அமெரிக்காவில் உடல் நலத்துக்காக குழந்தையின் நச்சுக்கொடியை சாப்பிட்ட டி.வி. நடிகை!!

baby

அமெரிக்காவில் உள்ள ஒக்லகோமா நகரை சேர்ந்தவர் கிம் கார்டாஷியன் (32). டி.வி. நடிகை. இவர் டி.வி.யில் ரியாலிட்டி ஷோ நடத்தி வருகிறார். ஒரு முறை நடந்த டி.வி. நிகழ்ச்சியில் இவர் தனது சமையல்காரர் ஷரோன் என்பவரிடம் குழந்தை பிறந்தவுடன் அதனுடன் சேர்ந்து வெளியாகும் நச்சு கொடியை எப்போதாவது சமைத்தது உண்டா? ஏனெனில் அதை சாப்பிடலாம் என்றார்.

அதற்கு பதில் அளித்த அவர், அதுபோன்ற ஸ்பெஷல் உணவை நான் இதுவரை சமைத்தது இல்லை. ஆனால் எனது மனைவி சமைத்து இருக்கிறார் என்றார். இதற்கிடையே காதலன் பாடகர் கான்யே வெஸ்ட் என்பவருடன் குடும்பம் நடத்தி வரும் கிம் கார்டஷியானுக்கு கடந்த ஜூன் 15ம் திகதி பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கிம் கார்டிஷியான் குறித்து ஒன்லைனில் திடுக்கிடும் செய்தி வெளியானது.

அதில் அவர் உடல் நலத்துக்காக தனக்கு குழந்தை பிறந்தவுடன் அதனுடன் வெளியான நச்சு கொடியை சமைத்து சாப்பிட்டதாக குறிப்பிட்டிருந்தது. இதற்கிடையே டி.வி. ரியாலிட்டி ஷோவில் தனது சமையல்காரரிடம் குழந்தை நச்சு கொடி சமையல் குறித்து அவர் கேட்ட விளக்கம் இச்செய்தி உண்மைதானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மரணமான பெண் இரு வாரங்களில் உயிருடன் வந்த அதிசயம்!!

sharolyn

அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரைச் சேர்ந்த ஷரோலின் ஜக்சன் என்ற 50 வயது பெண் கடந்த மாதம் திடீரென காணாமல் போனார்.

அவர் காணாமல் போனது குறித்து ஷரோலினின் தாயார் கேர்ரி மின்னி பொலிஸில் புகார் அளித்தார்.

புகார் அளிக்கப்பட்டு சில நாட்கள் கழிந்த நிலையில் பிலடெல்பியா பகுதியின் சாலையோரம் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் வந்தது. அந்த பெண்ணின் உடலை அருகிலுள்ள வைத்தியசாலையின் பிணவறையில் வைத்திருந்த பொலிஸார் இதுபற்றி ஊடகங்களில் விளம்பரம் வெளியிட்டனர்.

விளம்பரத்தைப் பார்த்த கேர்ரி மின்னி அந்த பிணம் தனது மகள் ஷரோலின் ஜாக்சன்தான் என்று கூறி பிணத்தை பெற்றுக் கொண்டார்.
உரிய மரியாதைகளுடன் பிணமும் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஒருவாரத்திற்கு முன்னர் ஷரோலின் ஜாக்சன் திடீரென வீட்டு வாசலில் வந்து நின்றார். மகளின் கால்கள் தரையில் பதிந்திருக்கிறதா என்று உற்றுப் பார்த்த கேர்ரி மின்னி தனது கையையும் கிள்ளிப் பார்த்துக் கொண்டார்.

வந்திருப்பது ஷரோலின் ஜாக்சன்தான் என்பதை உறுதி செய்து கொண்ட அவர், நாம் அழுது புலம்பி அடக்கம் செய்தது யாருடைய பிணத்தை என்று சிந்திக்கத் தொடங்கினார். இவ்விவகாரம் மீண்டும் பொலிஸாரின் காதுகளுக்கு எட்டியது.

உயிருடன் வந்த பெண்ணின் கை ரேகையை ஷரோலினின் பழைய கை ரேகை பதிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்த பொலிஸார், இது ஷரோலின்தான் என்பதை உறுதி செய்தனர். புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுத்து அது யாருடைய பிரேதம் என்பதை கண்டறியும் முயற்சியில் தற்போது பிலடெல்பியா பொலிஸார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் கைதாகி பிணையில் விடுதலை!!

TNA-logo

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வேட்பாளர் இ.இந்திரராஜாவின் ஆதரவாளர்கள் மூவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இலக்கம் 1ல் போட்டியிடும் ஓய்வு பெற்ற பிரதி கல்விப் பணிப்பாளர் இ.இந்திரராஜா அவர்களின் ஆதரவாளர்கள் மூவர் வவுனியா ஈச்சங்குளப் பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த போது ஈச்சங்குள பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்த மூவரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் அவர்களை பிணையில் செல்ல அனுமதித்ததுடன் அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியை தொடர்ந்தும் தடுத்துவைத்துள்ளனர்.

பரிசை பெற யாரும் வராததால் 6 கோடி அதிஷ்ட சீட்டு காலாவதி!!

mega

அமெரிக்க அதிஷ்ட சீட்டில் விழுந்த 6 கோடி பரிசை பெற ஓராண்டாக யாரும் வராததால் அது காலாவதியானது என அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயோர்க் நகர் ப்ளேலேண்ட் மார்க்கெட் பகுதியில் உள்ள அதிஷ்ட சீட்டு விற்பனை செய்யும் கடையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் திகதி விற்கப்பட்ட அதிஷ்ட சீட்டுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு விழுந்தது.

அதிஷ்ட சீட்டு முடிவுகள் வெளியாகி பல மாதங்கள் ஆகிய பின்பும் பரிசை பெற யாரும் முன்வரவில்லை. இதனால் பரிசு விழுந்த அதிஷ்ட எண் 1672049 குறித்த விவரம் மீடியாக்கள் மற்றும் சமூக மீடியாக்களில் வெளியிடப்பட்டன. அப்படியிருந்தும் இது வரை யாரும் பரிசு விழுந்த அதிஷ்ட சீட்டை கொண்டு வரவில்லை. அமெரிக்க சட்டப்படி அதிஷ்ட சீட்டில் பரிசு விழுந்தால் ஓராண்டுக்குள் உரிமை கோர வேண்டும். இல்லையென்றால் அந்த அதிஷ்ட சீட்டு காலாவதியாகிவிடும்.

அதன்படி நேற்றுடன் 6 கோடி பரிசு விழுந்த அதிஷ்ட சீட்டு காலாவதியாகிவிட்டது. அதிஷ்ட சீட்டு வாங்குபவர்கள் மறந்து விடுவதால் அல்லது தொலைத்து விடுவதால் பரிசுத் தொகைக்கு யாரும் உரிமை கோராத சம்பவம் அமெரிக்காவில் பலமுறை நடந்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டு புரூக்ளின் பகுதியில் விற்பனையான சீட்டுக்கு 68 மில்லியன் டாலர் அதாவது 430 கோடி பரிசு விழுந்தது. இந்த ஜக்பாட் தொகையை வாங்கவும் யாரும் முன்வரவில்லை. நியூயோர்க் வரலாற்றில் யாரும் உரிமை கோராத மிக அதிக அளவிலான பரிசுத் தொகை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!!

hang

மெதிரிகிரிய – மெதகம பிரதேசத்தில் சிறுமி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 14 வயதான சிறுமி ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி தூக்கிட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சிறுமியின் தாயார் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸர் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சிறுமியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு நேராக வரும் சூரியன் : கடும் உஷ்ணம் நிலவலாம்!!

sun

இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதால் அதிக உஷ்ணத்தை எதிர்பார்க்கலாமென வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வட அரைக்கோளத்திலிருந்து தென் அரைக்கோளத்திற்கு நாளை 27ம் திகதி முதல் செப்டெம்பர் 8ம் திகதிவரை சூரியன் பயணிக்கவுள்ள இக்காலப்பகுதியில் இலங்கையில் குறிப்பிட்ட சிலபகுதிகளில் அதிக உஷ்ணமாக இருக்குமென வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

27 தொடக்கம் 31 வரை வடகிழக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, முகமாலை, குமுழமுனை, கொக்காவில், முல்லைத்தீவு, மன்னார், புளியங்குளம், புல்மோட்டை, மறிச்சுக்கட்டி, தந்திரிமலை, ஹொரவப் பொத்தனை, திருகோணமலை பகுதிகளில் அதிக உஷ்ணமாயிருக்கும்.

அதேபோல் செப்டெம்பர் ஒன்று தொடக்கம் எட்டு வரை தென், மேல், கிழக்கு மாகாணங்களில் கலாஓயா, தலாவ, அளுத்ஓயா, காரைதீவு, கதிரவெளி, மங்களவெளி, தம்புள்ளை, திம்முலாகல, மாதம்பை, குருநாகல், மாத்தளை, சீதுவ, உலப்பனை, வலப்பனை, திருக்கோவில், தங்காலை, காலி, யால, கதிர்காமம் ஆகிய பகுதிகளிலும் அதிக உஷ்ணமாக காணப்படும் என வளிமண்டலத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இராணுவ சேவையில் 45 தமிழ் யுவதிகள் இணைந்து கொள்ளவுள்ளனர்!!

army

45 தமிழ் யுவதிகள் இராணுவ சேவையில் இணைந்து கொள்ளவுள்ளதாக் குறிப்பிடப்படுகிறது. வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய ஐந்து வடக்கு மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் தமிழ் யுவதிகள் இராணுவ சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

குறித்த தமிழ் யுவதிகளை இராணுவத்தில் இணைக்கும் விசேட நிகழ்வு வன்னி பாதுகாப்பு தலைமையகத்தில் இன்று நடைபெறவுள்ளது.

இலங்கை இராணுவம் தனிச் சிங்கள இராணுவம் அல்ல என்பதனை உலகிற்கு உணர்த்தும் நோக்கில் தமிழ் யுவதிகளுக்கு சந்தர்ப்பம் அளித்த்தாக வன்னிக் கட்டளைத் தளபதி பொனிபஸ் பேரேரா தெரிவித்துள்ளார்.

தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டமை வடக்கையும் தெற்கையும் இணைக்கும் பாலமாக கருதப்பட வேண்டும்.
யுவதிகளை இராணுவத்தில் இணைப்பதற்கு அனுமதியளித்த பெற்றோருக்கு விசேட சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

யாழ் சிறைச்சாலையில் அதி நவீன தொலைபேசிகள் மீட்பு!!

SMARTPHONES Smartphones

யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களிடம் அதி நவீன தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
12 அதி நவீன தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச ரீதியில் புலி முகவர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் தகவல்களை வழங்க புலிச் சந்தேக நபர்கள் இந்த செய்மதி தொலைபேசிகளைப் பயன்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தத் தொலைபேசிகளைப பயன்படுத்தி நவனீதம்பிள்ளையுடன் தொடர்புகொள்ள கைதிகள் திட்டமிட்டிருந்தனர்.
வெலிக்கடை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களை நவனீதம்பிள்ளை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விபச்சாரத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் கைது..!!

pro

கொழும்பு புறநகர் பகுதியான சீதுவையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் 20 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சீதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள இரவு நேர விடுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 37 வயதுக்கிடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இரவு நேர விடுதியின் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதமன்ற உத்தரவின் படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் திடமான வெற்றியை நாம் பெறுவது அவசியம் : இரா.சம்பந்தன்!!

sampanthan

வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒரு திடமான பாரிய வெற்றியைப் பெற வேண்டியது மிகவும் கட்டாயமானதொரு தேவை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

அவ்வாறு வெற்றிபெற்றால்தான் தமிழ் மக்கள் ஒரு கணிசமான சுயாட்சியைப் பெற்று தாம் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் சுதந்திரமாகவும் கௌரவத்துடனும் தங்களுடைய நியாயபூர்வமான அபிலாஷைகளை நிறைவேற்றி வாழ விரும்புகிறார்கள் என்ற செய்தியை நாட்டிலுள்ள ஆட்சியாளர்களுக்கும், ஏனைய மக்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் நாங்கள் தெளிவாக கொண்டு செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இணையத்தள பயன்பாட்டில் 3ம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா!!

internet

இணையதள பயன்பாட்டில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளிவிட்டு உலகத்தில் அதிகமாக இணையதளம் பயன்படுத்துவோர் பட்டியலில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 31 சதவீதம் உயர்ந்து தற்போது 73.9 மில்லியன் பயன்பாட்டாளர்கள் என்ற அளவை எட்டியுள்ளது.

இணையதள பயன்பாட்டில் சீனா 348.2 மில்லியன் என்ற எண்ணிக்கையோடு முதல் இடத்திலும், அமெரிக்கா 191.4 மில்லியன் என்ற எண்ணிக்கையை பெற்று இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இணையதள பயன்பாட்டில் அதிக வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில், பிரேசில் 37சதவீதமாக முதல் இடத்திலும், இந்தியா 31 சதவீதம் என்ற நிலையில் 2வது இடத்திலும் உள்ளது.

விண்வெளியிலிருந்து முதல் முறையாக நிலவுக்கு செயற்கைக்கோள்..!

GPS_Satellite_NASA_art-iif

பூமியின் துணைக்கோளான நிலாவின் வளிமண்டலம் பற்றி இன்னும் விடைதெரியாத கேள்விகளுக்கு பதில் அறியும் பொருட்டு அடுத்த மாதம் செயற்கைகோள் ஒன்றை ஏவ நாசா முடிவெடுத்துள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

நிலாவினுடைய மெல்லிய வளிமண்டலத்தின் அமைப்பு மற்றும் வடிவம் பற்றி சிறந்த புகைப்படங்களை எடுக்க கார் அளவிலான ஒரு ஆய்வுக்கருவியை (ரோபோ) உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வரும் செப்டம்பர் 6ம் திகதி அமெரிக்க விமானப்படை ரொக்கெட் மூலம் அனுப்பப்பட உள்ள இந்த செயற்கைகோளானது பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு அப்பால் உள்ள நாசாவின் விர்ஜினியா விண்வெளி கடற்கரை ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டு நிலாவை சென்றடையும்.

விண்ணிலிருந்து ஒரு விண்கலம் அனுப்பப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த விண்கலத்தில் அனுப்பிவைக்கப்படும் ஆய்வுக்கருவியானது நிலாவை சுற்றி வளிமண்டலம் மற்றும் தூசு மண்டலம் பற்றிய விவரமான செய்திகளை அனுப்பும்.

எமக்கு அருகிலுள்ள இந்த துணைக்கோளை பற்றி அறிந்துகொள்வது சூரிய மண்டலத்திலுள்ள மற்ற கோள்கள், விண்பாறைகள் பற்றி அறிய உதவும். இந்த விண்கலம் ஏவப்பட்டு ஒரு மாதத்திற்கு பிறகு அதிலுள்ள
ஆய்வுக்கருவியானது 40 நாட்களுக்கு செயல்படும். 30 நாட்களுக்கு நிலாவின் மேற்பரப்பு பற்றி அது ஆராயும்.

அதி நவீன லேசர் கருவிகளுடன் செயல்படும் இந்த ஆய்வுக்கருவியானது பூமியில் உள்ள ஆராய்ச்சிக்கூடத்திற்கு அறிய புகைப்படங்களை அனுப்பி வைக்கும் என்று கூறப்படுகிறது.

A/L 2013 மாணவர்களின் அடுத்த கட்டம்?? வவுனியாவில் வழி காட்டல் கருத்தரங்கு!!

AL

வவுனியா மாவட்ட மாணவர்களின் கல்வியில் , அவர்களின் கல்வி முன்னேற்றத்தில் பங்கெடுக்கும் நோக்குடன், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய கொழும்பு பழைய மாணவர் சங்கம், க.பொ.த உயர தர பரீட்சையில் இந்த வருடம்(2013) தோற்றிய மாணவர்களிற்கு ஏற்ப்பாடு செய்துள்ளது. இந்த கருத்தரங்கில் இலங்கயின் முன்னணி கல்வி நிறுவனங்கள் பங்கு பற்றுகின்றன.

உயர்தரம் முடித்த மாணவர்கள் அடுத்த கட்டம் நோக்கி பயணிப்பது தொடர்பில் சிக்கல்களை எதிர் கொள்கின்றனர். இலங்கையில் உயர் கல்வி நோக்கிச் செல்ல பல வழிகள் இருந்தும் மாணவர்களிற்கு அது சரியாக சென்றடைவதில்லை. கொழும்பில் உள்ள மாணவர்கள் ஓரளவு இந்த அறிவை கொண்டு இருக்கின்றார்கள்.

வவுனியா போன்ற இடங்களில் உள்ள மாணவர்களிற்கு ஆசை இருக்கின்ற போதும் இது கஷ்டம், மிகப் பெரிய செலவு என பல விடயங்களை கற்பனை செய்து இவ்வாறன கல்வி நடவடிக்ககைகளில் ஈடுபடுவதில்லை. பல்கலைக்கழக கல்வி ஒப்பீட்டளவில் ஒரு சிறிய தொகையினருக்கே கிடைக்கின்றது.

மற்றவர்கள் அதை எப்படி பெறுவது? இப்படி பல கேள்விகள் பல சிக்கல்கள் அங்குள்ள மாணவர்களிற்கு உள்ளது. இதேவேளை வேலையுடன் கல்வி என்பதை மாணவர்கள் நினைத்து பார்ப்பது குறைவு. வேலை கிடைத்தால் கல்வியை மாணவர்கள் மறந்து விடுகின்றனர். இது அவர்களின் முன்னேற்றத்தை தடுக்கின்றது. இவற்றிக்கு காரணம் அவர்களுக்கு சரியான வழி காட்டுதல்கள் இல்லாமையே.

இதற்க்கு தீர்வாக இலங்கையின் முன்னணி கல்வி நிறுவனங்களாக திகழும் IDM City Campus நிறுவனம், யாழ்ப்பாணத்தில் கற்கை நெறியினை வழங்கும் Wisdom Business academy நிறுவனம், BCAS கல்வி நிறுவனம், KBBS நிறுவனம், ஆகியன இந்த கருத்தரங்கில் பங்கு பற்றுகின்றன.

இவற்றின் மூலமாக தங்களுக்கு தேவையான கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் மாணவர்கள் தெரிவுகளை செய்ய முடியும். இதேவேளை தனி தனியாக மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை தங்களுக்கு தேவையான கல்வி நிறுவனங்களுடன் கதைத்து, கேட்டறிந்து நிவர்த்தி செய்து தேவையான கல்வி நடவடிக்கைகளை தெரிவு செய்ய முடியும்.

உயர்தரம் முடித்த மாணவர்கள் பலகலை கழகத்திற்கு தெரிவாகிவிட்டால் அதற்க்கு எவ்வாறு தங்களை தயார் செய்ய வேண்டும்? அதற்க்கு முன்னர் எவ்வாறான கல்வி நடவடிக்கைகளில் ஈடு பட வேண்டும் என்பது தொடர்பிலும் இந்த கருத்தரங்கு மூலம் தெளிவாக்கல் செய்யப்படவுள்ளது. பல்கலைகழகத்தில் உள்ள வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் முழுமையாக இந்த செயற் திட்டத்தை செய்யவுள்ளனர்.

இந்த கருத்தரங்கை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் கொழும்பு பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. தங்கள் பாடசாலையில் எதிர்வரும் செபடம்பர் மாதம் 08 ஆம் திகதி இந்த கருத்தரங்கை நடாத்துகின்றனர். தனியாக தங்கள் பாடசாலை மாணவர்களிற்கு என மட்டுப்படுத்தாமல் வவுனியா மாவட்ட மாணவர்கள் முழுமையாக பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் அனைத்து மாணவர்களிற்கும் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் பெற்றோரினது பங்கும் நிறையவே இருப்பதனால் இந்த கருத்தரங்கிற்கு பெற்றோர்கள் விரும்பினால் வர முடியும்.

இந்த கருத்தரங்கு முழுமையாக இலவசமாக நடைபெறவிருப்பதனால் மாணவர்களிற்கு பயன் தரக் கூடியதாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இவ்வாறான அரிய வாய்ப்பு இலகுவில் வவுனியா மாவட்ட மாணவர்களிற்கு கிடைக்காது என்பதனால் இந்த கருத்தரங்கில் அனைவரையும் பங்கு பற்றுமாறு கருத்தரங்கு ஏற்ப்பட்டளர்கள் அழைக்கின்றனர்.

இந்த கருத்தரங்கிற்கு வீரகேசரி பத்திரிக்கை, ஜீனியஸ் பத்திரிக்கை என்பன ஊடக அனுசரணை வழங்கும் அதேவேளை ஸ்போர்ட்ஸ்களம் இணையமும் ஊடக அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

3 வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்த பாடசாலை வேன் டிரைவர்!!

child-abuse-2இந்திய உத்தரபிரதேச மாநிலம் பக்ரைச் மாவட்டத்தில் 3 வயது பள்ளிக்குழந்தையை வேன் டிரைவர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் லக்னௌவில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த நகரத்தில் உள்ள தர்ஹா செரீப் பகுதியில் இருந்து ஆரம்ப பள்ளிக்கு செல்லும் மூன்று வயது குழந்தையை தினசரி அனில்குமார் பெரியா என்ற 19 வயது டிரைவர் பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம்.

சம்பவத்தன்று பள்ளியில் இருந்து அழைத்து வந்து வீட்டில் விடாமல் குழந்தை பலாத்காரம் செய்துள்ளான் அந்த டிரைவர். நடந்த சம்பவத்தை அழுது கொண்டே குழந்தை வீட்டில் தெரிவித்ததை அடுத்து டிரைவர் மீது பெற்றோர்கள் பொலீசில் புகார் தெரிவித்தனர்.

பொலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்து வேனை பறிமுதல் செய்தனர். குழந்தைக்கு மருத்துவபரிசோதனை செய்து பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

சிக்ஸ் பேக் உடற்பயிற்சியை தொடர்ச்சியாக செய்தால் பிரச்சினை : விஷால்!!

vishal

விஷால், அஞ்சலி, வரலட்சுமி நடிக்கும் மத கஜ ராஜா படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது. இப்படம் குறித்து விஷால் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத கஜ ராஜா படம் சிறப்பாக வந்துள்ளது. ரஜினியின் ராஜாதி ராஜா, கமலின் சகலகலா வல்லவன் படங்கள் மாதிரி நல்ல படமாக இருக்கும். ஹீரோயிசம் உள்ள படம். நான் சினிமாவுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகிறது. இந்த படம் மேல் நிறைய நம்பிக்கை வைத்துள்ளேன். இது என்னை நல்ல இடத்துக்கு கொண்டு போகும் என்று நம்புகிறேன். எனது சொந்த கம்பெனி இப்படத்தை ரிலீஸ் செய்கிறது. என்று அவர் கூறினார்.

மேலும், சிக்ஸ் பேக்ஆல் கிட்னி பாதிப்பு ஏற்படுமா என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது..

சிக்ஸ் பேக் உடற்பயிற்சியை தொடர்ச்சியாக செய்யக்கூடாது. ஒருமுறை சிக்ஸ் பேக் வருதற்காக உடற்பயிற்சி செய்துவிட்டு மீண்டும் நம் இயல்பான உடல்நிலைக்கு மாறிட வேண்டும். அப்படி மாறாமல் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால் பிரச்சனைதான்.

சிக்ஸ் பேக் உடற்பயிற்சியின்போது உடலில் தண்ணியோட அளவு குறைவாக இருக்கணும். ஒரு படத்துக்கு 5 நாட்கள் ஷூட்டிங் எடுத்தாங்கன்னா அந்த 5 நாட்கள் மட்டும்தான் சிக்ஸ் பேக் உடம்போடு இருக்கனும். ஆனா அதையே தொடர்ச்சியாக பண்ணக்கூடாது. நான் இந்தப்படத்தோட க்ளைமாக்ஸ் முடிஞ்ச உடனே வழக்கமான உடல்நிலைக்கு மாறிவிட்டேன்.

அதையே நாம் கண்டினியூவ் பண்ணினா உடல்ரீதியாக பிரச்சனை ஏற்படும். அதுமட்டுமில்லாம அந்த பாதிப்புகள் முகத்துல கூட தெரியும். சிக்ஸ் பேக் என்பது விலை உயர்ந்த பென்ஸ் கார் மாதிரி. கொஞ்சம் காஸ்ட்லியான விஷயம்தான். அதனால் அதை கொஞ்சம் பார்த்துதான் ட்ரை பண்ணனும் என்று விஷால் கூறினார். இந்த விழாவில் வரலட்சுமி, சுந்தர் சி. மனோபாலா கலந்து கொண்டனர்.

கஞ்சா கருப்புக்கு வந்த வாழ்வ பாருங்களேன்!!

கஞ்சா கருப்பை பல வேடங்களில் பார்த்து இருப்பீர்கள். அனால் இப்படி அட்டகாசமாக பார்த்து இருக்க மாட்டீர்கள்..