நான் வாங்கிய முதல் சம்பளம் 500 ரூபாய் : பிரியாமணி!!

Priyamani

நடிகை பிரியாமணி ஐதராபாத்தில் தனக்கு பிடித்த விஷயங்களை பட்டியலிட்டு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:–

கே:– உங்களுக்கு பிடித்தது.

ப:– என் கண்களும், சிரிப்பும் ரொம்ப பிடிக்கும். எனக்கு நல்ல குணம் இருக்கிறது. அதையும் ரசிக்கிறேன்.

கே:– பிடித்த நடிகர்கள்?

ப:– கமலஹாசன், ஸ்ரீதேவி, அமீர்கான்.

கே:– ஓய்வை எப்படி கழிப்பீர்கள்?

ப:– டி.வி. பார்ப்பேன். நண்பர்களை சந்திப்பேன்.

கே:– மறக்க முடியாத பாராட்டு?

ப:– பருத்திவீரன் படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது எனக்கு கிடைத்ததும் அம்மாவும், அப்பாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். பாராட்டினார்கள். அதுவே எனக்கு கிடைத்த பெரிய பாராட்டு ஜூனியர் என்.டி.ஆர். நான் நன்றாக நடனம் ஆடுவதாக பாராட்டினார். அதுவும் மறக்க முடியாது.

கே:– உங்கள் அடுத்த ஆசை?

ப:– மேக்கப் போடாமல் நடிக்க வேண்டும்.

கே:– ரசிகர்களுக்கு உங்களைப் பற்றி தெரியாத விஷயம்?

ப:– நான் சினிமாவில் வாங்கிய முதல் சம்பளம் 500 ரூபாய். இது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இதுவரை இருந்தது.

கே:– பார்ட்டிக்கு போவீர்கள்?

ப:– நள்ளிரவு பார்ட்டிகளுக்கு செல்வது உண்டு.

கே:– பிடித்த உணவு?

ப:– ரவா தோசை சாப்பிடுவேன். பிரியானியும் விரும்பி சாப்பிடுவேன்.

கே:– கணவராக வருபவர் எப்படி இருக்க வேண்டும்,?

ப:– எனக்கு கணவராக வருபவருக்கு திறமையாக பேச தெரியனும், தங்கு, தடை இல்லாமல் பேச வேண்டும் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் இருக்கனும். சந்தர்ப்பத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளவும் வேண்டும்.

புகை, மது குடிக்கும் காட்சிகள் இல்லாமல் ஒரு கல்லூரி காதல் கதையை படமாக்கும் புதுமுக இயக்குனர்!!

mathu

அம்மு சினி ஆர்ட்ஸ் சார்பில் கோவை நேருஜி, பார்த்திபராஜன் இணைந்து தயாரிக்கும் படம் என்னைப் பிரியாதே. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தை பொன்.மணிகண்டன் இயக்குகிறார். இவர் பல இயக்குனர்களிடம் இணை இயக்குனராக இருந்தவர்.

இப்படத்தில் இரண்டு நாயகர்கள் நடிக்கிறார்கள். முதல் நாயகனாக ரத்தன் மௌலியும், இரண்டாவது நாயகனாக அமரும் நடிக்கிறார்கள். நாயகியாக ஷாமிலி நாயர், ரம்யா நரசிங்கர் நடிக்கிறார்கள். அதிரடி வில்லனாக அதிரவன் மிரட்டுகிறார். ஏ.எல்.எஸ்.வேலன் இசையமைக்கிறார்.

முழுக்க முழுக்க கல்லூரி மற்றும் குடும்ப பின்னணியில் நடக்கும் ஆக்ஷன் காதல் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. படத்தின் பெரும்பகுதி பெரும்பாலும் கோவை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சுற்றி 45 நாட்கள் படமாக்கியுள்ளனர்.

படம் குறித்து இயக்குனர் பொன்.மணிகண்டன் கூறும்போது, சினிமா வலிமை மிக்க சாதனம். இதன்மூலம் நல்லது சொல்லி நன்மை செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. கெட்டது செய்து தீமை செய்யாமல் இருக்க வேண்டும். சமூகம் புகையாலும், மதுவாலும் சீர்கெட்டு கிடக்கிறது. இதை மேலும் நான் கெடுக்க விரும்பவில்லை. இந்த படத்தின் கதை நாகரீகமாகவும், கண்ணியமாகவும் இருக்கும் என்கிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. வரும் அக்டோபரில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

பூநகரியில் பாலியல் துஷ்பிரயோக சம்பவம் : சந்தேக நபருக்கு மரபணு பரிசோதனை!!

sexual

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபரை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கிளிநொச்சி நீதவான் உத்தரவிட்டார்.

பூநகரி பிரதேசத்தில் பனையோலை வெட்டச் சென்ற பெண்ணொருவர் இராணுவ பதுங்குகுழி ஒன்றில் வைத்து வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்த நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

சந்தேக நபரை தொடர்ந்தும் எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

பூநகரி பகுதியை சேர்ந்த திருமணமான 43 வயதான பெண் அண்மையில் ஒருநாள் பனையோலை வெட்டச் சென்ற போது இராணுவ அணியும் சீருடைக்கு ஒத்த சீருடையணித்த சிலர் அந்த பெண்ணின் கண்களை கட்டி விட்டு பதுங்குகுழி ஒன்றுக்கு கொண்டு சென்று பல முறை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அணித்தலைவர் பதவியிலிருந்து மிஸ்பாவை நீக்கவேண்டும் : ரமீஸ் ராஜா!!

misbh

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஹராரேயில் நடந்த டெஸ்டில் சிம்பாவே அணியிடம் தோற்றது. கடைசியாக பாகிஸ்தான் அணியை சிம்பாவேயிடம் 1998ம் ஆண்டு தோற்று இருந்தது.

பலவீனமான சிம்பாவே அணியிடம் பாகிஸ்தான் தோற்றதால் அணித்தலைவர் மிஸ்பா அல் ஹக் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். அணித்தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று முன்னாள் அணித்தலைவரும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் 39 வயதான மிஸ்பாவின் செயல்பாடில் திருப்தி இல்லை. அணியை வழி நடத்தக்கூடிய புதியவர் தேவை.
இதனால் மிஸ்பாவை அணித்தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதுவே அதற்கு சரியான நேரம்.

என்னை பொறுத்தவரை மிஸ்பாவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக கருதுகிறேன் என்றும் தென் ஆபிரிக்க பயணத்திற்கு புதிய அணித்தலைவரை தெரிவு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மற்றொரு முன்னாள் அணித்தலைவர் அமீர் சோகைல் கூறுகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும். உள்ளூர் போட்டியில் இருந்து சிறந்த வீரர்களை உருவாக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தவறிவிட்டது என்றார்.

முன்னாள் வேகப்பந்து வீரர் சொயிப் அக்தர் கூறுகையில் பயிற்சியாளர் பதவியில் இருந்து வட்மோரை நீக்க வேண்டும். சிம்பாவே அணியிடம் தோற்றதற்கு பாகிஸ்தான் அணியின் மோசமான துடுப்பாட்டமே காரணம் என்றும் அணியின் இந்த மோசமான நிலைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையே காரணம் எனவும் கூறினார்.

ஸ்ரீசாந்த் சார்பு சட்டத்தரணி ஆவேசம்!!

sreesanth

ஆறாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நடந்த சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கிட் சவானுக்கு பி.சி.சி.ஐ., வாழ்நாள் தடை விதித்தது.

இது குறித்து ஸ்ரீசாந்த் சார்பாக ஆஜரான சட்டத்தரனி ரெபேக்கா ஜோன் கூறுகையில் ஸ்ரீசாந்த் வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும். இவருக்கு பிணையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரவி சவானி அளித்துள்ள அறிக்கை உண்மையானது என்று கூற முடியாது. எனவே, ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட தடை இயற்கையின் நீதிக்கு எதிரானது என்றார்.

ருகுணு பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சடலங்களாக மீட்பு, மேலும் ஒருவரை காணவில்லை!!

ruhunu

ருகுணு பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறை கடற் பகுதிக்கு குளிக்கச் சென்று காணாமற்போன நால்வரில் இரு மாணவர்களே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

நீரில் மூழ்கி காப்பாற்றப்பட்ட நிலையில் மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ஒரு மாணவன் நீரில் மூழ்கிய நிலையில் இதுவரை மீட்கப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

மட்டக்களப்பில்16 வயது மாணவி உட்பட இருவர் தூக்கிட்டு தற்கொலை!!

dead

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் செம்மண்னோடை, ஹாஜியார் வீதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

செம்மண்னோடை ஹாஜியார் வீதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையான முகம்மது அலியார் இஸ்மாயில் (48) என்பவரே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவராவார்.

நேற்று காலை குறித்த நபர் கடமை புரியும் ஓட்டமாவடியில் உள்ள தனியார் அரிசி ஆலைக்கு கடமைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் அவரது மனைவி தனது மூன்று பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்பி விட்டு மூத்த மகனுடன் வைத்தியசாலைக்குச் சென்று முற்பகல் 10.30 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்த போது அவரது கணவர் வீட்டு வளையில் தூக்கிட்டு தொங்கிக் கொண்டிருந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அயலவர்களின் உதவியுடன் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் பகுதிகளில் மாணவி உட்பட இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மைலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் 10ம் தரத்தில் கல்வி கற்கும் யோகநாதன் ரசிகலா (16) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணையை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா இளைஞர் மன்னாரில் தூக்கிட்டு தற்கொலை..!

vavuniyaமன்னார் அடம்பன் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

27  வயதான சத்தியதேவா என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வவுனியா பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், மன்னாரில் குடும்பத்தினருடன் தற்காலிகமாக வசித்து வந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவரது சடலம் மன்னார்  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய வரிசையில் களமிறங்க விருப்பம் தெரிவித்த ஷேவாக்!!

sehwag

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் ஷேவாக் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சமீபகாலமாக சரியாக விளையாடததால் கிரிக்கெட் சபை அவரை ஒதுக்கி வருகிறது.

இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் நடுவரிசையில் விளையாட விருப்பம் தெரிவித்து கிரிக்கெட் வாரியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2வது மற்றும் 3வது 4 நாள் போட்டிக்கான இந்திய ஏ அணியில் ஷேவாக் இடம் பெற்றுள்ளார்.

இந்திய அணி தெரிவாளர் சந்தீப் பட்டீல் ஷேவாக்கை தொடக்க ஆட்டக்காரராக தெரிவு செய்துள்ளார். 35 வயதை நெருங்கும் ஷேவாக் சமீபகாலமாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓரங்கட்டுப்பட்டு வருகிறார்.

ஷேவாக்குக்குப் பதிலாக தொடக்க வீரராக களமிறங்கிய தவான் சிறப்பாக விளையாடி வருகிறார். இதனால் ஷேவாக் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். கடைசியாக ஷேவாக் அவுஸ்திரேலியாவுக்கெதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 25 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

வரும் நவம்பர் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் விளையாட இருக்கிறது. அப்போது இந்திய அணியில் நடுவரிசையில் களமிறங்கி விளையாட ஷேவாக் விருப்பம் தெரிவித்தள்ளார்.

இதற்குக் காரணம் அவுஸ்திரேலியா இந்தியா வந்தபோது கம்பீர் மற்றும் ஷேவாக் ஆகியோருக்குப் பதிலாக களமிறங்கிய தமிழக வீரர் முரளி விஜய்- தவான் ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.

மேலும் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது கடைசி போட்டியில் தவான் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக புஜாரா விளைடினார். இதனால் ஷேவாக் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர்களாக களம் இறங்குவது முடியாத காரியம் ஆகிவிட்டது.

இதனால் நடுவரிசையில் விளையாட முயற்சி செய்து வருகிறார். தற்போது இந்திய அணியில் நடுவரிசையில் விளையாடும் வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை.

ரகானேவை நடுவரிசை வீரராக இறக்கினார்கள். ஆனால் அவர் சிறப்பாக விளையாடவில்லை. அதேபோல் ரெய்னாவும் நடுவரிசையில் சோபிக்கவில்லை. இதுவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத ரோகித் சர்மா அணியில் இடம்பெற்றாலும் சரியாக விளையாடுவாரா எனத்தெரியவில்லை.

டிராவிட், லஷ்மண், கங்குலி ஆகியோர் ஓய்வு பெற்ற பின்னர் அந்த இடத்தை நிரப்ப சரியான வீரர்கள் இல்லை. அதனால் ஷேவாக் நடுவரிசையில் விளையாட போட்டியிருக்காது என்ற நிலையில் அதில் விளையாட விரும்புகிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக மனுத் தாக்கல்!!

TNA

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த மனுவை தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தாக்கல் செய்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  அரசியலமைப்பின் 157/7 ஏ(4) என்ற பிரிவின் கீழ் குறித்த விஞ்ஞாபனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளோ அமைப்புகளோ நாட்டை பிரிவினைக்குட்படுத்தும் விடயங்களை முன்வைக்கக் கூடாது. இதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சட்டத்தை மீறியுள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் சாதனையில் ஈடுபட்ட அமெரிக்க நபர் மரணம்!!

Man-on-mountain

பிரான்ஸ் நாட்டில் அல்ப்ஸ் மலையிலிருந்து குதித்து சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அமெரிக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்க நாட்டை சேர்ந்த 33 வயது நபர் ஒருவர் 2500 மீற்றர் உயரத்திலிருந்து குதித்து சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சாதனைக்கான பயிற்சியின் போது இவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

ஆனால் இந்த நபரின் பெயர் மற்றும் எவ்வாறு விபத்து நடந்தது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விடயம் பயிற்சி அதிகாரிகள் கூறுகையில் இந்த பகுதியானது ஆபத்தான இடமாகும்.

மேலும் முறையான பயின்சியின்மை மற்றும் வீரர்கள் சாதனையில் ஈடுபடுவதற்கு முன்னதாக இதனை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல் ஈடுபடுவதனால் இவ்விபத்து ஏற்படுகின்றது என கூறியுள்ளனர்.

இதுவரை இந்த மலையில் 6 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதத்தில் கூட ஒரு நபர் சாதனையில் ஈடுபட்ட போது மலையில் மோதி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையை பிளவுபடுத்த இந்தியா அனுமதிக்காது – ஜனாதிபதி..!

mahindaஇலங்கையை இரண்டாக பிளவுபடுத்தும் திட்டத்தை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ´ஹிந்துஸ்தான் ரைம்ஸ்´ நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியில் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தனது செவ்வியில்,

வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள விஞ்ஞாபனம், நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கத்தைக் கொண்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் ஏமாற்றமளிக்கிறது. ஆனால் இது புதிதல்ல. அப்பாவி மக்களின் உணர்வுகளைத் தூண்டி வாக்குகளைப் பெறுவதற்கு கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும் இதே உத்தியை அவர்கள் கையாண்டுள்ளனர். இப்போதும் அதே உத்தியைத் தான் கையாள்கின்றனர்.

ஒரே வித்தியாசம் என்னவென்றால், இப்போது அங்கு புலிகள் இல்லை. இந்த தேர்தல் விஞ்ஞாபனம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டைப் பிளவுபடுத்த முனைகிறது என்பதை தெளிவாக காட்டுகிறது.

ஆனால் அதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அத்துடன் எந்த நாடும் ஆதரவு கொடுக்கும் என்றும் நான் நினைக்கவில்லை. குறிப்பாக இந்தியா நிச்சயம் நாடு பிளவுபடுவதை ஒருபோதும் ஆதரிக்காது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தேர்தல் வன்முறைகள் அதிகரிக்கக் கூடும் : கபே அச்சம்!!

site-logo

தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் வன்முறைகள் மேலும் அதிகரிக்கக் கூடிய அபாயம் இருப்பதாக கபே இயக்கம் அச்சம் வெளியிட்டுள்ளது.

வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் அதிகம் இடம்பெற்று வருவதாக கபே இயக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போலி இலக்க தகடுகள் அடங்கிய வாகனங்கள் மற்றும் கராஜ் இலக்கங்கள் கொண்ட வாகனங்களின் பாவனை அதிகரித்துளள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டில் நேற்று இரவு ஐதேக வேட்பாளர் வராவெவவின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டு வடமேல் மாகாணத்தில் வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் சனத் நிஷாந்த மற்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் போலி இலக்க தகடுகள் அடங்கிய வாகனங்களை பயன்படுத்தி வருவதாக கபே இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய பொலிஸார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேட்பாளர்கள் தேர்தல் சட்டத்தையும் சிவில் சட்டத்தையும் மீறி வருகின்றனர். இதனை தடுக்க தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீர்த்தி தென்னகோன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிரியர்கள்!!

ind

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் கழிப்பறை மற்றும் வகுப்பறைகளை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களே சுத்தப்படுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

அரசு பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள், பள்ளி வளாகம் மற்றும் கழிப்பறைகளை சுத்தப்படுத்த துப்புரவு பணியாளர்கள் கிடையாது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாணவர்களை தனித்தனி குழுவாக பிரித்து பணிகள் ஒதுக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படும்.

ஆனால் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் பள்ளி மாணவர்களை எந்த விதமான வேலையிலும் ஈடுபடுத்தக்கூடாது என உத்தரவு உள்ளது.
இதனால் பள்ளிகளில் மாணவர்களுக்கு எந்த வேலையும் வழங்குவது கிடையாது.

பெரும்பான்மையான பள்ளிகளில் வகுப்பறை பள்ளி வளாகம் மற்றும் கழிப்பறைகளை சுத்தப்படுத்துவது கிடையாது. ஒரு சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களே கழிப்பறைகளை சுத்தப்படுத்துகின்றனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறுகையில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் பள்ளிகள் சுத்தமின்றி உள்ளன. இங்கு பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளி துவங்குவதற்கு முன்பு கழிப்பறையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர்.

தற்போது கிராம ஊராட்சிகளில் 16 ஆயிரத்து 726 துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என அரசு அறிவித்துள்ளது. இவர்களையாவது பள்ளிகளை சுத்தப்படும் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புளொட் வேட்பாளர் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு விடுவிப்பு..!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் வவுனியா நகர்ப்பகுதியில் நேற்று மும்முரமாக இடம்பெற்று வந்தன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புளொட் வேட்பாளர்   க.சந்திரகுலசிங்கம் (மோகன்) நேற்றையதினம் வவுனியா நகரெங்கும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் வவுனியா பொலீசார் உடனடியாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளை நிறுத்துமாறு எச்சரித்ததாகவும், தொடர்ந்து பிரச்சார நடவடிக்கைகள் தொடர்ந்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர் சந்திரகுலசிங்கம்(மோகன்) உட்பட அவரது ஆதரவாளர்களுமாக ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் வவுனியா பொலீசாரினால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் கையெழுத்து பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்ட வீட்டுச் சின்னத்தை தாங்கிய ஊர்தியும், அதன் சாரதியும் இதுவரை விடுவிக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

mohan1
mohan2

சம்பியன்ஸ் லீக் சுற்றுத்தொடர் மிகச் சவாலானது : பிரண்டன் மெக்கலம்!!

Brendon McCullum

சம்பியன்ஸ் லீக் தொடருக்கான தகுதிச் சுற்று சவால் நிறைந்ததாக இருக்கும். கடுமையாக போராடினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என ஒடாகோ வோல்ட்ஸ் அணியின் தலைவர் பிரண்டன் மெக்கலம் தெரிவித்தார்.

ஐந்தாவது சம்பியன்ஸ் லீக் 20-2o சுற்றுத்தொடர் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. இதில், இந்தியா, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்க உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த, 10 உள்ளூர் சம்பியன்ஸ் அணிகள் பங்கேற்கின்றன.

ஆறாவது பிரிமியர் கிரிக்கெட்டில் முதல் மூன்று இடங்களை பிடித்த மும்பை, சென்னை, ராஜஸ்தான் அணிகளுடன், அவுஸ்திரேலியாவின் பெர்த், பிரிஸ்பேன், தென் ஆப்ரிக்காவின் டைட்டன்ஸ், லயன்ஸ் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் டிரினிடாட் அண் டுபாகோ உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு நியூசிலாந்தின் ஒடாகோ வோல்ட்ஸ், இலங்கையின் கந்துரட்ட மரூன்ஸ், பாகிஸ்தானின் பைசலாபாத் வால்வ்ஸ், 6வது பிரிமியர் கிரிக்கெட்டில் 4வது இடம் பிடித்த ஐதராபாத் உள்ளிட்ட 4 அணிகள் தகுதிச் சுற்றில் பங்கேற்கின்றன.

தகுதிச் சுற்று குறித்து ஒடாகோ வோல்ட்ஸ் அணியின் கேப்டன் பிரண்டன் மெக்கலம் கூறியது:

சம்பியன்ஸ் லீக் தொடருக்கான தகுதிச் சுற்றை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு அணியிலும் திறமையான வீரர்கள் இருப்பதால், எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிடாமல் விளையாடினால் மட்டுமே, பிரதான சுற்றுக்கு தகுதி பெற முடியும். எனவே, தொடரை வெற்றியுடன் துவக்குவது அவசியம்.

சுழலுக்கு சாதகமான இந்திய ஆடுகளத்தில் மூன்று ஆசிய அணிகளுடன் விளையாட இருப்பது சவாலான விடயம். கடந்த 2009ல் நடந்த தகுதிச் சுற்றில் முதலிரண்டு போட்டியில் தோல்வி அடைந்த ஒடாகோ வோல்ட்ஸ் அணி பிரதான சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.

இம்முறை சிறந்த முறையில் பயிற்சி மேற்கொண்டுள்ளோம். தவிர அணியில் திறமையான இளம் வீரர்களுடன் சில அனுபவ வீரர்கள் இடம் பெற்றிருப்பதால் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதென பிரண்டன் மெக்கலம் கூறினார்.