இலங்கையின் சதித்திட்டத்தை தடுக்க வேண்டும் : சரத்குமார்!!

sarathkumar

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து சித்ரவதைக்கு உட்படுத்தி விடுவித்து விட்டு நம் மீனவர்களின் படகுகளை மட்டும் அவர்களே கைப்பற்றிக் கொள்ளும் ஒரு முடிவை எடுத்திருப்பது மிகப்பெரிய கண்டனத்திற்கு உரியதாகும்.

இப்படிப்பட்ட தீர்ப்புகளை நீதிமன்றங்கள் தரும்படியான சூழ்நிலையை உருவாக்கி தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தையே அழித்துவிடும் சதித்திட்டத்தை இலங்கை தீட்டியுள்ளது.

படகுகளைக் கைப்பற்றிக் கொண்டால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க வரமாட்டார்கள் என்ற குரூர புத்தியுடன் இலங்கை செயல்படுகிறது. தமிழக மீனவர்கள் பல நூறு பேர் கொல்லப்பட்ட நிலையிலும், நமது மீனவர்களின் உடைமைகள் சூறையாடப்பட்ட போதிலும், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் இந்திய மத்திய அரசின் நிலையை உணர்ந்துதான் இலங்கை மேலும் தவறுகளை செய்து கொண்டிருக்கிறது.

தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை இலங்கையின் தேசிய சொத்து என அறிவித்திருப்பது மிகப்பெரிய மோசடியாகும். இதை ஒருபோதும் நாம் அனுமதிக்கக்கூடாது. இந்திய மத்திய அரசு இதுபோன்ற நிலையை உருவாக்க விடாமல் தடுத்த நிறுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

வவுனியா செட்டிகுளத்தில் போலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது!!

5000

செட்டிகுளம், மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கணேசபுரம் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே இவர்கள் கைதாகியுள்ளார்.

இதன்போது சந்தேகநபர்கள் வசமருந்து 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 9ம், 1000 ரூபா போலி நாணயத்தாள்கள் 9ம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பின்னர் செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மேலும் சில போலி நாணயத் தாள்கள் சிக்கியுள்ளன.

இதன்படி பிரதான சந்தேகநபரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5000 ரூபா போலி நாணயத் தாள்கள் மூன்றும் 1000 ரூபா போலி நாணயத் தாள்கள் 60ம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 33 வயதான இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபெறுகள் எதிர்வரும் 4ம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படவுள்ளது!!

grade-5-exam-resultsஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 4ம் திகதிக்கு முன்னதாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்காக சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலம் மூன்று லட்சத்து இருபத்து ஒன்பதாயிரம் மாணவ மாணவியர் தோன்றியிருந்தனர்.

பரீட்சை பெறுபெறுகள் வெளியிடப்படும் அதே தினத்தில் இணையத்திலும் பரீட்சை பெறுபெறுகள் வெளியிடப்பட உள்ளது.

www.doenets.lk என்ற இணைய முகவரியின் ஊடாக பெறுபெறுகளை பார்வையிட முடியும்.

நியூயோர்க்கில் மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பை தவிர்த்த மன்மோகன்சிங்!!

Indian_Lankan

ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் சந்திப்பை தவிர்த்துக் கொண்டார்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்ற மகிந்த ராஜபக்ச இலங்கை திரும்புவதற்கு முன்னதாக மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசலாம் என்று அவரது வருகைக்காக நியூயோர்க்கில் காத்திருந்தார்.

ஆனால் வொஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்துவிட்டு நியூயோர்க் புறப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்ட நேரத்துக்கு 3 மணி நேரம் தாமதமாக வந்ததால் வேறுவழியில்லாமல் அவரை சந்திக்காமலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புறப்பட்டுச் சென்று விட்டார்.

பிரதமர் மன்மோகன் சிங் அதிகாரபூர்வமற்ற முறையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க விரும்பவில்லை என்றும் அதன் காரணமாகவே அவர் வொஷிங்டனிலிருந்து சில மணிநேரம் தாமதமாக நியூயோர்க் சென்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

கடத்தல் கும்பலிடம் இருந்து 92 குழந்தைகள் மீட்பு!!

china

சீனாவில் குழந்தைகளைக் கடத்தி விற்கும் கும்பலிடம் இருந்து 92 குழந்தைகள் மற்றும் 2 பெண்களை அந்நாட்டு காவல்துறை மீட்டுள்ளனர்.

சீனாவில் தொடர்ந்து குழந்தைகள் கடத்தல் நடைபெற்று வந்த நிலையில், அந்நாட்டு காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் குழந்தைகளைக் கடத்திச் சென்று விற்கும் கும்பலைச் சேர்ந்த 301 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து கடத்தி வைக்கப்பட்டிருந்த 92 குழந்தைகள் மற்றும் 2 பெண்களையும் மீட்டுள்ளனர். இந்த மீட்புச் சம்பவம் எப்போது நடந்தது என்றோ குழந்தைகளைப் பற்றிய விவரங்களையோ காவல்துறை வெளியிடவில்லை.

சீனாவில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற விதிமுறை கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதால், குழந்தைகள் மற்றும் பெண்கள் கடத்தும் நடவடிக்கை அதிகரித்துள்

2013ம் ஆண்டின் உலக அழகியாக பிலிப்பைன்ஸ் அழகி மேகன் யங்!!

Megan Young

2013ம் ஆண்டின் உலக அழகியாக, மிஸ். பிலிப்பைன்ஸ் பட்டம் பெற்ற மேகன் யங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தோனேசிய நாட்டின் பாலியில் உள்ள நாசா துவா கன்வென்ஷன் மையத்தில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன.

இதில் 127 போட்டியாளர்களை சந்தித்து மேகன் யங் இந்த முதலிடத்தைப் பெற்றுள்ளார். சென்ற வருடத்தின் உலக அழகியான சீனாவின் யூ வென்சியா இவருக்கு உலக அழகியாக முடி சூட்டினார்.

மிஸ் பிரான்ஸ் அழகியான மரைன் லோர்பலின் முதல் ரன்னர்-அப் பரிசினைப் பெற்றார். கானா நாட்டு அழகியான கரன்சார் நா ஒகைலி ஷூட்டார் இரண்டாவது ரன்னர்-அப் பரிசினைப் பெற்றார்.

இவர்கள் தவிர பியூட்டி வித் பர்பஸ், மல்டிமீடியா, பீப்பிள்ஸ் சாம்பியன், பீச் பேஷன், ஸ்போர்ட்ஸ் அன்ட் பிட்நெஸ்,டேலன்ட் காம்படிஷன் மற்றும் டாப் மொடல் போன்ற பல பிரிவிலும் அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதற்கான நீதிபதிகள் குழுவில் உலக அழகிப் போட்டி அமைப்பின் தலைவி ஜூலியா மோர்லே, இந்தோனேசிய அழகிப் போட்டி அமைப்பின் தலைவி லிலியானா தனோசோடிப்ஜோ, டைம்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் வினீத் ஜெயின் போன்றோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்தப் போட்டி உலகின் கண்கவர் இடங்களில் ஒன்றான இந்தோனேசியாவில் நடந்தது. அழகிய கடற்கரைகள், பிரமிப்பூட்டும் கோவில்கள், இயற்கை அழகு நிறைந்த பகுதிகள் கொண்ட பாலி தீவில் களிப்பூட்டும் இந்தக் கோலாகலமான நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தப் போட்டிகளை உலகம் முழுவதிலும் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கண்டு களித்தனர்.

10 மணிநேர போராட்டத்தின் பின் மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி பலி!!

well

தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 4 வயது சிறுமி பத்துமணி நேர போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை அடுத்த ஆரணி அருகேயுள்ள புலவன்பாடி கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி தேவி. எல்.கே.ஜி. படித்து வரும் தேவி, சங்கர் என்ற விவசாயிக்கு சொந்தமான நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அந்த நிலத்தில் இருந்த 300 அடி ஆழமும் 1 அடி விட்டமும் உள்ள ஆழ்துளை கிணற்றை வைக்கோல் மற்றும் செடிகளை போட்டு தார் பாயால் மூடி வைத்திருந்தனர்.

ஆழ்துளைக் கிணறு இருப்பதை அறியாத தேவி அதன் மீது உட்கார்ந்து உள்ளார். அப்போது அச்சிறுமி அந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து மாட்டிக் கொண்டாள்.

தேவியை, மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். திருவண்ணாமலை கலெக்டரும் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணியை பார்வையிட்டார்.

30 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த சிறுமி தேவி தனது பெற்றோரின் குரல்களுக்கு பதில் அளித்தாள். மேலும், ஆழ்குழாய் கிணற்றுக்குள் ஒட்சிசன் செலுத்தப்பட்டது.

குழாயின் அருகில் மேலும் ஒரு குழி தோண்டி சிறுமி தேவியை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். ஜே.சி.பி. இயந்திரம் மூலம் 25 அடி பள்ளம் தோண்டப்பட்டது.

குழந்தைக்கு தொடர்ந்து ஒட்சிசன் அளிக்கப்பட்டு வந்தது. 10 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சம்பவம் குறித்த தகவலறிந்த தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்ச் முக்கூர் சுப்பிரமணியம் மற்றும் ஆரணி தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. பாபு முருகவேல் உள்ளிட்டோரும் நேரில் சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளை பார்வையிட்டு, மேலும் துரிதமாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.

இதனிடையே ஆழ்துளை கிணறு தோண்டிய நில உரிமையாளர் சங்கர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினரது வாகனத்தின் மீது கல்வீச்சு!!

car

வட மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பயணித்த வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கண்ணகியம்மன் இறங்குதுறை பகுதியில் வைத்து நேற்று மாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அனலைதீவிற்கு சென்று திரும்பும் வழியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் வாகனத்தின் பின்பக்கக் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிங்களத்தில் சிறந்த நடிகையாக தெரிவுசெய்யப்பட்ட பூஜா!!

pooja

சிங்களத்தில் சிறந்த நடிகைக்கான விருதை வாங்கியுள்ளார் பூஜா. ஜே ஜே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் தொடர்ந்து உள்ளம் கேட்குமே, அட்டகாசம், நான் கடவுள் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

அதன் பின்பு தமிழில் படவாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தெலுங்கில் கவனம் செலுத்தி வந்தவர் பின்பு தனது தாய் மொழியான சிங்களத்திற்கு சென்றுவிட்டார். இதற்கிடையில் இவருக்கு திருமணம் என்று வேறு பேச்சுக்கள் அடிபட்டன.

இந்நிலையில் இலங்கையில் தெரண லக்ஸ் சினிமா விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறந்த நடிகைக்கான விருதினை பூஜா பெற்றுள்ளார். தற்போது தமிழில் பாலாஜி.கே.குமார் இயக்கத்தில் விடியும் முன் படத்தில் நடித்துவருகிறார்.

நூற்றாண்டு சினிமா விழாவில் ரஜினி, கமலுக்கு அவமானம் : கருணாநிதி கவலை!!

indian_cinema

சினிமா நூற்றாண்டு விழாவில் ரஜினி, கமல் போன்ற மூத்த நடிகர்களை அவமானப்படுத்தியது அநாகரிகமான செயல் என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவினை 21ம் திகதி முதல் ஜெயலலிதா சென்னையில் தொடங்கிவைத்தார். நான்கு மாநில சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்ட இந்த விழாவானது சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

இவ்விழா குறித்து கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சினிமா நூற்றாண்டு விழாவில் ரஜினி, கமல், இளையராஜா, எஸ்.எஸ்.ஆர் போன்ற மூத்த கலைஞர்களுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கவில்லை.

மேலும் அவர்கள் முன்வரிசையில் சென்று அமர்ந்த பின் அவர்களை இருந்த இடத்திலிருந்து எழுப்பி பின் வரிசையில் அமரச் செய்தது ஒட்டுமொத்த கலைஞர்களையும் அவமானப்படுத்தியது அநாகரிகச் செயல்.

ரஜினியும், கமலும் இரண்டாவது வரிசையில் எங்கோ நின்று கொண்டிருக்கும் காட்சியையும் கண்டேன். அவர்களுடைய லட்சக்கணக்கான ரசிகர்கள் அந்தப் புகைப்படங்களைப் பார்த்து எந்த அளவிற்கு வேதனைப்பட்டிருப்பார்கள்.

முதல்வரோ மற்ற அமைச்சர்களோ இதையெல்லாம் கவனிக்க நேரம் இடந்தராது. நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் தான் ஆழ்ந்து ஆலோசித்து கவனித்திருக்க வேண்டும்.

ஏனென்றால் கலைஞர்கள் எப்போதும் மிகவும் சுயமரியாதை உடையவர்களாக அனிச்ச மலரை ஒத்தவர்களாக இருப்பர்.அவர்களின் மனம் வேதனை அடையும்படி தன்மானம் காயம்படும்படி நடந்து கொள்ளக் கூடாது.

நல்லவேளை நம்மை அழைக்காமல் விட்டனரே நம் தன்மானம் காப்பாற்றப்பட்டதே என்று தான் நான் எடுத்துக் கொள்கிறேன்.
அழைக்காமல் பலரையும் அழைத்துப் பலரையும் பெருமைப்படுத்தி இருப்பதே இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா என்று கருணாநிதி கூறியுள்ளார்.

குடிவெறியில் ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டிய நபர்!!

car

ஜேர்மனியில் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் சுரங்க ரயில் பாதையில் கார் ஓட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் போச்சும் நகரை சேர்ந்தவர் மார்ட்டின் ஹுபர்(27).
அளவுக்கு அதிகமாக குடித்து தாறுமாறாக கார் ஓட்டி அடிக்கடி பொலிசில் சிக்கி கொள்வதே இவரது வாடிக்கையாக இருந்தது.

பலமுறை பொலிசாராலும் எச்சரிக்கப்பட்டு உள்ளார், இந்நிலையில் நேற்றும் வழக்கம்போன்று குடித்துள்ளார்.
நன்றாக குடித்த மார்ட்டின் தனது கறுப்பு நிற சிட்ரியோன் காரை எடுத்துக் கொண்டு நள்ளிரவில் வீட்டுக்கு கிளம்பினார்.

சரியான பாதையில் செல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டே வெறியில் டிராம் வண்டி தடம் மாறி ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டினார். அந்த தண்டவாளம் அப்படியே சுரங்க பாதைக்குள் சென்றது. இவரும் போதையில் சுரங்கத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

உடனடியாக அபாய மணி ஒலிக்கவே சுரங்க தண்டவாளத்துக்குள் கார் நுழைந்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
உடனடியாக பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காரை பறிமுதல் செய்து மார்ட்டினையும் கைது செய்தனர்.
மேலும் அவருடைய ஓட்டுனர் உரிமத்தையும் ரத்து செய்துள்ளனர்.

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி கீழே விழுந்த ஐஸ்வர்யாராய்!!

icevarya

நடிகை ஐஸ்வர்யாராய் பிரசவத்துக்கு பின் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. வெளிநாடுகளில் நடந்த இந்திய திரைப்பட விழாக்களில் மட்டும் கலந்து கொண்டார். தற்போது குழந்தை வளர்ந்து விட்டதால் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.

இந்த நிலையில் லூதியானாவில் நகைக்கடை திறப்பு விழா நிகழ்ச்சியொன்றுக்கு ஐஸ்வர்யாராயை அழைத்தனர். அவரும் பங்கேற்க சம்மதித்தார். விழாவுக்கு அவர் சென்றபோது கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. நகைக்கடையை சுற்றிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஐஸ்வர்யாராயை காண திரண்டு இருந்தனர்.

ஐஸ்வர்யாராய் காரில் இருந்து இறங்கியதும் கூட்டத்தினர் அவரை நோக்கி முண்டியடுத்தனர். ஐஸ்வர்யாராய் கைகளை பிடித்தார்கள் உடம்பிலும் தொட்டார்கள். ரசிகர்கள் தள்ளுமுள்ளில் சிக்கி ஐஸ்வர்யாராய் தடுமாறி கீழே விழுந்தார். அவரை விழா ஏற்பாடு செய்தவர்கள் தாங்கி பத்திரமாக அழைத்து சென்றனர். ரசிகர்கள் தொல்லையால் ஐஸ்வர்யாராய் கடும் கோபம் அடைந்தார். அங்கிருந்து உடனடியாக புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இந்தியாவிற்கு வர மாட்டேன் : சூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர்!!

Asad-Rauf

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் பாகிஸ்தானை சேர்ந்த நடுவர் ஆசாத் ரவுப்பும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் நடந்த சூதாட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதில் பாகிஸ்தானை சேர்ந்த நடுவர் ஆசாத் ரவுப்பும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவரை தேடப்படும் குற்றவாளியாக மும்பை பொலிசார் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவரது சார்பில் வக்கீல் சயத் அலி ஜாபர் நேற்று லாகூரில் நிருபர்களிடம் கூறுகையில் ரவுப் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் அடிப்படை ஆதாரமற்றது. அவர் மீதான புகார்களை வலுவாக மறுக்கிறேன்.

ரவுப் இந்திய நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார். ஆனால் மும்பை பொலிஸ் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. இதனால் வழக்கின் எந்த விசாரணைக்கும் இந்தியாவுக்கு செல்ல மாட்டார் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அசாத் ராப் ஆசியாவில் பரிசுப் பொருட்களை பெறுவதும் கொடுப்பதும் பாரம்பரியமானது தான். இவை எடுத்து வருவது என்பது எவ்வித கிரிமினில் குற்றமும் இல்லை. பரிசுப் பொருட்களை டெல்லி விமான நிலையத்தில் விட்டு விட்டு வந்ததாக கூறப்படுவதில் உண்மையில்லை.

நான் தான் அவற்றை அனுப்பி வைக்குமாறு வின்டூ தாராசிங்கிடம் தெரிவித்தேன். எல்லோரும் சொல்வது போல விலையுயர்ந்த நகைகள் எல்லாம் அதில் கிடையாது. புனிதப் பொருட்கள் தான் இருந்தன.

ஐ.சி.சியில் நடுவராக உள்ளேன் அவர்கள் தனியாக ஊழல் தடுப்பு குழு வைத்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.சி.சியிடம் எடுத்துக் கூற தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா அழுத்தம் கொடுத்தால் மட்டுமே ஈழத் தமிழர் பிரச்சினை தீரும்!!

Anbumani-Ramadoss

ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு இன்று சென்னை திரும்பிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பசுமை தாயகம் அமைப்பின் சார்பில் கலந்து கொண்டு பேசினேன். சர்வதேச விசாரணை மூலம் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அப்போது வலியுறுத்தினேன்.

இலங்கைக்கு நேரில் சென்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அளித்துள்ள அறிக்கையில், இலங்கை இராணுவத்தின் அத்துமீறல்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், தமிழர் பகுதிகளில் சிங்களவர்கள் குடியேற்றம் ஆகியவற்றை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கை மீது ஐ.நா.சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈழத் தமிழர்களின் பிரச்சினை தீர இலங்கைக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். முதல்வர் ஜெயலலிதா அனைத்து கட்சி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் குழுவுடன் பிரதமரைச் சந்தித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தந்தால் மட்டுமே ஈழத் தமிழர் பிரச்சினை தீரும்.

வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்பதில் பாமக உறுதியாக உள்ளது. பாஜக உள்பட எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை என்றார்.

-நக்கீரன்-

சிம்பு- ஹன்சிகா திருமணம் எப்போது?

Simbu-Hansika

சிம்பு-ஹன்சிகா திருமணம் எப்போது என பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இருவரும் காதலிப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டனர். வாலு, வேட்டை மன்னன் படங்களில் ஜோடியாக நடித்தபோது நெருக்கம் ஏற்பட்டது.

காதலை பல நாட்களாக மறைத்து வைத்து இருந்தனர். ஆனாலும் இருவரை பற்றியும் கிசுகிசுக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில்தான் காதலை பகிரங்க படுத்தி அறிவிப்பு வெளியிட்டார்கள்.

சிம்பு ஏற்கனவே காதல் சர்ச்சைகளில் இருந்து மீண்டவர். அவருக்கு வீட்டில் பெண் பார்த்து வந்தார்கள். தற்போது ஹன்சிகாவுடனான காதலை சிம்பு வெளிப்படுத்தி இருப்பதால் திருமணத்தை உடனே முடித்து விட ஆர்வம் காட்டுகின்றனர்.

சிம்புவும் திருமணத்துக்கு தயார் நிலையில் இருக்கிறார். ஆனால் ஹன்சிகா உடனடி திருமணத்துக்கு தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. தற்போது அவர் தமிழ், தெலுங்கில் பிசியாக நடிக்கிறார். கைவசம் 7 படங்கள் உள்ளன.

இப்படங்களை முடித்த பிறகு திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறாராம். திருமணத்துக்கு பின் நடிப்புக்கு முழுக்கு போடும் நிலைமை ஏற்படும். எனவே கைவசம் உள்ள படங்களை முடித்து விட தீவிரம் காட்டுகிறார். எனவே ஓரிரு வருடங்கள் கழித்தே திருமணம் நடக்கும் என தெரிகிறது.

தங்கம் கடத்தல் – ஒரே மாதத்தில் 9வது நபர் கைது..!

arrest1இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற இரு இந்திய பிரஜைகள் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 25 லட்சம் பெறுமதியான 106 கிராம் எடையுடைய தங்கம் மற்றும் 100 யூரோ பணமும் விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர்கள் இன்று (29) அதிகாலை 5.30 மணியளவில் இந்தியா – சென்னை நோக்கி பயணிக்கவிருந்தனர்.

சந்தேகநபர்களில் ஒருவர் மலவாயிலில் வைத்து தங்கத்தையும் மற்றையநபர் யூரோ பணத்தையும் கடத்த முயற்சித்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலவாயிலில் வைத்து தங்கத்தை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் இம்மாதம் மட்டும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.