தலையை இழந்த பின்பும் ஒன்றரை வருடம் வாழ்ந்த அபூர்வ சேவல்! – வீடியோ இணைப்பு

 

1தலை­வெட்­டப்­பட்ட கோழிகள், சேவல்­க­ளுக்கு சிறிது நேரம் உடலில் உயிர் இருக்கும். அவை துடி­து­டித்­த­வாறு சிறி­து­தூரம் ஓடிச்­செல்­லவும் கூடும் என்­பதை பலர் அறிந்­தி­ருப்­பீர்கள்.

ஆனால் தலையை இழந்த சேவ­லொன்று ஒன்­றரை வரு­ட­காலம் உயிர்­வாழ்ந்­தது என்றால் நம்ப முடி­யுமா? நம்ப முடி­கி­றதோ இல்­லையோ அப்­படி ஒரு சேவல் உலகில் வாழ்ந்­தமை உண்மை வர­லா­றாக உள்­ளது.

அமெ­ரிக்­காவின் கொல­ராடோ மாநி­லத்­தி­லுள்ள புரூ­டிட்டா நகரில் 1945 முதல் 1947 ஆம் ஆண்­டு­வரை வாழ்ந்தது அச்­சேவல். அதற்கு “மைக்” எனப் பெய­ரி­டப்­பட்­டி­ருந்­தது. பின்னர் “அதி­சய சேவல் மைக்” என அழைக்­கப்­பட்­டது.

1945 செப்­டெம்பர் 10 ஆம் திகதி, புருட்­டிடா நகர விவ­சா­யி­யான லொய்ட் ஒல்சென் என்­ப­வரின் வீட்­டுக்கு அவரின் மாமியார் சென்­றி­ருந்தார். அவ­ருக்கு விருந்­த­ளிப்­ப­தற்­காக கோழி­யி­றைச்சி கொண்டு வரு­மாறு ஒல்­செனை அவரின் மனைவி கோரினார். ஐந்­தரை மாத வய­து­டைய மைக் எனும் சேவலை ஒல்சென் தெரி­வு­செய்தார்.

அச்­சே­வலை அவர் தலையின் ஓர­மாக வெட்­ட­மு­யன்­ற­போது, ஒல்­செனின் கைக்­கோ­டரி நழு­வி­யதால் சேவலின் கழுத்­துக்­கூ­டாக செல்லும் நாடி தப்­பி­யது.

அதன் ஒரு காது மற்றும் மூளையின் ஒரு­ப­குதி ஆகி­யன பாதிக்­கப்­ப­டாமல் இருந்­தன. (குரு­திக்­கு­ழாயில் ஏற்­பட்ட அடைப்­பொன்றின் கார­ண­மாக அதற்கு குரு­திப்­பெ­ருக்கு ஏற்­ப­ட­வில்லை என்­பது பின்னர் கண்­ட­றி­யப்­பட்­டது.

அதனால் அச்­சேவல் தடு­மாறி நடக்கத் தொடங்­கி­யது. அது கூவு­வ­தற்கும் முயன்­றது. ஆனால் அது முடி­ய­வில்லை. எனினும், சேவல் உயி­ரி­ழக்­கா­ததால் வியப்­ப­டைந்த ஒஸ்லென் அதனை கவ­ன­மாக பரா­ம­ரிக்கத் தீர்­மா­னித்தார்.

2

கழுத்­துப்­ப­கு­தி­யி­லுள்ள உண­வுக்­கு­ழாய்க்குள் பால் மற்றும் தண்ணீர் ஆகி­ய­வற்றை “ஐ ட்ரொப் ஸ்ரிஞ்சர்” மூலம் செலுத்­தினார். சிறி­த­ளவு அரைத்த சோளத்­தையும் அவர் கழுத்­தி­லுள்ள உண­வுக்­குழாய் வழி­யாக ஊட்­டினார். இதனால் அச்­சேவல் மேலும் வளரத் தொடங்­கி­யது. ஏனைய கோழிகள், சேவல்­க­ளுடன் வளர்க்­கப்­பட்ட அச்­சேவல் அதி­கா­லையில் கூவவும் செய்­தது. அதன் தொண்­டை­யி­லி­ருந்து சத்தம் எழுந்­தது. ஏனைய சேவல்கள் கூவும் ஒலியைப் போல் அது இருக்­க­வில்லை.

சில மாதங்­களில் இச்­சேவல் குறித்த தக­வல்கள் அமெ­ரிக்­கா­வெங்கும் பரவத் தொடங்­கின. பெரும்­பா­லானோர் அவற்றை கட்­டுக்­க­தைகள் எனக் கூறி நம்ப மறுத்­தனர்.

அதை­ய­டுத்து, உண்­மையை நிரூ­பிப்­ப­தற்­காக அச்­சே­வலின் உரி­மை­யா­ள­ரான ஒஸ்லென் அதை சோல்ட்லேக் நக­ரி­லுள்ள உட்டா பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு கொண்டு சென்றார். இச்­சேவல் குறித்த தக­வல்கள் உண்­மை­யென நிரூ­பிக்­கப்­பட்ட பின்னர் இரண்டு தலை­யு­டைய கன்­றுக்­குட்டி போன்ற விநோத மிரு­கங்கள், பிரா­ணிகள் சகிதம் ஊர் ஊராக கொண்­டு­செல்­லப்­பட்­டது.

0.25 டொலர் கட்­டணம் செலுத்தி இச்­சே­வலை பார்க்க மக்கள் அனு­ம­திக்­கப்­பட்­டனர். அதன் புகழ் உச்­சத்­தி­லி­ருந்த காலத்தில் மாதாந்தம் 4,500 டொலர் வரை அது திரட்­டி­யது. தற்­போ­தைய பெறு­ம­தி­யுடன் ஒப்­பிட்டால் அது 48,000 டொலர்­க­ளுக்கு (சுமார் 60 இலட்சம் இலங்கை ரூபா) சம­னாகும்.

டைம், லைவ் உட்­பட புகழ்பெற்ற சஞ்­சி­கைகள், பத்­தி­ரி­கை­களில் இச்­சே­வலின் புகைப்­ப­டங்கள் வெளி­யா­கின.

மைக்கின் புகழ் வெகு­வாக பர­வி­யி­ருந்ததால், வேறு பலர் சேவல்­களின் தலையை அரை­கு­றை­யாக வெட்டி மைக் போன்ற தலை­யில்லா சேவல்­களை உரு­வாக்க முயன்­றனர். ஆனால் அவை ஓரிரு நாட்­க­ளுக்கு மேல் தாக்­குப்­பி­டிக்­க­வில்லை.

1947 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு சுற்­று­லா­வொன்றின் பின்னர் திரும்­பிக்­கொண்­டி­ருந்­த­போது நள்­ளி­ரவில் அச்­சேவல் சுவா­சிப்­ப­தற்குத் திண­றி­யது. அதே­வேளை, அச்­சே­வ­லுக்கு உணவூட்டும் மற்றும் தூய்­மைக்கும் ஸ்ரிஞ்­சர்­களை கண்­காட்­சிக்­கூ­ட­மொன்­றி­லேயே மற­தி­யாக விட்­டு­விட்டு வந்­தி­ருந்தார் ஒல்சென். அதனால் அச்­சே­வலை காப்­பாற்ற முடி­ய­வில்லை.

எனினும் தான் அச்­சே­வலை விற்­று­விட்­ட­தாக மற்­ற­வர்­க­ளிடம் ஒல்சென் கூறினார். அதனால் அச்சேவல் சுற்றுலாக்களில் பங்குபற்றிக்கொண்டிருப்பதாக 1949 ஆம் ஆண்டுவரை பலர் நம்பினர்.

கொலராடோ மாநிலத்தின் புரூட்டிடா நகரில் 1999 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் மே 3 ஆவது வார இறுதிநாள் “மைக் தலையற்ற சேவல் தினம்” அனுஷ்டிக்கப்படுகிறது. தலையற்ற கோழிகள் போன்று ஓடுதல் உட்பட பல்வேறு விநோத விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

என்னவொரு அதிசயம் – வீடியோ இணைப்பு

இவர் செய்யும் அதிசயத்தை கொஞ்சம் பாருங்கள்..

அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டியிடும் மூவர்!!

Rajinikanth

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி பல ஆண்டுகளாக தமிழில் கேட்கப்படுகிறது. அதற்கு இணையாக, என்றும் எப்போதும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று ஒருசாரர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கான போட்டி ஒருபோதும் முடிவுக்கு வரப்போவதில்லை.

சிம்பு குழந்தை நட்சத்திரமாக இருக்கையில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அடைமொழி தந்து அவரது தந்தை டி.ராஜேந்தர் சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு முதல் போட்டியை தொடங்கினார். அதன் பிறகு பல பேர். கார் ரேஸிலிருந்து திரும்பி சினிமாவில் முழுக்கவனம் செலுத்திய காலகட்டத்தில், சூப்பர் ஸ்டார் நாற்காலி எனக்கு வேண்டும் என்று அஜீத் சொன்னது பலத்த சர்ச்சையை கிளப்பியது.

தனது கடின உழைப்பையும், ஈடுபாட்டையும் வெளிப்படுத்த அவர் சொன்ன வார்த்தை பலரை கோபப்படுத்தியது. சிலர் கிண்டலடித்தனர். அதன் பிறகு சூப்பர் ஸ்டார் குறித்து அஜீத் இதுவரை வாயே திறந்ததில்லை.

விஜய் தன்னை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொன்னதில்லை. அவர் சம்பந்தப்பட்ட மேடையில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்ற கோஷம் இடம்பெறாமல் இருந்ததுமில்லை. விஜய் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பும், விலையும், குழந்தைகளிடம் அவருக்கிருக்கும் வரவேற்பையும் வைத்து அடுத்த சூப்பர் ஸ்டாருக்கான தகுதி அவரிடமிருப்பதாக பலரும் கருதுகின்றனர்.

தயாரிப்பாளர் தாணு அதில் முக்கியமானவர். ரஜினிக்கு அடுத்து விஜய்தான் என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் குறிப்பிடுவார். விஜய் விருது வழங்கும் விழாவில் துப்பாக்கிக்காக விருது வாங்கும் போது இதனை சற்று அழுத்தியே சொன்னார். ஆளவந்தானில் தன்னை நஷ்டப்படுத்திய எதிரி கமல்ஹாசன் அமர்ந்திருக்கும் நிகழ்ச்சியில் இப்படிப் பேச கிடைத்த சந்தர்ப்பத்தை தாணு நிச்சயம் தவறவிட மாட்டார்.

ரஜினியைப் போலவே அடக்கம், ஓபனிங் கிங், ஆன்மீகத்தில் ஈடுபாடு, தனது படங்களையே ப்ரமோட் செய்யாதவர் என அஜீத்தை அடுத்த சூப்பர் ஸ்டார் என சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். அவரா இவரா என்ற போட்டியில் இப்போது புதிதாக சூர்யாவையும் கோர்த்துவிட்டிருக்கிறார்கள்.

சிங்கம் 2 வெற்றிவிழா நிகழ்ச்சியில் பலரும் அடுத்த சூப்பர் ஸ்டார் சூர்யாதான் என்று சொல்லி சூர்யாவுக்கே அதிர்ச்சி தந்தனர். நன்றாக காமெடி செய்கிறார், ரஜினி மாதிரியே பேசுகிறார், கறுப்பாக இருக்கிறார் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என்று சிவ கார்த்திகேயனை முன்னிறுத்துகிற முயற்சிகளும் நடக்கிறது. ஆக, சூப்பர் ஸ்டார் நாற்காலி ஏலத்துக்கு வந்திருக்கிறது.

நடிகர் திலகம், மக்கள் திலகம், கலைஞானி என்று வகைதொகையில்லாமல் பட்டங்கள் இருந்தும் சூப்பர் ஸ்டாருக்கு மட்டும் ஏன் இந்த அடிதடி. ரஜினி வைத்திருப்பதாலா?

ஓரளவு அது உண்மை. சூப்பர் ஸ்டார் என்பது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு அடைமொழி. இசைத்துறையில் அவர் ஒரு சூப்பர் ஸ்டார், கால்பந்தில் சூப்பர் ஸ்டார் என சினிமா தாண்டியும் சூப்பர் ஸ்டார் என்பது பயன்படுத்தப்படுகிறது. மக்கள் திலகம், கலைஞானி போல அது யுனிக்கானது அல்ல. ஒவ்வொரு மொழியிலும் சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள்.

மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், தெலுங்கில் சிரஞ்சீவி, இந்தியில் அமிதாப் தொடங்கி ஷாரூக்வரை பல பேர். தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் என்றால் அது தியாகராஜ பாகவதர். வடஇந்திய ஊடகங்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார், தமிழ் சூப்பர் ஸ்டார் என்றே குறிப்பிடுகின்றன.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடி – ஹன்சிகாவுக்கு ஒரு கோடி!

maan“மான் கராத்தே”வில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ள ஹன்சிகா, ஒரு கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றுள்ளாராம்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை, திரைக்கதை எழுதியுள்ள படம் “மான் கராத்தே”. ஏ.ஆர்.முருகதாஸிடம் நீண்ட நாட்களாக உதவியாளராக இருந்து வரும் திருக்குமரன் இயக்கி வருகிறார்.

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க, ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் பூஜை போட்டு பட வேலைகளைத் தொடங்கி உள்ளனர்.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும்போது லட்சங்களில் மட்டுமே சம்பளம் வாங்கிவந்த ஹன்சிகா, இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறாராம்.

முதலில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடிப்பதற்கு மறுத்தாராம் ஹன்சிகா. சம்பளம் பெரிய தொகை என்றதும், உடனே ஒப்புக் கொண்டாராம். கேட்பவர்களிடம், “இளம் நடிகர்களின் படங்கள் தான் இப்போது ஓரளவுக்காவது ஓடுகின்றன.

யாருடன் நடிக்கிறோம் என்பது முக்கியமல்ல, படம் ஓடுதா என்பதுதான் முக்கியம்” என்பவர், சம்பள விஷயத்தை மட்டும் மறைத்துவிடுகிறாராம்.

விமானத்தை பல்லால் இழுத்த நபர் – வீடியோ இணைப்பு

f1

ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த நபரொருவர் வணிக ரீதியான 50 தொன் (45359.2 கி.கி) நிறையுடைய விமானம் ஒன்றினை பல்லினால் இழுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

சோல்ட் சிங்கா என்ற நபரே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் ஏ320 என்ற வணிக ரீதியிலான ஏயார் பஸ்ஸை 51 செக்கன்களில் 39.2 மீற்றர் தூரம் இழுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

பிற உதவிகள் எதுவுமின்றி கைறு ஒன்றினை வாயினால் கடித்துக்கொண்டு ஏயார் பஸ்ஸை இழுக்க ஆரம்பித்துள்ளார் சிங்கா. இதன்போது அருகில் இருந்த நடன மங்கைகள் அவரை உற்சாகமூட்டினர்.

இதற்கு முதல் லக்ஷ்சம் பேர்க்கை சேர்ந்த ஜோர்ஜ் என்பவர் பஸ் ஒன்றை பல்லினால் இழுத்ததே சாதனையாக இருந்தது.

பழைய டைப்ரைட்டர் பொறிகளைத் தேடுகிறது ரஷ்யா..!

typeரஷ்யாவில், நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான நிறுவனங்களில் பழைய தட்டச்சுப் பொறிகளையே (டைப்ரைட்டர்ஸ்) பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ரகசியங்கள் கசிவதைத் தடுப்பதற்காக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிகிறது.

இஸ்வேஸ்டியா (Izvestia) என்ற ரஷ்ய அரசுக்கு மிக நெருக்கமான நாளிதழ் இது பற்றி செய்தி வெளியிட்டுள்ளது.

விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்காவின் லட்சக் கணக்கான ரகசிய ஆவணங்களை வெளியிட்டமையும், மிக அண்மையில், அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு கணினி நிபுணர் எட்வர்ட் ஸ்நோடன் அந்நாட்டின் உளவு ரகசியங்களை அம்பலப்படுத்தியமையும் இதற்குக் காரணம் என்று அந்த நாளிதழ் கூறியுள்ளது.

இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அமெரிக்காவின் பாதுகாப்பு ரகசியங்கள் கணினி மூலமாகவே கசியவிடப்பட்டுள்ளன.

ஏற்கனவே, அதிபர் புட்டீனுக்காக தயாரிக்கப்படும் சில முக்கிய அறிக்கைகள் டைப்ரைட்டர்கள் மூலமே எழுதப்பட்டுவருவதாகவும் இஸ்வேஸ்டியா நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

(BBC)

துள்ளிக்குதித்து ஓடி உறங்குபவர்களை எழுப்பும் அதிசய கடிகாரம்!!

new clock

ஆழ்ந்த தூக்­கத்தில் இருப்­ப­வர்­களை எழுப்­பு­வ­தற்­காக துள்­ளிக்­கு­தித்து அறை­யி­லி­ருந்து ஓடும் ரோபோ அலார கடி­கா­ரம் ஒன்றினை இங்­கி­லாந்தின் பல்­க­லைக்­க­ழக மாண­வ­ரொ­ருவர் கண்­டு­பி­டித்­துள்ளார்.

உறக்­கத்­தி­லி­ருந்து எழுந்து பல்­க­லை­க­ழக விரி­வு­ரை­க­ளுக்கு குறித்த நேரத்­திற்கு செல்­வ­தற்கு தடு­மா­றிய மாணவன் ஒரு­வரே இந்த சாத­னத்தைக் கண்­டு­பி­டித்­துள்ளார். “கிளொக்கி” எனப் பெய­ரி­டப்­பட்­டுள்ள 2 டயர்­களைக் கொண்ட இந்த ரோபட்டிக் கடிகாரமானது 3 அடி உயரம் வரை பாய்ந்து கார்பட் தரை மற்றும் மரத் தரை உள்ள அறையில் அங்கும் இங்கும் ஓடிச் செல்லக் கூடி­யது.

ஒரு முறை மட்­டுமே ஸ்னஸ் செய்ய அனு­ம­திக்கும் இந்த கடி­கா­ரத்தை பிடித்து அலார்மை நிறுத்தும் வரை பாரிய சத்­தத்­துடன் அறை முழு­வதும் சுற்றி ஓட ஆடம்­பித்­து­விடும். இதனால் ஆழ்ந்த தூக்­கத்தில் இருப்­ப­வர்கள் விரட்டிப் பிடித்து கடி­கா­ரத்தின் சத்­தத்தை நிறுத்­தி­யே­யாக வேண்­டிய கட்­டா­யத்தில் எழும்­பி­வி­டு­வார்கள்.

அஞ்சலோ மத்தியூஸிற்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை..!

mathewsஇலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸிற்கு இரண்டு சர்வதேச ஒரு நாள் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடந்து முடிந்த இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியின் போது இலங்கை அணி வீரர்கள் உரிய நேரத்திற்குள் பந்து வீச தவறியமையின் காரணமாகவே இப் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன் படி எதிர்வரும் தென்னாபிரிக்க தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பை அஞ்சலோ மத்தியூஸ் இழந்துள்ளார்.

விஸ்வரூபம்-2 படத்தில் தண்ணீருக்கு அடியில் சண்டை காட்சி: கமல்..!

vishபுதிய தொழில்நுட்பத்தின் மூலம் விஸ்வரூபம்-2 படத்தில் தண்ணீருக்கு அடியில் சண்டை காட்சிகளை படமாக்கி உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான விஸ்வரூபம் படத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

இதனையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு வெளியிட்டனர். இந்நிலையில் கமலுடன் பூஜாகுமார், ஆண்ட்ரியா, ராகுல்போஸ், சேகர் கபூர், நாசர் உள்ளிட்டோரின் நடிப்பில் விஸ்வரூபம்-2 தயாராகி உள்ளது.

கமல் திரைக்கதை, வசனம் எழுதி இயக்க, கமல்ஹாஸனின் ராஜ்கமல் நிறுவனத்துடன், ஒஸ்கர் ரவிச்சந்திரன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.

தாய்லாந்து, பாங்காக்கில் இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர்களை கமல் வெளியிட்டார்.

இந்நிலையில் படத்தின் சிறப்பம்சம் குறித்து சமீபத்தில் கமல் கூறுகையில், விஸ்வரூபம் படத்தை உருவாக்கும் போதே, இரண்டாம் பாகம் பற்றி சிந்தித்தேன்.

விஸ்வரூபம் 2 படத்திற்கான 90 சதவிகித படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டன. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இருக்கிறோம்.

தண்ணீருக்கு அடியில் வைத்து எடுக்கப்பட்ட சண்டைகாட்சிகள் நிச்சயம் பெரிதாகப் பேசப்படும். மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இரண்டாம் பாகத்தை உருவாக்கி இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அகதி முகாமில் இலங்கை மாணவி மீது ஆசிரியர் பாலியல் தொல்லை..!

தமிழ்நாடு – ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பவானிசாகர் பகுதி அகதி முகாமில் வசிக்கும் இலங்கை சிறுமி ஒருவருக்கு ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பவானிசாகர். இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும், இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த ஒரு மாணவியை, அப்பள்ளியில் பணியாற்றும் ஓவிய ஆசிரியர் தியாகராஜன் என்பவர் சில்மிஷம் செய்து, பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக,மாணவி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனால், கொதிப்படைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், நேற்று மாலை திடீரென பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளியை முற்றுகையிட்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த பவானிசாகர் பொலிஸ் பொறுப்பதிகாரி சுப்புரத்தினம்,எஸ்.ஐ.,கணேசன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முதன்மை கல்வி அதிகாரியிடம், இதுபற்றி கூறி, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக, அதிகாரிகள் உறுதியளித்தால், பெற்றோர் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சம்பளத்தை 5 கோடியாக உயர்த்திய சந்தானம்..!

santhanamதமிழ் திரையுலகில் நகைச்சுவை திறமையை உயர்த்திக் கொண்ட சந்தானம் தனது சம்பளத்தையும் 5 கோடிக்கு உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தமிழ் சினிமாவின் பாதி படங்கள் சந்தானத்தின் கொமடிக்காகத்தான் ஓடுகின்றன என்று கொலிவுட் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுவருகின்றன.

அதே போல் தயாரிப்பாளர்களும் சந்தானம் படத்தில் இருந்தாலே போட்ட முதலை எடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் சந்தானத்தை தெரிவு செய்கின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்ட சந்தானம் தனது சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தியுள்ளார்.

சந்தானத்திற்கு மவுசு அதிகமாக உள்ளதால் வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர்களும் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுப்பதற்கு தயாராகிவருகின்றனர்.

சிறந்த கால்பந்து வீரர் விருது யாருக்கு – முன்னணி வீரர்கள் பலர் போட்டி!!

football

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கு, மெஸ்சி, ரொனால்டோ உள்ளிட்ட 10 முன்னணி வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆண்டு முதல் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள கழக அணிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஆண்டு தோறும் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்படும்.

இவ்விருதை 2011ல் பார்சிலோனா அணிக்காக பங்கேற்ற மெஸ்சி தட்டிச்சென்றார். 2012ல் பார்சிலோனாவின் இனியஸ்டா வென்றார்.

இந்த ஆண்டு கழக அணிகளில் சிறப்பாக செயல்பட்ட 10 வீரர்கள் கொண்ட பட்டியல் தற்போது வெளியிடப்பட்டது.

இதில் மெஸ்சி (பார்சிலோனா), கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரியல் மட்ரிட்), கெராத் பேல் (டாட்டன்ஹாம்), இப்ராகி மோவிச் (பாரிஸ் செண்ட் ஜெர்மியான்), ரோபர்ட் லீவான்டோவிச் (போரிஸ் டிராட்மண்ட்), ரொபின் வான் பெர்சி (மன்செஸ்டர் யுனைடெட்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களை தவிர பேயர்ன் முனிக் அணியின் தோமஸ் முல்லர், பிரான்க் ரிபரி, அர்ஜன் ராபன், பாஸ்டின் ஆகியோரும் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

சிறந்த வீரருக்கான விருது வரும் ஒகஸ்ட் 29ம் திகதி மொனாகோவில் நடக்கும் சம்பியன்ஸ் லீக் தொடரின் அட்டவணை அறிவிப்பின் போது வழங்கப்படும்.

இளவரசன் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள திவ்யா மறுப்பு..!

divyaதர்மபுரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளவரசன், திவ்யா ஆகியோர் காதல் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். அப்போது திவ்யா தந்தை தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து அங்கு வன்முறை ஏற்பட்டது. தொடர்ந்து தனது மகளை கண்டுபிடித்து தருமாறு திவ்யாவின் தாயார் சென்னை உயர் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து திவ்யா நீதிமன்றில் ஆஜரானார். தொடர்ந்து வழக்கு நடந்து வந்த நிலையில், தனது தாயாருடனேயே தான் இருக்க விரும்புவதாக திவ்யா கூறினார்.

இந்தநிலையில் கடந்த 4ஆம் திகதி தர்மபுரி ரயில் தண்டவாளத்தில் இளவரசன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இளவரசன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் இளங்கோவன் கிருஷ்ணவேணி ஆகியோர் நீதிமன்றத்தை நாடினர்.

தற்போது அவரது உடல் தருமபுரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சென்னை உயர் நீதிமன்றில் மில்டன் என்பவர், இளவரசன் இறுதி சடங்கில் அவரது மனைவி திவ்யா கலந்து கொள்ள வேண்டும்.

இந்து முறைப்படி சடங்குகள் நடக்க வேண்டும் என்று கோரி மனு செய்திருந்தார். இதுகுறித்து பதில் அளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிமன்று உத்தரவிட்டது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் திவ்யாவின் இல்லத்திற்கு சென்று, இதுகுறித்து தெரிவித்தது. தற்போது உள்ள சூழ்நிலையில் நான் கலந்து கொள்ள இயலாது என்று கூறிய திவ்யா, கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் இதனை நிதிமன்றில் தெரிவிக்க உள்ளது.

சத்ய சாய்பாபா வேடத்தில் மலையாள நடிகர் திலீப் – சம்பளம் 7 கோடி இந்திய ரூபாய்!

Dileep

புட்டபர்த்தி சத்ய சாய்பாபா வேடத்தில் நடிக்க மலையாள நடிகர் திலீப்பை தேர்வு செய்துள்ளார் இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா. புட்டபர்த்தி சாய் பாபாவின் வாழ்க்கை வரலாறு “சாய்பாபா” என்ற பெயரிலேயே தெலுங்கில் திரைப்படமாகிறது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் முறையில் உருவாகும் இப்படத்தில் சாய்பாபா வேடத்தில் நடிக்க ஏராளமான தென்னிந்திய நடிகர்களை கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மூலம் பரிசீலித்த இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா, கடைசியில் பிரபல மலையாள நடிகர் திலீப்பை தேர்வு செய்துள்ளார்.

அவருக்கு பெரிய சம்பளம் பேசப்பட்டுள்ளது. அவரது சம்பளம் ரூ 7 கோடி என தெரிய வந்துள்ளது. மம்முட்டி, மோகன்லால் கூட இவ்வளவு சம்பளம் பெற்றதில்லை. தெலுங்கு தவிர மற்ற மொழிகளிலும் இந்தப் படத்தை வெளியிடும் திட்டமுள்ளதாம்.

இந்த படத்தில் கோடி ராமகிருஷ்ணாவுடன் திரையுலகின் பல ஜாம்பவான்கள் பணியாற்ற இருக்கிறார்கள். இசைக்கு இசைஞானி இளையராஜாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். சாய் பாபாவின் 20 வயது முதல் அவர் சமாதி அடையும் வரையிலான நிகழ்வுகளை சித்தரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு புட்டபர்த்தி மற்றும் இமாச்சல பிரதேசத்தில் நடக்கவிருக்கிறது. செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.

இங்கிலாந்தின் அடுத்த வாரிசு ஆணா? பெண்ணா? – சூடுபிடிக்கும் சூதாட்டம்

kate-william

இளவரசர் வில்லியம்ஸூக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என இடம்பெரும் சூதாட்டங்களில் பெருமளவான பணம் புரள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸின் மனைவி கேத் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

பிரசவத்துக்காக அவர் மத்திய லண்டனில் உள்ள பட்டிங்டான் செண்ட் மேரிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் கர்ப்பமானதில் இருந்து வில்லியம்ஸ் – கேத் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதில் இங்கிலாந்து மக்கள் ஆர்வமாக இருந்து வருகிறார்கள். குறிப்பாக அவர் என்ன சாப்பிடுகிறார் எங்கு போகிறார். அரண்மனையில் எப்படி நடத்துகிறார்கள் என்பன பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதில் மக்கள் ஆர்வமாகவுள்ளனர்.

கேத்துக்கு குழந்தை பிறக்கும் நேரம் வந்து விட்டது. அவருக்கு வருகிற 13–ம் திகதி குழந்தை பிறக்கும் என்று தகவல் வெளியானது. ஆனால் அதற்கு முன்பே குழந்தை பிறக்கும் வாய்ப்பு இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தநிலையில் கேத்துக்கு பிறக்கப் போவது ஆணா? பெண்ணா? என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது. இதைப்பயன்படுத்தி இங்கிலாந்தில் பெரிய அளவில் சூதாட்டமே நடக்கிறது. இளவரசர் தான் பிறப்பார் என்று ஒரு சாராரும், இளவரசிதான் பிறப்பார் என்று ஒரு சாராரும் பணம் கட்டி சூதாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதில் பெரும்பாலானவர்கள் பெண் குழந்தை பிறக்கும் என்று கூறி பணம் கட்டியுள்ளனர். அரண்மனையில் பெண் வாரிசுகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பெண் குழந்தைதான் பிறக்க வேண்டும் என்றும் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
இந்த சூதாட்டத்தில் பெருமளவு பணம் புரள்வதாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் சூட்டுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். பையன் பிறந்தால் அலெக்சாண்ரா என்று பெயர் சூட்டுமாறு பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண் பிறந்தால் கேர்லோட், டயானா, எலிசபெத் விக்டோரியா ஆகிய பெயர்களும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் கேத்தரின் சகோதாரர் ஜேம்ஸ் பெயரைத்தான் குழந்தைக்கு சூட்டுவார் என்றும் பந்தயம் சூட்டியுள்ளனர்.

கொலை முயற்சி வழக்கு – கைதாவாரா விஜயகாந்த்??

vijayakanth

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் பரபரப்பு காணப்படுகிறது.

அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 1ம் தேதி நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் தேமுதிக வழக்கறிஞர்களுக்கும், அரசு வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அரசு வழக்கறிஞர் ஞானசேகரன் என்பவர் கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் விஜயகாந்த் உள்பட 6 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் ரிஷிவந்தியம் பயணத்தை பாதியில் நிறுத்தி விட்டு கிளம்பிப் போய் விட்டதாகவும் கூறப்படுகிறது.