வவுனியா பஸ் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் போக்குவரத்தில் ஈடுபட தடை!!

vavuniya

வவுனியாவுக்கும் கொழும்புக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஒன்றை தாக்கி சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக இரண்டு பஸ் உரிமையாளர்களின் பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு உரிமையாளர்களுக்குச் சொந்தமான 04 பஸ்களுக்கு வழங்கப்பட்டிருந்த போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் அனுமதியை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தற்காலிகமாக இரத்து செய்துள்ளது.

கடந்த 11ம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதுடன் பொலிஸ் அறிக்கையை அடிப்படையாக கொண்டு போக்குவரத்து ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

விசாரணைகள் முடியும் வரை சம்பந்தப்பட்ட பஸ் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

விசாரணைகளில் அவர்கள் குற்றவாளிகள் என இனங்காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

குறித்த தாக்குதல் சம்பவத்துடன் பஸ் சாரதிகள் இருவருக்கு எதிராகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதால், இது உறுதிப்படுத்தப்பட்டால் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் 14 வயது பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு!!

suicide hanging

மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் தரம் 10ல் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை குறித்த மாணவனின் வீட்டிலேயே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மத்திய கல்லூரியின் பின்புற பகுதியில் வசிக்கும் சு.ரவிவர்மன் என்ற 14 வயது மாணவனே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பேன் : ரோகித் ஷர்மா நம்பிக்கை!!

Rohit-Sharma

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கும் இளம் வீரர் ரோகித் ஷர்மா சமீபத்தில் நடந்த சம்பியன்ஸ் கோப்பை போட்டி மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடந்த மும்முனைப் போட்டி ஆகியவற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

100 ஒருநாள் போட்டியில் ஆடி இருக்கும் ரோகித் ஷர்மாவுக்கு டெஸ்ட் போட்டி அறிமுகம் என்பது எட்டாக்கனியாக இருந்து வருகிறது.
2010ம் ஆண்டில் நாக்பூர் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்டில் அறிமுகம் ஆக இருந்த ரோகித்ஷர்மா பயிற்சியின் போது கால்பந்து விளையாடுகையில் காயம் அடைந்து விலகினார்.

2011ம் ஆண்டில் நடந்த மேற்கிந்தி தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் 2012ம் ஆண்டு அவுஸ்திரேலிய தொடர் ஆகியவற்றுக்கான டெஸ்ட் அணியில் ரோகித் ஷர்மாவுக்கு இடம் கிட்டினாலும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

நவம்பர் மாதத்தில் மேற்கிந்தி தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டி தொடரில் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியும் என்பதில் ரோகித் ஷர்மா நம்பிக்கையுடன் உள்ளார். இது குறித்து ரோகித்ஷர்மா கூறுகையில்..

அடுத்த டெஸ்ட் போட்டிக்கான அழைப்பில் எனக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இந்த விஷயங்கள் எனது கையில் இல்லை. சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு பங்களிப்பை அளிப்பதே எனது பணியாகும். வரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் அறிமுக வீரராக களம் இறங்க முடியும் என்று எதிர்நோக்கி இருக்கிறேன் என்றார்.

ஹன்சிகாவிடம் வருத்தம் தெரிவித்த சிம்பு!!

simbu

சிம்பு- ஹன்சிகா இருவரும் வாலு படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. இதை இருவரும் வெளிப்படையாகவே அறிவித்தனர்.

இந்நிலையில் துபாயில் சைமா விருது வழங்கம் விழாவில் கலந்து கொள்ள ஹன்சிகா மொத்வானி சென்றிருக்கிறார். அவருக்கு ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருது வழங்கப்படுகிறது. சிம்புவிற்கு எந்த விருதும் வழங்கப்படாததால் அவர் இந்த விழாவில் கலந்து கொள்ளாமல் இங்கே இருக்க முடிவு செய்தார்.

தனது காதலி விருது வாங்குவதை நேரில் பார்க்க முடியாததற்கு ஹன்சிகாவிடம் வருத்தம் தெரிவித்ததாக சிம்பு தனது டுவிட்டரில் எழுதியுள்ளார்.

வீட்டை விற்று தொப்பையை குறைத்த மணப்பெண்!!

tsia

வீட்டை விற்று அறுவை சிகிச்சை மூலம் அழகாக மாறியுள்ளார் மணப்பெண் ஒருவர்.

டிஸா என்ற பெண் திருமணத்தின் போது மிக அழகாகவும், மற்றவர்களை கவரும்படியாகவும் தோன்ற வேண்டும் என நினைத்துள்ளார். ஆனால் அவரது உடல் எடையோ மிக அதிகமாக இருந்தது.

எனவே எடையை குறைத்து அழகாக தோன்ற வேண்டும் என்பதற்காக, வீட்டை விற்று 22,000 டொலருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் இவருடைய காதலர் அலெஸ்டர் தானாம்.

எந்த நடிகரும் என்னை சிபாரிசு செய்ததில்லை : ஓவியா!!

oviya

களவாணி படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் ஓவியா. அதன்பின் மெரினா, கலகலப்பு போன்ற படங்களில் நடித்துள்ளார். மூன்று படங்களும் வெற்றி பெற்றாலும் ஓவியாவுக்கு குறிப்பிட்ட பட வாய்ப்புகள் வரவில்லை.

இந்நிலையில் ஹீரோக்கள் உங்களை சிபாரிசு செய்ததுண்டா போன்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது..

எந்த நடிகர்களும் எனக்கு சிபாரிசு செய்ததில்லை. இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மட்டுமே என்னை தொடர்பு கொள்வார்கள். கதைக்கு பொருத்தமாக நான் இருந்தால் ஒப்பந்தம் செய்வார்கள். அப்படியிருந்தால் யாருடைய சிபாரிசும் தேவை இல்லை.

விமலுடன் தொடர்ச்சியாக இரண்டு படங்கள் நடித்தது குறித்து கேட்கிறார்கள். நீங்கள் நினைக்கும்படி அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. என்னுடைய முதல் பட ஹீரோ. என்னைப் பற்றி கொஞ்சம் தெரிந்தவர். அவ்வளவுதான்.

எனக்கு வரக்கூடிய வாய்ப்புகள் வரும். மற்றவர்களுடன் என்னை ஒப்பிட்டு பார்க்க இயலாது. கிராமத்து வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கிடையாது. நடிக்க வந்துவிட்டால் எல்லா கேரக்டர்களிலும் நடிக்க வேண்டும்.

தியேட்டருக்கு படம் பார்க்க வரும் ரசிகர்களை ஏமாற்றாத படி கிளாமராக நடிப்பேன். நான் நடித்து இன்று வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் மூடர் கூடம் என்னை வேறு ஒரு இடத்துக்கு அழைத்துபோகும் என்ற நம்பிக்கை உள்ளது.

23 வருடங்களின் பின் கிளிநொச்சியை நோக்கி புறப்படும் யாழ்தேவி..!

kili23 வருடங்களின் பின் யாழ்தேவி ரயில் இன்று கிளிநோச்சி நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

இன்று காலை 9.30 மணிக்கு ஓமந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் கிளிநொச்சி ரயில் நிலையத்தைச் சென்றடையவுள்ளது.

நாளை 15 ஆம் திகதி முதல் பயணிகளுக்கான ரயில் சேவைகள் கிளிநொச்சிவரை இடம்பெறவுள்ளன.

வவுனியாவில் இருந்து காங்கேசன்துறை வரையுள்ள 29 ரயில் நிலையங்கள் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வந்தன.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரை தனது சேவையை வழங்கி வந்த யாழ்தேவி 1990ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதியின் பின்னர் வவுனியா வரை மட்டுமே பயணித்தது.

பலூன்களின் உதவியுடன் கடலை கடந்து செல்லும் சாதனை பயணம்!!(படங்கள்)

ஹீலியம் பலூன்களின் உதவியுடன் அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து சாதனை புரிய உள்ளார் ஜோனாத்தன்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தை சேர்ந்த ஜோனாத்தன் டிராப்பே(39) ஐ.டி நிறுவனத்தில் வேலை புரிகிறார். இவருக்கு எதாவது சாகசம் செய்ய வேண்டும் என்ற ஆசை எனவே பலூனின் மூலம் அட்லாண்டிக் கடலை கடந்து செல்ல முடிவெடுத்தார்.

இதற்காக நேற்றிரவு மெரினேவில் உள்ள கரிபோவ் மைதானத்தில் இருந்து 370 பலூன்களை கட்டினார். இதில் ஹீலியம் வாயுவை நிரப்பி கடலை கடக்க தயாரானார். உயிருக்கு ஆபத்தான இந்த சாகசத்தை நடத்தி காட்ட துணிந்து தயாரானார்.

தனக்கு சாதகமான வானிலை வேண்டும் என்பதற்காக ஜோனாத்தன் 100 நாட்களுக்கு மேலாகவே காத்திருந்தார். இவருக்காக வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் வானிலை குறித்த தகவல்களை தொடர்ந்து அளித்து வருகின்றனர்.

திட்டமிட்டபடி நேற்று பலூன் பயணத்தை தொடங்கி விட்டார். 2500 மைல்கள் தூரம் அட்லான்டிக் கடல் மேலாக பறந்து 3 முதல் 5 நாட்களில் ஐரோப்பாவில் உள்ள ஐஸ்லாந்துக்கும் மொராக்கோவுக்கும் இடையே தரையிறங்குவார் என கணிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2010ம் ஆண்டு மே மாதம் ஆங்கில கால்வாயையும் 2011 செப்டம்பரில் அல்ப்ஸ் மலையையும் ஹீலியம் பலூன் மூலமாக ஜோனாத்தன் கடந்து சாதனை படைத்துள்ளார். ஆனால் இந்த வழித்தடத்தில் இதுபோன்ற ஹீலியம் பலூன் பயணத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

81 2 3 4 5 6 7

ஒலிம்பிக் பதக்கத்தை திருப்பி அளித்தார் ஆம்ஸ்ட்ராங்!!

armstorngஒலிம்பிக் பதக்கத்தை திருப்பி அளித்துள்ளார் சைக்கிள் பந்திய வீரர் லான்ஸ் ஆம்ஸ்ட்ராங்.

கடந்த 2000ம் ஆண்டில் சிட்னியில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது, சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்டு ஆம்ஸ்ட்ராங் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்நிலையில் இவர் போதைப் பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து நடந்த மருத்துவ சோதனையில் போதைப் பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது. எனவே தன்னுடைய பதக்கத்தை அமெரிக்க ஒலிம்பிக் ஆணையத்திடம் திருப்பி அளித்துள்ளார்.
இதனை குறித்த ஆணையமும் உறுதி செய்துள்ளது.

விண்வெளியில் கீரைகளை பயிரிட திட்டம்!!

veg

விண்வெளி வீரர்களின் உணவுக்காக கீரைகளை பயிரிட நாசா திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வுக் கூடத்தை அமைத்து வருகின்றன.

இதில் பணிபுரிவதற்காக விண்வெளி வீரர்கள் சென்று வருகின்றனர், இந்த வீரர்களுக்கு விசேட உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.
இதற்காக அவர்களுக்கு 450 கிராம் உணவுக்கு 6 லட்சம் வரை செலவாகிறது.

எனவே செலவை குறைப்பதற்காக பூமியில் இருந்து 380 கிலோமீற்றர் தூரத்தில் விண்வெளியில் பண்ணை அமைத்து கீரைகளை பயிரிட நாசா மையம் திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து காய்கறிகளை பயிரிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக இயந்திரங்கள் விரைவில் அனுப்பப்பட உள்ளன. இத்திட்டம் வருகிற டிசம்பரில் தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனை சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தின் திட்ட விஞ்ஞானி ஹோவார்ட் லெவின் தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா அலுவலகத்தில் வருமான வரிச் சோதனை!!

ram

பொலிவுட் மற்றும் தெலுங்குத் திரையுலகில் தனது திரைப்படங்களின் மூலம் நட்சத்திர இயக்குனர் என்ற நிலைக்கு உயர்ந்தவர் ராம் கோபால் வர்மா. கடந்த ஆண்டு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக 132 திரைப் பிரபலங்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதில் ராம் கோபால் வர்மா பெயர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் நேற்று திடீரென்ற மும்பை அந்தேரி பகுதியில் உள்ள மில்லட் நகரில் இருக்கும் அவரது அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். பிற்பகல் ஒரு மணி வரை நடந்த இந்த சோதனையில் கடந்த 2012ம் ஆண்டு முதல் இயக்குனராகவும் கதாசிரியராகவும் அவர் சம்பாதித்த பணத்திற்கு 20 லட்சம் வரித்தொகை செலுத்த வேண்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் அவரது வங்கி இருப்புகளில் அவ்வளவு தொகை இருப்பதாகக் காட்டப்படவில்லை. இதுமட்டுமின்றி, அவருக்குச் சொந்தமான தயாரிப்பு நிறுவனங்களான டிரீம் போர்ஸ் புரொடக்சன் மற்றும் டிரீம் போர்ஸ் என்டர்பிரைசஸ் ஆகியவற்றில் 11 கோடிக்கு வரவு, செலவு நடந்துள்ளதாகக் காண்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த நிறுவனங்கள் எந்த நகரத்திலும் பதிவு செய்யப்படவில்லை.

இந்த இரண்டு நிறுவனங்களும் சேவை வரி கட்டவேண்டிய தேவையில்லை என்று வர்மா தெரிவித்துள்ளார். அதனை மறுத்துள்ள அதிகாரிகள் கடந்த 2010ம் ஆண்டிலிருந்து செயல்பட்ட அந்த நிறுவனங்களின் அனைத்து தஸ்தாவேஜுகளையும் மூன்று நாட்களுக்குள் அரசு வரித்துறை அலுவலகத்தில் தாக்கல் செய்யும்படி கூறியுள்ளனர்.

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா அலுவலகத்தில் வருமான வரிச் சோதனை!!

பொலிவுட் மற்றும் தெலுங்குத் திரையுலகில் தனது திரைப்படங்களின் மூலம் நட்சத்திர இயக்குனர் என்ற நிலைக்கு உயர்ந்தவர் ராம் கோபால் வர்மா. கடந்த ஆண்டு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக 132 திரைப் பிரபலங்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதில் ராம் கோபால் வர்மா பெயர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் நேற்று திடீரென்ற மும்பை அந்தேரி பகுதியில் உள்ள மில்லட் நகரில் இருக்கும் அவரது அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். பிற்பகல் ஒரு மணி வரை நடந்த இந்த சோதனையில் கடந்த 2012ம் ஆண்டு முதல் இயக்குனராகவும் கதாசிரியராகவும் அவர் சம்பாதித்த பணத்திற்கு 20 லட்சம் வரித்தொகை செலுத்த வேண்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் அவரது வங்கி இருப்புகளில் அவ்வளவு தொகை இருப்பதாகக் காட்டப்படவில்லை. இதுமட்டுமின்றி, அவருக்குச் சொந்தமான தயாரிப்பு நிறுவனங்களான டிரீம் போர்ஸ் புரொடக்சன் மற்றும் டிரீம் போர்ஸ் என்டர்பிரைசஸ் ஆகியவற்றில் 11 கோடிக்கு வரவு, செலவு நடந்துள்ளதாகக் காண்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த நிறுவனங்கள் எந்த நகரத்திலும் பதிவு செய்யப்படவில்லை.

இந்த இரண்டு நிறுவனங்களும் சேவை வரி கட்டவேண்டிய தேவையில்லை என்று வர்மா தெரிவித்துள்ளார். அதனை மறுத்துள்ள அதிகாரிகள் கடந்த 2010ம் ஆண்டிலிருந்து செயல்பட்ட அந்த நிறுவனங்களின் அனைத்து தஸ்தாவேஜுகளையும் மூன்று நாட்களுக்குள் அரசு வரித்துறை அலுவலகத்தில் தாக்கல் செய்யும்படி கூறியுள்ளனர்.

டெல்லி மாணவி பலாத்கார வழக்கு : குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு!!

delhi rape

ஓடும் பேருந்தில் டெல்லி மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி விரைவு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் திகதி இரவு துணை மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இந்த வழக்கில் ராம்சிங், முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் தாக்குர் மற்றும் மைனர் என 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராம்சிங், டெல்லி திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். மைனர் குற்றவாளிக்கு 3 ஆண்டு தண்டனை விதித்து டெல்லி சிறுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் தாக்குர் ஆகிய 4 பேர் மீதான வழக்கை விசாரித்த டெல்லி விரைவு நீதிமன்றம், அவர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக்கூறி அவர்கள் குற்றவாளிகள் என கடந்த 10ம் திகதி தீர்ப்பு வழங்கியது.

11ம் திகதி தண்டனை குறித்த இரு தரப்பு வாதங்கள் நடைபெற்றன. இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அவர்கள் செய்த மிகக்கொடிய குற்றத்துக்கு கருணை காட்ட வழியே இல்லை என்பது போலீஸ் தரப்பு வாதம்.

இருப்பினும் குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றவாளிகள் மனம் திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து இன்று தண்டனை விவரம் வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கொந்தளிப்பாக பேசிய குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏ.பி.சிங், டெல்லியில் இனி 2 மாத காலத்தில் ஒரு பலாத்கார சம்பவம் கூட நடைபெறவில்லை எனில் நாங்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யமாட்டோம்.

தூக்கு தண்டனை கொடுத்தால்தான் பலாத்காரமே நடக்காது என்பது நிரூபணமானால் மேல்முறையீடு செய்ய மாட்டோம் என்றார்.

கிளிநொச்சியில் பரீட்சார்த்த ரயிலில் மோதுண்டு வயோதிபர் பலி!!(படங்கள்)

கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை காலை ரயிலில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். கிளிநொச்சி நகருக்கு அண்மையில் உள்ள தொண்டமான் நகர் 55 ஆம் கட்டையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தொண்டமான் நகரை சேர்ந்த வைரமுத்து திருநாவுகரசு(78) என்பவரே மரணமடைந்துள்ளார். சைக்கிளில் பயணித்த அவர் பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமையும் மேற்கொள்ளப்பட்ட பரீட்சார்த்த ரயிலேயே அவர் மோதுண்டு மரணமடைந்துள்ளார்.

கிளிநொச்சிக்கான ரயில் சேவைகள் உத்தியோகபூர்வமாக நாளை சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

kili kili2 kili3 kili4

 

கணவன்- மனைவிக்கு இடையிலான சண்டையில் அயல்வீட்டுக்காரர் தலையிட முடியாது : சி.வி.விக்னேஸ்வரன்!!

CV.Vigneswaran

இலங்கையில் இடம்பெறுவது கணவன்- மனைவிக்கு இடையிலான சண்டையாகும். இதில் தமிழக அரசியல் தலைவர்கள் வந்து விவாகரத்து பெறுமாறு கோரமுடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணத்துக்கான முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தாம் சண்டையிட்டு கொள்வோம் பின்னர் சேர்ந்துக் கொள்வோம். அடுத்த வீட்டுக்காரர் வந்து நீங்கள் விவாகரத்து பெறுங்கள் என்று கூறமுடியாது. அது உங்களுடைய பணியும் அல்லவென்று விக்னேஸ்வரன் திஹிந்துவுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசியல்வாதிகள் இலங்கை தமிழர் பிரச்சினையை டென்னிஸ் அரங்கில் உள்ள பந்தைப்போல பயன்படுத்துகின்றனர். ஒரு கட்சிக்காரர் குறித்த பந்தை மட்டையால் அடித்ததும் மற்றைய கட்சிக்காரர் அதனை அடிப்பதற்கு பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசியல்வாதிகள் இலங்கையின் பிரிவினையை கோரும் போது இலங்கையில் உள்ள சிங்கள சமூகம், இலங்கையில் உள்ள தமிழர்கள் பிரிந்து இந்தியாவுடன் சேர்ந்து விடுவார்களோ என்று அச்சப்படுவதாக விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் பாதிக்கப்பட்டமைக்கு பதற்றமான நடவடிக்கைகளே காரணம் என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு ஆணை பெண் உரசினால் என்ன நடக்கும்(வீடியோ)!!

ஒரு ஆணை பெண் உரசினால் என்ன நடக்கும் என்று இந்த வீடியோவில் பாருங்கள்..

பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்குமாறு 54 உறுப்பு நாடுகளுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடிதம்!!

hrw

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என அதன் உறுப்பு நாடுகள் அனைத்திடமும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

பொதுநலவாய அமைப்புகளில் உள்ள 54 உறுப்பு நாடுகளுக்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து நடவடிக்கை எடுக்க இலங்கை தவறி வருவதால் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் அதன் உறுப்பு நாடுகள் பங்கேற்கக் கூடாது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

பொதுநலவாய மாநாட்டுக்குச் செல்ல தீர்மானித்துள்ள நாடுகள் தங்கள் சார்பில் கீழ்நிலை பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அது பொது மக்கள் அதிருப்தியின் வெளிப்பாடாக அமையும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

போர் குற்றம் தொடர்பில் பொறுப்புக் கூற இலங்கை தவறியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் பிரெட் எடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்றால் அது நீதியை எதிர்பார்த்துள்ள மக்களுக்கு சொல்லப்படும் தவறான செய்தியாக மாறிவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடத்தப்படுவது அந்நாட்டின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை மேம்படுத்தவே என கூறப்படுவதில் சந்தேகம் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் மாநாட்டில் பங்கேற்காது அதன் உறுப்பு நாடுகள் தங்களது நாட்டில் இருந்து பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கைக்கு பொது அழுத்தம் விடுக்க வேண்டும் என மனித உரிமைகள் காப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் பிரெட் எடம்ஸ் தெரிவித்துள்ளார்.