பராமரித்தவரை கடித்துக் கொன்ற சிங்கம்!!

lion

எத்தியோப்பியா தலைநகர் அடிடிஸ் அபாபா நகரில் மிருககாட்சி சாலை உள்ளது. இங்குள்ள மிருகங்களை பார்க்க தினசரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். அங்கு 15 சிங்கங்கள் உள்ளன. அவற்றை பராமரிக்க அபேராசில்சாய் (51) என்ற ஊழியர் இருந்தார்.

நேற்று காலை அவர் கைனென்சியா என்ற சிங்கத்தின் கூண்டுக்குள் சென்று துப்புரவு பணியை மேற்கொண்டார். அப்போது கூண்டின் உள் அறைக்குள் அந்த சிங்கம் தூங்கி கொண்டிருந்தது. எனவே, அவர் கூண்டை பூட்ட மறந்து விட்டு தனது வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது கண் விழித்த அந்த சிங்கம் திடீரென பாய்ந்து வந்து ஊழியர் அபேராவை கடுமையாக தாக்கியது. அவரது கழுத்தில் கடித்து குதறி ரத்தம் குடித்தது.இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே அங்கு வந்த காவலர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மிரட்சியை எற்படுத்தினர். இருந்தும் சிங்கம் அவரை கடித்து குதறியது.

இதனால்அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இக்கோர சம்பவத்தை தொடர்ந்து மிருக காட்சி சாலை பொதுமக்கள் பார்க்க தடை விதித்து மூடப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளில் தற்போது தான் ஊழியரை சிங்கம் தாக்கி கொன்றுள்ளது.

17 வயது பெண்ணை பாலாத்காரத்திற்கு உட்படுத்தி அலுமாரியின் அடைத்த அயலவர்!!

abuse

கர்நாடகாவில் 17 வயது இளம்பெண்ணை பலாத்காரத்திற்கு உட்படுத்தி மயங்கிய அவரை அலுமாரியில் வைத்து பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் தாலுகா பென்னிபுராமோளே பகுதியை சேர்ந்தவர் இந்தப்பெண். இந்தப் பெண் தினமும் தனது சின்னம்மா வீட்டுக்கு சென்று தூங்குவது வழக்கமாம். அதேபோல் நேற்று முந்தினமும் இரவு 10.30 மணியளவில் இவர் சித்தி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

சித்தி வீட்டுக்கு அருகே நாகேஷ்(26) என்பவர் வசித்து வருகிறார். அவர் கூலி தொழிலாளி. ஏற்கனவே திருமணம் ஆனவர். இவர் இந்தப் பெண்ணை வழிமறித்து வாயில் துணியைத் திணித்து தன் வீட்டுக்குள் அழைத்துச் சென்றிருக்கிறார்.

பின்னர் அவரை பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார். மயங்கிய பெண்ணை அலுமாரியில் வைத்துப் பூட்டியுள்ளார் நாகேஷ்.
தினமும் வரும் பெண்ணைக் காணவில்லையே என்று சித்தி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து தேடத் தொடங்கினர். அப்போது நாகேஷ்தான் இரவில் நடமாடியதாக சிலர் தெரிவித்தனர்.

உறவினர்கள் நாகேசின் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். அப்போது அலுமாரியினுள் இருந்து தட்டும் சத்தம் கேட்டது. இதனால் அலுமாரியை திறக்கும்படி நாகேசிடம் அவர்கள் கூறினார்கள்.

ஆனால், அதற்கு மறுத்த நாகேஷ் சாவியை வெளியூருக்கு சென்று உள்ள தனது மனைவி கொண்டு சென்று விட்டதாக கூறினார். ஆனாலும், அவர்களுக்கு சந்தேகம் அதிகமானால் அலுமாரியின் கதவை உடைத்து பார்த்தனர்.

அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ரோஜா மிகவும் சோர்ந்து போய் இருந்தார். அவரை உடனடியாக உறவினர்கள் மீட்டு மாவட்ட அரசு வைத்தியசாலையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பொலிசில் ரோஜாவின் சித்தி சாக்கம்மா முறைப்பாடு செய்தார். அதன்பேரில் நாகேஷ் மீது கடத்தல் மற்றும் பலாத்கார பிரிவுகளின் கீழ் பொலிஸ் வழக்கு பதிவு செய்தார்.

பின்னர் நாகேசை கைது செய்ய பொலிசார் பென்னிபுராமோளேவுக்கு சென்றனர். ஆனால், அதற்குள் நாகேஷ் வீட்டில் இருந்து தப்பி ஓடி விட்டார். அவரை போபொலிசார் தேடி வருகிறார்கள்.

குரங்கை தொடர்ந்து விண்வெளிக்கு செல்லும் பூனை!!

cat

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக ஈரானும் விண்வெளியில் ஆய்வு நிகழ்த்த திட்டமிட்டுள்ளது. வருகிற 2018ம் ஆண்டில் விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப முடிவு செய்துள்ளது.

இதற்காக தற்போது விலங்குகளை ரொக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பி சோதனை நடத்தி வருகிறது. கடந்த 2010ம் ஆண்டில் எலி மற்றும் ஆமையை அனுப்பியது.

இந்த நிலையில், சமீபத்தில் பிஸ்காம் என்ற குரங்கை விண்வெளிக்கு அனுப்பினர். 2 நிமிட நேரம் பயணம் 120 கி.மீட்டர் தூரம் பயணம் செய்த அந்த குரங்கு பத்திரமாக பூமிக்கு திரும்பியது.

தற்பேது அடுத்த கட்டமாக வருகிற மார்ச் மாதம் விண்வெளிக்கு பெர்சியன் இன பூனையை அனுப்ப ஈரான் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த பூனை நீண்ட அடர்ந்த ரோமங்களுடன் அகலமான முகம் கொண்டதாக இருக்கும்.

பூனையை தவிர எலி மற்றும் முயலை அனுப்பும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. இந்த தகவலை ஈரான் விண்வெளி திட்ட சீனியர் அதிகாரி முகமது இப்ராகிம் தெரவித்துள்ளார்.

17வது குழந்தையை பெற்றெடுக்க ஆவலுடன் காத்திருக்கும் தாய்!!

baby

ஒன்றுக்குப் பின்னர் இரண்டாவது குழந்தையைப் பற்றி யோசித்தாலே பொருளாதார சிக்கல்கள்தான் கண்முன் தோன்றிப் பயமுறுத்தும். இத்தகைய கால கட்டத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் திருமணமாகிய 23 ஆண்டுகளில் தனது 17ஆவது குழந்தையின் வரவை சந்தோஷமாக வெளியில் அறிவிக்கும் இவர் ஒரு சூப்பர் தாயாகத்தான் இருக்கமுடியும்.

லங்காஷயரின் மோர்கம்பே என்ற இடத்தில் வசித்துவரும் நோயல்(41),மற்றும் அவரது மனைவி ஸ்யு ரட்போர்ட்(38)என்ற இருவரும் பேக்கரி ஒன்றினை நடத்தி வருகின்றனர்.

திருமணமான இந்த 23 வருடங்களில் ஒவ்வொரு 17 மாத இடைவெளியிலும் அவர்கள் வீட்டில் ஒரு புதுவரவு தோன்றும். இவர்களது 16ஆவது மகன் கஸ்பர் சென்ற வருடம் அக்டோபர் மாதம் பிறந்தான். தற்போது 11 மாத இடைவெளியில் தான் மீண்டும் தாயாகப் போவதை ஸ்யு மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றார்.

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தங்கள் குடும்பத்துடன் இணையப் போகும் புதுவரவு குறித்து கணவன் மனைவி இருவருமே சந்தோஷிக்கின்றனர்.

ஒன்பது அறைகள் கொண்ட வீட்டில் வசித்துவரும் இவர்கள் தங்களின் போக்குவரத்திற்காக சிறிய பேருந்து ஒன்றினையே வைத்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டில் இவர்களது குடும்பம் பற்றி எடுக்கப்பட்ட ஆவணப் படமான “15 கிட்ஸ் அண்ட் கவுண்டிங்” இவர்களை வெளியுலகில் பிரபலப்படுத்தியுள்ளது.

 

இலங்கையின் 6வது பல்கலைக்கழக கல்லூரி யாழ்ப்பாணத்தில்!!!(படங்கள்)

இளைஞர்கள் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சினால் 115 மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள பல்கலைக்கழக கல்லூரிக்கான அடிக்கல் நேற்று காலை 10 மணிக்கு யாழ்.தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நாட்டப்பட்டது.

இளைஞர்கள் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் மொஹான்லால் க்றேரோ ஆகியோர் மேற்படிக் கட்டிடத்திற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்திருந்தனர்.

இவ்வாண்டிற்காக நிதி அமைச்சரூடாக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து இலங்கை முழுவதும் 25 பல்கலைக்கழக கல்லூரிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதில் 7 பல்கலைக்கழக கல்லூரிகள் அமைப்பதற்கு முதற்கட்ட நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இக்கல்லூரிகளில் புதிதாக 30 படநெறிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதோடு மொத்தமாக 40 டிப்ளோமா பாடநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இக்கல்லூரிகளில் கல்வி பயில 300 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இக்கல்லூரிகளின் சிறப்பு தேர்ச்சி பெற்றுக் கொள்ளும் மாணவர்கள் கொழும்பு ரத்மலானையில் அமைந்துள்ள வாழ்க்கைத் தொழில், தொழில் நுட்பவியல் பல்கலைக்கழகத்தில் தகைமை 7 தரத்திலான பட்டப்படிப்பை மேற்கொள்ளும் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

க.போ.த உயர்தரப் பரிட்சையில் சித்திபெற்றாலும், பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வாய்ப்புக் கிடைக்காத மாணவர்கள் இப் பல்கலைகழகக கல்லூரி மூலம் சிறந்த பயனைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

1 2 3

தேர்தல் கடமைகளுக்காக 25 000 பொலிஸார் கடமையில்!!

election

எதிர்வரும் சனிக்கிழமை வட மேல், மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கடமைகளுக்காக 25 000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மூன்று மாகாணங்களிலும் பொலிஸார் விசேட தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவர் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

மாகாணத்தில் கடமையாற்றி வரும் அதிகாரிகளுக்கு மேலதிகமாக அண்டை மாகாணங்கள் மற்றும் கொழும்பிலிருந்தும் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் கடமைக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை இவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கலகத் தடுப்புப் பொலிஸார் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இலங்கையில் 25 வீத பெண்கள் உளவியல் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர்!!

Depression

இலங்கைப் பெண்களில் 25 வீதமானவர்கள் உளவியல் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை சுகாதார அமைச்சு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. தற்கொலை செய்து கொள்ள எத்தனிக்கும் நபர்கள் ஏதேனும் ஓர் வகையிலான உளவியல் பாதிப்பினை எதிர்நோக்கி வருகின்றனர்.

ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் உறுதியாகியுள்ளது. இலங்கையில் 100 பேர் தற்கொலை செய்து கொள்ள நினைப்பதாகவும் அதில் பத்து பேர் முயற்சிப்பதாகவும் அதில் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சமூக அவதூறு, எதிர்பார்ப்பு தகறுதல், போதியளவு புரிந்துணர்வு இன்மை, பெற்றோர் ஆதரவு கிட்டாமை போன்ற காரணிகளினால் அதிகளவு தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகின்றதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கை குறித்த பயண எச்சரிக்கையை நீடித்தது பிரித்தானியா!!

uk-flag

பிரித்தானியாவின் இலங்கை தொடர்பான பயண அறிவுறுத்தல் அறிக்கையில் இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும் பேணப்பட்டுள்ளன. இறுதியாக பிரித்தானியா தமது பயண அறிவுறுத்தலை கடந்த செப்டம்பர் மாதம் 12ம் திகதி மீளாக்கம் செய்துள்ளது.

இதில் புதிதாக எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் நிமித்தம் அதிக போக்குவரத்து நெருக்கடிகள்,பாதுகாப்பு கெடுபிடிகள் போன்றன காணப்படும் என்பதுடன், ஹோட்டல் அறைகளை பதிவு செய்துக் கொள்வதிலும் சிக்கல் காணப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனினும் கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட பயண அறிவுறுத்தலில் காணப்பட்ட இலங்கையில் இயக்கும் கடத்தல்களுடன் தொடர்புடைய ஆயுதக்குழுக்கள் மற்றும் மதங்களுக்கு எதிரான தாக்குதல்கள் போன்ற விடயங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை.

இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு பிரித்தானிய வெளிவிகார அமைச்சுடன் தொடர்பு கொண்டு புதிய பயண எச்சரிக்கையை நீக்குமாறு கோரி இருந்தது. எனினும் இந்த முறையும் இந்த பயண எச்சரிக்கை மாற்றம் இன்று வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

10 வருடங்களில் இரண்டு மடங்கான சோதனைக்குழாய் குழந்தை!!

baby

சுவிஸ்லாந்தில் செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப முறையில் குழந்தைகளின் பிறப்பு விகிதமானது அதிகரித்துள்ளதாக புள்ளிவிபர அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 6321 பெண்கள் இந்த செயற்கை முறையினை பயன்படுத்தியுள்ளனர். இது கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

புள்ளிவிபரப்படி43 சதவீத ஆண்கள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படுவதால் பெண்கள் வேறு ஒரு நபரின் விந்துவின் மூலம் குழந்தைகளை பெற்றுக்கொள்கின்றனர். வருடத்திற்கு 2000 குழந்தைகள் சோதனை குழாய் முறையில் பிறக்கின்றனர்.

இதனையும் தவிர்த்து இன்னொரு தொழில்நுட்பமானது இன்ட்ரோசைட்டோபிளாஸ்மிக் (intracytoplasmic) அதாவது ஒரு ஊசியின் மூலம் செயல்படும் தொழில்நுட்பமாகும். இதில் ஒரு விந்துவினை ஊசியின் வழியாக நேரடியான முறையில் அண்டத்திற்கு செலுத்துவதாகும்.

இதன் மூலம் 80 சதவீதம் அதாவது 10827 இனப்பெருக்க சிகிச்சைகள் சுவிஸ்லாந்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த1990ம் ஆண்டு ஆரம்பம் முதல் இந்த முறையானது அதிகமான மக்களால் பின்பற்றப்பட்டது.

பெண்களால்19 முதல் 51 வயது வரை செயற்கைமுறையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி சட்டத்தரணிகள் சாகும்வரை உண்ணாவிரதம்!!

tn

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி முருகன், கயல்விழி, பகத்சிங் ஆகிய 3 சட்டத்தரணிகள் திங்கள்கிழமை சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

உயர் நீதிமன்றத்தில் உள்ள சட்டத்தரணிகள் சங்கம் முன்பு அவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.  தமிழை உயர்நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வருகிறோம். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும என்று அவர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் 12 வயது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

hang

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் தரம் ஏழில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டின் அருகில் உள்ள கொய்யா மரத்தில் இருந்தே குறித்த சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

கோட்டைக்கல்லாறு முதலாம் வட்டாரம் பவான் வீதியைச் சேர்ந்த செ.கிரிசாந்த்(12) என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பிலான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவிகளை நிர்வாண படமெடுத்த ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

arrest1

மலசலகூட கதவில் சூட்சமமான முறையில் கையடக்கத் தொலைபேசியை பொருத்தி மேலதிக வகுப்புக்கு வரும் மாணவிகளை நிர்வாண படமெடுத்த ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று மீண்டும் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது அவருக்கு விளக்கமறியல் நீடித்து அநுராதபுரம் மேலதிக நீதவான் சந்திம எதிரிமான உத்தரவிட்டார்.
குறித்த ஆசிரியருக்கு பிணை வழங்குமாறு அவரது சட்டத்தரணி விடுத்த நீண்ட கோரிக்கையை நீதவான் நிராகரித்துவிட்டார்.

நிர்வாண வீடியோ தரவு அடங்கிய ஆவணம் பரிசோதனைக்கென கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் வலய குற்ற விசாரணை பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர் நிரந்தர ஆசிரியரா அல்லது தனியார் வகுப்பு நடத்தும் ஆசிரியரா என உறுதிப்படுத்த விசாரணைகள் தொடர்வதாக அநுராதபுரம் வலய குற்ற விசாரணை பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இக்கருத்துக்களை பரிசீலித்த அநுராதபுரம் மேலதிக நீதவான் சந்திம எதிரிமான, சந்தேகநபரை எதிர்வரும் 23ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆர்யாவுடன் சண்டை போட்ட அனுஷ்கா!!

Anuska

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா – அனுஷ்கா நடித்துள்ள படம் இரண்டாம் உலகம். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் அனுஷ்கா சண்டையிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சிகளை அமெரிக்காவில் ஜோர்ஜியா மாகாணத்தில் எடுத்துள்ளனர்.

அனுஷ்கா திரையுலகிற்கு வருவதற்கு முன்பே ஐதராபாத்தில் வாள் வீச்சு சண்டையை முறைப்படியாக கற்றுத் தேர்ந்துள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த அருந்ததி படத்தில் கத்தி சண்டைகளில் நடித்துள்ளார்.

அதேபோல் இந்த படத்திலும் இவர் லாவகமாக வாள் சண்டையிடும் காட்சியை பார்த்த படக்குழுவினர் வியந்து போயுள்ளனர். வில்லன்களுடன் மட்டுமல்லாமல் கதாநாயகன் ஆர்யாவுடனும் சண்டை போடும் காட்சியும் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கிறதாம்.

இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். தமிழ், ஜோர்ஜியன், ரஷ்யன், உஸ்பெக், துருக்கி உள்ளிட்ட ஏழு மொழிகளில் இப்படம் வெளியாகிறது. அனுஷ்கா தற்போது பஹூபலி, ருத்ரம்மா தேவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்காக குதிரையேற்றமும், பாரம்பரிய தற்காப்பு கலைகளும் கற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகி சின்மயிக்கு திருமணம் : நடிகர் ராகுல் ரவீந்திரனை மணக்கிறார்!!

sinmaye

2002ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி.

சிவாஜி படத்தில் இவர் பாடிய சஹானா சாரல் தூவுதோ, எந்திரன் படத்தில் கிளிமஞ்சாரோ ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலமானவை. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளார்.

இந்நிலையில் சின்மயி நடிகர் ராகுல் ரவீந்திரனை காதல் திருமணம் செய்துகொள்ளப் போகிறார். இவர்கள் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை சின்மயியின் தாய் பத்மாசினி உறுதிபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது நடிகர் ராகுல் ரவீந்திரனுக்கும் எனது மகள் சின்மயிக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடைபெறவுள்ளது. விரைவில் நிச்சயதார்த்தத்தை நடத்த முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

நடிகர் ராகுல் ரவீந்திரன் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கும் வணக்கம் சென்னை படத்திலும் நடிக்கிறார். மற்றும் சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டும் பில்கேட்ஸ் முதலிடம்!!!

billgates

மைக்ரோசொப்ட் கம்பெனியை உருவாக்கியவர்களில் ஒருவரான பில் கேட்ஸ் இன்னும் அமெரிக்க பணக்காரர்களின் பட்டியலில் முதலாமிடத்தில் உள்ளார் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது.

72 பில்லியன் டாலர் (4 லட்சத்து 52 ஆயிரத்து 376 கோடி) மதிப்புடைய சொத்துகளுக்கு சொந்தக்காரரான பில் கேட்ஸ் கடந்த 20 வருடங்களாக முதலாவது இடத்திலேயே இருந்து வருகிறார்.

பெர்க்‌ஷைர் ஹாத்வே கம்பெனியின் உரிமையாளர் வாரென் பப்பெட்ஸ் 58.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாமிடத்தில் உள்ளார். 41 பில்லியன் டாலர் மதிப்பு சொத்துக்கு உரிமையாளரான Oracle கம்பெனியினை உருவாக்கியவர்களில் ஒருவரான லாரி எல்லிசன் மூன்றாமிடத்தில் உள்ளார் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியலிட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் காயத்ரி ரகுராம்!!

gayathri

டான்ஸ் மாஸ்டர் ரகுராம்-கிரிஜா ஆகியோரின் மகள் காயத்ரி ரகுராம். தமிழில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக சார்லி சாப்ளின் படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விசில், பரசுராம், ஸ்டைல் உள்ளிட்ட தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

பின்னர். அமெரிக்காவில் கணணி பொறியிலாளர் தீபக் சந்திரசேகரை திருமணம் செய்துகொண்டு அங்கே செட்டிலானார். பின்னர் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கசப்பு ஏற்படவே, அங்கேயே திரைப்பட இயக்கம் தொடர்பான படிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.

திரும்பிய அவர் கந்தசாமி, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார். தனியார் தொலைக்காட்சியில் நடனம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடுவராகவும் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் வை ராஜா வை படத்தில் கவுதம் கார்த்திக்-கின் அக்காவாக நடிக்கிறாராம்.

இப்படத்தில் கதாநாயகியாக பிரியா ஆனந்த் மற்றும் விவேக், டைரக்டர் எஸ்.எம்.வசந்த், ஜெய், பூர்ணிமா உள்பட பலர் நடிக்கிறார்கள். கவுதம் கார்த்திக்கின் அப்பாவாக இயக்குநர் வசந்த் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.