ஒரு குழந்தை தன் தாயின் வயிற்றில் நடனமாடுவதை பாருங்கள்..
வவுனியா சென்ற பஸ் மீது தாக்குதல் 12 பேர் காயம் : 11 பேர் கைது!!

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற தனியாஸ் பஸ் ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கி பஸ்ஸிற்கு சேதம் ஏற்படுத்திய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கெக்கிராவ பொலிஸ் நிலைய குழுவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிப்பட்ட குரோதம் காரணமாக இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மெல்சிறிபுர பகுதியைச் சேர்ந்தவர்களாவர். அவர்கள் இன்று கெக்கிராவ நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் சபை விருதுகள் 2013 : இவ்வாண்டின் மக்கள் விருப்ப வீரர் குமார் சங்கக்கார!!(படங்கள்)

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் 2013 டயலொக் கிரிக்கெட் விருதுகள் நிகழ்வில் மக்கள் விருப்பத்திற்குரிய வீரர் என்ற விருதினை குமார் சங்கக்கார பெற்றுக் கொண்டுள்ளார்.
ஆண்டுக்கான சிறந்த டயலொக் வீரர் என்ற விருதினை ரங்கன ஹேரத் பெற்றுக் கொண்டார்.
மேலும் வீரர்களும் அவர்கள் பெற்ற விருதுகளும் வருமாறு
ஆண்டுக்கான சிறந்த வீரர் : ரங்கன ஹேரத்
சிறந்த டெஸ்ட் வீரர் : குமார் சங்கக்கார
சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளர் : ரங்கன ஹேரத்
சிறந்த ஒருநாள் துடுப்பாட்ட வீரர் : திலகரட்ன டில்ஷான்
சிறந்த ஒருநாள் பந்துவீச்சாளர் : லசித் மலிங்க
சிறந்த ஒருநாள் சகலதுறை ஆட்டக்காரர் : அஞ்சலோ மத்யுஸ்
சிறந்த வளர்ந்துவரும் வீரர் : தினேஷ் சந்திமல்


நான் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை ’: சிந்துமேனன்!!

நடிகை சிந்துமேனன் தற்கொலைக்கு முயன்றதாக அவரது படத்துடன் பரபரப்பு செய்தி வெளியானது. தூக்க மாத்திரையை சாப்பிட்டு சாக துணிந்தார் என்றும் கூறப்பட்டது.
சிந்துமேனன் தமிழில் சமுத்திரம், கடல் பூக்கள், ஈரம் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மலையாள மொழிகளிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார்.
சிந்துமேனனுக்கும் இங்கிலாந்தில் வசிக்கும் தமிழ் இளைஞர் பிரபுவுக்கும் கடந்த 2010ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் தெலுங்கு, மலையாள படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் சுபத்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில்தான் அவரைப் பற்றி வதந்தி பரவியது.
தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வெளியான செய்திக்கு சிந்துமேனன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, நான் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான செய்தி அடிப்படை ஆதாரமற்றது. நான் லண்டனில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியோடு இருக்கிறேன் என்றார்.
ஆசியாவில் 10ல் ஒரு ஆண் பெண்களை பலாத்காரத்திற்கு உட்படுத்துகிறார் : அதிர்ச்சி தகவல்!!

ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் ஆசியாவில் 10ல் ஒரு ஆண் பெண்களை பலாத்காரத்திற்கு உட்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
ஆசியாவின் 6 நாடுகள் இந்த ஆய்வுக்காக எடுத்து கொள்ளப்பட்டன. அவை வங்காளதேசம், சீனா, கம்போடியா, இந்தோனேஷியா, பப்புவா நியூ கினியா மற்றும் இலங்கை ஆகும்.
கடந்த ஜனவரி 2011-டிசம்பர் 2012 வரையில் சுமார் 10,178 ஆண்களிடம் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் ஒன்பது இடங்களில் கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் அவற்றில், பலாத்காரம் அல்லது கற்பழிப்பு என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை.
அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் உங்களது மனைவி அல்லது பெண் நண்பர் செக்ஸ் விருப்பம் இல்லாவிட்டாலும் அவர்கள் ஏற்று கொள்வார்கள் என்று கருதி செக்சில் ஈடுபட்டதுண்டா என ஒரு கேள்வி இருந்தது.
ஒரு பெண் அல்லது சிறுமி அதிக போதையில் அல்லது அதிகமாக குடித்திருக்கும்போது, அவள் விரும்புகிறாளா அல்லது இல்லையா என்பதை தெரிவிக்க இயலாத நிலையில் நீங்கள் செக்சில் ஈடுபட்டதுண்டா என மற்றொரு கேள்வி இருந்தது.
இக்கேள்விகளுக்கு பதிலளித்தவர்களில் பப்புவா நியூ கினியாவை சேர்ந்த 10ல் 6 பேர் வலுக்கட்டாயமாக ஒரு பெண்ணை பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.
இது வங்காளதேசத்தின் நகர்ப்புறங்களில் மிக குறைந்த அளவாக 10ல் ஒருவருக்கும் கீழ் என்றும் இலங்கையில் 10ல் ஒருவருக்கு மேல் என்றும் உள்ளனர். அதுவே கம்போடியா, சீனா மற்றும் இந்தோனேஷியா நாடுகளில் 5ல் ஒருவர் என்ற அளவில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
நெருங்கிய உறவுகள் என கருதப்படும் மனைவி மற்றும் பெண் நண்பரை பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டவர்களில் 4ல் ஒரு பங்கினர் தெரிவித்துள்ளனர்.
ஆய்வு அறிக்கையின்படி, மொத்தம் 24 சதவீதத்தினர் நெருங்கிய உறவுகளுடன் பலாத்காரத்தில் ஈடுபடுவதாகவும் இது வங்காளதேசத்தில் 13 சதவீதமாகவும் மற்றும் பப்புவா நியூ கினியாவில் 59 சதவீதமாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சினிமா நூற்றாண்டு விழா : முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்!!

முதல் சினிமா வெளியாகி 100 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்த ஆண்டு இந்திய சினிமா நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்படுகிறது. சென்னையில், சினிமா நூற்றாண்டு விழாவை 4 நாட்கள் பிரமாண்டமாக கொண்டாட திட்டமிடப்பட்டு உள்ளது.
வருகிற 21ம் திகதி முதல் அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைக்கிறார். நிறைவு விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொள்கிறார். இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கல்யாண் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது..
இந்திய சினிமா நூற்றாண்டு விழா செப்டம்பர் 21ம் திகதியில் இருந்து 24ம் திகதி வரை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. விழாவை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பொறுப்பேற்று நடத்துகிறது.
செப்டம்பர் 21ம் திகதி மாலை 5.30 மணிக்கு நடைபெறும் இந்த விழாவை முதல் அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்து, விழாவுக்கு தலைமை தாங்குகிறார். தொடர்ந்து 22ம் திகதி காலை கன்னட சினிமா உலகினர் பங்கு பெறும் நிகழ்ச்சியும், அன்று மாலை தெலுங்கு சினிமா உலகினர் பங்கு பெறும் நிகழ்ச்சியும், 23ம் திகதி காலை மலையாள சினிமா உலகினர் பங்கு பெறும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.
அனைத்து இந்திய சினிமா உலகினரும் பங்கு பெறும் நிறைவு நாள் உச்சகட்ட நிகழ்ச்சி 24ம் திகதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்கிறார். கவுரவ விருந்தினராக தமிழக கவர்னர் கே.ரோசய்யா பங்கேற்கிறார்.
விழாவுக்கு தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர மாநில முதல் மந்திரி கிரண்குமார் ரெட்டி, கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா, கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இருந்து பல அமைச்சர்களும் நடிகர், நடிகைகளும் கலந்து கொள்வார்கள்.
நிறைவு நாள் உச்சக்கட்ட நிகழ்ச்சியில் இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொள்கிறார். அவருடன் வட இந்திய நடிகர்-நடிகைகள் பலரும் பங்கேற்கிறார்கள்.
சினிமா நூற்றாண்டு விழாவின் முன் நிகழ்வுகளாக சென்னை நகரத்தில் பொது பூங்காக்களை ஒலி-ஒளியினால் அலங்கரித்து, அதில் சினிமா கலை நிகழ்ச்சிகள் நடத்த இருக்கிறோம். பழைய சினிமா படங்களும் திரையிடப்படும். சென்னை கடற்கரையிலும் பழைய சினிமா படங்கள் திரையிட்டு காண்பிக்கப்படும்.
சென்னை சத்யம், அபிராமி ஆகிய திரையரங்குகளில் வருகிற 19ம் திகதி முதல் 26ம் திகதி வரை பொதுமக்களுக்கு பழைய சினிமா படங்கள் இலவசமாக காட்டப்பட இருக்கிறது. சென்னை நகரமே விழாக்கோலம் பூணும்படி நகரை சிறப்பாக அலங்கரிக்க இருக்கிறோம்.
தென்னிந்திய சினிமா சங்கங்கள் குறிப்பாக தமிழ் பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு வினியோகஸ்தர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய சங்கத்தினர் அனைவரும் உரிய பங்களிப்பை அளிக்க முன்வந்து இருக்கிறார்கள்.
18ம் திகதி முதல் 24ம் திகதி வரை தமிழ்நாட்டில் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. இந்திய சினிமா நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற ஆதரவும், முழு ஒத்துழைப்பும் கொடுத்து, தாய் அன்போடு உதவும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கல்யாண் கூறினார்.
பேட்டியின்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் கேயார், துணைத்தலைவர்கள் டி.ஜி.தியாகராஜன், சுபாஷ் சந்திரபோஸ், செயலாளர்கள் டி.சிவா, ஞானவேல்ராஜா, பொருளாளர் ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பெற்ற மகளை கோவிலுக்கு நரபலி கொடுத்த கொரூர தந்தை!!

மத்திய பிரதேச மாநிலத்தில் மலைவாழ் மக்கள் வசிக்கும் ஜோலா கிராமத்தை சேர்ந்தவர் சத்லால் இர்பாச்சே. இவர் தனது 8 வயது மகள் ரிதுவுடன் துருங்காவில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் அங்குள்ள கோவிலுக்கு மகளை அழைத்துக் கொண்டு சென்ற அவர் சாமி தரிசனம் செய்தார். இதை அடுத்து அவர் கோவில் முன்பு மகள் ரிதுவை நரபலி கொடுத்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று சத்லாலை கைது செய்தனர். அவர் சிறுமியை நரபலி கொடுத்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நான் அரசியல்வாதி அல்ல : நடிகர் விஜய்!!

நான் அரசியல்வாதியும் கிடையாது தமிழகத்தில் எந்தக்கட்சியையும் சார்ந்தவனும் இல்லை என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.
தலைவா திரைப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சி குறித்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இப்படத்தில் நடித்த நடிகர் விஜய், நடிகை அமலாபால், படத்தின் இயக்குனர் விஜய், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் விஜய்யிடம் கேட்கப்பட்ட கேள்விகளூக்கு அவர் எந்தவித தயக்கமும் இல்லாமல் பதில் அளித்தார்.
கேள்வி : தலைவா படம் தாமதமாகிக்கொண்டே சென்றபோது ஏன் நீங்கள் மீடியாவை அழைத்துப் பேசவில்லை?
பதில் : தலைவா பட பிரச்சனையில் என் ரசிகர்களை நான் அமைதிகாக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தேன். எப்படியும் படம் வெளியாகிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் தான் ஊடகத்தினரை சந்தித்து பேசவேண்டாம் என்று முடிவெடுத்தேன்.
கேள்வி : தமிழகத்தில் வெளியாக தாமதம் ஆனாலும் பிறமாநிலங்களில் வெளியாகி வசூலை அள்ளியதே?
பதில் : தலைவா படம் பிற மாநிலங்களில் வெளியாகி இதுவரை இல்லாத அளவிற்கு ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் பிரச்சனை இருந்ததால் அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.
கேள்வி : தலைவா படம் அரசியலுக்கு சீக்கிரம் வந்துவிடுவீர்கள் என்பதை சொல்லாமல் சொல்கிறதா?
பதில் : தலைவா படத்திலையும் நாங்க அதைப்பற்றி சொல்லவில்லை. நானும் அப்படிச்சொல்லவில்லை. நீங்களாகத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். எனக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறது. நான் அரசிய லுக்கு வரப்போகிறேன் என்று எங்கேயும் நான் சொன்னதில்லை.
எனக்கு அரசியலில் ஆர்வமில்லை. சினிமாவில்தான் என் முழு கவனமும் இருக்கிறது. நான் அரசியல்வாதி இல்லை. எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவனும் இல்லை. நான் எல்லோருக்கும் பொதுவான ஒரு நடிகன்.
கேள்வி : வாழ்க்கையின் துயரமான நாள்?
பதில் : என் வாழ்க்கையின் துயரமான நாள் தலைவா படத்தின் தாமதத்தால் ரசிகர் தற்கொலை செய்துகொண்ட நாள்தான்.
அப்பிளின் ரகசியத்தை வெளியிடும் இளைஞர் : அதிர்ச்சியில் நிறுவனம்!!

அப்பிள் நிறுவனத்தின் ரகசியங்களை இளைஞர் ஒருவர் வெளியிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பிள் நிறுவனம் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக எந்த ஒரு புதிய சாதனங்களையும் வெளியிடாமல் இருந்து வந்தது. வருகிற 10ம் திகதி அப்பிள் தனது ஐபோன் மொடல்களை வெளியிட உள்ளது.
ஆனால் அப்பிளின் புதிய சாதனங்கள் பற்றிய படங்கள் மற்றும் வீடியோக்கள் குறித்த தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இது அப்பிள் நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாம்.
அதாவது அவுஸ்திரேலியாவை சேர்ந்த சோனி டிக்ஸன் என்ற இளைஞர் தான் தன்னுடைய இணையத்தளமான SonnyDickson.com இல் அனைத்து தகவல்களையும் வெளியிட்டு வருகிறார்.
இவரது இணையதளத்தை அவுஸ்திரேலியாவை சேர்ந்த நேஷ்னல் செக்கியூரிட்டி அமைப்பு 67 முறையும் மற்றும் அப்பிளின் ஊழியர்கள் 900 முறை பார்த்தாக சோனி டிக்ஸன் தெரிவித்துள்ளார். இவர் இந்த தகவல்களை பெரும்பாலும் சீனாவில் இருந்து பெறுவதாக தெரிவித்துள்ளார்.
பெயர் மாற்றப்பட்ட நாடுகளும் அவற்றின் புதிய பெயர்களும்!!
1.டச்சு கயானா – சுரினாம்.
2.அப்பர் வோல்டா – புர்க்கினா பாஸோ
3.அபிசீனியா – எதியோப்பியா
4.கோல்ட் கோஸ்ட் – கானா
5.பசுட்டோலாந்து – லெசதொ
6.தென்மேற்கு ஆபிரிக்கா – நமீபியா
7.வட ரொடீஷியா – சாம்பியா
8.தென் ரொடீஷியா – சிம்பாவே
9.டாங்கனீகாம,சன்ஸிபார் – தான்சானியா
10.கோட்டே டி ஐவோயர் – ஐவரி கோஸ்ட்
11.சாயிர் – கோங்கோ
13.சோவியத்யூனியன் – ரஷ்யா
14.பர்மா – மியான்மர்
15.கிழக்கு பாகிஸ்தான் – பங்களாதேஷ்
16.சிலோன் – ஸ்ரீலங்கா
17.கம்பூச்சியா – கம்போடியா
18.பாரசீகம்,பெர்ஷியா – ஈரான்
19.மெஸமடோமியா – ஈராக்
20.சயாம் – தாய்லாந்து
21.பார்மோஸ – தைவான்
22.ஹொலந்து – நெதர்லாந்து
23.மலாவாய் – நியூசிலாந்து
24.மலகாஸி – மடகாஸ்கர்
25.பாலஸ்தீனம் – இஸ்ரேல்
26.டச் ஈஸ்ட் இண்டீஸ் – இந்தோனேசியா
27.சாண்ட்விச் தீவுகள் – ஹாவாய்
28.அப்பர் பெரு – பொலிவியா
29.பெக்குவானாலாந்து – போட்ஸவா
சைவ பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

சைவ பிரியர்களுக்காக மட்டன், சிக்கன் தயாரித்து வியப்பில் ஆழ்த்தியுள்ளனர் விஞ்ஞானிகள்.
லண்டனில் உள்ள சில விஞ்ஞானிகள் சோதனைக் குழாய் மூலம் செயற்கையான இறைச்சியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பல மாத ஆராய்ச்சிக்கு பின் உயிருள்ள பசுவின் ஸ்டெம் செல்லில் இருந்து ஒரு வித பசையை எடுத்து அதை சோதனைக்குழாயில் வைத்து வளர்த்து மாட்டிறைச்சியை உருவாக்கினர். இதற்கு “பிராங்கன் பர்கர்” என்று பெயரிட்டனர்.
கடந்த வாரம் நெதர்லாந்து நாட்டின் விஞ்ஞானி ஜொப் கோர்ட்டேவெக், சைவ மட்டன், சிக்கனை உருவாக்கி பெரும் சாதனை படைத்துள்ளார்.
இதற்கு இவர் பயன்படுத்திய பொருட்கள் எல்லாமே சைவ, இயற்கை தாவரங்கள் மற்றும் மூலிகைகள் தான்.
நெதர்லாந்தின் ஹாக் நகரில் தன்னுடைய ஆராய்ச்சி நிலையத்தில் பல மாதங்களாக இது தொடர்பாக ஆராய்ச்சி செய்து வந்தார் கோர்ட்டேவெக்.
சோயா எண்ணெயில் இருந்து பசை போன்ற திரவத்தை உருவாக்கி, அதை ஒரு அடர்த்தியை தரும் கருவியில் வைத்து சிக்கன் போன்ற உருவத்துடன் உணவு வகையை உருவாக்கினார்.
அதன் பின் சிக்கன் சுவை கிடைப்பதற்காக தொழில்நுட்ப ரீதியாக சில மூலிகைகளை சேர்த்துள்ளார். இந்நிலையில் சூப்பர் சைவ சிக்கன் தயாரித்து விஞ்ஞானிகள் சிலருக்கு விருந்து படைத்தார்.
இதுதவிர சோயா போலவே வேறு காய்கறி, மூலிகைகள், தாவரங்களை வைத்து மட்டன் உருவாக்க விரும்பி அதற்கான ஆராய்ச்சிகளை செய்து வெற்றியும் கண்டுள்ளார்.
சோயாவுக்கு பதிலாக கரட், உருளைக்கிழங்கு, பட்டாணி போன்றவற்றை வைத்து அதே கருவியில் மிகுந்த வெப்பத்தில் நூலிழைகள் போல ஒரு உணவுப் பொருளை உருவாக்கி அத்துடன் தானிய வகைகளை சேர்த்து தொழில்நுட்பத்தின் மூலம் மட்டன் உருவாக்கினார்.
அசல் மாட்டிறைச்சி போலவே இருப்பதாக அதை ருசித்த சக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பத்திரிக்கையாளர்களையும் அழைத்து விருந்து வைத்த விஞ்ஞானிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதுகுறித்து கோட்டேவெக் அசைவ பிரியர்கள் கூட சைவத்துக்கு மாற தயாராகி விட்டனர். அவர்களுக்காக தான் நான் இந்த கண்டுபிடிப்பை உருவாக்கினேன்.
இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது ஏற்கனவே நான் விற்று வரும் சைவப் பொருட்களின் வரிசையில் இனி சைவ மட்டன், சிக்கன் இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார்.
ஹக் நகரின் பிரதான சாலையில் உள்ள கோட்டேவெகின் சுப்பர் மார்க்கெட்டில் மூன்று ஆண்டுகளாகவே சைவ பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ஹேம்பர்கர், மீட்போல்ஸ், டுனா சலட் போன்றவற்றை விற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிண்ணத்தை வெல்லுமா இந்திய அணி : இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுடன் இன்று பலப்பரீட்சை!!

தெற்காசிய கால்பந்து தொடரின் பரபரப்பான அரையிறுதியில் மாலத்தீவு அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
நேபாள தலைநகர் காத்மண்டுவில் 10வது தெற்காசிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. லீக் சுற்றில் அசத்திய இந்தியா, நேபாளம், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இரண்டாவது அரையிறுதியில், நடப்பு சம்பியன் இந்திய அணி, மாலத்தீவு அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் இந்திய கேப்டன் சுனில் செத்ரி பங்கேற்கவில்லை.
முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலை வகித்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட இந்திய அணியின் அர்னாப் மாண்டல் 86வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இது இவரது முதலாவது சர்வதேச கோல். இதற்கு மாலத்தீவு அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஒன்பதாவது முறையாக (1993, 95, 97, 99, 2005, 08, 09, 11, 13) இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
தவிர இந்திய அணி தொடர்ந்து ஐந்தாவது முறையாக இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது. இன்று(11) நடக்கவுள்ள இறுதிச்சுற்றில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் தொடர்ந்து இரண்டாவது முறையாக (2011, 13) மோதுகின்றன.
கடந்த முறை நடந்த இறுதிச்சுற்றில் இந்திய அணி 4-0 என்று ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது.
கோச்சடையான் டிரெய்லரை இதுவரை 9 லட்சம் ரசிகர்கள் இணையதளத்தில் பார்வையிட்டுள்ளனர்!!

ரஜினியின் கோச்சடையான் அனிமேஷன் படம் மெகா பட்ஜெட்டில் தயா ராகியுள்ளது. ஹொலிவுட் படங்களான அவதார் ,டின்டின் போன்று இப்படத்தை எடுத்துள்ளனர். இதன் டிரெய்லர் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று ரிலீசானது.
காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிட்டனர். 12 மணி நேரத்தில் 4 லட்சம் ரசிகர்கள் கோச்சடையான் டிரெய்லரை பார்த்தனர். ரஜினி பழங்கால மன்னர் வேடத்தில் குதிரையில் சவாரி செய்வது போன்றும் எதிரிகளுடன் வாள் சண்டை போடுவது போன்றும் நடனம் ஆடுவது போன்றும் காட்சிகள் இருந்தன.
உலகம் முழுவதும் இணைய தளங்களில் கலக்கிய தனுசின் கொல வெறிடி பாடலை முதல் நாளில் ஒரு லட்சத்துக்கும் குறைவானவர்களே பார்த்தார்கள். ஒருவாரத்தில் 35 லட்சம் பேர் பார்த்தனர். இரண்டு வருடத்துக்கு பிறகு இந்த எண்ணிக்கை 7.13 கோடியாகியுள்ளது.
விஜய்–அமலாபால் ஜோடியாக நடித்த தலைவா படத்தின் டிரெய்லரை 152 நாட்களில் மொத்தம் 12.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். சூர்யா நடித்த சிங்கம் 2 படத்தின் டிரெய்லரை 115 நாட்களில் 17.2 லட்சம் பேர் பார்த்தனர்.
ஆர்யா நயன்தாராவும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வது போன்ற பரபரப்புடன் வெளியான ராஜா ராணி படத்தின் டிரெய்லரை 118 நாட்களில் 8.2 லட்சம் பேர் பார்த்துள்ளார்கள்.
டிரெய்லரை பார்த்த வளசரவாக்கத்தை சேர்ந்த ரஜினி ரசிகர் ரமேஷ் கூறும்போது கோச்சடையான்’ டிரெய்லர் உற்சாகம் அளித்தது. அதே நேரம் குறைவான டிரெய்லர் ஓடியது ஏமாற்றம் அளிப்பதாகவும் இருந்தது. ரஜினியை சரியாக காட்டவில்லை.
கண் இமைக்கும் நேரத்தில் காட்சிகள் மறைந்தன. ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்வதாக அமையவில்லை. இதை வைத்து படத்தின் தரத்தை மதிப்பிட முடியாது. அடுத்த டிரெய்லரில் இன்னும் கூடுதல் காட்சிகளை இணைத்து வெளியிட வேண்டும் என்று படத்தின் டைரக்டர் சவுந்தர்யாவை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
கோச்சடையான் படத்தில் நாயகியாக தீபிகாபடுகோனே நடித்துள்ளார். அவரது கெட்டப் இன்னும் வெளியிடப்படவில்லை. இரண்டாவது டிரெய்லரில் தீபிகாபடு கோனே இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சரத்குமார், ஆதி, ஷோபனா, நாசர் போன்றோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். டிசம்பரில் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது.
மீண்டும் மனைவியுடன் இணைய விரும்பும் விஷ்ணு!!

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு. தொடர்ந்து குள்ளநரிக்கூட்டம், நீர்ப்பறவை ஆகிய படங்களில் நடித்தார்.
தற்போது வீரதீர சூரன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவரது மனைவி ரஜினி நடராஜ் திரைப்படத் துறையில் ஆடை வடிவமைப்பு கலைஞராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நீர்ப்பறவை படத்தில் சீனுராமசாமியிடம் உதவியாளராகவும் பணிபுரிந்துள்ளார். தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகிவரும் வணக்கம் சென்னை படத்திலும் ஆடை வடிவமைப்பில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
தன்னுடைய மனைவியின் வேலைத் திறமையை பார்த்து வியந்த விஷ்ணு தன்னுடைய மனைவியின் ஆடை வடிவமைக்கும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆவலாக உள்ளேன். வணக்கம் சென்னை படத்தில் ரஜினியின் தேர்வு வண்ணமயமாக இருக்கிறது. இதுபோன்றதொரு வாய்ப்புக்காக தான் காத்திருப்பதாகவும் இணையதளத்தில் கூறியுள்ளார்.
வில்லியாக நடிக்க ஆசைப்படும் பிரியாமணி!!

பருத்திவீரன் கிராமத்து இமேஜை மாற்ற பிரியாமணி பெரும்பாடு பட்டார். ஆனாலும் தமிழில் தொடர்ந்து அதே வேடங்கள் மாதிரி வந்தன. அந்த இமேஜில் இருந்து வெளிவர கவர்ச்சிக்கு தயார் என அறிவிப்பு வெளியிட்டார். அதன்பிறகு தெலுங்கு படங்களில் அரை குறை ஆடையில் ஆபாசமாக தோன்றினார்.
கவர்ச்சியில் தாராளம் காட்டியதால் இயக்குனர்களும் தங்கள் படங்களில் அவரை அரை குறை ஆடையில் உரித்து காட்டினார்கள். ஆனாலும் தமிழ் படங்களில் இருந்து வாய்ப்புகள் வரவில்லை.
அடுத்து வில்லி வேடங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து பிரியாமணி கூறும்போது சவாலான வேடங்களில் நடிக்க விருப்பமாக இருக்கிறேன். குறிப்பாக வில்லத்தனமான வேடங்களில் நடிக்கவும் ஆசை உள்ளது என்றார்.
சச்சினை வீழ்த்த புதுத் திட்டம் வகுக்கும் மேற்கிந்திய தீவுகள்!!

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
வருகிற 31ம் திகதி தொடங்கும் இப்போட்டிகள் நவம்பர் 27 திகதி வரை நடைபெற உள்ளது.
டெஸ்ட் போட்டிகள் மும்பை, கொல்கத்தாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சினுக்கு 200வது டெஸ்ட் போட்டியாக அமையும்.
இந்நிலையில் சச்சினை இந்த தொடரில் அதிக ஓட்டங்கள் எடுக்க விடக்கூடாது என்பதில் மேற்கிந்திய தீவுகள் அணி முனைப்பு காட்ட தொடங்கியுள்ளது.
இதற்காக அந்த அணி சுழற்பந்து வீச்சில் தூஸ்ரா வகையை கையாண்டு சச்சினுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த வகையான பந்து வீச்சில் அசத்திய பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஸ்டாக்கை சிறப்பு பயிற்சியாளராக மேற்கிந்திய தீவுகள் அணி நியமித்துள்ளது.
இவர் சுனில் நரேன், டியோன் நாஸ், ஷில்லிங்போட் , தேவேந்திர பிஷூ ஆகியோருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக சக்லைன் முஸ்டாக் கூறுகையில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடுவது என்பது எல்லா அணிகளுக்குமே சவாலானது தான். இந்த தொடர் சச்சினுக்கு 200வது டெஸ்ட் போட்டியாக அமைய உள்ளதால் பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சச்சின் போன்ற வீரர்களுக்கு பந்து வீசும் போது தான் நமது திறமை என்னவென்பது தெரியவரும். சுனில் நரேன், ஷில்லிங்போட் உள்ளிட்ட சுழற் பந்து வீச்சாளர்களுக்கு ஒரு சில ஆலோசனைகள் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
