ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நாளை யாழ்.விஜயம் :பாதுகாப்பு தீவிரம்!!

president

ஜனாதிபதியின் யாழ். விஜயத்தை முன்னிட்டு யாழ். நகரில் பாதுகாப்புக் கடமைகளில் பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

நாளை ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அதிகளவு பொலிஸார் யாழ். நகரின் பல பகுதிகளில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அப்பகுதிகளில் பொலிஸார் வீதித்தடைகள் போட்டு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இதய நோய்களை குணப்படுத்தும் தேன்..!!

honey

உலகில் எளிதில் கெட்டுப் போகாத மிகவும் சுத்தமான பொருள் எது என்று கேட்டால் அது தேன் தான். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது கெட்டுப் போகாது. சுத்தமான தேன் மிகச்சிறந்த இயற்கை மருந்தும் கூட. இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.

5 கிலோ பாலின் சக்தி ஒரு கிலோ தேனில் இருக்கிறது என்றால்னம்ப முடிகின்றதா?. பித்த நீர்ச் சுரப்பு இல்லாதவர்கள் தொடர்ந்து தேன் அருந்தி வந்தால் பித்த நீர் சுரந்து தொண்டை, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எளதில் நீங்கி விடும்.

குழந்தைகளுக்கு உண்டாகும் பல் நோய், இதய நோய் ஆகியவற்றுக்கும் தேன் சிறந்த மருந்தாகும். இது தவிர சுவாசக்கோளாறு, வயிற்றுக் கடுப்பு, கிருமி தொற்றுதலால் ஏற்படும் பாதிப்புகள், தாகம், வாந்தி பேதி, தீப்புண், விக்கல், மலச்சிக்கல் போன்றவையும் குணமாகின்றன.

இரவில் படுப்பதற்கு முன்பு பாலில் சிறிது தேன் கலந்து குடித்துவிட்டு படுத்தால் நன்றாக தூக்கம் வரும். மறுநாள் நன்றாக பசிக்கவும் செய்யும். ஒல்லியான உடல் அமைப்பு கொண்டவர்கள் பாலுடன் தேன் கலந்து சாப்பிடுவது நல்லது.

குண்டாக இருப்பவர்களின் உடலில் தேங்கி கிடக்கும் கொழுப்பை கரைக்கும் சக்தியும் தேனுக்கு உள்ளது. நீங்களும் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிட படிப்படியாக ஒல்லியாக மாறலாம்.

கொழும்பு – கிளிநொச்சிக்கு தினமும் மூன்று ரயில் சேவைகள்!!

Kilinochchi

கொழும்பு கோட்டையிலிருந்து கிளிநொச்சிக்கு 15ம் திகதி முதல் தினமும் மூன்று ரயில்கள் புறப்படவுள்ளன. அதற்கான ஆசனங்களை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம் என ரயில்வே திணைக்கள போக்குவரத்து அதிகாரி எல்.ஏ.ஆர். ரத்னாயக்கா தெரிவித்தார்.

தினமும் காலை 5.45க்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் யாழ். தேவி பகல் 12.35 மணிக்கு கிளிநொச்சியை சென்றடையும்.

அதேபோன்று காலை 6.00 மணிக்கு மற்றுமொரு யாழ். தேவி கிளிநொச்சியிலிருந்து புறப்படும். இந்த ரயில் பகல் 1.00 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.

தினமும் காலை 6.50 க்கு கொழும்பிலிருந்து புறப்படும் இன்டர்சிட்டி கடுகதி ரயில் காலை 11.50 க்கு கிளிநொச்சியை சென்றடையும். காலை 5.45 க்கு புறப்பட்ட யாழ். தேவியை அனுராதபுரத்தில் இன்டர் சிட்டி ரயில் முந்திச் செல்லும்.

இதே இன்டர் சிட்டி கடுகதி ரயில் பிற்பகல் 2.10 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து மீண்டும் புறப்படும். இது இரவு 7.15 க்கு கொழும்பு கோட்டையை வந்தடையும். இரவு 8.15 க்கு புறப்படும் தபால் ரயில் அதிகாலை 4.10 க்கு கிளிநொச்சியை சென்றடையும்.

இரவு 8.30 க்கு கிளிநொச்சியிலிருந்தும் தபால் ரயிலொன்று கொழும்பு கோட்டை நோக்கி புறப்படும். இந்த தபால் ரயில் அதிகாலை 4.35க்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.

கிளிநொச்சி, கொழும்பு கோட்டை, அனுராதபுரம் போன்ற பிரதான ரயில் நிலையங்களிலும், மொபிடெல் தொலைபேசி ஊடாகவும் ஆசன முன்பதிவுகளை செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

வெள்ளவத்தையில் விபச்சார விடுதி முற்றுகை : மூன்று பெண்கள் கைது!!

sl

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் ஹெவலொக் வீதி 287ம் இலக்க முகவரியில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் விபச்சார விடுதி இயங்கி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது விபச்சார விடுதி உரிமையாளரும் விபச்சார தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் 30, 33 வயதுகளையுடைய கம்புறுபிட்டி, பொலன்னறுவை மற்றும் மஹவ பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விடுதலைப்புலிகள் பற்றி அவதூறு : மெட்ராஸ் கபே படத்துக்கு இங்கிலாந்தில் தடை!!

madres cafe

மெட்ராஸ்கபே படத்துக்கு இங்கிலாந்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் ஜோன் ஆபிரகாம் நாயகனாக நடித்துள்ளார். சுஜித் சிர்கார் இயக்கியுள்ளார். விடுதலைப்புலிகளை இழிவுபடுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பின. 1990ல் இலங்கையில் நடந்த போர் பின்னணியில் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் யுத்த நடவடிக்கைகள். ராஜீவ் படுகொலை சதி திட்டம் போன்றவை காட்சிபடுத்தப்பட்டு உள்ளன. இந்த படத்தை தமிழகத்தில் திரையிடக்கூடாது என்றும் மீறி திரையிட்டால் தியேட்டர்களில் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றும் தமிழ் அமைப்புகள் எச்சரித்தன.

இதையடுத்து தமிழகத்தில் மெட்ராஸ் கபே படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் மறுத்து விட்டனர். வடமாநிலங்களில் ரிலீசானது. வெளிநாடுகளிலும் மெட்ராஸ் கபே படத்தை திரையிட ஏற்பாடுகள் நடந்தது. இங்கிலாந்தில் தமிழ் இளைஞர் அமைப்பினர் மெட்ராஸ் கபே படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.

படம் திரையிடப்பட இருந்த தியேட்டர்களிலும் முற்றுகையிட்டனர். மெட்ராஸ் கபே படத்தை தடை செய்ய கோஷம் போட்டனர். படத்தின் போஸ்டர்களையும் தீயிட்டு எரித்தார்கள். இதையடுத்து படத்துக்கு அங்கு தடை விதிக்கப்பட்டது. தியேட்டர்களில் மெட்ராஸ் கபே படத்தை திரையிடுவதை நிறுத்தி விட்டார்கள்.

சச்சின் ஓய்வு பெறுவது எப்போது??

sachin

இந்தியாவுக்காக சச்சின் இன்னும் சிறிது காலம் விளையாடலாம் என இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் வீரர் சேட்டன் சவுகான் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் ஒருநாள் மற்றும் சர்வதேச 20-20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

எனினும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இதுவரை 198 டெஸ்டில் விளையாடிய இவர் அடுத்து வரவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர் மூலம் 200 டெஸ்டில் விளையாடிய முதல் வீரர் என்ற புதிய உலக சாதனை படைக்க காத்திருக்கிறார்.

இத்தொடருக்கு பின் இவர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேட்டன் சவுகான் கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகள் படைத்த சச்சின் தற்போதைக்கு ஓய்வு பெறத் தேவையில்லை.

இவர் இன்னும் சிறிது காலம் விளையாடலாம். இவர் கடந்த இரண்டு ஆண்டில் ஒரு முறை கூட டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்கவில்லை.
இருப்பினும் இவருக்கு டெஸ்டில் விளையாடக் கூடிய திறமையும், தகுதியும் நிறைய உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

பாடசாலையில் 5 மணி நேரம் மாணவியை கழிவறையில் அடைத்து வைத்து கொன்ற பரிதாபம்!!

ragging_death

கொல்கத்தாவில் பள்ளி மாணவியை 5 மணி நேரம் கழிவறையில் அடைத்து வைத்து பகிடிவதை செய்ததால் மாணவி உயிரிழந்துள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த 11 வயது பள்ளி மாணவியிடம் மூத்த மாணவர்கள் 100 ரூபாய் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

பணம் தர மறுத்ததால் அந்த மாணவியை கழிவறையில் அடைத்து பூட்டியுள்ளனர். சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு இந்த செய்தி அறிந்து அந்த மாணவியை மீட்டுள்ளனர்.

பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் பள்ளி முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீரென்று பள்ளிக்குள் நுழைந்த அவர்கள் வகுப்பறைக்குள் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். பள்ளி முதல்வரை முற்றுகையிட்ட உறவினர்கள், மாணவி உயிரிழப்புக்கு காரணமாக மாணவரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

பின்பு பொலிசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை வெளியேற்றினர்.

உலகிலேயே பெரிய தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தும் LG!!

LG-55EM9700-OLED-TV

உலகளாவிய ரீதியில் மக்களின் நம்பிக்கையை வென்ற இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான LG ஆனது பெரிய OLED தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Ultra High Definition தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இத்தொலைக்காட்சியானது 77 அங்குல அளவுடையதாக காணப்படுகின்றது.

இத்தொலைக்காட்சியின் விலையானது இதுவரை வெளியிடப்படாத நிலையில் முன்னர் அறிமுகப்பத்திய வளைந்த மேற்பரப்பினைக் கொண்ட 55 அங்கு அளவுடைய தொலைக்காட்சியின் விலையை 15000 டொலர்கள் என LG நிறுவனம் நிர்ணயித்திருந்தது.

இந்நிலையில் இப்புதிய தொலைக்காட்சியின் விலையானது 15000 டொலர்களை விடவும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செக் மோசடி வழக்கில் பிரீத்தி ஜிந்தாவுக்கு பிடிவாரண்ட்!!

pretiஇந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா தனது படங்களுக்கு கதை எழுதிய கதாசிரியர் அப்பாஸ் டயர்வாலாவுக்கு 18.9 லட்சத்துக்கான காசோலை கொடுத்திருந்தார். அந்த காசோலையை அப்பாஸ் வங்கியில் செலுத்தியபோது அந்த கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தது.

இதையடுத்து பிரீத்தி ஜிந்தா மீது அப்பாஸ் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி பிரீத்தி ஜிந்தாவுக்கு 4 முறை கோர்ட் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு ஜாமினில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக அவரை ஆஜராக வரும்படி சம்மன் அனுப்பியபோது அவர் வராததால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் இன்று ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார். இன்றும் ஆஜராகாத நிலையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் பிரீத்தி தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். பிரீத்தி வெளிநாட்டில் இருப்பதாக கோர்ட்டில் தெரிவித்தேன். ஆனால், அவருக்கு எதிராக கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த பிடிவாரண்டை ரத்து செய்ய கோர்ட்டில் முறையிடுவோம் அல்லது மும்பை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்வோம் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

மணி ரத்னத்தின் தில்சே படத்தின் மூலம் பொலிவுட்டில் அறிமுகமான நடிகை பிரீத்தி ஜிந்தா கடைசியாக பிரேம் ராஜ் இயக்கத்தில் உருவான இஷ்க் இன் பாரிஸ் படத்தில் நடித்துள்ளார். ஐபிஎல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் பிரீத்தியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆபிரிக்காவை வீழ்த்துவோம் : தவான் நம்பிக்கை!!

dhavan

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இதற்கான அட்டவணையில் பிரச்னை ஏற்பட்டதால் இரண்டு கிரிக்கெட் வாரியங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இதற்கு முன்னதாக இந்திய ஏ அணி தென் ஆபிரிக்கா சென்று விளையாடியது. இதில் ஷிகர் தவான், ரெய்னா, ரோகித் சர்மா போன்றோர் இடம் பெற்று இருந்தனர்.

இதில் சிறப்பாக ஆடிய தவான் ஒருநாள் போட்டியில் 150 பந்தில் 248 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில் கடந்த ஓர் ஆண்டாக எனது ஆட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

அதிக ஓட்டங்கள் குவிக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்கிறேன். வெளிநாட்டு மைதானங்களில் விளையாடும்போது அங்குள்ள சூழ்நிலையை ஏற்றுக்கொண்டு விளையாட வேண்டும்.

தென் ஆபிரிக்க மைதானங்கள் பவுன்சர், வேகம் நிறைந்ததாக உள்ளன. அங்கு விளையாடியது நல்ல பயன் அளிக்கும். தென் ஆபிரிக்க தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பிடிவாரன்ட்!!

vijayakanth

தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கில் புதன்கிழமை ஆஜராகாத அவருக்கு பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் அக்கட்சியின் சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் திகதி நடைபெற்றது.

அதில் பேசிய விஜயகாந்த் தமிழக அரசையும், தமிழக முதல்வரையும் அவதூறாகப் பேசியதாக தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் ஏ. குப்புசாமி வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்குத் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விஜயகாந்த் பிப் 27ம் திகதி ஆஜரானார். அப்போது அவர் மீதான புகார் தொடர்பாக பதில் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு விஜயகாந்துக்கு அழைப்பாணைகள் அனுப்பப்பட்டன. மற்ற மாவட்டங்களில் உள்ள வழக்குகள் தொடர்பாக ஆஜராக செல்வதாலும் தொகுதி மக்களைச் சந்திக்க வேண்டியிருப்பதாலும் அவரால் இங்கு ஆஜராக இயலவில்லை என விஜயகாந்த் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் கூறியதால் 3 முறை விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆர்.சேதுமாதவன் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், விஜயகாந்த் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் ஜகதீசன் உள்ளிட்டோர் நீலகிரியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருப்பதால் விஜயகாந்த் இங்கு வர இயலவில்லை என மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஆஜராகாத விஜயகாந்துக்கு பிடிவாரன்ட்டும் செப்டம்பர் 23ம் திகதி ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

கணவரை அப்பா என்று அழைக்கும் ஸ்ரீதேவி!!

sridevi

1967ம் ஆண்டில் நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாகத் தனது திரையுலக வாழ்வை ஆரம்பித்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ்த்திரையுலகில் முடிசூடா ராணியாகக் கோலோச்சிய இவர் பின்னர் இந்தித் திரையுலகிலும் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்தார்.

இந்தித் திரையுலகத் தயாரிப்பாளரான போனிகபூரை மணந்த ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷி என்று இரண்டு பெண்கள் உள்ளனர். ஸ்ரீதேவியின் மகள்கள் மட்டுமின்றி அவரும் தன் கணவரை அப்பா என்றே அழைக்கின்றார்.

கபூர் முன்னிலையில் ஸ்ரீதேவி சிறுபெண்ணாக மாறி தனது குழந்தைக் குரலில் அப்பா என்று கூப்பிட்டு சந்தோஷிப்பதை அவர்களின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் அனைவரும் அறிவர்.

கபூரின் எந்த செயலையும் உடனே மன்னிக்கும் குணமுடைய ஸ்ரீதேவி அவரின் ஒரே ஒரு பழக்கத்தை மட்டும் விரும்புவதில்லையாம். ஏதாவது ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும்போது தன்னுடைய தலை முடியை இழுக்கும் பழக்கம் போனிகபூரிடம் உண்டு.

ஏற்கனவே தலை வழுக்கையாக இருப்பதால் அடிக்கடி இதுபோல் செய்வது வழுக்கையை அதிகரிக்கும் என்று ஸ்ரீதேவி அவரிடம் கண்டிப்பு காட்டுவாராம்.

அணியில் இடம்பிடிக்க தீவிர பயிற்சியில் யுவராஜ் சிங்!!

Yuvraj-Singh

இந்திய அணியின் யுவராஜ் சிங் பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மோசமான போம் காரணமாக இந்திய அணியில் இடம் பெறாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறார் யுவராஜ் சிங். இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்திய ஏ அணிக்கு அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நான்கு போட்டிகளுமே சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
செப்டம்பர் 15ம் திகதி முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. 17ம் திகதி 2வது போட்டியும், 19ம் திகதி மூன்றாவது போட்டியும் நடைபெறும்.

செப்டம்பர் 21ம் திகதி 20-20 போட்டி நடைபெறும். இதனையடுத்து தேசிய அணியில் இடம்பிடிக்கும் வகையில், பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

சீனாவில் 8 மாத குழந்தையின் ஆணுறுப்பை கடித்து குதறிய குரங்கு!!

baby

சீனாவில் தேசிய விலங்கியல் பூங்காவில் தாயுடன் சுற்றிப் பார்க்க சென்ற 8 மாத குழந்தையின் ஆண் உறுப்பை குரங்கு ஒன்று கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கையாங் மாகாணத்தில் கியான்லிங் தேசிய வன விலங்கியல் பூங்கா உள்ளது. தினமும் இதனை சுற்றிப் பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர்.

சீனாவைச் சேர்ந்த குடும்பத்தினர் தனது குழந்தைகளுடன் விலங்கியல் பூங்காவைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது 8 மாத சிறுவனுடன் ஒரு தாய் அங்கு சென்று கொண்டிருந்தார். இங்கு குரங்குகள் தொல்லை அதிகம் இருப்பதாக அடிக்கடி பார்வையாளர்களால் புகார்கள் வருவதுண்டு. பார்வையாளர்களின் பொருட்களை, உணவு பண்டங்களை அவை தூக்கி சென்று தின்று விடும்.

இந்நிலையில் சிறுவனுக்கு சிறுநீர் வந்து விட அவனுக்கு அவனது தாயார் காற்சட்டை மாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு ஒரு குரங்கு பாய்ந்து வந்தது. சிறுவனை தரதர வென்று இழுத்து சென்றது. தாயாரும், சிறுவனும் அலறி கூச்சல் போட்டனர். ஊழியர்கள் விரைந்து வந்து குரங்கிடம் இருந்து சிறுவனை மீட்பதற்குள் தாயின் கண்ணெதிரிலேயே சிறுவனின் உறுப்பை குரங்கு கடித்து குதறியது. இதனால் சிறுவன் படுகாயமடைந்தான்.

ஊழியர்கள் விரைந்து வந்து குரங்கிடம் இருந்து சிறுவனை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், சிறுவனின் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று தெரிவித்தனர். ஆனால் எதிர்காலத்தில் அவனுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு பாதிக்கப்படலாம் என்றும் தெரிவித்தனர்.

இம்ரான்கான் போல டோனி கவர்ச்சியானவர் இல்லை : அக்தர்!!

dhoni

சச்சின் டெண்டுல்கர் உட்பட உலகின் முன்னணி ஆட்டக்காரர்களை ஒரு காலத்தில் தனது அதி வேகப்பந்து வீ்ச்சால் மிரட்டியவர் சொய்ப் அக்தர்.

இம்ரான் கான், வாசிம் அக்ரம், வாக்கார் யூனுஸ் ஆகியோரின் வாரிசாக கருதப்பட்ட அவர் தனது முரட்டுத்தனத்தால் புகழை இழந்து அதால பாதாளத்திற்குப் போய் தற்போது கிரிக்கெட்டிலிருந்தே ஒதுக்கப்பட்டுவிட்டார்.

இந்நிலையில் இந்திய அணித்தலைவர் டோனியை முன்னாள் பாகிஸ்தான் அணித்தலைவர் இம்ரான் கானுடன் ஒப்பிட்டுள்ளார் அக்தர்.
இது குறித்து அவர் கூறுகையில் இந்திய கிரிக்கெட் அணியின் சமீபத்திய பெரும் முன்னேற்றத்திற்கு ஐ.பி.எல் காரணம் இல்லை.

டோனி என்ற ஒரே ஒரு நபர்தான் இதற்குக் காரணம். இம்ரான் கானைப் போல கவர்ச்சிகரமானவராக டோனி இல்லாமல் இருக்கலாம். ஆனால், இம்ரானிடம் உள்ள அத்தனை குணங்களும் டோனியிடம் உள்ளது.

ஒரு வீரராக மட்டுமல்லாது அணித்தலைவராகவும் கலக்கியவர் இம்ரான். அதேபோலத்தான் டோனியும் பிரமாதமாக செயல்படுகிறார் என்றும் இருவரும் தங்களது வாழ்க்கைக்கும் தாங்கள் ஆடிய அணிக்கும் புது அர்த்தம் புது வாழ்வுகொடுத்தவர்கள் எனவும் கூறினார்.

ஜோதிகாவை இன்னும் காதலிக்கிறேன் : படவிழாவில் நடிகர் சூர்யா!!

soorya

இருவர் ஒன்றானால் என்ற பெயரில் புது படம் தயாராகிறது. ரமணா ஆர்ட்ஸ் சார்பில் ஏ.எம்.சம்பத்குமார் தயாரிக்கிறார். அன்பு.ஜி இயக்குகிறார். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் மாணவ– மாணவிகள் முன்னிலையில் நடந்தது.

நடிகர் சூர்யா விழாவில் பங்கேற்றார். அவருக்கு மாணவர்கள் உற்சாக வர வேற்பு அளித்தனர். பின்னர் பாடல் சி.டி.யை வெளியிட்டு சூர்யா பேசியதாவது..

மாணவ–மாணவிகள் முன்னால் விழா நடப்பது சந்தோஷமா இருக்கு. நான் காலேஜ் முடிச்சி பல காலம் ஆச்சு. உங்களை பார்க்கும்போது மறுபடியும் அந்த ஞாபகம். எனக்கு இன்று திருமண நாள். நிறைய பேர் இங்கு வாழ்த்து சொன்னீங்க. பேஸ் புக்கிலும் எக்கச்சக்கமா வாழ்த்து குவியுது.

இருவர் ஒன்றானால் படக்குழுவினர் முதல் படைப்பாக இதை உங்கள் முன் கொண்டு வர்றாங்க. நீங்க சப்போர்ட் பண்ணனும். இந்த படத்தின் நாயகன் பிரபு நடனம் பயின்று நிறைய நாட்கள் சினிமா கனவோடு இருந்து இப்ப நடிக்க வந்துள்ளார்.

நல்லா நடனம் பண்ணி இருக்கார். நாம் நினைப்பது கிடைக்கும். பிரபுவுக்கும் கிடைச்சிருக்கு. சினிமா சாதாரண விஷயம் இல்லை. வசனம் எப்படி இருக்கனும். பிரேம் எப்படி இருக்கனும். சீன் எப்படி அமையனும். லோக்கேஷன் எங்கு போகனும் என்றெல்லாம் ஒவ்வொரு காட்சிக்கும் நிறைய விவாதம் பண்ணி பிறகு சூட்டிங் போறாங்க.

இருவர் ஒன்றானால் படத்தையும் அப்படித்தான் செதுக்கி இருப்பாங்கனு நம்புறேன். போஸ்டர், பாடல், சீன்கள் எல்லாம் இதில் சிறப்பா அமைசிருக்கு. இந்த படத்தில் இருப்பவர்கள் நல்ல டீம். தயாரிப்பாளர் என்னோட நிறைய படங்களில் வேலை பார்த்து இருக்கார்.

கஜினி படத்தில் அவரது பங்களிப்பு முக்கியமானது. நேருக்கு நேர் படத்தில் அறிமுகமான போது நான் புதுசு. நடனம் ஆடவே தெரியல. என்னை ஆதரித்து இந்த அளவுக்கு உயர்த்தியது போல் இருவர் ஒன்றானால் படக்குழுவினருக்கும் ஆதரவு கொடுங்கனு கேட்டுக்குறேன்.

காதல் படமாக எடுத்து இருக்காங்க. காதல் 14 வயதில் துவங்கி 25 வயதில் முடியுறது இல்ல. ஒரு பெண்ணை விரும்பி திருமணம் செய்த பிறகும் அது குறையக்கூடாது. நான் ஜோதிகாவை மணந்து 7 வருடங்கள் ஆகிறது. காதலித்து 12 வருடங்கள் ஆகிறது.

அந்த காதல் அப்படியேதான் போய்ட்டு இருக்கு. ஒவ்வொரு நாளும் இன்னும் இன்னும் அழகா தெரியுது. காதல் அப்படித்தான் இருக்கனும் பசங்களுக்கு திருமணத்துக்கு பிறகு காதல் குறைஞ்சி போயிடுது என்று பெண்கள் நினைக்கிறார்கள். அப்படி குறைய விடாதீர்கள். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று சூர்யா பேசினார்.

விழாவில் டைரக்டர் சரவணன், இந்துஸ்தான் பல்கலைக்கழக இயக்குனர் அசோக்வர்கீஸ், வேந்தர் எலிசபெத் வர்கீஸ், தயாரிப் பாளர்கள் சம்பத்குமார், ரவிக்குமார், ஒளிப்பதி வாளர் குமார்ஸ்ரீதர், இசையமைப்பாளர் குரு கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.