தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று மாலை 5 மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.
தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, சுமந்திரன், செல்வராஜா, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் சங்கையா, கிருஷ்ணபிள்ளை, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், துரைரெத்தினம், சர்வேஸ்வரன், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சிறீகாந்தா, ஹென்ரி மகேந்திரன், கருணாகரன், புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன், க.சிவநேசன் (பவன்), ராகவன் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் தேர்தல் நியமனக் குழுவும், நிதிக்குழுவும் பிரச்சாரக்குழுவும் நியமிக்கப்பட்டது. பின்பு முதலமைச்சர் வேட்பாளர் சம்பந்தமாக நீண்டநேரம் ஆராயப்பட்டது.
விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக வரவேண்டும் என்பதை இரா.சம்பந்தன் மிகவும் ஆணித்தரமாக ஆதரித்து நின்றார்.
அதேவேளையில் மற்றைய கட்சிகளைச் சேர்ந்த பிரதநிதிகள் மாவை சேனாதிராஜா முதலமைச்சர் வேட்பாளராக வரவேண்டும் என்பதை ஆதரித்து தங்களுடைய கருத்துக்களைக் மிகவும் ஆணித்தரமாக கூறினார்கள்.
இந்தப் பிரச்சினை இழுபறி நிலையை அடைந்ததால் ஒரு முடிவில்லாமல் கூட்டம் இன்றுவரை பிற்போடப்பட்டுள்ளது.
இதனை “நட்சத்திர விரதம்” என கூறுவார். சரவணப்பொய்கையில் கார்த்திகைப் பெண்கள் முருகனைச் சீரும், சிறப்புடனும் பாலூட்டித் தாலாட்டி வளர்த்தனர். அவர்களைப் போற்றும் வகையில் கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திர நாளன்று விரதத்தைத் தொடங்க வேண்டும்.
தொடர்ந்து ஒவ்வொரு மாதமும், கார்த்திகை நாளன்று விரதமிருத்தல் வேண்டும். இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவேற்ற வேண்டிய விரதம் இது. கார்த்திகை மாதத்தில் வரும் பரணியன்று பகலில் உண்டு, இரவில் உண்ணாமல், விரதத்தைத் தொடங்க வேண்டும்.
மறுநாள் கார்த்திகையன்று நீராடி முருகனை வழிபட்டு அன்று முழுவதும் விரதமிருந்து, தியானம், பாராயணம், கோவில் வழிபாடு என்ற இவைகளைச் செய்ய வேண்டும். பகலிலும், இரவிலும் உறங்கக் கூடாது. மறுநாள் ரோகிணியன்று காலையில் நீராடி, முருகனை வழிபட்டுச் சிறிதளவு உண்ணலாம். விரதமும் நிறைவு பெறும்.
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வென்றது.
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.
நாணயசுழற்சியை வென்ற இந்திய அணி, இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி சார்பில் குமார் சங்கக்கார 71 ஓட்டங்களை பெற்றதோடு இலங்கை அணி, 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது.
இதன்படி இந்திய அணி 202 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கியது.
இறுதிய இந்திய அணி இறுதிவரை போராடி 49.4 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்று தொடரைக் கைப்பற்றியது.
உத்தரபிரதேசத்தில் கற்பழிக்கப்பட்ட சிறுமியின் நாக்கை துண்டித்துள்ளனர். அவர் வரும் 24ம் தேதி வாக்குமூலம் அளிக்கவிருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி 3 பேரால் கற்பழிக்கப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். ஆனால் மற்ற இருவர் இன்னும் சிக்கவில்லை. இந்த வழக்கில் சிறுமியின் தந்தை நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
சிறுமி வரும் 24ம் தேதி வாக்குமூலம் அளிக்கவிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு சிறுமியின் நாக்கை துண்டித்துவிட்டனர். இதையடுத்து சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கற்பழிப்பு வழக்கை வாபஸ் பெறுமாறு தங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக சிறுமியின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒஸ்ரியாவின் போர்ட்ஸ்டாஷ் நகரில் உடலில் வண்ணம் தீட்டும் சர்வதேசப் போட்டி ஜூலை மாதம் முதல் வாரம் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை அடுத்து இங்கே பாருங்கள்..
கொலிவுட்டில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்த 53 -வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது.
படப்பிடிப்பு முடிவடைந்த பின்னரும் தலைப்பை வெளியிடாமல் ரசிகர்களின் பொறுமையை சோதித்துக் கொண்டிருக்கின்றனர் படக்குழுவினர்.
இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது “வலை” என்று பெயரிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இது வெறும் தற்காலிக தலைப்பு மட்டும் தான் என்று படக்குழுவினர் கூறினர்.
இதனைத் தொடர்ந்து கர்வம் என்று தலைப்பு வைத்திருப்பதாக வெளியான தகவலை இது சம்பந்தப்பட்டவர்கள் இதனை ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை.
இந்நிலையில் அஜித் 53 இன் தலைப்பு “பறவை” என்று தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால் பறவை என்ற பெயரில் வேறு ஒரு படம் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுள் ஒன்றான Huawei ஆனது Ascend Mate எனும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்துகின்றது.
6.1 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய IPS LCD தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசிகள் 1.5GHz வேகத்தில் செயலாற்றும் Processor, பிரதான நினைவகமாக 2 GB RAM, நீடித்து உழைக்கக்கூடிய 4,050 mAh மின்கலங்கள் என்பவற்றினைக் உள்ளடக்கியுள்ளன.
மேலும் 8 மெகாபிக்சல்கள் உடைய துல்லியமான பிரதான கமெராவினையும், வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்காக 1 மெகாபிக்சலை உடைய துணைக் கமெரா ஒன்றினையும் கொண்டுள்ளன.
இவற்றின் பெறுமதியானது 449 அமெரிக்க டொலராக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஹிந்தி சிங்கத்துடன் மோதுவது என சூர்யாவும், ஹரியும் முடிவெடுத்திருக்கிறார்கள். ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம் “யமுடு” என்ற பெயரில் தெலுங்கில் வெளியானதால் தெலுங்கில் அதனை ரீமேக் செய்யவில்லை.
கன்னடத்தில் சுதீப் சிங்கத்தை ரிமேக் செய்து அதில் நடித்தார். படம் பம்பர் ஹிட்.
ஹிந்தியில் ரிலையன்ஸ் தயாரிக்க ரோஹித் ஷெட்டி இயக்க அஜய் தேவ்கான் சிங்கம் ரீமேக்கில் நடித்தார். படம் 100 கோடியை தாண்டி வசூலித்தது. தங்க முட்டையிடும் டைனோசர் இந்த சிங்கம் என்பதை அறிந்து கொண்டவர்கள் தமிழில் சிங்கம் 2 வெளிவரும் முன்பே ஹிந்தியில் சிங்கம் 2 வுக்கான கதையை எழுத ஆரம்பித்தனர்.
தமிழ் சிங்கம் 2 நன்றாக இருந்தால் அதனை ஹிந்தியில் மூன்றாவது பாகமாக எடுக்கலாம், ஆனால் ஹிந்தி சிங்கம் 2 தனது சொந்த கதையாக இருக்க வேண்டும் என்பதில் ரோஹித் ஷெட்டி உறுதியாக இருந்தார்.
இதன் காரணமாக சிங்கம் 2 வை ஹிந்தியில் டப் செய்து வெளியிடுவது என ஹரியும், சூர்யாவும் தீர்மானித்துள்ளனர்.
சென்னை எக்ஸ்பிரஸை முடித்து சிங்கம் 2 வேலைகளில் பிஸியாக இருக்கிறார் ரோஹித் ஷெட்டி.
உங்களோடதவிட எங்களுதுதான் உசத்தி என்பதை காண்பிக்கவே இந்த ஹிந்தி டப்பிங் முயற்சியாம். பார்க்கலாம் தமிழ் சிங்கமா இல்லை ஹிந்தி சிங்கமாஎது அதிக இரசிகர்களை கவரப் போகின்றது என்று..
பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக சிம்பு நடிக்கவுள்ள படத்தில் இசையமைப்பாளராக அவர் தம்பி குறளரசன் அறிமுகமாகிறார்.
சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் சிம்புவே தயாரிக்கும் படம் இது.
கேடி பில்லா கில்லாடி ரங்கா வெற்றிக்குப் பிறகு புதிய படத்துக்கு கதையை உருவாக்கி அதில் தனுஷை நடிக்க வைக்க முயற்சி செய்து வந்தார் பாண்டிராஜ்.
ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் தனுஷ் நடிக்கவில்லை. காதலும் நகைச்சுவையும் கொண்ட இந்தக் கதையை்க கேட்ட சிம்பு தானே அதில் நாயகனாக நடிக்க முன்வந்தார். நாயகியாக முன்னணி நடிகை நடிக்கிறார். இதர நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.
இந்த படத்தில் இசையமைப்பாளராக குறளரசன் அறிமுகமாகிறார். குறளரசன் டியூன்கள் பிடித்துப் போய் இப்படத்துக்கு இசையமைக்க வைத்தாராம் பாண்டிராஜ்.
அடுத்த வாரம் இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவிருக்கின்றனர்
இலங்கை அணியின் அனுபவ வீரர் மஹேல ஜெயவர்தன தனது 400வது ஒரு நாள் போட்டியில் இன்று விளையாடுகிறார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக அளவில் விளையாடிய வீரர்கள் மிகவும் குறைவானவர்களே உள்ளனர்.
இந்த வரிசையில் தற்போது இணைகின்றார் மஹேல ஜெயவர்தன. மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்து வரும் முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் இன்று விளையாடுகின்றன .
இந்தப் போட்டி ஜெயவர்த்தனவுக்கு 400வது ஒரு நாள் போட்டியாகும். இதன் மூலம் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், இலங்கையின் சனத் ஜெயசூர்யாவுடன் இணைகிறார் ஜெயவர்த்தன.
அதிக போட்டிகளில் விளையாடிவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் சச்சின்தான். அவர் இதுவரை 463 போட்டிகளில் விளையாடியுள்ளார் . சனத் ஜெயசூர்ய 2வது இடத்தில் 445 போட்டிகளுடன் இருக்கிறார்.
ஆனால் இந்த இரண்டு வீரர்களும் ஓய்வு பெற்று விட்டனர். டெண்டுல்கர் கடந்த ஆண்டும், ஜெயசூர்ய 2011ம் ஆண்டும் ஓய்வை அறிவித்தனர்.
1998ம் ஆண்டு முதல் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறார் ஜெயவர்தன. அவர் 138 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஒரு நாள் போட்டியில் 11,237 ஓட்டங்களையும், டெஸ்ட் போட்டிகளில் 10,806 ரன்களும் மகேள ஜெயவர்தன குவித்துள்ளார்.
தற்போது அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சாதனையை முறியடிக்கும் சந்தர்ப்பம் மஹேல ஜெயவர்தனவிற்கு கிடைத்துள்ளது. சாதனை படைப்பாரா மஹேல, பொறுத்திருந்து பார்ப்போம்.
எகிப்தில் ஒரு அரசியல் அமைதியீனம் தொடருகின்ற போதிலும் அந்த நாட்டுக்கு எஃப்-16 ரக போர் விமானங்களை வழங்குவதற்கான திட்டத்தை அமெரிக்கா தொடரும் என்று மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கடந்த வாரம் இராணுவத்தால் எகிப்திய அதிபர் முஹமட் மோர்சி அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் குறித்து அமெரிக்கா தொடர்ந்தும் ஆராய்ந்து வரும்.
இஸ்லாமியவாதத் தலைவரான மோர்சி நீக்கப்பட்டது ஒரு இராணுவ சதிப் புரட்சி என்ற முடிவுக்கு அமெரிக்கா வருமானால், எகிப்துக்கான அமெரிக்காவின் பாரிய இராணுவ உதவிகள் சட்டத்தின் அடிப்படையில் வெட்டுக்கு உள்ளாகும்.
மோர்சியை மீண்டும் அதிபராக நியமிக்க வேண்டும் என்று அவரது முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி போராடி வருகின்றது.
அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படும் கெய்ரோவில் உள்ள இராணுவ குடியிருப்பு பகுதியில் அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.
திங்களன்று இராணுவத்துடன் நடந்த மோதல்களில் 50க்கும் அதிகமான முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.
முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படும் மாம்பழம் எண்ணற்ற மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன. பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய்ப்புண்களை குணமாக்குவதில் மாம்பூக்கள் மிகச்சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றன. மாமரத்தில் கொத்து கொத்தாய் பூத்திருக்கும் மாம்பூக்களின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்.
தொண்டை வலி குணமடையும்
தொண்டையில் புண் ஏற்பட்டு எதையும் சாப்பிடக்கூட முடியாமல் வலி உயிரை எடுக்கும். அந்த நேரத்தில் மாமரத்தில் பூத்திருக்கும் மாம்பூக்களை பறித்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். அதனை நன்கு நீரில் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டிக்கொண்டு அதில் எலுமிச்சம் பழத்தின் சாறினை பிழிந்து விடவேண்டும். அந்த தண்ணீரை நன்றாக தொண்டைக்குள் இறங்குமாறு கொப்பளிக்க தொண்டை வலி குணமடையும்.
வாய்ப்புண்ணுக்கு மருந்தாகும்
உலர்ந்த மாம்பூக்களை நன்றாக பொடிசெய்து மோரில் கலந்து பருகவேண்டும். தினசரி மூன்று வேளை பருகிவர மூன்று நாட்களில் வாய்ப்புண், வயிற்றுப்புண் காணாமல் போய்விடும். புத்தம் புதிய மாம்பூக்களை தினமும் பறித்து வாயில் போட்டு மென்று வர பல்வலி குணமடையும். பற்கள், ஈறுகள் பலமடையும். மாம்பூ, மாந்தளிர், இரண்டையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து இளம் சூட்டில் வாய் கொப்பளித்து வர பல்வலிக்கு நிவாரணம் கிடைக்கும். மாம்பூவைச் சேகரித்து தணலில் போட்டு அதன் புகையைத் தலையில் படுமாறு செய்தால் தலைபாரம், ஜலதோஷம் நீங்கும்.
நீரிழிவு நோய்க்கு
மாம்பூ குறிப்பாக நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. தொடர்ந்து பல நாட்கள் பயன்படுத்தும்போது இதன் நல்ல பயனைக் கண்டுணரலாம். மாம்பூ, நாவல் பழக்கொட்டை, மாந்தளிர் மூன்றையும் சம அளவாக சேகரித்து வெயிலில் காயவைத்து இடித்து பத்திரப்படுத்தவும். தினம் அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் பருகவும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குணமாகும் என்கின்றனர் மருத்துவர்கள். இடையே ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்து கொள்ளவேண்டும்
சீதபேதிக்கு அருமருந்து
மாம்பூ, மாதுளம் பூ, மாந்தளிர் வகைக்கு 5 கிராம் சேகரித்து நீர் விட்டு மைபோல் அரைத்து அதனை பசும்பாலில் கலந்து காலை, மாலை, 3 நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் சீதபோதி நீங்கிவிடும்.
மாம்பூக்களைச் சேகரித்து உலர்த்தி ஒரு கைப்பிடியளவு எடுத்து இரண்டு பங்கு அளவு நீர் சேர்த்துக் காய்ச்சிக் கஷாயமாக்கி வடிகட்டி அரை டம்ளர் அளவு எருமைத் தயிரில் கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் சீதபேதி நீங்கிவிடும். மாம்பூ, பச்சை கொத்தமல்லி, தோல்நீக்கிய இஞ்சி, கருவேப்பிலை சமஅளவு எடுத்து துவையல் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட குமட்டல் நீங்கும்.
மூலநோய் குணமடையும்
மாம்பூ, சீரகம், இரண்டையும் சம அளவாக எடுத்து தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி சலித்து எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த தூளில் 2 சிட்டிகை எடுத்து சர்க்கரையுடன் சேர்த்துக் காலை, மாலை தினமும் சாப்பிடவும் மூலநோய் கட்டுப்படும். உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு நேரத்திலும் இந்த மருந்தை உட்கொள்ளலாம்
கொசுத்தொல்லை நீங்க
உலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் காண்பிக்க கொசுத்தொல்லை ஒழியும்.
மூளைச்சாவு அடைந்து விட்டதாக கருதப்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகளை வைத்தியர்கள் எடுக்க முயன்றபோது, அந்த பெண் கண் திறந்து, வைத்தியர்களை அதிர்ச்சியடையச் செய்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
இதனால் தவறாக சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்தவர் 41 வயதான கொல்லின் பேர்ன்ஸ். இவர் கடந்த 2009 ஒக்டோபரில் அதிகளவில் மருந்துகளை சாப்பிட்டதால் நினைவிழந்தார்.
பின்னர் நியூயோர்க்கில் உள்ள சென்ட் ஜோசப் மருத்துவமனையில் பேர்ன்ஸ் அனுமதிக்கப்பட்டார்.
இவருக்கு வைத்தியர்கள் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை. அவர் சாப்பிட்ட மருந்தால் அவரது வயிறு, குடல் பகுதிகள் பாதிக்காமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
அவரது வயிற்றில் மருந்து தங்கியுள்ளதா என சோதனையிடவில்லை. மூளை செயல்படுகிறதா என்று ஸ்கேன் பரிசோதனை செய்யவில்லை. ஆனால், நீண்ட நாளாகியும் அவர் நினைவு திரும்பாததால் அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக வைத்தியர்கள் முடிவெடுத்து விட்டனர்.
பேர்ன்ஸ் கிட்டத்தட்ட இறந்து விட்டார் என்று அவரது உறவினர்களிடம் வைத்தியர்கள் கூறவே அவர்களும் பேர்ன்ஸ் உயிரை காப்பாற்ற வைக்கப்பட்டிருந்த உபகரணங்களை அகற்ற சம்மதித்தனர்.
மேலும், அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கவும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து பேர்ன்ஸ் உறுப்புகளை எடுக்க வைத்தியர்கள் முடிவு செய்தனர். உடலை வெட்டி உறுப்புகளை எடுப்பதற்கு முன் சில சோதனைகளை மருத்துவ தாதி செய்தபோது அவரது உடலில் அசைவு தெரிந்தது.
சத்திரசிகிச்சை அறைக்கு அழைத்துச் சென்றபோது அவரது உதடு, நாக்கு அசைந்ததை அந்த மருத்துவ தாதி கவனித்துள்ளார்.
ஆனால், தாதி கூறியதை வைத்தியர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அறுவை சிகிச்சைக்கு முன் பேர்ன்ஸ்க்கு நரம்புகளை அமைதிப்படுத்தும் மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டது.
அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக அவர் திடீரென கண் விழித்தார். அவ்வளவு பேரும் ஆடிப் போய் விட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில், சென்ட் ஜோசப் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது உறுதியானதால் மருத்துவமனைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் மருத்துவமனையின் தரத்தை உறுதி செய்ய ஆலோசகரை நியமிக்கவும், மூளைச்சாவு அடைந்ததை கண்டுபிடிக்க நரம்பியல் நிபுணர் மூலம் தனது ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் அந்த மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டது.
பிரபல நடிகை எமி ஜாக்சனுக்கு படப்பிடிப்பில் இரத்தக் காயம் ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆர்யாவுடன் “மதராச பட்டணம்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் எமிஜாக்சன். அடுத்து விக்ரமுடன் “தாண்டவம்” படத்திலும் நடித்தார்.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் “ஐ” படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களிலும் நடிக்கும் எமி, இப்போது ராம்சரண், ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடிக்கும் “யவடு” படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார். இதன் படிப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் நடந்தது.
எமிஜாக்சன் காரில் பயணம் செய்வது போன்ற காட்சியொன்றை படமாக்கினர். காரை சாரதி வேகமாக ஓட்டினார். அப்போது அந்த கார் எதிர்பாராதவிதமாக எதிரே வந்த இன்னொரு காருடன் பயங்கரமாக மோதியது.
இதில் காருக்குள் இருந்த எமிஜாக்சனுக்கு பலத்த அடிபட்டது. உடலில் இரத்தக்காயங்கள் ஏற்பட்டன. படப்பிடிப்பு குழுவினர் விரைந்து சென்று எமி ஜாக்சனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து காரணமாக படப்பிடிப்பு இரத்து செய்யப்பட்டது.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் 2002 உயர்தர பழைய மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட “விடியல் கல்வி அறக்கட்டளை” அமைப்பினால் தனது கன்னிச் சேவையினை இன்று ஆரம்பித்துள்ளது.
இதன்முதலாவது சேவையாக, வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழிகாட்டி புத்தகங்களை வழங்கியிருந்தது.
இன் நிகழ்வினை பாடசாலை பிரதி அதிபர் திருமதி. த. யூகராஜா ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து உரையாற்றிய பாடசாலை அதிபர் திரு. சு. வஸ்தியாம் பிள்ளை இவ் அமைப்பின் செயற்பாடுகள் தொடர வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பிரதி அதிபர், அதிபர், விடியல் அமைப்பின் தலைவர் கி. பிரணவன், உப தலைவர் சி.சிவதர்சன், பொருளாளர் அ.அனுசியன், செயற்குழு உறுப்பினரும் அப்பாடசாலை ஆசிரியருமான சே.நிமலன் ஆகியோர் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி வைத்தனர்.
தேசியவிருது பெற்ற இயக்குனர் பாலா இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 1966ம் ஆண்டு மதுரையில் பிறந்த பாலா அங்குள்ள அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்தார். அதன்பிறகு இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களிடம் திரைக்கலை பயின்றார்.
“சேது” திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய பாலா இதுவரை ஆறு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.
ரசிகர்களுக்கு தெரியாத ஒரு நடிகனை தனது “சேது” படம் மூலம் வெளிக்காட்டிய பெருமை பாலாவையே சேரும். அவர்தான் ’”சீயான்” விக்ரம். இதையடுத்து சூர்யா என்கின்ற நடிகனை நாம் அவ்வளவாக திரையில் கவனித்ததில்லை, அவரையும் வேறொரு கோணத்தில் “நந்தா” படம் மூலம் திரையில் காண்பித்து ரசிகர்களைக் கவனிக்க வைத்தவர்.
அந்த வகையில் இவர் இயக்கத்தில் நடித்த நடிகர்கள் இன்று உச்சத்தில் இருக்கிறார்கள். குறிப்பாக அவரது படங்கள் யதார்த்தம், இருள் என மனதில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்தியது என விமர்சன ரீதியாகப் பாரட்டப்பட்டது.
வவுனியா நெற் ரசிகர்கள் சார்பாக பாலாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..