எதிர்வரும் ஏப்ரலில் யாழ்தேவி யாழ்ப்பாணம் செல்லும் – ஜனாதிபதி..!

yaldeviயாழ்தேவி ரயில் சேவை எதிர்வரும் ஏப்ரல் அளவில் யாழ்ப்பாணத்துக்கு விஸ்தரிக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று ரயில் நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

பெரும்பாலும் எதிர்வரும் தமிழ் சிங்கள புதுவருடத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்கு யாழ்தேவி ரயில் செல்லும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்..

யாழ்தேவி ரயில் 1990ம் ஆண்டு போர் காரணமாக வவுனியாவுக்கு அப்பால் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆச்சரியப்பட வைக்கும் டோனி!!

dhoni

இந்திய அணியின் அணித்தலைவர் மகேந்திரசிங் டோனி பைக் ஆர்வலர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதிநவீன மோட்டார் சைக்கிளில் செல்வது என்றால் கொள்ளை பிரியமாம்.

இந்த நிலையில் முதல் முறையாக தான் வாங்கிய மோட்டார் பைக்கை தனித்தனியாக பிரித்து எடுத்துள்ளார். இதனை டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளாராம்.

“யமஹா ராஜ்தூத்” என்ற பழைய மோட்டார் சைக்கிளை அவர் தனித்தனி பாகங்களாக பிரித்து எடுத்துள்ளார். இந்த பைக்கை 4,500 ரூபா கொடுத்து வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

யாழில் பொருத்தப்பட்ட முதலாவது சமிக்ஞை விளக்கு!!

traffic signal

யாழ்ப்பாணத்திற்கு முதலாவது சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியையும் ஆஸ்பத்திரி வீதியினையும் இணைக்கும் முத்திரைச் சந்திப் பகுதியிலே இந்த முதலாவது வீதிச்சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்களினால் யாழ் நகரின் முக்கிய சந்திகளில் பயணிக்கும் வாகனங்கள் எண்ணிக்கைகள் கணக்கெடுக்கப்பட்டதினைத் தொடர்ந்து முத்திரைச் சந்தியில் வீதிச்சமிஞ்ஞை விளக்குகள் நேற்று மாலை பொருத்தப்பட்டுள்ளன.

யாழ் நகரத்திற்குள் இருந்தும் ஏ9 வீதிக்கு செல்லும் வாகனங்கள், வெளியிடங்களிலிருந்து யாழ் நகரத்திற்கு நுழையும் வாகனங்கள் முத்திரைச் சந்தியினூடகவே பயணிப்பது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சி உடைகள் என் உடலுக்கு பொருந்துகின்றது : தமன்னா!!

tamanna

தமிழில் ஆனந்த தாண்டவம் படம் மூலம் அறிமுகமானவர் தமன்னா. அதைத்தொடர்ந்து கல்லூரி என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

தொடக்கத்தில் குடும்ப பாங்கான உடையுடன் நடித்த அவர் தற்போது கவர்ச்சி உடைகளுக்கு மாறியுள்ளார். தெலுங்கு படங்களில் அரை குறை ஆடையில் ஆபாசமாக நடிக்கிறார்.

தமிழ் படங்களில் கவர்ச்சிக்கு எல்லை வைத்து இருந்தார். தெலுங்கில் அதை மீறி உள்ளார். இந்தியில் தற்போது இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அங்கும் இயக்குனர்கள் அரைகுறையில் உரித்தே காட்டுகிறார்களாம்.

தமன்னா கவர்ச்சியாக நடிப்பதற்கு விமர்சனங்களும் கிளம்பியுள்ளன. கடந்த சில வருடங்களாக படங்களில் குடும்ப பாங்காக வந்த அவர் தற்போது படவாய்ப்புகளை பிடிப்பதற்காக உடம்பை காட்டுகிறார் என்று சக நடிகைகள் எரிச்சல் படுகிறார்கள்.

இதுகுறித்து தமன்னாவிடம் கேட்டபோது என் உடல்வாகுக்கு கவர்ச்சி உடைகள் பொருத்தமாக இருக்கின்றன. வயிறு, தொடை பகுதிகளை அழகு படுத்தி காட்டுகின்றன. எனவே கவர்ச்சி ஆடைகளை அணிகிறேன் என்றார்.

காதலித்த தங்கையை கொடுரமாக கொலை செய்த அண்ணன்கள்!!

MURDER

நெல்லை அருகே சாதி மாறி காதலித்த தங்கையை விஷம் ஊற்றி கொடூரமாக கொலை செய்த அண்ணன்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நெல்லையை அடுத்த சீவலப்பேரியைச் சேர்ந்தவர் கோமதி. 17 வயதான இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் பதப்படுத்தும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

அதே நிறுவனத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருவேங்கடம் என்ற கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரும் வேலை செய்து வந்தார். அந்த நிறுவனத்தின் வேன் மூலம் செல்லும்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது.

இருவேறு சமுதாயத்தைச் சேர்ந்த இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு கோமதியை அவரது பெற்றோர் வேலைக்கு செல்ல விடாமல் தடுத்தனர். ஆனாலும் மொபைல் போன் மூலம் முருகனுடன் பேசி வந்த அவர் கடந்த 12ம் திகதி நள்ளிரவில் முருகனை தேடி அவரது ஊருக்கு சென்று விட்டார்.

இதனை அறிந்த கோமதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முருகனின் வீட்டிற்கு சென்று சமரசம் பேசி கோமதியை திரும்ப அழைத்து வந்துவிட்டனர். நேற்று கோமதியை வீட்டில் அடைத்து வைத்து விட்டு பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர்.

அப்போது அங்கு வந்த கோமதியின் சகோதரர்கள் முருகன், சுடலைமுத்து மற்றும் உறவினர்கள், கோமதியை தாக்கி அவரது வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றி கொலை செய்தனர்.

இந்த சம்பவம் வெளியில் தெரிந்து விடாமல் இருப்பதற்காக அவரது கழுத்தில் ஒரு கயிற்றை கட்டி தூக்கில் தொங்கியது போல் ஊரை நம்பவைத்தனர். மாலையில் வீடு திரும்பிய கோமதியின் பெற்றோர் மகள் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது அங்கு வந்த சகோதரர்களும் அழுது நாடகமாடியுள்ளனர். பிரேத பரிசோதனைக்காக கோமதியின் உடல் கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை செய்ததில் கோமதி தாக்கப்பட்டதும் வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றியதும் தெரியவந்தது.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிசார் கோமதியின் சகோதரர்கள் முருகன், சுடலைமுத்து ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதனை ஒப்புக் கொண்டனர்.

இதனையடுத்து பொலிசார் அவர்களை கைது செய்தனர். தர்மபுரி இளவரசன் மரணத்தின் சர்ச்சை ஓய்வதற்குள் சகோதரியின் வாயில் விஷம் ஊற்றி கொலை செய்த சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்த சிம்பாவே அணி!!

zimbabe

பரபரப்பான இரண்டாவது டெஸ்டில் துடுப்பாட்டத்தில் சொதப்பிய பாகிஸ்தான் அணி சிம்பாவேயிடம் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது.

பாகிஸ்தான், சிம்பாவே அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் ஹராரேயில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் சிம்பாவே 294, பாகிஸ்தான் 230 ஓட்டங்களை பெற்றுக்கொண்டன.

சிம்பாவே அணி இரண்டாவது இன்னிங்சில் 199 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. 264 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆரம்பம் முதல் திணறியது.

பாகிஸ்தான் அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. சிம்பாவே பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட பாகிஸ்தான் விக்கெட்டுகள் சரிந்தன.

கடைசி கட்டத்தில் ரகத் அலி(1) ரன் அவுட்டாக, பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 239 ரன்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. கடைசி வரை போராடிய மிஸ்பா 79 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சிம்பாவே சார்பில் சடாரா 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

இப்போட்டியில் திரில் வெற்றி பெற்று வரலாறு படைத்த சிம்பாவே அணி தொடரை 1-1 என சமன் செய்தது. தவிர பாகிஸ்தானுக்கு எதிராக 1998ம் ஆண்டிற்கு பிறகு வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் அணி நான்காவது இடத்தில் இருந்து 6வது இடத்துக்கு தள்ளப்பட்டது. சிம்பாவே அணி வங்கதேசத்தை பின் தள்ளி 9வது இடத்துக்கு முன்னேறியது.

Zimbabwe Pakistan Cricket

சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை திரையரங்குகளில் 8 நாட்கள் இலவச சினிமா!!

cinema 100

இந்திய சினிமா நூற்றாண்டு விழா சென்னையில் வரும் 21ம் திகதி முதல் 24ம் திகதி வரை கொண்டாடப்படுகிறது. நேரு விளையாட்டு அரங்கில் இவ்விழா நடக்கிறது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா இதனை தொடங்கி வைக்கிறார்.

சினிமா நூற்றாண்டு விழாவில் பங்கேற்க தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி நடிகர், நடிகைகள் சென்னையில் குவிகிறார்கள். விழா ஏற்பாடுகளை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தீவிரமாக செய்து வருகிறது. விழாவையொட்டி நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

21ம் திகதி மாலை 5.30 மணிக்கு தமிழ் பட உலகினர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளும் 22ம் திகதி காலை கன்னட நடிகர்கள் கலை நிகழ்ச்சியும் மாலை தெலுங்கு நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 23ம் திகதி காலை மலையாள நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

24ம் திகதி சினிமா நூற்றாண்டு நிறைவு விழா நடக்கிறது. இதில் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, கவர்னர் ரோசய்யா, முதல்–அமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர முதல்– மந்திரி கிரண்குமார் ரெட்டி, கர்நாடக முதல் –மந்திரி சீத்தாராமையா, கேரள முதல்– மந்திரி உம்மன் சாண்டி ஆகியோர் பங்கேற்கிறார்கள். இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் கலந்து கொள்கிறார்.

நான்கு நாள் கலை நிகழ்ச்சிகளிலும் அந்தந்த மாநில நடிகர், நடிகைகள் பங்கேற்று நடனம் ஆடுகிறார்கள். நடிகைகள் நயன்தாரா, திரிஷா, ஸ்ரேயா, காஜல் அகர்வால், தமன்னா, பிரியாமணி, சமந்தா, ஹன்சிகா, அனுஷ்கா, அமலாபால், அஞ்சலி, ஓவியா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடனம் ஆடுகிறார்கள்.

நடிகர்களும் நடனத்தில் பங்கேற்கின்றனர். ரஜினி, கமல், விஜய், விக்ரம், அஜீத், சூர்யா, கார்த்தி, ஆர்யா, தனுஷ், சிம்பு, மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், தெலுங்கு நடிகர்கள் பவன் கல்யான், ராம்சரன், ரவிதேஜா, மகேஷ்பாபு, போன்றோரும் பங்கேற்கின்றனர்.

சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி வருகிற 19ம் திகதி முதல் 26ம் திகதி வரை சென்னை சத்யம் மற்றும் அபிராமி தியேட்டர்களில் பழம்பெரும் எம்.ஜி.ஆர், சிவாஜி நடித்த படங்களும் இலவசமாக திரையிடப்படுகிறது.

சம்பியன்ஸ் லீக் : பாகிஸ்தான் அணிக்கு அனுமதி வழங்கிய இந்தியா!!

pak

இந்தியாவில் விரைவில் தொடங்கும் சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை சேர்ந்த பைசலாபாத் அணி பங்கேற்பதற்கு இந்திய மத்திய அரசு விசா வழங்கியுள்ளது.

10 அணிகள் பங்கேற்கும் சம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் எதிர்வரும் 21ம் திகதி முதல் அக்டோபர் 6ம் திகதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

முன்னதாக வருகிற 17ம் திகதி முதல் 20ம் திகதி வரை சம்பியன்ஸ் லீக் தகுதி சுற்று போட்டிகள் மொகாலியில் நடக்கிறது. தகுதி சுற்றில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் (இந்தியா), ஒட்டகோ வோல்ட்ஸ் (நியூசிலாந்து), கந்துரட மரூன்ஸ் (இலங்கை) ஆகிய அணிகளுடன் பைசலாபாத் வோல்வ்ஸ் (பாகிஸ்தான்) அணியும் பங்கேற்கிறது.

தகுதி சுற்று முடிவில் இரு அணிகள் பிரதான சுற்றுக்கு முன்னேறும்.
இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த பைசலாபாத் அணி சம்பியன்ஸ் லீக்கில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டு விட்டது என்று செய்திகள் கசிந்தன.

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தின் அத்து மீறல் அதிகரித்து வருவதால் மிகுந்த முன் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பு கருதியும் இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின.

இதற்கு முன்னாள் வீரர் சோயிப் அக்தர் உள்பட பலர் அதிருப்தி தெரிவித்தனர்.

இதற்கிடையில் பாகிஸ்தானை சேர்ந்த பைசலாபாத் அணிக்கு விசா அனுமதி ஏற்கனவே அளிக்கப்பட்டு விட்டது என்றும் கடவுச்சீட்டு கொடுக்கப்பட்டு விட்டதாகவும் இந்திய தூதகரத்தில் பெற்று கொள்ளலாம் என்று தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் தமிழ்நாட்டில் கைது!!

arrest1

நாகப்பட்டினம் சுங்க அதிகாரிகளினால் இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கடந்த புதன்கிழமை இலங்கையிலிருந்து சென்ற இவர்கள் பயணித்த படகிற்கான ஆவணங்கள் எவுதும் இவர்களிடம் இருக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரையிலுள்ள அகதி முகாமில் இவர்களது உறவினர்கள் இருப்பதாகவும் அவர்களை சந்திக்கும் நோக்கிலேயே இந்தியா சென்றுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

50 வயதான சின்னதுறை மற்றும் 24 வயதான நிரஞ்சன் என்பவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதேச அபிவிருத்தியே முதற்பணி – ஐ.தே.க. வவுனியா மாவட்ட வேட்பாளர் பிரசாத்..!

எதிவரும் வடமாகாணசபை தேர்தலில் வெற்றிபெற்றால், பிரதேச அபிவிருத்திப் பணிகளுக்கே தாம் முன்னிரிமையளிக்கப் போவதாக வவுனியா மாவட்ட ஐ.தே.க வேட்பாளர் பிரசாத் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் வவுனியா மகாறம்பைக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இக்கருத்தினை தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“பலவருடங்களாக பல இன்னல்களைச் சந்தித்துவந்த வடபகுதி மக்களுக்கு முழுமையான அபிவிருத்திப் பணிகளை இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. தேர்தல் காலங்களில் மக்களை அடிக்கடி சந்திக்கும் பிரதிநிதிகளை தேர்தல் முடிந்தபின் மக்கள் தேடினாலும் காணமுடியாது.

இதனால் மக்களுடன் மக்களாக வாழும் ஒருவரை மக்கள் பிரதிநிதியாக தெரிவுசெய்வது மிக அவசியமாகும். பிரதேசத்தின் பிரச்சனைகளை நன்கு அறிந்த ஒருவரினால் மட்டுமே பிரதேச அபிவிருத்திப் பணிகளை முழுமையாக முன்னெடுத்துச் செல்ல முடியும்.

இந்த வகையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினராக நான் செய்த அபிவிருத்திப்பணிகள் உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். ஒரு பிரதேச சபை உறுப்பினராக வீதி அபிவிருத்திப் பணிகள், ஆலய அபிவிருத்திப் பணிகள், விளையாட்டுக்கழக அபிவிருத்திப்பணிகள் என பல திட்டங்களை முன்னெடுத்திருக்கிறேன்.

என்னை மாகாணசபை உறுப்பினராக தெரிவுசெய்தால் இன்னும் பலமடங்கு அபிவிருத்திப் பணிகளையும் சேவைகளையும் வழங்க நான் தயாராக இருக்கிறேன். நான் அரசியல்வாதியாக வாழ்ந்ததில்லை, மக்களுடன் மக்களாகவே வாழ்கிறேன், என்றுமே மக்கள் பிரதிநிதியாகவே இருப்பேன்.

எதிர்வரும் தேர்தலில் யானைச் சின்னத்திற்கும் எனது இலக்கமான ஐந்தாம் இலக்கத்திற்கும் வாக்களித்து உங்கள் பிதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஆணையை எனக்கு வழங்குங்கள்.”

என்று தெரிவித்தார்.

pirasath1

pirasath2

சட்டவிரோதமாக மரங்களை ஏற்றிச் சென்ற மூவர் ஒட்டுசுட்டானில் கைது!!

Deforestation

அனுமதிப்பத்திரம் இன்றி மரங்களை ஏற்றிச் சென்ற மூவர் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வசமிருந்து 205 மரக்குற்றிகள் மற்றும் லொறி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவின் ஹெரண அகுரு வீதியில் வைத்தே இவர்கள் கைதாகியுள்ளனர். சந்தேகநபர்கள் ஒட்டுசுட்டான் மற்றும் மாங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இவர்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

வவுனியாவில் இருந்து கிளிநொச்சியை சென்றடைந்த யாழ்தேவி(படங்கள்)!!

23 வருடங்களின் பின் யாழ்தேவி ரயில் இன்று கிளிநொச்சி நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு ஓமந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் கிளிநொச்சி ரயில் நிலையத்தைச் சென்றடைந்துள்ளது.

நாளை 15 ஆம் திகதி முதல் பயணிகளுக்கான ரயில் சேவைகள் கிளிநொச்சிவரை இடம்பெறவுள்ளன.

வவுனியாவில் இருந்து காங்கேசன்துறை வரையுள்ள 29 ரயில் நிலையங்கள் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வந்தன.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரை தனது சேவையை வழங்கி வந்த யாழ்தேவி 1990ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதியின் பின்னர் வவுனியா வரை மட்டுமே பயணித்தது.

1 2 3 4

தங்கம் கடத்த முயற்சித்த இலங்கை தம்பதிகள் கைது!!

arrest1

கொழும்பிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்த முயற்சித்த இலங்கை தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வட பழனியிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் கருத்தரிப்பு சிகிச்சைக்காக செல்வதாக கூறியுள்ளனர்.

எனினும் இவர்கள் மீது சந்தேகம் ஏற்படவே சுங்க அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். இதன்போது இவர்களிடமிருந்து 585 கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

38 வயதான சுப்பையா மற்றும் 28 வயதான லதா தங்கவேல் என்போரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் ஹெரோயின் விற்பனை செய்த நால்வர் கைது!!

Heroin_Bindle

வவுனியாவில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட கொழும்பைச் சேர்ந்த நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றையதினம் வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் இருவர் கைதாகியுள்ளனர்.

அதில் ஒருவர் 70 மில்லிகிராம் ஹெரோயினை விற்பனை செய்ததுடன் 370 மில்லிகிராம் ஹெரோயினை தன்னகத்தே வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது. இவர் மாலிகாவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என்பதோடு இவர் வசமிருந்து முச்சக்கர வண்டியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மற்றையவர் கிரன்பாசைச் சேர்ந்தவர். இவர் வசமிருந்து 70 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா ரயில் நிலையத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் மேலும் இருவர் கைதாகியுள்ளனர்.

70 மில்லிகிராம் ஹெரோயின் விற்பனை செய்ததோடு 2 கிராம் 160 மில்லிகிராம் ஹெரோயினை தன்னகத்தே வைத்திருந்த, மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவரும், 170 மில்லிகிராம் ஹெரோயினுடன் மிரானியா வீதி கொழும்பை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து நகை கடையாக வந்த வாலிபர் சென்னை விமான நிலையத்தில் கைது!!

jewelry

உடலில் கொத்து கொத்தாக தங்க நகைகளை அணிந்து வந்த வாலிபரை சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

சிங்கப்பூரில் இருந்து இன்று அதிகாலை சென்னை வந்த விமான பயணிகளை குடியிரிமை அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த சிசுபாலன் (32) என்பவர் கழுத்து, கைகளில் கொத்து கொத்தாக நகை அணிந்து கொண்டு வந்தார். அவர் அணிந்து வந்த நகைகளுக்கு எந்தவித ஆதாரமும் காட்டவில்லை.

இதையடுத்து சிசுபாலனை அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர் உடலில் அணிந்திருந்த நகைகள் மொத்தம் 290 கிராம். அவற்றின் மதிப்பு 9 லட்ச இந்திய ரூபாய்கள்.

நகைகளை பறிமுதல் செய்து அவரிடம் மேலும் விசாரணை நடத்தியதில் தங்க நகைகளை உடலில் அணிந்து வந்தால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்படாது என்பதால் உடலில் போட்டு வந்தேன்.

இவற்றை கொண்டு சேர்த்தால் கணிசமான பணம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். யாருக்காக அவர் நகைகளை கடத்தி வந்தார் என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மருதானையில் விபச்சார விடுதி முற்றுகை : 14 பேர் விளக்கமறியலில்!!

pro

மருதானை பகுதியில் விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு 13 பெண்கள் உட்பட 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 40 வயதுடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இந்த விபச்சார விடுதியை நடத்திச் சென்ற ஒருவரும் இதற்கு உதவியாக இருந்த 13 பெண்களுமே கைதாகியுள்ளனர்.

மேலும் இவர்கள் கொழும்பு, அவிசாலவ, கலேவெல, கடுபொல உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் நேற்றையதினம் மாலிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர்,எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.