இன்டர்நெட்டில் பரவும் சந்துரு படங்கள்!!

chandru

இயக்குனர் சேரன் மகளை காதலித்து திடீரென என பிரபலமாகியுள்ளார் சந்துரு. இவர் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றுவதாகவும் டான்சர் என்றும் எம்.பி.ஏ. பட்டதாரி என்றும் செய்திகள் வருகின்றன. சேரன் தரப்பினர் இதை மறுக்கிறார்கள். சந்துருவின் நிஜ பெயர் சந்திரசேகரன். தமிழ் இயக்குனர் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றவில்லை. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்கின்றனர்.

சந்துருவின் அப்பா சினிமாவில் சில காலம் வேலை பார்த்துள்ளார். இவரது அம்மா ஈஸ்வரி ஆந்திராவை சேர்ந்தவர். இருவரும் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். தற்போது ஈஸ்வரி இருதய நோயாளியாக இருக்கிறார். சூளைமேட்டில் வசிக்கின்றனர். இவர்களுடன் சந்துருவின் அக்கா பத்மாவும் வசிக்கிறார். இவர்கள் ஏழு வருடங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் மானா மதுரையில் உள்ள அன்பு நகரில் வசித்துள்ளனர். பிறகு சென்னைக்கு குடி பெயர்ந்தார்கள்.

ஆரம்பத்தில் மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஆடல்–பாடல், கலைநிகழ்ச்சிகள் நடத்தும் நடனக்குழுவில் சந்துரு நடனம் ஆடி உள்ளார். பிறகு மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் ஆடி பரிசு வாங்கியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதை வைத்து நிறைய நிகழ்ச்சிகளில் நடனம் ஆட தொடங்கினார். இதனால் அவருக்கு பெண் ரசிகைகள் சேர்ந்தனர். அப்படி ஒரு நிகழ்ச்சியில் ஆடிய போது தான் சேரன் மகள் தாமினியின் அறிமுகம் கிடைத்தது. பிறகு காதல் மலர்ந்தது. சேரனுக்கு காதல் விவரம் தெரிந்ததும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார்.

ஆனால் சந்துருவின் நடவடிக்கைகள் பற்றி விசாரித்தபோது பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரிந்ததாகவும், எனவே அவருக்கு மகளை கட்டி கொடுக்க மறுத்ததாகவும் கூறியுள்ளார்.
இரவு நேரங்களில் வெகுநேரம் பெண்களிடம் பேசி இருப்பது தெரிய வந்துள்ளது என்றும் மூன்று பெண்கள் சந்துருவுக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளனர் என்றும் சேரன் குற்றம் சாட்டினார்.

தனது மூத்த மகளுக்கும் பேஸ்புக்கில் ஐலவ்யூ சொல்லியுள்ளான் என்றும் ஆத்திரப்பட்டு உள்ளார். இது குறித்து போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சந்துரு சிகரெட் பிடிப்பது போன்றும், சேரன் மகளுடன் இருப்பதுபோன்றும் படங்கள் இன்டர்நெட்டில் பரவியுள்ளன.

மீண்டும் ஹீரோவாக வருகிறார் பிரபுதேவா..!

prabhudevaதங்கர் பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், பூமிகா ஆகியோர் நடித்துள்ள படம் களவாடிய பொழுதுகள்.

காதல் கதையான இப்படம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன.

ஐங்கரன் நிறுவனம் தயாரித்த இப்படம் சில பிரச்சனைகளால் கிடப்பில் போடப்பட்டு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

தற்போது களவாடிய பொழுதுகள் படம் செப்டம்பர் வெளியாகிறது.

இது குறித்து தங்கர் பச்சான் கூறுகையில், இந்த படம் காதலின் வழியையும், காதலைப் பற்றியும் சொல்லும் படம்.

எனது முந்தையப் படங்களைப் போலவே எனது குறு நாவலான சருகுகள் நாவலின் கதை தான் இப்படம்.

மேலும் இப்படமானது என்னுடைய ரசிகர்களுக்க பிடிக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

லிபியாவில் சிறையில் கலவரம் – 1000 கைதிகள் தப்பி ஓட்டம்..!

vavuniyaஅரபு நாடான லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்திய அதிபர் மும்மர் கடாபிக்கு எதிராக கடந்த 2011–ம் ஆண்டு மக்கள் புரட்சி நடந்தது. அப்போது அவர் கொல்லப்பட்டார். தற்போது அங்கு ஜனநாயக ஆட்சி நடக்கிறது.

இந்த நிலையில், பெங்காசியில் அரசியல் கட்சி தலைவர் அப்துல் சலாம் அல்–மிஸ்மரி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு முஸ்லீம் சகோதரத்துவ கட்சியினர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அதை தொடர்ந்து தலைநகர் திரிபோலியில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முஸ்லீம் சகோதரத்துவ கட்சி தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

பின்னர் அது கலவரமாக பெங்காசி நகருக்குள் பரவியது. முஸ்லீம் சகோதரத்துவ கட்சியினருக்கும், தேசிய கூட்டணி கட்சியினருக்கும் இடையே மோதலாக மாறியது.

இதற்கிடையே இக்கலவரம் பெங்காசி அருகேயுள்ள அல்–குயாபியாவில் உள்ள மத்திய சிறையிலும் பரவியது. இந்த சிறையில் அரசியல் கைதிகளும், புரட்சியின் போது கொல்லப்பட்ட அதிபர் மும்மர் கடாபியின் ஆதரவாளர்களும் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் கடாபியின் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதனால் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு சுமார் 1000 கைதிகள் சிறையை உடைத்து தப்பினர்.

அதை தொடர்ந்து சிறப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தப்பி ஓடிய கைதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தப்பி ஓடியவர்களில் பலர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை பிரதமர் அலி ஷெய்டன் தெரிவித்துள்ளார். இந்த சிறை மத்திய குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ளது. எனவே தப்பியோடி கைதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் புத்த கோவிலில் குண்டு வெடிப்பு..!

indoஇந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் உள்ள புத்த கோவிலில் ஜன்னல் கதவு அருகில் பதுக்கி வைத்திருந்த குண்டு திடீரென்று வெடித்தது. சற்று நேரத்தில் மற்றொரு குண்டில் இருந்து புகை கிளம்பியது. ஆனால் அது வெடிக்கவில்லை.

இச்சம்பவத்தில் ஜன்னல் பகுதி சேதம் அடைந்தது. ஒருவர் லேசான காயம் அடைந்தார். குண்டு வைத்தது யார், காரணம் என்ன என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்துகிறார்கள்.

இன்று ஆடி அமாவாசை தினம்..!

vavuniyaபிதிர் தர்ப்பணம் செய்யும் புனித ஆடி அமாவாசை தினம் இன்றாகும். இன்று ஆடி மாதம் 20ஆம் திகதி ஆடி அமாவாசை விரதமும் அனுஷ்டிக்கப்படுகிறது.

ஆடி அமாவாசை தினத்தில் இந்துக்கள் தமது மூதாதையர்களை நினைவு கூர்ந்து பிதிர் தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பானது.

பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து நீக்கம் பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

ஆடி அமாவாசை தினத்தன்று அதிகாலையில் நீராடி, சிவாலயம் தரிசனம் செய்து பிதிர்தர்ப்பணம் செய்த பின்னர் அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.

யாழ். மக்கள் இன்றைய தினம் கீரிமலை நகுலேஸ்வரத்தில் தர்ப்பணம் செய்து கீரிமலை கேணியில் தீர்த்த மாடுவார்கள்.

மட்டக்களப்பு வாழ் மக்கள் மாமாங்கப்பிள்ளையார் கோவில், அமிர்தகழியில் தீர்த்தமாடுவார்கள்.

திருகோணமலை வாழ் மக்கள் கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தமாடி பிதிர் கடன் செலுத்துவர்.

இதேபோன்று கொழும்பு முகத்துவாரம் கோயிலிலும், சிலாபம், மாயவனாற்றங் கரையிலும், திருக்கேதீஸ்வரம் பாலாவி கரையிலும் புனித ஆறுகளிலும், நீராடி இறைவனை வழிபடுவார்கள்.

இப் புனித நாளில் பிதிர் தர்ப்பணம் செய்து வழிபடுவதால் பாவங்கள் நீங்கி விமோசனம் பெற முடியும் என்ற நம்பிக்கை இந்து மக்களிடம் உள்ளது.

சிறப்பாக நடைபெற்ற மாமாங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்த உற்சவம்..(படங்கள்)

கந்தபுராண காலத்துக்கு முற்பட்டதாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தேர்த்திருவிழா நேற்று திங்கட்கிழமை காலை வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் 9வது தினமான நேற்று தேர்த்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது. இந்த தேர் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை இன்றைய தினம்  மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்த உற்சவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்உற்சவத்தில் நாடுமுழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வருகின்றனர். இதேவேளை மட்டக்களப்பின் பலபகுதிகளிலுமிருந்தும் ஆலயத்திற்கு  சிறப்பு போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

-ரமணன்-

mamankam12 mamankam1

mamangam1

mamangam2

இன்றும் கடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடரும்..

vavuniyaபுத்தளத்திலிருந்து பொத்துவில் ஊடாக கொழும்பு மற்றும் காலி வரையான கடற் பிரதேசங்களில் இன்று கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவப்பெறும் என இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த பிரசேங்களில் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என அந்நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை மத்திய, சப்ரகமுவ, மேற்கு, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை நிலவப்பெறும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவப் போகிறேன் : கனகா பேட்டி!!

kanaga

நடிகை கனகா உடல்நிலை பற்றி கடந்த வாரம் பரபரப்பு செய்திகள் வெளியானது. இதனால் மனஉளைச்சலான கனகா விளக்கம் அளித்தார். வதந்தி பரவியதற்கு தந்தைதான் காரணம் என்று அவர் வீட்டுக்கு போய் சண்டையும் போட்டார்.

இப்போது அவற்றில் இருந்து மீண்டும் சகஜ நிலைக்கு வந்துள்ளார். வீட்டில் நாய், பூனைகளுடன் வழக்கமான வாழ்க்கையை துவங்கியுள்ளார். தன்னைப் பற்றிய வதந்திகள் குறித்து கனகா அளித்த பேட்டி வருமாறு..

நான் இறந்து போனதாக யாரோ பொய் செய்தி பரப்பி உள்ளனர். சாவை பற்றி நான் கவலைப்படவில்லை. எல்லோருக்கும் ஒருநாள் அது வந்தே தீரும். என் அம்மா எனக்கு எல்லாமுமாக இருந்தார். அவர் இறந்த போது மரண வலிகளை அனுபவித்து விட்டேன்.

ஆலப்புழாவில் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்கப் போய் இறந்ததாக செய்திகள் பரவியது. நான் அந்த ஊருக்கு சமீபகாலத்தில் போகவே இல்லை. நான் தனியாக இருப்பது பற்றி பலரும் பேசுகிறார்கள். தனிமை பற்றிய சிந்தனையே எனக்கு வந்தது இல்லை. வீட்டில் பூனைகள், முயல்கள், அணில்கள் வளர்க்கின்றேன். அவைகள் என் பக்கத்தில் இருக்கின்றன. இதுபோல் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவலாம் என்ற திட்டமும் இருக்கிறது.

எனக்கு மனநிலை பாதித்துள்ளது என்றும் வதந்திகள் பரப்பப்படுகின்றன. வீட்டு வாசலில் சாமி படங்கள், தாயத்துக்கள் இருப்பது பற்றியும் பேசுகிறார்கள். கோவிலுக்கு போகும் போது வாங்கி வரும் படங்களை வாசலில் வைத்துள்ளேன். பேய், பிசாசில் எனக்கு நம்பிக்கை கிடையாது. மீண்டும் சினிமாவில் நடிக்கலாம் என்று இருக்கிறேன். நல்ல கேரக்டர்கள் அமைந்தால் நடிப்பேன். இவ்வாறு கனகா கூறினார்.

கூட்டமைப்பு வேட்பாளர்கள் – பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பாளர்கள் சந்திப்பு..!

vavuniyaதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கும் பொதுநலவாய நாடுகளின் செயலகத்தைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

இதன்போது வேட்பாளர்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் சம்பந்தமாகவும், தற்போதைய நிலைமையில் தேர்தல் அத்துமீறல்கள் இடம்பெறலாம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மிகவும் விரிவாக எடுத்துக் கூறினார்கள்.

இவ்விடயத்தினை பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் மிகவும் ஆர்வமாக கேட்டறிந்து கொண்டனர்.

இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன், சீ.வீ.கே சிவஞானம், அனந்தி எழிலன் உள்ளிட்ட பல வேட்பாளர்களும், பொதுநலவாய நாடுகளின் செயலகத்தைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களான அம்னா மற்றும் மார்ட்டீன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

நான் நினைத்ததை முடிப்பவள் – ஐஸ்வர்யா அர்ஜீன்..!

vavuniyaநான் நினைத்ததை முடிப்பவள் என்று பெருமிதமாக கூறுகிறார் நடிகை ஐஸ்வர்யா அர்ஜீன்.

பட்டத்து யானை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தனது அளவான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதில் இவருக்கு ஜோடியாக விசால் நடித்துள்ளார், மற்றும் கொமடியனாக சந்தானம் கலக்கியுள்ளார்.

இந்நிலையில் தனது திரையுலகம் குறித்து ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தனக்கு திரையுலகில் அனைத்து நடிகர்களுடன் நடிப்பதற்கு ஆசை இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் தனக்கு நடிப்பில் பிடித்தவர் தனது தந்தை என்றும் தான் ஒரு ரகசியமானவள் எனவும் கூறியுள்ளார்.

தமிழ் மொழிகள் மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலும் தனது நடிப்புத் திறமையினை காட்டுவதற்கு தயாராக இருப்பதாக கூறுகிறார்.

கொழும்பு துறைமுக விஸ்தரிப்பு இந்தியத் துறைமுகங்களைப் பாதிக்குமா?

vavuniyaஇலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் சீன உதவியுடன் கட்டப்பட்ட புதிய முனயம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

சுமார் 500 மிலியன் டொலர் செலவிலான இந்த திட்டம் பெருமளவு சீன உதவியுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெரிய கப்பல்கள் வந்து போவதற்கு வசதியாக இந்தப் புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஹம்பாந்தோட்டையில் புதிய துறைமுகம் கட்டப்பட்டிருக்கும் நிலையில், கொழும்பு துறைமுகமும் விஸ்தரிக்கப்பட்டிருப்பது தென்னிந்திய மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களுக்குக் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

கொழும்பு துறைமுக விஸ்தரிப்பு தென்னிந்திய துறைமுகங்களைப் பாதிக்கும் என்கிறார் சென்னையில் தனியார் சரக்கு நிறுவனம் ஒன்றின் ஆலோசகராகப் பணியாற்றும் கப்பல் தொழில் நிபுணர் கேப்டன் அவினாஷ்.

கொழும்பு துறைமுகம் இந்தியப் பெருங்கடலில் இருப்பதால், பிரதான கடல் வாணிகப் பாதைகளின் சந்தியில் அது பூகோளரீதியாகவே அமைந்திருக்கிறது. ஆனால், சென்னைத் துறைமுகத்துக்கு இந்த இயற்கையான அனுகூலம் இல்லை. மலாக்கா ஜலசந்தியிலிருந்து வரும் கப்பல்கள் அல்லது மேற்குக் கடற்பரப்பிலிருந்து கிழக்கு நோக்கி செல்லும் கப்பல்கள் சென்னை வரவேண்டுமானால், அதற்காக ஒரு மாற்றுப் பாதையில் சுற்றிவரவேண்டியிருக்கிறது.

இந்த சுற்றுக்காகும் செலவை ஈடுகட்டவேண்டுமானால் சென்னை போன்ற இந்தியத் துறைமுகங்கள் தங்களது துறைமுகத்தில் கப்பல் நிற்பதற்காகும் செலவை குறைத்தால்தான், இத்துறைமுகங்கள் கொழும்புடன் போட்டி போட முடியும் என்றார் கேப்டன் அவினாஷ்.

மேலும், கொழும்பு துறைமுகம் விஸ்தரிக்கப்பட்டதைப் போல இந்தியத் துறைமுகங்களின் வளர்ச்சிக்கான தெளிவான திட்டங்கள் இல்லை. கேரளத்தின் கொச்சியில் அமைக்கப்பட்டுள்ள வல்லர்பாடம் கண்டெயினர் முனையம் சரியான வகையில் அமல்படுத்தப்படவில்லை என்றார் அவினாஷ்.

தூத்துக்குடி துறைமுகமோ அல்லது பிற தென்னிந்திய துறைமுகங்களோ கொழும்பு துறைமுக விஸ்தரிப்பால் பாதிக்கப்படும் என்ற கருத்தை தூத்துக்குடி துறைமுகப் பயன்பாட்டளரும், அகில இந்திய வணிக சபையின் தலைவருமான ராஜா சங்கரலிங்கம் மறுக்கிறார்.

இந்தியத் துறைமுகங்கள் வேகமாக சரக்குகளை ஏற்றி, இறக்கும் செயல்பாடுகளைக் கொண்டவை என்று கூறும் இவர், மேலும், இந்தியப் பொருளாதாரம், ஒரு உற்பத்தி மையமாக இருந்து வரும் நிலையில், கொழும்பு துறைமுகம் விஸ்தரிக்கப்படுவதால், இந்தியத்துறைமுகங்கள் பெரிதும் பாதிக்கப்படாது என்றார்.

மேலும், தூத்துக்குடி துறைமுகத்தின் புறநகர் வளர்ச்சிக்காக மத்திய அரசு பெருந்தொகையை சமீபத்தில் ஒதுக்கியிருக்கிறது என்றும், தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்தினை ஆழப்படுத்தி, மேலும் அதிக கொள்ளளவுள்ள கப்பல்கள் வந்து போகும் வண்ணம் செய்யுமாறு மத்திய அரசுக்கு தாங்கள் கோரியிருப்பதாகவும் ராஜா சங்கரலிங்கம் கூறினார்.

(BBC)

ஆஷஸ் டெஸ்ட் தொடர்: மூன்றாவது போட்டி சமநிலையில் முடிவு..!

ashesஇங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் போட்டி தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்தது.

இங்கிலாந்து-அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்தது.

அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 527 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 4-வது நாளில் முதல் இன்னிங்சில் 368 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் 159 ஓட்டங்கள் முன்னிலையுடன் அவுஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. வேகமான ஓட்டங்கள் சேர்ப்பில் ஈடுபட்ட அவுஸ்திரேலியா விக்கெட்டுகளை விரைவில் இழந்தது.

போதிய வெளிச்சமின்மையால் 36-வது ஓவரில் ஆட்டம் நிறுத்தப்பட்ட போது, அந்த அணி 7 விக்கெட்டுக்கு 172 ஓட்டங்களை எடுத்திருந்தது. அதைத் தொடர்ந்து மழையும் பெய்ததால் நான்காவது நாள் ஆட்டம் அத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது. இதன் காரணமாக 32 ஓவர்கள் இழப்பு ஏற்பட்டன.

அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை (172/7) எடுத்து ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது.

332 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை ஆடியது. மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கியது.

மதிய உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன் எடுத்து இருந்தது. மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே மழை குறுக்கிட்டது. அப்போது அணியின் ஸ்கோர் 20.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 37 ஓட்டமாக இருந்தது. ஜோரூட் 13 ஓட்டங்களுடனும், இயன் பெல் 4 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

மழை தொடர்ந்து கொட்டியதால் நடுவர்கள் ஆட்டத்தை அத்துடன் கைவிடுவதாக அறிவித்தனர்.

இதனால் இந்த டெஸ்ட் சமநிலையில் முடிந்தது. இதனால் ஆஷஸ் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற அவுஸ்திரேலியாவின் கனவு கலைந்தது. எஞ்சிய இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் வென்றாலே இங்கிலாந்து தொடரை கைப்பற்றி விடும்.

ஆஷஸ் போட்டி தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி ஷெஸ்டர் லி ஸ்டிரிட்டில் வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது.

புறக்கோட்டை தனியார் பஸ் நிலையத்தின் நேரப்பதிவாளர் வெள்ளை வானில் கடத்தப்பட்டார்..!

kidnappingகொழும்பு புறக்கோட்டை குணசிங்கபுர தனியார் பஸ் நிலையத்தின் நேரப்பதிவாளர் வெள்ளை வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

நடுப்பகலில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பார்த்துக் கொண்டிருந்த போது இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபரை கடுமையாக தாக்கி வெள்ளை வான் ஒன்றில் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏ.காமினி என்ற நேரப் பதிவாளரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

பஸ் நடத்துனர்களை அச்சுறுத்தி இந்த நபர் கப்பம் பெற்று வந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கப்பம் பெற்றுக் கொண்டமை தொடர்பில் எவரும் இதுவரையில் முறைப்பாடு செய்ததில்லை. புறக்கோட்டை பொலிஸார் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவர்கள் படும்பாட்டை கொஞ்சம் பாருங்கள்..(வீடியோ)

தேவை இல்லாமல் கண்டதையும் செய்யப்போனால் இப்படித்தான் விபரீதத்தில் முடியும்.

வவுனியாவில் நடைபெற்ற வடமாகாண விளையாட்டு விழா.(படங்கள்)

ஆகஸ்ட் மாதம் 2ம், 3ம் திகதிகளில் வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற வடமாகாண விளையாட்டு விழாவில் யாழ் மாவட்டம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவில் இரண்டாம் இடத்தை வவுனியா மாவட்டம் பெற்றுக்கொண்டது.

வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்து வீர, வீராங்கனைகள் கலந்து கொண்ட இம்முறைக்கான விளையாட்டு விழாவில் மெய்வல்லுநர் போட்டிகளில் 15 புதிய சாதனைகள் படைக்கப்பட்டன.

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த லேகாஜினி 400 மீற்றர் தடை தாண்டி ஓடல் (புதிய சாதனை 1:07.4 செக்கன்), 400 மீற்றர் (புதிய சாதனை 1:00.1 செக்கன்), 200 மீற்றர் (புதிய சாதனை 26.7 செக்கன்) போன்ற போட்டிகளில் முதலிடத்தைப் பெற்றதுடன் மாகாண மட்டத்தில் புதிய சாதனையையும் பதிவு செய்தார். இதன் மூலம் இந்த விளையாட்டு விழாவின் சிறந்த மெய்வல்லுனர் வீராங்கனையாகவும் கே.லேகாஜினி தெரிவு செய்யப்பட்டார்.

மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கே.நேர்மதி 2:28.6 செக்கன்களில் நிறைவு செய்து மாகாண மட்டத்தில் புதிய சாதனை ஒன்றை பதிவு செய்தார்.

ஆடவர் பிரிவில் அதிக புள்ளிகளைப் பெற்று சிறந்த மெய்வல்லுனர் வீரராக தெரிவு செய்யப்பட்ட வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கே.சதீஸ்குமார் 800 மீற்றர் ஓட்டப் போட்டியை 1:59.3 செக்கன்களில் நிறைவு செய்து புதிய சாதனையை பதிவு செய்தார்.

1,500 மீற்றர் (5:16.7 செக்கன்கள்), 5,000 மீற்றர் (19:37.4 செக்கன்கள்), 10,000 மீற்றர் (40:55.6 செக்கன்கள்), மரதன் (4:09.41 நிமிடங்கள்), ஊர் சுற்றுவட்டம் (33:57.20), போன்ற போட்டிகளில் முதலிடத்தைப் பெற்றதுடன் புதிய சாதனைகளையும் பதிவு செய்தார் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். ஷாலினி.

ஈட்டி எறிதல் போட்டியில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த டபிள்யு. சீ. என்.லிவிங்ஸ்டன் புதிய மாகாண மட்ட சாதனையையும் பதிவு செய்தார்.

உயரம் பாய்தல் போட்டியில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். கிருஷ்ணா புதிய மாகாண மட்ட சாதனையை பதிவு செய்தார்.

ஆடவருக்கான மரதன் ஓட்டப் போட்டியில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஏ. டீ.திசாநாயக்க (2:45.35) வெற்றி பெற்று மாகாண மட்டத்தில் புதிய சாதனையை பதிவு செய்தார்.

இதேவேளை, 100 மீற்றர் மகளிர் ஓட்டப் போட்டியில் 13:4 செக்கன்களில் நிறைவு செய்த யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த எம்.கமலினி முதலிடத்தை பெற்று புதிய சாதனையை பதிவு செய்தார்.

நடையோட்டத்தில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கே.கோகிலவாணி முதலிடம் பெற்று புதிய சாதனையை (1:00.5) பதிவு செய்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.யாழினி 10.30 புள்ளிகளுடன் புதிய சாதனையை பதிவு செய்ததுடன் உயரம் பாய்தலில் முதலிடத்தையும் பெற்றார்.

v1 v2 v3

பறக்கும் அதிசய சைக்கிள் : இங்கிலாந்து வடிவமைப்பாளர்களின் சாதனை!!(படங்கள்)

உலகின் முதல் பறக்கும் சைக்கிள் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சைக்கிளால் வானிலும் பறக்கலாம் பூமியிலும் ஓடலாம்.

உலகின் முதல் பறக்கும் சைக்கிளான இதை, இங்கிலாந்தை சேர்ந்த வடிவமைப்பாளர்களான ஜோன் ஃபோடென் மற்றும் யான்னிக் ரீட் சேர்ந்து உருவாக்கியுள்ளனர்.

இதில் சாதாரண சைக்கிளுடன் இறகுகள் பொருத்தப்பட்டுள்ளது. அதில் உள்ள காற்றாடிகள் சுழலும் போது சைக்கிள் உயர பறக்கிறது. காற்றாடிகளைச் சுழல வைக்க இயற்கை எரிசக்தியே பயன்படுத்தப் படுவது இதன் சிறப்பம்சம்.

இச்சைக்கிளுக்கு லைசென்ஸ் தேவையில்லை, பெட்ரோல், டீசல் தேவையுமில்லை. தேவைப்படும் போது, இச்சைக்கிளை தரையில் சாதாரண சைக்கிள் போன்றும் ஓட முடியும்.

வணிக ரீதியான தயாரிப்புக்கு ஏற்ற பண உதவி கிடைத்தால் உடனே சந்தைக்கு வந்துவிடுமாம் இந்த பறக்கும் சைக்கிள்.

c1 c2 c3 c4 c5