ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.
ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”
அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”
பையன் சொன்னான்”தங்கம்”
அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”
பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.
”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.
இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!
வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!
மாதம் பன்னிரெண்டும்
எனை மதியாது கழிந்தோட,
ஈகைப் பண்புள்ள வெறுமையோ
நாளும் எனை வாட்ட,
நித்திரைப் பொழுதில்
நிசப்த்த நாளங்கள்,
ஒத்திகை நடத்துதே
என் விழியோர ஈரங்கள்..
நேசம் வீசி
நாடி வந்தேன்,
உன் சுவாசம் தேடி
ஓடி வந்தேன்,
என் பாதைகள் என்றும்
உன் பாதங்கள் தேட,
என் வீதிகள் முடியுமிடம்
என்றும் உன் வீடு தானே..
தனியொரு நாளில்
தவிப்புகள் நிறைய,
துணையிவள் வந்தால்
ஏக்கங்கள் கழிய,
விடையொன்று சொல்லிவிட்டு
வீடு செல்லு தளிரே,
நடைபிணம் நானுன்னை
நாளும் நாடுகிறேனே..
வீசும் காற்றுக்கு
விலைதான் என்னவோ,
வாடிய பயிராய்
வீதியில் நிற்கிறேன்,
எனை ஏசும் உன் விழிக்கு
என்னதான் கோபமோ,
அது சாடிய என்னுயிரும்
உடலிடத்தே பிரிந்தது..
எதுகை மோனையில்
போட்டி போட்டு,
ஏட்டுக் கவிதை வடிக்க
நான் வரவில்லை,
பதுமையிவள் பேசும்
மௌன மொழி கேட்டு,
மனப் பிதற்றலைத்
தீர்க்க வந்துள்ளேன்..
நட்பில் நாற்பது இருக்கட்டும்
நமக்கோ ! நான்கு தான் தேவை !
அவைகள்
1.அக நட்பு
2.முக நட்பு
3. யுக நட்பு
4. சக நட்பு
உன்னை அன்பு செய்தல் – அகமாக !
மற்றவரை அன்பு செய்தல் – முகமாக !
உலகை அன்பு செய்தல் – யுகமாக !
நம் சொந்தங்களை அன்பு செய்தல் – சகமாக !
எனும் நான்கில் மனம் மகிழ்வோம் !!
முல்லை மொட்டுக்களாய்…
பள்ளிச் சிட்டுக்களாய்…
பகை மறந்து,
பை சுமந்து,
சென்றோமே பள்ளிக்கு….!!!
பதின் ஒரு வருடங்கள்.
பசுமையான வருடல்கள்.
மறக்க முடியா மங்கள நினைவுகள்.
தனிமையில் மீடிப்பர்த்தேன்.
என் இளமை அழுகிறது…!!!
நாங்கள் அடி வாங்காத ஆசிரியர் இல்லை
எங்களின் பகிடி வதைக்கு பலிஆகத
ஆட்களும் இல்லை…!!!
நாங்கள் அங்கு செய்யாத சேட்டையும் இல்லை….!!!
பராமுகமுடன் படித்தோம்,
பக்க விளைவை எதிர் கொள்ள
முடியாமல் தவித்தோம்…!!!
பரீட்சை குறுக்கிட்டது
எங்களின் படிப்புக்கே
முற்றுகை இட்டது.
பெறுபேறும் வந்தது…!!
ஆனந்தத்துடன் இருந்தனர் சிலர்,
அழுகையுடன் இருந்தனர் இன்னும் சிலர்,
மரமாய் இருந்த எம் நண்பர் கூட்டம்
இன்று செடியாய் மாறியது.
உயிர் தோழி மூவருடன்
உயர் தரத்தில் தடம் பதித்தோம்.
புதுப்புது முகங்கள்…
சற்றே ஆறுதலடைண்டன அகங்கள்…
மீண்டும் ஆரம்பம்,
எங்கள் அன்பின் போராட்டம்.
பழைய ஜாபகங்கள் படர்ந்தன.
பிரிந்த தோழிகளின்
நினைவலைகள் நீண்டன…!!!
எமது பாடசாலை
வாகை மரத்திடம் கேட்டுப்பார்,
நாங்கள் செய்த சேட்டைகளை
அது மொழிபெயர்க்கும்…!!!
இதற்குள் உயர்தர வாழ்க்கை
உருண்டோடி விட்டது…!!!
இதை தனிமையில் நினைக்கையிலே
இதயம் சோக கீதம் பாடுது…!!!
அதற்குள் சிலர்,
திருமணமும் முடித்திருப்பார்!
சிலர் பல்கலைக்கழகமும்
சென்றிருப்பார்……!!!
கண்ட இடத்தில் ஒரு புன்னகை
வருடத்துக்கு ஒரு முறை
வாழ்த்து மடல்…..!!!
பள்ளிப் பிள்ளைகளின் கற்கும் திறனில், அவர்களது தூக்கமின்மை அல்லது தூக்கம் கெட்டுப் போதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அண்மைய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டிருக்கிறது.
சர்வதேச கல்விப் பரீட்சைகளை நடத்தும் ஆய்வாளர்கள் இதனைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மிகவும் முன்னேறிய நாடுகளில், குறிப்பாக கணினி மற்றும் தொலைக்காட்சிகளை நீண்ட நேரம் பார்ப்பவர்களுக்கு இந்த தூக்கம் கெட்டுப் போவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், அத்தகைய நாடுகளில் உள்ள பள்ளிப் பிள்ளைகளின் கணித, விஞ்ஞான மற்றும் வாசிப்பு திறன் குறைவாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
பொஸ்டன் கல்லூரியால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அமெரிக்காவிலேயே அதிகமான குழந்தைகள் தூக்கம் கெட்டுப் போவதற்கான வாய்ப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
அங்கு 9 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளில் 73 வீதத்தினருக்கு ஒழுங்கான தூக்கம் கிடையாது என்றும், 13 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளில் 80 வீதத்தினருக்கு தூக்கம் சரியாக இல்லை என்றும் கூறப்படுகிறது.
உலக சராசரியைவிட இது மிகவும் அதிகமாகும்.
இதேபோன்று நியூசிலாந்து, சவுதி அரேபியா, இங்கிலாந்து, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்தப் பிரச்சினை அதிகமாக உள்ளது.
நல்ல தூக்கம் இருப்பதால், கணிதம், விஞ்ஞானத்தில் அதிக பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களை கொண்ட நாடுகளாக அஜர்பைஜான், கசகஸ்தான், செக் குடியரசு, ஜப்பான் மற்றும் மோல்ட்டா ஆகிய நாடுகள் திகழுகின்றன.
ஆசிய மாணவர்கள் இந்த கணித, விஞ்ஞான மற்றும் வாசிப்பு திறனில் முன்னணியில் திகழ்கின்றனர்.
சரியான நித்திரை இல்லாத பிள்ளைகள் ஆசிரியர்களின் உத்தரவுகளை கடைப்பிடிப்பதிலும் சோர்வு காண்பிப்பதாகக் கூறப்படுகின்றது.
தூக்கம் குறைவான நிலைமையில் மூளை புதிய விசயங்களை உள்வாங்க தடுமாறுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
கணினியில் விழித்திருத்தல், நண்பர்களுக்கு அதிகமாக மெசேஜ்களை அனுப்புவர்கள் ஆகியோர் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்திற்கு செல்லக்கூடிய விண்வெளி வீரர்கள் கடுமையான கதிரியக்கத் தாக்கத்துக்கு உள்ளாக நேரிடும் என்று அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா எச்சரித்துள்ளது.
பாதுகாப்பு விதிமுறைகள் உடன்படும் அளவைவிட கூடுதலான அளவுக்கு அங்கு கதிர்வீச்சுத் தாக்கத்துக்கு விண்வெளி வீரர்கள் இலக்காக நேரிடும் என்று நாசா கூறுகிறது.
உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடிய அளவில் இந்த கதிர்வீச்சு இருக்கும் என்றும் விண்வெளி வீரர்களை நாசா எச்சரித்துள்ளது.
கியூரியாசிட்டி ரோவர் விண்ணூர்தியைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் மூலம் இதனை நாசா உறுதிப்படுத்தியுள்ளது.
செவ்வாயின் தரையில் ஊர்ந்துசென்று ஆய்வு நடத்திய ஒரு கார் அளவிலான இந்த ரோபோ- ஊர்தியை அங்கு கொண்டுசெல்லும் அரை-பில்லியன் கிலோமீட்டர் தூர பயணத்துக்கு 8 மாதங்களுக்கும் அதிககாலம் எடுத்துள்ளது.
இந்தப் பயணத்தை கிழமைகள் கணக்கில் விரைவு படுத்துவதற்கு போதுமான உந்துசக்திக்கான தொழிநுட்ப வசதி இன்னும் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வாழைக்காயில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தை தான் சமைப்பது வழக்கம். அதற்காக மற்ற வகை வாழைக்காய்களை சாப்பிடக் கூடாது என்பது கிடையாது. அவைகள் பரவலாக கிடைப்பதில்லை.
மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து இருக்கிறது. இதனால் உடல் பருக்கும். உடலுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். பசியை அடக்கும். இதனுடன் மிளகு சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. வாயால் ரத்தம் கக்குபவர்களுக்கும், கிராணி, நீரழிவு உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக் கச்சல் பயன்படும்.
வாழைக்காயைச் சமைக்கும்போது மேல் தோலை மெல்லியதாகச் சீவியெடுத்தால் போதும். உள்தோலுடன் சமைப்பதே சிறந்தது. சிலர் இதுபோன்று சீவியெடுத்த தோலை நறுக்கி வதக்கி, புளி, மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். பொதுவாக கேரளத்தில் இந்தப் பழக்கம் அதிகம் இருக்கிறது.
இப்படி துவையலாக செய்து சாப்பிடுவதால் ரத்த விருத்தியும், பலமும் உண்டாகும். வாழைக்காய் சாப்பிடு வதால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் ஆகியவையும் நீங்கும். ஆனால் வாய்வு மிகும். அதுபோல வாழைப்பிஞ்சு சாப்பிடுவது பத்தியத்திற்கு ஏற்றதுதான் என்றாலும் மலத்தை இறுக்கி விடும்.
பச்சை வாழைக்காயை சின்ன சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில்; உலர்த்தி மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.
சிறுவர்களுக்கு நாடுகள், மலைகள், நீர்வீழ்ச்சிகள், பாலைவனங்கள், தீவுகள், கண்டங்கள் போன்றவற்றைப் பற்றி அறிந்து கொள்ளுவதில் ஆர்வம் அதிகம்.சிறுவர்களுக்கான பொதுஅறிவுத் தகவல்கள், அவர்கள் கற்கும் பாடங்களுடன் தொடர்புடையதாக அமைந்தால் கற்றலுக்காக கற்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.
இவ்வாறான பொதுஅறிவு வினா-விடைகள் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து வவுனியா-நெற் இணையத்தில் வெளியிடப்படும்.
1 .உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது?
வத்திகான்
2. உலகிலேயே பரப்பளவில் மிகப் பெரிய நாடு எது?
ரஷ்யா
3 .உலகிலேயே மிகப் பெரிய தீவு எது?
கிரீன்லாந்து
4. உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது?
தீபெத் பீட பூமி
5. உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது?
சுவிட்சர்லாந்து
6. உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது?
சஹாரா பாலைவனம் (ஆபிரிக்கா)
7. உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது?
ஆடகாமா பாலைவனம் (சிலி)
8. உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
ஏஞ்சல் நீர்வீழ்ச்சி (வெனிசுலா)
9. உலகிலேயே மிக அகலமான நீர்வீழ்ச்சி எது?
நயாகரா நீர்வீழ்ச்சி
10. உலகிலேயே மிக நீளமான நதி எது?
நைல் நதி (6695கி.மீ)
11. உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)
12 . உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது?
மெக்சிகோ வளைகுடா
13. உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது?
ஆசியாக் கண்டம்
14. உலகிலே நதிகளே இல்லாத நாடு எது?
சவுதிஅரேபியா
15. உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது?
பின்லாந்து
பள்ளிவாசலில் தொழுகை நேரம். முஸ்லீம்கள் பலர் ஒன்று சேர்ந்து தொழுகையில் பங்கு கொண்டு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார்.
தொழுது கொண்டிருந்த ஒருவன் திடீரென்று தனக்கு அருகே தொழுகையில் ஈடுபட்டிருப்பனைப் பார்த்து ” அடடா நினைவு மறதியினால் என் வீட்டுக் கதவை மூடாமல் வந்து விட்டேன் ” என்றான்.
” தொழுகை நேரத்தில் நீ பேசியதானல் என் பிரார்த்தனையைக் கலைத்து விட்டாய். அதனால் நீ மறுபடியும் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும் ” என்றான் அவன்.
” நீயுந்தான் இப்போது என்னுடன் பேசி பிரார்த்தனையைக் கலைத்துக் கொண்டாய். நீயுந்தான் மீண்டும் தொழுகையில் ஈடுபட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் ” என்றான் மற்றவன். அவர்கள் உரையாடலைக் கேட்டு முல்லா மெல்லச் சிரித்தார்.
” ஏன் சிரிக்கிறீர் ” என அந்த இருவரும் கேட்டனர்.
” பொதுவாக மனித சுபாவத்தை நினைத்துப் பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது. மனிதன் தான் ஒழுங்காக முறையாகப் பிரார்த்தனையில் ஈடுபடுவதைவிட மற்றவன் ஒழுங்காகப் பிரார்த்தனை செய்கிறானா என்பதைக் கவனிப்பதில் அதிக அக்கறை செலுத்துகிறான் ” என்றார் முல்லா. அந்த இரண்டு பேரும் வெட்கமடைந்து தலைகுனிந்து கொண்டார்கள்.