திருமலை மாவட்ட புலிகள் இயக்க முன்னாள் தலைவர் பதுமன் விடுதலை!!

pathuman

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட முன்னாள் தலைவர் சுப்ரமணியம் வரதநாதன் எனப்படும் பதுமன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இவர் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் அனைத்திலும் இருந்து விடுபட்டு பதுமன் இன்று விடுதலையாகியுள்ளார். திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.அமல் ரணராஜா இந்த விடுதலை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பதுமன் 2002ம் ஆண்டு புலிகள் இயக்க திருகோமலை தலைவராக செயற்பட்டதாகக் கூறப்படுகிறது. கருணா அம்மானுடன் இணைந்து புலிகளுக்கு எதிராக செயற்பட்டதாகக் கூறி புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பதுமனை வவுனியாவிற்கு அழைத்து சிறை வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பதுமன் பொது மக்களுடன் சேர்ந்து அரச படைகளிடம் சரணடைந்துள்ளார். 1979 இலக்க 48 என்ற சட்டத்தின் கீழ் பதுமன் மீது பயங்கரவாத தடுப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. புலிகள் இயக்கத்தில் இருந்து இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தி படை வீரர்களை கொன்றதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பதுமன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பதால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் பயங்காரவாத தடுப்புப் பிரிவினர் சார்பில் அரச சட்டத்தரணி சுகந்தி கந்தசாமி ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வாக்காளர் அட்டை கிடைக்காவிட்டாலும் வாக்களிக்கலாம்!!

ele

வடமாகாண சபைத் தேர்தலில் உங்களுக்குரிய வாக்காளர் அட்டை இது வரையில் கிடைக்கவில்லையா? அப்படிக் கிடைக்காவிட்டாலும் கூட உங்கள் தேசிய அடையாள அட்டையுடன் சென்று வாக்களிக்க முடியும்.

தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டால் தற்காலிக அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப் பத்திரம், கடவுச்சீட்டு, முதியோர் அ. அட்டை, ஓய்வூதிய அ.அட்டையுடனும் சென்று வாக்களிக்கலாம்.
என்று அறிவித்துள்ளார் வடமாகாண பிரதித் தேர்தல்கள் ஆணையாளர்.

எதிர்வரும் சனிக்கிழமை வடமாகாண சபைத் தேர்தல் நடைபெறும் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலின் பிரகாரமே இந்தத் தேர்தல் இடம்பெறவுள்ளது. நேர காலத்துடன் ஒதுக்கப் பட்ட வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்கைப் பதிவு செய்து கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வட­மா­கா­ண­சபைத் தேர்தலை ­நி­றுத்­துமாறு­ கோரும் மனுக்கள் மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றில்!!

SLCourt

வட­மா­கா­ண­சபைத் தேர்­தலை இடை­நி­றுத்­து­மாறு தமிழ் தேசி­யக் ­கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­திற்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள மனுக்கள் குறித்து இன்­றைய தினம் உயர் நீதி­மன்றில் விசாரணை நடைபெறவுள்­ளது.

வடமாகாண சபைக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக இதுவரை ஐந்து அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அரசியல் அமைப்பினை மீறி உள்ளதாக உத்தரவிட வேண்டும். அத்துடன் இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு வழங்கப்படும் வரை இடைக்கால நிவாரணமாக வடமாகாணசபைத் தேர்தலை இடைநிறுத்துமாறு உத்தரவிட வேண்டுமென்றும் இந்த மனுக்களில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுக்களை தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தேசப்பற்றுள்ள பௌத்த முன்னணி, சுவர்ண ஹன்சா மன்றம், பெளத்த மகா அமைப்பு, யாழ். பௌத்த முன்னணி ஆகிய ஐந்து அமைப்புக்களே தாக்கல் செய்துள்ளன.

தமிழ் தேசி­யக் ­கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­திற்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள இந்த மனுக்­களில் வட­மா­கா­ண­சபைத் தேர்­தலை இடை­நி­றுத்­து­மாறு இடைக்­கால நிவா­ரணம் கோரப்பட்டுள்ளமை­யினால் அது குறித்து இன்­றைய தினம் உயர் நீதி­மன்றம் விசா­ரணை நடத்­த­வுள்­ளது.

தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­பனம் இலங்­கையின் ஒரு­மைப்­பாட்டை மீறு­வ­துடன் தனி நாட்­டுக்­கான பாதை­யாக அமைந்­துள்­ளது. இலங்கை தமி­ழ­ர­சுக்­ கட்­சி­யி­னதும் தமிழ் தேசி­யக் ­கூட்டமைப்­பி­னதும் நோக்கம் இலங்­கையின் ஆட்­பு­லத்தில் ஒரு தனி நாடு அமைப்­ப­தென நீதி­மன்றம் வெளிப்­ப­டுத்த வேண்டும் என்றும் அந்த மனுக்­களில் கோரப்­பட்­டுள்­ளன.

வெனிசுலா சிறையில் 15 கைதிகள் வெட்டிக் கொலை!!

veniz

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மேற்கில் உள்ள மராகாய்போ நகரின் சிறையில், திங்கள் இரவு முதல் இரு வேறு கும்பல்களை சேர்ந்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

இந்த கலவரத்தில் சிறைக்கைதிகள் 15 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் தலைகள் வெட்டப்பட்டும், உடல்களை கூறும் போட்டும் கொல்லப்பட்டுள்ளனர்.

மற்றொரு இடத்தில் நடந்த மோதலில் இன்னொருவரும் கொல்லப்பட்டார். இங்கு சிறைகளில் கைதிகளின் கூட்டம் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது.

சபானிடா சிறையில் 4000 கைதிகள் அதாவது அதன் கொள்ளளவை காட்டிலும் நான்கு மடங்கு அதிகமானோர் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். வெனிசுலாவில் சிறைக்கலவரத்தில் மட்டும் வருடத்திற்கு குறைந்தது 500 கைதிகள் கொல்லப்படுகின்றனர் என்று கூறப்படுகிறது.

 

பாடசாலை வகுப்பறையிலேயே ஆண் குழந்தைக்கு தாயான ஆசிரியை!!

uk

லண்டனில் உள்ள ஒரு பாடசலையில் இந்தியாவை சேர்ந்த டயானா கிரிஷ் (30) ஆசிரியையாக பணி புரிகிறார். இவரது கணவர் பெயர் விஜய் வீரமணி (31). இவர்களுக்கு ஒன்றரை வயதில் நோவா என்ற ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில் டயானா மீண்டும் கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியான அவர் பிரசவத்துக்காக கடந்த வெள்ளிக்கிழமை முதல் விடுப்பு எடுப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு முதல் நாள் அன்றே டயானாவுக்கு பாடசாலை வகுப்பறையிலேயே ஆண் குழந்தை பிறந்தது.

அன்று பாடசலைக்கு சென்ற டயானா தலைமை ஆசிரியர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு இடுப்பு வலி ஏற்பட்டது. உடனே இதுகுறித்து சக ஆசிரியைகளிடம் தெரிவித்த டயானா கணவர் விஜய்க்கும், உடனே வந்து தன்னை வீட்டுக்கு அழைத்துச்செல்லுமாறு தொலைபேசியில் கூறினார்.

அவரும் விரைந்து பாடசாலைக்கு சென்றார். இதற்குள் டயானாவுக்கு வலி அதிகரித்தது. சக ஆசிரியைகள் அம்புலன்ஸ் வாகனத்துக்கு அழைப்பை மேற்கொண்டனர். அம்புலன்சும், கணவரும் வருவதற்கு முன்னதாக வகுப்பறையில் படுக்க வைக்கப்பட்டிருந்த டயானாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைக்கு ஜோனா என்று பெயர் சூட்டப்பட்டது. இதனால் பிரசவம் நடந்த வகுப்பறைக்கும் பாடசாலை நிர்வாகம் ஜோனா வகுப்பறை என்று பெயர் சூட்டியது.

பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பெண் 15 நாட்களின் பின் உயிருடன் மீட்பு!!

well

சீனாவின் ஹெனான் மாகாணம் ஜோங்பெங் கிராமத்தைச் சேர்ந்தவர் சூ கிஜியு (38). இவர் கடந்த 1ம் திகதி பிற்பகல் மூலிகை சேகரிப்பதற்காக காட்டிற்குச் சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனையடுத்து அவரை அவரது கணவர் தேட ஆரம்பித்தார்.

ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இதுபற்றி பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், காட்டுப்பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் அவர் விழுந்து கிடந்தது நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தீயணைப்பு படையினர் உடனடியாக அங்கு சென்று மயக்க நிலையில் கிடந்த சூ கிஜியூவை மீட்டனர். பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. உடலில் வெளிக்காயங்கள் எதுவும் இல்லை. ஆனால், நீண்டநாட்கள் பட்டினியாக கிடந்ததால் அவரால் பேச முடியவில்லை. திரவ உணவு மட்டுமே சாப்பிட முடிகிறது.

மூலிகை பறிக்கச் சென்ற சூ கிஜியு கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். ஒரு மீட்டர் விட்டமும், 4 மீட்டர் ஆழமும் கொண்ட அந்த கிணற்றின் சுவர் மிகவும் மென்மையாக இருந்ததால் அவரால் மேலே ஏற முடியவில்லை. அவர் வைத்திருந்த சோளத்தைச் சாப்பிட்டும் மழை நீரை குடித்தும் 15 நாட்கள் உயிர்வாழ்ந்துள்ளார்.

வௌ்ளைக் கொடி ஏந்தி இலங்கை அரசிடம் தஞ்சமடைய தமிழக மீனவர்கள் முடிவு!!

TNFishermen

இலங்கை சிறையில் அடைப்பட்டுள்ள நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்களை விடுவிக்க கோரி படகுகளில் வெள்ளை கொடி ஏந்தி இலங்கை அரசிடம் தஞ்சம் புகுவது என நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம், நாகை, அக்கரைப்பேட்டையில், நேற்று நடந்தது. கூட்டத்தில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில மீனவர்கள், அவர்களின் விசைப்படகுகளை மீட்க, மத்திய அமைச்சர் மூலம், பிரதமரை சந்தித்து கேட்டுக் கொள்வது; தமிழக மற்றும் புதுச்சேரி மாநில முதல்வர்களையும் சந்தித்து, மீனவர்களை மீட்க வலியுறுத்துவது.

காரைக்கால் மாவட்டம் முதல், ராமநாதபுரம் மாவட்டம் வரை, அனைத்து மீனவ கிராமங்களையும் ஒருங்கிணைத்து, மீன்பிடி விசைப்படகுகளில் வெள்ளைக் கொடி ஏற்றி, இலங்கை சென்று, தஞ்சம் அடைவது,

நாளை முதல், நாகை, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள விசைப்படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி, போராட்டத்தில் ஈடுபடுவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாண கோலத்தில் வீதியில் இருந்து தியானம் செய்த மாணவன் கைது!!

yoga

சீனாவில் நிர்வாண நிலையில் வீதியில் தியானத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவரை பொலிசார் கைது செய்தனர்.

சீனாவின் ஹெனான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ரஷ்ய மாணவர் ஒருவர் மக்கள் அதிகம் கூடும் முக்கிய வீதியில் திடீரென அமர்ந்து, தியானத்தில் ஈடுபட்டார். சற்று நேரத்தில் தன் உடைகளை ஒவ்வொன்றாக கழற்றிய அவர் நிர்வாணக் கோலம் பூண்டார்.

இதனால், அவ்வழியே சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  அதிகப்படியான மக்கள் இதை வேடிக்கை பார்க்க ஒன்று கூடியதால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நிர்வாண நிலையில் தியானம் செய்துகொண்டிருந்த மாணவரை சிலர் தங்கள் மொபைல் மற்றும் கமராக்களில் படம் பிடித்தனர்.

இரைச்சல் அதிகம் ஆனதால் தியானம் கலைந்து கண் விழித்த மாணவர், பொதுமக்களை அங்கிருந்து சென்று விடுமாறு மிரட்டினார். தன்னை படம் எடுத்தவர்களை தாக்க முற்பட்டார். இதையடுத்து, அங்கு வந்த பொலிசார், கூட்டத்தை கலைத்து, மாணவரை அங்கிருந்து எழுந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

எனினும், மாணவர் அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டார். வேறு வழியின்றி, அந்த மாணவரை பொலிசார் கைது செய்தனர்.

தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு!!

election

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று(18) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுபெறுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

இவ்வேளை தேர்தல் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று நள்ளிரவின் பின்னர் கட்சிகளோ அல்லது சுயேச்சைக் குழுக்களோ தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கக் கூடாது என்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலமான தேர்தல் பிரசாரங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவின் பின்னர் அரசியல் விளம்பரங்கள் மற்றும் அறிக்கைகள் ஊடகங்களில் ஒலி, ஒளிபரப்புவது தடைசெய்யப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் நிலையில் இறுதிநேரப் பிரசாரங்களில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. பெரும்பாலான கட்சிகளின் இறுதிக் கூட்டங்கள் இன்று மாலை இடம்பெறுகின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கண்டியில் நடைபெறவுள்ளது. இதில் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் வென்னப்புவவிலும், ஜே.வி.பி யின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் தலைமையில் கண்டி அக்குறணையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டம் பருத்தித்துறையிலும் நடைபெறவுள்ளன.

காலியில் இரசாயன வாயுவை சுவாசித்த 54 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

hos

காலி பத்தேகம, இதிகஸ்கெடிய பிரதேசத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் 54 பேர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த தொழிற்சாலையை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் இரசாயன திரவம் ஒன்றின் வாயுவை சுவாசித்தமையின் காரணமாக இவர்கள் சுகவீனம் அடைந்துள்ளனர். நேற்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் பத்தேகம மற்றும் கராபிட்டிய வைத்திசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் இவர்களின் நிலை தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கடல் எல்லையில் இலங்கை மீனவர்கள் ஐவர் கைது!!

fishermen

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் ஐந்து பேரை கடலோர இந்திய கடலோர பொலிஸார் கைது செய்து படகினை பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி பகுதியில் உள்ள கடலோர காவல் படையினர் கமாண்டோ ஆனந்த குமார் தலைமையில் கடல் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுட்டு கொண்டிருந்தனர்.

கன்னியாகுமரியில் இருந்து 75 கடல் மைல் தொலைவில் இலங்கை மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்து கொண்டிருந்ததால் கடலோர காவல் படையினர் படகினை மடக்கினர்.

படகில் இருந்த இலங்கை மீனவர்கள் ஐந்து பேரை கைது செய்தனர். படகினை பறிமுதல் செய்து தூத்துக்குடிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

டோனியிடம் கெஞ்சிய பொலிசார்!!

dhoni

தினமும் அதிகாலையில் டோனி பைக்கில் செல்வதை தயவு செய்து தங்களிடம் தெரிவியுங்கள் என்று அவரது குடும்பத்தினருடன் பொலிசார் கேட்டுள்ளனர்.

பைக் மீது ஆர்வம் கொண்ட அணித்தலைவர் டோனி 12க்கும் மேற்பட்ட ரகங்களில் பைக்குகள் வைத்துள்ளார். தற்போது போட்டிகளில் இல்லாமல் ராஞ்சி வீட்டில் தங்கியுள்ளார். 32 வயதான டோனி தினமும் அதிகாலையில் தனது பைக்கில் வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறார்.

நேராக அருகிலுள்ள பிர்சா முண்டா மைதானத்துக்கு செல்லும் இவர் அங்கு இளம் வீரர்களின் கால்பந்து மற்றும் வில்வித்தை போட்டிகளின் பயிற்சிகளை பார்வையிடுகிறார். டோனியின் இந்த பைக் பயணம், உள்ளூர் பொலிசாருக்கு கூட தெரிவிக்கப் படவில்லையாம்.

இது குறித்து ராஞ்சியின் மூத்த பொலிஸ் அதிகாரி சாகேத் குமார் சிங் கூறுகையில் டோனி தினமும் காலையில் பைக்கில் சுற்றுகிறார்.
இது பிரச்னையில்லை. ஆனால், அவர் எங்கு சென்றாலும் தயவு செய்து எங்களிடம் தெரிவியுங்கள் என்று டோனி குடும்பத்தினரிடம் தெரிவித்தோம்.

ஏனெனில் அப்போது தான் அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வசதியாக இருக்கும் என்றார்.

அமெரிக்க அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளி பெண் நினா தீவிரவாதியா??

The 2014 Miss America Competition - Show

அமெரிக்காவில் நடைபெற்ற அழகி போட்டியில் 24 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த நினா வெற்றி பெற்றார். ஆனால் அவர் வெற்றி பெற்றதை தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.

இந்தியாவில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை பூர்வீகமாக கொண்ட தெலுங்கு பெண் நினா. இவரது தந்தை அமெரிக்காவில் மகப்பேறு மருத்துவராக பணி புரிகிறார். அமெரிக்கர் அல்லாத பொன்னிற கூந்தல் இல்லாத, நீல நிறக்கண்கள் இல்லாத இந்திய வம்சாவளி பெண் நினாவை அழகு ராணியாக தேர்ந்தெடுத்ததை சிலர் விரும்பவில்லை.

நினாவை குறித்து டுவிட்டர் இணைய தளத்தில் பல்வேறு கருத்துக்களை சிலர் வெளியிட்டுள்ளனர். அவை இனவெறியை தூண்டுபவையாக உள்ளன. அவற்றில் சிலர் இவரை அரேபியர் என்றும் கூறியுள்ளனர். இவரை அமெரிக்கர் என எற்றுக்கொள்ள முடியாது என்றும், இவர் அழகியாக தேர்வு பெற்றதை நம்ப முடியவில்லை எனவும் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

இதில் ஒரு நபர் அரேபியர் ஒருவர் மிஸ் அமெரிக்கா ஆகிவிட்டார் என்றும் இவரை அல்-கொய்தா அமைப்புடன் தொடர்பு படுத்தி தீவிரவாதி எனவும் வர்ணித்துள்ளார். அல்-கொய்தாவுக்கு வாழ்த்துக்கள் என்றும் தங்களது எரிச்சலை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் இவையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாத நினா தனது செயலை சேவையின் மூலம் வெளிப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொலிஸ் பாதுகாப்புடன் நடிகர் சங்க பொதுக்குழு இன்று கூடுகிறது : ரஜினி, கமலுக்கு அழைப்பு!!

nadikar sangam

கத்தின் வரவு –செலவு கணக்கு விவரங்கள் வெளியிடப்படவில்லை என நடிகர்களில் ஒரு கோஷ்டியினர் அதிருப்தி வெளியிட்டு உள்ளனர். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதிலும் சர்ச்சை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த பரபரப்பான சூழலில் நடிகர் சங்கத்தின் பொதுக்குழு இன்று மாலை 4 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் கூடுகிறது. பொதுக்குழு கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் ராதாரவி, துணைத்தலைவர்கள் விஜயகுமார், கே.என்.காளை, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

ஸ்ரீகாந்த், சிம்பு, சார்லி, சின்னி ஜெய்ந்த், நளினி, பாத்திமா, சி.ஐ.டி. சகுந்தலா உள்பட 24 செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்கிறார்கள். ரஜினி, விஜயகாந்த், கமல், விஜய், விக்ரம், அஜீத், சூர்யா, தனுஷ், நயன்தாரா, திரிஷா, நாசர் உள்பட 3 ஆயிரம் பேருக்கு பொதுக்குழுவில் பங்கேற்கும்படி அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

பொதுக்குழுவில் 2012 மற்றும் 2013ம் ஆண்டுக்கான நடிகர் சங்கத்தின் வரவு– செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்படுகிறது. நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது குறித்தும், நீதிமன்ற வழக்கு விவரங்கள் பற்றியும் சங்க நிர்வாகிகள் பேசி விளக்கம் அளிக்கிறார்கள்.

நடிகர் சங்க நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டி அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சங்க உறுப்பினர்கள் பலர் நடிகர் சங்கத்துக்கு மனுக்கள் அனுப்பி உள்ளனர். அந்த மனுக்களும் பொதுக்குழுவில் வைக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது.

நடிகர் நாசர் தலைமையில் அதிருப்தி நடிகர்கள் பொதுக்குழுவில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பவும் தயாராகி வருகிறார்கள். பொதுக்குழுவில் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பத்திரிக்கையாளர்களை நாய்கள் என்று பேசிய ஆர்.கே.செல்வமணி : பகிரங்க மன்னிப்பு கேட்டார்!!

r-k-selvamani-300-

பத்திரிக்கையாளர்களை நாய்கள் என்று பேசிய இயக்குநர் ஆர்.கே. செல்வமணி இன்று தன்னுடைய பேச்சுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆர்.கே.வி. பிரீவியூ திரையரங்கில் தமிழ் எனும் குறும்பட விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி ‌கலந்து கொண்டார். இவ்விழாவில் ஆர்.கே.செல்வமணி, பேசியதாவது..

நான் திரையுலகில் தமிழுக்காக, தமிழர்களுக்காக எவ்வளவோ போராடி வருகிறேன். ஆந்திராவில் இயக்குநர் சங்கம், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என அனைத்தும் தெலுங்கு நடிகர் சங்கம், தெலுங்கு இயக்குநர் சங்கம் என்றே பெயர் சூட்டப்பட்டு இருக்கும்.

அதேமாதிரி கர்நாடகா மற்றும் கேரளாவிலும் கூட கன்னட, மலையாள இயக்குநர், நடிகர் சங்கம் என்று தான் இருக்கிறது. ஆனால் இங்கு சென்னையில் மட்டும் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இதுமாதிரி தான் தென்னிந்திய திரைப்பட இயக்குநர் சங்கம் என்று இருந்த பெயரை பெரும் முயற்சி செய்து தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கம் என்று மாற்றினேன். இதை மற்ற சங்கங்களுக்கும் செயல்படுத்த முற்படுத்தப்பட்டபோது என்னை அந்தந்த சங்கங்களில் இருந்து கழற்றிவிட்டு விட்டனர்.

இதையெல்லாம் யார் கேட்பது என்றார். அதோடு நிறுத்தாமல் பத்திரிக்கையாளர்களை பேச ஆரம்பித்து விட்டார். இதோ தமிழ் எனும் குறும்பட விழா நடத்தி வருகிறோம். இதுவே வேறு எதுவும் சினிமா விழாவாக இருந்தால் இங்கே முன் வரிசையில் ஒரு பத்து பதினைந்து நாய்கள் புகைப்படம் பிடித்து கொண்டு இருக்கும், நான்கு சீட் தள்ளி ஒரு முப்பது நாப்பது நாய்கள் போட்டி போட்டு வீடியோ கமரா மூலம் வீடியோ எடுத்து கொண்டு இருக்கும்.

இதோ இந்த இருக்கைகளில் ஐம்பது அறுபது நாய்கள் ஏதோ தாங்கள் தான் படைக்கும் பிரமாக்கள் மாதிரி கையில் பேனாவையும், பேப்பரையும் வைத்து கொண்டு இங்கு நடப்பதையெல்லாம் கிறுக்கி கொண்டு இருப்பார்கள். ஆனால் தமிழ் என்ற பெயரில் குறும்படம் உருவாகும் போது ஒரு நாயையும் காணோம்.

இதுதான் தமிழின் நிலை என்று பத்திரிகையாளர்கள் யாரும் அந்த அரங்கத்தில் இல்லாத தைரியத்தில் ஏக வசனத்தில் திட்டி தீர்த்துள்ளார். ஆர்.கே.செல்வமணி இவ்வாறு பேசும்போது அக்குறும்படம் சம்பந்தப்பட்ட இயக்குநர் மு.களஞ்சியம் உள்ளிட்டவர்களும் அதேமேடையில் செல்வமணியின் பேச்சை ரசித்த படி அமர்ந்து இருந்தனர்.

செல்வமணியின் இந்த பேச்சுக்கு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆர்.கே. செல்வமணி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி இயக்குநர்கள் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து இன்று காலையில் இயக்குநர்கள் சங்கத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஆர்.கே.செல்வமணி தன்னுடைய பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கோரினார்.

நெற்றிப்பொட்டில் தேங்காய்களை வைத்து உடைத்து சாதனை (வீடியோ)!!

Coconut-Smashes-To-The-Head-Guinness-World-Recordsநாமெல்லாம் கத்தியால் தேங்காய் உடைக்கும்போதே ஒன்றுக்கு இரண்டு தடவை முயற்சி செய்த பின்னர் தான் தேங்காயை தகர்க்க முடிகிறது. ஆனால் இங்கே நிகழ்த்தப்பட்ட சாதனையை பார்த்தால் உங்கள் உடல் சிலிர்க்கும்.

தேங்காய்களை ஒருவர் தனது நெற்றிப்பொட்டில் வைத்து உடைத்து தள்ளுகிறார். உலக சாதனைக்காக நிகழத்தப்பட்ட இச்சோதனை வெற்றி பெற்று சாதனையாக அறிவிக்கப்படுகிறது. நடுவர்களை அலறவைக்கும் அந்த சாதனை முயற்சியின் வேதனை தரும் காட்சிகளை நீங்களும் காணொளியில் காணுங்கள்.