கந்துரட்ட மெரூன்ஸில் விளையாட சங்கக்கார தீர்மானம்..!

sangaசம்பியன்ஸ் லீக் கிண்ண கிரிக்கெட் தொடரில் கந்துரட மெரூன்ஸ் அணிக்காக விளையாடத் தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார கூறுகிறார்.

இந்தியாவில் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சம்பியன்ஸ் லீக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் குமார் சங்கக்கார ஐதராபாத் சன்ரைசஸ் அணிக்காக விளையாடுவரா? அல்லது இலங்கையின் கந்துரட அணிக்காக விளையாடுவாரா? எனும் சந்தேகம் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வந்தது.

கந்துரட அணிக்காக விளையாடுவதற்காக ஐதராபாத் சன்ரைசஸ் அணியிலிருந்து தாம் விலகும் பட்சத்தில் அதன் அதிகாரிகளுக்கு செலுத்த வேண்டிய நட்ட ஈடு குறித்து பேச்சவார்த்தை நடத்த தலையீடு செய்யுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் பல தடவைகள் தாம் கோரியதாக குமார் சங்கக்கார கொழும்பு என்.சி.சி மைதானத்தில் நேற்று தெரிவித்திருந்தார்.

எனினும் இறுதித் தருணம் வரை அது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெளிவான தீர்மானமொன்றை அளிக்காததால் தாம் கடும் அசௌகரியத்துக்கு உள்ளானதாக குமார் சங்கக்கார வலியுறுத்தினார்.

இது நாட்டுக்கும் பணத்திற்கும் இடையில் அல்லது ஐ.பி.எல்லுக்கும் இடையில் உள்ள தெரிவு என்று பலரும் இதனை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அது முற்றிலும் தவறு. எனினும் கிரிக்கெட் நிர்வாகிகள் என்ற வகையில் சன்ரைசஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி நட்ட ஈடின்றியோ அல்லது நட்ட ஈட்டின் தொகையை குறைத்தோ என்னை விடுவிக்க முடிந்தால் கந்துரட அணிக்காக விளையாடுகிறேன். எந்தப் பிரச்சினையும் இல்லை என நான் கூறினேன்.

நட்ட ஈடு குறித்து குமார் சங்கக்கார விளக்கம்:

அதனை முழுமையாக நான்தான் ஏற்க வேண்டும். கிரிக்கெட் நிர்வாகக் குழு என்ற வகையில் அவர்கள் இந்தப் போட்டிகளில் இலங்கையின் பிராந்திய அணிகளுக்காக இலங்கை வீரர்கள் விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்பதை நான் அறிவேன்.

அதேபோன்று இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்கும் இழப்பீடின்றி நான் ஐதராபாத் அணிக்காக விளையாடினால் அவர்களுக்கு கிடைக்கும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் டொலர்கள் அற்றுப்போகும் என்பதும் எனக்கு புரிகின்றது. அவ்வாறே அவர்கள் கிரிக்கெட் நிர்வாவாகக் குழு என்ற ரீதியில் சகல வீரர்களிடமும் ஐ.பி.எல் ஒப்பந்த பிரகாரம் 10 வீதம் அறிவிடுகின்றனர்.

சம்பியன்ஸ் லீக் போட்டிகளின் போது மேலும் 5 லட்சம் டொலர்கள் அவர்களுக்கு கிடைக்கும். இவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் இழப்பீடு கிரிக்கெட் நிர்வாகத்தை சாரும். தனிப்பட்ட ரீதியில் எவருக்கும் இழப்பு ஏற்படாது. எனினும் இதில் மட்டுமல்ல.

எதிர்காலத்திலும் இந்தப் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியாததுதான் இதிலுள்ள பாரியதொரு இழப்பாகவுள்ளது. வீரர்களை தனிமைப்படுத்தாது எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தும் திட்டமிடப்படல் வேண்டும்.

தாய்லாந்து இலங்கை கொடியுடன் ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈடுபட அனுமதி..!

shipஇந்து சமுத்திரத்தில் இலங்கை கொடியுடன் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடுவதற்கு சீனாவுக்கு அனுமதி வழங்கியது போன்று தாய்லாந்து அரசுக்கும் கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் ராஜித சேனாரட்ன அழைப்பு விடுத்தார்.

பாரிய மீன்பிடி கப்பல்களை உபயோகித்து மீன் பிடிப்பதுடன் அவற்றை இலங்கை ஊடாகவே ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை அரசுக்கும், தாய்லாந்து அரசுக்கும் இடையே 2004 ல் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட கடற்றொழில் கூட்டு செயற்குழுவின் இரண்டாவது கூட்டம் நேற்று ஆறு வருடங்களின் பின் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் ஆரம்பமானது.

ஆரம்ப வைபவத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாளை 31ம் திகதி வரை நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் இரு நாடுகளுக்கிடையேயும் கடற்றொழில் துறை சார்ந்த விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.

இலங்கையில் எம்மிடம் ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈடுபடுகின்ற பாரிய வள்ளங்கள் இல்லை. இதனால் மீன் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க முடியாதுள்ளது.

சுமார் 200 மெற்றிக் தொன் வரையில் களஞ்சியப்படுத்தக் கூடிய பாரிய மீன்பிடி கப்பல்கள் சீனாவில் உள்ளன. இதனால் சீனாவுக்கு இலங்கை தேசிய கொடியுடன் இந்து சமுத்திரத்தின் ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதி வழங்கியுள்ளோம். அவர்கள் பிடிக்கும் மீனை இலங்கையின் மீன்பிடி துறைமுகங்கள் ஊடாக ஏற்றுமதி செய்ய வேண்டும்.

இதேபோன்று ஜப்பானின் ‘டூனா கிங்’ என்றழைக்கப்படும் கியோஷி கிமுராவிடமும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளேன்.

தாய்லாந்தும் தங்களது பாரிய மீன்பிடி படகுகளை, கப்பல்களை பயன்படுத்தி இலங்கை கொடியுடன் மீன் பிடிக்க முன்வர வேண்டும் என்பதுடன் தாய்லாந்தின் நவீன தொழில்நுட்பங்களையும் இலங்கைக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தாய்லாந்தின் கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகம் டொக்டர் விமொல் ஜன்ராரொட்டாய் அமைச்சின் செயலாளர் கலாநிதி டி. எம். ஆர். பி. திஸாநாயக்க உள்ளிட்ட தாய்லாந்து மற்றும் இலங்கை பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

சச்சினை வீழ்த்தியதை மறக்க முடியாது: சாவ்லா!!

chavla

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் விக்கெட்டை கைப்பற்றியது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் என்று இந்திய சுழற்பந்துவீச்சாளர் பியுஸ் சாவ்லா தெரிவித்தார்.

இந்திய அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளரான பியுஸ் சாவ்லா கடந்த 2005-06ல் நடந்த சாலஞ்சர் கிண்ண தொடரில் இந்திய பி அணிக்காக விளையாடினார்.

இத்தொடரில் இறுதிச்சுற்றில் சுழலில் அசத்திய இவர் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், யுவராஜ் சிங், அணித்தலைவர் டோனி ஆகியோரது விக்கெட்டை கைப்பற்றி தேசிய அணி தேர்வாளர்களை தன் மீது திசை திருப்பினார்.

இதனையடுத்து இவர் மார்ச் 2006ல் நாக்பூரில் நடந்த இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டிக்கு முதன்முதலில் தெரிவு செய்யப்பட்டார்.

24 வயதான இவர் இதுவரை 3 டெஸ்ட் (7 விக்கெட்), 25 ஒருநாள் (32 விக்கெட்), 7 சர்வதேச T20 (4 விக்கெட்) போட்டிகளில் விளையாடி உள்ள இவர் சமீபகாலமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.

இது குறித்து பியுஸ் சாவ்லா கூறுகையில், கடந்த 2005-06ல் நடந்த சேலஞ்சர் கிண்ண தொடரில் இந்திய பி அணிக்காக விளையாடிய போது எனக்கு 16 வயது. இத்தொடரில் சர்வதேச பந்துவீச்சாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கெதிராக பந்துவீசும் வாய்ப்பு கிடைத்தது.

சர்வதேச அளவில் எதிரணி பந்துவீச்சாளர்களை திணறடித்த இவர் எனது பந்தை எங்கே விட்டுவைக்கப் போகிறார் என்று எண்ணினேன்.

இருப்பினும் இவரது விக்கெட்டை கைப்பற்ற வேண்டும் என்று நினைத்தேன். அது போல சச்சினின் விக்கெட்டை வீழ்த்தினேன். இந்த தருணம், என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாகிவிட்டது. போட்டி முடிந்த பின், நன்றாக பந்து வீசினீர்கள் என்று சச்சின் என்னை பாராட்டினார்.

இதுவரை மூன்று டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடி இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. விரைவில் இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவேன். இதற்காக கடின பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.

இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி போட்டியில் சமர்சட் அணிக்காக விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இப்போட்டியில் என்னால் முடிந்தவரை முழுத்திறமையை வெளிப்படுத்தி துல்லியமாக பந்துவீச முயற்சிப்பேன் என்றும் முன்னதாக சசக்ஸ் அணிக்காக விளையாடியது ஊக்கம் அளித்தது எனவும் கூறினார்.

மகள் தாமினி நலமாக உள்ளார் : சேரன்!!

cheran

தனது மகள் தாமினி தற்போது நலமாக உள்ளார் என்று தெரிவித்துள்ளார் இயக்குனர் சேரன்.

இயக்குனர் சேரன் மகள் தாமினி தான் சந்துரு என்பவரை காதலிப்பதாகவும், அதற்கு தந்தை எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் சமீபத்தில் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதனால் கொலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. மகளின் புகாரால் வேதனை அடைந்த சேரன் சந்துரு பல பெண்களுடன் தொடர்புடையவர். அவரை விட்டு பிரிந்து மீண்டும் எங்களிடம் வர வேண்டும் என்று மகளுக்கு கோரிக்கை விடுத்தார்.

சேரனுக்கு ஆதரவாக அமீர் உள்பட பல இயக்குனர்களும் திரண்டனர்.
இதற்கிடையில் இப்பிரச்னை நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது காதலனை பிரிந்து பெற்றோருடன் செல்ல விரும்புவதாக தாமினி கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தந்தை சேரனுடன் தாமனி செல்ல அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சேரன் கூறுகையில் என் மகள் வீட்டுக்கு திரும்பி வந்தபிறகு ஆறுதல் அடைந்திருக்கிறேன். இதை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

கடந்த சில வாரங்களாக கடுமையான சூழலை சந்தித்து வந்தேன். இப்போது அதிலிருந்து விடுபட்டிருக்கிறேன். மேலும் திரைத்துறையில் நான் நிறைய நண்பர்களை பெற்றிருக்கிறேன் என்பதை இந்த சம்பவத்தால் உணர்ந்துள்ளேன்.

தாமினி தற்போது வீட்டில் இருக்கிறார் என்றும் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு விரைவில் தனது படிப்பை தொடர்வார் எனவும் கூறியுள்ளார்.

பச்சிளம் குழந்தையின் மரணத்திற்கு காரணமான பெற்றோர்!!

baby

கனடாவில் பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையின் மரணத்திற்கு காரணமாக பெற்றோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கனடாவில் உள்ள York Regional பகுதியை சேர்ந்த மருத்துவமனை ஒன்றிற்கு, கடந்த 22ம் திகதி 22 வயது ஆணும், 23 வயது பெண்ணும் ஒரு குழந்தையை ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஒரு வாரத்திற்கு பின்பு குழந்தை மரணமடைந்தது.

இதன் பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் மரணத்திற்கு எதிர்பாராத மூச்சுத்திணறலே காரணம் என தெரியவந்தது. இதனையடுத்து குழந்தையின் பெற்றோரை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கே.வி.ஆனந்த்-தனுஷ் கூட்டணியில் இணைந்த கார்த்திக்

karthik

மாற்றான் படத்திற்கு கே.வி.ஆனந்த் இயக்கப்போகும் அடுத்த படத்திற்கு தனுஷ் நாயகனாக தேர்வாகியுள்ளா. இப்படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.

அயன், மாற்றன் படங்களைப்போல இந்த படத்திற்காகவும் வெளிநாடு செல்லவிருக்கிறார் கே.வி.ஆனந்த். இப்படத்தின் நாயகி இன்னும் தேர்வாகவில்லை.

இந்நிலையில் இப்படத்தில் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். ஆனால், இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. செப்டம்பர் 2ம் திகதி இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் ஆரம்பமாகிறது.

நடிகை அஞ்சலி ரகசிய திருமணம்?

anjali

நடிகை அஞ்சலிக்கு ரகசிய திருமணம் நடந்ததாகவும் கணவருடன் அமெரிக்காவில் குடியேறி விட்டதாகவும் தெலுங்கு பட உலகில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

அஞ்சலி கடந்த ஏப்ரல் மாதம் திடீரென்று சித்தி வீட்டில் இருந்து வெளியறி மாயமானார். அவர் கடத்தப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஐந்து நாட்களுக்கு பிறகு ஐதராபாத் போலீசில் ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை என்று வாக்கு மூலம் அளித்தார்.

சித்தி கொடுமையால் வெளியேறியதாகவும் நிருபர்களிடம் விளக்கம் அளித்தார். 5 நாட்கள் யாருடன் இருந்தார் என்பதை அவர் வெளியிடவில்லை.

காதலனுடன் தங்கி இருந்த விவரமும் பிறகு அவரை ரகசிய திருமணம் செய்து கொண்ட விஷயமும் தற்போது அம்பலமாகி உள்ளது. அஞ்சலி காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர் ஆந்திராவில் உள்ள பிரபல அரசியல் வாதி ஒருவரின் மருமகன் என தெரிய வந்துள்ளது.

அரசியல் வாதியின் மகன் தெலுங்கு பட தயாரிப்பாளராக உள்ளார். அவருக்கு அரசியல் வாதியின் மருமகன் உதவியாக இருந்தாராம். அப்போது அஞ்சலிக்கும் அரசியல்வாதி மருமகனுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது.

காதலை பிரிக்க அரசியல் வாதி பெரும் முயற்சி எடுத்தாராம். ஆட்களை ஏவியும் மிரட்டினாராம். ஆனால் மருமகன் அஞ்சலி ஜோடி பயப்படவில்லை. காதலில் உறுதியாக இருந்தனர். பின்னர் திருமணமும் செய்து கொண்டார்கள். இருவரும் அமெரிக்காவில் குடியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் முச்சக்கர வண்டிகளுக்கான புதிய ஒழுங்கு விதிகள்..!

autoஇலங்கையின் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கமவினால் கடந்த ஜுலை 31ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிட்டப்பட்டுள்ள முச்சக்கர வண்டிகளுக்கான புதிய ஒழுங்கு விதிகள் வரும் செப்டெம்பர் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அமுலுக்கு வரவுள்ள இந்த புதிய ஒழுங்கு விதிகளின்படி,

சகல முச்சக்கர வண்டிகளிலும் கட்டண மீற்றர் பொருத்தப்படல் வேண்டும்,

கட்டண விபரத்தை வண்டியின் வெளிப்புறத்தில் காட்சிப்படுத்தல் வேண்டும்,

வண்டியின் வலது புறத்தில் கதவு பொருத்தப்படல் வேண்டும்,

முச்சக்கர வண்டியின் வேகம் ஒருபோதும் மணிக்கு 40 கிலோ மீற்றருக்கு மேல் போகக்கூடாது,

மூன்று பயணிகளுக்கு மேல் முச்சக்கர வண்டியில் பயணிக்க முடியாது. ஆயினும் ஒரு வளர்ந்தவருக்கு பதிலாக 12 வயதிற்கு குறைந்த இரண்டு பேரை ஏற்றிச் செல்லலாம்.

சாரதியின் இருக்கையின் பின்புறத்தில் சாரதியின் புகைப்படம், சாரதியின் அனுமதி பத்திரத்தின் பிரதி, தேசிய அடையாள அட்டையின் இலக்கம், அவசர தொடர்புக்கான தொலைபேசி இலக்கம் எனும் விபரங்களை காட்சிப்படுத்த வேண்டும்

போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை யாவும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒழுங்கு விதிகளை மீறி நடந்து கொள்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித மூளையை வளர்த்தெடுக்கும் பணியில் விஞ்ஞானிகள்!!

man

பெட்ரி தட்டுகள் எனப்படுபவை விஞ்ஞான ஆராய்ச்சிக்காக நுண்ணுயிர்க்கிருமிகளை வளர்க்கப் பயன்படுபவை ஆகும். முதன் முதலாக இந்தத் தட்டுகளில் ஸ்டெம் செல்லைப் பயன்படுத்தி ஒஸ்ரிய நாட்டின் தலைநகரான வியன்னாவின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மனித மூளையை ஒத்த ஒரு பகுதியை உருவாக்கி வருகின்றனர்.

தற்போது அந்தப் பகுதி ஒன்பது வாரக் கருவினுடைய மூளையை ஒத்ததுபோன்ற தோற்றத்தில் மூன்றிலிருந்து நான்கு மில்லிமீட்டர் அளவில் வளர்ந்துள்ளது. இன்னும் முழுவதும் வளர்ச்சியடையாத போதிலும் மூளையைப் போன்றே முதுகு புறணி, முன்மூளையின் கீழ்ப்புறம் மற்றும் முதிராத ஒரு விழித்திரை போன்றவை அதில் உள்ளன.

இதில் உருவாகியுள்ள பகுதிகள் சரியானவை என்றபோதிலும் அவை ஒருங்கிணைந்து உருவாகவில்லை என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள துணைச்செயலர் ஜுவெர்கன். நோபிளிச் கூறுகின்றார். மூளை பாதிப்பினால் ஏற்படக்கூடிய மனநோய் மற்றும் குழந்தைகளிடத்தில் காணப்படும் ஆட்டிசம் போன்ற வியாதிகள் குறித்து ஆராய்வதற்காகவே இந்த மாதிரிகள் உபயோகப்படுத்தப்படும்.

கல்லீரல் இதயத் திசு போன்றவற்றை ஏற்கனவே விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள போதிலும் மூளை உருவாக்கம் போன்ற நுண்ணிய செயல்பாடுகள் அவற்றில் கிடையாது. விஞ்ஞான உலகின் கணிப்பின்படி, இன்றைய திகதியில் திசுக்களைக் கொண்டு உருவாக்கப்படும் உடல் உறுப்புகளில், மூளையின் உருவாக்கமே மிகவும் சிக்கலானது என்று கருதப்படுகின்றது.

தொடரும் அவலங்கள்..

அவலங்கள் நடந்தேறுவதை கண்டும்
அவலம் ஒன்று இடம்பெறபோவதை
அறிந்தும் அங்கிருந்து தலைதெறிக்க
அவசர அவசரமாய் தப்பி ஓடுவதும் – பின்
“விசாரணை” “போர்க்குற்றம்”
“மனித உரிமை மீறல் ” என்று
உலக நாடுகள் முன் நற்பெயருக்கு முனைவதும்
உண்மை நிலைகளை கண்டறியும்
“உத்தியோக பூர்வ விஜயம்” என்று
கொலைக்களம் ஏகி இரண்டும் கெட்டான்
அறிக்கைகளை கடமைக்கு சமர்ப்பித்து
அல்லல் படும் உறவுகளின் நம்பிக்கையில்
ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கும் ஐ நாவே..

இலங்கையின் இனவாத வெறிக்கு
இரையாக போகின்றவர்கள் என்றும்
இவர்கள் நாளை அங்கு காணாமல் போக
இருப்பவர்கள் என்றும் கத்தி கத்தி
உன் செவிகளுக்குள் விழுந்து விழுந்து
உரத்து சொல்லியாயிற்று..

ஈழத்தமிழர்கள் என்று தானே
ஈற்றில் அகதி என்றாய்….!!!
ஈரைந்து திங்கள் எம் கண்ணீர்
ஈன வாழ்வினை கண்டிருந்தும்
ஈழத்தமிழர் என்று காரணங்காட்டி
ஈவிரக்கமின்றி துரத்துகின்றாயே…!

இன்று நீ எம்மை துரத்தி விட்டு
நாளை அங்கு நல்லபிள்ளைக்கு வருவாய்
எம் பிள்ளைகள் கையில் எம் படங்களுடன்
காணாமல் போனோர் உறவுகளாய் உன் முன்னால்
காரணமே நீ என்று அறியாமல் பத்திரிகைகளும்
கலர் கலராய் படம் பிடிக்கும்…!!!
வரலாறுகள் சொல்லி வரும் கதை இது….
வந்தார்கள் சென்றார்கள் என்று நீங்களும்
உயிரோடு சாகடிக்கப்பட்டும்
உலகத்துக்கு தெரியாமல்
உறவுகளுக்கும் தெரியாமல்
காணாமல் போனவர்களாய் நாமும்….
தொடர்கின்ற கதை இது…..

எம்மை காப்பாற்ற தயக்கம் காட்டும் உன் சபையில்
எமக்கு எதற்கு “அகதி” என்ற அங்கீகாரம்….?
அகதி என்ற பதத்திற்கு உன் அகராதியில் – நீ
அளித்த வரைவிலக்கணம் தான் என்ன ??

எங்களுக்காக என்ன குரல் கொடுத்தீர்கள்??
எங்களுக்காக என்ன தட்டி கேட்டீர்கள்??
உங்கள் சாசனத்தை மாற்றி எழுதுங்கள்…
ஈழத்தமிழனுக்கு ஐ.நா வில் அகதியாக கூட
உரிமை இல்லாதொழிக்கப்படுகின்றது என்று..!!!

-நிலவரசி நிலவன்-

லொத்தர் பரிசால் திருமண பந்தத்தில் இணைந்த ஜோடி!!

lottery

நீண்ட நாட்களாக நண்பர்களாக வாழ்ந்து வந்தவர்களை லொத்தர் பரிசு திருமண பந்தத்தில் இணைத்து வைத்துள்ளது. இங்கிலாந்தின் வெஸ்ட் யார்ஷெரி பகுதியில் வசிப்பர் கிரகாம் நில்ட்(வயது 55).

இவரும் அமாந்தா(வயது 48) என்ற பெண்ணும் பல ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். ஆனால் பணத்தின் தேவை அதிகமாக இருந்ததால் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தனர்.

இந்நிலையில் கிரகாமுக்கு குலுக்கலில் 60 கோடி பரிசு விழுந்தது. இதனையடுத்து அமாந்தாவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்கவே அவரும் ஓகே சொல்லி விட்டார். இருவரும் மகிழ்ச்சியாக பரிசு விழுந்ததை கொண்டாடினர்.

அது சிவகார்த்திகேயனுக்காக அல்ல: பிந்து மாதவி!!

bindu-madhavi

வெப்பம் படத்தில் விலைமாதுவாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்தபடி தமிழுக்குள் நுழைந்தவர் பிந்து மாதவி.

அதன்பிறகு கழுகு, சட்டம் ஒரு இருட்டறை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கௌரவ வேடத்திலும் நடித்துள்ளார்.

அதைப்பார்த்து, அவரும் சிவகார்த்திகேயனும் அதிக நெருக்கம். அதனால்தான் அவரது நட்புக்காக இந்த படத்தில் கௌரவ வேடத்தில் பிந்து மாதவி நடித்துள்ளார் என்று கோலிவுட்டில் செய்தி பரவியுள்ளது.

ஆனால் இதுபற்றி சம்பந்தப்பட்ட பிந்து மாதவியிடம் கேட்டால், இந்த படத்தில் நான் நடிப்பதற்கும் சிவகார்த்திகேயனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

மேலும் இந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை தயாரித்துள்ள நிறுவனம்தான் ஏற்கனவே நான் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா ஆகிய படங்களை தயாரித்துள்ளது.

அதனால் எனக்கு இரண்டு படவாய்ப்புகளை கொடுத்த படநிறுவனம் உரிமையோடு என்னை கெளரவ வேடத்தில் நடிக்க அழைத்ததால் மறுக்காமல் நடித்தேன். இது முழுக்க முழுக்க படாதிபதிக்காகத்தான். சிவகார்த்திகேயனுக்காக அல்ல என்கிறார் பிந்து மாதவி.

வினோதமான ஆசைக்காக காதலியின் மகளை கொன்றவர் தற்கொலை!!

sucide

அமெரிக்காவில் வினோதமான ஆசை ஒன்றுக்காக தனது காதலியின் 24 வயது மகளைக் கொன்றவர் சிறையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள டீர்பீல்ட் என்ற சிறிய நகரத்தின் தேவாலயத்தில் நிர்வாகப் பதவியில் இருந்தவர் ஜோன் டி வைட் என்பவர் ஆவார். 56 வயதான இவர் தன் காதலியின் 24 வயது மகளைக் கொன்றதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கடந்த மார்ச் மாதம் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்ட வைட் , இந்தக் கொலைக்கு சொன்ன காரணம் விநோதமானது. இறந்தவருடன் உடலுறவு கொள்ளவேண்டும் என்ற ஆசையினால் தான் காதலியின் மகளை கொலை செய்யதாக கூறியுள்ளார்.

இந்தக் கொலைக்காக அவருக்கு 56 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட வைட் மிக்சிகனில் உள்ள சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

நேற்று இவர் தூக்கிலிட்டுக்கொண்டு இறந்துள்ளதாக சீர்திருத்த அலுவலகத்தின் தகவல் அதிகாரி ருஸ் மார்லன் பத்திரிகையாளரிடம் தெரிவித்துள்ளார்.

நேற்று அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவரைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் ருஸ் மார்லன் தெரிவித்தார்.

தட்டைக் கழுவ மறுத்ததால் தலித் சிறுவன் சுட்டுக் கொலை!!

Shooting

தட்டைக் கழுவி உணவு பரிமாற மறுத்த தலித் சிறுவனை ஆத்திரத்தில் சுட்டுக் கொன்ற வாடிக்கையாளரை உத்திரப்பிரதேச பொலிசார் தேடி வருகின்றனர்.

இந்தியாவின் உத்தரப்பிரதேசம் முஜாபர்நகர் அருகில் உள்ள ஷாலி மாவட்டத்தில் உள்ள சிறிய ஹோட்டல் ஒன்றில் 11வயது சிறுவன் ஒருவன் வேலை பார்த்து வந்தான். அச்சிறுவன் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் எனச் சொல்லப்படுகிறது.

சம்பவத்தன்று ஹோட்டலுக்கு சாப்பிட வந்த ஜக்பால் என்ற வாடிக்கையாளர் தட்டு அசுத்தமாக இருப்பதாகக் கூறி தட்டை மீண்டும் கழுவி எடுத்து வருமாறு அச்சிறுவனிடம் கூறியுள்ளார்.

ஆனால் அதனைச் செய்ய சிறுவன் மறுத்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜக்பால் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அச்சிறுவனைச் சுட்டுக் கொன்றுள்ளான். இதில் சம்பவ இடத்திலேயே அச்சிறுவன் பரிதாபமாக பலியானான்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள ஜக்பாலைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் பொலிஸ் தலைமை கண்காணிப்பாளர் பிரகாஷ் குமார்.

எங்களை தாக்க நினைப்பவர்களுக்கு சமாதி நிச்சயம் : சிரியா எச்சரிக்கை!!

wael-al-halki-remplace-ryad-hidjab

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.
ஆனால் பதவி விலக மறுக்கும் அவர் போராட்டக்காரர்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறார்.

அதில், சுமார் 1 லட்சத்துக்கும் மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர். 7 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த நிலையில் தலைநகர் டமாஸ்கசின் புறநகரமான கவுட்டா மற்றும் மொடமியே பகுதிகளில் சிரியா ராணுவம் கடந்த 21ம் திகதி ரசாயன குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

அதில் இருந்து வெளியான நச்சு புகையில் சிக்கி குழந்தைகள், பெண்கள், முதியர்கள் உட்பட 1300க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இக்கொடூர சம்பவத்துக்கு ஐ.நா. கடும் கண்டனமும், வருத்தமும் தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து காலதாமதமின்றி உடனடியாக சிரியா அரசிடம் விசாரணை நடத்த ஐ.நா பொதுச்செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். மேலும் அதிகாரி ஏஞ்சலா கனே என்பவர் தலைமையில் ஒரு குழுவை ஐ.நா. சபை டமாஸ்கஸ் நகருக்கு அனுப்பியுள்ளது.

இந்த குழுவினர் சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் வீசப்பட்டதாக கூறப்படும் இடங்களில் ஆய்வு செய்தனர். ஆரம்பத்தில் ஐ.நா. அதிகாரிகளின் சோதனைக்கு ஆட்சேபனை தெரிவித்து வந்த சிரியா அரசு, பின்னர் ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. ஆய்வாளர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அருகே 2 மோர்டார் குண்டுகள் வெடித்தன. இது தீவிரவாதிகளின் சதிவேலை என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், ஐ.நா. அதிகாரிகள் ரசாயன ஆயுதங்கள் உபயோகிக்கப்பட்ட இடத்தை சோதனையிடக் கூடாது என்று அதிபர் பஷர் அல்-ஆசாத்தின் ஆதரவாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

இந்த தாக்குதலை பொருட்படுத்தாத ஐ.நா ஆய்வாளர்கள் ரசாயன ஆயுதங்கள் உபயோகிக்கப்பட்டதாக கூறப்படும் இடத்திற்கு கார்களில் புறப்பட்டு சென்றனர். போகும் வழியில் அவர்கள் சென்ற கார் மீது சிலர் வெடிகுண்டு வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் ஒரு கார் சேதமடைந்தது. ஆய்வாளர்களில் யாரும் காயமடைந்தனரா என்பது தொடர்பான தகவல்களை வெளியிட ஐ.நா. அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இந்த தடைகளையும் மீறி மொடமியே பகுதிக்கு சென்ற ஐ.நா. ஆய்வாளர்கள் தாக்குதல் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர்.

தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆஸ்பத்திரிக்கு சென்ற ஆய்வாளர்கள் அங்கு பணியாற்றும் டாக்டர்களிடமும், சிகிச்சை பெறும் நோயாளிகளிடமும் விசாரணை நடத்தினர். இந்நிலையில், எங்களை தாக்க நினைப்பவர்களுக்கு சிரியா சமாதியாக மாறிவிடும் என சிரியா பிரதமர் வயெல் அல்-ஹல்கி கூறியுள்ளார்.

சிரியா மீது அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற போர் மேகம் சூழ்ந்துள்ள வேளையில் நேற்று பேட்டியளித்த சிரியா பிரதமர் வயெல் அல்-ஹல்கி அமெரிக்காவில் தொடங்கி அனைத்து மேற்கத்திய நாடுகளும் சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு தங்களுக்கு ஏதாவது ஒரு காரணம் கிடைக்காதா என்று தேடி வருகின்றனர். அவர்களுக்கு வசதியாக சில காட்சியமைப்புகளை உருவாக்கவும் சிலர் துடிக்கின்றனர்.

எங்கள் மீது தாக்குதல் நடத்த நினைத்தால் 1973ல் யோம் கிப்பூர் போரின் போது கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தை இப்போதும் அளித்து எங்களை தாக்க நினைப்பவர்களின் சுடுகாடாக சிரியாவை மாற்றுவோம் என்று கூறியுள்ளார்.

ஜாமினில் வெளிவந்து கலக்கல் பேட்டி கொடுத்த பவர் ஸ்டார்(வீடியோ)

powerstar

மோசடி வழக்குகளில் கைதான பவர் ஸ்டார் ஜாமினில் வெளிவந்து கலக்கல் பேட்டி கொடுத்துள்ளார். மோசடி வழக்குகளில் கைதான பவர் ஸ்டார் சீனிவாசன் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார் என்று பேஸ்புக்கில் செய்தி வெளியாகியுள்ளது.

பல்வேறு மோசடி வழக்குகளில் கைதான நடிகர் பவர் ஸ்டார் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பவர் ஜாமீனில் விடுதலையாகி இருப்பதாக பேஸ்புக்கில் செய்தி வந்துள்ளது.

இதையடுத்து முன்னணி நாளிதழ் ஒன்றும் அதன் இணையதளத்தில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தொப்பையும் தொந்தியுமாக இருந்த பவர் ஸ்லிம்மாக ஆகிவிட்டாராம்.

சென்னைக்கு வந்த மனிதர் தனது ஸ்டைலில் ரவுசு பேட்டி ஒன்றை வேறு கொடுத்துள்ளாராம். பேட்டியில் அவர் கூறுகையில், சிறை எனக்கு ஆசிரமம் போன்று இருந்தது. அங்கு பணிபுரியும் தமிழக பொலிசார் என்னைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

டெல்லியில் 1500 ரகிகர்கள் என்னை வந்து சந்தித்தனர். அவர்கள் எல்லாம் என் ரசிகர்கள். நான் சிறை சென்ற காலத்தில் கொலிவுட் என்னை மிஸ் பண்ணி இருக்கும்.

என் படமான ஆனந்த தொல்லை தீபாவளிக்கு வெளியாகும். நான் சிறைக்கு சென்றது சிலர் செய்த சதி. இந்த பிரச்சனைகளில் இருந்து நிச்சயம் மீண்டும் வருவேன் என்று பேட்டி கொடுத்துள்ளாராம்.