காணாமல்போனோரின் உறவினர்களை ஒப்படைக்குமாறு வவுனியாவில் போராட்டம்..!

vavuniyaகாணாமல்போனோரின் உறவினர்கள் இன்று வவுனியா நீதிமன்ற வளாகத்தின் முன்னால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இறுதி யுத்தத்தின்போது காணாமல்போன உறவுகளின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று வவுனியா மேல் நீதி மன்றத்தில் எடுத்துக்ககொள்ளப்பட்டபோது காணாமல் போனோரின் உறவினர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல் போனார் ஆறு பேரின் உறவினர்கள் வவுனியா மேல் நீதி மன்றில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இந் நிலையில் இம் மனு மீதான விசாரணை இன்று மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அரச தரப்பில் இது தொடர்பான அறிக்கை முழுமையாக சமர்ப்பிக்கப்பட்மையால் இவ் வழக்கினை ஆகஸ்ட் 26ம் திகதிக்கு ஒத்தி வைப்பதாக வவுனியா மேல் நீதிமன்றம் தெரிவித்தது.

இவ் வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்பாக சட்டத்தரணி கே.எஸ் ரட்ணவேலும், வடபகுதி காணாமல் போனோர் சங்க பிரதிநிதிகளும், மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டவரின் உறவினர்களும் மன்றில் ஆயராகியிருந்தனர்.

இதேவேளை, காணாமல் போனோர் தொடர்பாக அரசு முறையான பதிலை வழங்க கோரி வவுனியா பிரதான தபாலகத்திற்கு முன்பாக அமைதியான பேரணி ஒன்று ஆரம்பமாகி நீதிமன்றம் வரை சென்றிருந்தது.

நீதிமன்றத்தின் முன்னால் சில மணி நேரம் அமைதியான முறையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் பாதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் போராட்டம் நிறைவடைந்தீருந்தது.

ஒரே நாயுடன் போதைப்பொருளை கண்டுபிடித்து கலக்கும் நபர்..!

Dogஜேர்மனியில் நாயுடன் இணைந்து போதை மருந்து செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை கண்டுபிடித்து வருகின்றார் ரெய்னர் ரூதர் (Reiner Reuther).

ரெனிர் ரூதர் (Reiner Reuther) மற்றும் அவரது நாய் தோர் (Thor) ஆகிய இருவரும் இணைந்து பெற்றோர்களை மறந்து போதை மருந்து பழக்கங்களுக்கு அடிமையாவதில் இருந்து குழந்தைகளை தடுக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

25 ஆண்டுகளாக ஹோட்டல் உரிமையாளராக இருந்த இவர் விலங்குகளுடன் பணியாற்ற விரும்பி அமெரிக்க பொலிஸ் அகாடமியில் நாய் கையாளுதல் பயிற்சியில் ஈடுபட்டார்.

அங்கு பயிற்சியை முடித்துவிட்டு ஜேர்மன் வந்த இவர் குழந்தைகள் போதை காப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் அவரது பணியில் சந்தித்த அனுபவங்கள் குறித்து கூறுகையில், நான் பல்வேறான அனுபவங்களை இந்த பணியில் சந்தித்துள்ளேன்.

அவற்றில் ஒரு அனுபவமாக தனது மகள் போதையில் ஈடுபடுவதாக சந்தேகித்த பெற்றோர்கள் இவர்கள் மூலமாக வீட்டில் சோதனை செய்ததில் கழிவுகளை பயன்படுத்தும் இடத்தில் கோகைன் போதை பொருளை மறைத்து வைத்து பயன்படுத்துவைதை கண்டுபிடித்துள்ளனர்.

மற்றுமொரு அனுபவமாக பெற்றோரே தன்னுடைய மகன் தனது இளமைப் பருவத்தை புறக்கணித்து விட்டு தவறான வழியில் செல்கிறான் என்று பொலிசில் புகார் கொடுத்துள்ளனர் என்றும் தனது அனுபவங்களை கூறியுள்ளார்.

மேலும், தனியார் நாய் கையாளர்கள் இந்த மாதிரியான செயல்களில் பொறுப்புடன் ஈடுபடுவதில்லை. ஆனாலும், தனது சேவைகளை திறம்பட செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெற்றோர்கள் அனைவரும் மனநல ஆலோசனை பெறுவது என்பது முக்கியமாகும். நான் இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கும் பெற்றோர்களுக்கு உதவி செய்ய விரும்புகின்றேன்.

ஆனால் அவர்கள் தங்கள் குழுந்தைகள் குறித்த விடயங்களை தெரிவிப்பது இந்த பிரச்சனைக்கு உதவியாக இருக்கும்.

மேலும், போதை பிரச்சனையானது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் பரவலாக பேசப்படுகின்ற விடயம் என்றும் ஆனால் ஜேர்மனியில் இதனை ஒரு மறைமுக பிரச்சனையாக கையாளுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இவர் ஒரு தேடலுக்கு 95 யூரோ பணம் வாங்குகின்றார். மேலும் இந்த பணி குறித்து கூறுகையில், தனியாக வேலை பார்க்கும் நாங்கள் எங்களது தொழிலை மேலும் வளரச் செய்ய விரும்புகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

கார் மோதி சிறுமி பலி – நகைச்சுவை நடிகர் கைது!!

balaமதுரை அருகே கார் மோதி, சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இளம் நகைச்சுவை நடிகர் பாலா கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை அருகே உள்ள பரவையை சேர்ந்த ரங்கநாதன் மகன் பாலா என்ற பாலசரவணன். “குட்டிப்புலி” படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்தவர்.

இவர் இப்போது “பண்ணாயாரும் பத்மினியும்” என்ற படத்தில் நடித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை தனது காரில் அழகர்கோவில் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது செட்டியார்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற உமாமகேஸ்வரி என்ற 4 வயது சிறுமி மீது கார் மோதியது.
இதில் படுகாயமடைந்த உமாமகேஸ்வரி மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டுவரும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து மேலவளவு பொலிஸார் வழக்குப் பதிவு செய்து நடிகர் பாலசரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அப்ரிடி அதிரடியால் பாகிஸ்தான் வெற்றி..!

afridiபாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு 20ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.

இரு அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி கயானாவில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி  50  ஓவரில் 9  விக்கெட் இழப்புக்கு 224 ஓட்டங்கள் எடுத்தது.

அப்ரிடியின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர்  55  பந்தில்  76 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரி,  5 சிக்சர் அடங்கும்.

கேப்டன் மிஸ்பா–உல்–ஹக்52 ஓட்டங்கள்   எடுத்தார். ஹோல்டர் 4 விக்கெட்டும், கேமர் ரோச், பிராவோ தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

225 ஓட்டங்கள்  இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடியது. பேட்டிங்கில் முத்திரை பதித்த அப்ரிடி பந்து வீச்சுலும் சாதித்தார். அவரது அபாரமான பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகள் சரிந்தன.

வெஸ்ட் இண்டீஸ் அணி 41 ஓவரில்98 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் அணி 126 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அப்ரிடி 9 ஓவர் வீசி 12 ஓட்டங்கள்  கொடுத்து7 விக்கெட் கைப்பற்றினார். முகமது இர்பானுக்கு 2 விக்கெட் கிடைத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் சாமுவேல்ஸ் அதிகபட்சமாக25 ஓட்டங்கள்  எடுத்தார். கிறிஸ் கெய்ல் உள்பட 7 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர்.

76 ஓட்டங்கள்  குவித்து, 7 விக்கெட் வீழ்த்திய அப்ரிடி ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார்.

இந்த வெற்றி மூலம் 5 போட்டிக் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1–0என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. 2–வது ஒருநாள் போட்டி கயானாவில் நாளை நடைபெறுகிறது.

சீமான் ரகசியத் திருமணம்??

seeman

பிரபல இயக்குநரும், நடிகரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான‌ சீமான் ரகசியத் திருமணம் செய்துள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளன‌.

சீமானின் திருமணம் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே பல வதந்திகள் கிளம்பின. ஈழத்தைச் சேர்ந்த விதவைப் பெண் போராளி ஒருவரை திருமணம் செய்யப்போவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இது பொய் என்று பின்னர் உறுதியானது.

ஆனால் தற்போது, முன்னாள் சபாநாயகர், மறைந்த காளிமுத்துவின் மகள் கயல்விழியைதான் சீமான் திருமணம் செய்துள்ளாராம்.

இவர்கள் இருவரது திருமணமும் ஏற்கனவே சீமான் கூறிய படி, சென்ற ஆண்டு தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன், மதிவதனி திருமணம் நடந்த தினம் அக்டோபர் 1ம் திகதி நடந்ததாக சொல்லப்படுகிறது.

இன்னமும் சீமான் திருமணம் முறைப்படி அறிவிக்கப்படவில்லை. நெருக்கமான சிலரை தவிர வேறு யாருக்கும் தெரியாது என்கிறார்கள்.

இதை ஏன் ரகசியமாக வைத்திருக்க வேண்டும்? எல்லோரும் அறிய சொல்லிவிட வேண்டியது தானே என்று அவரின் நண்பர்கள் வலியுறுத்தி வந்ததை அடுத்து வரும் ஆகஸ்ட் 27ஆம் திகதி தனது திருமண வரவேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்ய ஏற்பாடு செய்ய போகிறாராம்.

இது பற்றிய அறிவிப்பை விரைவில் வெளிடுவார் என்றும் சொல்கிறார்கள்.

இந்திய வெள்ளம்: காணாமல்போன 5700 பேரும் இறந்துவிட்டனர்!!

utarkand

இந்தியாவில் உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட பெரும் மழைவௌ்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி காணாமல்போயிருந்த 5700க்கும் அதிகமானவர்கள் இறந்துவிட்டதாகவே கருதப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பணஉதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு மரணச்சான்றிதழ்களை வழங்கும் பணிகளை துரிதப்படுத்துவதன்மூலம் இழப்பீடு வழங்கும் வேலைகளை வேகமாக முன்னெடுக்க முடியும் என்று உத்தாராகண்ட் முதல்வர் விஜய் பாஹுகுணா தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் 5 லட்சம் ரூபா படி அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. முன்னதாக, 600 பேர் வரையிலேயே இந்த இயற்கை அழிவில் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

ஹிமாலய மலையை ஒட்டியிருந்த 4,000க்கும் அதிகமான கிராமங்களைப் பாதித்த மழைவௌ்ளத்திலும் மண்சரிவுகளிலும் சிக்கியிருந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மீட்புப் பணியாளர்களால் காப்பாற்றப்பட்டனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக எத்தனை என்பது இன்னும் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-BBC தமிழ்-

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் அறிவிப்பு..!

tnaவடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

பம்பலப்பிட்டியிலுள்ள கூட்டமைப்பின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீசாந்துடன் நடிக்க மறுத்த அசின்..!

asinபாலச்சந்திர குமார் இயக்க பிக் பிக்சர் எனும் மலையாளப் படத்தில் நாயகனாக சர்ச்சைக்குரிய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் நடிக்கிறார்.

ஊழல் புகாரில் கைதாகி, தற்போது பிணையில் வெளிவந்துள்ள இவர் தான் இழந்த பெயரை மீண்டும் பெற சினிமாவில் களமிறங்கியுள்ளார்.

இப்படத்தில் ஸ்ரீசாந்த் ஜோடியாக மலையாளத்திலிருந்து இந்தி திரையுலகிற்கு சென்ற அசினை கேட்டுள்ளனர்.

ஆனால் இதற்கு அசின் மறுத்துவிட்டதால், அவருக்குப் பதிலாக வேறு பிரபலமான பாலிவுட் நடிகையை ஒப்பந்தம் செய்வதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஸ்ரீசாந்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

சுரேஷ் கோபி உள்ளிட்ட சில முக்கிய நடிகர்களிடமும் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயனின் பாடல் (வீடியோ இணைப்பு)..!

siva

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடியுள்ள பாடல் யூடியூப்பில் செம ஹிட் அடித்துள்ளது.

பெண்கள், குழந்தைகள், இதயநோய் உள்ளவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க என்று எச்சரிக்கையோடு பின்னணி பாட ஆரம்பித்துள்ளார் நடிகரும், புதிய பாடகருமான சிவகார்த்திக்கேயன்.

“ஊரைக் காக்க உண்டான சங்கம்…

உயிரைக் கொடுக்க உருவான சங்கம் இல்லை…இது இல்லை….

நாங்க எல்லோரும் விளையாட்டுப் பிள்ளை”…..

இதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்காக சிவகார்த்திக்கேயன் பாடியுள்ள பாடல்.

யூடியூப்பில் இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

வவுனியாவில் ஆய்வுகூடங்களுக்கான அடிக்கல் நாட்டிவைப்பு..!

Rishatவவுனியாவிலுள்ள 3  பாடசாலைகளில் மஹிந்தோதயம் திட்டத்தின் மூலம் ஆய்வுகூடங்கள் அமைப்பதற்கான அடிக்கல்லு நாட்டும் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, பூவரசன்குளம் மகாவித்தியாலயம், வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட புதுக்குளம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலேயே ஆய்வுகூடம் அமைப்பதற்கான அடிக்கல்கள் நாட்டப்பட்டன.

இந்நிகழ்வுகளில் கைத்தொழில் முதலீட்டு அமைச்சர் ரிசாட் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டிவைத்தார்.

இந்நிகழ்வுகளில் வடமாகாண ஆளுநரின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் எம்.முகைதீன், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி செ.அன்ரன் சோமராஜா, வவுனியா நகரசபை உறுப்பினர் அப்துல் பாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து இன்று இறுதி தீர்மானம்..!

tnaவடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை நியமிப்பதற்கு அக் கட்சியினர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் பல சுற்று பேச்சுக்கள் இடம்பெற்ற போதும் தீர்மானம் ஒன்றை எட்டமுடியாமையின் காரணமாக நேற்று முன்தினம் இடம்பெறவிருந்த கூட்டம் இன்றுவரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் அக் கட்சியின் விசேட கூட்டம் பம்பலப்பிட்டியிலுள்ள கூட்டமைப்பின் தலைமையகத்தில் இன்று இடம்பெறுகிறது.

வடமாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் விக்னேஸ்வரன் ஆகிய இருவரது பெயர்களும் முன்வைக்கப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் முன்னாள் பிரதம நீதியரசர் விக்னேஸ்வரனே முதலமைச்சர் வேட்பாளர் என குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜாவையே அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனது தீவிரமான முயற்சியின் விளைவாக வடக்கின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

எனினும் இது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

ஆஷஸ்: 14 ஓட்டங்களால் ஆஸி.யை வீழ்த்தியது இங்கிலாந்து..!

endlandஅவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

இங்கிலாந்தின் டிரென்ட்பிரிட்ஜில் கடந்த 10-ம் திகதி ஆரம்பமான, இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

சிடிலின் அபாரமான பந்து வீச்சால் தடுமாறிய இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறினர்.

இறுதியாக இங்கிலாந்து 215 ஓட்டங்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது.

இங்கிலாந்து சார்பில் சற்று நிதானமாக ஆடிய டிராட், அதிகபட்சமாக 48 ஓட்டங்களை எடுத்தார்.

சிறப்பாக பந்து வீசிய ஆஸி. வீரர் சிடில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த ஆஸி. வீரர்களை பதம் பார்த்த இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள், அந்த அணியை 280 ஓட்டங்களுக்குள் மடக்கினர்.

அவுஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக அறிமுக வீரர் அகர் 98 ஓட்டங்களை எடுத்தார். பந்து வீச்சில் இங்கிலாந்து வீரர் ஆன்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

65 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 375 ஓட்டங்களை குவித்தது. பெல் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஸ்டார்க் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இதன்படி இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியாவை விட 310 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது.

இதனால் 311 ஓட்டங்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா களம் இறங்கியது.

இந்த போட்டியின் நேற்றைய 5-வது மற்றும் இறுதியுமான ஆட்டம் தொடங்கிய போது, 4 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்க அவுஸ்ரேலியா வெற்றி பெற வேண்டுமாயின் 137 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அகர் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அடுத்து வந்த ஸ்டார்க் 1 ஓட்டத்துடனும், சிடில் 11 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.

அப்போது, அவுஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 231 ஓட்டங்களை எடுத்திருந்தது.

10-வது விக்கெட்டுக்கு ஹடின் உடன் பேட்டின்சன் ஜோடி சேர்ந்தார். அப்போது அவுஸ்திரேலியா அணிக்கு 80 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் ஹடின் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அத்துடன் அணியை வெற்றிநோக்கி அழைத்து சென்றுகொண்டிருந்தார். அவருக்கு பேட்டின்சன் உறுதுணையாக இருந்தார்.

இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மதிய உணவு இடைவேளை வரை அவுஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்களை எடுத்திருந்தது. வெற்றிக்கு 20 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டது.

பின்னர் போட்டி தொடங்கிய போது, ஹடின் 71 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கடைசி வரை நின்ற அவரால் அணியை வெற்றி பெற செய்ய முடியவில்லை.

இதனால் பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் அன்டர்சன் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்தப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக இங்கிலாந்தின் ஆன்டர்சன் தெரிவு செய்யப்பட்டார்.

மூழ்கிய கப்பலில் இருந்த இலங்கையர்களை காணவில்லை..!

somaliaசோமாலியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடற்கொள்ளையர்களின் பிடியிலிருந்தபோது, கடந்தவாரம் கடலில் மூழ்கிய கப்பலில் இருந்த 11 கப்பல் பணியாளர்கள் உயிர்தப்பியுள்ளதாக அந்தப் பிராந்திய கடற்பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடற்கொள்ளையர்களின் பிடியிலுள்ள இன்னொரு மீன்பிடி கப்பலுக்கு இவர்கள் கடைசிநேரத்தில் மாற்றப்பட்டுள்ளதாக கிழக்கு ஆபிரிக்க கடற்பிராந்திய பாதுகாப்புக்கான செயலகத்தின் தலைவர் ஜோன் ஸ்டீட் தெரிவித்தார்.

கப்பலில் இருந்துள்ள 4 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை என்று கூறிய ஜோன் ஸ்டீட், காணாமல்போன 4 பேருமே இலங்கையர்கள் என்றும் கூறினார்.

எல்பேடோ என்ற இந்தக் கப்பல் மூழ்கியபோது அதிலிருந்து வெளிப்பட்ட அவசர உதவி உயிர்காப்பு படகுகள் பல நீண்டதூரம் கடந்து கரையொதுங்கியுள்ளதை ஐரோப்பிய கடற்படையினர் உறுதிசெய்துள்ளனர்.

அந்தப் படகுகள் மூலம் கடற்கொள்ளையர்கள் அல்லது கப்பல் பணியாளர்கள் உயிர்தப்பியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மூழ்கிய எல்படோ வர்த்தகக் கப்பலில் இருந்து 11 பணியாளர்கள் நாய்ஹம்-3 என்ற மீன்பிடிக் கப்பலுக்கு மாற்றப்பட்டநிலையில், ஏற்கனவே 29 பேருடன் பிடித்து வைக்கப்பட்டிருந்த நாய்ஹம்-3 கப்பலும் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக ஜோன் ஸ்டீட் தெரிவித்தார்.

இவர்கள் அனைவரையும் விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகவும், பணையம் வைக்கப்பட்டுள்ள சில கப்பல் பணியாளர்களை குடும்பத்தினருடன் பேச கொள்ளையர்கள் அனுமதித்துள்ளதாகவும் கிழக்கு ஆபிரிக்க கடற்பிராந்திய பாதுகாப்புக்கான செயலகத்தின் தலைவர் மேலும் கூறினார்.

(BBC)

யார் இந்த பேஸ்புக் சிரிப்பு மனிதர்?

1

பேஸ்புக் போன்ற சமூக வலைத்­த­ளங்­களை பயன்­ப­டுத்தும் பெரும்­பா­லா­னோ­ருக்கு அந்த சிரிப்பு மனி­தரின் ஓவியம் நன்கு அறி­மு­க­மா­ன­தாகும். மற்­ற­வர்­களின் தகவல், கருத்­து­களை வேடிக்­கை­யாக மறு­த­லிக்கும் சந்­தர்ப்­பங்­களில் அந்த விநோத சிரிப்பு மனிதர் ஓவியம் குறி­யீ­டாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­துண்டு.

ஆனால், அந்த ஓவியம் வெறும் கற்­பனை ஓவி­ய­மல்ல. உண்­மை­யாக வாழும் ஒரு­வரின் முகத்­தேற்­றமே அது. உலகின் முன்­னணி கூடைப்­பந்­தாட்ட வீரர் முகத்­தோற்­றத்தில் வரை­யப்­பட்­ட­துதான் அந்த ஓவியம்.

யோ மிங் (Yao Ming) எனும் இவ்­வீரர் சீனாவைச் சேர்ந்­தவர். 1980 ஆம் ஆண்டு பிறந்த அவ­ருக்கு 32 வயது. இதற்­கி­டையில் பெரும் பணமும் புகழும் சம்­பா­திதது விட்டு உபா­தைகள் கார­ண­மாக போட்­டி­க­ளி­லி­ருந்து ஓய்வு பெற்­று­விட்டார். பொது­வாக சீனர்கள் குள்­ள­மா­ன­வர்கள் என்ற அபிப்­பி­ராயம் உள்­ளது. ஆனால், யோ மிங்கின் உயரம் 7 அடி 6 அங்­குலம் (2.29 மீற்றர்).

யோமிங்கின் தாய் தந்தை இரு­வரும் தொழிற்சார் கூடைப்­பந்­தாட்ட போட்­டி­யா­ளர்கள். தந்தை யோ ஸியு­வானின் உயரம் 6 அடி 7 அங்­குலம். தூய் பெங் பெங்­டியின் உயரம் 6 அடி 3 அங்­குலம். இத்­தம்­ப­தியின் ஒரே பிள்­ளை­யான யோ மிங் 9 வயதில் கூடைப்­பந்­தாட்டம் விளை­யாட ஆரம்­பித்தார். 10 வயதில் அவரின் உயரம் 5 அடி 5 அங்­கு­ல­மாக இருந்­தது. அவரை பரி­சோ­தித்த மருத்­து­வர்கள் அவர் 7 அடி 3 அங்­குலம் வரை வளர்வார் என எதிர்­வு­கூ­றினர். ஆனால் அதையும் தாண்டி வளர்ந்­து­கொண்­டி­ருந்தார் யோ மிங்.

fb-man3அவரின் உய­ரம்­போ­லவே அவரின் கூடைப்­பந்­தாட்ட ஆற்­றலும் உயர்ந்­தது. சீனாவின் சார்பில் சர்­வ­தேச போட்­டி­களில் பங்­கு­பற்றி பல பதக்­கங்­களை வென்றார். 2002 ஆம் ஆண்டு முதல் 2011 வரை அமெ­ரிக்க தேசிய கூடைப்­பந்­தாட்ட சங்கத்தின் (என்.பி.ஏ.) போட்­டி­களில் ஹொஸ்டன் ரொக்கெட் அணி சார்பில் பங்­கு­பற்­றினார்.

2

காலில் ஏற்­பட்ட உபா­தைகள் கார­ண­மாக 2011 ஆம் ஆண்டு தொழிற்சார் போட்­டி­க­ளி­லி­ருந்து ஓய்வு பெறு­வ­தாக அவர் அறி­வித்தார். அவர் ஓய்வு பெறும்­போது என்.பி.ஏ. போட்­டி­களில் விளை­யாடும் வீரர்­களில் மிக உய­ர­மா­ன­வ­ராக யோ மிங் விளங்­கினார்.

சீனாவின் மிகப் பிர­ப­ல­மான விளை­யாட்டு நட்­சத்­தி­ரங்­களில் ஒரு­வ­ரான யோ மிங் 2009 வரை­யான 6 வரு­ட­கா­லத்தில் 5 கோடி அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கும் அதி­க­மான வரு­மா­னத்தை பெற்­றவர். பல்­வேறு சர்­வ­தேச நிறு­வ­னங்­களின் அனு­ச­ர­ணையை அவர் கொண்­டி­ருக்­கிறார்.

fb-man2இதெல்லாம் இருக்­கட்டும் யோ மிங் எவ்­வாறு மேற்­படி சிரிப்பு மனி­த­ராக சமூக வலைத்­த­ளங்­களில் மாற்றம் பெற்றார் என்ற கேள்வி எழு­கி­றதா?

2009 ஆம் ஆண்டு மே மாதம் நடை­பெற்ற கூடைப்­பந்­தாட்டப் போட்­டி­யொன்றின் பின்னர் சக வீரர் ரொன் ஆட்டெஸ்ட் சகிதம் யோ மிங் பங்­கு­பற்­றினார். அப்­போது ரொன் அட்டெஸ்ட் பேசி­யதை கேட்டு, அடக்க முடி­யாமல் சிரித்தார். அந்த காட்சி அடங்­கிய வீடியோ இணை­யத்­த­ளங்­க­ளிலும் வெளி­யா­னது.

2010.07.11 ஆம் திகதி ரெடிட் எனும் சமூக வலைத்­த­ளத்தில் டவுன்லோ கலைஞர் ஒருவர் பல்­வேறு வேடிக்கை ஓவி­யங்­களை வரைந்து வெளிட்டார். அதில் யோவ் மிங்கின் ஓவி­யமும் ஒன்­றாகும். மேற்­படி செய்­தி­யாளர் மாநாட்டு வீடி­யோவில் யோ மிங் சிரித்த காட்­சி­யொன்றின் “ஸ்கிறீன் ஷொட்டை” அடிப்­ப­டை­யாக வைத்தே அந்த ஓவி­யத்தை வரைந்­த­தாக டவு­டன்லோ ஒப்புக்கொண்டார்.

அந்த ஓவியத்தின் வேடிக்கையான சிரிப்பு பலரையும் ஈர்த்தது. பின்னர் அதன் சாயலில் வேறு ஓவியங்களும் வரையப்பட்டன. யோ மிங்குக்கும் இது. தெரியும். அவரின் பேஸ் பக்கத்தை 13 இலட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

4

இப்படி இருந்தால் எப்படி இருக்கும்? ( சுவாரஸ்ய படத் தொகுப்பு )

இத்தாலியைச் சேர்ந்த புகைப்படங்க கலைஞரான 48 வயதான கொலாருஸ்ஸோ என்பவரின் கற்பனையில் உருவான படைப்புகள்.

italy5  italy3 italy2 italy1italy4-394x1024

இப்படியும் செய்ய முடியுமா??(வீடியோ இணைப்பு)