துபாயில் தென்னிந்திய பட விழா : தனுஷ், திரிஷாவுக்கு விருது!!(படங்கள்)

தென்னிந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா துபாயில் நடந்தது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட நடிகர், நடிகைகள் கலந்து கொண்டார்கள். இதில்‘3 படத்தில் வைதிஸ் கொலை வெறி பாடலை பாடிய தனுசுக்கு சிறந்த பின்னணி பாடகருக்கான விருது வழங்கப்பட்டது.

நடிகை திரிஷா 10 வருடங்கள் கதாநாயகியாக நடித்து வந்ததற்கான சாதனையாளர் விருது பெற்றார். சிறந்த அறிமுக நடிகர் விருது கும்கியில் நடித்த விக்ரம் பிரபுவுக்கும், சிறந்த அறிமுக நடிகை விருது சுந்தர பாண்டியன் படத்தில் நடித்த லட்சுமி மேனனுக்கும் கிடைத்தன.

சிறந்த அறிமுக இயக்குனர் விருதை பீட்சா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் பெற்றார். தென் இந்திய சினிமாவில் இளைஞர்களை கவர்ந்த நடிகைக்கான விருதை காஜல் அகர்வால் பெற்றார். நித்யா மேனனுக்கு தென்னிந்திய சினிமாவில் வளரும் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.

சிறந்த ஸ்டைல் நடிகைக்கான விருதை சுருதிஹாசன் பெற்றார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் கதாநாயகனாக அறிமுகமான உதயநிதி ஸ்டாலினுக்கும் விருது வழங்கப்பட்டது. துப்பாக்கி படத்தில் இசையமைத்த ஹரீஸ் ஜெயராஜ் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை பெற்றார்.

கும்கி படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது பெற்றார். அரவானன் படத்தில் நிலா நிலா பாடலுக்கு நடனம் அமைத்த காயத்திரி ரகுராம் சிறந்த டான்ஸ் மாஸ்டர் விருது பெற்றார்.

துப்பாக்கி படத்தில் சிறந்த சண்டைக் காட்சிகளை அமைத்தற்கான ஸ்டண்ட் மாஸ்டர் கிச்சா விருது பெற்றார். இது போல் பிறமொழி படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

1 2 3 4 5 6 7 1011 12 14 15 17 18

பொதுநலவாய மாநாட்டிற்காக தெஹிவளை மிருகங்கள் அம்பாந்தோட்டைக்கு மாற்றம்!!

zoo

பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் நடாத்தப்பட உள்ள மாநாட்டிற்காக தெஹிவளை மிருக்க் காட்சிசாலை மிருகங்கள் ஹம்பாந்தோட்டைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன.

சிங்கங்கள், ஜகுவார், கடிரகள், ஒட்டகச் சிவிங்கி, குதிரைகள் உள்ளிட்ட 25 மிருகங்கள் இவ்வாறு எடுத்துச் செல்லப்பட உள்ளன.

மிருகங்களை எடுத்துச் செல்வதற்கான விசேட கூடுகள் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மிருக்கக்காட்சிச் சாலைக்கு சொந்தமான இடத்திற்கு மட்டுமே மிருகங்களை எடுத்துச் செல்ல முடியும் என சுற்றாடல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மிருகங்களுக்கு தேவையான மருத்துவ மற்றும் ஏனைய வசதிகள் குறித்த இடத்தில் காணப்படுகின்றதா என்பது கேள்விக்குரியே என குறிப்பிட்டுள்ளனர்.

குளிர்சாதனப்பெட்டியினுள் ஒளிந்துவிளையாடிய 3 சிறுவர்கள் பரிதாப மரணம்!!

fridge

ஆபிரிக்க நாடான தென் ஆபிரிக்காவின் வட மேற்கு மாகாண அடமேலாங் நகரில் 3 சிறுவர்கள் கைவிடப்பட்ட நிலையில் கேட்பாரற்று கிடந்த குளிர்சாதனப்பெட்டியில் ஒளிந்து விளையாடிக்கொண்டிருந்தனர். 4வயதான இருவர், 3 வயது ஒருவர் என விவரம் தெரியாத அந்த சிறுவர்கள் உள்ளே ஒளிந்திருந்தபோது அந்த குளிர்சாதனப்பெட்டி மூடிக்கொண்டது.

பின்னர் அந்த மூன்று சிறுவர்களாலும் அப்பெட்டியிலிருந்து வெளியே வரமுடியாமல் மூச்சுத்திணறி உள்ளேய இறந்து கிடந்தனர். இந்நிலையில் அந்த சிறுவர்களை காணாது பெற்றோர்கள் தேடி அலைந்தனர். இறுதியில் சிறுவர்களின் உறவினரான ஒரு மூதாட்டி அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது அவர்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் சிறுவர்களின் பிரேதங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பாவி சிறுவர்கள் இறந்துபோனது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை வரவழைத்துள்ளது.

வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெறும் கடன்காரன் திரைப்பட இசை வெளியீடு!!

kadankaran

வன்னி கிரியேஷன் தயாரிப்பில் ப.சிவகாந்தன் இயக்கத்தில் வெளிவரும் கடன்காரன் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெயிலர் வெளியிட்டு விழா இன்று 2.30 அளவில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இத்திரைப்படத்துக்கு கந்தப்பு ஜெயந்தன் இசையமைக்க, பாடல் வரிகளை பொத்துவில் அஸ்மின் மற்றும் பிரதாபன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
பாடல்களை கானா பாலா, ஜெயரூபன், சுபா, ஜெயந்தன், ஜெயப்பிரதா ஆகியோர் பாடியுள்ளனர்.

இலங்கையின் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகிவரும் இத்திரைப்படம் இந்தியாவிலும், இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் ஒரே தினத்தினத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் ப.சிவகாந்தன் தெரிவித்துள்ளார்.

மரண ஊர்வலத்தில் கலந்துகொண்ட 26 பேர் உடல்சிதறி பலி!!

iraq

ஈராக்கில் பிரிவினைவாத மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. கடந்த சில மாதங்களாக நடந்துவரும் இந்த தீவிரவாத தாக்குதல்களில் இருதரப்பை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் மொசூல் நகர் அருகே துருக்கி எல்லையோரமுள்ள பாஷிகா நகரில் நடந்த ஷியா இஸ்லாமை பின்பற்றும் ஷபாகி பிரிவை சேர்ந்த ஒருவரின் மரண ஊர்வலத்தின் போது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் ஊர்வலத்தில் சென்றவர்களில் 26 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தனர். மற்ற 46 பேர் படுகாயமடைந்தனர்.

சிறுபான்மையான இந்த ஷபாகி பிரிவினர் ஈராக்கில் அதிகபட்சமாக ஒரு இலட்சம் பேர் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களை குறிவைத்து அல்கொய்தாவுடன் தொடர்புடைய சன்னி ஆயுதம் ஏந்திய குழுக்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

13 லட்சம் பெறுமதியான தங்கம் கடத்த முயன்ற இந்திய பிரஜை விமான நிலையத்தில் கைது!!

arrest1

சுமார் 13 லட்சத்து 60,000 ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களை மலவாயிலில் வைத்து கடத்த முயன்ற இந்திய பிரஜை ஒருவர் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நபர் நேற்று மாலை 6.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

நேற்று மாலை இந்தியா நோக்கி யூ.எல் 123 என்ற விமானத்தில் பயணிக்கவிருந்த 24 வயதான இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து கைப்பெற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுக்கள் 272 கிராம் எடையுடையவை.

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 16 வயது சிறுவன் கைது!!

child-abuse

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 13 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 16 வயது சிறுவனை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவனும் சிறுமியும் காதலித்து வந்ததாகவும் இரு தினங்களாக சிறுவன் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாகவும் சிறுமியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து நேற்று மாலை சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பங்களாதேஷில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி!!

asia cup

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி பங்காளதேசத்தில் நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை சென்னையில் இன்று முடிவு செய்யப்படுகிறது.

கடந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி 2012ம் ஆண்டு வங்காளதேசத்தில் நடத்தப்பட்டது. அடுத்த ஆசிய கிண்ணபோட்டியையும் வங்காளதேசத்தில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தீர்மானித்துள்ளது.

வருகிற 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் திகதி தொடங்கி மார்ச் மாதம் 7ம் திகதி வரை போட்டிகள் நடைபெறும் என்று தெரிகிறது. போட்டிகள் நடைபெறும் திகதி, இடம் ஆகியவை அடங்கிய அட்டவணை இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

சென்னையில் இன்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஆசிய கிண்ணப் போட்டி அட்டவணை முடிவு செய்யப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஆசிய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

கடந்த முறை ஆசிய கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில் நடந்ததால் இந்த முறை ஆப்கானிஸ்தானில் நடத்தலாமா என்று ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அதற்கு போதிய அவகாசம் இல்லாததால் பங்களாதேஷில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கொலை மிரட்டல் விடுத்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கைது!!

sivasakthi pandian

தமிழ் சினிமாவின் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெற்றிகொடிகட்டு, பாண்டவர் பூமி போன்ற வெற்றிப் படங்களின் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன்.

திரைப்பட விநியோகஸ்தர் அன்புச்செழியன் புகாரின் பேரில் சிவசக்தி பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சிவசக்தி மீது கடந்த 2006ம் ஆண்டு அன்புச்செழியன் புகார் அளித்தார்.

வழக்கில் ஆஜராக சிவகச்தி பாண்டியனுக்கு எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

நீதிமன்ற பிடிவாரண்ட்டை அடுத்து சிவசக்தி பாண்டியனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கமலை பார்த்துதான் சினிமாவை கற்றுக்கொண்டேன் : அமீர்!!

kamal

1979ம் ஆண்டு கமலஹாசன், ரஜினிகாந்த் நடிப்பில் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த படம் நினைத்தாலே இனிக்கும். எம்.எஸ்.விஸ்வநாதன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கவியரசு கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார். தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து வெளிவந்த இந்த படம் அந்த காலக்கட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருந்தது.

இந்த படத்தை தற்போது டிஜிட்டல் முறையில் மாற்றி மீண்டும் வெளியிடவிருக்கின்றனர். இதற்காக இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில், கே.பாலசந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகர் கமலஹாசன், அமீர், கே.ஆர், சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட சினிமாத் துறையைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். விழாவில், அமீர் பேசும்போது..

இந்த விழாவுக்கு நான் உலகநாயகன் கமலஹாசனின் ரசிகனாக வந்துள்ளேன். பார்க்க சுவாரஸ்யமானது என்பதற்கு இந்த விழா ஒரு முக்கியமான உதாரணம். நான் கண்டிப்பான குடும்பத்தில் பிறந்தவன். என்னுடைய அப்பா 1977ம் ஆண்டு இறந்து விட்டார். முஸ்லீம் சமுதாயத்தில் பிறந்ததால் என்னுடைய அம்மா வீட்டை விட்டு வெளியே வரமாட்டார். அதனால், அப்பாவின் மரணத்திற்கு பிறகு நான் சுதந்திரமானவன் ஆகிவிட்டேன்.

அப்படியொரு நாள் பள்ளிக்கூடத்தை கட் அடித்துவிட்டு பார்த்த படம்தான் நினைத்தாலே இனிக்கும். நான் உலகநாயகனின் ரசிகன் என்று சொல்வதைவிட வெறியன் என்றுதான் சொல்லவேண்டும். அவருடைய சினிமாக்களைப் பார்த்துதான் நான் சினிமாவைக் கற்றுக்கொண்டேன் என்று சொன்னால் அது மிகையாகாது.

நான் பிறவிக் கலைஞன் கமல்ஹாசன் என்ற பெயரில் நற்பணி மன்றம் ஒன்றையும் தொடங்கினேன். அவரை நிறைய முறை நேரில் சென்று பார்க்க என்னுடைய நண்பர்கள் அழைத்தாலும் அவரை தூரத்தில் நின்றே ரசிக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் என் மனதில் இருந்தது. அவருடன் சேர்ந்து பல இடங்களில் போட்டோ எடுத்திருந்தாலும் அவருடைய ரசிகனாக என் மேல் அவர் கை போட்டு எடுத்த போட்டோ இதுவரை ஒன்றுகூட என்னிடம் இல்லை என்பதுதான் உண்மை.

இந்த படத்தில் பாலச்சந்தர் அவர்களின் திரைக்கதை ரொம்பவும் அருமையானது. எல்லா காலகட்டத்திலும் பார்க்கக்கூடிய படம் இது. ரசிக்கக்கூடிய இசை இப்படத்தில் உள்ளது. 300 வருடங்கள் கடந்தாலும், சினிமா என்று ஒன்று இருக்கும்வரை பாலச்சந்தர் அவர்களுடைய சாதனையை யாராலும் தொடமுடியாது என்பது மறுக்கமுடியாது உண்மை. இவ்வாறு அவர் பேசினார்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் புதன்கிழமையுடன் நிறைவு..!

votingவடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன.

இந்தநிலையில் சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகள், பதாதைகள் மற்றும் பேனர்களை நீக்க, இன்று முதல் பொலிஸாருடன் இணைந்து விஷேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மாகாண சபை தேர்தலை முன்னிட்டு தற்காலிக அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கைகளும் நிறைவடையவுள்ளன.

இதுவரை அடையாள அட்டைகளைப் பெறாதவர்கள் இன்றைக்குள் கிராம சேவகர்கள் ஊடாக தற்காலிக அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண தேர்தல்கள் தொடர்பில் சட்ட வரையறைகளை மீறியதாக 140 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் 430 முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் முத்தரப்பு தொடர் : இலங்கை, பாகிஸ்தான் அணிகள் பங்கேற்பு!!

sl

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் பங்கேற்கும் முத்தரப்புத் தொடர் கிரிக்கெட் போட்டி நடத்துவது குறித்த முடிவு சென்னையில் நடைபெறும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது.

இக்கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில், மூன்று நாடுகளின் கிரிக்கெட் சபையின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இதற்காக, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைமை செயல் அலுவலர் சுபன் அகமது, இலங்கை கிரிக்கெட் சபையின் செயலர் நிஷந்தா ரணதுங்கா மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை செயல் அலுவலர் சையது அஷ்ரஃபுல் ஹக் ஆகியோர் சென்னைக்கு வந்துள்ளனர்.

இக்கூட்டத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் முத்தொடர் நடத்துவது குறித்து பாகிஸ்தான் மற்றும் இலங்கை வாரிய பிரதிநிதிகளிடம் பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பிசிசிஐயின் தலைவர் பதவிலியிலிருந்து தாற்காலிகமாக விலகியுள்ள சீனிவாசன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சைவப் பிரியர்களுக்காக செயற்கை முட்டை தயாரிப்பு!!

egg

சைவ பிரியர்களுக்கு தாவரப் பொருட்களை கொண்டு செயற்கையான முட்டை தயாரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நிறுவனத்தை சேர்ந்த உணவுப் பொருள் விஞ்ஞானிகள் தாவரப் பொருட்களை கொண்டு நவீன செயற்கை முட்டையை உருவாக்கியுள்ளனர்.

அதாவது பயறு, பட்டாணி வகைகளை சேர்ந்த 11 சத்துமிக்க பொருட்களை கொண்டு இதனை தயாரித்துள்ளார்கள். இந்த முட்டை அமெரிக்க சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.

கோழி முட்டையின் விலையை விட 19 சதவிகிதம் குறைவு என்றம், இதனால் கோழிப்பண்ணை தொழிலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் குறித்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜோஸ் தெட்ரிக் தெரிவித்துள்ளார்.

நிச்சயம் மீண்டும் வருவேன் : ஸ்ரீசாந்தின் அதீத நம்பிக்கை!!

sreesanthஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக ஸ்ரீசாந்துக்கு ஆயுள் தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டது.
நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜித் சண்டிலா ஆகியோரை டெல்லி பொலிசார் கைது செய்யப்பட்டனர்.

தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள இவர்கள் மீது கிரிக்கெட் வாரிய ஊழல் தடுப்புக்குழு தலைமை அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார்.

இதில் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதால் இந்திய கிரிக்கெட் சபையின் ஒழுங்கு நடவடிக்கை குழு நேற்று டெல்லியில் கூடி அறிக்கை குறித்து விவாதித்தனர்.

கூட்டத்தில் சர்ச்சையில் சிக்கிய வீரர்களும் ஆஜராகினர் அதிகாரிகள் குழுவினர் ஆலோசனை நடத்தி ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் மற்றும் அங்கித் சவானுக்கு ஆயுள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தனர்.

மேலும் சர்ச்சையில் சிக்கிய அமித் சிங்கிற்கு 5 ஆண்டு தடையும், சித்தார்த் திரிவேதிக்கு 1 ஆண்டு தடையும் விதிக்கப்பட்டன. மற்றொரு வீரரான ஹர்மீத்சிங்கிற்கு எதிராக ஆதாரம் இல்லாததால் அவர் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதுகுறித்து ஸ்ரீசாந்த் கூறுகையில் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இடம்பெற்ற அதிகாரிகள் அனைவரும் நல்ல ஒத்துழைப்பு அளித்தனர்.
எல்லாமே நன்றாக சென்றது நான் என்னுடைய நியாயங்களை எடுத்து கூறினேன்.

நான் சிறு வயது முதலே இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று கனவு கண்டேன். அதனால் கிரிக்கெட்டை நான் ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன் நான் இந்திய நீதித்துறை மீதும் பிசிசிஐ மீதும் நம்பிக்கை வைத்துள்ளேன்.

நிச்சயமாக இந்த சர்ச்சையில் இருந்து சுத்தமாக வெளிவருவேன். அதற்காக உறுதியான முயற்சிகள் எடுத்து வருவதாகவும் விரைவில் இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

அஜீத் தவற விட்ட மற்றொரு ஹிட் படம்!!

ajith

தமிழ் திரையுலகில் அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானவர் அஜீத். சினிமா பின்னணி இல்லாமல் முன்னணி நடிகராக உயர்ந்தவர். காதல் கோட்டை படத்திற்குப் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. காதல் படங்களில் நடித்த வந்தவருக்கு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த தீனா படம் திருப்பு முனையாக அமைந்தது.

அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் கஜினி படத்தில் நடிக்க அஜீத் முடிவு செய்திருந்தார். ஆனால் பின்னர் அவர் நடிக்காமல் சூர்யா நடித்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதேபோல் நந்தா, காக்க காக்க படத்திலும் முதலில் அஜீத்துதான் நடிப்பதாக இருந்தது. ஆனால், அதிலும் சூர்யாவே நடித்தார். நான் கடவுள் படத்திலும் அஜீத்துக்குப் பதிலாக ஆர்யா நடித்தார். இப்படி அஜீத் நடிக்க இருந்து மாற்று நடிகர்கள் நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று அப்படத்தின் நாயகர்களை உச்சத்திற்கும் கொண்டு சென்றது.

இதேபோல் தற்போது அஜீத் நடிக்க இருந்த படம் வேறு நடிகர் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அந்தப்படம்தான் கோ. ஒளிப்பதிவாளராக இருந்த கே.வி. ஆனந்த் இயக்கிய படம். அவர் இந்த கதையை அஜீத்துக்காக உருவாக்கினாராம். அதன்பின் சூர்யாவிடம் சென்றதாம். அதன்பின் சிம்புவிடம் கைமாறி கடைசியாக ஜீவா நடித்தாராம்.

சவுதியில் வீடொன்றில் 16 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கை பணிப்பெண் மீட்பு!!

house-arrest

16 வருடங்களாக சவுதி அரேபியாவிலுள்ள வீடொன்றில் சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பணிப்பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

நுவரெலியாவில் இருந்து தொழிலுக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்த பெண் ஒருவரே மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த பெண் தற்போது சவுதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பில் இருப்பதாக பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொது முகாமையாளருமான மங்கள ரன்தெனிய கூறியுள்ளார்.

மீட்கப்பட்ட பணிப் பெண் நுவரெலியாவிலுள்ள அவரது உறவினர்களுடன் ஸ்கைப் ஊடாக உரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.