்தவகையில் நேரம் படத்தில் நிவினுடன் அறிமுகமான நஸ்ரியா மீண்டும் அவருடன் ஓம் சாந்தி ஒசானா என்ற மலையாள படத்தில் மறுபடியும் நடித்து வருகிறார்.

அதேபோல் சலாலா மொபைல்ஸ் என்ற படத்தில் துல்கர்சல்மானுடன் நடித்து வருபவர், அடுத்தபடியாக வாய் மூடி பேசவும் என்ற படத்தில் நடிக்கிறார். தற்போது பகத் பாசிலுடன் ஒரு படத்தில் நடித்து வருபவர், அடுத்து களிமண்ணு இயக்குனர் பிளஸ்ஸி இயக்கும் படத்திலும் பகத்பாசிலுடன் இணைந்திருக்கிறார்.

மலையாளத்தில்தான் இந்த நிலை என்றால், தமிழிலும் ராஜாராணிக்குப்பிறகு ஆர்யாவுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

த்ரிஷாவிற்கு பிடிவாரண்ட்!!

Trisha

நடிகை த்ரிஷாவிற்கும், அவரது அம்மா உமா கிருஷ்ணனுக்கும் சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டு திரிஷா ஹொட்டல் அறை ஒன்றில் குளிக்கும் காட்சி என்ற பெயரில் காணொளி ஒன்று இணையதளங்களில் வெளியானது.

அதனை வார பத்திரிக்கை ஒன்று படமாகவும், செய்தியாகவும் பிரசுரித்தது. இதை எதிர்த்தும், நஷ்டஈடு கேட்டும் உமா கிருஷ்ணன் எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. ஒருமுறை கூட உமா கிருஷ்ணன் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்திற்கு வரவில்லை. இந்நிலையில் நீதிபதி கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் வழக்கு ஜனவரி 7ம் திகதி செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போதும், திரிஷாவும், அவரது அம்மா உமா கிருஷ்ணனும் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து அடுத்த விசாரணையின் போது உமா கிருஷ்ணன் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று கைது வாரண்டு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

போலி டிக்கட் வழங்கி ஏமாற்றப்பட்ட சபரிமலை யாத்திரிகர்கள் : விமான நிலையத்திலிருந்து திரும்பி வந்தனர்!!

Sabarimalaiதமக்கு வழங்கப்பட்டது போலி விமான பயணச் சீட்டு எனத் தெரியாது சபரிமலை யாத்திரைக்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 55 யாத்திரீகர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்தில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது குறித்த யாத்திரீகர்களிடம் வழங்கப்பட்டது போலி பயணச் சீட்டு என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து விமான நிலையத்தில் இருந்து அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட சபரிமலை யாத்திரிகர்கள் 55 பேரும் விமான பயணச் சீட்டு வழங்கிய முகவருக்கு எதிராக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

போலி விமான பயணச் சீட்டுக்களை வழங்கி சபரிமலை யாத்திரீகர்களை ஏமாற்றிய நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

 

யாழ். மாவட்டத்தில் மூன்று நீதிமன்றங்கள் நாளை திறந்து வைப்பு!!

Courtயாழ். மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சாவகச்சேரி, மல்லாகம், ஊர்காவற்றுறை ஆகிய மூன்று நீதிமன்ற கட்டிடத் தொகுதிககளும் நாளை வியாழக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளன.

நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் அழைப்பின் பேரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச ,பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ஆகியோரினால் இந்த நீதிமன்ற கட்டிடத் தொகுதிகள் திறந்து வைக்கப்படவுள்ளன.

இதன்படி158 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சாவகச்சேரி புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதி நாளை காலை 9 மணிக்கும்,175 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மல்லாகம் நீதிமன்ற கட்டிடத் தொகுதி நாளை முற்பகல் 11.30 மணிக்கும், 127 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஊர்காவற்றுறை நீதிமன்றத் தொகுதி நாளை பிற்பகல் 2.30 மணிக்கும் திறந்துவைக்கப்படவுள்ளன .