கங்கா லீக் தொடரில் 8 வயதில் இடம் பெற்று முஷீர் கான் என்ற சிறுவன் சாதனை படைத்துள்ளான்.
மும்பை கிரிக்கெட் சங்கத்தின் சார்பில்(எம்.சி.ஏ) கடந்த 1948ம் ஆண்டு முதல் கங்கா லீக் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இத்தொடரில் 10 வயதில் விளையாடி சாதனை படைத்தவர் சர்ப்ராஸ்.
இதனை முறியடித்துள்ளான் சர்ப்ராஸின் சகோதரர் முஷீர் கான்.
அதாவது 8 வயதில் ஸ்போர்ட் ஸ்பீல்ட் கிரிக்கெட் கழக அணியில் இடம் பெற்று தற்போது விளையாடுகிறார்.
ராஜவாதி அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஒரு மணி நேரம் களத்தில் நின்று 42 பந்துகளில் 4 ஓட்டங்கள் எடுத்தான். 7 ஓவர்கள் பந்துவீசிய முஷீர் 20 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
தமிழ்நாட்டில் முதன் முறையாக மாப்பிள்ளைக்கு தாலிகட்டி ஓர் புதிய சடங்கினை அறிமுகம் செய்துவைத்துள்ளார் மணப்பெண்.
பொதுவுடைமை எழுத்தாளரும் த.மு.எ.ச மா.செ.ச.தமிழ்செல்வன் அவர்களின் தம்பி பாலசுப்ரமணியம், ஜெயா பாலசுப்ரமணியம் மகன் பிரேம் ஆனந்துக்கும், பிரபல புத்தக நிறுவனர் கோவை பெ.தியாகராஜன், கலைவாணி மகள் சிந்துவுக்கும் , சி.பி.ஐ நல்லகண்ணு தலைமையில் திருமணம் நடைபெற்றது.
பிரேம் ஆனந்தின் கொள்ளு தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ். தமிழ் சினிமாவில் முதன் முதலில் வெளிவந்த திரைப்பாடலை இயற்றியவர்.
மிக பிரபல எழுத்தாளர், பாடலாசிரியர் சுதந்திர போராட்ட தியாகி. பெரியப்பா எழுத்தாளர் ச.தமிழ்செல்வன். ஒரு சித்தப்பா எழுத்தாளர் கோணங்கி. கடைசி சித்தப்பா சங்கீத அகாடமியில் தேசிய விருது வாங்கிய ச.முருகபூபதி.
இவர்களின் பின்னணியில் வந்த பிரேம் ஆனந்த் கொள்கைக்கு ஏற்ப சாதிமறுப்பு காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார். ஒரு நூலக அலமாரி போல அலங்கரிக்கப்பட்ட அற்புத மேடையில் திருமண நிகழ்வை தொகுத்தார் ச.தமிழ்செல்வன்.
நல்லக்கண்ணு தாலி எடுத்து பிரேமிடம் தர அவர் சிந்துவின் கழுத்தில் கட்டினார். அப்போது ச.தமிழ் செல்வன் தாலி என்பது பெண்ணடிமை சின்னம் ஆனால் ஒரேயடியாக சமூகத்தை மாற்றிவிடுவது சற்று சிரமம்.
எனவே அதேசமயம் ஆணுக்கு பெண் சமம் என்ற அடிப்படையில் மணமகனுக்கு தற்போது சிந்து தாலி சூட்டுவார் என கூற பிரேம் ஆனந்த் கழுத்தில் சிந்து ஒரு செயினை கட்டினார்.
பின் மனமக்களை ஒருவருக்கு ஒருவர் தலையில் கொட்டிக்கொள்ள சொன்னார். பின் இருவரும் அதை ஒருவருக்கொருவர் மாறி மாறி தேய்த்து கொள்ள சொல்லி பின் சிரித்தபடி கைகுலுக்க சொல்ல அப்படியே செய்தனர் மணமக்கள்.
பின் பேசிய ச.தமிழ்செல்வன் ஒவ்வொரு திருமணத்தின் போதும் பழைய சடங்குகளை உடைத்து புதிய சடங்குகளை அறிமுகம் செய்து வருகிறோம் அப்படிப்பட்ட ஒரு சடங்குதான் இது.
தாம்பூல பையாக அனைவருக்கும் மூன்று நூல்கள் பரிசளிக்கப்பட்டது.
இந்த வித்தியாச திருமணம் வந்தவர்கள் நெஞ்சில் சமத்துவ விதையை விதைப்பதாக இருந்தது.
நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதில் முறைகேடுகள் நடப்பதாக காமெடி நடிகர் குமரிமுத்து குற்றம் சாட்டினார். இதையடுத்து அவரிடம் நடிகர் சங்கம் விளக்கம் கேட்டது. இதற்கு குமரி முத்து அளித்த பதில் திருப்தி அளிக்காததால் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
இதை எதிர்த்து குமரிமுத்து சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நடிகர் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என்று உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கு நீதிபதி இந்திராணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வக்கீல் வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரிமுத்து மனுவை தள்ளுபடி செய்தார்.
முறைப்படி நடிகர் சங்க செயற்குகுழு கூட்டப்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கேள்விகள் சம்பந்தமான விவரங்கள் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியதில் முறைகேடு நடக்கவில்லை என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நாட்டை துண்டாடுவதற்கு பிரபாகரனுக்கு இடம்கொடுக்கப்படாதது போல வேறு எந்த தரப்பினருக்கும் இடமளிக்கப்படாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஆட்சி நடத்த ஏனைய மாகாணங்களுக்கு வழங்கிய அதிகாரங்களே இந்த மாகாணத்திற்கும் வழங்கியுள்ளோம்.
இன்று சிலரது தேர்தல் விஞ்ஞாபனங்களை எடுத்துப் பார்க்கும்போது நான்கு வருடங்களுக்கு முன் இருந்த கோரிக்கைகளே மீண்டும் விடுக்கப்படுகிறது. அவர்களுக்கு நான் விசேடமாக ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த நாட்டை துண்டு துண்டாக பிரிக்க பிரபாகரனுக்கு இடமளிக்கப்படாதது போன்று உங்களுக்கும் இடமளிக்கப்படமாட்டாது. அதனை தெளிவாக கூறிக் கொள்ள விரும்புகிறேன். அந்த கோரிக்கையின் பிரதிபலன்களை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
அன்று முஸ்லிம் மக்களை தங்கள் கையில் கிடைத்த உடைகளோடு செல்லுமாறு விரட்டினர். சிங்கள மக்களையும் விரட்டியடித்தனர்.
ஜனநாயகத்தை மதித்த தமிழ் தலைவர்களை ஒவ்வொருவராக கொலை செய்தனர்.
அதனால் அந்த நிலையை மீண்டும் ஏற்படுத்துவதற்கு இடமளிக்கப்படமாட்டாது. இந்த அரசாங்கம் இனவாத்திற்கு எதிரானது.
அனைத்து மதங்களையும் நாங்கள் மதிக்கிறோம். ஒவ்வொரு இனத்தையும் மதிக்கிறோம்.
அவர்களது பண்பாடு, கலாச்சாரம் என்பவற்றை பாதுகாத்துஅனைவரும் சமாதானமாக ஒரே நாட்டில் வாழ பழகிக் கொள்ள வேண்டும். எனவே அனைவரும் இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப அபிவிருத்தி செய்ய தயாராகவேண்டும்.
அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட பழகிக் கொள்ள வேண்டும். தனியே கொள்கை ஒன்றை உருவாக்கிக் கொண்டு ஈழம் அமைப்போம், நாட்டைப் பிரிப்போம் என்று கூறினால் நாட்டில் வாழ முடியாது.
அன்று கதைத்ததைப் போன்று இந்த நாட்டை வேறுபடுத்த இன்று கதைத்து பயனில்லை. இப்போதுள்ள சுதந்திரைத்தை இழக்க யாரும் தயாரில்லை. தம்புள்ளையில் சிங்கள பிள்ளைகள் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என கோருகின்றனர்.
கிளிநொச்சி மக்கள் சிங்கள ஆசிரியர் ஒருவரை கோருக்கின்றனர்.
இவைதான் மக்களின் மனதில் உள்ளது. இனவாதம், மதவாதத்தை தூண்டினால் நாட்டில் அபிவிருத்தியை காண முடியாது.
வடக்கே காணிப் பிரச்சிணை, வீட்டுப் பிரச்சினை இருப்பதை நான் அறிவேன். அனைவரும் இணைந்தால்தான் அதனை செய்யமுடியும். ஒரே மாதத்தில் அதனை செய்ய முடியாது.
பல வருடங்களாக தேங்கிக் கிடந்த பிரச்சினைகளை நாங்கள் தீர்த்து வருகிறோம் என ஜனாதிபதி மஹிந்த மேலும் தெரிவித்தார்.
இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு பிரமாதமான பிரியாவிடை அளிக்க மும்பை இந்தியன்ஸ் அணியினர் முடிவு செய்துள்ளனர்.
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் 200வது டெஸ்ட் ஆடிய பிறகு ஓய்வு பெற்றுவிடுவார் என பரவலாக பேசப்படுகிறது.
இதற்கு முன்பாகவே மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்று அவரது கையில் கொடுத்து பிரமாதமாக பிரியாவிடை அளிக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கும் சம்பியன்ஸ் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பங்கேற்க உள்ளது.
இதுவே சச்சினுக்கு கடைசி சம்பியன்ஸ் லீக் போட்டித் தொடராக இருக்கும் என்பதால் அவருக்குக் கிண்ணத்தை பெற்றுக் கொடுத்து சிறப்பாக வழியனுப்பி வைக்க மும்பை இந்தியன்ஸ் அணியினர் தயாராகி வருகின்றனர்
சூப்பர்ஸ்டார்களுடன் மோதும் அளவுக்கு வளர்ந்துவிட்டார் நேரம் நாயகி நஸ்ரியா நசீம். நேரம் படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் நஸ்ரியா.
முதல் படத்தின் மூலம் ரசிகர்களை மட்டுமல்லாது தனது நடிப்பால் இயக்குனர்களையும் கவர்ந்துள்ளார். தற்போது தமிழில் முன்னணி நாயகர்களுடன் நடித்துவருகிறார்.
ஆனால் விடயம் இதுவல்ல. மலையாள சூப்பர்ஸ்டாரையும், மெகாஸ்டாரையும் ஓவர்டேக் செய்திருக்கிறார் நஸ்ரியா.
இது சம்பள விடயத்தில் அல்ல. பேஸ்புக்கில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையில் தான் இந்த சாதனையை செய்திருக்கிறார் நஸ்ரியா.
பேஸ்புக்கில் மோகன்லாலுக்கு 10 லட்சமும், மம்முட்டிக்கு 8 லட்சமும் என பின்தொடரும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் நஸ்ரியாவை 15 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பேஸ்புக்கில் பின் தொடர்கிறார்களாம்.
ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுபவர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்வதற்காக வவுனியாவுக்கு வருகை தந்திருந்த ஐக்கிய தேசிய கட்சியினர் நடத்திய தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்று வவுனியா தவசிகுளத்திலும் அதன் பின்னர் மதகுவைத்தகுளத்திலும் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில்,
அபிவிருத்தி பற்றி பெரிய அளவில் பேசுகின்ற அரசாங்கம் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காண முன்வரவில்லை என குற்றம் சாட்டியிருக்கின்றார்.
அரச தரப்பினர் தமது சொந்தப் பைகளை நிரப்பிக் கொள்வதற்காகவே, வீதிகளை அபிவிருத்தி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியே முன்னின்று பாடுபட்டது என குறிப்பிட்டதுடன், ஐக்கிய தேசிய கட்சியினால் மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று சர்வதேசம் உட்பட பலரும் நம்புகின்றார்கள்.
எனவே இந்தத் தேர்தலில் வடக்கு மக்கள் தமது கட்சியையே ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஐ.தே.க பிரமுகர்கள் அசாத் சாலி, ரவி கருணாநாயக்க ஆகியோருடன் ஐ.தே.க வவுனியா மாவட்ட வேட்பாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.
நாடு முழுவதிலும் இடி மின்னல் தாக்குதல் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டில் மின்னல் தாக்கி பதினைந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மழை நேரங்களில் திறந்த வெளிகளில் சஞ்சரித்தல், மின்சார உபகரணங்கள், உலோகப் பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்துவதனை தவிர்க்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
நீர் நிலைகளில் சஞ்சரிப்பதும் ஆபத்தானது என தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் மின்னல் தாக்கி இருவர் கொல்லப்பட்டனர்.
வெளிநாடுகளின் கனணி வலையமைப்பில் ஊடுருவி இரகசிய தகவல்களை சேகரிக்கவில்லை என்று அமெரிக்கா கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவாதம் கொடுத்தாலும் அதன் உளவு அமைப்பு பிரேசில் நாட்டின் எரிவாயு நிறுவனங்களின் கனணிகளில் இருந்த இரகசிய ஆவணங்களை திருடியிருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவின் உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு ஏஜென்சி வெளிநாடுகளுடன் சைபர் போர் தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது.
பல இரகசிய ஆவணங்களை அந்தந்த அரசுகளின் இரகசிய கனணிகளில் ஊடுருவி திருடுகிறது என்று எட்வர்ட் ஸ்னோடென் சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார்.
அமெரிக்க உளவு ஏஜன்சியின் முன்னாள் அதிகாரியான இவர் இப்படி இரகசிய தகவல்களை வெளியிட்டதால் அவரை நாட்டை விட்டு துரத்தியது மட்டுமின்றி அவரை கைது செய்ய துடித்தது அமெரிக்கா.
ஆனால் அவர் பல நாடுகளில் அலைந்து கடைசியாக ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தார். அவர் இப்போது மீண்டும் ஒரு இரகசிய ஆவணத்தை வெளியிட்டுள்ளார்.
பிரேசில் நாட்டின் எண்ணெய் வளங்களை சாமர்த்தியமாக சுரண்டும் வகையில் நிறுவனங்கள் ஏலம் தொடர்பான சில இரகசிய ஆவணங்களை அந்த நாட்டு அரசின் இரகசிய கனணி வலையமைப்பில் ஊடுருவி அமெரிக்கா எடுத்து விட்டதாக ஸ்னோடென் கூறியிருந்தார்.
லண்டனை சேர்ந்த குளோப் டிவியில் கடந்த ஞாயிறன்று கார்டியன் பத்திரிகையாளர் கிளென் கிரீன்வால்டு இந்த இரகசிய தகவல்களை வெளியிட்டதை தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிரேசில் பிரதமர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா மற்றும் அவரின் அமைச்சர்கள் எண்ணெய் நிறுவனங்கள் குறிப்பாக பெட்ரோப்ராஸ் என்ற நிறுவனம் ஆகியவற்றின் கனணிகளில் ஊடுருவி ஏலம் தொடர்பான ஆவணங்களை அமெரிக்க ஏஜென்சி திருடியிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் பிரேசில் நாடு அமெரிக்காவுக்கு பிடிக்காத நாடு. எண்ணெய் வளம் மிக்க நாடு. இதன் லிப்ரா எண்ணெய் வயலில் 1200 கோடி பேரல் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. அமெரிக்காவின் 2 ஆண்டுக்கான எல்லா எண்ணெய் தேவைகளுக்கும் இது போதுமானது.
இதுபோல பெட்ரோப்ராஸ் என்ற நிறுவனம் ஏலம் விடப்பட உள்ளது. அதை தனக்கு வேண்டியவர்கள் கையில் பெற்றுத்தருவதே அமெரிக்க உளவு அமைப்பின் எண்ணம். இதனால் தான் முக்கிய ஆவணங்களை கனணி வலையமைப்பில் ஊடுருவி எடுத்துள்ளது என்று புகார் எழுந்துள்ளது.
பிரேசிலின் மொத்த எண்ணெய் வளம் 10 ஆயிரம் கோடி பேரல்கள். மேலும் புதிய எண்ணெய் வயல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை தன் வசம் கொண்டு வருவதே அமெரிக்காவின் நோக்கம் என்று பிரேசில் குற்றம்சாட்டுகிறது. அதற்காக, தன் உளவு வேலை மூலம் பிரேசிலில் ஏலம் எடுக்க சிலரை தயார் செய்கிறது என்றும் அது சந்தேகிக்கிறது.
இது தொடர்பாக பிரேசில் பிரதமர் லுலா கூறுகையில் அமெரிக்கா மறைமுக சைபர் போர் தொடங்கியுள்ளது. பிரேசில் மட்டுமின்றி சீனா, இந்தியா போன்ற நாடுகளிலும் இப்படி சைபர் போரை ஆரம்பித்துள்ளது.
இது மிகவும் ஆபத்தானது. எந்த ஒரு ஆவணங்களும் இரகசியமானவை என்று கூற முடியாத நிலை உள்ளது. இதை உடனே கூட்டாக எதிர்த்து தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
அமெரிக்க உளவு அமைப்பு மட்டும் இந்த வேலையில் இறங்கவில்லை. அதற்கு முழு துணை நிற்பது,பிரிட்டனின் ஜிசிஎச்கியூ என்ற உளவு அமைப்பு. அமெக்காவின் இந்த சைபர் உளவு வேலையில் இப்போது இரு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒன்றுக்கு பெயர் பறக்கும் பன்றி. இன்னொன்றின் பெயர் மௌன நாய்க்குட்டி.
இந்த திட்டங்களில் ஈடுபட சில தனியார் நிறுவனங்களையும் அமெரிக்க உளவு அமைப்பு நியமித்துள்ளது.
இந்த தனியார் நிறுவனங்களுக்கு சைபர் தில்லுமுல்லுகளில் இறங்க முழு அதிகாரம் அளித்துள்ளது. எந்த நாட்டின் கனணி வலையமைப்புக்களில் ஊடுருவி தகவல்களை எடுக்க வேண்டும் எந்த தகவல்கள் வேண்டும் என்று அமெரிக்க அமைப்பு சொல்லி விடும்.
அவற்றை இந்த தனியார் நிறுவனங்கள் சேகரித்து தரும். இந்த இரு திட்டங்கள் மூலம் 212 நாடுகளின் 10,000 வங்கிகளின் இரகசிய ஆவணங்களை சேகரிப்பது முக்கிய நடவடிக்கை. ஏடிஎம்களில் பணம் எடுக்கும் தகவல்கள் போன்றவையும் இதில் அடங்கும்.
இந்த நாடுகளில் இந்தியாவும் உண்டு. தனிநபர் ஏடிஎம் கணக்கு வழக்குகளும் கூட இந்த இரகசிய நடவடிக்கை மூலம் அமெரிக்க உளவு அமைப்புக்கு போகிறது என்கிறார் கிரீன்வோல்ட்.
பெலாரஸில் நடந்த மிஸ் சூப்பர் நேஷனல் அழகிப் போட்டியில் கலந்து கொண்ட குரகாவோ தீவைச் சேர்ந்த அழகி வெசின்டே டெமிலினோஸ் கர்ப்பமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் அழகிப் போட்டியிலிருந்து விலக நேரிட்டது.
இந்தஅழகிப் போட்டியில் மணிலாவைச் சேர்ந்த மிஸ் முத்யா ததுல் பட்டம் வென்றார். இந்தப் பட்டத்தை வென்ற முதல் பிலிப்பைன்ஸ் அழகி இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் நகரில் இந்த அழகிப் போட்டி நடைபெற்றது. இந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்ட மிஸ் குரகாவோ நீச்சல் உடைப் போட்டியின் போதுதான் கர்ப்பமாக இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது.
காரணம் அவரது வயிறு பெரிதாக காணப்பட்டது. தாய்மையை மறைக்க முடியாதே. இதையடுத்து நடுவர்கள் அவருக்கு கர்ப்பமாக இருக்கிறாரா என்பதற்கான சோதனைக்கு உத்தரவிட்டனர். சோதனையில் அவர் கர்ப்பமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இருப்பினும் தான் கர்ப்பமாக இருப்பது ஏற்கனவே மிஸ் குரகாவோவுக்கு தெரிந்திருந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடையவில்லை. ஆனால் போட்டியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டு விட்டதே என்பதுதான் அவருக்கு வருத்தமாக போய் விட்டதாம்.
போட்டியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இருப்பினும் அவர் போட்டி முழுவதும் கூடவே இருந்து சக போட்டியாளர்களை ஊக்குவிக்க அனுமதி தந்தனர் போட்டி அமைப்பாளர்கள். அவரும் உற்சாகத்துடன் சக போட்டியாளர்களை ஊக்குவித்தார்.
இந்தப் போட்டியில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த அழகி முத்யா ததுல் பட்டம் வென்றார். இப்பட்டம் வென்ற முதல் பிலிப்பைன்ஸ் அழகி இவர்தான்.
கரீபியக் கடலில், நெதர்லாந்துக்கு அருகில் உள்ள குட்டித் தீவுதான் குரகாவோ. இங்கு மொத்தமே ஒன்றரை இலட்சம் பேர்தான் வசிக்கிறார்கள். நெதர்லாந்து நாட்டுக்குக் கட்டப்பட்டது இந்தத் தீவு.
கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் இறந்த 4 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை போராட்ட பந்தலில் நடந்தது.
நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களின் கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவ மக்களும், போராட்டக் குழுவினரும் கலந்து கொண்டனர்.
இதையொட்டி காலை 10 மணி அளவில் 4 பேர் உருவப் படங்களுக்கும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. மௌன ஊர்வலமும் நடைபெற்றது. இடிந்தகரை, கூடங்குளம், விஜயாபதி கிராமங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
பின்னர் நடந்த கூட்டத்துக்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான், அவருடைய மனைவி கயல்விழி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் சீமான் பேசும்போது 2 ஆண்டுகளாக கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக மக்கள் இங்கு போராடி வருகிறார்கள். தரமற்ற உதிரி பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும்.
வாழ்வாதாரத்துக்காக போராடியதற்காக மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றார்.
ஆபிரிக்க நாட்டில் உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து கடந்த 2011ம் ஆண்டில் ஒரு இராட்சத அளவிலான வைரக்கல் தோண்டி எடுக்கப்பட்டது. அது 299 கரட் எடை இருந்தது.
பின்னர் அது பட்டை தீட்டப்பட்டு 118.28 கரட் எடை ஆக மாறியது. வெள்ளை நிறத்தினால் ஆன அந்த வைரக்கல் பளபள வென ஜொலிக்கிறது.
கோழி முட்டை அளவிலான இந்த வைரக்கல் ஹொங்கொங்கில் உள்ள சோத்பீ என்ற மையத்தில் வருகிற அக்டோபர் மாதம் ஏலம் விடப்படவுள்ளது.
இந்த தகவலை சோத்பீ ஏல மையத்தின் துணை தலைவர் கயக்கின் யிவோ லண்டனில் தெரிவித்தார். கடந்த ஆண்டு 101.73 கரட் எடையுள்ள வைரம் அதிக விலைக்கு ஏலம் போனது ($26.7 மில்லியன்).
தற்போது இந்த வைரம் அதன் விற்பனை சாதனையை முறியடித்து கூடுதல் விலைக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனுடன் சேர்த்து 7.59 கரட் எடையுள்ள நீல நிற வைரமும் ஏலத்தில் விடப்படுகிறது.
ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு வெடிமருந்து, போதை பொருள் கடத்திய வழக்கில் 16 கடத்தல்காரர்கள் நடமாட்டம் குறித்து உளவுப்பிரிவு பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
இலங்கையில் போர் தீவிரமாக நடந்தபோது தமிழகத்தில் இருந்து குறிப்பாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபத்தில் இருந்து விடுதலை புலிகளுக்கு வெடிமருந்து, உயிர்காக்கும் மருந்து மற்றும் வியாபாரிகளுக்கு கஞ்சா, பிரவுன் சுகர் ஆகியவை, இலங்கைக்கு கடத்தப்பட்டது.
இது தொடர்பாக 2000 தொடக்கம் 13ம் ஆண்டு வரை ராமேஸ்வரத்தில் சில கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிலர் பிணையில் வெளிவந்துள்ளனர். சிலர் விடுதலையாகி உள்ளனர். இவர்கள் உள்ளூர் மீனவர்களிடம் பணம் தருவதாக கூறி, மீண்டும் கடத்தல் தொழிலை தொடர்கின்றனர்.
இவர்களால் கடல்வழி பாதுகாப்பில் சிக்கல் எழுந்துள்ளது. தற்போது, கடல்வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையால் தமிழக கடலோரத்தில் பொலிசார் உஷார்படுத்தப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக கடத்தல்காரர்கள் நடமாட்டம் மாநில உளவுப்பிரிவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு வெடிமருந்து, போதை பொருட்கள் கடத்திய வழக்கில் தொடர்புடைய 16 கடத்தல்காரர்களின் செயல்பாடு யார் யாருடன் தொடர்பு அவர்கள் மீதான நிலுவை வழக்கின் தன்மை குறித்து விசாரித்து உயரதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர்.
ஜோர்ஜியா நாட்டில் இறந்து போன தனது 22 வயது மகனின் சடலத்தை கடந்த 18 வருடங்களாக பாதுகாத்து வருகிறார் தாய் ஒருவர்.
ஜியார்ஜியா நாட்டைச் சேர்ந்தவர் சியுரி வரத்ஸ்கேலியா இவரது மகன் ஜோனி பகரத்ஸே கடந்த 18 வருடங்களுக்கு முன்பு எதிர்பாரா விதமாக திடீரென மரணமடைந்தான்.
இறக்கும் போது ஜோனியின் வயது 22. ஆயினும் மகனைப் பிரிய மனமில்லாத அந்தத் தாய், மகனின் உடலைப் பதப்படுத்தி வீட்டிலேயே வைத்துக் கொண்டார்.
ஒரு நாள் கனவில் தோன்றிய அசரீரி குரல் ஒன்று ஜோனியின் உடல் கெட்டுப் போகாமல் இருக்க அதன் மீது தினமும் வோட்காவை ஊற்றச் சொன்னதாம்.
அது முதல் தினமும் வோட்காவை ஜோனியின் உடல் மீது தெளித்து வந்துள்ளார் சியுரி. மகனின் உடலைப் பாதுகாப்பதற்காக சியுரி கூறும் காரணம் ஜோனியின் குழந்தைகள் தனது தந்தை எப்படிப்பட்டவர் என்பதைக் காண வேண்டும்´ என்பதற்காதத்தானாம்.
ஒருநாள் வோட்கா ஊற்றாவிட்டாலும் ஜோனின் உடல் கருப்பு நிறமாக மாறிவிடும் எனத் தெரிவித்துள்ளார் சியுரி.