அமெரிக்காவில் 2014ம் ஆண்டிற்கான மிஸ் அமெரிக்கா அழகி போட்டி நியூஜெர்சியில் உள்ள அட்லாண்டிக் நகரில் நடந்தது. பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த 53 அழகிகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில் மிஸ் நியூயோர்க் அழகியான நினா தவுலுரி(24) மிஸ் அமெரிக்கா பட்டத்தை தட்டிச்சென்றார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இப்பட்டத்தை வென்ற மூலம் முதன் முறையாக இந்திய வம்சவாளியைச் சேர்ந்த ஒரு பெண் மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்றவர் என்ற பெருமையை பெற்றார். இவரின் பூர்விகம் ஆந்திரா மாநிலம் ஆகும்.
மிஸ் அமெரிக்கா பட்டம் வென்ற தவுலுரி கூறுகையில் மிஸ் அமெரிக்கா பட்டம் வென்றது மிகுந்த மிகிழ்ச்சி அளிக்கிறது. யார் மிஸ் அமெரிக்காவாக வருவார் என தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த குழந்தைகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
முருங்கன் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த மாடு வெட்டும் நிலையம் முற்றுகையிடப்பட்டு அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலின்போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 75 கிலோ கிராம் மாட்டிறைச்சி மற்றும் மாடு வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக முருங்கன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்
சென்னையில் சொந்த மகளை கழுத்தை நெரித்துக் கொன்று தந்தை தானும் தற்கொலை செய்து கொண்lடுள்ளார். மேலும் தற்கொலைக்கான காரணத்தை உருக்கமான கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுப்பிரமணி (46). அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுஜாதா, 10 வயது மகனுடன் வானகரத்தில் உறவினர் வீட்டு திருமணத்துக்கு நேற்று புறப்பட்டு சென்றார். மகள் ஷர்மிளாவும் (16) சுப்பிரமணியும் மட்டும் வீட்டில் இருந்தனர்.
இரவு 10 மணி அளவில் சுஜாதா மகனுடன் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் கண்ட காட்சி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஷர்மிளா கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். சுப்பிரமணி அறையில் தூக்கில் தொங்கினார். இதைப் பார்த்த சுஜாதா கதறி அழுதார்.
அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருவல்லிக்கேணி பொலிசார் விரைந்து வந்து இருவரது உடலையும் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பொலிஸ் விசாரணையில் கடன் தொல்லை காரணமாக ஷர்மிளாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு சுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
நேற்று மாலை 4 மணி அளவில் சுஜாதா வீட்டில் உள்ள கையடக்க தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். அப்போது ஷர்மிளா பேசியிருக்கிறாள். பின்னர் இரவு 8.30 மணி அளவில் மீண்டும் சுஜாதா போன் செய்த போது கையடக்க தொலைபேசி செயற்படவில்லை. எனவே 8 மணி அளவில்தான் சுப்பிரமணி மகளை கொன்று விட்டு தற்கொலை செய்துள்ளார்.
இந்த துயர முடிவை எடுப்பதற்கு முன்னர் அவர் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதனை பொலிசார் கைப்பற்றினர்.
அதில் அதிக கடன் இருப்பதால் இரவில் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்ததாகவும் எனவே தற்கொலை செய்யும் அளவுக்கு சென்றதாகவும் சுப்பிரமணி குறிப்பிட்டுள்ளார்.
நான் இறந்த பின்னர் ஆசையாய் வளர்த்த மகள் கஷ்டப்படக்கூடாது என்பதால் அவளையும் கொலை செய்து விட்டேன் என்றும் அவர் கடிதத்தில் எழுதி உள்ளார்.
ஒரு தனியார் தொலைகாட்சி தொடரில் புத்தர் இந்தியாவில் பிறந்தார் என வலியுறுத்தப்பட்டது. இது நேபாளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நேபாள இளைஞர்கள் தெருவில் இறங்கி போராடத் தொடங்கினார்கள்.
பேஸ்புக்,டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் நேபாளத்தை சேர்ந்த பலர் எதிர்த்து கருத்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்திய வெளியுறவு செயலாளர் சுஜாதாசிங் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், புத்தர் நேபாளத்தில் உள்ள லும்பினி என்ற இடத்தில் தான் பிறந்தார்.
இதில் எந்தவித சந்தேகமோ, சர்ச்சையோ இல்லை. உங்கள் உணர்வுகளை மதிக்கிறோம். இந்த பிரச்சினை தொடர்பாக இந்தியா தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவின் கிரேண்ட் தீவை சேர்ந்தவர் சலுஸ்டியானோ சான் செஷ்–பயாஸ் குயஷ். வயது 112. உலகின் அதிக வயதான ஆண் என்ற பெருமை பெற்றிருந்தார். இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில், உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட இவர் கிரேண்ட் தீவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார்.
இவர் சிறந்த இசையமைப்பாளராகவும், சுரங்க தொழிலாளி ஆகவும் இருந்தார். இவர் கடந்த 1901–ம் ஆண்டில் ஜூன் 8–ந் திகதி ஸ்பெயினில் எல் தெஜாதோ டி பெஜார் என்ற கிராமத்தில் பிறந்தவர். 17–வது வயதில் கியூபாவுக்கு சென்றார்.
அங்கிருந்து வெளியேறி கடந்த 1920–ம் ஆண்டில் அமெரிக்காவில் குடியேறினார். அங்கு கென்டக்குபில் உள்ள லிஞ்ச் நிலக்கரி சுரங்கத்தில் தொழிலாளி ஆக சேர்ந்தார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மூலமாக 7 பேரக் குழந்தைகள், 25 கொள்ளு பேர குழந்தைகளும் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் கொமடியனாக கலக்கி வந்தாலும் டூயட் பாட ஆசைப்படுகிறாராம் சந்தானம்.
கொமடியனாக மட்டுமே நடித்து வந்த அவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் தானும் இன்னொரு கதாநாயகன் போன்று நடித்தார்.
அப்படத்தில் எனக்கும் ஊட்டிக்கு சென்று டூயட் பாடணும்னு ஆசை இருக்காதா என்று விசாகா சிங்கிடம் வசனமெல்லாம் பேசினார்.
அந்த வசனத்தை நிஜமாக்கும் வகையில் தற்போது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் சந்தானம்.
இப்படத்தில் கொமடி நடிகர் என்ற சாயல் தெரியாத அளவுக்கு முழு கதாநாயகனாக மாறி நடித்து வருகிறாராம்.
படத்தில் டூயட் மற்றும் ஓப்பனிங் பாடல்களில் அதிரடி ஆட்டமும் ஆடி கலக்கியுள்ளராம் சந்தானம்.
தம்புள்ளை பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று போ் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தம்புள்ளை- பக்கமுன வீதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கண்டலம பிரதேசத்தில் இருந்து பக்கமுன பகுதியை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதியத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் பக்கமுன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துள்ளனர்.
19 முதல் 20 மதிக்கதக்க யுவதியும் 19 வயதான இளைஞனும் 30 வயதான நபருமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
தம்புள்ளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சினிமா ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கோச்சடையான் பட டிரெய்லர் இந்த மாதம் 9ம் திகதி வெளியானது.
இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களுக்குள்ளாகவே யூ டியூப், கூகுள் போன்ற டிஜிட்டல் அமைப்புகள் அனைத்திலும் இந்தப் படமே ஆக்கிரமித்திருந்தது. இணையதளத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் அதிகாரபூர்வமாக இடம்பெற்ற இந்தப் படமே யூ டியூபில் மிகவும் பிரபலமான ஒன்றாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த டிரெய்லர் வெளியீட்டிற்கு இரண்டு நாட்கள் முன்னதாக இப்படம் குறித்தும் ரஜினி குறித்தும் பிரச்சாரம் காணப்பட்டது. டிரெய்லர் வெளியிடப்பட்டவுடன் கிடைத்த வரவேற்பு வியப்பில் ஆழ்த்துவதாக அமைந்தது.
டிரைலர் துவக்கத்தில் நிறைய ஹீரோக்கள் இருக்கலாம் சூப்பர் ஹீரோக்களும் இருக்கலாம் ஆனால் ஒரே ஒரு ரஜினிகாந்த்தான் இருக்கின்றார்’ என்ற அறிமுகத்துடன் இதுவரை கண்டிராத ரஜினியின் தோற்றம் வெளிப்படுகின்றது.
இந்த டிரைலரே அனைவரின் மனதையும் கொள்ளை கொள்வதாக அமைந்துள்ளது. இதில் அனிமேஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வருட இறுதியில் வெளியிடப்படவிருக்கும் இப்படம் சௌந்தர்யா ரஜினிகாந்த் அஷ்வினால் இயக்கப்பட்டு மீடியா வன் எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.
அஜீத்தின் ஆரம்பம் பட பாடல்கள் வரும் 19ம் திகதி வெளியாகின்றன. இப்படத்தில் அஜீத்- நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளனர். இன்னொரு ஜோடியாக ஆர்யா, டாப்ஸி வருகிறார்கள். தெலுங்கு நடிகர் ராணாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.
விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் ரீரிக்கார்டிங், மிக்சிங் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் படத்தின் பாடல்களை வருகிற 19ம் திகதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.
முந்தைய அஜீத் படங்களுக்கு இசை வெளியீட்டு விழாக்களை பிரமாண்டமாக நடத்தியது இல்லை. எனவே ஆரம்பம் பட பாடல்களையும் விழா நடத்தாமலேயே நேரடியாக ஓடியோ கடைகளுக்கு விநியோகம் செய்கின்றனர். ஆரம்பம் படம் தீபாவளிக்கு வெளியாகின்றது.
தமிழ்நாட்டில் தன்னிடம் படித்த மாணவியின் திருமணத்தை நிறுத்துவதற்காக அவரை மனைவி என்று ஆசிரியர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை சுண்ணாம்பிருப்பை சேர்ந்த மகேந்திரன். இவர் உச்சநீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் நானும் ஜெயராமன் மகள் மகாலட்சுமியும் காதலித்தோம்.
இருவரும் வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். இதனால் எங்கள் காதலுக்கு ஜெயராமன் எதிர்ப்பு தெரிவித்தார். எதிர்ப்பை மீறி இருவரும், திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் கடந்த ஆண்டு பிப்ரவரி 1ம் திகதி திருமணம் செய்து கொண்டோம்.
பின்னர் வேலைக்காக நான் மலேசியா சென்றேன். மலேசியாவில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பினேன். அப்போது மகாலட்சுமியை அவரது தந்தை கடத்திச் சென்றதும் அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதும் தெரியவந்தது.
மனைவியை மீட்கக்கோரி செப்டம்பர் 5ல் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மகாலட்சுமியை மீட்டு ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் முன் மகாலட்சுமியை திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆஜர்படுத்தினர். மகாலட்சுமியின் பெற்றோரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
இந்த வழக்கு சம்மந்தமாக நீதிபதிகளிடம் மகாலட்சுமி கூறுகையில் எனக்கு தற்போது 25 வயதாகிறது. திருப்பத்தூரில் வசித்து வருகிறேன். மனுதாரர் மகேந்திரன் டியூஷன் சென்டர் நடத்துகிறார். பத்தாம் வகுப்பு படிக்கும் போது அவரிடம் டியூஷன் படித்தேன்.
அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு என்னை துன்புறுத்தினார். எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதனால் அவர் மீது திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். இதனைத் தொடர்நது எனக்கு இனிமேல் தொந்தரவு கொடுக்கமாட்டேன் என பொலிசில் மகேந்திரன் எழுதி கொடுத்தார்.
எனக்கு 15ம் திகதி திருமணம் நடக்க உள்ளது. என் திருமணத்தை தடுக்க வேண்டும் என்பதற்காக மனுதாரரும், அவரது ஆட்களும் என்னை மிரட்டி வருகின்றனர். எனவே என் திருமணத்திற்கும், குடும்பத்தினருக்கும் போதிய பொலிஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். எனக்கும் மகேந்திரனுக்கும் திருமணம் நடைபெறவில்லை.
உள்நோக்கத்துடன் எங்களுக்கு திருமணம் நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார் என்றும் என்னை பெற்றோருடன் செல்ல அனுமதிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த வினோத வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் மகாலட்சுமி மேஜர். அவர் விருப்பப்படி பெற்றோருடன் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
தன் திருமணத்தை கெடுக்க சதி நடப்பதாக மகாலட்சுமி அச்சம் தெரிவித்துள்ளார். அவரது திருமணத்திற்கு பொலிசார் உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும். திருமணம் முடிந்த பிறகும் குறிப்பிட்ட நாட்களுக்கு பெண்ணுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், சேட்டை உள்பட பல தமிழ், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் அஞ்சலி. இவர் தனது சித்தி பாரதிதேவியும் இயக்குனர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துகளை அபகரிக்க முயல்வதாக புகார் தெரிவித்து இருந்தார்.
இந்த புகார் தன் மீது கூறப்பட்ட அவதூறு என்றும் பொய்யான புகாரை கூறிய நடிகை அஞ்சலி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து தண்டிக்க வேண்டும் எனவும் கூறி இயக்குனர் களஞ்சியம் தரப்பில் அவரது வக்கீல்கள் ஜெயப்பிரகாஷ், சுரேஷ்பாபு ஆகியோர் சைதாப்பேட்டை பெருநகர 17வது கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
வழக்கு விசாரணையின் போது நடிகை அஞ்சலி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். கடந்த 12ம் திகதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது நடிகை அஞ்சலிக்கு வாரண்ட் பிறப்பித்து நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டார்.
இதற்கிடையில் நடிகை அஞ்சலி தரப்பு வக்கீல் முகுந்தன், சைதாப்பேட்டை 17வது நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் நடிகை அஞ்சலி சினிமா சூட்டிங்கில் இருப்பதால் அவர் மீதான வாரண்டை ரத்து செய்ய வேண்டும் என கோரினார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ராஜலட்சுமி நடிகை அஞ்சலி மீதான வாரண்டை ரத்து செய்து உத்தரவிட்டார். நடிகை அஞ்சலி மீதான வழக்கு விசாரணை வருகிற 3ம் திகதி வருகிறது.
இதயத் துடிப்பு மற்றும் நாடித் துடிப்பின் அதிர்வால் கையடக்க தொலைபேசி மற்றும் கணணியை இயக்கும் கருவி கனடாவில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
ஒவ்வொரு மனிதனின் கைவிரல் ரேகைகள் போன்று இதயத் துடிப்பின் வேகம் மற்றும் அதிர்வுகள் வேறுபட்டவை. மணிக்கட்டில் கட்டும் கைப்பட்டை வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள இக்கருவி “நைமி ரிஸ்ட் பேண்ட்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதில் இதயத் துடிப்பின் அதிர்வை அறிய வோல்ட் மீட்டர் மற்றும் ஹொட் ஐடி பொருத்தப்பட்டுள்ளது. கனடாவின் பயோனிம் நிறுவனம் இக்கருவியின் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளது.
இதைக் கொண்டு காரைத் திறப்பது ஒன்லைன் சொப்பிங்கில் பணம் செலுத்துவது உள்ளிட்ட பணிகளை செய்ய முடியும். இக்கருவியால், கையடக்க தொலைபேசி, கணணி மற்றும் பிற இலத்திரனியல் கருவிகளின் கடவுச் சொற்கள் ஆகவும் பயன்படுத்தலாம்.
இதை அணிந்திருப்பவர், கையடக்க தொலைபேசி, கணணி, மடிக் கணணி அருகில் சென்றால், அவை தானாக இயங்க ஆரம்பிக்கும். ஸ்மாட் டிவியை இயக்கவும், நிறுத்தவும் முடியும்.
வாழ்நாள் தடையை எதிர்த்து ஸ்ரீசாந்த் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான் மற்றும் சண்டிலா உள்ளிட்டோர் டெல்லி பொலிசாரால் கைது செய்யப்பட்டனர் தற்போது ஜாமினில் உள்ளனர்.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பதால் ஸ்ரீசாந்த், சண்டிலா உள்ளிட்டோர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
இவர்கள் மீதான குற்றப்பத்திரிகை கடந்த ஜூலை 30ம் திகதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இன்னும் விசாரணை தொடங்கவில்லை.
இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் நியமிக்கப்பட்ட ரவி சவானி விசாரணை அறிக்கையின் படி ஸ்ரீசாந்த், அங்கித் சவானுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அமித் சிங்(5 ஆண்டு), சித்தார்த் திரிவேதியும்(1 ஆண்டு) தண்டனை பெற்றனர்.
பிசிசிஐயின் வாழ்நாள் தடையை எதிர்த்து ஸ்ரீசாந்த் நீதிமன்றத்திற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஸ்ரீசாந்துக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில் பிரிமியர் தொடர் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் உள்ளது.
இதன் விசாரணை நடந்து இறுதி தீர்ப்பு வரும் வரை பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை குழு காத்திருக்க வேண்டும் தடை குறித்து எவ்வித முடிவும் எடுத்திருக்கக் கூடாது.
ஏனெனில் ரவி சவானியின் அறிக்கை பெரும்பாலும் டெல்லி பொலிசாரின் விசாரணையை சார்ந்து தான் உள்ளது. இவையெல்லாம் இன்னும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவில்லை.
இந்நிலையில் பிசிசிஐ தடை விதித்தது செல்லாது. இதனால் ஸ்ரீசாந்த் நீதிமன்றத்திற்கு செல்ல முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் சிறுவன் ஒருவன் வினோத உணவு பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகியுள்ளான். இங்கிலாந்தின் மான்செஸ்டர் அருகே உள்ள சல்போட் நகரில் வசிக்கும் சிறுவன் சாஷி தாஹிர்(6).
இவனுக்கு திடீரென்று விசித்திர உணவு பழக்கம் தொற்றிக்கொண்டது.
அதாவது கல், காகிதம், பாசி, ஜன்னல் அலங்கார திரை என கண்ணில் தெரிந்தவற்றை எல்லாம் கடித்து மென்று சாப்பிட ஆரம்பித்துள்ளான்.
குடும்பத்தினர் எவ்வளவோ முயற்சி செய்து அவனை கட்டுப்படுத்த முடியாமல் போகவே வீட்டை விட்டு வெளியே அனுப்பவே அஞ்சியுள்ளார்கள்.
இறுதி முடிவாக அறக்கட்டளை நிதி உதவியுடன் 7 லட்சம் செலவில் வீட்டின் ஒரு பகுதியில் சிறுவன் விளையாட செயற்கை கண்ணாடியை கொண்டு விசேஷ கூடத்தை உருவாக்கினார்கள்.
அதோடு பற்களால் கடிக்க முடியாதபடி வளைந்த வடிவிலான விளையாட்டு பொருட்களையும் வாங்கி வைத்துள்ளார்களாம்.
இதன்பின்பே சிறுவனின் பழக்கங்களில் மாற்றங்கள் தெரிந்ததாக சாஷியின் தயா ஹாரன் தெரிவித்துள்ளார்.
தலைவா சர்ச்சைகளைத் தாண்டி விஜய் தற்போது ஜில்லா படத்தில் ஜாலி மூடில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் நேசன் இயக்கும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ரவி மரியா பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடத்த முடிவெடுத்தனர். இங்கு மோகன்லாலும் ரவி மரியாவும் மோதும் காட்சியை படமாக்க திட்டமிட்டிருந்தார்கள்.
இந்நிலையில் மோகன்லாலுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் இப்படப்பிடிப்பை சற்று தள்ளி வைத்துள்ளனர். அவர் குணமாகி வந்ததும் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஆனால, இயக்குனரோ கிடைத்த கால்ஷீட்டுகளை சும்மா விடக்கூடாது என்பதற்காக இந்த நேரத்தில் சென்னையில் விஜய் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகளை எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம். இதற்காக சென்னையில் முகாமிட்டு இதற்கான பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளாராம்.