தொலைபேசியில் அச்சுறுத்தல் வந்தால் உடனடியாக பொலிஸாரை நாடவும்..!

phoneCallதொலைபேசி மூலமாக பலரை அச்சுறுத்தி பணம் பறிப்பது தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசெட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பணம் கேட்டு அச்சுறுத்தும் நபர்கள் பற்றி உடனடியாக அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தில் அல்லது பொலிஸ் முறைப்பாட்டு பிரிவின் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள் உட்பட பல பேரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களை அச்சுறுத்தி பணம் பறிப்பது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு பணம் பறிக்கும் நபர்களுக்கு எதிரான இரகசிய பொலிஸ், பயங்கரவாத தடுப்பு பிரிவு, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு ஆகியன விசாரணைகளை நடத்தி அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் காரணமாக எந்த நபராவது தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அச்சுறுத்தி பணம் கேட்டால், அது பற்றி, பயப்படாது, பொலிஸில் முறைப்பாடு செய்ய வேண்டும்.

அல்லது கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0112 444 480 அல்லது 0112 818 283 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களை கேட்டுள்ளது.

வேந்தர் மூவிஸ் செய்யும் தில்லுமுல்லு!

thillu-mullu1தமிழ் சினிமா மீதான ஆசையால் சுவிஸ் நாட்டில் இருந்து படம் எடுப்பதற்காக சென்னைக்கு வந்தவர் ரவீந்தர் சந்திரசேகர். வந்த வேகத்திலேயே தொடர்ச்சியாக 6 படங்களுக்கு பூஜை போட்டு அதிரடி காட்டினார்.

சினிமா உலகத்தைப் பொறுத்தவரை முதலில் ஒரு படம் எடுப்பார்கள். அது ரிலீஸானதும், ரிசல்ட்டைப் பார்த்துவிட்டு அடுத்த பட வேலைகளில் இறங்குவார்கள். அப்படிச் செய்யாமல், ஒரே நேரத்தில் 6 படங்களுக்கு பூஜை போட்டதைப் பார்த்ததும் கோடம்பாக்கமே கொஞ்சம் மிரண்டுதான் போனது.

அவருக்கு நெருக்கமான சிலர், “பொறுமையா இருங்க. ஒவ்வொரு படமா பண்ணலாம்” என்று அட்வைஸ் செய்திருக்கிறார்கள். அவரோ, “நல்ல கதைகள் வரும்போதே நாம ஓ.கே. பண்ணிடணும். கதைகளை மிஸ் பண்ணிட்டு அப்புறமா ஃபீல் பண்றது வேஸ்ட்”னு சொல்லி, தயாரிப்புக்கு புது இலக்கணமே உருவாக்கியிருக்கிறார்.

அப்படியாப்பட்ட மனிதருக்கு வேந்தர் மூவீஸ் வடிவில் வந்திருக்கிறது சோதனை. அவருடைய தயாரிப்பில் உருவான “நளனும் நந்தினியும்”, “சுட்ட கதை” ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸிற்குத் தயார்நிலையில் உள்ளன.

இரண்டு படங்களையும் வாங்கி வெளியிடுவதாக வாக்குறுதி கொடுத்த வேந்தர் மூவீஸ் நிறுவனம், இதுவரை அதைப்பற்றி வாயே திறக்கவில்லை என்பதுதான் ரவீந்தரின் வேதனைக்குக் காரணம்.

சென்ற மாதம் தன்னுடைய சொந்தத் தயாரிப்பான “தில்லுமுல்லு”
படவேலைகளில் பிஸியாக இருந்த வேந்தர் மூவீஸ், தற்போது “தலைவா” படத்தை வாங்கியிருக்கிறது.

“தலைவா” ஓகஸ்ட்டில் ரிலீஸ் என்பதால், அது தொடர்பான வேலைகளில் பரபரப்பாக இருக்கின்றனர். இதனால் ரவீந்தரின் படம் குறித்து வாய்திறக்கவே இல்லையாம்.

படம் தயாரான சூட்டோடு சூடாக ரிலீஸ் செய்தால்தான் ஓரளவிற்கு ஓடும். இந்த இரண்டு படங்களுமே ரிலீஸிற்குத் தாமதம் ஆவதால் என்ன செய்வதென தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டு இருக்கிறார் ரவீந்தர் சந்திரசேகர்.

ரவீந்தர் சந்திரசேகர் தனது ஃபேஸ்புக் இணையத்தில் கூட “ஏண்டா படம் எடுக்க வந்தோம்.. ” என்று புலம்பி தள்ளி இருக்கிறார்.

செயற்கை கடற்கரையுடன் உலகின் பெரிய கட்டிடம் சீனாவில் திறப்பு!!

china

கட்டிடங்களில் செயற்கை நீரூற்று இருப்பதை பார்த்திருக்க முடியும்; ஆனால், சீனாவில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கட்டிடத்தில் செயற்கையாக கடற்கரையே அமைக்கப்பட்டுள்ளது.

துபாய் விமான நிலையம் இதுவரை உலகிலேயே மிகப்பெரிய கட்டிடமாக இருந்தது. தற்போது துபாயை பின்னுக்கு தள்ளும் வகையில் சீனாவில் மிகப்பெரிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நியூ செஞ்சரி குளோபல் மையம் என்ற இந்த கட்டிட வளாகத்தில் 1.9 கோடி சதுர அடி பரப்பளவிலான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

முழுவதும் எஃகு கம்பிகள், கண்ணாடிகளால் உருவாக்கப்பட்ட கட்டிடத்தில் கடைகள், அலுவலகங்கள், வீடுகள் உள்ளன. சூரிய அஸ்தமன வீடியோ காட்சியை காணும் வகையில் மிகப்பெரிய எல்இடி திரை அமைக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் விட கட்டிடத்தின் நடுவே மிகப்பெரிய செயற்கை கடற்கரையும், கடற்கரை பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

அனுஷ்காவின் வீக்னஸ் அம்பலம்..!

anushkaபடங்களில் கதாநாயகிகள் கரப்பான் பூச்சியைப் பார்த்து பயப்படுவதும், நம் கதாநாயகர்கள் உடனே அதை வீரத்துடன் பிடித்து தூக்கி வீசுவதும் சாதாரணம்.

படத்தை பார்க்கும் இரசிகர்கள் என்னடா சின்ன கரப்பான்பூச்சிக்கு இவ்வளவு பில்டப்ஸா என்று நினைப்பார்கள். அது படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் நடக்கிறது.

அப்படி கரப்பான்பூச்சியை பார்த்தால் பயப்படும் நாயகி வேறு யாருமல்ல நம்ம அனுஷ்கா தான்.

கேரவனில் கரப்பான் பூச்சியை பார்த்துவிட்டால் அம்மணி அலறியடித்துக் கொண்டு ஓடுவாராம்.

என்ன அனுஷ்கா வாள் சண்டை கற்றுக் கொள்கிறீர்கள். ஆக்ஷன் காட்சிகளில் துணிச்சலுடன் நடிக்கிறீர்கள். இப்படி கரப்பான்பூச்சியைப் பார்த்து பயப்படலாமா? என்கிறது அவரை அறிந்த நண்பர்கள் குழாம்.

செல்போன் பாவித்தமைக்காக பெண்ணை கல்லாலேயே அடித்துக் கொலை..!

muslimஊர்த் தடையை மீறி கையடக்கத் தொலைபேசியை வைத்திருந்த்தற்காக இரு குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவரை பாகிஸ்தானில் கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளனர்.

பாகிஸ்தானில், தேரா காஜி கான் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆரிபா என்ற பெண் ஒருவர்,ஊராருக்குத் தெரியாமல் கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி வந்துள்ளார்.

இது ஒருநாள் ஊராருக்கு தெரிய வந்ததால், உடனடியாக பஞ்சாயத்துக் கூட்டப்பட்டது. ஊர் விதிமுறைகளை மீறி கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தியதற்காக, இரு குழந்தைகளுக்கு தாய் என்ற இரக்கம் கூட காட்டாமல், அவரை கல்லால் அடித்துக் கொல்ல உத்தரவிட்டனர் பஞ்சாயத்தார்.

அப்பெண்ணின் மாமா மற்றும் உறவினர்களாலேயே அத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சமீபத்தில் இது சம்பந்தமாக அவரது உறவினர்கள் இருவர் தொலைக்காட்சியில் கொடுத்த பேட்டியின் மூலம் இக்கொடூர தண்டனை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தீர்ப்பை வழங்கிய பஞ்சாயத்தார் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இளவரசன் உடல் இன்று நல்லடக்கம்..!

ilavarasanதர்மபுரி காதல் – கலப்பு திருமண விவகாரத்தில் காதலன் இளவரசனின் மரணம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசும், சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்களும் கூறினார்கள். இதனால் அவரது உடல் இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

முதலில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி தடயவியல்துறை நிபுணர்களான டாக்டர்கள் தண்டர் சீப், சதீஷ்குமார். ரவிக்குமார் ஆகிய 3 பேர் அவரது உடலை பரிசோதனை செய்தனர்.

பின்னர் சென்னை தனியார் கல்லூரி தடயவியல் துறை நிபுணர்கள் தங்கராஜ், சம்பத்குமார் ஆகிய 2 பேர் இளவரசன் உடலை ஆய்வு செய்தனர்.

நேற்று டெல்லியில் இருந்து வந்த அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக (எய்ம்ஸ்) மருத்துவமனையில் பணியாற்றும் தடயவியல் துறை மருத்துவம் மற்றும் விஷ முறிவு சிகிச்சை பிரிவு துறையின் தலைமை பேராசிரியர் டாக்டர் டி.என்.பரத்வாஜ், கூடுதல் பேராசிரியர்கள் டாக்டர் சுதீர்குமார் குப்தா , டாக்டர் மில்லோ டாபின் ஆகியோர் நேற்று மாலை இளவரசன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்தனர்.

அப்போது இளவரசனின் பெற்றோர் இளங்கோ–கிருஷ்ணவேணி ,ஊர் கவுண்டர் சின்னசாமி,விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி நந்தன் உள்ளிட்ட 5பேர் மட்டும் உடன் இருந்தனர்.

பிரேத பரிசோதனை முடிந்ததும் மாலை 5–30 மணிக்கு இளவரசன் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் இளவரசன் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இளவரசன் உடல் அரசின் இலவச ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது சொந்த ஊரான நத்தம் காலனிக்கு எடுத்துச் சென்றனர்.

அங்கு வீட்டு முன்பு சிறிய பந்தல் அமைக்கப்பட்டு உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

உறவினர்கள், நண்பர்கள் ,நத்தம் காலனி மக்கள், இளவரசனுடன் படித்த பள்ளி–கல்லூரி மாணவ–மாணவிகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இன்று மாலை இளவரசனின் உடல் அடக்கம் நடக்கிறது. இதற்காக நாயக்கன் கொட்டாயில் இருந்து நத்தம் காலனிக்கு வரும் வழியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு பின்புறம் 30 சென்ட் நிலம் வாங்கப்பட்டு உள்ளது.

இந்த இடத்தில்தான் இளவரசன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதற்காக குழி தோண்டப்பட்டு சிமிண்டால் கல்லறை வடிவில் கட்டப்பட்டு உள்ளது.

இளவரசன் உடல் அடக்கம் நடைபெறுவதை யொட்டி நத்தம் காலனியில் எஸ்.பிக்கள் அஸ்ரா கார்க் (தர்மபுரி), சக்திவேல் ( கிருஷ்ணகிரி) ஆகியோர் தலைமையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

அந்த காலனிக்கு வர வழி உள்ள இரண்டு பாதையிலும் பொலிசார் சோதனைச் சாவடிகள் அமைத்து உள்ளனர். தர்மபுரியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் பாதையிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தோல்வியைத் தவிர்க்க போராடி வரும் அவுஸ்திரேலியா..!

ashesஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தவிர்க்க அவுஸ்திரேலிய அணி போராடி வருகிறது.

இங்கிலாந்தின் நாட்டிங்காமில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 215 ஓட்டங்களை மாத்திரம் எடுத்த நிலையில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலியா 64.5 ஓவர்களில் 280 ஓட்டங்களை மட்டுமேபெற்றது.

முதல் இன்னிங்ஸில் 65 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 3-வது நாளான வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் 133 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 326 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இயான் பெல் 95, ஸ்டூவர்ட் பிராட் 47 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தநிலையில் 4-வது நாளான நேற்று (சனிக்கிழமை) தொடர்ந்து ஆடிய அந்த அணியில், இயான் பெல் 237 பந்துகளில் சதமடித்தார். இது டெஸ்ட் போட்டியில் பெல் அடித்த 18-வது சதமாகும்.

ஸ்டூவர்ட் பிராட் 65 ஓட்டங்களுடன்ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து இயான் பெல்லும் (109)  ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கிரீம் ஸ்வான் 9 ஓட்டங்களுடனும், ஆண்டர்சன் ஓட்டங்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, இங்கிலாந்தின் 2-வது இன்னிங்ஸ் 375 ஓட்டங்களில் முடிவுக்கு வந்தது.

அவுஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க், பீட்டர் சிடில் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் பட்டின்சன், ஆஷ்டன் அகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்பிறகு 311 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸி. அணிக்கு வாட்சன்-கிறிஸ் ரோஜர்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 24.1 ஓவர்களில் 84 ஓட்டங்களை சேர்த்து சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது.

வாட்சன் 74 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்களை எடுத்தார். இதையடுத்து எட் கோவன் களம்புகுந்தார். மறுமுனையில் கிறிஸ் ரோஜர்ஸ், டெஸ்ட் போட்டியில் தனது முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார்.

மறுமுனையில் 43 பந்துகளைச் சந்தித்த கோவன் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அந்த அணி 124 ஓட்டங்களை எட்டியபோது கிறிஸ் ரோஜர்ஸ் 52 ஓட்டங்களில் வெளியேறினார்.

இதன்பிறகு வந்த தலைவர் கிளார்க் 23 ஓட்டங்களிலும், ஸ்மித் 17 ஓட்டங்களிலும், பில் ஹியூஸ் ஓட்டங்கள் எதுவுமின்றியும் ஆட்டமிழந்தனர்.

இதன்படி 4-வது நாளான சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலியா 71 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ஓட்டங்களை எடுத்துள்ளது. பிராட் ஹாடின் (11), ஆஷ்டன் அகர் (1) களத்தில் உள்ளனர்.

இந்தநிலையில் ஆஸி. அணி வெற்றிபெற வேண்டுமாயின் 4 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்க இன்னும் 137 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இன்றைய ஐந்தாவதும் இறுதியுமான ஆட்டத்தை தொடரவுள்ளது.

உண்மையான கிரிமினல் வில்லனுடன் மோதும் ஜெயம் ரவி..!

nathanjones_jeyamravi

கொலிவுட் படத்தில் நடிக்க உலக புகழ் பெற்ற மல்யுத்த வீரர்களில் ஒருவரான ‘நேதன் ஜோன்ஸ்’ சென்னை வந்துள்ளார்.

பூலோகம் பட நாயகன் ஜெயம் ரவியுடன் குத்து சண்டை போட வந்த அவரை படத்தயாரிப்பாளர் ஒஸ்கார் ரவிச்சந்திரன் வரவேற்றுள்ளார்.

இப்படத்தில் நேதன் ஸ்டீவென் ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தில் இந்தியாவில் எடுக்கப்படும் ‘பூலோகம்’ படத்தில் நாயகன் ஜெயம் ரவியுடன் மோதும் முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

அவருடன் ‘லார்நெல் ச்டோக்கால்’ என்ற ஹாலிவுட் முதல் தர சண்டை இயக்குனர் தன் குழுவினருடன் வந்துள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

மிகுந்த சிரமத்துக்கிடையே அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர தயாரிப்பாளர் ரவிச்சந்திரன், இயக்குனர் கல்யாண் ஆகியோருடன் ஒருங்கிணைத்து பணியாற்றியுள்ளார் ஹாலிவுட் தமிழர் ஜாக் ராஜசேகர்.

ஒரு மாதம் வரை நடக்க உள்ள இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புக்காக ஏராளமான பொருள் செலவில் பிரசாத் படப்பிடிப்பு தளத்தில் பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

திரை உலகில் இந்த படப்பிடிப்பு ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதாகவும் படக்குழு கூறுகிறது.

வடசென்னையில் வசிக்கும் ஒரு குத்துச்சண்டை வீரனின் கதை தான் இந்தப் படம். இதனால் ‘ஜெயம்’ ரவியுடன் மோதுவதற்காக 7 அடி உயரம், 150 கிலோ எடையுள்ள ஹாலிவுட் நடிகர் நேதன் பிரீன்டன் ஜோன்ஸ் சென்னை வந்துள்ளார்.

இவர் ‘டிராய்’, ஜாக்கிசானுடன் ‘போலீஸ் ஸ்டோரி 4’, டோனி ஜாவுடன் ‘தூம் யூம் கோங்’, ஜெட்லியுடன் ‘பியர்லெஸ்’ ஆகிய படங்கள் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர்.

‘பூலோகம்’ படத்தில் ‘ஜெயம்’ ரவியுடன் மோதும் ஒரு சண்டைக் காட்சியில் நடிப்பதற்காக மட்டும் அவருக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளது.

இருவரும் மோதுவது போல் நடிக்கும் குத்துச்சண்டைப் போட்டியை சென்னையில் படமாக்க இருக்கிறார்கள். இதற்காக, பிரசாத் ஸ்டுடியோவில் இரண்டு ஏக்கர் நில பரப்பளவில், 3 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமான உள் விளையாட்டு அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்காக கலை இயக்குனர் மோகன் தலைமையில், 140 தொழிலாளர்கள் இரவு பகலாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்த சண்டைக் காட்சியை ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் லார்னல் ஸ்டோவல் படமாக்க இருக்கிறார்.

மேலும், 1985-87களில் வழிப்பறிகளில் ஈடுபட்ட நேதன் ஜோன்ஸ் 7 வருடங்களுக்கு மேலாக கடுங்காவல் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பது தேசப்பற்று ஆகாது – கமல்!!

kamal

நடிகர் கமலஹாசன் மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தேசப்பற்று படங்களில் நடிக்க முக்கியத்துவம் அளிக்கிறீர்களே?

தேசப்பற்று என்ற வார்த்தையை சரியாக பயன்படுத்தா விட்டால் ஆபத்தாகி விடும். கிரிக்கெட் மீதான ஈடுபாடு தேசப்பற்று ஆகாது. இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பது தேசப்பற்று ஆகாது.

நான் காந்தியின் ரசிகன். ஆனால் அவரை மகாத்மா என்று அழைத்து தலைக்கு பின்னால் ஒளிவட்டம் இருப்பது போல் சித்தரிப்பதை விரும்பவில்லை. சராசரி மனிதராக இருந்து சாதித்தவர் காந்தி. சாமியாராக, முனிவராக பார்க்க கூடாது சாதாரண மனிதராக இருந்து அர்ப்பணிப்பு உணர்வோடு தேசத்துக்காக பாடுபட்டார். ஹேராம் படத்தை அதற்காகத்தான் எடுத்தேன். நல்ல மனிதராக இருந்து நிறைய சாதித்தவர் அவர்.

விஸ்வரூபம் படப்பிடிப்பை கஷ்டமான லொக்கேஷன்களில் நடத்தி உள்ளீர்களே?

படப்பிடிப்பு லொக்கேஷன்களுக்காக நிறைய ஆராய்ச்சி செய்தோம். ஆப்கானிஸ்தானில் படப்பிடிப்பை நடத்த முயன்றோம். ஆனால் சங்கடங்கள் இருந்ததால் தனிப்பட்ட முறையில் என்னால் போக முடியவில்லை. ஆப்கானிஸ்தான் ஜலாலா பாத்தின் 4 ஆயிரம் புகைப்படங்களை பார்த்தேன் அதன் பிறகு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

விஸ்வரூபம் 2 படம் பற்றி?

விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது முற்பகுதியாகவோ விஸ்வரூபம் இரண்டாம் பாகம் எடுக்கப்படவில்லை படம் பார்க்கும் போது விஸ்வரூபம் பட உணர்வுகள் இருக்கும்.

இந்தி படம் பண்ணுவீர்களா?

சில கதைகள் இருக்கின்றன. தயாரிப்பாளர் தேடுகிறேன்.

சுருதி ஹாசனுடன் இணைந்து நடிப்பீர்களா?

சுருதி ஹாசன் பிசியாக நடித்துக் கொண்டு இருப்பது பெருமையாக இருக்கிறது. நேரம் அமைந்தால் இணைந்து நடிப்போம்.

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் நாளை அறிவிப்பு..!

TNA_SLMC_CIவடமாகாண சபைத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு நாளை விடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்று நடைபெறவிருந்த அக் கட்சியின் விசேட கூட்டம் நாளைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

வடமாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாளர் பிரதம நீதியரசர் விக்னேஸ்வரன் ஆகிய இருவரது பெயர்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனே முதலமைச்சர் வேட்பாளர் என குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜாவையே அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுகிறது.

இதேவேளை எதிர்வரும் செப்டெம்பரில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல் தொடர்பான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட கூட்டம் ஒன்று நாளை  இடம்பெறவுள்ளது.

நாளை இரவு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைச் செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இக் கூட்டத்தின்போது, எதிர்வரும் செப்டெம்பரில் நடைபெறவுள்ள வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

இத் தேர்தலின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயர்தர பரீட்சை அனுமதிப்பத்திரம் விநியோகம் ஆரம்பம்..!

examஇம்முறை இடம்பெறவுள்ள கல்விப் பொது தராதர உயர் தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த 292,706 விண்ணப்பதரர்களுக்கான பரீட்சை அனுமதிப் பத்திரம் தபாலிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை பரீட்சாத்திகளுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரம் பாடசாலை அதிபர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தனியார் பரீட்சாத்திகளுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரம் அவர்களது தபால் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை பரீட்சாத்திகள் அதிபர்கள் கூடாக பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

பரீட்சைகள் நடைபெறும் காலத்தில் பரீட்சை அனுமதிப்பத்திரம் இல்லாத மாணவர்கள் பரீட்சை மண்டபத்திற்கு எந்தவொரு காரணத்திற்காகவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் உடனடியாக அறியத்தருமாறு பரீட்சாத்திகளிடம் அத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வருடத்திற்கான உயர் தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதியிலிருந்து 31ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

ஒரு வயது குழந்தையை பலாத்காரம் செய்த கொடூரம்!

rape

உத்தர பிரதேச மாநிலத்தில் 1 வயதான குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதே மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியை குற்றங்கள் மற்றும் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கருதப்படுகிறது. இந்நிலையில் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் 1 வயது பெண் குழந்தையை ஒருவர் கற்பழித்த கொடூரம் நடந்துள்ளது.

அந்த குழந்தையை கற்பழித்தவரை பொலிசார் கைது செய்ததாக தெரிவித்தனர். இக்கொடூரதிற்கு ஆளான குழந்தையின் உடல்நலம் மோசமானதால் உயர் சிகிச்சைக்காக அக்குழந்தையை மீட்டு அழைத்து சென்றுள்ளனர்.

பிரசவ வலி வந்தாலும் கத்தக்கூடாது மீறினால் அபராதம்!!

pain

சிம்பாப்வேயில் பிரசவ வலியால் கத்தும் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் மூலம் அம்பலமாகியுள்ளது.

உலக நாடுகளில் நிலவிவரும் லஞ்சம் ஊழல் தொடர்பான தகவல்களை டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு ஆய்வு செய்து சமீபத்தில் முடிவுகளை அறிவித்தது.

ஆப்பிரிக்க நாடுகளில் லஞ்சம் பெருத்து வருவதாக அந்த ஆய்வறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. தனிநபர் வருமானத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சிம்பாப்வேயில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. வேதனைக்குரிய விஷயமாக பிரசவ வலியால் கத்தினால் கூட லஞ்சம் தரவேண்டும் என்பது அங்கு எழுதப்படாத விதி.

பொலிஸாருக்கு அடுத்தபடியாக லஞ்ச ஊழல் மலிந்த துறையாக 68 சதவீத சிம்பாப்வே மக்கள் மருத்துவ துறையை குறிப்பிடுகின்றனர்.

தென்னாபிரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய வேற்றுக்கிரகவாசி!!

தென்னாபிரிக்காவின் ஹேப் மாகாணத்தின் புறநகர்ப்பகுதி ஒன்றில் காணப்பட்ட வேற்றுக்கிரகவாசியின் தோற்றத்தை ஒத்த உடலத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எனினும் பின்னர் Magdalena Braum எனப்படும் மிருக வைத்தியரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி அது பபூன் எனப்படும் உயிரினத்தின் இறந்த உடலம் என கண்டறியப்பட்டது.

1

2 3

குழந்தையை 90 முறை கத்திரியால் குத்திய தாய்!!! (இந்த கொடுமையை கொஞ்சம் பாருங்கள்)

baby1

பால் கொடுக்கும் வேளையில் தனது மார்பினைக் கடித்தமைக்காக தாயொருவர் அவரது குழந்தையை 90 தடவைக்கும் அதிகமாக கத்திரியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் சூசவு பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாயின் தாக்குதலுக்கு இலக்கான குழந்தையின் வயது 8 மாதங்கள் எனவும் தெய்வாதீனமாக அக்குழந்தை உயிர்பிழைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

baby2

தமிழில் நடிக்காதது ஏன்? பாவனா விளக்கம்..!

bhavanaதமிழ் படங்களில் நடிக்காதது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகை பாவனா.

ஜெயம் கொண்டான், சித்திரம் பேசுதடி, தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் பாவனா.

அதன் பின் அவர் காணாமல் போனார். இது குறித்து பாவனா கூறுகையில், சமீப காலமாக தமிழ், கன்னடம், தெலுங்கு படங்களில் நடிக்காமல் மலையாளத்தில் மட்டும் நடிப்பது ஏன் என்று கேட்கிறார்கள்.

மலையாளத்தில் நல்ல கதைகளில் நடித்து கொண்டிருப்பதால், கன்னட படங்களில் நடிக்க முடிவதில்லை.

இருப்பினும் கன்னட படங்களின் கதைகளை கேட்டு வருகிறேன், நல்ல கதையாக அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்.

ஏதோ ஒரு கதையில் நடித்துவிட்டு பின்னர் வருந்துவதைவிட நல்ல கதைகளில் நடிக்க விரும்புவதால் அதற்காக காத்திருந்து நடிக்கிறேன்.

சமீப காலங்களில் தமிழ், தெலுங்கு படங்களில் என்னை பார்த்திருக்க முடியாது. அங்கு அதிக கவர்ச்சியாக நடிக்க கேட்கிறார்கள், அப்படி நடிக்க விரும்பாததால் தவிர்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.