அழகுப் பராமரிப்பில் தேனின் பயன்கள்!!

honey-beauty

சிறு சிறு தேன் துளிகள் கூட சருமத்தை பாதுகாக்கும், இளமையாக வைத்துக் கொள்ளும். தேனானது சருமத்தை மென்மையாக்குவது மட்டுமன்றி அதனுடைய பாக்டீரியா எதிர்ப்புக் குணமும், ஈரமாக்கும் தன்மையும், சருமத்தின் குறைபாடுகளைப் போக்கி அதன் இளமைத் தன்மையைப் பேணுகின்றது.

பட்டுப்போன்ற மென்மையான கூந்தலுக்கு

ஒரு கிண்ணத்தில் இரண்டு மேசைக்கரண்டி தயிர், இரண்டு முட்டைகள்(வெள்ளைக்கரு மட்டும்), எலுமிச்சைச் சாறு ஐந்து துளி தேன் ஆகியவை கலந்து கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் படும்படி தேய்த்துக் கொள்ள வேண்டும்.

பின் அரை மணிநேரம் கழித்து தண்ணீரில் நன்றாக அலச வேண்டும். இதனால் கூந்தலானது பட்டுப்போல மென்மையாகி இருக்கும்.

பளபளப்பான கூந்தலுக்கு

தேனுடன் சிறிது ஒலிவ் எண்ணெய் கலந்து கூந்தல் மீது தடவி சிறிது நேரம் கழித்துத் தண்ணீரில் அலசினால் கூந்தல் பளபளப்புடன் இருப்பதைக் காண முடியும்.

முகத்தில் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு மேசைக்கரண்டி சர்க்கரை, சில துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

இதனை ஒரு கரண்டி கொண்டு நன்றாக அடித்துக் கலக்கிப் பசை போலாக்குங்கள். பின் இதனை அப்படியே ஒரு மைக்ரோவேவ் அவனில் மூன்று நிமிடங்கள் வைத்து சூடு செய்யுங்கள்.

பிறகு வெளியே எடுத்து கை சூடு தாங்கும் பதத்தில் வந்ததும் அதனை முகத்தில் முடி வளர்ந்துள்ள பகுதிகளில் தடவிக் கொள்ளுங்கள். குறிப்பாக முடியானது எந்த திசையை நோக்கி வளர்ந்துள்ளனவோ, அந்தத் திசைகளில் தடவ வேண்டியது முக்கியம்.

இப்போது ஒரு சுத்தமான பருத்தியால் ஆன துணி ஒன்றை எடுத்துக் கொண்டு முகத்தில் இக்கலவை தடவிய பகுதியின் மேல் போர்த்தி அழுத்தி எதிர்த்திசையில் இழுங்கள்.

இப்போது முகத்தில் உள்ள முடிகள் வேரோடு அகற்றப்பட்டுவிடும். இதனால் முகத்தில் நீண்ட காலத்திற்கு முடிகள் வளராமல், முகம் வழவழப்புடன் திகழும்.

முகத்திலுள்ள சரும மாசுக்கள் நீங்க

சிறிது தேன், கடலை மா, சந்தனம், பன்னீர் ஆகியவற்றைக் கலந்து கட்டியான பதத்திற்குக் கலந்து கொள்ளுங்கள். பின் இதனைக் கொண்டு முகம் மற்றும் கழுத்தில் மாஸ்க் போல பூசிக் கொள்ளுங்கள்.

சிறிது நேரம் நன்றாகக் காயவிடுங்கள். நன்கு காய்ந்ததும், முகத்திலிருந்து உரித்தெடுங்கள். இம் மாஸ்க்கானது முகத்திலுள்ள அழுக்குகளை நீக்குவது மட்டுமின்றி முகத்தை மென்மையாகவும் ஆக்கும்.

அதிலும் வாரமொரு முறையாவது இதனைச் செய்து வந்தால், நல்ல பலன் தெரியும்.

சூரிய ஒளியால் கருமை அடையும் சருமத்திற்கு

தேன், பால் பவுடர், எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் கலந்து கொள்ளுங்கள். பின் அதனை சூரிய ஒளியால் கருமை அடைந்த பகுதிகளில் இக்கலவையைத் தடவி, 20 நிமிடங்கள் ஊற வைத்து, அதன் பின் தண்ணீர் கொண்டு நன்கு அலசிவிடுங்கள்.

பொலிசார் என்னை அடித்து துன்புறுத்தினார்கள் : ஸ்ரீசாந்த்!!

sreesanth

பொலிசார் என்னை உடல் ரீதியாக வற்புறுத்தியதால் தான் வாக்குமூலம் கொடுத்தேன் என்று வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தற்போது கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இந்திய கிரிக்கெட் சபைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தான் அப்பாவி, தவறு செய்யவி்ல்லை என்று விளக்கியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, என்னை பொலிசார் தங்களது காவலில் வைத்திருந்தபோது உடல் ரீதியாக துன்புறுத்தினர். கட்டாயப்படுத்தினர்.

அதன் பேரில்தான் நான் வாக்குமூலம் அளிக்க நேர்ந்தது. மேலும் எனது உறவினர்களையும் கைது செய்வோம் என்று மிரட்டினர். நான் காவல்துறையினரிடம் விருப்பப்பட்டு வாக்குமூலம் எதையும் அளிக்கவில்லை. மனரீதியாக, உடல்ரீதியாக என்னை பொலிசார் துன்புறுத்தினர்.

ஏற்கனவே எழுதி வைத்திருந்த அறிக்கைகளில் கையெழுத்து வாங்கினர்.
பொலிசார் கொடுத்த அறிக்கைகள் அடிப்படையில்தான் நான் குற்றம் செய்தவன் என்று கிரிக்கெட் வாரிய விசாரணை அதிகாரி முடிவு செய்திருக்கின்றனர்.

ஆனால் இதை ஏற்க முடியாது. காவல்துறையினரின் விசாரணை முறைகள் கட்டாயத்தின் பேரில் இருந்தன என்பதால் அதை வாரியம் ஏற்கக் கூடாது. சூதாட்டம் தொடர்பாக நான் யாருடனும் பேசியதை காவல்துறை இடைமறித்துக் கேட்கவில்லை. அதுதொடர்பான ஆதாரம் அவர்களிடம் இல்லை.

என் மீதான காவல்துறையின் குற்றச்சாட்டு நியாயமற்றது. நான் லஞ்சம் வாங்கியதற்கும், கொடுத்ததற்கும், பணம் பெற்றதற்கும் எந்த ஆதாரமும் இல்லை என்றும் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதே உண்மை எனவும் கூறியுள்ளார்.

பாடசாலைப் பேருந்தில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்!!

childabuse

மும்பையில் பாடசாலை பேருந்து ஒன்றில் 4 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக சிறுமி அளித்த தகவல்படி அந்த பஸ்ஸின் நடத்துனரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தானேவில் உள்ள ஒரு பாடசாலை பஸ் ஒன்றில் வகுப்பு முடிந்து 4 வயது சிறுமியும் அவளது தோழியும் அமர்ந்துள்ளனர். பிற மாணவர்களுக்கு வகுப்பு முடியாததால் இவர்கள் இருவர் மட்டுமே அந்த பஸ்ஸில் இருந்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட பஸ்ஸின் 26 வயது நடத்துனர் அந்த சிறுமியை பஸ்ஸின் கடைசி இருக்கைக்கு அழைத்துள்ளார்

சிறுமியும் அங்கு சென்றுவிட அந்த நபர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளான். சிறுமியின் தோழி அவளை பாதுகாக்க முயன்றப்போது, நடந்தவற்றை யாரிடமாவது கூறினால் இரண்டு பேரையும் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார்

இதனால் பயந்துப்போன சிறுமிகள் இருவரும் யாரிடமும் இது குறித்து பேசவில்லை. இந்நிலையில் சிறுமியை உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து சிறுமி தனக்கு நேர்ந்த அவலத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுமியின் பாடசாலை பஸ்ஸின் நடத்துனரை கைது செய்யப்பட்டு அவனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருமண பந்தத்தில் இணைந்தார் தமிழக வீரர் பாலாஜி!!

balaji

சென்னையை சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் பாலாஜிக்கும் மொடல் அழகி பிரியா தலூருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
பாலாஜி – பிரியா தலூர் திருமணம் சென்னையில் மிகவும் எளிமையாக நடந்தது. முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு போட்டிகளில் விளையாடுவதால் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

இந்திய கிரிக்கெட் சபை தலைவர் பதவியில் ஒதுங்கி இருக்கும் என்.சீனிவாசன் வீரர்கள் முரளிவிஜய், பத்ரி நாத், அனிருத் ஸ்ரீகாந்த் உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினார்கள். 31 வயதான பாலாஜி ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

முதல் 3 ஐ.பி.எல். போட்டியிலும் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். வேகப்பந்து வீரரான அவர் 8 டெஸ்ட், 30 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடி உள்ளார்.

கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச போட்டியில் ஆடினார். நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடி இருந்தார். தற்போது தமிழக அணிக்காக முதல்தர போட்டியில் விளையாடி வருகிறார்

இன்று முதல் சினிமா படப்பிடிப்பு 7 நாட்களுக்கு ரத்து : நடிகர், நடிகைகள் நடன ஒத்திகை!!

cinema 100

இந்திய சினிமா நூற்றாண்டு விழா வரும் 21ம் திகதி முதல் 24ம் திகதி வரை சென்னையில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முதல் அமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். நிறைவு விழாவில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பங்கேற்கிறார்.

நூற்றாண்டு விழாவையொட்டி 21ம் திகதி மாலை 5.30 மணிக்கு தமிழ், நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சியும் 22ம் திகதி காலை கன்னட நடிகர், நடிகையர் கலை நிகழ்ச்சியும் 22ம் திகதி மாலை தெலுங்கு நடிகர், நடிகையர் கலை நிகழ்ச்சியும் 23ம் திகதி காலை மலையாள சினிமா உலகினர் கலை நிகழ்ச்சியும் நடக்கின்றன.

நயன்தாரா, திரிஷா, ஸ்ரேயா, காஜல்அகர்வால், ஹன்சிகா, அனுஷ்கா, தமன்னா, சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடனம் ஆடுகின்றனர்.

நூற்றாண்டு விழாவை யொட்டி சினிமா படப்பிடிப்புகள் இன்று முதல் 24ம் திகதி வரை 7 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது. வெளியூர் படப்பிடிப்புகளில் இருக்கும் நடிகர் நடிகைகள் நேற்று இரவே சென்னை திரும்பினர்.

பாகிஸ்தானில் காதலில் ஈடுபட்ட பெண் உட்பட மூவர் சுட்டுக்கொலை!!

pak

பாகிஸ்தானின் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணும் அவருக்கு உதவிய மேலும் இரு பெண்களும் சுட்டு கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.

இங்கு நீதிமன்றம், காவல்துறைக்கு மதிப்பில்லை. உள்ளூர் பஞ்சாயத்தின் மூலமே தண்டனை வழங்கப்படுகிறது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஜவாகி பகுதியைச் சேர்ந்த சாதியா(22), திருமணத்திற்குப் பின் கராச்சியில் வசித்து வந்தார்.

திருமணம் முடிந்து இரு ஆண்டுகளுக்குப் பின் கள்ளத் தொடர்பு காரணமாக மற்றொருவருடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
சாதியாவை கடத்திச் சென்றதாக அவரது உறவினர்கள் கராச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து இருவரையும் தேடிக் கண்டுபிடித்த பொலிஸார் சாதியாவை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே ஜவாகி பகுதியை சேர்ந்த பஞ்சாயத்தார் சாதியா வீட்டை விட்டு ஓடி போனது குறித்து விசாரித்தனர்.

இந்த குற்றத்துக்காக சாதியாவையும் அவருடைய அத்தை மற்றும் ஒன்றுவிட்ட சகோதரியையும் சுட்டுக் கொல்ல பஞ்சாயத்து உத்தரவிட்டது. கடந்த 13ம் திகதி மூன்று பெண்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

தயாரிப்பாளர் சங்க தலைவராக செயல்பட கேயாருக்கு தடை : உயர் நீதிமன்றம் உத்தரவு!!

kr

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் கடந்த 7ம் திகதி சென்னையில் நடந்தது. தலைவர் பதவிக்கு கேயார், கலைப்புலி தாணு போட்டியிட்டனர். இதில் தலைவராக கேயார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவர் பொறுப்பு ஏற்று பணிகளை கவனித்து வந்தார்.

தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கலைப்புலி தாணு குற்றம் சாட்டினார். சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் விதிப்படி நடைபெறவில்லை.

தேர்தல் சம்பந்தமாக விளம்பரங்கள் செய்யக்கூடாது என்று விதி உள்ளது. அதை மீறி பத்திரிகைகளில் விளம்பரங்கள் கொடுத்துள்ளனர். இது போல் சங்க விதிகள் பல மீறப்பட்டு உள்ளன. எனவே கேயார் தலைவராக செயல்பட தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதாகர் தயாரிப்பாளர் சங்க தலைவராக கேயார் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

சிறுமியை பலாத்காரம் செய்த 5 சிறார்கள் கைது!!

abuse

இந்திய அஸ்ஸாமின் குவஹாத்தி நகரில் சிறுமி ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளது. இந்த ஐந்து பேரும் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது.

ஐந்து பேரும் அச்சிறுமியின் நண்பர்களாம். சிறுமி தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அருகே அழைத்துச் சென்று நாசப்படுத்தியுள்ளனர். குற்றம் இழைத்த ஐந்து பேருக்கும் 15 முதல் 16 வயது.

ஐந்து பேரும் பிடிபட்டுள்ளனர். அவர்களுக்கு வயதை நிர்ணயிக்கும் எலும்பு மஜ்ஜை சோதனைக்கு பொலிஸார் முடிவு செய்துள்ளனர். அந்த சிறுமிக்கு மயக்க ம ருந்து கொடுத்து அருகில் உள்ள மறைவான இடத்திற்குக் கூட்டிச் சென்று ஐந்து பேரும் பலாத்காரம் செய்துள்ளனர்.

மாலை தொடங்கி இரவு முழுவதும் அட்டூழியம் செய்துள்ளனர். அடுத்த நாள் காலையில்தான் சிறுமி கண்டெடுக்கப்பட்டாள். காயமடைந்த நிலையில் கிடந்த சிறுமியை பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இப்போது இந்த ஐந்து சிறார்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் கூட அவர்களுக்கு அதிகபட்சம் 3 வருட கால சிறார் சீர்திருத்த முகாமில் அடைக்கப்படும் தண்டனைதான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp பாவனையாளரா நீங்கள்?? எச்சரிக்கை!!

WhatsApp

Smart Phone களுக்கான WhatsApp Application மூலம் Priyanka எனும் ஒரு தீய செய்நிரல் பரவி வருகின்றது. நீங்களும் WhatsApp பாவனையாளர் எனின் சற்று அவதானமாக இருக்கவும்.

இது Whatsapp மூலமாக உங்கள் மொபைலுக்கு ஒரு Contact வடிவில் வரும். இதனை நீங்கள் Contact ஆக சேமித்துவிட வேண்டாம். மீறி சேமித்து விட்டால் இது உங்கள் மொபைலில் தனது கை வரிசையை காட்ட ஆரம்பித்து விடும்.

இதனை நீங்கள் சேமித்துவிட்டால் உங்கள் Contact இல் சேமித்திருக்கும் அனைத்து இலக்கங்களையும் Priyanka என மாற்றிவிடுகின்றது.
whats

Priyanka என்றோ அல்லது வேறு சந்தேகத்துக் கிடமாகவோ வரும் Contact அல்லது கோப்புக்களை சேமிக்காதீர்கள். தெரிந்தோ தெரியாமலோ அவ்வாறு சேமித்திருந்தால் Settings இல் இருக்கும் Application Manager ஊடாக சென்று WhatsApp Application ஐ தெரிவு செய்து Force stop என்பதனை சுட்டிய பின் Clear Data என்பதனை சுட்டுங்கள் அவ்வளவு தான்.

எது எப்படியோ உங்களது அனுமதியின்றி இதனால் தன்னைத்தானே சேமித்துகொள்ள முடியாது எனவே சற்று அவதானத்துடன் இருப்பதன் மூலம் உங்களை நீங்கள் பாதுகாத்திடலாம்.

திடீர் மின்தடையால் நடந்த விபரீதம் : துண்டான ஆசிரியையின் விரல்கள்!!

fingers

தமிழ்நாட்டில் ஏற்பட்ட திடீர் மின் தடையால் ஆசிரியர் ஒருவரின் விரல்கள் துண்டான பரிதாப சம்பம் நடைபெற்றுள்ளது.

அரக்கோணத்தைச் சேர்ந்தவர் ரொபட். சென்னையில் உள்ள தனியார் நிறுவன அலுவலர். அவரது மனைவி பிளாரன்ஸ்(39). இவர் அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசியராக பணியாற்றி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு காலையில் வேலைக்கு கிளம்பும் கணவருக்காகவும் பள்ளிக்கு செல்லும் தனக்கும் பிள்ளைகளுக்கும் உணவு தயாரிப்பதில் மும்முரமாக இருந்துள்ளார். குழம்புக்கு தேவையான மசாலா பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்துக்கொண்டிருக்கையில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது.

வேலைக்கு தயாராகும் நேரத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டதில் எரிச்சலான பிளாரன்ஸ் மிக்சியில் இருந்த மசாலாவை எடுத்து அம்மியில் அரைக்க முடிவு செய்துள்ளார். அதற்காக மசாலாவை மிக்சியில் இருந்து வழித்து எடுத்த போது திடீரென மின்சாரம் வந்தது. அதனால் மிக்சி பிளேட்கள் சுழல ஆரம்பித்தன.

அதில் மசாலாவை வழித்துக் கொண்டிருந்த பிளாரன்ஸ் விரல்கள் பிளேடில் சிக்கி துண்டாகியது. வலது கையில் உள்ள 4 விரல்களின் முனைகளும் துண்டான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சேதமடைந்த விரல் முனைகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.

மின்தடை ஏற்பட்டதும் சுவிட்சை அணைக்காமல் மிக்சியை பயன்படுத்தியதால் வந்த பிரச்னை. எப்போது போகும் என்று தெரியாத மின்சாரம் மீண்டும் எப்போது வரும் என்று தெரியாத நிலையில் அப்பாவி பொதுமக்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எனவே மின்தடை ஏற்பட்டதும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மிக்சி, கிரைண்டர், அயன் பொக்ஸ், டிவி, ரேடியோ, வாஷிங் மெஷின் ஆகியவற்றை நிறுத்தி விடுவது நல்லது. இல்லாவிட்டால் பொருட்களுக்கு மட்டுமல்ல அவற்றை பயன்படுத்துபவர்களுக்கும் ஆபத்து.

கனடாவிற்குள் நுழைபவர்களுக்கு புதிய சட்டம் அறிமுகம்!!

canada

இலங்கை உட்பட பல நாடுகளிலில் இருந்து வருகை தரும் பயணிகள் தொடர்பாக புதிய சட்டமொன்றினை இந்த ஆண்டின் இறுதியில் கனடா அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனேடிய ஊடகம் இவ்வாறு தகவல் வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த முறையின் கீழ் மாணவர் மற்றும் தொழிலாளர் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது, கைரேகை மற்றும் புகைப்படங்களை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்ட தொடக்கமாக ஒக்டோபர் 23ம் திகதி அல்பேனியா, அல்ஜீரியா, காங்கோ ஜனநாயக குடியரசு, எரித்திரியா, லிபியா, நைஜீரியா, சவுதி அரேபியா, சோமாலியா, தென் சூடான், சூடான் மற்றும் டுனீஷியா ஆகிய நாடுகளிலும் இறுதியாக டிசம்பர் 11ம் திகதி இலங்கையில் தொடங்கவுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் இந்த புள்ளியியல் மூலம் பிற நாடுகளில் இருவர் வருகை தந்து விசா இல்லாமல் தங்கியிருப்போர், அகதிகள், மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாமல் பிற நாடுகளில் தங்கியிருக்கும் மக்களின் விகிதங்களை கண்டு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு கனடாவின் குடிவரவு முறைமை பாதுகாத்தலின் ஒரு பகுதியாக எல்லை நுழைவில் இறுக்கமான சட்டம் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சம்பியன்ஸ் தொடருடன் ஓய்வு பெறும் கிரிக்கெட்டின் ஜம்பவான்கள்!!

dravid_sachin300

சம்பியன்ஸ் லீக் T20 தொடருடன் குறைந்த ஓவர் போட்டியில் இருந்து சச்சின், டிராவிட் ஓய்வு பெறுகின்றனர். இதற்கு பின் கிரிக்கெட் களத்தில் இவர்களை வண்ண சீருடையில் காண இயலாது.

ஐந்தாவது சம்பியன்ஸ் லீக் T20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் செப்டம்பர் 21ம் திகதி தொடங்குகிறது. இந்தியா சார்பில் ஐ.பி.எல் தொடர் நடப்பு சாம்பியன் மும்பை, சென்னை, ராஜஸ்தான், அவுஸ்திரேலியாவின் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், மேற்கிந்திய தீவுகளின் டிரினிடாட் அண்டு டுபாகோ உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக பங்கேற்கும்.

ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் டெஸ்டில் பங்கேற்று வருகிறார். ஐ.பி.எல் தொடரில் மும்பை அணியின் நட்சத்திர வீரராக உள்ளார். டிராவிட்டை பொறுத்தவரை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றுவிட்டார்.

ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு அணித்தலைவராக உள்ளார். இருவரும் தற்போதைய சம்பியன்ஸ் லீக் தொடருடன் குறைந்த ஓவர் போட்டியில் இருந்து முழுமையாக விடைபெற உள்ளனர்.

இத்தொடருக்குப் பின் சச்சின், டிராவிட்டை வண்ண சீருடையில், மைதானத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காது. இதனால் ஐந்தாவது சம்பியன்ஸ் லீக் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தொடரில் பங்கேற்கும் மேலும் 2 அணிகளை தெரிவு செய்ய இன்று முதல் 20ம் திகதி வரை தகுதி போட்டிகள் நடக்கின்றன.
இதில் இந்தியாவின் ஐதராபாத், நியூசிலாந்தின் ஒடாகோ வோல்ட்ஸ், இலங்கையின் கந்துரட்ட மரூன்ஸ் மற்றும் பாகிஸ்தானின் பைசலாபாத் உல்வ்ஸ் என்று 4 அணிகள் விளையாடுகின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் செப்டம்பர் 21ம் திகதி தொடங்கும் முக்கிய சுற்றுக்கு முன்னேறும்.

போலீஸ் பாதுகாப்பு கேட்டு குமரிமுத்து நீதிமன்றத்தில் மனு!!

kumarimuthu

நடிகர் குமரிமுத்து சென்னை நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது..

நடிகர் சங்க சொத்துக்களை குத்தகைக்கு விட்டதில் முறைகேடு நடந்ததாக தெரிவித்து இருந்தேன். இதையடுத்து நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினரில் இருந்து என்னை நீக்கி உள்ளனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி இதை மறு பரிசீலனை செய்யும்படி நடிகர் சங்கத்தில் கோரிக்கை விடுத்தேன். அது பரிசீலிக்கப்படவில்லை.
எனவே, நாளை நடைபெறும் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று எனது கோரிக்கையை தெரிவிக்க உள்ளேன்.

எனவே எனக்கு தகுந்த பொலிஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடும் படி கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

உலகின் மிக உயரமான விமான நிலையம் சீனாவில் திறப்பு!!

china

திபெத்தில் 4334 மீட்டர் உயரத்தில் இருக்கும் பாங்டா விமான நிலையமே உயரமான இடத்திலிருந்து செயல்படும் விமான நிலையம் என்ற பெருமையை இதுவரை பெற்றிருந்தது. தற்போது சுற்றுலாத்துறையை விஸ்தரிக்கும் வண்ணமும் நாட்டின் மேற்குப் பகுதியில் நடைபெறும் அரசியல் அமைதியின்மையைக் கண்காணிக்கவும் 4411 மீட்டர் உயரத்தில் புதிய விமான நிலையம் ஒன்றினை சீனா அமைத்துள்ளது.

டயோசெங் யாடிங் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையம், உயரமான இடத்தில் அமைந்துள்ள முதல் விமான நிலையம் என்ற பெருமையைப் பெறுகின்றது.

இத்தகைய உயரத்தில் விமானத்தின் உந்துசக்தி குறைவாக இருக்கும் என்பதால் நீளமான ஓடுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள 4200 மீட்டர் நீளமுள்ள ஓடுபாதை நியூயோர்க்கின் ஜோன் எப் கெனடியில் உள்ளதைவிட 242 மீட்டர்தான் குறைவாக உள்ளது. பயணிகளுக்கும்கூட காற்றழுத்தக் குறைவினால் வரும் நோய்கள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் இந்த புதிய விமான நிலையத்திலிருந்து பயண சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. பொதுவாக இங்கிருந்து பேருந்து மூலம் சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்டுவிற்குச் செல்ல இரண்டு நாட்கள் பிடிக்கும். இந்த விமானப் பயணம் அதனை 65 நிமிடங்களாக குறைக்கின்றது. இந்த மாத இறுதிக்குள் மற்ற சேவைகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திபெத்தின் நுழைவாயிலாக விளங்கும் இந்தப் பகுதியின் கீழ் வாழும் திபெத்திய மக்களின் மத்தியில் உள்ள எதிர்ப்பைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சியை நிலைப்படுத்தி ஒரு சுற்றுலாப் பகுதியாக இந்த இடத்தை மேம்படுத்த சீனா முயன்று வருகின்றது.

காமெடி நடிகர் பிளாக் பாண்டி பட்டதாரி பெண்ணை மணக்கிறார்!!

pandy

பிரபல காமெடி நடிகர் பிளாக் பாண்டி. இவர் கில்லி, ஆட்டோகிராப், அங்காடி தெரு, தெய்வத்திருமகள், வேலாயுதம், நீர்பறவை, மாசாணி உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது 10க்கும் மேற்பட்ட புதுப்படங்களில் நடித்து வருகிறார். பிளாக் பாண்டிக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மணப்பெண் பெயர் உமேஸ்வரி பத்மினி. எம்.பி.ஏ. பட்டதாரி. இவர்கள் திருமணம் டிசம்பர் 1ம் திகதி சென்னை நூறடி சாலையில் உள்ள ஐஸ்வர்யா மஹாலில் நடக்கிறது. இது காதல் திருமணம் ஆகும்.

இதுகுறித்து பிளாக் பாண்டி கூறும்போது கனா காணும் காலங்கள் தொடரில் நடித்தபோது ஒரு ரசிகையாக உமேஸ்வரி பத்மினி எனக்கு அறிமுகமானார். நட்பாக பழகினோம். பிறகு காதல் மலர்ந்தது. 7 வருடங்களாக காதலிக்கிறோம்.

இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று காத்து இருந்தோம். தற்போது அவர்கள் சம்மதம் கிடைத்துள்ளது. திருமணம் செய்து கொள்ள போகிறோம். என் தாத்தா காமெடி நடிகர் பபூன் சொக்கலிங்கம் ஆவார்.

என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஆர்.மகாலிங்கம், தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோருடன் பழகியுள்ளார். என் தந்தை எம்.சி.சேகர் தமிழக அரசின் நாடக பிரிவில் நடிகராக பணியாற்றியுள்ளார்.
நான் ஏற்கனவே குறும்படங்களுக்கு இசையமைத்துள்ளேன். தற்போது எஸ்டாட் என்ற பெயரில் ஸ்டூடியோ துவங்கியுள்ளேன். விரைவில் படங்களுக்கு இசையமைப்பேன். இயக்குனரகவும் ஆவேன் என்று கூறினார்.

எவ்வகையான போட்டியானாலும் விக்கெட் எடுப்பதே முக்கியம் : ஹர்பஜன் சிங்!!

Harbhajan Singh

டெஸ்ட் மற்றும் T20 உள்ளிட்ட எந்த வகையான கிரிக்கெட் போட்டியானாலும் அதில் விக்கெட் எடுப்பதே முக்கியம் என்று சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

சம்பியன்ஸ் லீக் T20 போட்டியில் பங்கேற்கும் மும்பை இண்டியன்ஸ் அணிக்காக ஹர்பஜன் விளையாட உள்ளார். அதற்காக ஆமதாபாதில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் தொலைபேசி மூலம் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியது:

ஒரு நாள் ஆட்டம் T20 மற்றும் டெஸ்ட் உள்ளிட்ட போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதே என் விருப்பம். வெற்றி பெறுவதில் மாற்றம் இருக்கப் போவது இல்லை. எல்லா விதமான போட்டிகளிலும் விக்கெட் எடுப்பது மட்டுமே முக்கியம். சர்வதேச ஆட்டங்களில் விளையாடும் வேட்கை என்னிடம் இன்னும் உள்ளது. ஆனால், நான் அடுத்து எந்த ஆட்டத்தொடரில் விளையாடுகிறேனோ அதில் மட்டுமே என் முழுகவனம் இருக்கும்.

எந்த வெற்றியாக இருந்தாலும் நமக்கு உத்வேகத்தை அளிக்கும். அதுபோல் எனக்கு 2011 ஆம் ஆண்டு சம்பியன்ஸ் லீக் ஆட்டத் தொடரில் என் தலைமையில் மும்பை இண்டியன்ஸ் பெற்ற வெற்றிகள் என்னால் மறக்க முடியாதவை.

இதுவரை எனது ஆட்டத்தை தொலைக்காட்சியில் பார்த்தது கிடையாது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றப் பின்பே என் சாதனைகளை தொலைக்காட்சியில் முன் அமர்ந்து ரசிப்பேன் என்றார்.