முத்தரப்பு கிரிக்கெட் கிண்ணம் யாருக்கு?? பரபரப்புடன் களமிறங்கும் இலங்கை இந்திய அணிகள்!!

cricket

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இலங்கை அணி இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது.
மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இலங்கை, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இந்த தொடரின் லீக் ஆட்டங்களில் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி தொடர்ந்து இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்து வலுவான நிலையில் இருந்தது மேற்கிந்திய தீவுகள் அணி.
எனினும் அடுத்தடுத்த போட்டிகளில் சோபிக்கத் தவறியதால் சொந்த மண்ணிலேயே தோல்வியைத் தழுவி, இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியாது வெளியேறியது.

இதேவேளை முதல் இரண்டு லீக் ஆட்டங்களிலும் தோல்வி கண்டு பின்னர் சுதாகரித்துக் கொண்ட இந்திய அணிக்கு மழையும் கைகொடுக்க அடுத்தடுத்த லீக் ஆட்டங்களில் அபார வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்கு முன்றேயுள்ளது.

இந்திய அணியின் தலைவர் டோனி 2-வது லீக் ஆட்டத்தின் போது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு விலகினார். அதன் பின்னர் டோனி அணியில் இடம் பெறவில்லை. தற்போது டோனியின் காயம் நன்கு குணமடைந்து வருவதாகவும், இறுதிப்போட்டியில் டோனி விளையாட வாய்ப்பு இருக்கிறது என்றும் தற்போது தலைவராக உள்ள விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் டோனி விளையாடினால் விஜய் நீக்கப்படலாம். மற்றபடி இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்று தெரிகிறது.

இலங்கை அணி லீக் ஆட்டத்தில் 2 வெற்றிகள், 2 தோல்விகளைக் கண்டு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதன்படி கிண்ணம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் விறுவிறுப்பான இறுதிப்போட்டி இன்று போர்ட் ஒப் ஸ்பெயினில் இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

உலகை கலக்க வருகிறது அடுத்த தலைமுறை இன்டெல்(intel) !!

intel_Haswell

இன்றைய உலகில் பல Processor-கள் வந்துவிட்டாலும், இவை அனைத்திற்கும் முன்னணி என்று சொன்னால் அது இன்டெல்(intel) தான்.

இந்நிலையில் இன்டெல் நிறுவனம் தனது புதிய 4ம் தலைமுறை Processor-களை அறிமுகம் செய்தது.

இதற்கு Haswell என்று Code Name கொடுத்துள்ளது.

முந்தைய தலைமுறை Processor-களை விட அதிக வசதிகளுடன் இது வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1. கணனி மற்றும் Tablet என இரண்டாகவும் இயங்கும் வசதி.

2. பழைய மடிக்கணனிகளை விட 50% அதிக Battery Life.

3. ஆரம்பித்த 3 நொடிகளில் கணனி இயங்க ஆரம்பித்துவிடும்.

4. பழைய கணனிகளை விட நான்கு மடங்கு அதிக வேகம்.

20 நிமிட HD Video – களை 1 நிமிடத்தில் Convert செய்யும் வசதி. Voice Recognition, Immersive Touch, Face Login and Wireless Display To TVபோன்ற வசதிகளும் உள்ளன.

சூர்யாவுக்கு திருஷ்டி சுற்றி போட்ட ஜோதிகா!!

surya-jothika

சூர்யா இதுவரை 25 படங்களுக்கு மேலாக நடித்து விட்டார். ஆனால் அவரது தந்தை சிவகுமார் ஒரு படத்தில்கூட அவர் நடித்ததைப் பார்த்துவிட்டு மனதார பாராட்டியதில்லையாம். நன்றாக இருக்கிறது என்று பொதுவாக சொல்வாராம்.

ஆனால் சிஙகம்-2 படத்தைப் பார்த்து நெகிழ்ந்து விட்டாராம் சிவகுமார். முதன்முறையாக மகன் சூர்யாவுக்கு எஸ.எம்.எஸில் பாராட்டு மடல் அனுப்பினாராம். எத்தனை பேர் பாராட்டினாலும் பெற்ற தந்தையின் பாராட்டு உயர்வானது அல்லவா. அதிலிருந்து சூர்யா இன்னும் பரபரவென்று உற்சாகத்தில் இருக்கிறாராம்.

இப்படி அப்பாவின் பாராட்டு ஒருபுறமிருக்க சூர்யாவின் துணைவியார் ஜோதிகாவும் இந்த படத்தைப்பற்றி பலரும் சொல்வதைக்கேட்டு தானும் குழந்தைகளுடன் தியேட்டருக்கு சென்று படத்தைப் பார்த்தாராம்.

அதையடுத்து வீட்டுக்கு வந்தவர் சூர்யாவுக்கு திருஷ்டி சுற்றி போட்டு விட்டாராம். அந்த அளவுக்கு உங்களது நடிப்பு மட்டுமின்றி ​பொலிஸ் சீருடையில் என் கண்ணே பட்டிருக்கும் அத்தனை அழகு என்று சூர்யாவை கொண்டாடினாராம்.

இதனால் எந்த படத்துக்கும் இல்லாத அளவுக்கு இந்த படத்திற்கு கிடைத்த பாராட்டு மழையில் மிக்க சந்தோசத்தில் இருக்கிறார் சூர்யா.

நாசாவை அசத்திய 7 வயது சிறுவனின் கடிதம்!!

letter

இங்கிலாந்தை சேர்ந்த ஒரு சிறுவன், வருங்காலத்தில் தான் விண்வெளி வீரராக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டுமென நாசா மையத்திற்கு கடிதம் எழுதி அசத்தியுள்ளார்.

7 வயது சிறுவன் டெக்ஸ்டர் இவருக்கு வருங்காலத்தில் விண்வெளி வீரர் ஆகவேண்டு மென்பதுதான் இலட்சியம்.
இது தொடர்பாக இந்த சிறுவன் அண்மையில் அமெரிக்காவின நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.

விண்வெளி வீரராகவேண்டுமென்ற ஆர்வத்தை பாராட்டி நாசா மையம் இந்த சிறுவனின் கடிதத்திற்கு ஒரு பதிலையும் விண்வெளி புகைப்படங்களையும் அனுப்பியுள்ளது.

நாசாவிற்கு எழுதிய கடித்தத்தில், அச்சிறுவன்,

அன்புள்ள நாசா,

எனது பெயர் டெக்ஸ்டர். நீங்கள் செவ்வாய் கிரகத்துக்கு இரண்டு பேரை அனுப்பப் போவதாக அறிந்தேன். எனக்கும் செவ்வாய் கிரகத்துக்கு செல்ல ஆசையாக உள்ளது. ஆனால் எனக்கு ஏழு வயது தான் ஆகிறது.

எனவே, நான் வருங்காலத்தில் விண்வெளிக்கு செல்ல ஆசைப்படுகிறேன். நான் ஒரு விண்வெளி வீரர் ஆக என்ன செய்ய வேண்டும்?”

எனக் கேட்டிருந்தார்.

இதற்கு நாசா, சிறுவனை ஊக்கப்படுத்தும் விதத்தில் பதிலளித்திருந்தது. இது டெக்ஸ்டரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுக்குறித்து தெரிவித்த டெக்ஸ்டரின் தாய் கத்ரினா,

டெக்ஸ்டரின் ஆர்வத்திற்கு நாசாஅளித்துள்ள பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த கடிதத்தை பிரித்து படித்ததும் டெக்ஸ்டர் மகிழ்ச்சி அடைந்தான்.

அங்கிருந்து அனுப்பப்பட்ட புகைப்படங்களை தனது அறையில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான் எனக் கூறினார்.

l2

 

இன்றைய இலங்கைக்கு எதிராக போட்டியில் டோனி விளையாடுவாரா ?

dhoni

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் டோனி விளையாடுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இறுதியாக இலங்கையுடன் இடம்பெற்ற போட்டியில், இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதையடுத்து இந்த நம்பிக்கை வலுவடைந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் நாணய சுழற்சியின் போது கோலி கூறுகையில், “டோனியின் உடற்தகுதியில் நல்ல முன்னேற்றம் உள்ளது. இறுதிக்கு தகுதி பெற்றால் டோனி விளையடலாம்” என்றார்.

இதனால் தற்போது டோனி விளையாடுவது பற்றிய பேச்சு எழுந்துள்ளது. ஏற்கனவே அவர் தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக அம்பாட்டி ராயுடுவும் அணியில் சேர்க்கப்பட்ட பிறகு விதிமுறைகளின் படி டோனி விளையாட முடியுமா என்பது தெரியவில்லை.

ஆனால் காயமடைந்தவர் நினைத்தால் இந்தியா திரும்பியிருக்கலாம். அவர் அந்த வாய்ப்பை உதறி அங்கு அணியை உற்சாகப்படுத்தவே தங்கியுள்ளார். டோனி விளையாடாவிட்டாலும் ஓய்வறையில் அவரது இருப்பே இந்திய வீரர்களுக்கு ஒரு பெரும் உத்வேகம் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

மும்பை மீது விரைவில் தாக்குதல் என இந்தியன் முஜாஹிதீன் எச்சரிக்கை..

Warning-Sign-Image

மும்பை நகரம் மீது ஏழு நாட்களில் தாக்குதல் நடத்துவோம் என்று இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பீகார் மாநிலம் புத்தகயாவில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்பதாக இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு அறிவித்திருக்கிறது.

அந்த அமைப்பின் டுவிட்டர் பக்கத்தில் புத்தகயாவில் 9 வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தது நாங்களே என்று பதிவிடப்பட்டிருக்கிறது. இதேபோல், எங்களது அடுத்த இலக்கு மும்பை நகரம்தான், உங்களால் முடிந்தால் தடுக்கலாம். ஏழு நாட்களுக்குப் பின்னர் என்று பதிவிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து டுவிட்டரிடம் இந்திய முஜாஹிதீன் பெயரில் யார் பதிவு செய்திருப்பது? பதிவு செய்யப்பட்ட கணிணியின் ஐபி எண் என்ன? என்பது உள்ளிட்ட விவரங்களைக் கோரியுள்ளது.

உண்மையில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்புதான் அந்த பதிவைப் போட்டதா? அல்லது போலியாக யாரும் பதிவிட்டிருக்கிறார்களா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ஆர்யா என்னை பலமுறை ஏமாற்றியுள்ளார் – மனம் திறந்த டாப்ஸி!!

aarya

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்சி. தொடர்ந்து ஜீவாவுடன் வந்தான் வென்றான் படத்தில் நடித்தார்.

தற்போது தெலுங்கு மொழியில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் டாப்சி, தமிழில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜீத், ஆர்யா நடித்து வரும் படத்திலும், லாரன்சின் கங்கா (முனி-3) படத்திலும் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் அவர் அளித்த பேட்டியொன்றில் ஆர்யாவிடம் தான் பலமுறை ஏமாந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது,

ஆர்யா படப்பிடிப்பின்போது, ஏதாவது கதை சொல்வார். ரொம்ப சீரியசா கேட்பேன். நிஜத்தில் நடந்த சம்பவம் போன்று விவரிப்பார். நானும், அதை நம்பி விடுவேன். சிறிது நேரம் கழித்து, “நான் கூறியதை நம்பி விட்டாயா? அவ்வளவும் பொய் என்பார். இதுபோல், ஏராளமான முறை, ஆர்யாவிடம் ஏமாந்திருக்கிறேன் என்றார்.

ஒபாமாவும், மிச்சலும் அழகில்லை – பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை..

Michelle-Obama

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சல் ஒபாமாவும் அசிங்கமானவர்கள் என ஒரு நடிகை கூறியுள்ளமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆனால் அதனை சொன்னவர் யார் என்று சொன்னால், அட அவர் இந்த மாதி‌ரி சொல்லவில்லை என்றால்தான் ஆச்ச‌ரியம் என்பார்கள்.

சில பிரபலங்களுக்கு ஒரு வியாதி அடுத்தவர்களை மட்டம் தட்டி அந்த விளம்பரத்தில் பெயரை தக்க வைத்துக் கொள்வது நடிகை அமண்டா பைன்ஸுக்கு முற்றிய நிலையில் உள்ளது இந்த வியாதி.

கடந்த காலங்களில் சக நடிகைள் பலரையும் இதேபோல் வம்பிழுத்திருக்கிறார். ஒருமுறை அவர் வம்பிழுத்தவ‌ரின் காதலர், போய் கண்ணாடியில் உன் முகத்தை பார்த்துக்கொள் என்று பதிலடி கொடுத்ததும் நடந்திருக்கிறது.

இந்தநிலையில் சமூக வலைதளத்தில் அமண்டா அமெ‌ரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் அவரது மனைவியும் அசிங்கமானவர்கள் (Ugly) என்ற அர்த்தத்தில் எழுதியிருந்தார்.அவ‌ரின் இந்த அத்துமீறல் கருத்துக்கு கடும் கண்டனங்கள் குவிகின்றன.

நயன்தாரா ஹிந்தியில் நடிக்க மறுப்பதற்கு காரணம் பிரபுதேவா??

nayanthara-prabhu-devaநயன்தாராவுக்கு இப்போது ரொம்ப நல்ல காலம். அவர் தொட்டதெல்லாம் துலங்குகிறது. அதனால் இதே வேகத்தில் சென்று தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முக்கிய இடத்தை பிடித்துக்கொள்ள வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறார்.

தமிழில் அஜீத், ஆர்யா, உதயநிதி போன்ற நடிகர்களுடன் நடித்திருப்பவர், இப்போது தெலுங்கில் அனாமிகா என்ற படத்தில் நடிக்கிறார். இது வித்யாபாலன் நடித்த கஹானி படத்தின் ரீமேக் என்பதால், இந்த படம் தன்னை பெரிய அளவில் கொண்டு செல்லும் என்பது நயன்தாராவின் நம்பிக்கையாக உள்ளது.

அதனால் கன்னடம், ஹிந்தியிலிருந்து வந்த வாய்ப்புகளைகூட திருப்பி அனுப்பிவிட்டார் நயன். இதுபற்றி நெருக்கமானவர்கள் நயன்தாராவிடம் கேட்டபோது, இந்திய அளவில் பெரிய நடிகையாக வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் உண்டு. ஆனால், எனக்கு துரோகம் செய்த பிரபுதேவா ஹிந்தியில் இருப்பதால் அங்கு செல்வதில் எனக்கு நாட்டமில்லை.

அதனால்தான், தமிழ், தெலுங்கோடு எனது எல்லையை அமைத்துக்கொண்டு பிரதான நடிகை என்ற இடத்தை பிடிக்க முயற்சி எடுத்து வருகிறேன் என்று கூறியுள்ளார் நயன்தாரா. மேலும் கஹானியைத் தொடர்ந்து இன்னும் அதிரடியான மாறுபட்ட கதைகளாக தேர்வு செய்து நடிக்கப் போவதாகவும் அவர் கூறிவருகிறார்.

தற்போது தெலுங்கில் அனுஷ்கா நடித்து வருவது போன்ற சரித்திர கதைகளில் நடிப்பதிலும் நயன்தாராவுக்கு அதிக ஈடுபாடு உள்ளதாம்.

விம்பிள்டன் டிக்கெட் எடுக்க காத்திருந்த 34 வயதுப் பெண் கற்பழிப்பு!!

rape

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் எடுக்க காத்திருந்த பெண்ணைக் கற்பழித்து விட்டார் ஒரு நபர். இது லண்டனில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டிக்கெட் எடுக்க வருவோருக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்திற்குள் வைத்து தான் கற்பழிக்கப்பட்டதாக அந்தப் பெண் கூறியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இங்கிலாந்து போலீஸாருக்குப் போன் செய்து அவர் தன் மீதான தாக்குதல் குறித்துப் புகார் கொடுத்தார்.

விம்பிள்டன் போட்டியைக் காண வருவோருக்காக இங்கிலாந்து டென்னிஸ் கிளப் சார்பில் கூடாரங்கள் அமைக்கப்படும். டிக்கெட் எடுக்க வருவோர், தங்களை ஓய்வில் ஆழ்த்திக் கொள்வதற்காக இந்த கூடாரங்கள் அமைக்கப்படுகிறது. அதில்தான் இந்த அக்கிரமம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 30 வயது நபர் ஒருவரைப் போலீஸார் கைது செய்து தற்போது ஜாமினில் விடுவித்துள்ளனர். சம்பநத்ப்பட்ட பெண் விம்பிள்டன் மைதானத்திற்கு அருகே அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் தங்கியிருந்தார். அவருடன் குற்றம் சாட்டப்பட்ட நபரும் தங்கியுள்ளார். அப்போதுதான் கற்பழிப்பி்ல் அவர் ஈடுபட்டதாக தெரிகிறது. இருவரும் அதற்கு முன்பு அறிமுகமானவர்கள் இல்லையாம். இருவரும் மது அருந்தியிருந்ததாகவும் போலீஸார் கூறுகின்றனர். விசாரணை நீடிக்கிறது.

கொழும்பு – வவுனியா ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு..!

rainகொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த யாழ்தேவி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதவாச்சி பொலிஸ் பிரிவின் பூனேவ பலுகொல்லேவ பகுதியில் நேற்றையதினம் (10) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 56 வயதான பலுகொல்லேவ பகுதியைச் சேர்ந்த நபரொருவரே பலியாகியுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இனி குற்றவாளிகள் யாரும் மக்கள் பிரதிநிதிகளாக இருக்க முடியாது!!

court

இந்தியாவில் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள யாரும் இனி சட்டமன்றத்திலோ நாடாளுமன்றாத்திலோ பதவி வகிக்க முடியாது என்று இன உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலுள்ள பிரிவு 8(4) கீழ் கொடுக்கப்பட்டுள்ள விதிவிலக்கு செல்லுபடியாகாது என்று நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக் மற்றும் எஸ்.ஜே.முகோபாத்யாய அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றத்தால் வழக்கு ஒன்றில் ஒருவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அவர் உடனடியாக பதவியிழப்பார் என்று நீதிபதிகள் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாகக் கூறினாலும் அந்த நபர் இந்தத் தீர்ப்பின்படி பதவியிழப்பார்.

எனினும் இந்தத் தீர்ப்பு தங்களது இன்றையத் தீர்ப்பு வருவதற்கு முன்னர் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள வழக்குகளுக்கு பொருந்தாது எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

வரவேற்கத்தக்கத் தீர்ப்பு

இந்தத் தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது என்றும், இதன் மூலம் இனி வரும் தேர்தல்களில் குற்றப் பின்னணி உள்ளவர்கள் அல்லது நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களுக்கு போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் வழங்க கட்சிகள் தயங்கும் என்றும் இந்தியாவின் ஓய்வுபெற்ற தலைமைத் தேர்தல் ஆணையாளர் என் கோபாலஸ்வாமி தெரிவித்தார்.

அடுத்த சில மாதங்களில் தற்போது பதவியிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பை வழங்கினால் அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இந்திய அரசியல் சாசனத்திலுள்ள ஒரு பிரிவுக்கான விளக்கம் என்பதால் இதை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் ஒரு சிறப்புச் சட்டத்தை கொண்டுவரவும் முடியாது என்றும் கோபாலஸ்வாமி தெரிவித்தார்.

-BBC தமிழ்-

இன்று நாடெங்கும் தனியார் பஸ்கள் பணிப்பகிஷ்கரிப்பு?

busஇலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப் பகிஷ்கரிப்பு தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

1500க்கும் மேற்பட்ட பஸ் குழுக்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஈடுபட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

வருடாந்த பஸ் கட்டணத் திருத்தத்திற்கு அமைய பஸ் கட்டணத் திருத்தங்கள் இடம்பெறாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

எது எவ்வாறு இருப்பினும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை சில தனியார் பஸ் சங்கங்கள் தெரிவித்திருந்தமை குறிப்பித்தக்கது.

எது எவ்வாறு இருப்பினும் இந்த பணிப் பகிஷ்கரிப்பு நியாயமற்றது என தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

கடலுக்குச் செல்வது ஆபத்து..!

seaகாலி ஊடாக ஹம்பாந்தோட்டை தொடக்கம் புத்தளம் வரையான கடற்பகுதியில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானதென காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

குறித்த கடற்பகுதியில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 – 80 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என அந்த நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

டெல்லி மசூதி அருகில் பிளேடினால் கை, கால்களை கீறி மருத்துவம் பார்க்கும் 79 வயது வினோத மருத்துவர்..(படங்கள் இணைப்பு)

d8

 

டெல்லியில் உள்ள 79 வயது நபர் ஒருவர் பிளேடினால் நோயாளிகளின் உடலை கீறி ரத்தத்தை வரவழைத்து நீண்ட நாள் நோய்களை குணப்படுத்துவதாக வந்த தகவலை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியின் மிகப்பெரிய மசூதி அருகில் Hakim Ghyas என்ற 79 வயது நபர் ஒருவர் ஒரு திறந்தவெளி கிளினிக் ஒன்றை வைத்துள்ளார். அவரிடம் வரும் நோயாளிகளின் கை மற்றும் கால்களின் பல இடங்களில் பிளேடினால் பல இடங்களில் கீறி ரத்தத்தை வரவழைக்கிறார். அவர் தானே நேரடியாக இந்த சிகிச்சையை செய்யாமல், தன்னிடம் பயிற்சி பெற்றவர்கள் மூலம் சிகிச்சை செய்து வருகிறார்.

பின்னர் அரைமணி நேரம் வெயிலில் நோயாளிகளை நிற்க வைத்து ரத்தம் தானாகவே கசிவது நின்றவுடன் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார். இந்த முறையான வைத்தியத்தால் அவர் மூட்டுவீக்கம், ரத்தபுற்றுநோய் போன்ற நோய்களை குணமாக்கியுள்ளதாக பலர் நம்புகின்றனர்.

இந்த மருத்துவமுறை காட்டுமிராண்டித்தனமானது என்றும் இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் டெல்லி மருத்துவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

d1 d2 d3 d4 d5  d7 d8d6

 

அணில் கும்ளேவின் வனத்துறை அலுவலக விவகாரம் அம்பலம்!

anil kumble

இந்திய கிரிகெட் அணியின் புகழ்பெற்ற சுழல் பந்துவீச்சாளரும் முன்னாள் தலைவருமான அணில் கும்ளேவின் கர்நாடக வனத்துறை அலுவலகமானது அம்பலத்திற்கு வந்துள்ளது.

அணில் கும்பளே ஒரு காலத்தில் இந்தியாவின் முக்கிய வீரராக திகழ்ந்தவர். தற்போது கர்நாடக வனத்துறையின் வன விலங்குகள் வாரியத்தின் துணைத் தலைவராக இருக்கின்றார்.

இவருக்கான அலுவலக அறையை கர்நாடக அரசானது மக்களின் பணத்திலிருந்து வாரியிறைத்து கட்டியுள்ளது.

பெங்களூர் வி.வி.டவர்ஸில் இந்த ஆடம்பர அலுவலக அறையானது கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த அறையில் கதிரை, நாற்காலி, உள்ளிட்ட தளபாடங்களுக்காக 3 லட்ச இந்திய ரூபாவை செலவழித்துள்ளனர்.

மொத்தத்தில் இந்த அலுவலக அறைக்கு 20 இலட்சத்தை கர்நாடக அரசானது செலவிட்டுள்ளது. ஏற்கனவே கர்நாடக அரசானது தன்னிடம் பணம் இல்லை என்று பல்வேறு துறைகளிடம் பணம் பெற்று வருகின்றது.

மேலும் மும்பை விலங்குகள் நல வாரியத்திடமிருந்து ஜீப்புகளை நன்கொடையாக வாங்கியுள்ளனர்.

இவ்வாறு இருக்கும் போது கும்ளே என்றாவது ஒரு முறை வந்து போகும் அலுவலகத்திற்கு கர்நாடக அரசானது இவ்வளவு பணம் செலவழித்திருப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று ஆர்டிஐ சேவகர் கூறியுள்ளார்.