வவுனியாவில் இடம்பெற்ற அமிர்தலிங்ம் சிரார்த்ததினம்..!

தமிழ் மக்கள் கடந்த காலங்களில் சிறந்த அரசியல்வாதிகளை இழந்ததனால் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றோம் என முன்னாள் வவுனியா நகரபிதா ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமுன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித்தலைவரும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகமுமான அ.அமிர்தலிங்கத்தின் சிரார்த்ததினம் இன்று புளொட் அமைப்பினால் நினைவு கூறப்பட்டபோது அங்கு உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,

யுத்தமில்லாத பிரதேசத்திலே நாளுக்குநாள் அரசானது தமது படையை பலப்படுத்துவதற்காக கோடி கோடியான பணத்தை செலவிடுகிறது.

ஆனால் எங்களுடைய தேசிய இன விடுதலை போராட்டத்திலே மரணித்த அல்லது வாழ்விழந்த எத்தனையோ போராளிகள் மற்றும் குடும்பங்கள் இன்று சொந்த வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாதுள்ளனர்.

எனவே அரசாங்கமானது அவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் சிறந்த புனர்வாழ்வை அளிப்பதற்கு முன்வரவேண்டும். அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சுழிபுரம் பண்ணாகத்தைச் சேர்ந்த சின்னட்டி அப்பாப்பிள்ளைக்கும், வள்ளியம்மைக்கும் மகனாக 1927-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ந் திகதி பிறந்தார். பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் உயர்கல்வியையும் கற்றார்.

பின்னர் கொழும்பு பல்கலைக் கழகத்தில் சட்டக் கல்வியை முடித்த அமிர்தலிங்கம் கொழும்பு சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1951-ல் நியாயவாதியாக பட்டம் பெற்று வெளியேறினார். சட்டத்துரையை கைவிட்டு தந்தைச் செல்வாவின் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்துக் கொண்டார். 1952-ம் ஆண்டின் பொதுத் தேர்தலின்போது வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

1956-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மீண்டும் வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று இலங்கை பராளுமன்றம் சென்றார். இலங்கையில் தமிழர் உரிமைகளுக்காகக் கட்சி நடத்திய போராட்டங்களில் முன்னணியில் நின்று கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே புகழ் பெற்றார்.

தமிழில் சிறந்த பேச்சாளராகவும் காணப்பட்டார். 1972-ம் ஆண்டு இலங்கைத் தமிழ்க் கட்சிகள் இணைந்து உருவான தமிழர் கூட்டணி என்னும் அரசியல் அமைப்பிலும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்ட அதே அமைப்பிலும் முன்னணியில் இருந்து உழைத்தார்.

தந்தைச் செல்வ நாயகத்தின் மறைவுக்குப் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை இவர் ஏற்றார். 1977-ம் ஆண்டின் பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக ஆனதைத் தொடர்ந்து, இலங்கையின் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக பதவியேற்றார்.

இதுவரைக்கும் இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் பதவியை வகித்த ஒரே தமிழர் அமிர்தலிங்கம் ஆவார். 1970 முதல் 1980 வரை, அடிக்கடி நிகழ்ந்த இனக்கலவரங்கள், தமிழர் உரிமைகள் தொடர்பான சிங்கள அரசியற் கட்சிகளின் தீவிரப்போக்கு என்பன பாரம்பரியத் தமிழ்க் கட்சிகளின் இயலாத்தன்மையை எடுத்துக்காட்டின.

இது தமிழ்ப் பகுதிகளில் தீவிரவாதப் போக்குக்கு வழிகோலியபோது, தமிழ் மக்கள் மீது அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களுக்கு இருந்த பிடி கைநழுவிப் போனது. பல சந்தர்ப்பங்களில் இந்தியாவில் ஒதுங்கி இருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

எனினும் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தங்களுக்கு இருக்கக்கூடிய உலக அங்கீகாரத்தை இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பயன்படுத்துவதற்கான கூடுதல் வாய்ப்புத் தங்களுக்கு இருப்பதாகக் கருதிய அமிர்தலிங்கமும் ஏனையவர்களும் அதற்கேற்ப நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தார்கள்.

இதன்மூலம் இளைஞர்களுக்கும் அமிர்தலிங்கம் போன்றவர்களுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன. 1989 ஜுலை 13-ம் நாள் கொழும்பில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதே நாளில் அதே வீட்டில் யோகேஸ்வரனும் கொல்லப்பட்டார்.

vavuniya1

vavuniya2 vavuniya3 vavuniya4
vavuniya5

 

கத்தரிக்காயின் பயன்கள்..

brinjal

வெப்ப மண்டல பகுதிகளில் பயிரிடப்படும் கத்தரிக்காய் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இக் கத்தரிக்காய் எமக்கு எந்த வகையில் பயனுள்ளதாக அமைகின்றது என்பதனை நாம் பார்ப்போம்..!

1.100 கிராம் கத்தரிக்காயில் 24 சதவிதம் கலோரிகள், 9 சதவிதம் நார்ச்சத்து உள்ளது.

2.அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் திரவப் பொருள் உள்ளது. ஆந்தோசயான் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய் எதிர்ப்புப் பொருளாகும்.

3.கொம்ப்ளக்ஸ் வகையான விட்டமின்களான பான்டோதெனிக் அசிட், பைரிடமாக்சின், தயமின் மற்றும் நியாசின் ஆகிய உயிர்ச்சத்துகளும் கத்தரிக்காயில் அடங்கியுள்ளன. மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன.

4.கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் உடற்செயலின் மாற்றங்களுக்கு மிகவும் உகந்தவை.

 

 

உங்கள் முகத்தில் கரும்புள்ளி தொல்லையா?

dots

அழகான உங்களது முகத்தில் காணப்படும் கரும்புள்ளிகளை இல்லாமல் செய்வதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றில் சில செய்முறைகளை நாம் இங்கு பார்ப்போம்

1. ரோஜா இதழ்களுடன் பாதாம் பருப்பை ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவி வர வேண்டும்.

2. வாழைப்பழம் அல்லது பப்பாளி பழத்துடன் சிறிது தேன் கலந்து குழைத்து முகத்தில் பூசி வரலாம்.

3. வெள்ளரிச் சாறு, புதினாச் சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை, சம அளவில் கலந்து, முகத்திலுள்ள கரும் புள்ளிகள் மீது தேய்த்து வந்தால், கரும் புள்ளிகள் போய்விடும்.

4. உருளைக்கிழங்கை ரெண்டாக வெட்டி தடவவும்.

5. ஜாதிக்காய் அரைத்துப் போட்டு வரவும் கரும்புள்ளிகள் இல்லாது போய்விடும்.

6.முகத்தில் வெண்ணெய் தடவி, எலும்பிச்சைச் சாறு கலந்த வெந்நீரால் ஆவி பிடித்து, துண்டால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வர, கரும்புள்ளி மறையும்.

7.பன்னீர், விளக்கெண்ணெய் தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளி உள்ள இடங்களில் தடவவும். பின், டவலை சூடான நீரில் நனைத்து பிழிந்து, முகத்தில் வைத்து பஞ்சினால் துடைத்து எடுத்து விடவும்.

8.வெள்ளரிச்சாறு, போரிக் பவுடர், தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளிகளில் தடவி, ஐந்து நிமிடம் ஊறவிடவும். பின், லேசாக மசாஜ் செய்து துடைத்தால் உள்ளிருக்கும் அழுக்குகள் நீங்கும்.

9.கோதுமை தவிடு, பால் இரண்டும் தலா ஒரு மேஜைக்கரண்டி கலந்து, கரும் புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர வேண்டும். கொஞ்ச நாட்களில் கரும் புள்ளிகள் வலுவிழந்து உதிர்ந்து விடும்.

இவ்வாறு நீங்கள் தொடர்ச்சியாக செய்து வந்தால் உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பொலிவுடன் அழகாகவும் காணப்படும்.

 

 

கடல் வழியாக உலகை சுற்றிவந்து, 70 வயது மூதாட்டி சாதனை..!

jeanne_socratesதன்னந்தனியாக கடல் வழியாக உலகை சுற்றிவந்து இங்கிலாந்தை சேர்ந்த 70 வயது பெண் சாதனை படைத்துள்ளார்.

மேற்கு லண்டனை சேர்ந்த ஜியேன் சாக்ரட்டீஸ் என்ற அந்த பெண் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கனடாவில் உள்ள விக்டோரியா துறைமுகத்தில் இருந்து இந்த சாகச பயணத்தை தொடங்கினார்.

கணவருடன் பலமுறை கடல் பயணம் சென்றிருக்கும் ஜியேன் சாக்ரட்டீஸ், கணவர் இறந்த பின்னர் தன்னந்தனியாக கடல் வழியாக25 ஆயிரம் மைல் பயணித்து உலகை சுற்றிவந்து259 நாட்களில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதன் மூலம் கடல் வழியாக தன்னந்தனியாக உலகை சுற்றிவந்த அதிக வயதான பெண் என்ற புதிய சாதனையை இவர் ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த2009-ம் ஆண்டு இதே முயற்சியில் படகில் புறப்பட்ட ஜியேனின் பயணம் படகு பழுதானதால் தென் ஆப்பிரிக்காவில் முடிவடைந்தது.

2010-ம் ஆண்டு மீண்டும் ஒருமுறை புறப்பட்டு 72-வது நாள் படகு விபத்துக்குள்ளானதால் அந்த முயற்சியும் நிறைவேறாமல் போனது.

எனினும், தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத ஜியேன், 3-வது முறையாக தனது கனவை நனவாக்கியுள்ளார்.

2003-ம் ஆண்டு புற்று நோயால் மரணமடைந்த தனது கணவரின் நினைவாக மேரி கியூரி புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த சாதனை பயணத்தை ஜியேன் சாக்ரட்டீஸ் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு உதவுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட புதிய மொபைல்!!

jivi

ஜிவி 2010 (Jivi 2010) என்ற பெயரில், புதுமையான வசதியுடன், மொபைல் போன் ஒன்று விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ஒரு கூடுதல் வசதியாக் அவசர காலத்தில் உதவி கேட்டு அழைக்கவென பட்டன் (SOS button) ஒன்று தரப்பட்டுள்ளது. பெண்களுக்கு உதவுவதை இலக்காகக் கொண்டே இந்த மொபைல் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது ஆபத்தினை எதிர் நோக்கும் காலங்களில், இந்த பட்டனை அழுத்தினால் போதும். ஏற்கனவே இந்த போனில் பதிந்து வைக்கப்பட்டுள்ள ஐந்து எண்களுக்கு அழைப்பு தானாகச் செல்லும்.

ஏதேனும் ஒரு எண்ணுக்குரியவர் அழைப்பினை எடுக்கவில்லை என்றாலோ அல்லது மற்றவரிடம் பேசிக் கொண்டிருந்தாலோ உடன் அந்த போனுக்கு மெசேஜ் ஒன்று அனுப்பப்படும். பின்னர் அடுத்த எண்களை இதே போல அழைக்கும்.

இதன் திரை 2.4 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு சிம்களை இந்த போன் இயக்குகிறது. பெரிய அளவில் ஸ்பீக்கர் தரப்பட்டுள்ளது. MP3, MP4, AVI or 3GP ஆகிய போமட்களில் உள்ள பைல்களை இயக்குகிறது. பதிவு செய்திடும் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ இயங்குகிறது.

3.5 மிமீ ஓடியோ ஜக் தரப்பட்டுள்ளது. இதில் ஜி.பி.ஆர்.எஸ்., புளுடூத் வசதிகள் உள்ளன. சார்ஜ் செய்வதற்கும், டேட்டா மாற்றுவதற்கும் மைக்ரோ யு.எஸ்.பி. போட் தரப்பட்டுள்ளது.

இவற்றுடன் மொபைல் ட்ரேக்கர், பிளாஷ் லைட், போல்டர் லொக், ஓட்டோ கோல் பதிவு போன்ற வசதிகள் உள்ளன. மைக்ரோ எஸ்.டி. கார்ட் உதவியுடன் இதன் மெமரியினை 32 ஜிபி வரை அதிகரிக்கலாம்.

Jivi 2010 கருப்பு, வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் கிடைக்கிறது. Infibeam, gadgets.in, ebay.in, shopclues.com, and Tradus.com ஆகிய இணைய தளங்கள் வழியாகவும் இதனைப் பெறலாம்.

இலங்கை – இந்திய இறுதிப் போட்டியில் சூதாட்டம்?

lankaமேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற முக்கோண தொடரில் இலங்கை – இந்திய அணிகள் மோதிய இறுதிப் போட்டியின் போது கிரிக்கெட் பந்தயத்தில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களை டெல்லி பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியின் பூத்கலன் பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லலித் சொலங்கி (27 வயது), நிதின் சொக்கின் (27 வயது), பவன் சொலங்கி (30 வயது), மோஹித் குமார் (21 வயது) மற்றும் ஜிட்டேன்டர் குமார் (22 வயது) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐபிஎல், செம்பியன் கிண்ணம் மற்றும் முக்கோண தொடர் என்பவற்றில் இவர்கள் 1.5 கோடி இந்திய ரூபா கிரிக்கெட் பந்தயம் பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து ஒரு மடிக்கணினி கைப்பற்றப்ட்டுள்ளது. இலங்கை – இந்திய இறுதிப் போட்டியில் 154 பந்தயங்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலியா சென்ற படகு கவிழ்ந்து கைக்குழந்தை பலி: 88 பேர் மீட்பு

aussieசுமார் 97 புகலிடக் கோரிக்கையாளர்களைச் ஏற்றிச் சென்ற படகு ஒன்று அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் விபத்துக்குள்ளாகியது.

இவ்விபத்தில் கைக்குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் ஜேசன் கிளயார் தெரிவித்துள்ளார்.

குறித்த படகில் இருந்து 88 பேர் இதுவரை காப்பாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த படகில் உள்ளவர்கள் நேற்று வெள்ளிக்கிழமையே தமக்கு ஆபத்து என உதவி கோரியதாகவும் அதன்படி அவர்களை பாதுகாக்கச் சென்ற அதிகாரிகள் இன்று காலையே அங்கு சென்றதாகவும் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாட்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த படகில் இருந்திருக்கலாம் என அவர் சந்தேகிக்கின்றார்.

காணாமல் போயுள்ளவர்களை மீட்கும் பணியில் கடற்படை கப்பல்களும் விமானங்களும் ஈடுபட்டுள்ளதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தளத்தில் தமிழ் வர்த்தகர் கடத்தல்..!

kidnapசிவப்பு நிற காரில் வந்த சிலர் வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதென புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

உடப்பு – ஆனமடு பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய சொக்கலிங்கம் சேதுராமன் என்பவரே கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

கடத்தல் இடம்பெற்ற போது அதனை நேரில் கண்ட நபர் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.

யாரால் எதற்காக இக்கடத்தல் மேற்கொள்ளப்பட்டது என இன்னும் தெரியவரவில்லை.

புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்களுக்கெதிரான வன் கொடுமைகளுக்கு பெற்றோரெ காரணம் – இலியானா ஆவேசம்..!

ileanaநண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இலியானா, பெண்களின் சுதந்திரத்தை பெற்றோரே பறிப்பதாக ஆவேசப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பெண்கள் சுதந்திரம் புத்தகங்களில் மட்டுமே இருக்கிறது என்றெல்லாம் மேடைகளில் பேசுகின்றனர்.

ஆனால் வீடுகளில் பெற்றோர்களோ பெண்களை சுதந்திரமாக வளர விடாமல் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர்.

ஆண்களிடம் பேசக்கூடாது. ஆண்கள் கேலி பேசினால் அதனை எதிர்க்காமல் தலை குணிந்து போய்விட வேண்டும்.

சிரிக்க கூடாது, முகத்துக்கு நேர் பார்க்க கூடாது என்றெல்லாம் பெற்றோர்கள் பெண்களை நிர்பந்தம் செய்கின்றனர்.

இதனால் தான் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், மானபங்கம், பாலியல் பலாத்காரம் என நடக்கிறது.

பெண்களை நாலு சுவற்றுக்குள் அடைத்து வைக்காமல் தைரியசாலியாகவும், சுதந்திரமாகவும் வளர விடுங்கள் என்று கூறியுள்ளார்.

ஆஷஸ் முதலாவது டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து..!

aussieஇங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரென்ட்பிரிட்ஜ் நகரில் நடந்து வருகிறது.

இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 215 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிராட் 48 ஓட்டங்கள் எடுத்தார். அவுஸ்திரேலிய அணி சார்பில் சிடில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து விளையாடிய, அவுஸ்திரேலியா 280 ஓட்டங்களுக்கு தனது இன்னிங்சை முடித்தது. அதிகபட்சமாக அறிமுக வீரர் அகர் 98 ஓட்டங்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி சார்பில் ஆன்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

65 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 80 ஓட்டங்கள் எடுத்தது.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து வலுவான நிலையை எட்டியுள்ளது. ஆட்ட நேர இறுதியில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 326 ஓட்டங்கள் குவித்துள்ளது. தலைவர் அலஸ்டயர் குக் 50 ஓட்டங்களும், கெவின் பீட்டர்சன் 64 ஓட்டங்களும் எடுத்தனர்.

அணிக்கு நம்பிக்கையூட்டிய இயான் பெல் 95 ஓட்டங்களுடனும், ஸ்டூவர்ட் பிராட் 47 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். டெஸ்டில் 6 ஆயிரம் ஓட்டங்களை கடந்த பெல், இந்த மைல்கல்லை கடந்த 14-வது இங்கிலாந்து வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.

இங்கிலாந்து அணி இதுவரை 261 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

கனடா அழைத்துச் செல்வதாகக் கூறி பண மோசடி செய்த பெண் கைது..!

arrest1கனடா நாட்டிற்கு அழைத்து செல்வதாக, 210 இலங்கை தமிழர்களிடம், 2.10 கோடி இந்திய ரூபாய் வரை வசூல் செய்து விட்டு, தப்பி ஓட முயன்ற பெண்ணை, பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள், ஆத்தூர் நீதிமன்றத்தில் சுற்றி வளைத்தனர்.

ஆத்தூர் அடுத்த, நாகியம்பட்டி கிராமத்தில், இலங்கை தமிழர் முகாம் உள்ளது. இங்குள்ள இலங்கைநாதன் சிவலிங்கம், அவரது மனைவி அன்றன்ரெஜினா ஆகியோர், முகாமில் உள்ள கவிதா, 35, யாழினி, 28, நிர்மலா, 25, சசிகலா, 38, ஆனந்த், 27, உள்பட ஆறு பேரிடம், கனடா நாட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி, தலா, 1.50 லட்சம் ரூபாய் வீதம் வசூல் செய்தனர். அதேபோல், தாரமங்கலம், கோவை, கும்முடிப்பூண்டி, வேலூர், செந்தாரப்பட்டி போன்ற இடங்களில் உள்ள இலங்கை தமிழர் முகாமில், 210 பேரிடம், 2.10 கோடி இந்திய ரூபாய் வரை வசூல் செய்துள்ளனர்.

கடந்த, 2011ல், 200 இலங்கை தமிழர்களை, ஆந்திர மாநில கடற்கரை தென்னந்தோப்பில் தங்க வைத்திருந்த போது, 200 பேரை கைது செய்த பொலிஸார், அவர்களை முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர். இலங்கை தமிழர்களை வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல முயன்ற இலங்கைநாதனை, மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கை தமிழர்களிடம் வசூல் செய்த தொகையை, மாதம், 20 ஆயிரம் ரூபாய் வீதம் தருவதாக, இலங்கைநாதன் மனைவி அன்றன்ரெஜினா, சில மாதங்களுக்கு முன், தம்மம்பட்டி போலீஸாரிடம், எழுதி கொடுத்தார். அதன் பின், பணம் தராமல் தலைமறைவாக இருந்தார்.இந்நிலையில், அன்றன்ரெஜினா, அவரது தோழி உள்பட, நான்கு பேர், வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக நேற்று, ஆத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வந்தனர்.

தகவலறிந்த, நாகியம்பட்டி இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த கவிதா, யாழினி, நிர்மலா உள்ளிட்டோர், நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த அன்றன்ரெஜினாவை முற்றுகையிட்டு, பணம் கேட்டனர்.

அப்போது, அன்றன்ரெஜினாவுடன் வந்தவர்கள், தகராறில் ஈடுப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண்கள், கற்களை வீசி தாக்க முயன்றனர். அதனால், இரு பெண்களும், நீதிமன்றத்துக்குள் ஓட்டம் பிடித்தனர்.

தகவலறிந்த ஆத்தூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பத் உள்ளிட்ட பொலிஸார், பணம் பறிகொடுத்தவர்கள் மற்றும் அன்றன்ரெஜினா ஆகியோரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, அன்றன்ரெஜினா கூறியதாவது: ஜெயபாலன் என்பவர், வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறி, எங்களிடம் பணம் வாங்கினார். அவரை காணதததால், பணத்தை பெற்று தரமுடியவில்லை, எனக் கூறினார்.

திருச்சியில் இலங்கை அகதிப் பெண் திடீர் மாயம்..!

Missingதிருச்சி கே.கே.நகரில் இலங்கை பெண் ஒருவர் திடீரென காணாமல் போயுள்ளதாக திருச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருச்சி கே.கே.நகர் அருகே உள்ள ஐய்யப்ப நகர் பெரியார்தெருவை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி தேன் மலர்.

இவர்கள் இலங்கை அகதிகள் ஆவர். இவர்களுக்கு தனுசியா (19) என்ற மகள் உள்ளார். தனுசியா 9–ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன்பிறகு அங்குள்ள ஒரு கடைக்கு தனுசியா வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த 10–ந் திகதி தனுசியா கோவிலுக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனாலும் எந்த தகவலும் கிடைக்க வில்லை.

இதுகுறித்து தாய் தேன் மலர் கே.கே.நகர் பொலிசில் புகார் செய்தார். தனுசியா கடத்தப்பட்டாரா? அல்லது மாயமாக வேறு காரணம் உள்ளதா? என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இப்படியும் காசு புடுங்குறாங்களே.. அலறும் தயாரிப்பாளர்கள்!

Anushka

ஒரு படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், அந்தப் படம் தொடர்பான புரொமோஷன் விழாக்களில் கலந்துகொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதி. எல்லாவற்றிலும் காசு பார்க்கத் துடிக்கும் மும்பைப் பட உலகம், இதிலும் காசு பார்க்க ஆசைப்பட்டது.

அதன்படி படத்திற்கான சம்பளப் பத்திரத்தில் கையெழுத்து போடும்போதே, புரொமோஷன் விழாக்களுக்கு வருவதென்றால் தனியாக இவ்வளவு கொடுத்துவிட வேண்டும் என்று கண்டிஷன் போட்டுவிடுவார்கள். இந்த டெக்னிக்கை கோலிவுட்டிலும் சிலர் கொஞ்சம் கொஞ்சமாக அமல்படுத்தத் தொடங்கி உள்ளனர்.

சமீபத்தில் ரிலீஸாகி இருக்கும் “சிங்கம்-2” படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர் அனுஷ்கா. சம்பளம் போக புரொமோஷன் விழாக்களுக்கு வரவேண்டுமானால், தனியாக ஒரு தொகை தரவேண்டும் என அடம்பிடித்தாராம் இவர்.

இயக்குநரும், தயாரிப்பாளரும் எவ்வளவோ கெஞ்சியும் மனம் இறங்கவே இல்லையாம் அனுஷ்கா. பிறகு வேறுவழியில்லாமல் தருவதாக ஒப்புக் கொண்டாராம் தயாரிப்பாளர்.

அனுஷ்கா விமானத்தில் வந்து போனது, சொகுசு ஹோட்டலில் தங்கிய செலவு போக பெரும்தொகையை அழுதாராம் தயாரிப்பாளர். இதைப் பார்த்து சில முன்னணி நடிகர்களும், நடிகைகளும் இப்படி நாமும் கேட்கலாமே என்ற எண்ணத்திற்கு வந்திருக்கிறார்களாம்.

 

இணையம் மூலம் கார் வாங்கிய ஒரு வயது கில்லாடி குழந்தை!!

car

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட்லண்ட் நகரை சேர்ந்தவர் போல் ஸ்டவுட். இவருக்கு ஒரு கார் விற்பனை கம்பனியில் இருந்து நோட்டீஸ் வந்தது.

அதில் நீங்கள் இணைய டிரேடிங் மூலம் ஒரு கார் வாங்கியிருக்கிறீர்கள். அதன் விலை ரூ.13 ஆயிரம் அதை செலுத்திவிட்டு காரை ஓட்டி செல்லுங்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் காரை வாங்கவில்லை என மறுத்தார். பின்னர் தனது கையடக்க தொலைபேசியை பார்த்த போது அதில் இணையம் மூலம் கார் வாங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவர் தனது ஒரு வயது மகளிடம் கையடக்க தொலைபேசியை விளையாட கொடுத்து இருந்தார். அப்போது அவர் தவறுதலாக அழுத்தி உபயோகித்ததில் இச்சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்தது.

அதை தொடர்ந்து அந்த காரை அவர் வாங்கி விட்டார். தற்போது அதில் தனது மனைவி குழந்தையுடன் வலம் வருகிறார். இவரது குழந்தையின் இணைய விளையாட்டு மூலம் வாங்கிய கார் 1962–ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட “ஒஸ்டின்–ஹீலே ஸ்பரிட்” ரக கார் ஆகும்.

இது குறித்து போல் ஸ்டூயட் கூறும்போது, ‘‘நல்லவேளை மிக குறைந்த விலையிலான காரை எனது மகள் தேர்வு செய்து இருக்கிறாள். இல்லாவிட்டால் அதற்குரிய பணத்தை என்னால் செலுத்தியிருக்க முடியாது’’ என சிரித்தபடியே கூறினார்.

வவுனியாவில் பிறந்த குழந்தையை புதைத்த தாய் தலைமறைவு!

Sri_Lanka_Vavuniya_Districtவவுனியா கிடாச்சூரி அம்மிவைத்தானில் பிறந்து ஒரேநாளான பிள்ளையை கிடங்கு வெட்டி புதைத்த தாய் தலைமறைவாகியுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ. ஜெயக்கெனடி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், அம்மிவைத்தானில் வசித்து வந்த பெண்ணொருவர் கணவன் வெளிநாட்டில் வாழ்ந்து வரும் நிலையில் இன்று (12.07) குழந்தையொன்றை பிரசவித்திருந்த நிலையில் அதனை உடனேயே கிடங்கு வெட்டி புதைத்துள்ளார்.

இவ்விடயம் அயலவாகளினால் பொலிஸாருக்கும் எனக்கும் அறிவிக்கப்பட்டதன் அடிப்டையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் மேற்படி தாய்க்கு 7 வயதுடைய மகன் உள்ள நிலையில் தற்போது அத் தாய் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் குழந்தை புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இடத்தில் குழந்தையின் சடலத்தை மீட்கும் பணியை மேற்கொண்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.

சிவகார்த்திகேயனின் சொப்பன சுந்தரி!

Siva-Karthikeyan

சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்துக்கு “சொப்பன சுந்தரி” எனத் தலைப்பிட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார்கள்.

“கேடி பில்லா கில்லாடி ரங்கா”, “எதிர்நீச்சல்” படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் காட்டில் அடைமழை பெய்து வருகிறது.

பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி, முன்னணி நடிகைகளும் இவருடன் நடிப்பதற்கு போட்டிபோடுகிறார்களாம்.

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் எஸ்.மதன், ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் தனுஷ், இயக்குநர் லிங்குசாமி ஆகியோர் தனித்தனியாக தயாரிக்கும் படங்கள் சிவகார்த்திகேயனுக்கு வரிசைகட்டி நிற்கின்றன.

நடிகர் தனுஷ் தயாரிக்கும் படத்தை “எதிர்நீச்சல்” படத்தின் இயக்குநர் துரை.செந்தில்குமார் இயக்க உள்ளார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் “மான் கராத்தே”வில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார்.

இயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் படத்தை பூபதி பாண்டியன் இயக்குகிறார். “பட்டத்து யானை” ரிலீஸிற்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்தப் படத்திற்கு “சொப்பன சுந்தரி” என பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி பேசும் டயலாக் “சொப்பன சுந்தரி வச்சிருந்த காரை இப்ப யார் வச்சிருக்கா?”. புகழ்பெற்ற இந்த டயலாக்கை மனதில் வைத்துதான் இந்தப் பெயரை சூட்டியிருக்கிறார்களாம்.

அதேபோல் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” தலைப்பும் “வின்னர்” படத்தில் வடிவேலு சொன்னதுதான். காமெடியாகப் பேசும் சிவகார்த்திகேயனுக்கு காமெடி நடிகர்களின் டயலாக்கில் இருந்து படத்தலைப்பு கிடைப்பது பொருத்தமான விஷயம்தான்.