அணித்தலைவராக களமிறங்கும் ஷிகர் தவான்!!

dawan

சம்பியன்ஸ் லீக் T20 தகுதிச் சுற்றில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைவராக அதிரடி வீரர் ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐந்தாவது சம்பியன்ஸ் லீக் T20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வருகிற 21ம் திகதி தொடங்குகிறது. இதில் இந்தியாவில் இருந்து மும்பை, சென்னை, ராஜஸ்தான் என்று மூன்று அணிகள் பங்கேற்கவுள்ளன.

தவிர அவுஸ்திரேலியாவின் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், பிரிஸ்பேன் ஹீட், மேற்கிந்திய தீவுகளின் டிரினிடாட் அண் டுபாகோ உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக பங்கேற்கும்.

வரும் செப்டம்பர் 17ம் திகதி முதல் 20ம் திகதி வரை நடக்கவுள்ள தகுதிச் சுற்றின் மூலம் மீதமுள்ள 2 அணிகள் தெரிவு செய்யப்படும். இதில் ஐதராபாத்(இந்தியா), ஒடாகோ வோல்ட்ஸ்(நியூசிலாந்து) கந்துரட்ட மரூன்ஸ்(இலங்கை) மற்றும் பாகிஸ்தானின் பைசலாபாத் வால்வ்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் தலைவராக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை உள்ளூர் T20 சம்பியன் கந்துரட்ட மரூன் அணிக்காக குமார் சங்கக்கரா களமிறங்க உள்ளதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் கடைசி அணுமின் உலையும் மூடப்படுகிறது!!

nuclear-power-plant

ஜப்பான் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கடைசி அணுமின் உலை பராமரிப்பு ஆய்விற்காக இன்றுடன் மூடப்பட உள்ளது. அணுசக்திக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பினால் இது மீண்டும் திறக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படவில்லை.

கடந்த 2011ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவில் தாக்கத்துக்கு உள்ளான புகுஷிமா அணுமின் உலைகள் இன்னமும் பிரச்சினைகளைத் தந்து கொண்டிருக்கின்றன. கடந்த 1986ல் ரஷ்யாவின் செர்னோபில் நகரில் அணுசக்தியினால் ஏற்பட்ட பேரழிவுபோல் ஜப்பானிலும் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் இதனை முற்றிலும் தவிர்க்க விரும்புகின்றார்கள்.

இன்று மாலை மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு நாளைக் காலை முதல் இந்த மின்உலையும் செயலற்ற நிலையில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு மே மாதமும் ஜப்பானில் உள்ள 50 வர்த்தக அணுமின்சக்தி நிலையங்களும் பராமரிப்பு ஆய்வுப் பணிக்காக நிறுத்தப்பட்டபோது பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக அவை உடனே செயல்படவில்லை.

40 வருடங்கள் கழித்து முதன்முறையாக ஜப்பானில் அப்போதுதான் அணுசக்தி பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. ஆயினும் ஆகஸ்ட் மாதம் அரசு உத்தரவின் பேரில் மூன்றாவது மற்றும் நான்காவது அணுஉலைகள் செயல்படத் துவங்கின.

தற்போதும் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே அணுசக்திக்கு ஆதரவாகக் குறிப்பிடும்போதும் பொதுமக்களின் எதிர்ப்பில் தீவிரம் இருக்கவே செய்கிறது. புகுஷிமா சம்பவத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டபோது படிம திரவ எரிபொருளை மின் உற்பத்திக்குப் பயன்படுத்த தொடங்கியதால் மின்சாரக் கட்டணம் உயர்ந்தது.

புகுஷிமா கொதிகலங்களிலிருந்து வெளியான கதிரியக்கம் வெளியிலும் நிலங்களிலும் பரவியதாகக் குறிப்பிட்ட போதிலும் இதன் தாக்கத்தினால் எவரும் இறந்ததாக இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆயினும், அச்சத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற நேர்ந்தது.

இந்த முடிவானது, உலகின் மூன்றாவது பொருளாதார சக்தி படைத்த ஜப்பானை இரண்டாவது முறையாக அணுசக்தியின் செயல்பாடு இல்லாத நிலையில் வைக்கின்றது.

உறங்கிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடுரம்!!

child-abuse

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை அதிகாலையில் ஒரு கும்பல் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமி தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளாள்.

பொன்னேரி அருகே உள்ளது சோழவரம் அம்பேத்கர் நகர். இங்கு வசித்து வருகின்றார் அந்த சிறுமி. 10 வயதாகும் அச்சிறுமி 4வது வகுப்பு படித்து வருகின்றார். நேற்று இரவு தனது வீட்டில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்தார். காற்று வரட்டுமே என்பதற்காக வீட்டுக்கதவைப் பூட்டாமல் திறந்து வைத்துத் தூங்கியுள்ளனர்.

இன்று காலை எழுந்து பார்த்த சிறுமியின் பெற்றோர் மகளைக் காணாமல் திடுக்கிட்டனர். அக்கம் பக்கத்தில் தேடத் தொடங்கினர். கிராம மக்களும் திரண்டு வந்தனர்.இந்த நிலையில் வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள மயானத்தில் ஒரு சிறுமி கிடப்பதாக தகவல் வந்தது. இ தையடுத்து ஓடிப் போய்ப் பார்த்தபோது அது காணாமல் போன சிறுமி என்று தெரிய வந்தது. உடலிலிருந்து நிறைய ரத்தம் வெளியேறிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள் சிறுமி.

இதையடுத்து அவளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிறுமியை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சம்பந்தப்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரக் கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

5 பேர் சேர்ந்து சிறுமியைக் கடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று முதல் பணிகளை ஆரம்பிக்கும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள்..!

votingவடக்கு, வடமேல் மாகாண மற்றும் மத்திய மாகாண சபைகளையொட்டி இலங்கை வந்திருக்கும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று முதல் வடக்கில் தமது தேர்தல் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

கடந்த 13 ஆம் திகதி 12 நாடுகளிலிருந்து 30 சர்வதேச கண்காணிப்பாளர்கள் இலங்கை வந்துள்ளனர்.

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் பணிப்பின் பேரில் வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கும் அனைத்து கண்காணிப்பாளர்களும் வட மாகாணத்திலேயே தேர்தல் கண்காணிப்பை ஆரம்பிப்பார்கள்.

இதற்கிணங்க இவர்கள் இன்று முதல் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களில் தமது பணிகளை ஆரம்பிப்பார்கள்.

தேர்தல் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் கோபாலசுவாமி தலைமையில் 20 கண்காணிப்பாளர்கள் அடங்கிய குழுவும் பெப்ரல் அமைப்பின் அழைப்பின் பேரில் தமாது மக்புல் என்பவரது தலைமையில் 09 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவொன்றுமே வட மாகாணத்தில் தேர்தல் கண்காணிப்பு பணிகளை முன்னெடுக்கவுள்ளன.

இதேவேளை பொதுநலவாய அமைப்பைச் சேர்ந்த 05 கண்காணிப்பாளர்களும் தற்போது இலங்கை வந்துள்ளனர்.

இவர்கள் கடந்த இரு தினங்களுக்குள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், ஏனைய தேர்தல் அதிகாரிகள், மற்றும் உள்நாட்டில் இயங்கம் கண்காணிப்பு அமைப்புகளை சந்தித்துப் பேச்சு நடத்தியிருப்பதுடன், தேர்தல் நடைபெறும் மூன்று மாகாண சபைகளினதும் களநிலவரம் குறித்து நன்கு அறிந்து வைத்துள்ள நிலையிலேயே வடக்கில் தமது தேர்தல் பணிகளை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் நேற்று ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, இலங்கை தமிழரசுக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனசெத்த பெரமுன ஆகிய அரசியல் கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து உரையாடியதுடன், அவர்களின் நம்பிக்கையையும் உறுதிப்படுத்திக் கொண்டனர்.

எதிர்வரும் 21ம் திகதியன்று நடைபெறும் வடக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கான தேர்தலை கண்காணிப்பதற்காக 5,000 பேர் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள். உள்ளூர் கண்காணிப்பாளர்களுடன் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் இதில் அடங்குவர்.

சுகாதார சீர்கேட்டால் இன்னும் 25 ஆண்டில் 3 1/2 கோடி குழந்தைகள் பலியாகும் : அதிர்ச்சி தகவல்!!

OurKidsHealth_Header

சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான யுனிசெப் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதவாது..

உலகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. 2015ம் ஆண்டுக்குள் குழந்தைகள் இறப்பு விகிதத்தை 3ல் 2 பங்காக குறைத்து இலக்கு நிர்னயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த இலக்கை எட்டமுடியாத நிலையில் உள்ளது. யுனிசெப் எடுத்த நடவடிக்கையின் காரணமாக கடந்த 20 ஆண்டில் 9 கோடி குழந்தைகள் உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது.

1990ம் ஆண்டு குழந்தைகள் இறப்பு விகிதம் 1 கோடியே 26 லட்சமாக இருந்தது. தற்போது அது 66 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் இறப்பு விகிதம் வெகுவாக குறைந்து வந்தாலும் அடுத்த 25 ஆண்டுகளில் 3 1/2 கோடி குழந்தைகள் பலியாவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

சுகாதார சீர்கேடு, போதிய ஊட்டச்சத்தின்மை போன்ற காரணங்களால் இந்த உயிரிழப்பு ஏற்படும். கிழக்கு ஆசியா மற்றும் ஆசிய பகுதிகளில் குழந்தைகள் இறப்பு அதிக அளவில் குறைந்துள்ளது. ஆனால் மத்திய ஆபிரிக்கா, மேற்கு ஆபிரிக்கா பகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு குழந்தைகள் இறப்பை கட்டப்படுத்த முடியவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீசாந்துக்காக வருத்தப்படுகின்றேன் : கங்குலி!!

saurav_ganguly

சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதித்ததற்கு தான் வருத்தப்படுவதாக கங்குலி தெரிவித்துள்ளார்.

கடந்த 6வது ஐபிஎல் போட்டியில் சூதாட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் ஸ்ரீசாந்த் மற்றும் அங்கீத் சவானுக்கு ஆயுட் கால தடை விதிக்கப்பட்டது.

இதே போல சித்தார்த் திரிவேதிக்கும் ஒரு ஆண்டும் ராஜஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அமித்சிங்குக்கு 5 ஆண்டும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆயுள்கால தடை விதிக்கப்பட்ட ஸ்ரீசாந்துக்காக வருத்தப்படுகிறேன் என இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் கங்குலி கருத்து தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ஸ்ரீசாந்த் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்தால் ஆயுள்கால தடை விதிக்கப்பட்டது சரியான முடிவு தான்.
எனினும் இதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவர் தனது திறமையை தேவையில்லாமல் வீணடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

வாழ்க்கையை பிழிந்து படம் எடுப்பவர் சேரன் : பாரதிராஜா பாராட்டு!!

seran

சேரன் இயக்கும் புதிய படம் ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை. அதில் கதாநாயகனாக சர்வானந்த், நாயகியாக நித்யாமேனன் நடிக்கிறார்கள். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடைபெற்றது. விழாவில் இயக்குனர் பாரதிராஜா பேசியதாவது..

இயக்குனர் சேரன் உணர்ச்சிகரமானவர். அற்புதமான கலைஞன். யதார்த்தமாகவும், மண்வாசனையோடும் படம் எடுக்க கூடியவர். அவரது தவமாய் தவமிருந்து படத்தை பார்த்தபோது என்னால் இதுபோன்ற ஒரு படம் எடுக்க முடியவில்லையே என்று நினைத்து இருக்கிறேன். வாழ்க்கையை பிழிந்து படம் எடுத்து இருந்தார்.

சினிமாவில் யதார்த்தங்கள் வரவேற்கதக்கதுதான். ஆனால் பாதையை மாற்றக்கூடாது. என் தாத்தா போட்ட ஒத்தையடிப்பாதையை என் தந்தை வண்டிச் சாலையாக்கினார். நான் தார்ச்சாலை போட்டேன். என் பிள்ளை சிமெண்ட் சாலை போடுவான். அது ரப்பர் சாலை ஆகலாம். இப்படித்தான் சினிமாவில் மாற்றம் இருக்க வேண்டும்.

தமிழ் பண்பாடு கலாச்சாரத்தை விட்டு விட்டு படம் எடுக்க கூடாது. அவற்றை சார்ந்தே படங்கள் இருக்க வேண்டும். சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. தெலுங்கானா பிரச்சினையில் தத்தளித்துக் கொண்டு இருக்கும்போது இந்த விழாவில் எப்படி பங்கேற்போம் என்று ஆந்திராக்காரர்கள் சொல்கிறார்கள். நமக்கும் பிரச்சினைகள் உள்ளன.

ஈழத்தமிழர்கள் குண்டு வீசி கொல்லப்பட்டுள்ளனர். காவிரிக்காக முல்லை பெரி யாறுக்காக, கச்சத்தீவுக்காக போராடுகிறோம். நாங்களும் தத்தளித்துக் கொண்டு இருப்பதால் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முடியாது என்று சொல்ல முடியுமா.

தமிழ் சினிமாவுக்கு தனி சங்கங்கள் வேண்டும். தென் இந்திய திரைப்பட வர்த்தகசபை, தென் இந்திய நடிகர் சங்கம் என்பதை விட்டு விட்டு தமிழ் நடிகர் சங்கம், தமிழ் வர்த்தகர் சபை தமிழ் திரைப்பட தொழிலாளர் சங்கம் என்று வரவேண்டும். அப்போது தான் நம் உரிமைகள் காக்கப்படும் என்று பாரதிராஜா பேசினார்.

விழாவில் சேரன் பேசும் போது சினிமாவில் பணத்தைவிட நண்பர்களை நிறைய சம்பாதித்து உள்ளேன். இந்த விழாவுக்கு அழைத்த உடன் எல்லோரும் வந்து விட்டார்கள். ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படம் சிறப்பாக வந்துள்ளது என்றார்.

விழாவில் சேரனின் மகள்கள் நிவேதா, தாமினி கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்தவர்களை தாமினி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

உலக அழகிப் போட்டிக்கு போட்டியாக முஸ்லீம் பெண்களுக்கான அழகிப் போட்டி!!

world

உலக அழகிப் போட்டிக்குப் போட்டியாக ஜகார்தாவில் முஸ்லிம் பெண்களுக்கான அழகிப் போட்டி நடைபெறவுள்ளது. முஸ்லிம் அமைப்புகளின் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக உலக அழகிப் போட்டி ஜகார்தாவிலிருந்து பாலி தீவுக்கு மாற்றப்பட்டு நடந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது முஸ்லிம் பெண்களுக்கான அழகிப் போட்டி ஒன்று ஜகார்தாவில் நடைபெறவுள்ளதாம். உலக அழகிப் போட்டிக்கு எதிராகவும் அதைக் கண்டித்தும் இந்த முஸ்லிம் பெண்கள் அழகிப் போட்டி ஜகார்தாவில் புதன்கிழமையன்று நடைபெறவுள்ளதாம்.

இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து இதை நடத்தவுள்ளன. இந்தப் போட்டிக்கு முஸ்லிமா வேல்ட் போட்டி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போட்டி நிறுவனரான ஈகா சாந்தி கூறுகையில் மிஸ் உலக அழகி போட்டிக்கு முஸ்லிம் உலகம் தரும் பதிலடி இது என்றார்.
இதுவும் அழகிப் போட்டிதான். ஆனால் உலக அழகிக்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இது தன்னம்பிக்கை தரும் போட்டியாகும். ரோல் மொடலாக திகழ்வதற்கான போட்டியாகும்.

இன்றைய நவீன உலகில் மதக் கோட்பாடுகளை எப்படிக் கடைப்படிப்பது, சமச்சீரை எப்படி கடைப்பிடிப்பது என்பதைச் சொல்லித் தரும் போட்டியாகும் இது என்றார் அவர்.

முஸ்லீமா வேல்ட் அழகிப் போட்டிக்கான அழகிகள் தேர்வு இணையத்தின் மூலம் நடந்தது. 500 பேர் கலந்து கொண்டதில் 20 பேர் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளனர்.

குரான் வாசகங்களைப் படிப்பது இஸ்லாமியக் கதைகள் ஒப்புவித்தல், இஸ்லாமிய மத உடைகளை அணிவதில் கடைப்பிடிக்கப்படும் மரபுகள் உள்ளிட்டவை குறித்து இந்த அழகிப் போட்டியில் கேள்விகள் கேட்கப்பட்டு இறுதிச் சுற்றுக்குப் பெண்கள் தேர்வாகியுள்ளனராம்.

இறுதிச் சுற்றில் இடம்பெற்றுள்ள பெண்கள் இந்தோனசியா, நைஜீரியா, பங்களாதேஷ், புரூணே, மலேசியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள். இறுதிச் சுற்றுப் போட்டியின்போது இந்தப் பெண்கள் இஸ்லாமிய மத உடையில் கேட் வாக்கும் செல்லவுள்ளனராம்.

அனில் அம்பானியின் கணக்கை முடக்கிய 21 வயது மாணவி!!

anil-ambani

அனில் அம்பானியின் ஐடி கணக்கை முடக்கிய 21 வயது சிஏ மாணவி மீது சைபர் க்ரைம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவராக இருப்பவர் அனில் அம்பானி. இவரது வருமான வரி கணக்கை மும்பையில் உள்ள கணக்கு தணிக்கை நிறுவனம் ஒன்று பராமரித்து வருகிறது.

இந்த நிறுவனத்துக்கு கடந்த ஜூன் 26ம் திகதி வருமான வரி கணக்கு அலுவலகத்தில் இருந்து இமெயில் தகவல் ஒன்று வந்துள்ளது. அதில், அனில் அம்பானியின் இணையதள கணக்குக்கான பாஸ்வேர்ட் மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அடுத்ததாக ஜூலை 12ம் திகதி மீண்டும் இதேபோன்ற தகவல் இமெயில் வந்தது. இதனால் சுதாரித்த கணக்கு தணிக்கை நிறுவனம் உடனடியாக அனில் அம்பானியின் கணக்கை ஆராய முயன்றபோது அது முடக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் பொலிசில் புகார் செய்தது. விசாரணையில் ஐதராபாத்தைச் சேர்ந்த மனோஜ் டகா அண்ட் கம்பெனி என்ற கணக்கு தணிக்கை அலுவலகத்தில் சிஏ முடித்து பயிற்சி பெற்று வந்த 21 வயது மாணவிதான் அனில் அம்பானியின் கணக்கை முடக்கி அதில் இருந்த விவரங்களை பார்த்தது தெரியவந்தது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அனில் அம்பானி எவ்வளவு வரி செலுத்தியுள்ளார், அவரது பான் கார்டு எண் என்ன என்பதை பார்ப்பதற்காக கணக்கை முடக்கியது தெரியவந்தது.

இதையடுத்து சைபர் குற்றத்தின்கீழ், கடந்த 7ம் திகதி சம்பந்தப்பட்ட மாணவி மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின்கீழ் அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாசா விஞ்ஞானிக்கு ஜோடியாகும் மீரா ஜாஸ்மின்!!

WWW.TKADA.COM

விண்வெளி ஆய்வு நிலையங்களின் முதன்மையாக விளங்கும் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றக்கூடிய இந்திய விஞ்ஞானி ஒருவர் தமிழ் படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.

இவர் பெயர் பார்த்திபன். விஞ்ஞானியாக பணியாற்றி வரும் இவருக்கு இப்போது சினிமா மேல் மோகம் வந்துள்ளது. இதனால் சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள களத்தில் குதித்துள்ளார்.

நாசா விஞ்ஞானியான பார்த்திபன் நடிக்கப் போகும் படத்திற்கு விஞ்ஞானி என பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நீண்ட நாட்களாக சினிமா உலகில் இருந்து காணாமல் போன நடிகை மீரா ஜாஸ்மின் நடிக்க உள்ளார்.

இப்படத்தை ரசிக்கும் சீமானே படத்தை இயக்கிய வித்யாதரன் இயக்க உள்ளார்.அறிவியல் சம்பந்தமான தகவல்களை சொல்ல வரும் இப்படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளனர்.

சிறப்பாக நடைபெற்ற பரத் திருமண வரவேற்பு(படங்கள்)!!

பரத்தின் திருமண வரவேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

பரதத்துக்கும் துபாயில் வசித்து வரும் மருத்துவர் ஜெஸ்லிக்கும் காதல் மலர்ந்தது. இதனைத் தொடர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இது காதல் மணம் மட்டுமல்லாமல் கலப்பு மணமும் என்பதால் பதிவுத் திருமணம் நடத்த முடிவானது. அதன்படி செப்டம்பர் 9ம் திகதி ஹோட்டல் ஒன்றில் பெற்றோர்களுக்கு மத்தியில் எளிமையான முறையில் திருமணும் திருமணப் பதிவும் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்தது.

விழாவில் நடிகர்கள் அர்ஜூன், பார்த்திபன், சூர்யா, சத்யராஜ், மோகன், விமல், அருண் விஜய், செந்தில், விவேக், இயக்குனர்கள் டி.ராஜேந்தர், பாக்யராஜ் உள்ளிட்டோரும் மற்றும் நடிகைகள் குஷ்பு, நிரோஷா ஆகியோர் நேரில் வாழ்த்தினர்.

மேலும் திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் ஆகியோர் வாழ்த்தி சென்றனர்.

1 2 3 4 5 6 7 8 10 15 16 12 13 17 18 14

கனிணி கோளாறால் இலவசமாக விற்கப்பட்ட விமானப் பயணச் சீட்டுகள்!!

United-Airlines-toll-free-number

அமெரிக்காவின் மிகப்பெரிய விமான நிறுவனமாகக் கருதப்படும் யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் இணையதள முன்பதிவுப் பிரிவில் கடந்த வியாழன் அன்று கனணி இணைப்புகளில் தொழில்நுட்பக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.

அதனால் அன்று பதிவு செய்த பயணச் சீட்டுகள் பணம் எதுவும் பெறாமலும் மிகக்குறைந்த அளவிலான தொகையிலும் அளிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தவறு ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அந்த நிறுவனம் தற்காலிகமாக விற்பனையை நிறுத்தி வைத்துள்ளது.

இதுபோல் விற்கப்பட்ட டிக்கெட்டுகளின் மொத்த எண்ணிக்கையையோ அதனால் நிறுவனத்திற்கு ஏற்பட்ட செலவையோ அந்நிறுவனம் வெளியிடவில்லை.

ஆனால் தவறுதலாக விற்கப்பட்ட போதிலும் பயணிகள் அதே கட்டணத்தில் தங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம் என்று நேற்று விமான நிறுவனம் தங்களது இணையதளத் தகவலில் தெரிவித்துள்ளது.

பயணிகள் அந்நாட்டின் பாதுகாப்புக் கட்டணமான 5-10 டொலரை செலுத்தினால் போதுமானது என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

பொதுவாக ஒவ்வொரு பதிவாக முடிவு செய்யும் நிர்வாகம் இந்தமுறை சூழ்நிலைக் காரணங்களைக் கொண்டு அனைத்து பயணிகளுக்கும் அதே சலுகையை அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

பெண்ணை கடத்தி கழுத்தறுத்து நகைகளை கொள்ளையிட்ட தாய், மகள்!!

murder

தமிழகத்தில் சென்னை பாலவாக்கத்தில் பெண்ணை காரில் கடத்திச்சென்று கழுத்தை அறுத்து நகைகளை கொள்ளையடித்த தாய், மகள் உள்பட 3 பேரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

சென்னையை அடுத்த பாலவாக்கம் கந்தசாமி நகரை சேர்ந்தவர் தேன்மொழி(55). இவர் அந்த பகுதியில் உள்ள பெரியார் சாலையில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.

இவரது ஹோட்டலுக்கு பாலவாக்கம் வி.ஜி.பி. நகரை சேர்ந்த கங்கா(36) என்பவர் அடிக்கடி வந்து சென்றார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கங்காவுக்கு பணம் தேவைப்பட்டது. எனவே தேன்மொழியிடம் கேட்டார். அதற்கு அவர், பணம் இல்லை என கூறினார்.

இதையடுத்து கங்கா தேன்மொழியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று குடிப்பதற்கு பால் கொடுத்தார். அதை குடித்த தேன்மொழிக்கு மயக்கம் ஏற்பட்டது. பின்னர் கங்காவும் அவரது மகள் கீதாஞ்சலி, வளர்ப்பு மகன் விக்னேஷ் ஆகியோர் மயக்கம் அடைந்த தேன்மொழியை காரில் ஏற்றி கடத்திச் சென்றனர்.

பெரியபாளையம் அருகே உள்ள ஜெயபுரம் என்ற பகுதியில் காரை நிறுத்திய அவர்கள் தேன்மொழி அணிந்து இருந்த 15 பவுன் தங்க நகைகளை கழற்றினார்கள்.

பின்னர் தேன்மொழியின் கழுத்தை அறுத்து காரில் இருந்து அவரை கீழே தள்ளி விட்டு தப்பிச்சென்று விட்டனர். அருகில் இருந்த ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் காவலாளி பெண்ணின் முணகல் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தார்.

அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் தேன்மொழி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி பொன்னேரி பொலிசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிசார் தேன்மொழியை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் உயிர்பிழைத்த தேன்மொழி நடந்த சம்பவங்களை பொலிசாரிடம் கூறினார். இதுபற்றி நீலாங்கரை பொலிசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

நடத்திய விசாரணையில் நகை, பணத்துக்காக தேன்மொழியை காரில் கடத்திச் சென்று அவரது கழுத்தை அறுத்து தள்ளிவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து பாலவாக்கத்தில் பதுங்கி இருந்த கங்கா, அவரது மகள் கீதாஞ்சலி, வளர்ப்பு மகன் விக்னேஷ் ஆகிய 3 பேரையும் பொலிசார் கைது செய்தனர்.

வரதட்சனைக்காக காதல் மனைவியை தீ வைத்து கொழுத்திய கணவன்!!

fire

தமிழகத்தின் அம்பாசமுத்திரம் அருகே வரதட்சனை கேட்டு காதல் மனைவி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொடூரமான கணவன் மீது பொலிஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அம்பாசமுத்திரம் அருகே அயன்சிங்கம்பட்டி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த வேம்பு மகன் மதியழகன் (23) என்பவர் வைராவிகுளம் காமராஜர்புரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் அபிராமி(22) என்பவரை 2 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இத்தம்பதிக்கு 7 மாத பெண் குழந்தை உள்ளது. காதல் திருமணம் செய்து கொண்டதால் அபிராமிக்கு அவரது பெற்றோர் தங்க நகைகள் எதுவும் சீதனமாக வழங்கவில்லையாம்.

இதற்கிடையே அபிராமியின் சகோதரி பிரபாவதிக்கு சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. பிரபாவதிக்கு அவரது சகோதரர் சீதனமாக தங்க நகைகள் போட்டு திருமணம் செய்து கொடுத்தாராம்.

இதையடுத்து அபிராமியிடம் மதியழகன் நீயும் தங்க நகைகள் வாங்கி வருமாறு கேட்டாராம். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில் மதியழகன் தனது மனைவி அபிராமி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்தாராம்.

பலத்த காயமடைந்த அபிராமி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். கல்லிடைக்குறிச்சி பொலிஸார் மதியழகன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலை கிடைப்பது இலகு : ஆய்வில் தகவல்!!

fun

நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலை கிடைப்பதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை என சமீபத்தில் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை கிடைப்பதற்கு உள்ள தகுதிகள் குறித்த ஆய்வு ஒன்றை, அமெரிக்காவின் மனித வள மேம்பாட்டு நிறுவனம் நடத்தியது. இதற்காக 2,000த்துக்கும் மேற்பட்ட மேலாளர்கள் மற்றும் மனித வள அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஒரே விதமான கல்வித் தகுதி படைத்த இருவரில் சமுதாயம் மீது அக்கறை உள்ளவர்களுக்கும் நன்றாக உடை அணிந்தவர்களுக்கும் வேலை கிடைப்பதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை.

பொதுவாக உள்ள அம்சங்களில் இருந்து சற்று மாறுபட்டு சிந்திப்பவர்களையே நிறுவன மேலாளர்கள் தேர்வு செய்கின்றனர். உடல் ரீதியாக நல்ல தகுதி படைத்தவர்கள் தற்போதைய நடைமுறை சூழலை நன்கு அறிந்தவர்கள் சமூக ஊடகங்களில் பங்கேற்பவர்கள், விளையாட்டுத் துறையில் ஆர்வம் போன்ற தகுதியை பெற்றுள்ளவர்களுக்கே வேலை கொடுப்பதில், முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

வேலை கொடுப்பவர்கள், தொழில் ரீதியாக மட்டும் திறமை படைத்தவர்களை தேர்ந்தெடுப்பதில்லை மாறாக சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு எல்லா விதத்திலும் தகுதி படைத்தவர்களைத் தான் தேர்ந்தெடுக்கின்றனர். நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

பதவி உயர்வு குறித்து கேட்பவர்களுக்கே அது தொடர்பான முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதில் சில வகையினருக்கு பதவி உயர்வுகள் மறுக்கப்படுகின்றன. அதாவது இது என்னுடைய வேலை இல்லை என மறுப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

பணிக்கு தாமதமாக வருவது மற்றவர்களது வேலையை பார்த்துவிட்டு அதில் இருந்து ஆதாயம் அடைய முயலுவது வேலை நேரம் முடிவதற்கு முன்னதாகவே வீட்டுக்கு சென்றுவிடுவது போன்ற காரணங்களாலும், பதவி உயர்வு கிடைப்பது தாமதமாகலாம் அல்லது கிடைக்காமல் போகலாம்.

ஓயாமல் வம்பு பேசுபவர்கள், மற்றவர்கள் குறித்து புகார் அளிப்பவர்கள், அலுவலக பணத்தை செலவு செய்வதில் அதிக உரிமை எடுத்துக் கொள்பவர்கள், பணிக்கு ஏற்றபடி உடை அணியாதவர்கள் ஆகியோருக்கும் பதவி உயர்வுகள் என்பது வெறும் கானல் நீராகவே உள்ளது.

நீங்கள் வேலைக்கு செல்ல தயார் என்றால், உங்களது தனிப்பட்ட திறமைகள் தான் அதன் திறவுகோல் என்கிறார் இந்த ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ரோஸ் மேரி ஹப்னர்.

கின்னஸ் சாதனை படைத்த கயிற்றில் நடக்கும் நாய், ஸ்கேடிங் செய்யும் ஆடு (வீடியோ)!!

21

அதிவேகமாக கயிற்றின் மேல் நடக்கும் ஒரு நாயும் ஸ்கேடிங் செய்யும் ஒரு ஆடும் கின்னஸ் சாதனை படைத்து மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

உலகெங்கிலும் உள்ள மக்கள் பலவகையான வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு கின்னஸ் சாதனைகளை படைத்து வருகின்றனர்.

இந்த கின்னஸ் சாதனை பட்டியலில் விலங்குகளும் பலவகையான வித்தியாசமான திறமைகளை வெளிப்படுத்தி சாதனை புரிந்து அதன் உரிமையாளர்களுக்கு பெருமை சேர்ப்பது அனைவரும் அறிந்ததே.

அவ்வகையில் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு நபர் வளர்த்துவரும் நாய் ஒன்று வேகமாக கயிற்றில் நடந்து சாதனை படைத்தது. இந்த நாயின் பெயர் ஒஸி. 4 வயதான இந்த நாயின் உரிமையாளர் நோர்விச் நகரை சேர்ந்த நிக் ஜோன்சன்.

இந்த நாய் 18.22 வினாடிகளில் 3.5 மீட்டர் நீள கயிற்றை கடந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த நாய்க்கு அதன் உரிமையாளர் கயிற்றில் நடக்க எந்த விதமான பயிற்சியும் அளிக்கவில்லையாம்.

இதேபோல் ப்ளிலாரிடாவை சேர்ந்த மெலடி கூக் என்பவரின் ஆடு ஹாப்பி, 25 வினாடிகளில் 36 மீ ஸ்கேட்டிங் செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.