107 செய்தி இணையங்களை முடக்கியது சீனா..!

chinaசெய்திகளை தரும் 100 வெப்சைட்களை சீன அரசு முடக்கியுள்ளது. அரசுக்கு எதிரான குரல் கொடுக்கும் மக்கள் பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரத்தை அரசு பறிக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீனாவில் வெப்சைட் மூலம் கருத்துக்களை சொல்வது அதிகரித்து வருகிறது.

அதிலும் சமீப காலமாக செய்திகளை தரும் வகையில் 100க்கும் மேற்பட்ட வெப்சைட்கள் தலைதூக்கின. இதில், அரசு மற்றும் அரசியல் நடவடிக்கைள் குறித்த செய்திகளும் இந்த வெப்சைட்களில் இடம்பெற்றன. மாகாண அளவில் நிலவும் அரசியல் விவகாரங்கள் தான் அதிகம் இடம் பெற்றன.

இந்த வெப்சைட்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில்,ஓசைப்படாமல், இத்தகைய வெப்சைட்களை முடக்கும் வேலையில் சீன அரசு இறங்கியது. கடந்த மே மாதம் ஆரம்பித்த இந்த அதிரடி நடவடிக்கைக்கு இதுவரை 107 வெப்சைட்கள் முடங்கியுள்ளன. மக்களிடம் பிரபலமாக விளங்கிய வொய்ஸ் ஒப் த பீப்பிள், டெமாக்ரடிக் லீகல் சூப்பர்விஷன் நெட்,சைனீஸ் சிட்டிசன்ஸ் நியூஸ், ஜஸ்டிஸ் ஒன்லைன் ஆகியவை அடங்கும்.

இந்த வெப்சைட்கள், ஒன்லைன் தொடர்பான அங்கீகாரம் அளிக்கும் அரசின் தேசிய இன்டர்நெட் கட்டுப்பாட்டு மையத்திடம் உரிமம் பெறவில்லை. அடையாளம் தெரியாத சிலர் திட்டமிட்டு தவறான தகவல்களை தந்து மக்களை குழப்ப முயற்சிப்பது தெரியவந்தது. அதனால் இந்த சட்டவிரோத வெப்சைட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதாகி விட்டது என்று அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடலின் நடுவே அமையவுள்ள கொழும்பு தெற்கு துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி..!

கடலுக்கு நடுவே அமைக்கப்படவுள்ள கொழும்பு தெற்கு துறைமுகத்தை பார்வையிடுவதற்கு எதிர்வரும் 8ம் திகதி முதல் 13ம் திகதிவரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக துறைமுக நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

400 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு தெற்கு துறைமுகத்தின் முதற்கட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 5ம் திகதி திறந்து வைக்கிறார்.

கடலின் நடுவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொழும்பு தெற்கு துறைமுகத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளை பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் நேரில் காண அவகாசம் வழங்குமாறு ஜனாதிபதி வழங்கிய ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதோடு 2016 ல் துறைமுக விஸ்தரிப்பு பணிகள் பூர்த்தி செய்யப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

colombo_soth_harbour1

colombo_soth_harbour2 colombo_soth_harbour3

வெடித்துச் சிதறியது ஆயுதக்கிடங்கு – 40 பேர் பலி..!

syriaசிரியாவில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களில் கிளர்ச்சியாளர்கள் வியாழக்கிழமை ஏவுகணை தாக்குதல் நடத்தினர். ஆயுதக் கிடங்கிலும் சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் 40 பேர் உயிரிழந்தனர்.

120க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று பிரட்டனைச் சேர்ந்த சிரியாவுக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மத்திய சிரியாவின் நகரமான ஹாம்ஸ் நகரில் உள்ள ஆயுதக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்து சிதறின. இதில் ஆயுதக் கிடங்கின் கட்டடம் தரைமட்டமானது.

ஆயுதக் கிடங்கின் அருகில் இருந்த பல வீடுகள் இடிந்தன. இன்னும் பல வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. சுவர்களில் பெரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் அதிபர் பஷார் ஆஸாத் ஆதரவாளர்கள் தான் அதிகளவில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

syria

ஓடும் ரெயிலில் சண்டை போட தயராகும் அஜீத்!!

ajith

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள ஆரம்பம் படம் குறித்து ஆரம்பத்தில் எந்த செய்தியும் வெளிவராமல் இருந்தது. இப்போது படம் வெளியாக தயாராக இருப்பதால் படம் குறித்தான பல்வேறு செய்திகளும் வெளிவரத் தொடங்கிவிட்டன. படத்திற்கு ஒருவழியாக ஆரம்பம் என்று பெயரிட்டு, புகைப்படங்களும் வெளிவரத் தொடங்கிவிட்டன.

இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துக் கொண்டிருக்கும் பெயரிடப்படாத படம் குறித்த தகவல்கள், ஆரம்பத்திலிருந்தே வரத் துவங்கியுள்ளன. இப்படத்தில் அஜீத் ஓடும் ரெயிலில் சண்டை போடுவது போன்ற காட்சியை படமாக்க இருக்கிறார்களாம்.

இதற்காக ஒடிஷா-ஆந்திரா எல்லையில் உள்ள ரயில் பாதையில் இந்த காட்சியை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். இதற்காக தென்கிழக்கு ரெயில்வேயில் முறையான அனுமதியும் பெற்றுள்ளனராம். இந்த காட்சியில் அஜீத் டூப் போடாமல் அவரே நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே ஆரம்பம் படத்திற்காக கார் சேசிங் காட்சியில் அஜீத் டூப் போடாமல் நடித்து, விபத்துக்குள்ளானார். இதனால் காலில் பலத்த அடிபட்டு அதற்கு சிகிச்சையும் மேற்கொண்டார். இந்நிலையில், சிவா இயக்கும் இப்படத்தில் ரயில் சண்டை காட்சியில் அஜீத் டூப் போடாமல் நடிப்பதாக வந்துள்ள செய்தி படக்குழுவினரை மட்டுமல்லாது அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

அவுஸ்திரேலியா செல்லத் தயாரான 39 பேர் மாத்தறையில் கைது..!

arrest1சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல தயார் நிலையில் இருந்த ஒரு தொகுதியினர் மாத்தறையில் நேற்று  இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை – கனத்தகொட பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

39 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு அதில் 18 ஆண்களும் ஏழு பெண்களும் 14 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

வவுனியாவில் 6 ஆசனங்களுக்காக 171 பேர் போட்டி..!

votingவட மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக வவுனியா மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகளும் 7 சுயேற்சைக்குழுக்களும் களத்தில் இறங்கியுள்ளன.

நேற்று மதியம் 12 மணியுடன் முடிவடைந்துள்ள வேட்பு மனு தாக்கல் செய்யும் கால எல்லைக்குள் வவுனியாவில் 12 அரசியல் கட்சிகளும் 8 சுயேற்சைக்குழுக்களும் வவுனியா மாவட்டத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

இந் நிலையில் செல்லையா விஜயகுமார் தலைமையிலான சுயேற்சைக்குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என வவுனியா தேர்தல்கள் அலுவலகம் அறிவித்துள்ள நிலையில் 12 அரசியல் கட்சிகளும் 7 சுயேற்சைக் குழுக்ளையும் சேர்ந்த 171 பேர் 6 ஆசனத்திற்காக போட்டியிடவுள்ளனர்.

தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கு இன்று முதல் 2ம் தவணை விடுமுறை..!

schoolநாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்க தமிழ், சிங்கள பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக இன்று மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறு மூடப்படும் பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை களுக்காக செப்டம்பர் 02 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டாம் தவணை விடுமுறைக்காக மூடப்பட்ட சகல முஸ்லிம் பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைளுக்காக எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் க. பொ. த. (உ/த) பரீட்சை மண்டபங்களாக பயன்படுத்தப்படும் முஸ்லிம் பாடசாலைகள் மட்டும் செப்டம்பர் 02 ஆம் திகதி திறக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

11 இலட்சம் திரைப்படங்களை ஒரே சி.டியில் சேமிக்கக் கூடிய புதிய தொழில் நுட்பம்!

cd

ஒப்டிகல் விஞ்ஞானத்தை 1873ம் ஆண்டே எர்னஸ்ட் அப்பே கண்டுபிடித்திருந்தாலும் அதில் மாபெரும் முன்னேற்றமோ அல்லது பெரிய கண்டுபிடிப்போ இல்லை.

அதை போக்கும் வண்ணம் ஸ்வின்பர்ன் பல்கலைகழகத்தில் விரிவுரையாளர் கூ தலைமையில் பொறியியல் விஞ்ஞானிகள் ஒரு புது வகை வட்டை(CD) கண்டுபிடித்திருக்கின்றனர்.

இது சிடி / டிவிடி / ப்ளூரே தாண்டி ஒரு பெட்டாபைட் (10,48,576 கிகா பைட்) கொள்ளளவு கொண்டது. இந்த டிஸ்கின் மூலம் 11 லட்சம் டிவிடி திரைப்படங்களை சேமிக்கவோ (1ஜிபி குறைவாக ஒரு எம்பி 4 திரைப்பட அளவின்படி கணக்கிடபட்டது) அல்லது 10 வருடம் 6 மாத ஹெச்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியும் அல்லது 18 வருட எஸ் டி தொலைக்காட்சியியை இந்த டிஸ்கில் அடக்கி விடலாம்.

இது போக்கல் பொயின்ட் எனப்படும் லேசரின் நுணுக்கம் ஒரு மனிதனின் முடியை பத்தாயிரமாய் வகுந்தால் எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு மிக துல்லியமான போக்கல் பொ யின்ட் தொழில்நுட்பம் மூலம்தான் இந்த டிஸ்க் ரெடியாகி உள்ளது. மேலும் இது 100 X வேகம் கொண்டது.

மீண்டும் சுருண்டது சிம்பாவே : 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!

india

சிம்பாவே அணிக்கெதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் ரோகித், ரெய்னா அரை சதம் கடந்து கைகொடுக்க இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிம்பாவே சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தியா 3-0 என வலுவான முன்னிலையில் உள்ளது.

நான்காவது ஒருநாள் போட்டி இன்று புலவாயோவில் நடந்தது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் வீராட் கோஹ்லி களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான், வினய் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு எதிர்பார்த்தது போல புஜாரா, மோகித் சர்மா ஆகியோர் அறிமுக வீரர்களாக வாய்ப்பு பெற்றனர். சிம்பாவே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி 42.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக சிகும்பரா 50 ஓட்டங்களும், வாலர் 35 ஓட்டங்களும், சிபண்டா 24 ஓட்டங்களும், மசகட்சா 10 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி சார்பில் அமித் மிஸ்ரா 3 விக்கெட்டும், மோகித் சர்மா, ஜடேஜா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 145 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை துரத்திய இந்திய அணி 30.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரோகித் ஷர்மா 64 ஓட்டங்களும், ரெய்னா 65 ஓட்டங்களும் எடுத்தனர். இதன் முலம் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் தொடரை வென்று முன்னிலையில் உள்ளது.

அனுஷ்காவுடன் காதலா : ஆர்யா பேட்டி!!

Aarya

ஆர்யாவும் அனுஷ்காவும் காதலிப்பதாக செய்திகள் வெளியானது. இருவரும் இரண்டாம் உலகம் படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். அப்போது காதல் வயப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதற்கு ஆர்யா பதில் அளித்துள்ளார். அவர் பேட்டி வருமாறு..

நானும் அனுஷ்காவும் காதலிப்பதாக வந்த செய்தியை பார்த்து சிரித்தேன். நாங்கள் நல்ல நண்பர்கள். வேறு எதுவும் எங்களுக்குள் இல்லை. சிங்கம் 2 படத்தின் வெற்றி விழா விருந்தில் நாங்கள் ஜோடியாக பங்கேற்றதாகவும் இதற்காக ஐதராபாத்தில் இருந்து ஒன்றாக வந்ததாகவும் கூறுகின்றனர்.

நான் அந்த விருந்துக்கு போய் இருந்தேன். ஐதராபாத்தில் இருந்து அனுஷ்காவுடன் சேர்ந்து வரவில்லை. தனியாகத் தான் போனேன். அனுஷ்கா சிங்கம் 2 படத்தின் நாயகி எனவே அவரும் வந்து இருந்தார்.

நானும் அனுஷ்காவும் இரண்டாம் உலகம் படத்தில் நடித்துள்ளோம். ஒன்றரை வருடம் அந்த படத்தில் நடித்துள்ளோம். எனவே சிங்கம் 2 பட விருந்தில் பேசிக் கொண்டோம். நாங்கள் மட்டும் அந்த விருந்தில் இல்லை. வேறு நிறைய நடிகர், நடிகைகள் இருந்தனர்.

சிங்கம் 2 படப்பிடிப்பு நடந்த போது அனுஷ்காவை பார்க்க அடிக்கடி படப்பிடிப்பு தளத்துக்கு சென்றதாகவும் வதந்தி பரப்பப்பட்டு உள்ளது. சென்னையில் சிங்கம் 2 படப்பிடிப்பு நடந்த போது என்னையும் டைரக்டர் செல்வராகவனையும் அனுஷ்கா அழைத்து இருந்தார்.

நாங்கள் நேரில் போய் பேசிவிட்டு வந்தோம். நயன்தாரா, உதயநிதி நடிக்கும் படத்தின் படிப்பிடிப்பு என் வீட்டின் அருகில் நடந்த போது கூட நான் நேரில் சென்று அவர்களிடம் பேசிவிட்டு வந்தேன். நான் யாரையும் இதுவரை காதலிக்கவில்லை. யாரையேனும் காதலித்தால் அதை வெளிப்படையாக அறிவிப்பேன்.

கொடிகட்டிப் பறக்கும் நஸ்ரியா!

Nasriya

தமிழில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நஸ்ரியா. படமும் நன்றாக ஓட ஆளும் அழகாக இருக்க அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமானார்.

ஜெய்க்கு ஜோடியாக “திருமணம் என்னும் நிக்கா” படத்தில் நடித்து முடித்து விட்டார். அதைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லீ இயக்கும் ராஜா ராணி படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஆர்யா – நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளனர்.

அத்துடன் தனுஷுக்கு ஜோடியாக நய்யாண்டி படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து கார்த்தி ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை அட்டகத்தி ரஞ்சித் இயக்குகிறார்.

தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் நடிக்க நஸ்ரியாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கதை, சம்பளம் உள்ளிட்ட விஷயங்கள் ஒத்துவந்தால் ஓ.கே. என்கிறார்கள்.

ஒரு நடிகை அழகாக இருந்தால் அவரோடு சேர்ந்து நடிக்க முன்னணி நடிகர்கள் போட்டி போடுவார்கள். அப்படித்தான் ஹன்சிகாவைத் தொடர்ந்து நஸ்ரியாவுக்கும் போட்டி நிலவுகிறதாம்.

தற்போதைய நிலவரப்படி நஸ்ரியாவின் கொடிதான் கோடம்பாக்கத்தில் உயரப் பறக்கிறதாம்.

இதற்கு பெயர் நடனமா கொலை வெறியா??

நீங்கள் இதுவரை பலவகையான நடனங்களை பார்த்து இருப்பீர்கள் ஆனால் இப்படி ஒரு கொலைவெறி நடனத்தை பார்த்திருக்க மாட்டீர்கள்..

கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி: அப்ரிடி!!

shahid-afridi

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக கிண்ணத்தை கைப்பற்றியது எங்களது அணிக்கு கிடைத்த வெற்றி என பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள பாகிஸ்தான் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என கைப்பற்றியது. மேலும் டுவென்டி-20 தொடரிலும் 2-2 என முழுமையாக வென்றது.

இந்நிலையில் இதன் மூன்றாவது மற்றும் ஐந்தாவது போட்டியில் சூதாட்டம் நடந்திருப்பதாக இங்கிலாந்து பத்திரிகை ஒன்றில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அப்ரிடி கூறுகையில் எங்கள் அணியின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி தான் இது.

இப்போட்டிகளில் சூதாட்டம் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இதை யார் பரப்பினார்கள் என்று தெரியவில்லை. இப்படி கூறுவதால் எங்களது மன வலிமை ஒன்றும் குறையபோவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

சயீத் அஜ்மல் கூறுகையில் சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் எங்களின் செயல்பாடு மோசமாக இருந்தது. எனவே மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் வெற்றி பெற கடுமையாக போராடினோம்.

ஏனெனில் இந்த அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியமல்ல, இந்த வெற்றியை எண்ணி நாங்கள் பெருமை அடைகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

12 வருடங்களுக்கு பின்பு பேஸ்புக்கால் ஒன்றுசேர்ந்த குடும்பம் (வீடியோ இணைப்பு)!!

இந்திய புனே நகரில் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்த நபர் ஒருவர் தற்போது பேஸ்புக் மூலம் ஒன்று சேர்ந்துள்ளார்.

புனேயில் 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம், சரியாக படிக்கவில்லை என்று தாய் திட்டியதால் மனம் உடைந்து வீட்டை விட்டு வெளியேறினான் சிறுவன் அங்குஷ் டேமேல்.

அப்போது வீட்டில் இருந்து வெளியேறியவன் நேராக குருத்வாரா கோயிலுக்குச் சென்று அங்கு கோயில் திருப்பணிகளை செய்து வந்தான். அங்கிருந்த குரு ஒருவர் அவனுக்கு குர்பன் சிங் என்று பெயரிட்டு அவனை பராமரித்து வந்தார். அந்த சிறுவனும் தலையில் துணி ஒன்றைக் கட்டிக் கொண்டு நீண்ட தாடியுடன் சிங்காக மாறினான்.

இதனைத் தொடர்ந்து பல வழிகளில் தனது குடும்பத்தாரை தேடும் பணியிலும் ஈடுபட்டு வந்தான். இந்நிலையில் பேஸ்புக்கின் வழியாக தன்னை விட இரண்டு வயது குறைந்த தனது சகோதரனின் சந்தோஷ் என்ற பெயரை தேடி அவனை தொடர்பு கொண்டு தன்னை பற்றி கூறியுள்ளான்.

அங்குஷ் தனது குடும்பத்தாரை சந்திப்பதற்கு குருவே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். தலையில் துணியுடனும் , தாடியுடனும் பார்த்த குடும்பத்தாருக்கு அங்குஷின் தோற்றம் விசித்திரமாக இருந்தாலும், அவனது நினைவுகள் அவர்களை ஒன்று சேர்த்துள்ளது.

ஹொலிவுட் பட உலகில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் யார்?

hollywood

ஹொலிவுட் பட உலகில் கடந்த ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய நடிகைகள் குறித்த விவரத்தை நியூயோர்க்கில் இருந்து வெளிவரும் பத்திரிகை வெளியிட்டது. அதில் நடிகை ஏஞ்சலீனா ஜூலி முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.

அவருடைய வருமானம் 33 மில்லியன் டொலர்கள் (500 கோடி) ஆகும். 38 வயதாகும் இவர் சமீபத்தில் மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றார். இவர் நடித்துக் கொண்டிருக்கும் மேல்பிசியன்ட் சினிமாப்படம் அடுத்த கோடைகாலம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து 2வது இடத்தில் 26 மில்லியன் டொலர் (375 கோடி) வருமானத்துடன் ஒஸ்கார் விருது பெற்ற நடிகை ஜெனிபர் லோரன்சும், 3வது இடத்தை 22 மில்லியன் டொலர் (300 கோடி) வருமானத்துடன் நடிகை கிறிஸ்டின் ஸ்டுவார்டும் பெற்று இருக்கிறார்கள்.

 

ஓகஸ்ட் மாத ராசி பலன்கள் – மீனம்

meenam

தூய உள்ளம் படைத்த நீங்கள் எதிலும் நியாயமும் நேர்மையும் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பீர்கள். இந்த மாதம் சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். ராசிக்கு நான்கில் ராசிநாதனும் ஐந்தில் சூரியன், புதனின் சஞ்சாரம் இருக்கும்போது திடீர் கோபம் உண்டாகும். அடுத்தவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி முடிப்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் புதிய வீடு, வாகனம் வாங்க முற்படுவீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும்.

வெளிநாட்டுத் தொடர்புகளால் நன்மை உண்டாகும். வருமானம் படிப்படியாக உயரும். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் அலைச்சல் இருந்தாலும் முடிவில் சாதகமான பலன்கள் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆனால், கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும். கூடுதலாக எதிலும் உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையும். எதிர்கட்சியினரும் உங்களுக்கு ஆதரவு தருவார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். இதனால் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை முடித்துக் கொடுத்த பின்னரே புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவக் கூடிய நிலையில் இருப்பதால் அவர்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் படைப்புகளை புதிய வடிவத்தில் தருவீர்கள். புதிய கலைப் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனத்தோடு படியுங்கள். அதிகாலையில் எழுந்து ஹயக்ரீவரை வணங்கி, படிக்கத் தொடங்குங்கள்.

சந்திராஷ்டம தினங்கள்:

11, 12, 13 ஆகிய திகதிகளில் தொழில் நிமித்தமாக யாருக்கும் முன்பணம் கொடுக்க வேண்டாம்.

பரிகாரம்:

சிவனை வியாழக்கிழமைகளில் வணங்கி வருவது மன அமைதியை தரும். கடன் தொல்லை குறையும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் ஸ்ரீ ஹரிஹரபுத்ராய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும்.

சிறப்புப் பரிகாரம்:

வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : புதன், வியாழன், வெள்ளி;
தேய்பிறை : புதன், வியாழன்.