கொழும்பில் ஒகஸ்ட் 7-ஆம் திகதி இந்திய, இலங்கை தூதரக அதிகாரிகள் முன்னிலையில் இலங்கை-தமிழக மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இது குறித்து டில்லியில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் கூறுகையில், “இரு நாட்டு மீனவர்கள் பிரச்னை முடிவுக்கு வர இச்சந்திப்பு நடைபெற வேண்டும் என எங்கள் அரசு விரும்புகிறது´ என்றனர்.
முன்னதாக, இக்கூட்டம் ஒகஸ்ட் 1-ஆம் திகதி நடப்பதாக இருந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து விட்டு கொழும்பு செல்ல தமிழக மீனவர்கள் விரும்பினர். ஆனால், முதல்வரைச் சந்திக்க நேரம் கிடைக்காததால் பயணத்தைத் தாற்காலிகமாக தவிர்த்ததாக தெரிகிறது.
தமிழ்நாடு விசைப்படகு மீனவர் சங்க ஆலோசகர் தேவதாஸிடம் கேட்டபோது “முதல்வரின் வழிகாட்டுதலின்படி, இலங்கை பிரதிநிதிகளுடன் விரைவில் பேச்சு நடத்துவோம்´ என்றார்.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று இடம்பெற்ற இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது 20-20 போட்டியில் தென்னாபிரிக்க வீரர்கள் அபார திறமையை வெளிப்படுத்தி இலங்கை அணியை 12 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.
போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. தென்னாபிரிக்கா சாரபில் ஜேபி.டுமினி 51 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் சேனாநாயக்க 3 விக்கெட்களை வீழ்த்தினார். அத்துடன் லசித் மாலிங்க 20-20 போட்டிகளில் இன்று தனது 50வது விக்கெட்டினை வீழ்த்தினார்.
பதிலுக்கு 116 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 103 ஒட்டங்களை மாத்திரமே பெற்று 12 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் எவரும் கைகொடுக்காத நிலையில் குமார் சங்கக்கார மாத்திரம் இறுதிவரை போராடி ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் தென்னாபிரிக்கா சார்பில் அரைசதம் கடந்த டுமினி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட20-20 தொடரில் தென்னாபிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை சினிமா படமாகியுள்ளது.இதில் விவேகானந்தர் வேடத்தில் தீப்பட்டாச்சார்யா நடித்துள்ளார். இந்தியா முழுவதும் நிறைய நடிகர்களை பார்த்து இறுதியில் தீப்பட்டாச்சார்யாவை தேர்வு செய்தனர்.
நரேந்திரநாத் ஆக இருந்த இளமை பருவத்தில் இருந்து சுவாமி விவேகானந்தராக மாறியது வரை அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. விவேகானந்தரின் ஆன்மீக பயணங்கள், வெளிநாடுகளில் ஆற்றிய சொற்பொழிவுகள் அனைத்தும் இதில் இடம் பெற்றுள்ளது.
ஜெகதீஷ் மிஸ்ரா இப்படத்தை தயாரித்து உள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது நான் சிறு வயதில் இருந்தே சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டேன். எனவேதான் அவர் வாழ்க்கையை படமாக எடுத்தேன். இளைய தலைமுறையினருக்கு விவேகானந்தரின் வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள இப்படம் உதவும் என்றார்.
பிரபல இந்தி டி.வி தொடர்களில் நடித்து வரும் நடிகை சாக்ஷி பரிக் இன்று மும்பையில் உள்ள கண்டிவாலி பகுதியில் காரை ஓட்டிச் சென்றார்.
அதிக வேகத்தில் சென்ற அவரது கார் ஒரு ஆட்டோ ரிக்ஷா ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் பகவதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சாக்ஷி பரிக்கை மும்பை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நிகழ்ந்த போது அவர் குடிபோதையில் இருந்தாரா என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளிக்க போலீசார் மறுத்து விட்டனர்.
நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் வவுனியா நகரசபை உறுப்பினர்கள் மூவர் பிரதான கட்சிகளினூடாக போட்டியிடவுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் ஊடாக அப்துல் பாரியும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடாக நகரசபையின் உப தலைவராக இருந்த எம். எம்.ரதனும் முஸ்லீம் காங்கிரசின் ஊடாக எம்.முனௌபரும் போட்டியிடவுள்ளனர்.
இதேவேளை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தலைவராக இருந்த து.நடராஜசிங்கம் தமிழ் தேசியக்கூட்டமைப்பிலும் வவுனியா சிங்கள பிரதேச சபையை சேர்ந்த எஸ்.ஜெயதிலக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலும்போட்டியிடவுள்ளனர்.
நீங்கள் எத்தனையோ மனிதர்களை பார்திருப்பீர்கள் ஆனால் இவர்களை போல் மனிதர்களை நீங்கள் நிச்சயம் பார்த்திருக்கமாட்டீர்கள் . ஆம், இந்த உலகின் உண்மையான சுப்பர் மேன்ஸ் என்றால் இவர்கள் தான்.
இவரது பெயர் மைக்கேல் லோலிட்டோ. இவர் தன் வாயாலேயே இரும்பை வளைகக்கூடியவர். சில சமயம் சாப்பிடவும் செய்கின்றார்.
இவரது பெயர் கிம் பீக் இவர் புத்தகத்தில் இருக்கும் பக்கங்களை 3 செகண்ட் பாத்தால் போதும் எந்த வாக்கியம் எங்க இருக்கின்றது என சரியாக சொல்லக்கூடியவர். ஆனால் இவர் தற்போது உயிரோடு இல்லை.
இவரது பெயர் டேன் கர்னேஸ் இவர் 350 கிலோமிட்டர் நிக்காமல் ஓடியிருகின்றார். 5 இரவுகள் தூங்காமல் ஓடியிருகின்றார் இவர்.
பெயர் நேகாக் இவர் 1970 ல் இருந்து தூங்கவே இல்லையாம். இவருக்கு என்ன தூக்க மாத்திரை கொடுத்தும் இவரை தூங்க வைக்கவே முடியாதாம்.
நடாஷா இவருக்கு ஸ்கேனிங் கண் . ஒருவரை பாத்தாலே போதுமாம் நமது உடலில் என்ன வியாதி இருகின்றது என்று சரியாக சொல்லக்கூடியவர். அதனால தினமும் எவர் வீட்டுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகுதாம்.
இவர் ஐசோ மெச்சி. இவரால துப்பாக்கியில் இருந்து வெளிவரும் புல்லட்டின் அசைவை கூட கூர்மையாக பாக்க முடியுமாம் இவர் ஒரு வாள் சண்டை வீரர்.
இவர் டேவ் முல்லின்ஸ் இவரால் தண்ணீருக்குள் அதிவேமாக நீந்த முடியும். இதற்காக இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் மேலும் இவர் 244 மீட்டரை வெறும் 4 நிமிடங்களில் தண்ணீருக்குள் கடந்து சாதனை படைத்தார்.
இவர் விம் ஹோப் இவர் கடும் குளிர்ச்சியான ஐஸ் கட்டிகளில் எவ்வளவு நாட்கள் இருக்க சொன்னாலும் இருப்பார். இவர்தான் ஐஸ் மனிதர்.
இவர் ஸ்டிபன் வில்சைர் இவர் ஒரு மொத்த நகரத்தை ஒரு முறை பார்த்தால் போதும் அதை அப்படியே ஓவியமாக வரைந்து விடுவார்.
இவர் ஸ்லேவிசா பஜ்கிக் இவர் ஒரு பெட்டரி மனிதர், இவரது உடலில் இருந்தே மொத்த வீட்டிற்க்கும் மின்சாரம் எடுக்கிறார் .
ஷூட்டிங் ஸ்பொட்டில் சக நடிகர், நடிகைகளை கலாய்க்கும் ஆர்யா ஆரம்பம் படத்தில் நடித்தபோது அஜித்திடம் சிக்கிக் கொண்டாராம். ஹீரோக்களில் ஆர்யாவும் சரி, சிவாவும் சரி ஷூட்டிங் ஸ்பொட்டில் நடிகைகளை கலாய்ப்பதில் வல்லவர்கள்.
அதிலும் ஆர்யா கலாய்ப்பு மன்னன் என்று பெயர் எடுத்தவர். பிற ஹீரோக்கள் கூட ஆர்யாவை கலாய்ப்பு மன்னன் என்றே அழைக்கிறார்களாம்.
இந்நிலையில் ஆரம்படம் ஷூட்டிங்கிற்கு ஆர்யா வந்துள்ளார். முதலில் சில நாட்கள் அஜித் சமத்துப் பிள்ளையாக இருந்துள்ளார். பின்னர் ஆர்யாவை நயன்தாரா, டாப்ஸி முன்பு கலாய்க்க ஆரம்பித்துவிட்டாராம்.
அஜித்தின் கலாய்ப்பை தாங்க முடியாமல் ஆர்யா தெறித்து ஓடினாராம். ஷூட்டிங் முடிந்து ஊர் திரும்பிய ஆர்யா தனது நண்பர்களிடம் தான் அஜித்திடம் பட்ட பாட்டை கூறினாராம்.
வழக்கமாக நான் தான் யாரையாவது கலாய்த்து ஓட வைப்பேன் இப்பொழுது என்னவென்றால் அஜித் என்னை ஓடவிட்டுவிட்டார் என்று புலம்பினாராம்.
சன்டியாகோவிலிருந்து சிட்னிக்குச் சென்ற விமானத்தில் திடீர் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு 30 பயணிகள் பெரும் பாதிப்படைந்தனர். இதையடுத்து விமானம் சிட்னியை வந்தடைந்ததும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த திடீர் வயிற்றுப்போக்குப் பிரச்சினையால் பயணிகள் அனைவரும் பெரும் பீதியடைந்தனர். குவான்டஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விமானத்தில் ஒரு குழுவினர் மொத்தமாக டிக்கெட் எடுத்துப் பயணித்தனர்.
சன்டியாகோவிலிருந்து புறப்பட்ட விமானம் சிட்னி நோக்கி வந்து கொண்டிருந்தது. விமானம் சிட்னி விமான நிலையத்தை நெருங்கியபோது திடீரென அந்த 30 பேருக்கும் வயிற்று வலியும், வாந்தியும், வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது.
இதனால் விமானமே பரபரப்பானது. இதையடுத்து சிட்னி விமான நிலையம் உஷார்படுத்தப்பட்டது. வைத்தியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
விமானம் தரையிறங்கியதும் அத்தனை பேரையும் மருத்துவர்கள் அழைத்துச் சென்று அவசர சிகிச்சை அளித்தனர். இந்த 30 பேரும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு எங்கோ வெளியில் சாப்பிட்டுள்ளனர். அந்த சாப்பாட்டில்தான் பிரச்சினை என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த திடீர் வாந்தி, வயிற்றுப் போக்கால் விமானத்திலும், விமான நிலையத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தன்னை தன் காதலனிடம் இருந்து பிரிக்கவும், காதலனை கொலை செய்யவும் தனது தந்தை முயற்சி செய்வதாக இயக்குனர் சேரனின் மகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
குடும்பப் பாங்கான படங்கள் எடுப்பதில் வல்லவர் சேரன். அவரது மனைவி செல்வராணி. அவர்களுக்கு நிவேதா மற்றும் தாமினி(20) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
சேரன் சேத்துப்பட்டு ஹாரிங்டனில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சேரனின் 2வது மகள் சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் எலக்ற்ரோனிக்ஸ் மீடியா 3ம் ஆண்டு படித்து வருகிறார்.
அவர் இன்று காலை 11 மணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். தனது தந்தை தன்னையும் தனது காதலன் சந்துருவையும் பிரிக்க முயற்சிப்பதாக புகார் அளித்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் சூளைமேட்டைச் சேர்ந்த சந்துரு என்பவரை நான் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன்.
அவர் சினிமாவில் உதவி இயக்குனராகவும், டான்சராகவும் உள்ளார். சினிமா விழா ஒன்றுக்கு என் தந்தையுடன் சென்றபோது தான் சந்துரு அறிமுகமானார். பிறகு நாங்கள் காதலிக்க ஆரம்பித்தோம். எங்கள் காதல் பற்றி என் தந்தைக்கு தெரிய வந்தது. முதலில் அவர் எங்கள் காதலை எதிர்க்கவில்லை.
படிப்பு முடிந்த பிறகு நீ சந்துருவையே திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். ஆனால் கடந்த 2 மாதங்களாக எங்கள் வீட்டில் என் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என் தந்தையும், அவருக்கு நெருக்கமான திரைத்துறையினரும் சேர்ந்து சந்துருவை மறந்துவிடும்படி என்னை மிரட்டி வருகின்றனர்.
சந்துருவை கொலை செய்ய பல முறை முயற்சி நடந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு என் உடல் நலம் பாதிக்கப்பட்டபோது என் தந்தை வெள்ளைத் தாளில் என்னிடம் கையெழுத்து வாங்கினார். எங்கள் காதலை பிரித்து சந்துருவை கொன்றுவிடுவதாக அவர் மிரட்டுகிறார்.
என்னை வீட்டில் அடைத்து வைத்திருந்தனர். இன்று காலையில் கல்லூரிக்கு செல்வதாகக் கூறிவிட்டு வந்து சந்துருவின் வீட்டில் தஞ்சம் அடைந்தேன். என் தந்தை எங்கள் காதலை பிரிக்க முயற்சிக்கிறார் என்று சந்துருவின் தாய் மற்றும் அக்காவிடம் கூறினேன். அவர்களுடன் வந்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். என்னை என் காதலனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றார்.
இலங்கை நாடாளுமன்ற அமைந்துள்ள கட்டடத்தை முழுமையாக நவீனமயப்படுத்தவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடமைப்பு தொகுதியை ஒன்றை நிர்மாணிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரதமர் டி.எம்.ஜயரட்ன அமைச்சரவையில் தாக்கல் செய்த இது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் நாடாளுமன்றத்தை நவீனமயப்படுத்தும் புனரமைப்பு நடவடிக்கைகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட உள்ளது.
இதற்கான ஒப்பந்தம் வரையறுக்கப்பட்ட சுமிடோமோ மிட்சுய் என்ற ஜப்பானிய நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளது.
நியூசிலாந்துக்கு சொந்தமான இரு தீவுகளுக்கு பல ஆண்டுகளுக்குப் பின் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 200 ஆண்டுகளுக்குப் பின் இந்த தீவுகளுக்கு ஆங்கிலத்திலும் நியூசிலாந்து மக்களால் பேசப்படும், மாவோரி மொழியிலும் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
உலகின் கடைக்கோடியில் உள்ள, நியூசிலாந்துக்கு சொந்தமாக, பல தீவுகள் உள்ளன. அவற்றில், இரு தீவுகள், வடக்கு தீவு, தெற்கு தீவு என்றே அழைக்கப்படுகின்றன.
கடந்த, 200 ஆண்டுகளாக இந்த தீவுகளுக்கு பெயர் சூட்டப்படவில்லை. மக்களின் விருப்பத்திற்கேற்ப, நியூசிலாந்து அரசு, வடக்கு மற்றும் தெற்கு தீவுகளுக்கு, புதிய பெயர் சூட்ட முடிவு செய்துள்ளது.
அவற்றிற்கான பெயர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நாட்டு மக்களின் விருப்பப்படி, வடக்கு தீவுக்கு, ஆங்கிலத்தில், “த பிஷ் ஒப் மவுஇ” அதாவது, மாவோரியின் கடவுள் என்றும், மாவோரி மொழியில், “டே இகா – எ – மவுஇ” என்றும் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதே போல் தெற்கு தீவுக்கு, ஆங்கிலத்தில், “ரிவர்ஸ் ஒப் கிரீன் ஸ்டோன்” அதாவது, பச்சை கற்களின் நதி என்றும் மாவோரி மொழியில், “டே வாய்போனாமு” என்றும் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முறையான அறிவிப்பு இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கியை காட்டி ஒரு சிறுவன் பணத்தை கொள்ளையடித்துள்ளான். அமெரிக்காவில் பென்சிலேனியாவில் உள்ள ஜர்னஸ் டவுன் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் பழ ஜூஸ் குடிக்க தனது நண்பர்களுடன் கடைக்கு சென்று கொண்டிருந்தான்.
அப்போது அவனை சுமார் 12 வயது மதிக்கதக்க மற்றொரு சிறுவன் வழி மறித்தான். அவனிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றான். அதற்கு அவன் மறுத்தான். உடனே 12 வயது சிறுவன் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை காட்டி அவனை சுட்டு கொன்று விடுவதாக மிரட்டினான்.
பின்னர் அவனிடம் இருந்த 1800 ரூபாயை பறித்துக் கொண்டு தனது வீட்டுக்கு ஓடிவிட்டான். பணத்தை பறி கொடுத்த சிறுவன் இதுகுறித்து அப்பகுதியில் ரோந்து வந்த போலீசாரிடம் தெரிவித்தான்.
உடனே அச்சிறுவனின் வீட்டிற்கு சென்ற போலீசார் அவனை கைது செய்தனர். அவனிடம் இருந்து கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் அவன் கைது செய்யப்பட்டான். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவன் சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைக்கப்படுவான் என போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
ஆம் ஏராளமான பாதிப்புகள் ஏற்படும் கணினி இயங்கும்போது ஏற்படும் வெப்பத்தை குறைப்பதற்காக கணினியின் உள்பகுதியின் பாகங்களை குளிர்விப்பதற்கான காற்றாடியில் இந்த தூசுகள் படிந்து வெளிக்காற்று கணினிக்குள் செல்லவிடாமல் தடுக்கின்றன.
அதனால் கணினியின் உள்பாகம் மிக அதிக வெப்பமாகி கணினியின் உள்உறுப்புகள் பாதிப்படைவதற்கு ஏதுவாகின்றது மேலும் இவ்வாறு ஏற்படும் அதிகவெப்பத்தினை குறைப்பதற்காக இந்த காற்றாடியானது மிகவேகமாக ஓடவேண்டிய நிலைஏற்படுகின்றது இவ்வாறு காற்றாடி மிகவேகமாக ஓடும் சத்தத்தை வைத்தே தூசுகள் காற்றாடியில் அதிகஅளவிற்கு படிந்துள்ளதை அறிந்து கொள்ளமுடியும்.
இந்நிலையில் நம்முடைய கணினியின் CPU எவ்வளவு வெப்பநிலை உள்ளது என CoreTemp என்ற பயன்பாட்டினை செயல்படுத்தி பார்த்து அறிந்து கொள்ளலாம் பொதுவாக இயல்புநிலையில் எந்த பயன்பாடுகளும் இயங்காமல் கணினிமட்டும் இயங்கிடும் வழக்கமான நல்ல நிலைஎனில் 55 டிகிரி இருக்கவேண்டும் அதைவிட அதிகமாக இருந்தால் கணினியின் உட்பகுதி தூசுகள் படிந்துள்ளன என அறிந்து கொள்ளலாம் பொதுவாக அனைத்து சிபியூவும் junction அல்லது thermal cutoff என அமைத்திருப்பார்கள் அதற்கு மேல் எனில் CPU இயங்காத வண்ணம் அமைத்திருப்பார்கள்.
அவ்வாறே நம்முடைய கணினியின் வன்தட்டு எவ்வளவு வெப்பநிலை உள்ளது என CrystalDiskInfo என்ற பயன்பாட்டினை செயல்படுத்தி பார்த்து அறிந்து கொள்ளலாம் எந்த பயன்பாடுகளும் இயங்காமல் கணினிமட்டும் இயங்கிடும் வழக்கமான நல்ல நிலைஎனில் 20 முதல் 55 டிகிரி இருக்கவேண்டும்
அதுமட்டுமின்றி இவ்வாறான தூசுகள் கணினியின் ports , connections ஆகியவற்றில் படிந்து தவறான இணைப்பையும், இணைப்பே ஏற்படுத்தமுடியாத நிலையையும் உருவாக்கிடும் மேலும் கணினியின் உள்உறுப்புகள் பாதிப்பாகி அவைகளை அதிக செலவிட்டு புதியதாக மாற்றியமைக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
அதனால் மடிக்கணினி எனில் காற்றோட்டமான பகுதியிலும் மேஜைக்கணினியெனில் அதனுடைய சுற்றுப்புற பக்கத்தில் வைத்துள்ள பலகத்தையும் கழற்றி வைத்தபின் Air Compressor அல்லது Vacum Cleaner அல்லது Swiffer/liquid-free dusting துணியை கொண்டு கணினியின் உட்பகுதியில் உள்ள தூசுகளை அவ்வப்போது சுத்தபடுத்தி நம்முடைய கணினியை தூசுகள் படியாமல் சுத்தமாக வைத்து கொள்வது நல்லதுஎன பரிந்துரைக்கபடுகின்றது.
இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக குற்றம்சாட்டி கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 21 தமிழ்நாடு மீனவர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 6-ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த (ஜுன்) மாதம் 6-ம் திகதி கைது செய்தனர்.
அவர்கள் சென்ற 5 படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், 21 தமிழ்நாடு மீனவர்களும் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களின் விளக்கமறியலை 6-ம் திகதி வரை நீட்டித்து நீதவான் ஆனந்தி கனகரத்தினம் உத்தரவிட்டார்.
இதேவேளை, கடந்த (ஜூலை) மாதம் 31-ம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன் துறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த 74 மீனவர்கள் நேற்றிரவு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.