மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் கவுண்டமணி!!

goundamani

தமிழ் சினிமா உள்ளவரைக்கும் தலைமுறைகளைத் தாண்டி நிற்கும் காமெடி கிங்காகக் கருதப்படும் கவுண்டமணி, மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

வாய்மை என்ற படத்தில் வைத்தியராக நடிக்கும் அவர் அடுத்து இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார். தமிழ் சினிமாவில் இன்றைய காமெடியன்கள் யாராலும் நிரப்ப முடியாத அளவுக்கு நிறைந்திருப்பவர் கவுண்டர் என செல்லமாக அழைக்கப்படும் கவுண்டமணி.

கவுண்டமணி -செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். கவுண்டமணி மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12.

எவ்வளவோ வாய்ப்புகள் வந்தும் தங்கம் படத்துக்குப் பிறகு நடிக்காமல் ஒதுங்கியிருந்த கவுண்டமணி தற்போது வாய்மை என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்து கவுண்டரை கௌரவிக்கும் விதமாக இயக்குநர் வெற்றிமாறன் ஒரு படத்தில் அவரை நாயகனாக நடிக்க வைக்கிறார். வெற்றி மாறனின் உதவியாளர்களுள் ஒருவர்தான் இந்தப் படத்தை இயக்கப் போகிறாராம். படத்தின் கதையைக் கேட்டும் சம்மதமும் சொல்லிவிட்டார் கவுண்டர் என்கிறார்கள்.

 

ஜூனியர் மகளிர் ஹொக்கி உலகக் கோப்பை : இந்தியா புதிய சாதனை!!

hockey-india-600

ஜூனியர் மகளிர் ஹொக்கி உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளது.

ஜூனியர் மகளிர் ஹொக்கி உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றன. இதில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி நேற்று ஜேர்மனியில் உள்ள மான்செங்லாட்பாக் நகரில் நடைபெற்றது.

இதில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வென்றது. இதன் மூலம் ஜூனியர் மகளிர் ஹொக்கி உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா முதன் முதலாக பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளது. இந்திய அணி வீராங்கனை ராணி(18) அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

துப்பாக்கியுடன் சுற்றிய 14 வயது சிறுவன் என்கவுண்டரில் பலி!!

Kid With Gun

அமெரிக்காவில் துப்பாக்கியுடன் சுற்றிய 14 வயது சிறுவனை கைது செய்ய முயன்ற போது பொலீசாருக்கும் சிறுவனுக்கும் இடையில் உண்டான பிரச்சினையில் அச்சிறுவன் என்கவுண்டரில் பலியானான்.

நேற்றிரவு நியூயோர்க் நகர பொலீசார் பிரான்க்ஸ் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது அதிகாலை 3 மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அதிர்ந்துள்ளனர். உடனடியாக, சத்தம் வந்த திசை நோக்கி விரைந்தனர்.

சம்பவ இடத்தில் சுமார் 14 வயது மதிக்கத் தக்க சிறுவன் ஒருவன் கையில் துபாக்கியுடன் நின்றதைக் கண்ட பொலீசார் அச்சிறுவனை துப்பாக்கியைக் கீழே போடுமாறு எச்சரித்துள்ளனர். ஆனால், அவனோ பொலீசாரை நோக்கி சுடுவதற்கு ஆயத்தமாகியுள்ளான்.

இதனால் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பொலீசார் அவனைச் சுட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அவன் பரிதாபமாக பலியானான். பொலீசாரின் விசாரணையில் அச்சிறுவன் பெயர் ஷாலிவர் டவ்ஸ் என்பதும் அவன் மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு ஒன்று பதிவாகி இருப்பதும் தெரிய வந்துள்ளதாம்.

ஒரே நேரத்தில் 408 பலூன்களில் பறந்து புதிய உலக சாதனை.(படங்கள்)!!

பிரான்ஸில் உள்ள மெட்ஸ் நகரில் வருடந்தோறும் ஓகஸ்ட் மாதத்தில் அனல் பலூனில் பறக்கும் சாகச விளையாட்டு விழா நடைபெறுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை சரியில்லாததால் இந்த விளையாட்டு விழாவில் மிக குறைவான மக்களே பங்கேற்றனர்.

அவர்களிலும் ஓரிருவர் விபத்தில் சிக்கியதால் இந்த விளையாட்டு விழா களையிழந்து காணப்பட்டது. இந்நிலையில், நேற்று முடிவடைந்த இந்த ஆண்டின் பலூனில் பறக்கும் சாகச விழாவில் ஆயிரத்து 200 வீரர்கள் தங்களின் சாகசத்தை வெளிப்படுத்தினர்.

983 பலூன்கள் வண்ண வண்ணமாக வானில் வலம் வந்தது கண் கொள்ளா காட்சியாக அமைந்திருந்தது. இதில் தரையில் இருந்து ஒரே நேரத்தில் 391 பலூன்கள் வானம் நோக்கி எழுந்த ரம்மியமான காட்சியை சுமார் 3 1/2 இலட்சம் மக்கள் நேற்று கண்டு களித்தனர்.

391 பலூன்கள் ஒரே நேரத்தில் எழும்பியதும், 408 பலூன்கள் வானில் தவழ்ந்ததும் புதிய உலக சாதனையாக பதிவாகியுள்ளது.

b1

b2

b3

b4

விண்வெளி ஆய்வு கூடத்துக்கு உலகின் முதல் பேசும் ரோபோ..!

talking_robotசர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துக்கு உலகின் முதல்பேசும் ரோபோவை ஜப்பான் விஞ்ஞானிகள் அனுப்பினர்.

உலகில் பல விதமான ரேபோக்களை வடிவமைத்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். அவைகள் கட்டளைப்படி வேலைகளை செய்யக்கூடியவை.

ஆனால் பேசும் ரோபோவை ஜப்பான் விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இதற்கு கிரோபோ என பெயரிட்டுள்ளனர்.

33 செ.மீட்டர் உயரம் கொண்ட இந்த ரோபோ ஜப்பான் மொழியில் பேசக்கூடியது. இதை ஜப்பானின் கிபோ ரோபாட் நிறுவனம் புதிய தொழில் நுட்பத்துடன் வடிவமைத்துள்ளது. எனவே, இதற்கு கிரோபா என பெயரிட்டுள்ளனர்.

இந்த ரோபோ தற்போது சர்வதேச விண்வெளிக்கு அனுப்பப்பட்டு உள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தில் தங்கியிருக்கும் வீரர்களுக்கு தேவையான உணவு பொருட்கள், குடிநீர் போன்றவை ஜப்பானின் தனேகஷிமா தீவில் உள்ள தளத்தில் இருந்து எச்2பி ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது.

அதனுடன் சேர்த்து இந்த ரோபோவும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வருட இறுதியில் ஜப்பான் வீரர் கெர்ங்சி வகாடா சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துக்கு செல்கிறார்.

அங்கு அவர் தனிமையில் இருக்கும்போது, அவருடன் இந்த ரோபோ பேச்சு கொடுக்கும். இதன் மூலம் அவரது தனிமை கவலையை நீங்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா சிங்கர் காட்சியறைக்கு FIELD OFFICERS தேவை..!

singer

வவுனியா சிங்கர் நிறுவனத்தில்  FIELD OFFICERS பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

கல்வித் தகமை: க.பொ .த உயர்தரம்.
மொழித்தேர்ச்சி: தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம்.
அத்துடன் மோட்டார் வண்டி சாரதி அனுமதிப்பத்திரம் கொண்டிருத்தல் வேண்டும்.

தகுதியானவர்கள் சுயவிபரக் கோவையுடன் நேரில் வரவும்.

Branch Manager,
Singer Plus,
Bazar Street,
Vavuniya.

என் மகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : கனகாவின் தந்தை புகார்!!

Kanaka-and-her-father

நடிகை கனகாவின் தந்தை தேவதாஸ் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். மனுவில் என் மனைவியும் நடிகையுமான தேவிகா, மகள் கனகா பிறந்ததும் என்னிடம் ஒப்படைத் துவிட்டு சென்றுவிட்டாள். அதன்பிறகு கனகாவை கண்ணும் கருத்துமாக நான் வளர்த்து வந்தேன்.

இடையில் என்னென்னவோ ஆகிவிட்டது. இந்தநிலையில் என் மகள் என்னை சமூகத்தில் ஒரு தவறான மனிதனைப்போல சித்தரிக்கிறாள்.
நான் அவளை பைத்திரியக்காரி என்று சொல்லிவருவதாகவும், அவளது சொத்துக்களை அபகரிக்க முயல்வதாகவும் அவதூறு பரப்பி வருகிறாள். இதனால் அவள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மனு குறித்து பொலிசார் விசாரணை செய்வதாக தேவதாஸிடம் வாக்குறுதி அளித்துள்ளனர்.

பர்வேஸ் ரசூல் புறக்கணிப்பு குறித்து கோலி விளக்கம்!!

rasool

பந்துவீச்சு தொடர்பாக அணி வகுத்த திட்டத்தின்படி ரசூலுக்கு வாய்ப்பு அளிக்க முடியவில்லை என்று அணித்தலைவர் வீராட் கோலி தெரிவித்தார்.

சிம்பாவே சென்ற இளம் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என்று முழுமையாக வென்றது. இத்தொடரில் காஷ்மீரைச் சேர்ந்த சகலதுறை வீரர் பர்வேஸ் ரசூலுக்கு ஒரு போட்டியில்கூட விளையாடும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இதற்கு அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பிரச்னையில் தனது முடிவை நியாயப்படுத்திய இந்திய அணித்தலைவர் கோலி கூறுகையில், வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கியது தொடர்பாக வெளியான கருத்துகள் பற்றி எனக்கு கவலை இல்லை.

ஏனென்றால் 5 போட்டிகளில் நிறைய பேர் வாய்ப்பு கிடைக்காமல் அமர்ந்திருந்தனர். ஐந்தாவது ஒருநாள் போட்டியில் ரவிந்திர ஜடேஜாவுக்கு பதில் ரசூலை சேர்த்திருக்கலாம் என்கின்றனர். என்னை பொறுத்தவரை ஜடேஜா போன்றவரை நீக்குவது மிகவும் கடினமான விடயம்.

பந்துவீச்சில் அசத்தும் இவரால் எந்த கட்டத்திலும் விக்கெட் வீழ்த்த முடியும். தவிர எந்த ஒரு போட்டியையும் நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. பந்துவீச்சில் அதிக மாற்றங்களை செய்ய விரும்பாததால் தான் ரசூலுக்கு வாய்ப்பு அளிக்க முடியவில்லை. இது துரதிஷ்டவசமானது.

அடுத்து தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய ஏ அணியில் இவர் இடம்பெற்றுள்ளார் என்றும் இத்தொடரில் நிறைய போட்டிகளில் பங்கேற்று போதிய அனுபவம் பெறுவார் எனவும் கூறினார்.

இது குறித்து ரசூலுக்கு பயிற்சி அளித்த முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி கூறுகையில் அணித்தெரிவில் அரசியல்வாதிகள் ஏன் நுழைகின்றனர் என்று தெரியவில்லை. இவர்களது தயவு இல்லாமலே ரசூல் சாதிக்கலாம்.

தனது திறமையால் தான் இந்திய அணிக்காக தெரிவு செய்யப்பட்டார் என்றும் இதே போல விரைவில் விளையாடும் அணியில் வாய்ப்பு பெறுவார் எனவும் கூறினார்.

பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள புத்தம் புதிய வசதி!!

fb

முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது பயனர்களுக்காக தொடர்ந்தும் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது.

இந்த வரிசையில் தற்போது Embeddable Posts எனும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது யூடியூப், பேஸ்புக் தளத்தில் பகிரப்படும் வீடியோ கோப்புக்களை வேறு இணையத்தளங்களில் பயன்படுத்தவதற்காக Embed வசதி தரப்பட்டிருக்கும்.

இதே போன்று பேஸ்புக் வோல்களில் பகிரப்படும் போஸ்ட்களினையும் இவ்வசதி மூலம் ஏனைய தளங்களில் நேரடியாக பயன்படுத்த முடியும்.
இதனால் குறித்த போஸ்ட்களுடன் தொடர்பான புகைப்படங்களை தரவிறக்கம் செய்து மீண்டும் தரவேற்றம் செய்யவேண்டிய தேவை இல்லை.

embed post

விண்வெளி ஆய்வு கூடத்துக்கு செல்லும் முதல்பேசும் ரோபோ!!

robo

சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துக்கு உலகின் முதல்பேசும் ரோபோவை ஜப்பான் விஞ்ஞானிகள் அனுப்பியுள்ளனர். உலகில் பல விதமான ரேபோக்களை வடிவமைத்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். அவைகள் கட்டளைப்படி வேலைகளை செய்யக் கூடியவை.

ஆனால் பேசும் ரோபோவை ஜப்பான் விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இதற்கு கிரோபோ என பெயரிட்டுள்ளனர். 33 செ.மீட்டர் உயரம் கொண்ட இந்த ரோபோ ஜப்பான் மொழியில் பேசக்கூடியது. இதை ஜப்பானின் கிபோ ரோபாட் நிறுவனம் புதிய தொழில் நுட்பத்துடன் வடிவமைத்துள்ளது. எனவே இதற்கு கிரோபா என பெயரிட்டுள்ளனர்.

இந்த ரோபோ தற்போது சர்வதேச விண்வெளிக்கு அனுப்பப்பட்டு உள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தில் தங்கியிருக்கும் வீரர்களுக்கு தேவையான உணவு பொருட்கள், குடிநீர் போன்றவை ஜப்பானின் தனேகஷிமா தீவில் உள்ள தளத்தில் இருந்து எச்2பி ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது.

அதனுடன் சேர்த்து இந்த ரோபோவும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வருட இறுதியில் ஜப்பான் வீரர் கெர்ங்சி வகாடா சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துக்கு செல்கிறார். அங்கு அவர் தனிமையில் இருக்கும்போது, அவருடன் இந்த ரோபோ பேச்சு கொடுக்கும். இதன் மூலம் அவரது தனிமை கவலையை நீங்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

15ம் திகதி கச்சத்தீவில் இந்திய கொடி ஏற்றுவோம் : அர்ஜூன் சம்பத் உறுதி!!

hindu

தமிழகத்தின் கடலூர் மாவட்ட இந்து மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் கடலூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சதாசிவம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு பேசினார்.

இதில் மாவட்ட துணை பொதுச் செயலாளர் ரஞ்சித்குமார், இளைஞர் அணி தலைவர் தேவா, புதுச்சேரி மாநில தலைவர் குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பின்னர் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது..

கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் உரிமையை நிலை நாட்டும் வகையில் வருகிற 15ம் திகதி அங்கு தேசிய கொடியை ஏற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கச்சத்தீவு ஒப்பந்தப்படி அங்கு தமிழக மீனவர்கள் ஓய்வெடுக்கவும், மீன் பிடிக்கவும், மதவிழாக்கள் நடத்தவும் தடையில்லை. அப்படி இருந்த பின்னரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி வருகின்றனர்.

கச்சத்தீவை மீட்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கு வலு சேர்க்கும் வகையில் கச்சத்தீவில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் தேசிய கொடியை ஏற்ற வேண்டும்.

தவறினால் ஒத்தகருத்துடைய அமைப்புகளுடன் சேர்ந்து இந்து மக்கள் கட்சியானது அங்கு தேசிய கொடியை ஏற்றும். கச்சத்தீவில் அந்தோணியார் கோவிலில் திருவிழா நடத்த அனுமதிக்கப்படுவதுபோல், விநாயகர் சதுர்த்தி விழா நடத்த இந்து மீனவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடி பிரதமராக வர வேண்டும் என்று எந்த கட்சி விரும்புகிறதோ அந்த கட்சியுடன் கூட்டணியை வைத்துக்கொள்வோம். நரேந்திரமோடியை விஜயகாந்த் ஆதரிக்க வேண்டும். அப்படி ஆதரித்தால் அவருக்கு தமிழ்நாட்டில் எதிர்காலம் நன்றாக இருக்கும்.

மத்திய கிழக்கில் அமெரிக்க தூதரகங்கள் திடீரென மூடப்பட்டது ஏன்?

embassyமத்திய கிழக்கிலும் வடக்கு ஆப்பிரிக்காவிலும் உள்ள தனது தூதரகங்களை அமெரிக்கா தொடர்ந்து மூடியுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மூத்த அல்-கைதா தலைவர்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொண்ட தகவல்கள் அமெரிக்காவினால் ஒட்டுக்கேட்கப்பட்டிருப்பதாகவும், மிகப்பாரிய தாக்குதல்கள் மூலம் தூதரகங்களை சிதைக்க திட்டமிட்டுருப்பதை அமெரிக்க அரசு அறிந்திருப்பதாகவும் இதையடுத்தே இந்நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பாதுகாப்புக் காரணம் குறித்து இது தொடர்பான மேலதிக தகவல்களை வெளியிட வேண்டாமென ஒபாமா தலைமையிலான நிர்வாக அதிகாரிகள் மேற்குலக ஊடகங்களுக்கு வேண்டுதல் விடுத்துள்ளதாகத் தெரிய வருகின்றது. மேலும் பல அதிகாரிகளின் கூற்றுப் படி அல் கைதாவின் முக்கிய தலைவர்கள் ஒழிந்திருப்பதாகக் கருதப்படும் யேமெனில் இருந்து கடந்த சில வாரங்களாக அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

இதில் முக்கியமாக ரம்ழான் பண்டிகை முடிவுறும் மாதம் என்பதாலும் பாகிஸ்தானின் சிறைச்சாலைகள் உடைக்கப் பட்டு முக்கிய குற்றவாளிகள் தப்பித்திருப்பதாலுமே மத்திய கிழக்கிலும் வட ஆப்பிரிக்காவிலும் அரச கருமங்களைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விரு பகுதிகளிலுமே மொத்தம் 22 அமெரிக்க தூதரகங்கள் ஞாயிற்றுக் கிழமை மூடப்பட்டுள்ளன. மேலும் வெள்ளை மாளிகையும் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளும் இது குறித்து முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர்.

மூடப்பட்ட அமெரிக்கத் தூதரகங்களில் மௌரிடானியா இலிருந்து ஓமான் வரையும்,பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானும் கூட அடங்கும். மேலும் இந்த அடைப்பு பல இடங்களில் இன்னும் சில நாட்களுக்கும் தொடரலாம் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது.

மூடப்பட்ட தூதரகங்களின் விபரம்:

U.S. Embassy Riyadh, Saudi Arabia
U.S. Consulate Dhahran, Saudi Arabia
U.S. Consulate Jeddah, Saudi Arabia
U.S. Embassy Baghdad, Iraq
U.S. Consulate Basra, Iraq
U.S. Consulate Erbil, Iraq
U.S. Embassy Abu Dhabi, United Arab Emirates
U.S. Consulate Dubai, United Arab Emirates
U.S. Embassy Tripoli, Libya
U.S. Embassy Algiers, Algeria
U.S. Embassy Amman, Jordan
U.S. Embassy Cairo, Egypt
U.S. Embassy Djibouti, Djibouti
U.S. Embassy Dhaka, Bangladesh
U.S. Embassy Doha, Qatar
U.S. Embassy Kabul, Afghanistan
U.S. Embassy Khartoum, Sudan
U.S. Embassy Kuwait City, Kuwait
U.S. Embassy Manama, Bahrain
U.S. Embassy Muscat, Oman
U.S. Embassy Nouakchott, Mauritania
U.S. Embassy Sana´a, Yemen

அடர்த்தியான தலை முடியை பெற வேண்டுமா??

Women Hair

தலைமுடி என்பது ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்ல வேண்டியதில்லை. முகத்தின் அழகு கூடுவதற்கு காரணமே நம் தலைமுடி தான். சிலருக்கு இயற்கையிலேயே ஆரோக்கியமான தலைமுடி இருக்கும். சிலருக்கு அப்படி இல்லாததால் பல அழகுப் பொருட்களை வைத்து முடியை பேணுவார்கள்.

இப்படி பார்த்து பார்த்து பாதுகாக்கும் தலைமுடி சந்திக்கும் முக்கிய பிரச்சனை முடி கொட்டுதல் மற்றும் பொடுகு. அதுமட்டுமல்லாமல், சிகை அலங்காரத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் அதிலும் ஈரப்பதத்துடன் கூடிய முடியுடன் காட்சி அளிக்க விரும்புபவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி காத்துக் கொண்டிருக்கிறது.

பார்ப்பதற்கு அழகை மெருகேற்றினாலும் ஈர முடி பல முடிப் பிரச்சனைகளுக்கு ஆளாக்கும். அதுவும் பருவக்காலத்தில் பல விதமான முடிப் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். அமிழ மழை, அழுக்கு மழை நீர் மற்றும் அதிக ஈரப்பதம் நிறைந்த வானிலையால் தலை முடி மற்றும் தலை சருமமும் பாதிப்புக்குள்ளாகும். உலகத்தில் எந்த ஒரு மூலையில் இருந்தாலும் சரி கீழ்க்கூறிய படிமுறைகள் தலைமுடி மற்றும் தலை சருமத்தை பருவக்காலத்தில் பாதுகாப்பாக வைக்க உதவும்.

அலங்கார பொருட்கள்..

இயற்கையிலேயே ஆரோக்கியமான தலைமுடி இல்லையா? அப்படியானால் அழகு சாதனங்களை பயன்படுத்துவதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. ஆனால் பருவக்காலத்தின் போது இவ்வகை பொருட்களை உபயோகிக்காமல் இருப்பதே நல்லது. வானிலை அதிக ஈரப்பதத்துடன் இருப்பதால் ரசாயனம் கலந்த அழகு பொருட்கள் தலைமுடியை அதிக எண்ணெய்ப் பதத்துடன் வைத்திருக்கும். இது தலைமுடியையும், தலை சருமத்தையும் பாதிக்கும். மேலும் இது பொடுகையும் உருவாக்கிவிடும்

ஈரப்பதம்..

தலை முடியை முடிந்தவரை காய்ந்த நிலையிலேயே வைத்திருக்க வேண்டும். பொதுவாக தினசரி 50-60 முடிகளை இழக்கின்ற நாம் பருவக்காலத்தில் நம்மை அறியாமலேயே 200 முடிகளுக்கு மேல் இழக்கிறோம். அதனால் முடியை காய்ந்த நிலையில் வைத்திருந்தால் அதிகமான முடி கொட்டுதல் மற்றும் பொடுகு தொல்லையில் இருந்து தலைமுடி மற்றும் தலை சருமத்தை பாதுகாக்கலாம்.

ஷம்பு..

பொடுகு மற்றும் முடி கொட்டுதல் தவிர எண்ணெய் பதமான தலை சருமமும் ஒரு பிரச்சனையே. இதனை போக்க மிதமான ஷம்புவை பயன்படுத்தி சீரான முறையில் தலைமுடியை அலச வேண்டும். மேலும் தினமும் ஷம்புவைக் கொண்டு முடியை கழுவ மற்றொரு காரணம் என்னவென்றால் பருவக்காலத்தில் தளர்ச்சி அடையும் தலைமுடியை சரி செய்யவே. மழை நீரில் முடி நனைந்தால் ஷம்புவால் முடியை கழுவ வேண்டும்.

உணவு முறை..

முடியின் ஆரோக்கியத்துக்கு உதவியாக துணை புரிவது புரதச்சத்து. ஆகவே முடி ஆரோக்கியமாக இருக்க அதிக புரதச்சத்து அடங்கியுள்ள முட்டை, கரட், தானியங்கள், பச்சை காய்கறிகள், பீன்ஸ், நட்ஸ், குறைவான கொழுப்புச் சத்து அடங்கியுள்ள பால் பொருள்களை சாப்பிட வேண்டும்.

பதப்படுத்துதல்..

காற்றில் கலந்துள்ள ஈரத்தன்மை முடியில் அதிகம் பட்டால் முடி வறண்ட நிலைக்கு உள்ளாகும். நாளடைவில் பார்க்கவும் களையிழந்து போகும். அதனால் சீரான முறையில் தலைமுடியை பதப்படுத்தினால் இந்த வறண்ட நிலை மாறும்.

குறிப்புகள்..

* அதிக அளவு தண்ணீர் பருக வேண்டும்.
* வாரம் ஒரு முறையாவது தலைக்கு எண்ணெய் தேய்க்கவும்.
* அகண்ட பற்கள் உள்ள சீப்பினை பயன்படுத்த வேண்டும்.
* ஈரத்துடன் இருக்கும் போது கூந்தலை கட்டக் கூடாது.
* சீப்பினை அடுத்தவர்களுக்கு பகிர கூடாது.

இவற்றை பின்பற்றியும் தலை முடியிலும், சருமத்திலும் பிரச்சனை நீடித்தால் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது. மேலும் சீரான முறையில் முடியை பராமரித்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

 

பெற்றோரின் திருமணத்தில் மாப்பிள்ளைத் தோழனாக சில வாரங்களில் மரணிக்கப் போகும் குழந்தை!!

logan

அமெரிக்காவில் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இன்னும் சில வாரங்களில் உயிர் இழக்கப் போகும் 2 வயது ஆண் குழந்தை தனது பெற்றோரின் திருமணத்தில் மாப்பிள்ளைத் தோழனாக இருந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஷான் ஸ்டீவன்சன், கிறிஸ்டீன் ஸ்விடோர்ஸ்கீ. காதலர்களான அவர்களுக்கு லோகன் ஸ்டீவன்சன் என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது.

லோகனுக்கு ரத்த புற்றுநோய் உள்ளது. அதற்காக அவனுக்கு பல்வேறு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் லோகனை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இன்னும் சில வாரங்கள் தான் உயிரோடு இருக்கும் என்று தெரிவித்துவிட்டனர்.

முன்னதாக ஷானும், கிறிஸ்டீனும் வரும் 2014ம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் லோகன் இறக்கும் செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்கள் குழந்தை உயிருடன் இருக்கையிலேயே திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் பிட்ஸ்பக்கில் திருமணம் செய்து கொண்டனர். 2 வயது லோகன் தான் மாப்பிள்ளைத் தோழனாக இருந்தான்.

 

சேரன், அமீர் பேட்டியை பார்த்து அதிர்ந்த சந்துரு குடும்பம்!!!

cheran-ameer

இயக்குநர் சேரன் மற்றும் அமீர் போன்றவர்கள் பத்திரிக்கையாளர்களை வைத்து தன் குடும்பத்தைப் பற்றி கேவலமாகப் பேசியதை தொலைக்காட்சியில் நேரடியாக பார்த்து கொதித்துப் போயுள்ளனர் சந்துரு குடும்பத்தினர்.

தனது மகள் தாமினி – சந்துரு காதல் விவகாரம் குறித்து இயக்குநர் சேரன் தனது மனைவியுடன் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசினார். அப்போது டைரக்டர் அமீரும் உடன் இருந்தார்.

இந்த பேட்டியின் போது சேரனும், அமீரும் சந்துருவை பற்றியும் அவரது குடும்பத்தினர் பற்றியும் பல்வேறு கருத்துக்களை கூறினார்கள். சேரன் பேசும்போது ‘‘சந்துரு நல்லவனாக திரும்பி வந்தால் பின்னர் பார்க்கலாம்” என்றார். ஆனால் அமீர் கூறும் போது, “அந்தப் பையன் தவறானவன்.. அவன் குடும்பமே கிரிமினல் குடும்பம்.. அவங்கக்கா யாரு.. அவங்களோட இப்போதைய புருசன் யாரு.. இதையெல்லாம் உளவுத் துறை விசாரிக்கணும்…” என்றார்.

இதனை நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்த சந்துருவும் அவரது சகோதரிகளும் குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தங்களை பற்றி அவதூறான கருத்துக்களை கூறியதை கேட்டதும் அவர்கள் கொதிப்படைந்தனர். இது பற்றி சந்துருவின் சகோதரி பத்மா கூறும் போது, ‘‘எங்கள் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு டைரக்டர் சேரனும், அமீரும் நிச்சயம் ஒரு நாள் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

அவர்கள் கூறியவை அபாண்டமான பழி எங்கள் பெயரைக் கெடுக்கும் முயற்சி இது,” என்றார். சந்துரு கூறும்போது, “தாமினியை அருகில் வைத்து கொண்டு சேரன் இப்படி சொல்வாரா.. என்னை சினிமாவிலிருந்து விரட்ட அவர்கள் அப்படி பேசுகிறார்கள்,” என்றார்.

பந்துவீச்சாளர் பட்டியில் 17 ஆண்டுகளுக்கு பிறகு முதலிடம் பிடித்த இந்திய வீரர்!!

PTI1_23_2013_000130B

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் சகலதுறை ஆட்டக்காரர் ரவீந்தர் ஜடேஜா முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஒருநாள் தரவரிசையில் இந்திய பந்து வீச்சாளர் ஒருவர் முதலிடம் பிடித்திருப்பது 17 ஆண்டுகளுக்குப் பிறகான சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பாவேயை இந்தியா 5- 0 என்று வெற்றி பெற்றதையடுத்து புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதன்படி இந்தியா அணி 123 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடம் பெற்றுள்ளது. அவுஸ்திரேலியா 114 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 3ம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 6வது இடத்தில் உள்ளது.

துடுப்பாட்ட தரவரிசையில் தென்னாபிரிக்க வீரர் ஹசீம் அம்லா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். டிவிலியர்ஸ் இவ்வளவு தோல்விகளுக்கு இடையேயும் 2வது இடம் வகிக்கிறார்.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடி 372 ஓட்டங்களை குவித்த சங்கக்காரா 8 ஆண்டுகளுக்குப் பிறகு 3ம் இடத்தில் உள்ளார். இதனால் கோலி ஒரு இடம் இறங்கி 4ம் இடத்திற்கு வந்துள்ளார். தோனி 7ம் இடத்திலும், உள்ளனர்.

புதிய நட்சத்திரம் ஷிகர் தவான் 16 இடம் உயர்ந்து 23வது இடத்தைப் பிடித்துள்ளார். பந்து வீச்சு தரவரிசையில் ரவீந்தர் ஜடேஜா 4 இடங்கள் முன்னேறி மேற்கிந்திய வீரர் சுனில் நரைனுடன் 733 புள்ளிகளுடன் பந்து வீச்சுத் தரவரிசையில் முதலிடத்தை பகிர்ந்து கொள்கிறார்.

இந்தியா சார்பில் 17 ஆண்டுகளுக்கு முன்பாக முன்னாள் தலைவரும் சுழற்பந்து வீச்சாளருமான கும்ளே முதலிடம் வகித்தார் அதன் பிறகு இப்போது ஜடேஜா! இந்த ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலிலும் ஜடேஜா முதலிடம் வகிக்கிறார். 22 ஆட்டங்களில் 38 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் ஜடேஜா.