ஆப்கானில் இந்தியத் தூதரகம் அருகே தாக்குதல் – 8 பேர் பலி!!

afcan

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அருகே நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் பொதுமக்கள் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

காரில் வந்த மூன்று தற்கொலை தாக்குதல்தாரிகள், தூதரகத்துக்கு அரு கேயுள்ள சோதனைச் சாவடியின் அருகாமையில் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் அருகேயுள்ள மசூதிக்கு வந்தவர்கள் என்று கருதப்படுகிறது. தாக்குதலில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

அதேநேரம் இந்திய தூதரகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தோல்வியில் முடிந்துள்ளதாக நான்கர்ஹார் மாகாண காவல்துறைத் துணைத் தலைவர் மவுசம் கான் ஹசிம் கூறியுள்ளார்.

தனது தூதரகத்தில் வேலை செய்யும் அனைவரும் பத்திரமாக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை தாம் நடத்தவில்லை என்று தலிபான் அமைப்பின் பேச்சாளர் ஜபிஹூல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பும் இந்திய அலுவலகங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன. கடந்த 2008 மற்றும் 2009ம் ஆண்டு காபூலில் இருக்கும் இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது.

-BBC தமிழ்-

ரோட்டில் விரட்டி விரட்டி அடித்தார் சேரன் – மகளின் காதலன் பரபரப்பு புகார்!!

seran

சேரனும் அவருடன் வந்தவர்களும் என்னை சாலையில் ஓட விட்டு விரட்டி விட்டி அடித்தார்கள் என்று பரபரப்புப் புகார் தெரிவித்துள்ளார் இயக்குநர் சேரனின் மகளின் காதலர் சந்துரு.

இன்று காலை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திதற்கு வந்த சேரனின் மகள் தாமினியின் காதலர் சந்துரு அங்கு வாக்குமூலம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

சேரன் மகள் தாமினியும் நானும் இரண்டு வருடங்களாக காதலிக்கிறோம். சேரனுக்கு தெரிந்ததும் என்னை மிரட்டினார். மகளுடன் பேச் கூடாது என்றார். நாங்கள் காதலில் உறுதியாக இருந்தோம். அதன் பிறகு சேரனிடம் மன மாற்றம் ஏற்பட்டது.

இரண்டு வருடம் கழித்து உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்றார். சந்தோஷப்பட்டோம். இந்த நிலையில் தாமினிக்கு உடல் நிலை சரி இல்லை என்று தயாரிப்பாளர் ஒருவர் என்னை அழைத்து போனார். கோடம்பாக்கம் பெட்ரோல் நிலையத்தில் வைத்து சேரன் பெரிய இயக்குனர் அவர் மகளை மறந்து விடு இல்லாவிட்டால் காரை ஏற்றி கொன்று விட்டு விபத்து என்று சொல்லிவிடுவோம்.

நீ சினிமாவில் இருக்கிறாய் உன்னை வளர விட மாட்டோம் என்று அச்சுறுத்தினர். அப்போது சேரனும் ஆட்களுடன் அங்கு வந்தார். இவனிடம் என்ன பேச்சு என்று சொல்லி சேரனும் அவருடன் வந்தவர்களும் என்னை அடித்தனர் நான் அங்கிருந்து ஓடினேன்.

ரோட்டில் என்னை ஓட ஓட விரட்டி அடித்தார்கள். இது பற்றி எனது குடும்பத்தினருக்கு தெரிந்ததும் பயந்தனர். சேரன் செல்வாக்குள்ள இயக்குனர். அவரால் உன் உயிருக்கு ஆபத்து வரலாம். எனவே காதலை விட்டு விடு என்று நிர்ப்பந்தித்தனர். நான் மறுத்தேன். இதனால் கோவையில் உள்ள மாமா வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.

என்னை சேரன் மிரட்டியது தாமினிக்கு தெரிய ஆரம்பித்து உள்ளது. இதனால் அவர் கல்லூரிக்கு போவதாக பொய் சொல்லி விட்டு எங்கள் வீட்டுக்கு வந்து விட்டார். எனக்கு போன் செய்து தகவல் சொன்னார்கள். நான் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து செல்லும் படி கூறினேன். காதலில் நான் உறுதியாக இருப்பேன் என்றார் அவர்.

 

யாழில் கடந்த வாரத்தில் 218 சந்­தே­க­ந­பர்கள் பொலி­ஸாரால் கைது!!

Jaffna1

யாழ்ப்பாண மாவட்­டத்தில் இரு­வேறு சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் பிரி­வு­க­ளுக்குள் பல குற்­றச்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­டைய 218 சந்­தேக நபர்­களைப் பொலிஸார் கடந்த வாரத்தில் கைது செய்து நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

இவ்­வி­டயம் தொடர்­பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்­பாணப் பொலிஸ் பிரி­வினுள் நப­ரொ­ரு­வரை அடித்துக் காயப்­ப­டுத்­தி­யமை தொடர்­பாக 23 பேரையும், சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் 4 பேரையும், யாழ். நீதிவான் நீதி­மன்­றத்­தினால் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்ட 24 பேரையும், குடிபோ­தையில் வாகனம் செலுத்­திய 12 பேரையும், சட்­ட­வி­ரோ­த­மாக மது­பானம் விற்­பனை செய்த 10 பேரையும், களவு சம்­பந்­த­மாக 4 பேரையும், பண மோச­டி­யுடன் தொடர்­பு­டைய 2 பேரையும், குடி­போ­தையில் கலகம் விளை­வித்த 7 பேரையும் பொலிஸார் கைது செய்­துள்ளனர்.

சேரனிடம் போலீசார் விசாரணை – ஆதரவாக வந்த அமீர், பாலா, சமுத்திரக்கனி!!

seran

காதலையும் காதலனையும் பிரிக்க முயற்சித்ததாக இயக்குநர் சேரன் மகள் கொடுத்த புகாரின் பேரில் சேரனை அழைத்து விசாரணை நடத்தினர் ஆயிரம் விளக்குப் போலீசார்.

அப்போது சேரனுக்கு ஆதரவாக முன்னணி இயக்குநர்கள் பாலா, அமீர், சேரன் போன்றோர் வந்திருந்தனர். இயக்குநர் சேரன் மகள் தாமினி, உதவி இயக்குநர் சந்துருவை தீவிரமாகக் காதலிக்கிறார்.

இந்தக் காதலைப் பிரிக்க அப்பா சேரன் முயற்சிப்பதாக தாமினியே போலீசில் புகார் செய்தார். கோடம்பாக்கத்தில் பரபரப்பு கிளப்பியுள்ளது இந்த விவகாரம். இந்த நிலையில் தாமினி கொடுத்த புகாரின் பேரில் இயக்குநர் சேரனை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர் போலீசார்.

சேரன் மனைவி செல்வராணி, மகள் தாமினி ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். தன்னுடன் வந்துவிடும்படி சேரன் எவ்வளவோ கேட்டும் தாமினி உடன் வர மறுத்துவிட்டார். உரிய நேரத்தில் தாமினிக்கு திருமணம் செய்து வைப்பதாக, சேரனுடன் வந்திருந்த இயக்குநர்கள் பாலா, அமீர் மற்றும் சமுத்திரக்கனி போன்றோர் கூறினர். ஆனால் எதையும் ஏற்க தாமினி மறுத்துவிட்டார்.

வவுனியாவில் 85 கிலோ கஞ்சா மீட்பு!!

weed

வவுனியா நகரை அண்டிய பகுதியில் இருந்து 85 கிலோ நிறைவுடைய கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இக்கஞ்சாவை வைத்திருந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியாவிலுள்ள விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கடந்த மாதம் 25ம் திகதி வவுனியா நகரிற்கு வெளியே உள்ள காட்டில் இருந்து விசேட அதிரடிப்படையினரால் இக்கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இதேவேளை இக்கஞ்சாவை வைத்திருந்தவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யபபட்ட ஆறுபேரும் வவுயியா நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு, எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சீனிவாசனுக்கு கடும் எதிர்ப்பு : ஒத்திவைக்கப்பட்டது பிசிசிஐ செயற்குழு கூட்டம்!!

srinivasan

சீனிவாசன் தலைமை வகிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ., செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை அணியின் கௌரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் மீது குற்றம்சாட்டப்பட்டது. குருநாத் தமது மருமகன் என்பதால் பி.சி.சி.ஐ., தலைவர் பொறுப்பில் இருந்து சீனிவாசன் தற்காலிகமாக ஒதுங்கினார்.

இது தொடர்பாக பிசிசிஐயால் அமைக்கப்பட்ட இருநபர் குழு, சட்ட விரோதமானது, சட்ட விதிமுறைகளுக்கு முரணாக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மும்பை உயர் நீதிமன்றம் அதிரடியைக் காட்டியது.

இதைத் தொடர்ந்து இன்று சீனிவாசன் தலைமையில் பிசிசிஐ செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இதில் மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பு பற்றி விவாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் செயற்குழுக் கூட்டத்துக்கு சீனிவாசன் தலைமை வகிக்கக் கூடாது என்று பீகார் கிரிக்கெட் சங்க செயலர் வர்மா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை டெல்லியில் செயற்குழுக் கூட்டத்துக்கு உறுப்பினர்கள் வந்திருந்தனர்.

அதில் பலரும் சீனிவாசன் கூட்டத்துக்கு தலைமை வகிக்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சீனிவாசனோ தாம் கூட்டத்துக்கு தலைமை வகிப்பேன் என்று அடம்பிடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து இன்றைய கூட்டம் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

தெருநாயைத் தத்தெடுத்த டோனி!!

doni

சிம்பாவே தொடரிலிருந்து ஓய்வு அளிக்கபட்ட இந்திய அணித் தலைவர் டோனி அமெரிக்காவை சுற்றிப் பார்த்து விட்டு திரும்பியுள்ளார். டுவிட்டரில் ரசிகர்களுடன் சுவையான தகவல்கள் பலவற்றை அவர் பகிர்ந்து வருகிறார்.

ராஞ்சியில் உள்ள நாய்கள் காப்பகத்திற்குச் சென்று அங்குள்ள தெருநாய் ஒன்றை தத்தெடுத்து அதனை பரமாரிக்கும் செலவுகளை தானே ஏற்றுக் கொள்ள தோனி சம்மதித்துள்ளார். அந்த நாய்க்க்கு லியா என்று பெயரிட்டுள்ள டோனி டுவிட்டரில் அதன் படத்தையும் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே 2011ம் ஆண்டு மைசூரில் உள்ள விலங்கியல் பூங்காவிலிருந்து அவர் 9 ஆண்டுகளேயான ஒரு புலியை தத்தெடுத்து வளர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டுவிட்டரில் அவர் மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளார்:

தன் வாழ்க்கையில் முதன் முதலாக 4500 ரூபா கொடுத்து வாங்கிய மோட்டார் சைக்கிளை பழுது பார்த்து மீண்டும் ஓட்டும் நிலைமைக்கு கொண்டுவரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் கொடுக்கும் இன்னொரு தகவல் உண்மையில் புதிது. ஒரு பொருளை நாம் வீட்டிற்கு வரவழைத்தால்தான் விலை அதிமாகும் நாம் அங்கு போய் வாங்கினால் வீட்டிற்கு வர வைப்பதைவிட விலை குறைவாகத்தான் இருக்கும்.

ஆனால் டோனி டுவீட்டியிருப்பது இதற்கு மாறான ஒன்றை அதாவது ராஞ்சியில் வீட்டிற்கு வந்து பால் சப்ளை செய்தால் லீட்டர் ரூபா 32 என்றும் அதையே நாம் அவர்கள் இடத்திற்கு சென்று வாங்கினால் லீட்டருக்க்கு ரூபா 34 என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் இல்லாமல் பத்திரிக்கையாளர்கள் தொல்லை இல்லாமல் உண்மையில் ரிலாக்ஸாகவே இருக்கிறார் போலிருக்கிறது தோனி!

உலகில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்.. அவர்தான் ரஜினி – ஷாருகான்!!

saruk

இந்த உலகில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அவர் ரஜினி சார் மட்டுமே என்றார் பொலிவுட் கிங் எனப்படும் ஷாரூக்கான். ஷாருக்கான் – தீபிகா படுகோன் நடித்து திரைக்கு வரவிருக்கிறது ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படம். இந்தப் படத்துக்கான அனைத்து விழாக்களும் முதலில் சென்னையில் நடப்பது போலவே ஏற்பாடு செய்துள்ளார் ஷாருக்கான்.

படத்தின் நாயகி தீபிகா படுகோனேவுடன் இன்று சென்னை வந்த ஷாரூக்கான் விழாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். “என் அம்மா பிறந்த ஊர் ஹைதராபாத். தீபிகாவுக்கு சொந்த ஊர் பெங்களூர். இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ் தமிழ். இந்தப்படம் சம்பந்தப்பட்டவர்கள் தென் இந்தியர்கள்.

தென் இந்தியர்கள் எல்லோரும் இணைந்து ஒரு இந்தி சினிமா செய்திருக்கிறோம். தமிழ்நாட்டில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அஜீத் எனக்கு நல்ல நண்பர். மணிரத்னம்,சந்தோஷ் சிவன் என்று என் மனதுக்குப் பிடித்த நண்பர்கள் இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள்,” என்றார்.

தீபிகா படுகோனிடம் கோச்சடையான், சென்னை எக்ஸ்பிரஸ் என்று இரண்டு சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்திருக்கிறீர்கள். நீங்கள் பணியாற்றிய விதத்தில் யார் பெஸ்ட் என்று நினைக்கின்றீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

தீபிகா சற்று தயங்க உடனே வந்த ஷாருக்கான் மைக் பிடித்து இந்த கேள்விக்கு தீபிகாவால் பதில் சொல்ல முடியாது. நானே சொல்கிறேன். உலகத்திற்கு ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அவர் ரஜினி சார்தான். இது எல்லோருக்கும் தெரியும். ரஜினி சாருக்கு ஜப்பானில் இருக்கும் ரசிகர்களை கண்டு நான் வியந்திருக்கிறேன்.

தனித்துவம் வாய்ந்த அந்த மனிதரை கொண்டாடுவதற்கு ஒரு வாய்ப்பு அமைந்தது. அதனால்தான் லுங்கி டான்ஸ் ஒன்றுக்கு ஆடியுள்ளேன். இந்த பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலுக்கும் படத்திற்கும் சம்பந்தம் இல்லையென்றாலும் ரஜினி சாருக்கு என்னால் முடிந்த ஒன்றைச் செய்த திருப்தி இருக்கிறது என்றார்.

தலைவா படத்துக்கு தடை கோரிய வழக்கு இன்று விசாரணை!!

thalaivaa

விஜய் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஆகஸ்ட் 9ம் திகதி வெளிவரவிருக்கும் தலைவா படத்துக்கு தடை கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சென்னை சிட்டிசிவில் நீதிமன்றத்தில் அசோக்நகரைச் சேர்ந்த பி.முருகேசன் என்பவர் தாக்கல் செய்த மனு: என்னிடம் ஏ.எல்.உதயா கடந்த மே 11ம் திகதி 21 லட்சம் கடன் கேட்டார். விஜய் நடிக்கும் தலைவா என்ற படத்தில் நடிப்பதாகவும், சம்பளம் கிடைத்ததும் கடனை திருப்பித் தந்துவிடுவதாகவும் உத்தரவாதம் கொடுத்திருந்தார்.

தலைவா அதற்கான கடிதத்தை படத்தின் தயாரிப்பாளர் எஸ்.சந்திரபிரகாஷ், இயக்குனர் ஏ.எல்.விஜய் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார். அவர்களும் உதயாவின் வார்த்தைக்கு உறுதி அளித்தனர். இவர்களின் உறுதிமொழியை நம்பி, பணத்தை கொடுத்தேன்.

இந்த நிலையில் ஆகஸ்டில் தலைவா படம் ரிலீஸ் ஆவதாக பத்திரிகை செய்தி படித்தேன். இதுகுறித்து கேட்டபோது உதயா கொடுத்த பதில் திருப்திகரமாக இல்லை. கடனை திருப்பித் தரவில்லை என்றால் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கக்கூடாது.

அனுமதித்தால் எனக்கு பாதிப்பு ஏற்படும். எனவே அந்த படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார். சென்னை சிட்டிசிவில் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று (சனிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

ஆந்திர போராட்டக்காரர்களுக்கு அடங்க மறுத்த தமன்னா!!

tamana

ஒன்றுபட்ட ஆந்திராதான் வேண்டும் என போராட்டக்காரர்கள் கோஷம் போடச் சொன்னதை ஏற்காமல் அது சினிமாக்காரர்கள் வேலையல்ல என்று தைரியமாக மறுத்துப் பேசியுள்ளார் நடிகை தமன்னா.

தெலுங்கில் முதல் நிலை நடிகையாக உள்ளார் தமன்னா. இப்போது ஆந்திரா இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்படுகிறது. முன்பு தெலுங்கானா வேண்டும் என்று கோரி பெரும் போராட்டம் நடந்தது. இப்போது தெலுங்கானா வேண்டாம் என்று அதைவிட பெரிய போராட்டம் நடக்கிறது.

தமன்னா நேற்று விசாகப்பட்டினம் விமான நிலையம் செல்லும் வழியிலும் ஒரு கும்பல் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். அந்த வழியாக செல்லும் வாகனங்களை மறித்து ரகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது நடிகை தமன்னாவின் காரும் அந்த கும்பலிடம் சிக்கியது.

காருக்குள் இருப்பது நடிகை தமன்னா என்பதை தெரிந்து கொண்ட போராட்டக்காரர்கள் தமன்னாவிடம், ஒன்றுபட்ட ஆந்திராவுக்கு ஜே (சமய்கியாந்திரா) என்று சொல்லுமாறு வலியுறுத்தினர். ஆனால் அப்படி சொல்லாமல் தமன்னா தவிர்த்தார்.

சொன்னால்தான் அங்கிருந்து காரை செல்ல விடுவோம் என்று போராட்டக்காரர்கள் நிபந்தனை விதித்தனர். ஒரே சத்தமாக இருந்ததால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. உடனே அவர்களிடம் நடிகை தமன்னா என்னை பேசவிடுங்கள் நான் ஒரு நடிகை. எனக்கு மொழி பேதம் இல்லை.

அனைத்து மொழிகளிலும் நடிப்பதுதான் எனது தொழில். ஆந்திராவோ, தெலுங்கானாவோ, தமிழ்நாடோ எனக்கு எல்லாமே ஒன்றுதான். என்னை போகவிடுங்கள். நான் அவசரமாக செல்ல வேண்டும். இப்படி கோஷம் போடுவது என் வேலையில்லை என்று தெலுங்கில் சத்தமாகச் சொன்னார்.

உடனே ஐக்கிய ஆந்திராவுக்கு ஜே என்று ஒரு முறை மட்டும் சொல்லுங்கள் போகவிடுகிறோம் என்று பேரம் பேசிப் பார்த்தார்கள் போராட்டக்காரர்கள். ஆனால் தமன்னா கடைசி வரை அப்படி சொல்ல மாட்டேன் என உறுதியாக நின்றார். வேறு வழியின்றி சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு அவரது காரை அங்கிருந்து செல்ல அனுமதித்தனர். பின்னர் நடிகை தமன்னாவின் கார் அங்கிருந்து விமான நிலையம் நோக்கி விரைந்தது.

 

பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு தர்ம அடி!!

abuse

தமிழ்நாடு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு தர்மஅடி கொடுத்து பொலிசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எலக்ற்ரோனிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் பேராசிரியராக பணிபுரிபவர் மோகன்(50).

இவர் மாணவிகள் இருவரிடம் தவறான எண்ணத்தில் பழகி எஸ்.எம்.எஸ்., மூலம் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுபற்றி இரு மாணவியரும், பெற்றோரிடம் கூறினர். நேற்று, இரு மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், கல்லூரி முடிந்து பேராசிரியரை சந்திக்க காத்திருந்தனர்.

மாலை வகுப்பு முடிந்து, மாணவியர் இருவரையும், தன் அறைக்கு வரும்படி அழைத்த பேராசிரியர் மோகன், அவர்களிடம், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவிகள் அழுது கொண்டே வெளியேறி பெற்றோரிடம் தெரிவித்தனர்.

ஆத்திரமடைந்த உறவினர்கள் பேராசிரியர் அறைக்குள் சென்று மோகனுக்கு தர்மஅடி கொடுத்து, அண்ணாமலை நகர் பெலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

முறைப்பாட்டையடுத்து பொலிஸார் வழக்கு பதிந்து, பேராசிரியர் மோகனை கைது செய்தனர்.

குவைத்தில் இன்னல்களை அனுபவித்த 28 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!!

kuwaitcity

வேலை வாய்ப்புத் தேடி குவைத் சென்று அங்கு பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து இலங்கை தூதரகத்தில் தஞ்சம் புகுந்த 28 இலங்கையர்கள் நாடு திரும்பினர். இன்று அதிகாலை அவர்கள் நாடு திரும்பினர்.

பல வருடங்களாக தொழில் புரிந்த இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் குவைத் இலங்கை தூதரகத்திற்குச் சென்று முறையிட்ட இவர்கள் தூதரக உதவியுடன் நாடு திரும்பியுள்ளனர்.

இன்று நாடு திரும்பியவர்களில் ஆண், பெண் இருபாலாரும் அடங்குகின்றனர்.

வன்னியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளருக்கு ஆசிய சமாதான விருது..!

thavachsriவன்னியைச் சேர்ந்த தவச்சிறி சாள்ஸ் விஜயரட்ணம் என்ற பெண் கிராமப் புற சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்த பணியாற்றியமைக்காக “2013-என் சமாதான” (N Peace Award) விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பெண்களின் தலைமைத்துவத்தைக் கௌரவிக்கும் வகையில், இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.  அந்தவகையில், “என் சமாதான விருதை” இவருடன் மேலும் 5 பேர் பெற்றுக் கொள்கின்றனர்.

ஆப்கானிஸ்தான், நேபாளம், பிலிப்பைன்ஸ், கிழக்கு திமோர், இந்தானேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐந்து பெண்கள் இந்த ஆண்டுக்கான சமாதான விருதைப் பெறுகின்றனர்.

தவச்சிறி சாள்ஸ் விஜயரட்ணம், வன்னியில் பல்வேறு பெண்கள் சமூக அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார். சமூகமட்ட பெண்கள் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் செயலராகவும், கரைச்சி பிரதேச செயலர் மட்டத்திலான பெண்கள் வலையமைப்பான பெண்கள் அபிவிருத்தி சம்மேளனத்தின் பொருளாளராகவும் பணியாற்றுகிறார்.

இவர், ஆதரவற்ற பின்தங்கிய சிறுவர்கள் கல்வியைப் பெறுவதற்கும். ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழுந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கான உதவிகளைப் பெற்றுக்கொடுத்தல், பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்கள், காணி உறுதிகள் போன்ற அவசியமான சட்ட ஆவணங்களைப் பெறுக்கொடுப்பது உள்ளிட்ட சமூகப் பணிகளை இவர் ஆற்றியுள்ளார்.

பெண்களின் உரிமைக்காகவும், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், கடன்கள், உதவிகள், தொழிற்பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் இவர் பணியாற்றி வருகிறார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தவச்சிறி விஜயரட்ணம்,

“எனது சமூகத்தின் தேவைகளுக்காக பல ஆண்டுகளாக அமைதியாக சேவையாற்றி வருகிறேன். இந்த விருதுக்கு தெரிவு செய்யப்பட்டது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்.  இது எனது சேவையை தொடர்வதற்கு மேலும் உந்துதல் அளிப்பதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தவிருது வழங்கும் நிகழ்வு தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் வரும் ஒக்ரோபர் மாதம் நடைபெறவுள்ளது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது..!

ykoஇலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று பிரதமர் வருகையைக் கண்டித்து கறுப்புக் கொடி போராட்டம் நடத்தி, வைகோ மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது பேசிய வைகோ, இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது.

இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெற்றால், அதன் மூலம் 53 நாடுகளின் தலைவராக இலங்கை அதிபர் ராஜபக்ச பொறுப்பேற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்தியா அதில் பங்கேற்கக் கூடாது.

ஒரு வேளை இந்தியா பங்கேற்றால், இவ்வளவு நாள் தமிழகத்தில் நடந்த போராட்டங்கள் அனைத்தும் அர்த்தமற்றதாகப் போய்விடும் என்பதால், நாங்கள் “பாரதப் பிரதமரே திரும்பிப் போ” என்ற முழக்கத்துடன் போராட்டம் நடத்தி கைதாகியுள்ளோம் என்று கூறினார்.

பிரதமர் வருகை! கறுப்புக் கொடி காட்ட முயன்ற வைகோ உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது

திருச்சிக்கு வருகை தரும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பிற கட்சித் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சியை அடுத்த திருமயத்தில் பிஎச்இஎல் நிறுவனத்தின் ஒரு ஆலையைத் தொடக்கி வைக்க பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை திருச்சி வருகிறார்.

தமிழகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்க, அதற்கெல்லாம் செவி கொடுக்காத பிரதமர், ஒரு ஆலையைத் தொடக்கி வைக்கும் ஒரு நிகழ்ச்சிக்காக தமிழகம் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மதிமுக உட்பட் பல்வேறு கட்சிகள் சார்பில் கெறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இதையடுத்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ் தேச பொதுவுடையை கேட்சித் தலைவர் மணியரசன் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் உட்பட நூற்றுக்கணக்கோனார் திருச்சி விமான நிலையத்தில் கூடியிருந்தனர்.

பிரதமர் வருகையின் போது கறுப்புக் கொடி காட்ட முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

yko

vko2

அமலா பாலிற்கு அலைமோதும் வாய்ப்புகள்..!

amalaநடிகை அமலா பாலின் கால் சீட் டைரி தற்போது பக்கம் இல்லாமல் நிரம்பி வழிகிறது.

இவர் இளையதளபதி விஜயுடன் முதல் தடவையாக ஜோடி சேர்ந்துள்ள தலைவா திரைப்படம் இம்மாதம் 9ம் திகதி ரம்ஜான் விருந்தாக வெளிவரவுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கும் படத்தில் தனுசுடன் ஜோடி சேரவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 23ம் திகதி தொடங்கவிருக்கிறது.

பின்பு மலையாளத்தில் சத்யன் அணித்காத் இயக்கத்தில் பஹத் பாசிலுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே ராம்சரணின் புதிய படம் ஒன்றிலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளாராம்.

மேலும், அமலா பாலுக்கு தமிழில் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளதாம்.

முஸ்லிம் நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களை மூட உத்தரவு..!

americaமுஸ்லிம் நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களின் மீது அல்குவைதா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளதால், இம்மாதம், 4ம் திகதி, இந்த தூதரகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் நாடுகளில் உள்ள தூதரகங்களில், அல்குவைதா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, அமெரிக்க புலனாய்வு நிறுவனத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

குறிப்பாக, பாக்தாத், கெய்ரோ, அபுதாபி ஆகிய நகரங்களில் உள்ள தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என, அமெரிக்கா சந்தேகிக்கிறது.

இதையடுத்து இம்மாதம் 4ம் திகதி தூதரகங்களை மூடும் படி, அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

இஸ்ரேல், ஜோர்டான், பக்ரைன், குவைத், லிபியா, ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஏமன், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் உள்ள தூதரகங்களையும், முன்னெச்சரிக்கையாக இந்த ஞாயிற்றுக்கிழமை மூட அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.