கிளிநொச்சி தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் : கூட்டமைப்புக்கு வெற்றி!!

northern_map

 

 

 

 

 

 

வட மாகாணம் கிளிநொச்சிமாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு விபரம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 756 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 160 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 1 வாக்கு.
ஜனநாயகக் கட்சி – 1 வாக்கு.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 970
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 800
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 919
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 10

முல்லைத்தீவு தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் : கூட்டமைப்புக்கு வெற்றி!!

northern_map

வட மாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு விபரம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 646 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 146 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 2 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி – 1 வாக்கு.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 831
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 800
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 795
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 5.

வவுனியாவில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம் (படங்கள்)!!

வவுனியா மாவட்டத்தில் வாக்களிப்பு நிறைவடைந்த பின் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வாக்குப் பெட்டிகள் எடுத்து வரப்பட்டுள்ளன. வவுனியா மாவட்டத்தில் 89 வாக்களிப்பு நிலையங்களில் இருந்தும் வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்ட வாக்கெண்ணும் நிலையங்களில் முதற்கட்டமாக தபால் மூலமான வாக்கு எண்ணப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் கனகராயன்குளம் சின்னடம்பன் பாரதி வித்தியாலயத்தில் இடம்பெற்ற தவறுதலான துப்பாக்கி பிரயோகத்தை தவிர வேறெந்த அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

vavuniya vavuniya1 vavuniya2 vavuniya3

மன்னாரில் இரு கட்சிகளுக்கிடையில் மோதல் : பொலிஸார் தடியடி (படங்கள்)

மன்னார் தாழ்வுபாட்டில் இரு கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து அங்கு இடம்பெற்ற தாக்குதல் மற்றும் கல்வீச்சில் வயோதிபப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று மதியம் 2 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

மன்னார் தாழ்வுபாடு புனித வளனார் பாடசாலையில் உள்ள 11ஆவது வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியில் இரு கட்சிகளுக்கு இடையில் இன்று மதியம் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் சிலர் கூட்டமாக இருந்ததை அவதானித்த மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் பொலிஸருக்கு இரகசிய தகவல் வழங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் அவ்விடத்திற்குச் சென்று அவர்களை துரத்திச் சென்ற சமயம் அவர்கள் வீடுகளுக்குள் சென்றுள்ளனர். இதன்போது பொலிஸார் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ளவர்கள் மீது தடியால் தாக்குதல்களை மேற்கொண்டதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த இரு கட்சிகளுக்கும் இடையில் பரஸ்பர கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது வீட்டினுள் இருந்த வயோதிபப் பெண் அந்தோனிக்கம் பெரேரா(65) என்பவர் காயமடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நிலவரத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர கலகம் அடக்கும் பொலிஸார் தாழ்வுபாட்டு கிராமத்தில் குவிக்கப்பட்டனர். ஒரு சில மணி நேரத்தின் பின் நிலமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

2 3 4 5

வட மாகாண வாக்களிப்பு வீதம் : வவுனியா மாவட்டத்தில் 65 வீதமான வாக்குகள் பதிவு!!

northern_map

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைகளுக்கான தேர்தலில் இன்று மாலை நான்கு மணியுடன் நிறைவடைந்துள்ளது.

இன்று காலை ஏழு மணிக்கு ஆரம்பமான வாக்குப் பதிவு மாலை நான்கு மணியுடன் நிறைவடைந்துள்ளது.

வடமாகாண வாக்களிப்புகளின் படி

1. வவுனியா மாவட்டத்தில் 65 வீதமான வாக்குகளும்

2. மன்னார் மாவட்டத்தில் 70 வீதமான வாக்குகளும்

3. கிளிநொச்சி மாவட்டத்தில் 68 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அமெரிக்காவில் 850 பாம்புகள் உட்பட பல பிராணிகளை வளர்த்தவர் கைது!!

snakes group

அமெரிக்காவில் 850 பாம்புகளை வீட்டில் பதுக்கிய நபர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அமெரிக்காவின், நியூயோர்க்கிலுள்ள ஷிர்லே பகுதியில் வசிப்பவர்,ரிச்சட் பேரிநெல்லோ. இவர் விலங்குகள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரியாக உள்ளார்.

மியான்மர் நாட்டின் மலைப்பாம்பு உட்பட 850 பாம்புகளை தன் வீட்டில் பதுக்கி வைத்திருந்தார். இது மட்டுமல்லாது, ஆமை உள்ளிட்ட விலங்குகளையும் தன் வீட்டில் வைத்து கள்ளத்தனமாக விற்று வந்தார்.

இவர் மியான்மர் நாட்டின் நான்கு அடி நீளமுள்ள பாம்பை வளர்த்து உள்ளார். இந்த மலைப்பாம்பு 30 அடி நீளம் வளரக் கூடியது.

கனடா நாட்டில் சமீபத்தில், இரண்டு குழந்தைகளை மலைப்பாம்பு விழுங்கி விட்டது. இந்த சம்பவத்துக்கு பின் நியூயோர்க்கில், மலைப்பாம்பு வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறையை மீறி பாம்புகளை வைத்திருந்ததற்காக, ரிச்சட் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பாம்புகள், மாசாசூசெட்ஸ் சரணாலயத்தில் விடப்பட்டன.

வவுனியாவில் அமைதியாக நடைபெற்ற தேர்தல் : ஆர்வத்துடன் மக்கள் வாக்களித்தனர்!!(படங்கள்)

வட மாகாணசபைத் தேர்தலில் வவுனியா மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்தை அவதானிக்க கூடியதாக இருந்தது. வவுனியா மாவட்டத்தில் இருந்து 6 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 94,644 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். .

89 வாக்களிப்பு நிலையங்களிலும் மக்கள் காலை 7 மணியில் இருந்து ஆர்வத்துடன் வாக்களித்ததை காணக்கூடியதாக இருந்தது.

இதேவேளை வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் வாக்களிப்பு நிலையங்களிலும் ஆயுதம் ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் கடமையில் ஈடுபட்டதுடன் அனைத்து பிரதேசங்களிலும் கண்காணிப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.

சற்று முன் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்களிப்பு நிறைவு பெற்றுள்ளதுடன் வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வாக்கெண்ணும் மத்திய நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

வவுனியாவிலிருந்து முதலாவது தேர்தல் முடிவு இரவு 10 மணியளவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

5 4 3 2

 

வவுனியா வாக்குச்சாவடியில் துப்பாக்கியொன்று தவறுதலாக வெடித்ததில் ஒருவர் காயம்!!

po

வட மாகாண சபைக்காக வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் காவல் கடமையிலிருந்த பொலிஸாரின் துப்பாக்கியொன்று தவறுதலாக வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கனகராயன் குளம் சின்னரம்பன் பாரதி வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸாரின் துப்பாக்கியொன்றே தவறுதலாக வெடித்துள்ளது.

அங்கு வாக்களிப்பதற்கு வருகைதந்திருந்த 24 வயதான நா.தவராசா என்பவறே காயமடைந்துள்ளார். துப்பாக்கி சன்னம் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தில் பட்டே அவரது காலில் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரதட்சணை கொடுக்க முடியாததால் பாக்.கில் 4 சகோதரிகள் தற்கொலை!!

pak

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் வரதட்சணை கொடுக்க தந்தைக்கு வழியில்லாமல் போனதால், முதிர்கன்னியாக கண்ணீர் வடித்த சகோதரிகள் கால்வாயில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.

பஞ்சாப் மாகாணத்தின் மெயில்சி நகரில் வசித்து வருபவர் பஷிர் அகமது ராஜ்புத். ஏழை விவசாயியான இவருக்கு 5 பெண் பிள்ளைகள். போதிய வருமானம் இல்லாததால் சீர்வரிசை, வரதட்சணை கொடுத்து மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லை.

காலம் கடந்து முதிர்கன்னிகளாக மாறிவிட்ட அந்த பெண்களில் மூத்தவருக்கு வயது 45. அடுத்து 43, 38, 35 மற்றும் 31 வயதுடையவர்கள்.
இந்நிலையில், சகோதரிகள் 5 பேரும் தங்களின் திருமணம் தொடர்பாக தந்தையிடம் பேசினர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த 5 பேரும் கால்வாயில் விழுந்தனர். இதில் 4 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். கடைசி பெண்ணான பாத்திமாவை பொலிசார் உயிருடன் மீட்டனர்.

இந்தியா, துபாயில் தங்க டீ அறிமுகம்!!

gold

இந்தியா, சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளில் தங்க கலவையினால் ஆன ‘டீ’ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் துபாயில் முதன் முறையாக இந்த தங்க டீ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

துபாயில் உள்ள மொக்கா ஆர்ட் கபே ஹோட்டலிலேயே இந்த டீ விற்கப்படுகிறது. இது 22 கரட் தங்கத்தை கலந்து தயாரிக்கப்படுகிறது.
இதன் விலை ஒரு கப் 55 தினார். மொக்கா ஆர்ட் கபேயின் நிறுவனர் அஷ்ரப்மக்ரான் (32) எகிப்தை சேர்ந்தவர். தங்க டீ குறித்து அவர் கூறியதாவது,

இந்த டீயை இங்கிலாந்தில் உள்ள ஒரு ஹோட்டலில் குடித்தேன். அதன் சுவை எனக்கு பிடித்து விட்டது. அதைத் தொடர்ந்து இந்த டீயை துபாயில் அறிமுகம் செய்தேன்.

இலங்கையில் இருந்து தேயிலை இறக்குமதி செய்யப்பட்டு ஜேர்மனிக்கு அனுப்பப்படுகிறது. அங்கு அவை 22 கரட் தங்க பிளேட்டுகளாக தயாரிக்கப்படுகிறது. பின்னர் மொராக்கோ அனுப்பப்பட்டு டீயின் சுவை அளிக்கப்படுகிறது.

இந்த டீ அரபு நாட்டினர், மேற்கத்தியர்கள் என அனைத்து தரப்பினரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது உடல் நலத்துக்கும் நல்லது என்று அவர் கூறினார்.

HP அறிமுகப்படுத்தும் புதிய மடிக்கணனி!!

hp

கணனி உற்பத்தியில் முன்னணியில் திகழும் HP நிறுவனமானது தற்போது Spectre 13 Ultrabook எனும் புதிய மடிக்கணனியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

15 மில்லி மீற்றர்கள் தடிப்புடைய இக்கணினி யானது 13.3 அங்குல IPS தொடுதிரை தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளது.

மேலும் இவற்றில் Core i7 Processor பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் பிரதான நினைவகமாக 8 GB RAM காணப்படுகின்றது.

Windows 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கணனிகளில் சேமிப்பு நினைவகமாக 256 GB தரப்பட்டுள்ளது.

இவற்றின் விலையானது 1000 டொலர்களாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் பரவும் சமீராரெட்டி ஆபாசப் படங்கள்!!

sameera

சமீராரெட்டி ஆபாசமாக இருப்பது போன்ற படங்கள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இவர் தமிழில் சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்தார். நடு நிசி நாய்கள், வேட்டை படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.

தன்னைப் பற்றி இணையத் தளங்களில் ஆபாச படங்கள் பரவுவது அறிந்து சமீரா ரெட்டி அதிர்ச்சியாகியுள்ளார். சமீபத்தில் மதுபான நிறுவனம் ஒன்று நடத்திய பேஷன்ஷோவில் சமீரா ரெட்டி பங்கேற்றார். அந்த படங்கள் வெளி வந்து இருந்தது.

அதை யாரோ மாபிங் மூலம் ஆடையை ஆபாசமாக்கி இணைய தளங்களில் பரப்பி உள்ளனர். ஒரிஜினல் ஆடையில் கவர்ச்சி இருந்தே தவிர ஆபாசம் இல்லை. அந்த படத்தை மர்ம நபர்கள் ஆபாசமாக மாற்றி உள்ளனர்.

ஏற்கனவே சமீராரெட்டி பொது நிகழ்ச்சிகளில் கவர்ச்சி உடையுடன் பங்கேற்கிறார் என்று விமர்சனங்கள் வெளிவந்தன. அதற்கு ஆடை விஷயத்தில் தனக்கு யாரும் ஆலோசனை கூற தேவையில்லை என்று பதில் அளித்து இருந்தார். இதையடுத்து ஆபாச படங்கள் வெளி வந்துள்ளன.

துபாயில் ஜோடியாக சுற்றிய திரிஷா– ராணா!!

trisha

திரிஷாவுக்கும் ராணாவுக்கும் காதல் என கிசு கிசுக்கள் பரவுவதை நம்பாதவர்கள் துபாயில் இருவரும் அடித்த கூத்தை பார்த்தால் அசந்து போய் இருப்பார்கள் என்கிறார் திரையுலக பிரமுகர் ஒருவர்.

ராணா தெலுங்கில் லீடர் படம் மூலம் பிரபலமானார். அவர் அங்கு தற்போது முன்னணி நடிகராக உள்ளார். தமிழில் அஜீத்துடன் ஆரம்பம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். திரிஷா தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ளார்.

அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. பட விழாக்கள், விருந்துகளுக்கு ஜோடியாக வந்தார்கள். இருவரும் நெருக்கம் காட்டுவது பற்றி செய்திகள் வந்தன. நட்பாகத்தான் பழகுகிறோம் என்று அதற்கு பதில் அளித்து வாய் மூடச் செய்தார்கள்.

திரிஷாவுக்கு 30 வயது ஆகிறது. ராணாவுக்கு 28 வயது. கிசு கிசுக்கள் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து ஜோடியாக சுற்றினர். இந் நிலையில்தான் துபாயில் நடந்த தென்னிந்திய விருதுகள் வழங்கும் விழாவில் நெருக்கத்தில் எல்லை மீறி நடந்தது எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நிகழ்ச்சியில் அருகருகே ஒட்டி இருந்தார்கள். விருந்தில் சுற்றி இருப்பவர்களை பற்றி பொருட்படுத்தாமல் மெய் மறந்து நடனம் ஆடினர். இருவர் பார்வையிலும் காதல் வழிந்தோடியதாம்.

காதலை இருவரும் உறுதிபடுத்தி உள்ளனர். இந்த வருடம் இறுதியில் அல்லது அடுத்த வருடம் துவக்கத்தில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்கின்றனர். இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரையிறுதிப் போட்டியில் மும்பை அணியை சந்திக்க விரும்பும் டிராவிட்!!

Rahul-Dravid

சம்பியன்ஸ் லீக் சுற்றுத்தொடரின் அரையிறுதில் மும்பை அணியை சந்திக்க ஆசையாக ஆவலாக உள்ளதாக ராஜஸ்தான் அணித் தலைவர் டிராவிட் தெரிவித்தார்.

ஐந்தாவது சம்பியன்ஸ் லீக் 20-20 தொடர், இந்தியாவில் நாளை துவங்குகிறது. இதில் சென்னை, மும்பை, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 அணிகளுடன், தகுதி சுற்றில் இருந்து முன்னேறிய ஐதராபாத், ஒடாகோ அணிகளும் விளையாடுகின்றன.

ஜெய்ப்பூரில் நடக்கும் முதல் போட்டியில் டிராவிட்டின் ராஜஸ்தான் அணி சச்சின் இடம் பெற்றுள்ள மும்பை அணியை சந்திக்கிறது. இருவருமே சீனியர்கள் என்பதால் வண்ண சீருடையில் பங்கேற்கும் கடைசித் தொடர் இதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ராஜஸ்தான் அணித் தலைவர் டிராவிட் கூறியதாவது,

சச்சின் பெரிய வீரர். இந்திய அணியில் இருவரும் இணைந்தும், மற்ற நேரங்களில் எதிர் எதிராகவும் விளையாடியுள்ளோம். என்னைப் பொறுத்தவரை நாளை நடக்கும் லீக் போட்டி முக்கியத்துவம் வாய்ந்து இல்லை. இதை ராஜஸ்தான், மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியாக மட்டும் தான் பார்க்க வேண்டும்.

இத்தொடரின் அரையிறுதியில் நாங்கள் மோத வேண்டும் என்று விரும்புகிறேன். இது தான் எனது கடைசி 20-20 தொடர் என்று பேசப்படுகிறது. அடுத்த ஆண்டு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இப்போதைய நிலையில் சம்பியன்ஸ் லீக் தொடரில் மட்டும் கவனம் செலுத்தவுள்ளேன்.

அசோக் மனேரியா கடந்த முறை சிறப்பாக விளையாடவில்லை. வளர்ந்து வரும் வீரர்களுக்கான தொடர் மற்றும் இந்தியா ஏ போட்டிகளில் தற்போது அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவருக்கு சில ஓவர்கள் பந்து வீசவும், பேட்டிங்கில் அதிக வாய்ப்பும் கிடைக்கும் என நம்புகிறேன்.

சூதாட்ட சர்ச்சையில் சிக்கி ஒரு ஆண்டு தடை பெற்ற சித்தார்த் திரிவேதிக்கு பதில் யாரை சேர்ப்பது என சிந்தித்து வருகிறோம். சர்ச்சையில் இருந்து விடுபட்ட ஹர்மீத் சிங் சில நாட்களுக்கு முன் அணியுடன் இணைந்து, பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவரை சேர்ப்பது பற்றி அணி நிர்வாகம் பார்த்துக் கொள்ளும்.

ஸ்ரீசாந்த், அங்கித் சவான் விஷயத்தை பொறுத்தவரை எங்களை விட விசாரணை குழுவுக்கு நன்கு தெரியும். சம்பந்தப்பட்ட வீரர்கள் இல்லாமல், இதற்கு முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இதை மீண்டும் தொடர்வோம் என டிராவிட் கூறினார்.

ரஜினி ரசிகர் மன்றம் வழங்கிய உணவுக்கு தடை!!

food

தமிழ்நாடு ஈரோடு மாவட்டத்தில் ஏழை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரஜினி ரசிகர்கள் வழங்கிய காலை உணவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட ஜெ.ஜெ. நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இப்பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் அதிகளவில் உள்ளனர். இங்குள்ள ஜெ.ஜெ. நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 184 குழந்தைகள் படிக்கின்றனர்.

பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள இவர்கள் நாள்தோறும் கூலி வேலைக்கு காலை நேரத்திலேயே வேலைக்குப் புறப்படுவதால் பெரும்பாலானவர்களின் குழந்தைகள் காலை உணவு சாப்பிடாமலேயே பள்ளிக்குச் செல்கின்றனர்.

அப்படி போகும்போது குழந்தைகள் சோர்வடைந்து பள்ளியில் மயக்கமடை கின்றனர். இதனால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.

இதையறிந்த பவானிசாகர் ஒன்றிய ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினர் 2009ம் ஆண்டு முதல் பள்ளிக்கு வரும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் இலவச காலை உணவு வழங்கப்படும் எனத் தெரிவித்ததோடு அதைச் செயல்படுத்தினர். இதற்கான முன் அனுமதியை ஈரோடு தொடக்கக் கல்வி அலுவலரிடம் முறையாகப் பெற்று காலை உணவு வழங்கி வந்தனர்.

மேலும் சமையல்காரர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்களுக்கு ரஜினி ரசிகர் மன்றமே சம்பளம் அளித்து இதனை அவர்கள் சேவை மனப்பான்மையுடன் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட சத்துணவுத் திட்ட அலுவலர் பள்ளி வளாகத்தில் காலை உணவு வழங்கக் கூடாது என உத்தரவிட்டார்.

எனினும் குழந்தைகளின் ஏக்கத்தைப் புரிந்து கொண்ட ரஜினி ரசிகர் மன்றத்தினர் தாற்காலிகமாக பள்ளிக்கு வெளியே மரத்தடியில் உணவு சமைத்து வெட்ட வெளியில் பள்ளிக் குழந்தைகளுக்கு வியாழக்கிழமை காலையில் உணவு வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து ரஜினிகாந்த் ரசிகர் மன்ற பவானிசாகர் ஒன்றியச் செயலாளர் செந்தில்குமரன் செய்தியாளர்களிடம் கூறுகையில் எங்களது சொந்தச் செலவில் செய்து வரும் இச்சேவையை நிறுத்தினால் பாதிக்கப்படுவது ஏழைக் குழந்தைகள் தான்.

அவர்களின் நலன் கருதி இதனைத் தொடர்ந்து செயல்படுத்த நிரந்தர அனுமதி கேட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவோம் என்று கூறியுள்ளார்.

வவுனியாவில் மற்றுமொரு வாக்களிப்பு நிலையத்தில் காணப்பட்ட குளவிக் கூடு அழிப்பு!!

vav

வவுனியாவில் மற்றுமொரு வாக்களிப்பு நிலையம் அமைந்துள்ள பட்டானிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் காணப்பட்ட குளவிக்கூடொன்று இன்று சனிக்கிழமை காலை வவுனியா மலேரியா தடை இயக்கத்தினரால் அழிக்கப்பட்டது.

வாக்களிப்பு ஆரம்பமாகுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாகவே முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் உள்ள மரமொன்றில் காணப்பட்ட குளவிக்கூடு வவுனியா அரசாங்க அதிபரின் உத்தரவின் போரில் மலோரியா தடை இயக்கத்தின் பொறுப்பதிகாரி தி. கோபிநாத் தலைமையிலான குழுவினரால் அழிக்கப்பட்டது.

நேற்றையதினம் வவுனியா, புதுக்குளம் மகாவித்தியாலய வாக்களிப்பு நிலையத்திற்கு கடமைக்கு சென்ற அதிகாரிகள் மீது குளவி கொட்டியதில் ஒருவர் பலியாகியதுடன், இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் இதனையடுத்து குறித்த வாக்களிப்பு நிலையம் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.