ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.
சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் துபாயில் நேற்று வெளியிட்டது.
இதில் அணிகளுக்கான பட்டியலில், 123 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த படியாக அவுஸ்திரேலியா(114 புள்ளி), இங்கிலாந்து(112 புள்ளி) அணிகள் உள்ளன.
துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் ஹசிம் ஆம்லா, டிவில்லியர்ஸ் மற்றும் இலங்கையின் சங்கக்கார உள்ளனர். அடுத்து இந்தியாவின் வீராத்கோலி 4வது இடமும், அணித்தலைவர் டோனி 7வது இடத்திலும் உள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில், இந்தி அணியின் ரவிந்திர ஜடேஜா, மேற்கிந்திய தீவுகள் அணியின் சுனில் நரைனுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் உள்ளார்.
சகலதுறை தரவரிசைப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில், பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன், இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா உள்ளனர்.
அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ தன்னுடைய பணியாளர்கள் குறித்து ஆண்டுதோறும் ரகசிய விசாரணை நடத்தி வருகிறது.
அமெரிக்க உளவுத்துறைக்குள் ஊடுருவ அல்கொய்தா, பாலஸ்தீனத்தின் ஹமாஸ் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள் தொடர்ந்து முயன்று வருகின்றன.
இதனையடுத்து தனது ஆயிரக்கணக்கான ஊழியர்களின் பின்னணி குறித்து ஆண்டுதோறும் ரகசிய விசாரணை நடத்தி வருகிறது.
அதாவது அமெரிக்க உளவு அமைப்பு, இராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு, காவல்துறையில் வேலைகோரி விண்ணப்பிப்போர், வேலையில் சேர்க்கப்பட்டோர் என பலர் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
குறிப்பாக சிஐஏவில் பணியாற்றும் ஐந்தில் ஒருவருக்கு தீவிரவாத அமைப்புகள், பிற நாட்டு உளவு அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.
பிரபல நாட்டுப்புறப் பாடகி அனிதா குப்புசாமி இன்று ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். அனிதா குப்புசாமி அடிப்படையில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர். பீகார் மாநிலம்தான் இவரது பூர்வீகம்.
பிரபல நாட்டுப் புறக் கலைஞரும் ஆய்வாளரும், பாடகருமான குப்புசாமி மீது காதல் கொண்டு இருவரும் காதல் மணம் புரிந்தனர். நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமல்லாமல் கர்நாடக இசையிலும் புலமை பெற்றவர் அனிதா குப்புசாமி. அதில் எம்.ஏ பட்டமும் பெற்றுள்ளார்.
நாட்டுப்புறப் பாடல்கள், பக்திப் பாடல்கள், மெல்லிசை என அனைத்து வகையான பாடல்களையும் இனிமையான குரலில் பாடும் வல்லமை படைத்தவர். கணவர் புஷ்பவனம் குப்புசாமியுடன் இணைந்து பல கச்சேரிகளை நடத்தி வருகிறார்.
தற்போது ஜெயா டிவியில் நிகழ்ச்சி நடத்தி வரும் அனிதா குப்புசாமி இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
அதேபோல பாமகவில் முன்பு முக்கியத் தலைவராக இருந்து பின்னர் விலகிய பேராசிரியர் தீரனும் அதிமுகவில் இன்று இணைந்தார். முன்னாள் திமுக அமைச்சரான கோமதி சீனிவாசனும் தனது கணவரோடு அதிமுகவில் இணைந்துள்ளார்.
8 அணிகள் இடையிலான 10வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேபாள தலைநகர் காட்மாண்டுவில் நடந்து வருகிறது.
இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதியது.
14வது நிமிடத்தில் பாகிஸ்தான் அணித் தலைவர் சமர் ஐஷக், பந்தை தடுக்க முயற்சித்த போது அது இந்தியாவுக்கு சுயகோலாக விழுந்தது. அதன் பிறகு கடைசி வரை கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.
முடிவில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்திய அணி அடுத்து வங்காளதேசத்தை இன்று எதிர்கொள்கிறது.
சிரியாவில் போரினை தடுப்பதற்காக வருகிற 7ம் திகதி உண்ணாவிரதம் இருக்க போப்பாண்டவர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இன்று நடந்த பிரார்த்தனைக்குப் பின்னர் அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், செப்டம்பர் 7ம் திகதி புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் இரவு 7 மணியிலிருந்து நள்ளிரவு வரை உண்ணாவிரதம் நடைபெறும்.
அனைவரும் ஒருங்கிணைவோம் கடவுள் கொடுத்த அமைதி என்ற மாபெரும் பொக்கிஷம் சிதைந்து போகாமலும் சிரிய மக்கள் அன்புடனும், அமைதியுடனும் வாழ வேண்டும் என்று வேண்டியும், உலகம் முழுவதும் மீண்டும் போர் வெடிக்காமலும், வன்முறை ஒழியவும் வேண்டி இந்த உண்ணாவிரதம் மற்றும் அமைதிப் பிரார்த்தனை நடைபெறும்.
இந்த அமைதி வழி உண்ணாவிரதத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல், கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவர்கள் அலலாதவர்களும் பங்கு பெற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தங்களுக்குப் பொருத்தமான முறையில் வழியில் அதை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். மீண்டும் போர் நமக்கு வேண்டாம், நமக்குத் தேவை அமைதியான உலகம்தான் என்று தெரிவித்துள்ளார்.
வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது ராஜா ராணி வரை நிறைய ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இவர் பிரபலம். அண்மையில் இந்தி படம் ஒன்றிலும் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இவர் தற்போது ஹாலிவுட் படத்திற்கும் இசையமைக்க உள்ளாராம். இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, விரைவில் ஒரு ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்க போகிறேன். இதுகுறித்த அறிவிப்பை சம்பந்தப்பட்ட பட நிறுவனமே விரைவில் அறிவிக்கும். அதுவரைக்கும் பொறுத்திருங்கள் என்று கூறியிருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷின் மாமாவான ஏ.ஆர்.ரஹ்மான் ஹாலிவுட்டில் கால்பதித்து இரண்டு ஆஸ்கார் விருதுகளை வாங்கி வந்தார். அதுபோல், ஜி.வி.பிரகாஷும் ஹாலிவுட்டில் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
யாழ். கோண்டாவில் சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் தலை நசுங்கி ஸ்தலத்திலையே உயிரிழந்துள்ளார்.
பலாலி வீதியில் கோண்டாவில் சந்திக்கு அருகில் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் காளிகோவிலடி, கொக்குவில் கிழக்கை சேர்ந்த ரவிக்குமார் பிரிட்மன் என்ற 24 வயதுடைய இளைஞனே மரணமடைந்துள்ளார்.
யாழ். நகரில் இருந்து தென்னிலங்கை சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பலாலி வீதி வழியாக பலாலியை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் கோண்டாவில் சந்திக்கருகில் வீதியோரமாக மோட்டார் சைக்கிளில் நின்ற இளைஞனை மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.
மரணமடைந்த இளைஞன் குறித்த பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால் பிரதேசவாசிகள் குறித்த பஸ்ஸை பொலிசார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்ல தடையாக இருந்தனர். இதன் காரணமாக இவ் விடத்தில் பொலிசாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு அப் பிரதேசத்தில் பதட்டமான சூழ் நிலவியது.
உளவுபார்க்கும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நாரையொன்று எகிப்தில் பிடிபட்டுள்ளது. குறித்த பறவையை நபரொருவர் பிடித்துள்ளதுடன் கெயிரோவிற்கு தென்கிழக்கில் சுமார் 280 மைல்கள் தொலைவில் உள்ள கீனா என்ற பகுதியில் உள்ள பொலிஸ் நிலையமொன்றில் ஒப்படைத்துள்ளார்.
நாரையின் உடலின் மேற்பகுதியில் இலத்திரனியல் உபகரணமொன்று பொருத்தப்பட்டுள்ளமையால் இது உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபடும் பொருட்டு பயிற்றுவிக்கப்பட்டிருக்கலாம் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதனை பரிசோதித்த அதிகாரிகள் நாரையின் உடலில் பொருத்தப்பட்டுள்ள கருவி வெடிக்கக்கூடியதோ அல்லது உளவுபார்க்கும் கருவியோ அல்லவென தெரிவித்துள்ளனர். இது பறவைகளின் நடவடிக்கை தொடர்பில் அவதானிக்கும் டிரக்கர் கருவியொன்றென தெரிவித்துள்ளனர். இதேபோன்ற பல சம்பவங்கள் பல நாடுகளில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன.
சவுதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகளில் உளவுபார்த்தாகக் கூறப்படும் கழுகுகள், புறாக்கள் என பல பறவைகள் உடலில் இலத்திரனியல் உபகரணங்களுடன் பிடிக்கப்பட்டிருந்தன. மேலும் இஸ்ரேல் இம்மாதிரியான உளவு பார்க்கும் நடவடிக்கைகளில் அடிக்கடி ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கிட்டத்தட்ட 5 இலட்சம் பெண்கள் நல்ல கணவர் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்களாம். இவர்கள் அனைவருமே காதல் மற்றும் திருமண வயதைத் தாண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எத்தனையோ முறை டேட்டிங் போயும் கூட தங்களுக்கு நல்ல காதலர் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள் இப்பெண்கள். ஸூ ஜியாஜிக்கு 31 வயதாகிறது. நல்ல வேலை, கை நிறைய சம்பளம். ஆனால் இன்னும் திருமணமாகவில்லை. காரணம் நல்ல மாப்பிள்ளை கிடைக்கவில்லை.
இதனால் வீட்டிலும் அலுவலகத்திலும் நிறைய கேள்விகளை எதிர்கொண்டு தர்மசங்கடத்தில் தவிக்கிறாராம் ஸூ. இதுகுறித்து ஸூ கூறுகையில், நகர்ப்புற சீன ஆண்கள், தங்களது மனைவி அல்லது காதலி தங்களை விட குறைந்த படிப்பை படித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். சம்பளம் குறைவாகப் பெற வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
கண்ணை மூடிக் கொண்டு திருமணம் செய்ய அவர்கள் தயாராக இல்லை. இதுதான் பெரிய பிரச்சினை என்கிறார். மேலும் அவர் கூறுகையில் எங்களை எல்லோரும் ஷெங்னு என்று சொல்லிக் கூப்பிடுகிறார்கள். ஷெங்னு என்றால் கைவிடப்பட்ட பெண்கள் என்று அர்த்தம்.
20 வயதுகளில் திருமணமாகாவிட்டால் அப்படிப் பெயர் வைத்து விடுகிறார்கள். சீனாவின் பிரபலமான திருமண தொலைக்காட்சி ஷோவை நடத்தி வரும் நி லின் என்பவர் கூறுகையில், சீன ஆண்கள் பெரும்பாலும் தங்களை விட குறைந்தவர்களைத்தான் திருமணம் செய்ய முயலுகின்றனர்.
ஏ கிரேடு ஆண்கள் பி கிரேடு பெண்களைத் திருமணம் செய்கின்னர். பி கிரேடு ஆண்கள், சி கிரேடு பெண்களையும், சி கிரேடு ஆண்கள் டி கிரேடு பெண்களையும் மணக்கின்றனர். இதில் ஏ கிரேடு பெண்களும், டி கிரேடு ஆண்களும்தான் பார்ட்னர் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.
பெய்ஜிங் நகரில் 20 மற்றும் 30 வயதைத் தாண்டிய பெண்களில் மூன்றில் ஒரு பங்குப் பேர் திருமணமாகாமல் தவிக்கின்றனர். தலைநகரில் மட்டும் கிட்டத்தட்ட 5 இலட்சம் பெண்கள் நல்ல கணவர் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
ஷாங்காய் நகரில் திருமணமாகமல் இருக்கும் பெண்களின் நலனுக்காக அரசே வரண் பார்க்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து தருகிறதாம். இருந்தும் கூட சரியான கணவர்களைப் பெறும் பெண்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறதாம்.
‘‘நழுவும் மீன்’’ என்பதற்கேற்ப எந்த பிரச்னையிலும் சிக்காமல் நழுவி விடுவீர்கள் நீங்கள். தற்போதிருக்கும் கிரக சூழ்நிலையில் பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும் நன்மைகளை அனுபவிக்கப் போகிறீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த குறைகள் ஒவ்வொன்றாக மாறும். கடவுளின் அருள் பலத்தால் பொருளாதார வளம் சிறப்படையும்.
காரிய அனுகூலங்களும் உண்டு. செய்யும் முயற்சிகளில் தடை வந்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு. தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். உத்யோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும்.
தொழில் செய்பவர்கள் பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். பணவரவு அதிகரிக்கும். தைரியாதிபதி சுக்கிரன் ராசியைப் பார்க்கும் அமைப்பு அமைந்துள்ளதால் வழக்கில் வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள்.
மூன்றாம் வீட்டுக்குரியவர் ஏழில் உலவுவதால் சகோதர சகோதரி வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது. பெண்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும்.
அழகிய பெரிய வீடும் மற்றும் விலை உயர்ந்த வாகனமும் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். கலைத்துறையினர் வளர்ச்சி சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகம் இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு மாத முற்பகுதி பாடுபட வேண்டியிருந்தாலும், பிற்பாதி மிகவும் நன்றாக இருக்கும். மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்துபடிப்பது அவசியமாகும். சிலருக்கு வயிறு உபாதைகள் வந்து மறையும்.
பரிகாரம் : வியாழக்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஷீரடி சாய் கோயிலுக்கோ அல்லது ஏதேனும் மகான்களின் ஜீவசமாதிகளுக்கோ சென்று வணங்கி வரவும்.
சொல்ல வேண்டிய மந்திரம் : கோளறு பதிகத்தை தினமும் கூறவும்.
சிறப்பு பரிகாரம் : சிவாலயத்தில் உள்ள நவகிரகங்களுக்கு நெய் தீபம் ஏற்றவும்.
‘‘கும்ப மனம்’’ என்பதற்கேற்ப அடுத்தவரின் மனதை எளிதில் புரிந்து கொள்ளும் சக்தி படைத்தவர்கள் நீங்கள். ஒன்பதாம் இடத்தில் ராகுவுடன் இணைந்த ராசிநாதன் சனி, பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் தனாதிபதி குரு இருப்பது சிறப்பு. நல்ல பொருளாதார வளமும் மேன்மையும் உண்டு. நன்மைகள் அதிகம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். நல்ல வரன் கிடைக்கும். சிலருக்கு சந்தான பாக்கியம் கிட்டும். வீடு, மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். புதிய சொத்து வாங்கலாம்.
பிள்ளைகளால் பெருமை ஏற்படும். உத்யோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடையலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம்.
கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சரியான தருணமிது. பெண்களுக்கு பெற்றோர் நலம் கவனிக்கப்பட வேண்டிய காலமிது.
மக்கள் நலனிற்கு எந்த குறைபாடும் இருக்காது. கலைத்துறையினருக்கு ஓரளவு நன்மைகள் வந்து சேரும். ஓரளவு சோதனைகளும் இருக்கும். சில புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ், பாராட்டு வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் எடுப்பதற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும்.
மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். மனதில் இருந்து வந்த இனம்புரியாத வேதனை மறையும்.
பரிகாரம் : சிவன் கோயிலில் உள்ள பைரவரை வணங்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம் : ‘‘ஓம் ஸ்ரீசசிசேகராய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை கூறவும்.
சிறப்பு பரிகாரம் : வியாழக்கிழமை தோறும் சிவாலயத்தில் அருளும் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை சாத்தி வழிபடவும்.
சந்திராஷ்டம தினங்கள் : 6, 7 ஆகிய திகதிகளில் புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம்.
‘‘மகர கௌரவம்’’ என்பதற்கேற்ப சுய கௌரவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் நீங்கள் ராசிநாதன் சனி, ராகுவுடன் பத்தில் இருக்கிறார். பொருளாதாரம் சீராக இருக்கும். அதே வேளையில் செலவும் அதிகரிக்கலாம். சிக்கனம் தேவை. குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். மனைவி வழியில் கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆனாலும் அது நொடிப் பொழுதில் சரியாகி விடும்.
மனதில் நிம்மதியும் ஆனந்தமும் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை காணலாம். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும். சந்தான பாக்கியம் கிடைப்பதற்கு யோகமான காலகட்டம் இது. புதிய வீடு, மனை வாங்க தடைகள் ஏற்படலாம்.
உத்யோகஸ்தர்களுக்கு அதிக வேலைபளு இருந்தாலும் அனைத்தையும் சுலபமாக செய்வீர்கள். அலைச்சல்கள் வரலாம். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரம் சீராக நடக்கும். புதிய தொழில் ஆரம்பித்தவர்களுக்கு பொன்னான காலகட்டமிது.
கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்குள் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வரவு செலவு கணக்கில் இருந்து வந்த சந்தேகங்கள் நீங்கும். பெண்களுக்கு இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிரிகளின் தொல்லைகள் குறையும்.
உங்கள் பக்கமுள்ள நியாயம் ஓங்கும். கலைத்துறையினருக்கு மிகப் பொன்னான காலமிது. சிறிது முயற்சி எடுத்தாலும் வாய்ப்புகள் வந்து குவியும். புதிய ஒப்பந்தங்களை துணிந்து ஏற்றுக் கொள்ளலாம். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.
மாணவர்கள் சிறிது சிரத்தை எடுத்தாலே பெரிய வெற்றியைப் பெறலாம். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிடைக்கும். உடல் நலம் சிறப்படையும். பித்தம் மயக்கம் போன்ற உபாதைகள் நீங்கும். சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு தேவை. நெருப்பு தொடர்பான வேலைகளில் இருப்பவர்களுக்கு மிகுந்த கவனம் தேவை.
பரிகாரம் : சனிக்கிழமைதோறும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள்.
சொல்ல வேண்டிய மந்திரம் : ‘‘ஓம் வயநமசி’’ என்ற மந்திரத்தை தினமும் 11 முறை கூறவும்.
சிறப்பு பரிகாரம் : எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழிந்து பிரதோஷ அபிஷேகத்திற்குக் கொடுக்கவும்.
சந்திராஷ்டம தினங்கள் : 4, 5 ஆகிய திகதிகளில் சிக்கனமாக இருங்கள்.
‘‘நேர்க்கோடு வில்’’ என்பதற்கேற்ப செய்யும் செயலிலும் குறிக்கோளிலும் அங்கிங்கு கவனம் சிதறாதபடி நேர்க்கோட்டு சிந்தனையில் இருக்கும் தனுசு ராசி அன்பர்களே ராசிநாதன் குருவின் பார்வை, மங்களகாரகன் செவ்வாயின் பார்வை, தனதைரியாதிபதி சனியின் பார்வை, ராகுவின் பார்வை என மிக நல்ல பலன்களை அனுபவிக்கும் காலகட்டத்தில் இருக்கிறீர்கள்.
மிக முக்கிய கிரகங்களான செவ்வாய், குரு, சனி, ராகு திரேக்காணத்தில் அமர்வதும் நன்மைகள் கிடைக்கக் கூடிய காலகட்டமாகும். எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப பிரச்னை கட்டுக்குள் அடங்கி இருக்கும். புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளையும் இப்போது தொடங்கலாம். உத்யோகம் பார்ப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்ததை விட அதிகமாக கிடைக்கும். உங்கள் ஆற்றல் மேம்படும்.
தொழில் புரிவோருக்கு இருந்து வந்த மந்த நிலை மறையும். படிப்படியாக லாபம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். பெண்களே நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்னைகளையும் மிகச் சாதுர்யமாக கையாளுவீர்கள்.
உங்களது யோசனைகளை மற்றவர்கள் கேட்டும் அனுசரித்தும் செல்வார்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். ஏற்கனவே இருந்து வந்த பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். நெடுநாளாக வராமல் இருந்த பணம் வரும்.
பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடையலாம். கடந்த சில மாதங்களாக இருந்து வந்த மந்தநிலை அடியோடு மாறும். சிலருக்கு வெளிநாடு சென்று படிப்பதற்குண்டான காரியங்களை இப்போது தொடங்கலாம்.
பரிகாரம் : வியாழன்தோறும் குருவை வணங்குங்கள்.
சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் ஆஞ்சநேயாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை கூறவும்.
சிறப்பு பரிகாரம் : வியாழக்கிழமை தோறும் அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து அர்ச்சனை செய்யவும்.
“தேளான் மறவான்’’ என்பதற்கேற்ப யாரேனும் தீங்கு செய்து விட்டால் அதனை ஒருபோதும் மறக்காத குணமும் அதே வேளையில் மன்னிக்கும் குணமும் கொண்ட விருச்சிக ராசி வாசகர்களே தனஸ்தானத்தின் மீது ராசிநாதன் செவ்வாய், குரு பார்வை இருப்பதால் மிகுந்த அனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.
ஏழரைச் சனியால் வீண்கலகமும் அலைச்சலும் இருக்கும், இருப்பினும் குருவின் பார்வை விரய சனி மீது விழுவதால் காரிய அனுகூலமும் நற்சுகமும் பொருளாதார மேம்பாடும் உண்டாகும். நன்மைகள் கிடைக்கும். மதிப்பு மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும்.
தைரிய வீர்ய ஸ்தானத்தை பார்க்கும் ராசிநாதனின் பலத்தால் தடைகளை முறியடித்து காரிய வெற்றி காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். கணவன்-மனைவி இடையே அன்பும் பாசமும் பெருகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். உடல்நலனைப் பொறுத்த வரை சளி மற்றும் மார்புத் தொல்லை வரலாம்.
உத்யோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கோரிக்கைகள், ஒப்பந்தங்கள் நிறைவேறும். உடன்பணி செய்வோர், மேலதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும்.
சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழில் செய்வோருக்கு கடந்த காலத்தைவிட வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். லாபம் கூடும். புதிய தொழிலால் அனுகூலம் ஏற்படும். பெண்கள் பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள்.
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு அனுகூலமான போக்கே காணப்படுகிறது. நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை. வழக்கு விவகாரங்கள் சாதகமாக முடியும்.
பரிகாரம் : செவ்வாய்தோறும் அம்மனுக்கு நல்லெண்ணெய், நெய் கலந்து விளக்கு ஏற்றவும்.
சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் ஸ்ரீகார்த்திகேயாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை கூறவும்.
சிறப்பு பரிகாரம் : சஷ்டி தோறும் முருகனுக்கு பாலபிஷேகமும் சிவப்பு நிற பூக்களால் அர்ச்சனையும் செய்யவும்.
சந்திராஷ்டம தினங்கள் : 1, 26, 27, 28 ஆகிய திகதிகளில் எதிலும் நிதானம் தேவை.
“பொறுமை தராசு’’ என்பதற்கேற்ப எதிலும் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் பொறுமைய கடைப்பிடிப்பவர்கள் நீங்கள். தற்போது ராசியில் சனி, ராகு, களத்திர ஸ்தானத்தில் கேது, பாக்கிய ஸ்தானத்தில் குரு, செவ்வாய், லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், விரயஸ்தானத்தில் ராசிநாதன் சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் ராசியில் இருக்கிறது. இருந்தாலும் சுக்கிரனுக்கு மறைவு ஸ்தானம் என்பது கிடையாது என்ற சிறப்பு பலன்படி உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது. மனதில் பட்டதை பளிச்சென்று சொல்வீர்கள்.
ராசியில் ஏழரைச் சனி இருந்தாலும் குரு பார்ப்பதாலும் முன்னேற்றப் பலன்கள் உண்டு. இதுவரை இருந்து வந்த பலவிதமான பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. உங்களுடைய உடல்நலத்தை பொறுத்த வரை உஷ்ணம் மற்றும் சரும சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். நல்ல பணப்புழக்கம் இருக்கும்.
குடும்பத்தில் தம்பதிகளிடையே இருந்து வந்த பிரச்னைகள் மறையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டிவரும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு, கேட்ட இடமாற்றம் உங்களை வந்து சேரும்.
வியாபாரிகள் சிறப்பான முன்னேற்றத்தைப் பெறலாம். லாபம் அதிகரிக்கும். எதிரிகளை உதிரிகளாக்குவீர்கள். புதியதாக ஆரம்பித்த தொழிலில் ஏற்றம் உண்டு. பெண்களுக்கு இந்த காலகட்டம் நன்மை, தீமைகள் என இரண்டுமே ஏற்படும். அலுவலகத்தில் பொறுப்பும் சுமையும் அதிகரிக்கும்.
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்தாலும் முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். பொருளாதாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. மாணவர்கள் சிரத்தை எடுத்து படித்தால் பலன் நிச்சயம். அரசியல்வாதிகள் சீரான பலனை எதிர்பார்க்கலாம். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.
பரிகாரம் : நவகிரகங்களை வலம் வாருங்கள்.
சொல்ல வேண்டிய மந்திரம் : ஓம் ஸ்ரீகைலாஸவாஸினே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை கூறவும்.
சிறப்பு பரிகாரம் : நவகிரகங்களுக்கு நெய் விளக்கு ஏற்றவும்.
சந்திராஷ்டம தினங்கள் : 24, 25 ஆகிய திகதிகளில் பிறர் விஷயங்களில் தலையிடாதீர்கள்.
‘‘கன்னியான் தர்மவான்’’ என்பதற்கேற்ப அனைத்து சூழ்நிலைகளிலும் தர்மம் தவறாத கன்னி ராசி அன்பர்களே ராசிநாதன் புதன் மாத முற்பகுதியில் விரய ஸ்தானத்திலும் பின் ராசியிலும் மாறுகிறார். தனஸ்தானாதிபதி ராசியில் நீசமாக இருந்தாலும் நீச பங்க ராஜ யோகம் ஏற்படுகிறது. தனஸ்தானத்தை குரு பார்க்கிறார். குடும்பத்தில் மிக நல்ல முன்னேற்றங்களைத் தருவார். பணம் வரும். பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். சனி சாதகமற்ற பலன்களைக் கொடுத்தாலும் குருவின் பார்வை நன்மை செய்யும். காரியத் தடைகள் நீங்கி, அனுகூலம் பிறக்கும். புதிய வீடு வாங்க வாய்ப்பு உண்டு.
குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும் என்றாலும் ராசியைப் பார்க்கும் செவ்வாயால் சில பிரச்னைகள் வரத்தான் செய்யும். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். உத்யோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும்.
சொந்தத் தொழில் புரிவோர் சிறிது சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். ஆனாலும் உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கும். ஏழரைச் சனியின் கடைசி காலகட்டத்தில் இருந்தாலும் புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம்.
கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பண வரவும் இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவை புரிவோருக்கு பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். ஆனால், பதவி கிடைப்பதில் வாக்குவாதம் ஏற்படலாம்.
மாணவர்கள் படிப்பில் தீவிர அக்கறை எடுக்க வேண்டும். பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்து போக வேண்டியிருக்கும். உடல்நலத்தைப் பொறுத்தவரையில் பித்தம் மயக்கம் தொடர்பான பிரச்னைகள் வரலாம். தொழில் ஸ்தான குருவின் தனஸ்தான பார்வையினால் பொதுவாகச் சொல்லவேண்டுமானால் மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும்.
பரிகாரம் : புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலில் உள்ள தாயாரை வணங்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் ஸ்ரீமஹாநாராயணாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை கூறவும்.
சிறப்பு பரிகாரம் : விநாயகருக்கு மரிக்கொழுந்து சாத்தி வணங்கவும்.
சந்திராஷ்டம தினங்கள் : 22, 23 ஆகிய திகதிகளில் அவசர முடிவுகள் எதுவும் எடுக்காதீர்கள்.